New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தந்தி தொலைக்காட்சியில் வீரமணியின் முகமூடி கிழிந்தது. பாண்டேயின் பேட்டி -தமிழ் ஹிந்து


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தந்தி தொலைக்காட்சியில் வீரமணியின் முகமூடி கிழிந்தது. பாண்டேயின் பேட்டி -தமிழ் ஹிந்து
Permalink  
 


 

 

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-1

 

veeramani_pandey

சனிக்கிழமை (28-3-2015) இரவு 10.00 மணிக்கும் ஞாயிறு (29-3-2015) இரவு 8.00 மணிக்கும் மறுஒளிபரப்பான தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திரு.வீரமணி அவர்கள் கலந்துகொண்டார்கள். திரு.பாண்டேவின் கேள்விக்கு சரியான பதிலை அவர் அளிக்கவில்லை என்பதை பார்த்தோர் அனைவரும் அறிவர். இதில் முக்கியமான சில விஷயங்கள் மட்டுமே தற்போது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் சார்பில் மறுப்பு கொடுக்கப்பட்டு அது தந்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் கொடுத்திருக்கின்ற மறுப்பு அறிக்கை என்பது கொஞ்சம்கூட உண்மையில்லாதது. அதுபற்றிய முழுமையான அலசலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் மாட்டுக்கறி தின்பதைப் பற்றிய விமர்சனத்திற்கு வருவோம்.

தந்தி தொலைக்காட்சியில் திரு.வீரமணியிடம் பாண்டே என்ன கேள்வி கேட்டார் என்பதை உள்ளது உள்ளபடியே பார்ப்போம்.

பாண்டே : அம்பேத்கர் பிறந்தநாள் அன்னைக்கு மாட்டுக்கறி விருந்துண்ணு சொல்லியிருக்கீங்க. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்கள் செத்த மாட்டை சுமக்க கூடாது, மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்று தன்னுடைய சகோதரர்களுக்கு சொல்லியிருக்காரு. நீங்க அவருடைய பிறந்தாள்யே மாட்டுக்கறி திண்ணும் போராட்டம்ன்னு சொன்னா, இந்த ஆதிக்கசாதியினர் மத்தியில அவங்கள்ளாம் புலையர்கள், அவங்கள்ளாம் மாட்டுக்கறி திண்பவர்கள் என்ற எண்ணத்தை மீண்டும் நீங்களே வந்து நினைவுறுத்தற மாதிரி விசயமா மாறிடாதா?

வீரமணி : அம்பேத்கர் எந்த இடத்தில மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு?

பாண்டே : நான் காட்றேன்

என்று சொல்லி தன்னிடமிருந்த ஆதாரத்தை காட்டினார். அந்த ஆதாரம் இதுதான்.

1927 மார்ச் 19, 20ல் கொலாபா மாவட்டத் தீண்டப்படாத மக்கள் மாநாட்டில் அம்பேத்கர் :

‘விலங்குகளின் புலாலை உண்பதில்லை என்று இந்த நிமிடம் முதலே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்நமக்குள் உயர்வு தாழ்வு பாராட்டுவதை விட்டொழிப்பதற்கு இதுவே தக்கதருணமாகும்வீசி எறியப்படும் மீந்த உணவுகளை உண்பதில்லை என்று உறுதி பூணுங்கள்……’

 அந்த மாநாடு தீர்மானங்கள் :

இறந்த விலங்குகளின் உடல்களைச் சாதி இந்துக்களே புதைத்துக் கொள்ள வேண்டும்.தனியான சட்டத்தின்மூலம் இறந்த விலங்குகளின் புலாலைத் தீண்டப்படாதவர்கள்உண்பதைத் தடை செய்ய வேண்டும்.

நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறுஆங்கில மூலம் : தனஞ்செய்கீர்,தமிழாக்கம் : .முகிலன்வெளியீடு : மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிபக்கம். 98-99

என்று காட்டுகிறார். இது இப்பொழுது திராவிடர் கழகத்தினரால் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் அனுப்பி தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய மறுப்பில் இவ்வாறு திக கூறியிருக்கிறது :நோயினாலோ, மூப்பினாலோ, பல்வேறு காரணங்களினாலோ இறந்த விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்றும் சுகாதாரக் கண்ணோட்டத்தோடும் தீண்டாமையைத் தவிர்ப்பதற்காகவும் அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துக்களை மாட்டுக்கறி கூடாது என்று சொன்னதாக திரித்து வெளியிடுவது எந்த வகையில் சரி? உணவுக்காக,  வளர்க்கப்பட்டு கொல்லப்படும் உயிரினங்களானாலும், இன்று உணவுக்காகப் பயன்படுத்தப்படும் மாட்டிறைச்சி ஆனாலும் இறந்த விலங்குகளின் உடல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அம்பேத்கரின் கருத்தை திரிபுவாதம் செய்து தங்களுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளும் இந்த அநாகரிகப் போக்கை எப்படி அனுமதிப்பது?’

நாம் மேலோட்டமாக பார்க்கும்பொழுது திராவிடர் கழகம் சொல்வதுதான் சரி என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவோம். உண்மையிலேயே அண்ணல் அம்பேத்கரின் புத்தகமான ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற புத்தகத்தை வீரமணி படித்திருப்பாரேயானால் மேற்கண்ட திக விமர்சனம் எழுந்திருக்காது. (இப்பேட்டியிலேயே அம்பேத்கரின் இப்புத்தகத்தை கூறுகிறார். அதைதான் அவர் 14ம்தேதி வெளியிடப்போவதாக கூறியிருக்கிறார்)

 விஷயத்திற்கு வருவோம்.

அம்பேத்கர் ஏன் செத்த மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று கூறினார்? இதை நாம் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பதோடு தொடர்பு படுத்தி பார்க்க முடியுமா?

அம்பேத்கர் சுகாதாரக் கண்ணோட்டத்தோடு இதை சொல்லவில்லை. இதோ அம்பேத்கர் எழுதுகிறார் :

176-babasaheb-ambedkar_big

‘இறந்த பசுவின் இறைச்சியை சிதறுண்ட பிரிவினர் உண்டனர் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது என்பது முதல் கேள்வி. பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் இந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்ட பிறகு இவர்கள் மட்டும் மாட்டிறைச்சி உண்பதை ஏன் நிறுத்தவில்லை என்பது இரண்டாவது கேள்வி. தீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாட்டின்மீது இக்கேள்விகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவற்றைப் பற்றி இங்கு பரிசீலிப்பது அவசியமாகிறது.

முதல் கேள்வி நாம் விவாத த்துக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பொருளுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப்பது மட்டுமன்றி மிக முக்கியமானதும்கூட. சிதறுண்ட பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே மாட்டிறைச்சியை உண்டு வந்திருக்கின்றார்கள் என்றால் அப்போது இக்கோட்பாடு அடிபட்டுப் போகிறது. ஏனென்றால் ஆரம்பம் முதலே அவர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருந்தபோதிலும் அவர்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படவில்லை என்கிறபோது சிதறுண்ட பிரினவினர் மாட்டிறைச்சி உண்டு வந்த தால் தான் அவர்கள் தீண்டப்படாதவர்களானார்கள் என்று கூறுவது அர்த்தமற்றதாக இல்லாவிட்டாலும் அறிவுப்பூர்வமற்றதாகும்.

இரண்டாவது கேள்வி முக்கியமானதல்லாவிட்டாலும் பொருத்தமானதாகும். மாட்டிறைச்சி உண்பதை பிராமணர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றால், பிராமணரல்லாதோரும் அவர்களைப் பின்பற்றினார்கள் என்றால், சிதறுண்ட பிரிவினரும் அவ்வாறு ஏன் செய்ய வில்லை? அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி இருப்பார்களேயானால் தீண்டாமை தோன்றியிருக்காது.

முதலாவது கேள்விக்குப் பதில் இதுதான் : மாட்டிறைச்சி உண்பது குடியமர்ந்த குலமரபுக்குழுவினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் பொதுவாக இருந்துவந்த காலத்தில், ஒரு புதியமுறை உருவாயிற்று. இதன்படி, குடியமர்ந்த சமூகத்தினர் புதிய மாட்டிறைச்சியையும் சிதறுண்ட வகுப்பினர் செத்த பசுவின் இறைச்சியையும் உண்ணத் தொடங்கினர். குடியர்ந்த சமூகத்தினர் செத்த பசுவின் இறைச்சியை  என்றுமே உண்டதில்லை என்பதற்கு ஐயத்துக்கிடமற்ற சான்று ஏதும் இல்லை. ஆனால் அதேசமயம் செத்த பசு சிதறுண்ட பிரிவினரின் பிரத்தியேக உரிமையானதற்கும், அவர்களுக்கு அது உபரிவருமானமானதற்கும் சான்று இருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நாம் முன்னரே குறிப்பிட்டிருப்பதுபோல, மகாராஷ்டிர மகர்கள் செத்த விலங்கு தங்களுக்கே தரப்படவேண்டும் என்று உரிமை கொண்டாடுகின்றனர். கிராமத்திலுள்ள ஒவ்வொரு இந்துவிடமும் அவர்கள் இந்த உரிமையைக் கோருகின்றனர். எந்த ஓர் இந்துவும் தனது சொந்த விலங்கு இறந்தால் அதை உண்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அவன் அதை ஒரு மகருக்குத் தந்துவிட வேண்டும். அதாவது மாட்டிறைச்சி உண்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் மகர்கள் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் இந்துக்கள் புதிய மாட்டிறைச்சியையும் உண்டார்கள் என்பன வேறுவிதமாக க் கூறுவதைத்தான் இது குறிக்கும். இங்கு சில கேள்விகள் எழுகின்றன. இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை பண்டைக்காலத்திலும் இருந்து வந்த தா? இந்த மகாராஷ்டிர உதாரணத்தை குடியமர்ந்த குலமரபினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் இடையே இத்தகையதோர் ஏற்பாடு இந்தியா முழுவதும் இருந்து வந்ததற்கான சான்றாக எடுத்துக் கொள்ள முடியுமா?

இது சம்பந்தமாக, மகர்களிடையே தற்போது நிலவிவரும் ஒரு பரம்பரைப் பழக்கத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். இதன் படி கிராமங்களில் இந்துக்களுக்கு எதிராக பீடார் மன்னர் தங்களுக்கு 52 உரிமைகள் அளித்த தாக அவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு பீடார் மன்னர் உரிமைகள் அளித்த தாக க் கூறப்படுவதை ஒப்புக் கொண்டாலும், மன்னர் இந்த உரிமைகளை முதல் தடவையாக உருவாக்கி இருக்க மாட்டார் என்பது தெளிவு. தொன்னெடுங்காலமாகவே இந்த உரிமைகள் நடைமுறையில் இருந்து வந்திருக்க வேண்டும். மன்னர் செய்ததெல்லாம் அவற்றை உறுறதி செய்ததுதான். சிதறுண்ட பிரிவினர் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் குடியமர்ந்த சமூக்த்தினர் புத்தம்புது மாட்டிறைச்சியையும் உண்ணும் வழக்கம் பண்டைக்காலம் முதலே உருவாகி வந்திருக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இத்தகைய ஓர் ஏற்பாடு வளர்ந்து வந்திருப்பது முற்றிலும் இயல்பே. குடியமர்ந்த சமூகத்தினர் செல்வ வளம் படைத்தவர்களாக இருந்தனர். வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் அவர்களது வாழ்க்கைத் தொழிலாக இருந்துவந்தன. ஆனால் சிதறுண்ட பிரிவினரோ ஓட்டாண்டி சமூகத்தினராக இருந்தனர். சொந்த வாழ்க்கைத் தொழில் ஏதுமில்லாமல் குடியமர்ந்த சமூகத்தினரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். இரு சாராருக்கும் மாட்டிறைச்சியே பிராதன உணவு. குடியமர்ந்த சமூகத்தினர் உணவுக்காக எப்போதும் வேண்டுமானாலும் ஒரு விலங்கைக் கொல்ல முடியும். ஏனென்றால் அவர்களிடம் கால்நடைச் செல்வம் ஏராளமாக இருந்த்து. சிதறுண்ட சமூகத்தினர் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் அவர்களுக்குச் சொந்தமாக கால்நடைகள் ஏதுமில்லை. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் குடியமர்ந்த சமூகத்தினர் தங்களுடைய செத்த பிராணிகளை, சிதறுண்ட சமூகத்தினர் அங்கு அவர்களது காவல் பணிக்கு ஊதியமாக அளிக்க ஒப்புக்கொண்டது எவ்வகையில் இயல்புக்குப் புறம்பானதாக இருக்க முடியும்? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. எனவே, குடியமர்ந்த சமூகத்தினரும் சிதறுண்ட சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்டு வந்த பண்டைக்காலத்தில் முந்தியவர்கள் புதிய மாட்டிறைச்சியையும் பிந்தியவர்கள் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் சாப்பிட்டுவந்தனர் என்றதும், இந்த நடைமுறை மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த்து என்பதும் தெள்ளத்தெளிவு.

 இது முதல் ஆட்சேபத்தை செல்லுபடியற்றதாக்குகிறது. அடுத்து இனி இரண்டாவது ஆட்சேபத்துக்கு வருவோம். குப்த பேர ரசர்கள் இயற்றிய சட்டம் பசுக்களை கொல்பவர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமே ஆகும். அச்சட்டத்திற்கும் சிதறுண்ட சமூகத்தினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனென்றால் அவர்கள் பசு வதை செய்யவில்லை. செத்துப்போன பசுவைத்தான் உண்டார்கள். அவர்களது செயல்பாடு பசுவதைத் தடைச் சட்டத்தை எவ்வகையிலும் மீறவில்லை. எனவே, செத்துப்போன பசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்ணும்பழக்கம் அனுமதிக்கப்பட்டது. தவிரவும், பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் மாட்டிறைச்சியைக் கைவிட்டதுடன் எவ்வகையிலும் சம்பந்தப்படாத அகிம்சை சித்தாந்த த்தையும் சிதறுண்ட சமூகத்தினர் எவ்வித த்திலும் மீறவில்லை. பசுவைக் கொல்வது இம்சை. ஆனால் செத்த பசுவை உண்பது இம்சை அல்ல. ஆகவே, செத்தபசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்பது குறித்து, சிதறுண்ட சமூகத்தினர் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு உள்ளாவதற்கு எத்தகைய முகாந்தரமும் இல்லை. சட்டமும் சரி, இம்சை சித்தாந்தமும் சரி அவர்கள் செய்வதைத் தடை செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களது செய்கை சட்டத்திற்கோ சித்தாந்தத்திற்கோ எவ்வகையிலும் முரண்பாடானதல்ல.

 பிராமணர்களையும், பிராமணரல்லாதோரையும் அவர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கான பதில் இருவகையானது. முதலாவதாக, இவ்வாறு பின்பற்றுவதற்கு அவர்கள் தர வேண்டிய விலை அதிகம். அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை. இறந்த பசுவின் இறைச்சிதான் அவர்களுக்குப் பிரதான உணவு. அது இல்லையென்றால் அவர்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, செத்த பசுவை அப்புறப்படுத்துவது ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு தனிச்சலுகையாக இருந்தது. பின்னர் அதுவே ஒரு கடமைப் பொறுப்பாகிவிட்டது. செத்த பசுவை அப்புறப்படுத்தும் பணியிலிருந்து தப்பமுடியாத நிலைமையில் முன்னர் போலவே அதன் இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 14, பக்கம். 188-191.

நூல் : தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?

இதுதான் அண்ணல் அம்பேத்கர் எழுதியது. இப்பொழுது நமக்கு அண்ணல் அம்பேத்கர் ஏன் இறந்த மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று சொன்னார் என்பதும் ஏன் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதும் தெளிவாகும்.

அதாவது இறந்த மாட்டிறைச்சியைத்தான் அப்போது தலித்துகள் உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தனர். புதிய வெட்டப்பட்ட மாட்டிறைச்சியை உண்ணவில்லை, அதுவும் மகாராஷ்டிரம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலை இருந்தது என்று கூறுகிறார். ஆகவே சுகாதாரத்திற்காக அண்ணல் அம்பேத்கர் செத்த மாட்டிறைச்சியை உண்ணாதீர்கள் என்று சொல்லவில்லை என்பதும் நமக்குத் தெளிவாகிறது. சுகாதாரத்திற்காக என்றால் புதிய மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று சொல்லியிருப்பார். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தலித்துகள்மேல் தீண்டாமை திணிக்கப்படுகிறது என்ற காரணத்தைக் கொண்டு மாட்டிறைச்சி சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார் அண்ணல் அம்பேத்கர். மேலும் பல கட்டுரைகளில் இதே கருத்தை விளக்கியுள்ளார்.

அதாவது தலித்துகள் வழக்கமாக கொண்டிருந்த, உரிமையாகக் கொண்டிருந்த செத்த மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தை விட்டுவிட சொல்கிறார். மற்றொன்று புதிய மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று அவர் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை. இதில் யார் கருத்து திரிபுவாதம் செய்கிறார்கள் என்பதை படிக்கும் வாசகர்களே முடிவு செய்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் புத்தமதம் மாறும்போது 22 சூளுரைகளை ஏற்கிறார். அதில் அனைத்து ஜீவராசிகளிடமும் பரிவோடும் பாசத்தோடும் நடந்துகொள்வேன். அவற்றை அன்போடு பேணி வளர்ப்பேன் என்பதும் ஒன்று. அரசியல் அமைப்பின் சட்டத்தில் பசுவதையை தடுக்கும் ஷரத்திற்கு ஆன்மிக ரீதியில் இல்லாமல் விவசாயத்திற்க்காக பசுவை காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார். இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் கருத்தை திரித்து அவர் பிறந்த நாளிலேயே மாட்டுக்கறி தின்னும் போராட்டத்தை திக நடத்துகிறது என்று சொன்னால் யாரை அவமதிக்க இப்போராட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தலித்துகளில் உள்ள பல பிரிவுகளில் மாட்டிறைச்சி உணவு சாப்பிடுவது இல்லை. உதாரணமாக வள்ளுவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது கிடையாது. ஆனால் அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று மாட்டிறைச்சி சாப்பிடுவது வைக்கப்படும்போது, எல்லா தலித்துகளும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற ஆதிக்கசாதியின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளவற்றையே வீரமணியும் நிரூபிக்கிறார் என்பதைத் தவிர இந்தப் போராட்டத்தில் வேறெதுவும் கிடையாது. இதில் வேடிக்கை சில தலித் அமைப்புகள் ஆதரவு தருவதுதான். அவர்களை அண்ணல் அம்பேத்கர் ஆத்மா என்றும் மன்னிக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தந்தி தொலைக்காட்சியில் வீரமணியின் முகமூடி கிழிந்தது. பாண்டேயின் பேட்டி -தமிழ் ஹிந்து
Permalink  
 


இரண்டாவது சர்ச்சைக்கு வருவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. இதுபற்றிய நேர்காணலில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

பாண்டே : பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க….

வீரமணி : இது வடநாட்டு பழமொழி, ஒருநாளும் பெரியார் சொன்னது இல்ல…

பாண்டே : விடுதலையிலோ, உண்மையிலோ வந்ததில்லையா?

வீரமணி : ஒருநாளும் வந்ததில்லை… அப்படி காட்டிட்டா இந்த பதவியில் இருந்து விலகிவிடுகிறேன்.

இப்படி நடைபெற்ற நேர்காணலில் பாண்டே அவர்கள் மூன்று ஆதாரத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

  1. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். (பெரியார், விடுதலை, 29-1-1954)
  2. கடவுளை ஒழிக்கவேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும். (பெரியார், விடுதலை, 19-10-1958)
  3. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பைவிட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார் பெரியார். (நூல் : இந்துத்துவாவின் படையெடுப்பு)

மேற்கண்ட 1,2 ஆதாரத்தைப் பற்றி பதில் எதுவும் சொல்லாமல் ஒதுக்கிவிட்டு திராவிடர் கழகம் மூன்றாவதாக பாண்டே கொடுத்திருக்கின்ற ஆதாரத்தின் உண்மைத் தன்மையை மட்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

பெரியார் எங்கே சொன்னார், விடுதலையில் எப்போது வந்திருக்கிறது என்பதற்கு மேற்கண்ட இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் ஆதாரம் தருகிறதா? அப்படி ஒருநூல் யாரால் எழுதப்பட்டது? அதை வெளியிட்டது யார்? வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? தகவல்களை காணோமே? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தாலோ, திராவிடர் கழகத்தாலோ வெளியிடப்பட்டதா?

இதுதான் திராவிடர் கழகம் கேட்டிருக்கின்ற கேள்வி.

இனி விஷயத்திற்கு வருவோம். திரு. பாண்டே கேட்ட கேள்வி என்ன? திரு.வீரமணி அளித்த பதில் என்ன என்பதை பாருங்கள். திரு.பாண்டே பொதுவாக யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லாமல் (முக்கியமாக பெரியாரை குறிப்பிட்டு சொல்லாமல்) கேள்வி கேட்கிறார். ஆனால் வீரமணி அதற்கு பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று வலிந்து பெரியார் பெயரை கூறுகிறார். அப்படி பெரியார் பெயரை கூறிவிட்டு அதற்கு விடுதலையில் ஆதாரம் உண்டா என்றுவேறு கேட்கிறார். தன் பதவியை விட்டுவிலகுவதாக கூறுகிறார். ஆனால் பாண்டே கேட்ட கேள்வி, பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க…. என்பதுதான். திராவிட இயக்கத்தவர்கள் சொல்லியிருக்கிறார்களே என்பதுதான் அந்த கேள்வியின் உள்அர்த்தம். அதற்கு பதில் சொல்லாமல் பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று கேள்விக்கான பதிலை திசைமாற்றிவிட்டார் வீரமணி. எங்கள் இயக்கத்தவர்கள் யாருமே அப்படி சொல்லியதில்லை என்றுதானே பதில் வந்திருக்க வேண்டும்? அப்படி சொல்ல தைரியம் இல்லாமல் பெரியார் அப்படி சொல்லவில்லை என்கிறார்.

திரு.பாண்டே ”தான் கேட்ட கேள்விக்கான” ஆதாரத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்ட வீரமணி பெரியார் சொல்லியிருக்கிறாரா, விடுதலையில் வந்திருக்கிறதா என்றெல்லாம் திசைமாற்றுவது ஏமாற்றுத்தனத்தை தவிர வேறல்ல. இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் முழுக்க முழுக்க இந்துத்துவத்தை விமர்சிக்கின்ற புத்தகம். அந்த புத்தகம் இதோ :

இந்துத்துவ படையெடுப்பு 1இந்துத்துவ படையெடுப்பு 2இந்துத்துவ படையெடுப்பு 3

இதை எழுதிய ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிப்பாரா வீரமணி அவர்கள்? அல்லது இதை எழுதிய ஆசிரியர்கள் பொய்யை எழுதிவிட்டனர் என்பதை அவர்களே சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பெரியார் அப்படி பேசியிருக்கிறார் என்பதை சொல்கின்றனர். ஆனால் யாருக்குத்தெரியும் இப்படி ஆதாரம் கேட்பார்கள் என்று!

பெரியார் அப்படி சொல்லவில்லை என்று சொல்கின்ற வீரமணிக்கு நாம் ஒரு ஆதாரத்தை காட்ட விரும்புகிறோம். பெரியார் அப்படி சொன்னதாக சாட்சாத் வீரமணியே சொல்லியிருக்கிறார் என்பதுதான் அது.

கீற்று இணையதளம் பெரியாரிய, இடதுசாரி சிந்தனையுள்ள இணையதளம். அத்தளத்தில் திருமதி வசந்தா கந்தசாமி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு திரு.வீரமணி பேசிய பேச்சை வெளியிட்டிருக்கிறது. அதில் வீரமணி பேசியதாவது: ‘….பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?…’ என்று பேசியிருக்கிறார்.

கீற்று இணையதள படம்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3414-2010-02-11-07-51-34

இந்த ஆதாரம் போதாதா வீரமணிக்கு? இதுவும் பொய் என்றால் கீற்று வெளியிடுகின்ற அத்தனையும் பொய் என்றே நாம் நினைக்கவேண்டும். இதை மறுக்கப்போகிறதா கீற்று இணையதளம்? அல்லது வீரமணிதான் மறுக்கப் போகிறாரா? அதுமட்டுமல்ல, தமிழ்ஓவியா பெரியாரியவாதி. அவரும் இந்த கட்டுரையை தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

tamil oviya

http://thamizhoviya.blogspot.in/2008/07/blog-post_4118.html

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்ஓவியா இப்போது வீரமணிக்கு ஆதரவாக, பெரியார் அப்படி சொல்லவில்லை என்று பதிவிட்டிருக்கிறார் என்பதுதான். முரண்பாட்டின் மொத்த உருவமாக விளங்குபவர்கள் இவர்கள்.

இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். விடுதலையில் பெரியார் சொன்னதாக வந்திருக்கிறதா என்று கேட்கிறார். விடுதலையில் ஒரு கவிதை வெளிவந்திருக்கிறது. அது இதோ

பெரியார் கைத்தடி

பாம்பையும்

பார்ப்பானையும்

கண்டால்..

பாம்பை விட்டு விடு

பார்ப்பானை அடி..!

பேசியது பெரியார்

கைத்தடி!!

பெரியாரின் கைத்தடி

http://www.viduthalai.in/page-1/77360.html

இதுதான் அந்த கவிதை. பெரியார் பேசியதாகவே இந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது, அதுவும் விடுதலையில் வந்திருக்கிறது. இதற்கு வீரமணி என்ன சொல்லப்போகிறார்?

இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் ஒரு செய்தியை விடுதலை வெளியிட்டிருக்கிறது. அதில் கும்பகோணத்தில் உள்ள திராவிடர் கழக அலுவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தியை பதிவு செய்கிறது. வாசலின் வலது புறத்தில் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி!என்ற வாசகம் எழுதி வைத்துள்ளது.

 வரலாற்றுசுவடுகள்

http://www.viduthalai.in/home/viduthalai/history-/41007-viduthalai.html

விடுதலையில் வந்திருக்கிறதா என்று கேட்கிற வீரமணி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

பெரியாரியவாதியான அ.மார்க்ஸ் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த சொல்லாடல் பெரியார் கூறியதாக அவர் கூறுகிறார்.

அ.மார்க்ஸ் வலைதளம்

http://amarx.org/?p=412

அதே மார்க்ஸ் இப்போது என்ன கூறுகிறார் தெரியுமா? ‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி’ எனப் பெரியார் எங்கும் சொன்னதில்லை என விவாதத்தில் ஆசிரியர் வீரமணி சொன்னதற்கு எதிராக “ஆதாரம்” காட்டி விட்டதாகப் பசப்பித் திரிவோருக்குக் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் வைக்கும் ஆப்பு…. என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அ.மார்க்ஸ்.

அ.மார்க்ஸ் முகநூல்

கலிபூங்குன்றன் ஆப்பு வைத்திருக்கிறார் என்றால் முன்னர் அ.மார்க்ஸ் பெரியார் சொன்னதாக சொல்லியிருப்பது என்ன? அப்படியானால் அ.மார்க்ஸ் பொய் சொல்லியிருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்துவாரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திரு.தொல்.திருமாவளவன்கூட பெரியார் இந்த சொல்லாடலை பயன்படுத்தியிருக்கிறார் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=sv4_zDrNK_Q

18.51 நிமிடத்திலிருந்து அந்த சொல்லாடல் வருகிறது. இப்போது வீரமணி என்ன சொல்லப்போகிறார்? திருமாவளவன் பொய் சொல்கிறார் என்று சொல்லப் போகிறாரா? பெரியார் சொல்லாத தை திருமா சொல்லி பெரியாரை கொச்சைப்படுத்துகிறார் என்று சொல்லப்போகிறாரா? அல்லது திருமாவளன் தான் பொய் சொல்லிவிட்டேன் என்று கூறப்போகிறாரா? அதையும் பார்ப்போம்.

திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை. பாண்டே திரிபுவாதம் செய்கிறாரா அல்லது திராவிடர் கழகம் மறுப்பு என்ற பெயரில் திரிபுவாதம் செய்கிறதா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  திரு.வீரமணி தான் சொல்லியபடி செய்யப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கருப்பையா on April 4, 2015 at 8:01 am

போரில் ஈடுபடும்போது பசுக்கள் கொல்லாமல் காக்கப்பட வேண்டியது என்பது தமிழன் பண்பாடு.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
10 முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. புறநானூறு 9
பாடியவர்: நெட்டிமையார். நெட்டிமையார்

”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

மாட்டுக்கறி பிதற்றும் தமிழன் எனும் நடிகர்கள் தமிழும் அறியாதவர்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கருப்பையா on April 4, 2015 at 8:06 am

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

மு.வ உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும்,
இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

தமிழனய் பிச்சைக்காரனாக இலவசத்தை நோக்க வைத்தவர்கள் எங்கே வள்ளுவரை நாடப் போகிறார்கள்.

திருவள்ளுவரும் கொடுங்கோண்மை அதிகாரத்தில் மோசமான அரசன் ஆட்சியில் பசுக்கள் பயன் தாராது என்கிறார்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 தேவப்ரியா சாலமன் on April 9, 2015 at 12:40 pm

பாதிரி ஜோ அமலன் அவர்களே,
விவிலியம் நிறத்தையும் இனத்தையும் போதிக்கிறது, அதன்படி திராவிடரகள் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என ஈராஸ் பாதிரியார் எழுதினார்களே. கோவாவில் கத்தோலிக்கர் 3000 கோவில்களை இடித்ததையும் சர்ச் மத விசாரணை எனச் ச்ய்த சித்தரவதைகளையும் நூலாக்குவதைத் தடுத்ததை தமிழ் மக்களுக்கு சொல்லுன்க்களேன்.

கிரேக்க புதிய ஏற்பாடு ஏடுகளில் இன்று மிகவும் போற்றப்படும் பேராசிரியர் பார்ட் எர்மான், முழுதும் பிற்கால போர்ஜரி என்கிறார்.
Forged: Writing in the Name of God–Why the Bible’s Authors Are Not Who We Think They Are
http://www.amazon.com/Forged-Writing-God-Why-Bibles-Authors/dp/B006QS02F8

இஸ்ரேல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி – பழைய ஏற்பாடு ஆய்வில் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் ஓட் முழுதும் ஏசுவிற்கு 100 ஆண்டு முன்பு தான் புனையப்பட்டது என்கிறார். பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என்கிறார்.
The Mythic Past: Biblical Archaeology And The Myth Of Israel
http://www.amazon.com/The-Mythic-Past-Biblical-Archaeology/dp/0465006493
சாக்கடல் சுருள்கள்படி, இஸ்றேலின் சிறு எல்லை தெய்வம் யாவே தன் ஆலயம் எனச் சொன்னது சமாரிய கெர்சிம் மலைதான்.
https://indianschristians.wordpress.com/2015/02/03/%e0%ae%aa%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/
பைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்
70% அதிகமான தமிழர் மெய்ய்யலுக்கு விரோதமாய் பாலைவன கிறிஸ்துவ மததிற்கு மதம் மாற்றப்பட்ட பட்டியல் இன மக்கள் கிறிஸ்துவ தியாலஜி படித்தாலும் பாதிரி பதவிகள் மறுக்கப் படுகின்றனவே. தலித் கிறிஸ்துவருக்கு இட ஒதுக்கீடு எனப் பேசுச்ம் சர்ச் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப பாதிரி, பேராயர் பதவிகளில் முதலில் ஒதுக்கீடு செய்யுங்கள் எனக் குரல் தந்துள்ளீரா.

இயேசுவின் உளறல்களும் வரலாற்று உண்மைகளும் -http://pagadhu.blogspot.in/

எனவே மேலுள்ள நூல்களை தமிழ்படுத்தி உண்மையை சர்ச்சிற்கு சொல்லி,
தன் சாயலில் கடவுள் மனிதனைப் படைத்தார், மனித உடம்பே கடவுள் ஆலயம், தலைமுடி எண்ணிக்கை கடவுள் நிர்ணயித்தது எனச் சொல்லும் விவிலியம், கடவுளுக்கு ஒரு மனிதனை எந்த ஊரில், எந்த நாட்டில், எந்தப் பெற்றோருக்கு எம்மதத்தில் பிறக்க வைக்கவேண்டும் எனத் தெரியாதா.
கடவுள் விரோத மதமாற்றத்தை தடுக்க குரல் கொடுங்களேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 
 

 

img1101224019_2_1

மூன்றாவது சர்ச்சைக்கு வருவோம். இது கீழவெண்மணியில் பெரியார் ஆற்றிய எதிர்வினையைப் பற்றிய கேள்வி. கீழவெண்மணியில் பெரியாரின் அறிக்கை உப்புசப்பு இல்லாதது என்று பாண்டே கூறுகிறார். கீழவெண்மணி படுகொலை கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று வீரமணி சொல்கிறார். திரு.பாண்டே விடுதலையிலிருந்து பெரியார் விடுத்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார். அதை மறுத்து திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மறுப்பு இது :

கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டபொழுது சென்னை பொதுமருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து, இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை. இதற்காக அன்னியர் ஆண்டாலும் பரவாயில்லை. (விடுதலை 28-12-1968) என்று கூறிடும் அளவுக்கு தந்தை பெரியார் கோபம் கொண்டிருந்தாரே,

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா?

இதுதான் திராவிடர் கழகத்தினுடைய மறுப்பு அறிக்கை. இந்த மறுப்பு அறிக்கை திரிபுவாதத்தை தவிர வேறில்லை; அதையும் பார்ப்போம். பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பந்தமாக மூன்று அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த மூன்று அறிக்கைகளிலும் பெரியாரின் அக்கறை எப்படியிருந்தது என்பதை பார்ப்போம்.

முதல் அறிக்கை இது.

“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். ‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன´ மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்’ என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்’ கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்:

1.காந்தியார் கொல்லப்பட்டார்.

2.தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3.போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42-பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42-பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90-பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக’ இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்ல´ என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

‘விடுதலை’, 28.12.1968

இரண்டாவது அறிக்கை இது.

“இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

 இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்!

 “பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

 இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்’ ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1.காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2.சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3.எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய – பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும் என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

 “Patriotism is the last refuge of a scoundrel. “

“தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்.” – [ஜான்சன்]

 ‘விடுதலை’, 28.12.1968]

இந்த இரண்டு அறிக்கையும் ஒரே நாளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

44 தலித் மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இதுதான் பெரியார் ஆற்றிய எதிர்வினை. மனசாட்சி உள்ளவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் – இதுதான் தலித் மக்களின் படுகொலைமீது கொண்டுள்ள அக்கறை அறிக்கையா?

இது எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

இத்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற ஆதிக்கசாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தலித்துகளை மிகக் கொடூரமாக நடத்திவருவது ஆதிக்கசாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட ஆதிக்கசாதி இந்துக்களையும் பெரியார் எதிர்க்கவில்லையே ஏன்?

இனி மூன்றாவது அறிக்கைக்கு செல்வோம். இந்த மூன்றாவது அறிக்கைதான் பெரியாரின் தலித் மக்களின் மீதான போலி அக்கறையை வெளிக்கொண்டுவந்த அறிக்கை. பெரியார்  பேசிய பேச்சு ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது. அதிலும் இப்போது அந்த அறிக்கைகளை ஆதரித்து வீரமணி போன்றவர்கள் பேசுவது இன்னும் அயோக்கியத்தனம்தானே தவிர வேறில்லை.

இதோ அந்த அறிக்கை….

‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

விடுதலை 20-1-1969

கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

ச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

ஜாதியை, அதன் விளைவான தீண்டாமையை ஒழித்திட வெளிநாட்டு அரசு வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை  கொண்டிருந்தார் என்பது விளங்கவில்லையா? என்று கேட்கும் திராவிடர் கழகத்திற்கு,

‘இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்’ என்று மூன்றாவது அறிக்கையிலேயே சொல்லிவிட்டாரே! இந்த அரசு ஒழிந்து வெளிநாட்டு அரசு வரவேண்டும் என்று மூன்றாவது அறிக்கையில் காணோமே!. முதலில் கூறியிருக்கிற இரண்டு அறிக்கைகளுக்கும் நேர்மாறாக அல்லவா அவரது மூன்றாவது அறிக்கை உள்ளது? பெரியாரின் அறிக்கைகளை திரிபுவாதம் செய்வது பாண்டே அல்ல வீரமணியும், திராவிடர் கழகமும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எதற்கெடுத்தாலும் பிராமணர்களை கடுமையாக எதிர்க்கும் பெரியார் கீழவெண்மணி படுகொலை சம்பவத்தில் நாயுடுக்களை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அது ஒன்னுமில்லைங்க தோழர்,

பெரியார் 1920வரையிலும் 29 பொது நிலையங்களில் அங்கத்தினராயும், நிர்வாகஸ்தராயும், தலைவராயும் இருந்திருக்கிறார்.

அதில் ஒன்று நாயுடு சங்கம்.

இப்போது புரிகிறதா ஏன் பெரியார் கோபால கிருஷ்ண நாயுடுவை எதிர்க்கவில்லை என்று!

தொடரும்

பெரியாரின் அறிக்கைக்கான ஆதாரங்கள்

1. http://tamizachi.com/articles_detail.php?id=242

2.http://tamizachi.com/articles_detail.php?id=244 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 
  1. அடியவன் on April 11, 2015 at 1:11 pm

    கீழவெண்மணியில் ஆண்,பெண், குழந்தைகள் உள்பட 44 பேரை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் எரியும் குடிசையிலிருந்து தப்பி ஒடி வந்த சிறுமியை மீண்டும் எரியும் குடிசைக்குள் தள்ளிக் கொன்ற கும்பலின் தலைவன் கோபால கிருஷ்ண நாயுடு.

    நாயுடுக்கள் தலித்துக்களைத் தீ வைத்துக் கொன்ற செய்தி வெளியானால் தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா. உள்ளிட்ட நாயுடுக்கள் நிம்மதியாக உயிர் வாழ முடியாது என்பதால், கொன்றது நாயுடு என்ற செய்தி வெளிவந்துவிடக் கூடாது அன்று அப்போதிய திமுக முதலமைச்சர் “ஜாதி ஹிந்து” என்ற சொல்லைச் செய்திகளில் பயன்படுத்த உத்தரவிட்டார். இன்று வரை அந்த சொல்லே தலித் மக்கள் மீதான கொடுமைகளைச் செய்யும் அனைத்து சம்பவங்களிலும் பயன் பட்டு வருகின்றது.

    தொடர்ந்து ஜாதி ஹிந்து என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவது தலித் மீதான எல்லா தீண்டாமைக் கொடுமைகளுக்கும் பார்ப்பனர்களையே பலிகடாவாக ஆக்கி வரத் திராவிடர் கழகத்துக்கும் திமுகவுக்கும் வசதியாக இருந்தது.

    சமீபத்திய தருமபுரி இளவரசன் தொடர்புடைய சம்பவங்களில் மட்டும் வன்னியர்கள் வெளிப்படையாக செயல்பட்டதால் அவர்கள் சாதி செய்த கொடுமைகள் தீவைப்புகள் “ஜாதி ஹிந்துக்களுக்குப் பெருமை” கிடைக்க முடியாமல் செய்துவிட்டது.

    கீழவெண்மணிச் சம்பவம் ஒரு நாயுடு செய்த ஜாதி வன்கொடுமை என்பது வெளி உலகுக்குக்த் தெரிய வராமல் இருக்க அண்ணாத்துரை அமைத்த “இரு அமைச்சர் கொண்ட அமைச்சரவைக் குழுவில்” இருந்தவர்கள் கருணா நிதியும் மாதவனும்.

    இவர்கள் இருவரும் இட்ட பணியையும் இடாத பணியையும் செவ்வனே செய்து, முன்னாள் நாயுடு சங்கத் தலைவரான ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு எந்தத் தர்ம சங்கடமும் வராமல் நாயுடு என்ற சொல்லே இந்த விஷயத்தில் பேசப்படாமல் பார்த்துக் கொண்டு எல்லாம் கம்யூனிஸ்டுகள்தான் காரணம் என்று இது வர்க்கப் போராட்டம் என்று அறிக்கை தந்தனர்.

    கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஈ.வெ.ராவின் அறிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சரவைக் குழு கீழவெண்மணி நிகழ்வை வர்க்கப் போராட்டம் என்று அறிவித்தது.

    கோபால கிருஷ்ண நாயுடு இதன் காரணம் என்ற உண்மை, வலைத்தளப் பயன்பாட்டால்தான் உலகுக்குத் தெரியவந்தது என்பது உணரப்படவேண்டும்.

    தி.க. தி.மு.க. அ.தி.மு.க போன்ற கட்சிகளின் கோயபல்ஸிய போய்ப் பிரசாரங்கள் வலை உலகின் காரணத்தால் இனி எடுபடாது என்பதுதான் ஆறுதல்.

     
  2. S Dhanasekaran on April 11, 2015 at 10:44 pm

    செந்தில் அவர்களே! தங்கள் கருத்துக்களை நாகரிகமாகத் தெரிவிக்கலாம் அல்லவா?

     
  3. sundarsvpr on April 14, 2015 at 12:42 pm

    பெரியார் சம்பாதித்த சொத்தை அனுபவித்து வரும் வீரமணி அவர்கள் தலித் சமுதாயதிற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை இதை கேட்க யாரும் முன் வரவில்லை காரணம் மீண்டும் கீழ்வெண்மணி போல் நிகழ்வுஏற்படக்கூடாது என்பதால்

     
  4. S Dhanasekaran on April 14, 2015 at 7:26 pm

    நாகரிகமான கருத்துப் பதிவுகளுக்குத் தமிழ் இந்துவில் இடம் கிடைப்பது அரிது.

     
  5. மு.செந்தமிழன். on April 15, 2015 at 7:00 pm

    நம் ஞான குரு பாரதியார் அழுததைப்போல் ‘விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாய் ‘
    20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே கிருஸ்தவ இயக்கங்கள் மூலம் அரசியலில் தலித்களை இந்திய சுதந்திரப்போரிலிருந்து பிரிக்க முயன்றனர்.
    1930 கள் தொடங்கி காந்தியடிகள் அதை முறியடித்தார்.
    பிராமணர் எதிர்ப்பு என்ற பெயரில் தலித்கள் , மற்ற சாதியினர் இடையே தொடர் விரோதத்தை வளர்ப்பதில் ஆதாயமும் அடைந்துள்ளனர்.
    திராவிட இயக்கத்தினர்.
    இந்த இழிதகை இயக்கத்தால் நஷ்டம் அடைந்தோர் ஒன்று சேரும் நாள் என் கண் எதிரே தெரியாததால் வேறு வழியில்லை .விதியே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அடுத்த சர்ச்சைக்கு வருவோம். திரு.பாண்டே அவர்கள் பெரியார் தலித்துகளுக்காக வைக்கம் போராட்டத்தை தவிர வேறு என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? என்று கேட்டார். மேலும் அவரே தொடர்ந்து சொல்லும்போது பெரியார் கோரிக்கை வைத்தார், நிறைய எழுதினார், பேசினார் என்பது அல்லாமல் நேரடியான போராட்டங்கள் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு திரு.வீரமணி அவர்கள் நேரடியான பதிலை சொல்லவில்லை என்பதை பார்த்த அனைவருக்கும் தெரியும். பேட்டி முடிந்தவுடன் மறுநாள் திராவிடர் கழகம் சார்பாக ஒரு மறுப்பை அளித்தார்கள். அதில் பாண்டே கேட்ட இந்த கேள்விக்கான விடையாக அவர்கள் அளித்த பதில் :

தாழ்த்தப்பட்டோருக்கான திராவிடர் இயக்கத்தின் போராட்டங்கள் எனும் பெருவரலாற்றின் ஒரு சிறுதுளி என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது.

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரன் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்! (தந்தை பெரியார் (குடியரசு 11-10-1931)

அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்பதுதான். அதைப் பெருமையாக கருதும் கழகம் இது.

நீதிக்கட்சி ஆட்சியிலும், அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலன் காக்கவும் உரிமை பெறவும் ஆற்றிய பணிகள் ஏராளம்! ஏராளம்! சான்றுக்குச் சில…..

எந்தப் பொதுஇடத்திலும் ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடை செய்ய முடியாது, தடை செய்யக் கூடாது என்று அரசு ஆணையை 1924லேயே வெளியிட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணை விடுத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த ஊ.பு.ஆ.சௌந்தரபாண்டியன். (1930)

பள்ளிகளில், கல்லூரிகளில் நுழையவும், படிக்கவும் தடை செய்தால் உரிமம் ரத்து என்று அறிவிப்பு

பச்சையப்பன் கல்லூரியில் 1935வரை தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க அனுமதிக்கப்படாதிருந்த நிலையை அழுத்தம் கொடுத்து மாற்றியவர் பெரியார்.

1957 (முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பின்) ஜாதியை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்தையே கொளுத்தி ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினர் 3மாதம் முதல் 3 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை பெற்றனர்.

100 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக வரமுடியவில்லையே என்று பெரியார் வெளியிட்ட கருத்துதான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜஸ்டிஸ் திரு.ஏ.வரதராசன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி பின்பு உச்சநீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக ஆனதற்குக் காரணம்.

காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையில் தாழ்த்தப்பட்ட தோழர்களின் உரிமை மறுக்கப்பட்டால் கிணறுகளில் இறங்கி நீர் எடுப்போம். செருப்பணிந்து வீரநடை நடப்போம் என்று போராட்ட அறிவிப்பு விடுத்து அங்கிருந்த கொடுமையை ஒழித்தவர் கீ.வீரமணி.

திருச்சி கரூரையடுத்த தோட்டக்குறிச்சி கிராமத்தில் பள்ளர் சமுதாயத்தவர்க்கும் கவுண்டர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று (1-5-1985)  பாதிக்கப்பட்ட பள்ளர் சமுதாய மக்களைச் சந்தித்தவர் கீ.வீரமணி அவர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு 18 என்று இருப்பதை மேலும் உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருவது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்ற நோக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.வரதராசன் அவர்களை முன்னிறுத்தி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி.

சென்னையில் இயங்கும் தென்மண்டல உணவுக் கார்ப்பரேஷசனில் நான்காம் பிரிவு ஊழியரிலிருந்து மூன்றாம் பிரிவுக்குப் பதவி உயர்வு கொடுத்தபோது தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு விகிதாச்சாரத்தைக் கடைபிடிக்க உயர்ஜாதி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனை எதிர்த்துப் போராடிய 42 தாழ்த்தப்பட்ட அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து குரல் எழுப்பியது திராவிடர் கழகம்.

திருச்சி மாவட்டம் தளவாய்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அஞ்சல்துறை அலுவலர் ஒருவரை பதவி ஏற்க விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். திராவிடர் கழகத்தின் முயற்சியால் ஜாதி வெறியர்களின் கொட்டம் அடக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து பெருங்கலவரத்தில் ஈடுபட்டனர். தாழ்த்தப்பட்ட தோழர்கள் அங்கு கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியையும் ஆதரித்துத் தமிழ்நாட்டிலும் பேரணி ஒன்றை22-3-1981 அன்று நடத்த தயாரானார்கள் உயர்சாதியினர். ஆதிக்கவாதிகள் பேரணி கிளம்பும் அதே இடத்திலிருந்து எதிர் பேரணி கிளம்பி அதே பாதையில் செல்லும் என்று போராட்ட அறிவிப்பைக் கொடுத்தார். தடை விதித்தால் மீறப்படும் என்று போர்ச்சங்கு ஊதினார். விளைவு,  உயர்ஜாதியர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

3-7-1985 அன்று தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைப் பார்ப்பனர்கள் அரங்கேற்றத் திட்டமிட்டனர். அதேநாளில் அதனை எதிர்த்து உண்ணும் விரதம் போராட்டம் என்று அறிவித்தார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். உடனே அரசு பார்ப்பனர்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

பரமக்குடி, இராமநாதபுரம், மீனாட்சிபுரம், விழுப்புரம், மேலவளவு, தர்ம புரி போன்ற பல்வேறு இடங்களில் ஜாதி வெறியாட்டத்தின்போது, முதலில் சென்று தாழ்த்தப்பட்டோரை சந்தித்த்தோடு, அதே பகுதியில் பல்வேறு இயக்கத்தவர்களையும் இணைத்து ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது.

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகள் நடத்தப்பட்டபோதெல்லாம் நாடு முழுக்க எண்ணற்ற ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணங்களை நடத்தியது.

இவை எல்லாவற்றையும் கடந்து 100 ஆண்டுகாலமாக சகமனிதனை மனிதனாக மதிக்கும் பண்பை வளர்க்கவும் ஜாதியை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளை களையவும் திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் ஆற்றியிருக்கும் மகத்தான பணியின் விளைவையும் பட்டித் தொட்டி எங்கும் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவையும் தமிழ்நாடு,  இந்தியாவின் சமூக வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இதுதான் திராவிடர் கழகம் கொடுத்த விளக்கம். நன்றாக கவனியுங்கள். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்திய போராட்டங்கள் அதாவது வைக்கம் போராட்டம் மாதிரி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுற்றி சுற்றி விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கேட்ட கேள்விக்குத்தான் பதில் இல்லை. இந்த விளக்கத்தில்கூட பல திரிபுவாதங்கள் உள்ளன.

பள்ளன், பறையன் கட்சி என்றால் அந்தப் பெயர் ஏன் இன்றுவரை தொடரவில்லை? இதற்கு பதில் இருக்கிறதா? சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து எந்த தலித் தலைவர் இந்த அமைப்பில் பொறுப்பில் இருந்தார்? திராவிடர் கழகம் பெயர் மாற்றம் பெற்ற பிறகாவது எந்தெந்த தலித் தலைவர்கள் பொறுப்பில் இருந்தார்கள்? இதற்கு பதில் தருவார்களா? இயக்கம் ஆரம்பித்தபோது தலித்துகள் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அளவில்தான் நம்பினார்கள். ஆனால் போக போக இந்த அமைப்பு நமக்கானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். தலித்துகளின் இந்தப் புரிதலுக்கு முதலில் வித்திட்டவரே தலைவர் எம்.சி.ராஜா.தான். நீதிக்கட்சி செய்த துரோகங்களை அம்பலப்படுத்தியவரும் இவரேதான். தலித் தலைவர்கள் அவரும் ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற அளவில்தான் அவருடன் நட்புடன் பழகினர். பெரியாரை தலித்துகளுக்கான மீட்பராக என்றுமே தலித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெரியாருடன் நெருக்கமாக பழகிய என்.சிவராஜ் போன்றவர்கள் கூட அண்ணல் அம்பேத்கரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டாரே தவிர பெரியாரை அல்ல.

Mcrajaபச்சையப்பன் கல்லூரியில் 1927வரை தலித்துகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதை எதிர்த்து பெரியார் எந்தவொரு போராட்டத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அப்போது எம்.சி.ராஜா முதலான தலித் தலைவர்களே அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பெரியார் அழுத்தம் தந்தார் என்று ஒரு ஆதாரத்தையும்கூட அவர்கள் காட்டவில்லை. தெருவில் நடக்கும் உரிமை சட்டம் கூட இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் முயற்சியாலேயே கொண்டுவரப்பட்டது.

1925வரை பெரியார் காங்கிரசில் இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இதை ஆராயவேண்டும். அப்போது பெரியார் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான் வரலாறு. நீதிக்கட்சியை எதிர்க்க பெரியார் முதலானவர்கள் பிராமணரல்லாத வேறொரு அமைப்பை ஆரம்பித்தனர். அந்தளவுக்கு நீதிக்கட்சிக்கும் பெரியார் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கும் பிணக்கு இருந்தது. நீதிக்கட்சி கொண்டுவந்த தலித்துகளுக்கான உரிமை சட்டங்கள் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கிறது. அதற்குப் பின்னால் தலித் தலைவர்களின் முயற்சிகள், போராட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ பெரியார் செய்ததுபோல் திரிபுவாதங்களை இப்போது செய்கிறார்கள்.

W_P_A__Soundrapandiyanarசௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் கூட ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது. அன்றைய நிலையில் நாடார்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதை மனதில் வைத்துதான் அவர் அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் பெரியாரின் பங்கு என்ன? கலவரத்தை தடுக்க பெரியாரை நீங்கள் போகலாமே என்று சொன்னபோது இருமூர்க்கர்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் சென்று அடிபட வேண்டுமா? என்ற ரீதியில் பதில் அளித்தவர்தான் பெரியார். தேவரை கைது செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னார் என்று சொல்கிறார்கள். எப்போது சொன்னார்? எங்கு சொன்னார்? என்ற ஆதாரத்தை இதுவரை யாரும் வெளியிடவில்லை.

மற்றுமொரு முக்கியமான விஷயம் தலித் நீதிபதி நியமனத்தில் பெரியாரின் பங்கை வீரமணி மிகப்பெரிய பொய்யை சொல்லியுள்ளார். இதன் உண்மை விபரத்தை ஏற்கனவே தி.பெ.கமலநாதன் அவர்கள் போட்டுடைத்துள்ளார். அந்த தந்துள்ள அந்த விபரத்தை பார்க்கலாம்.

PARM1OTUS7BQQR94BW0E6I7EKD6VXF_grande

‘அவர் (நீதிபதி ஏ.வரதராஜன்) நியமிக்கப்பட்டது சாதி அடிப்படையிலா? அல்லது தகுதி அடிப்படையிலா அல்லது பணி மூப்பின் அடிப்படையிலா? அந்த நியமனம் சாதி அடிப்படையில் நடைபெற்றதென்று சொன்னால் அது நீதித்துறையில் தமது சொந்த த் திறமையைக் கொண்டே உச்சநீதிமன்ற நீதிபதியாகும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ள ஒருவரின் தகுதியையும் திறமையையும் இழிவுபடுத்துவதாகும். சாதி அடிப்படையில் அந்நியமனம் நடைபெற்றிருக்குமானால் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்னும் அதிகமான தலித்துகள் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் நீதிபதி வரதராஜன் செசன்ஸ் நீதிபதிக்குரிய அந்தஸ்தில் நீதிமன்றங்களின் பணிவரம்பு நிர்ணயக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அடுத்த பதவி உயர்வு இயல்பாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவியே. நீதிபதி வரதராஜன் மிகக் கீழ்மட்டத்திலுள்ள மாவட்ட நீதிபதி என்ற நிலையிலிருந்து செசன்ஸ் நீதிபதியெனும் அந்தஸ்துக்குத் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டவர். எந்தவொரு கறையுமில்லாதிருந்த அவரது பணி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன வட்டத்தில் பணி மூப்புள்ள நீதிபதியின் வாய்ப்பு வந்தது. அவ்வேளையில் நீதிபதி வரதராஜன் பதவி உயர்வுக்கான விளிம்பில் இருந்தார். நீதிபதி வரதராஜனின் பெயர் பணிமூப்புள்ள நீதிபதிகளின் பட்டியலிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக கட்சி அதிகாரத்திலிருந்த்தென்பது வெறும் தற்செயல் நிகழ்வேயாகும். முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகத் தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் தந்து அப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திமுக பெரியாரின் விருப்பங்களை முழு மனதுடன் நிறைவேற்றிருக்குமானால் முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் தங்களிடம் அந்தக் கோப்பு வந்தவுடனேயே தங்களது முத்திரையை அதில் இட்டிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா? நீதிபதி வரதராஜனைத் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையத்தின் ஒரு உறுப்பினராக்கிட திமுக முயற்சி செய்தது. நீதிபதி வரதராஜன் தமது இசைவினைத் தந்திட மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மூலமாகவும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய கோரிக்கை அவரும் நிராகரித்தார். நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது ஆறு மாதங்களாகத் தாமதப்படுத்தப்பட்டது.

(நூல் : தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும் : மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும், ஆசிரியர் : தி.பெ.கமலநாதன், பக்கம் :102-103)

இந்த உண்மைகளை மறைத்து வீரமணி எப்படி பொய் சொல்கிறார் என்று பாருங்கள். இதுதான் இவர்களின் திரிபுவாதம். மேலும் வீரமணி என்னென்ன போராட்டங்கள் செய்தார் என்று பாண்டே கேட்கவில்லை. பெரியார் என்னென்னப் போராட்டங்களை நடத்தினார் என்பதுதான் கேள்வி.  ஆனால் வீரமணி செய்தது எல்லாம் சான்றாக அளித்திருக்கிறது திராவிடர் கழகம். (இவைகளை ஆராய்ச்சி செய்தால் நிகழ்ச்சிகளின் உண்மைத்தன்மைகள் வெளிவரும்) இதன்மூலம் நமக்கு திராவிடர் கழகம் சொல்வது என்னவென்றால் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்பதைத்தான். பாண்டேவுக்கு பதிலும் அதுதான். நமக்கும் பதிலும் அதேதான்.

இந்த நேர்காணல் சம்பந்தமாக முகநூலில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலர் திராவிட இயக்கங்கள் செய்த தலித்துகளுக்கான கோயில் நுழைவு போராட்டங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதுவும் எப்படியெல்லாம் திரிபுவாதம் செய்யப்படுகிறது என்பதையும் அடுத்து பார்த்துவிடுவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கருப்பையா on April 18, 2015 at 7:02 am

ஈவேரா நாயக்கர் பல மாநிலங்களில் எழுந்த மாற்று கருத்து சீர்திருத்தம் கூறியோரில், தமிழகத்தில் எழுந்த ஒரு எதிர்மறை செயல்பாட்டாளர், கிறிஸ்துவ சர்ச்சுகள் துணையை பெற்றவர், ஆனால் தமிழக் ஆட்சிகள் ஈவேரா தமிழர்களை பண்பாட்டை எதிர்த்து செயல்பட்டதை, உடனடியாக காவல்துறை மூலம் அன்றும், இன்றும் செயல் பட்டிருக்க வேண்டும்.

ஈவேரா நாயக்கர் பிள்ளையார் சிலை உடைத்தது தவறு என வீரபத்ரன் செட்டியார் போட்ட வழக்கின் தீர்ப்பின் கடைசி வரிகள் . http://indiankanoon.org/doc/165707/
Courts have got to be very circumspect in such matters, and to pay due regard to the feelings and religious emotions of different classes of persons with different beliefs, irrespective of the consideration whether or not they share those beliefs, or whether they are rational or otherwise, in the opinion of the court.
The action complained of against the accused persons, if true, was foolish, to put it mildly, but as the case has become stale, we do not direct further inquiry into this complaint. If there is a recurrence of such a foolish behaviour on the part of any section of the community, we have no doubt that those charged with the duty of maintaining law and order, will apply the law in the sense in which we have interpreted the law.
சட்டப்படி உயர்நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. மீண்டும் பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்தினால் நடவடீகை என.
எனவே பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட தி.க. போன்றோரை அரசு மிக நிச்சயமாய் கடுமையாய் முதலிலேயே தடுத்திருக்க வேண்டும்.
ஆனால் ஈவேரா நாயக்கர் நாடு முழுதும் எழுந்தபல சீர்திருத்தம் சொன்னவர்களில் அறுவருப்பாக எதிர்மறையாக செயல்பட்டவர். அவரின் சாதனையைவிட 1000 மடங்கு அவரை உயர்த்துவதும் தவறு, தனக்குப் பின்னர் தன் மகன் என வீரமணி செயவது அதைவிடக் கேவலம். எப்படி ஈவேரா நாயக்கர் தன் திருமணத்தால் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் சிந்தனையாளர் இடையே இழந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 vedamgopal on April 18, 2015 at 3:14 pm

வஞ்சனை சொல்பவன்

// இந்தத் தளத்தில் சொல்லும் கருத்துக்களைப் பார்க்கும் போது, ஹிந்து மதம் இனி அவ்வளவுதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. .//

மதம் என்பதே மனிதனின் விலங்கு எண்ணங்களை விலக்கி (உதாரணமாக கோழை மணியின் தாலி அறுப்பு போராட்டம் ஒரு விலங்கு எண்ணம் கொண்ட செயல்தான்) மனிதநேயத்தோடு வாழ வழிநடத்துவதே ஆகும். இதை ஹிந்து மதம் தவிர மற்ற மதங்கள் செய்வதில்லை என்பது வரலாறு கூறும் உண்மை. அன்னிய மதங்கள் செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது இன, கலாசார, மனிதநேயமற்ற படுகொலைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே ஹிந்து மதம் அழிந்தால் மனித இனமும் அழியும் என்பது நிதர்சனம்.

// பாண்டேவின் அந்த நேர்காணல்களைப் பற்றி இங்கேப் படித்துவிட்டுதான், இணையத்தில் அந்த நேர்காணலைப் பார்த்தேன். அவர் கேட்டவை குதர்க்கமானக் கேள்விகள், அது முட்டாள்தனமானது என்று, எவரும் சொல்லிவிடுவார்கள். அப்படிப் பட்ட நேர்காணலை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. //

அட வஞ்சனை சொல்பவ…….. னே பாண்டே கேட்ட கேள்வி குதர்கமானது அல்ல கோழைமணி பதில்தான் குதர்கமானது குழந்தை தனமானது. பாண்டே திரும்ப திரும்ப ஏன் நீங்கள் ஹிந்து மதத்தை மட்டும் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு திரும்ப திரும்ப அவர்கள் பெருன்பான்மையானவர்கள் அவர்களின்தாக்கம்தான் சமூகத்தில் அதிகம் எனவே எதிர்கிறோம் என்கிறார். ஆனால் 3 சதவிகிதத்திற்கு குறைவான பிராமணர்களின் தாக்கம் இந்த பெருன்பான்மை ஹிந்து சமூகத்தின்தாக்கத்தை விட அதிகம் என்ற அடிப்படை கொள்கையுடன் வயிற்று பிழைப்பை நடத்தி கட்சியை வளர்த்தவர்கள். இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் 20 சதவிகிதத்தையும் கிருஸ்துவர்கள் 10 சதவிகிதத்தையும் எட்டிவிட்டார்கள். இவர்களின் தாக்கம் சமூகத்தில் பல பிரிவினை தீமைகளை வித்திட்டுவறுகிறது என்பதை கண்மூடி வாய்பொத்தி கேள்வி கேட்க பயந்து சகித்துக் கொண்டிருப்பவர்தான் இந்த கோமாளி மணி. இந்த பித்தலாட்ட பேர்வழி செவ்வாய் கிழமை தாலி அறுப்பு போராட்டம் செய்தார் உடனே இவர் முன்பு நடத்திவைத்த சுயமரியாதை திருமணத்தில் இவர் கையால் மணமகளுக்கு தாலி எடுத்து கொடுக்கும் விடியோ வலை தளங்களி்ல் அசிங்கப்பட்டு வருகிறது என்பது தெரியுமா உங்களுக்கு !! ??

https://www.facebook.com/video.php?v=462054250625854&fref=nf

// பெரியார், பேசினார், எழுதினார் என்றால் அதன் மூலம் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் மக்களின் மனநிலையைத் தானே மாற்ற முயன்றார். இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? //

இதோ இவர்தான் பெரியார்

1. கடவுளை படைத்தவன் முட்டாள் கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கிய பெரியார்
2. தமிழை காட்டுமிராண்டி பாஷை என ஏளனம் பேசிய பெரியார்
3. விலை மாதர் இல்லங்களில் பெரியார்
4. தனது 17வது வயதில் 13 வயது நாகம்மையை திருமணம் செய்த பெரியார்
5. தனது 75வது வயதில் 26 வயது மணியம்மையை மணந்த பெரியார்
6. நாகம்மையை தாசி என்று நன்பர்களிடம் பெருமைபட்ட பெரியார்
7. வெளிநாடு சென்று நிர்வாண சங்கத்தில் கூத்தடித்த பெரியார்
8. ஆண் ஆதிக்க மனோபாவம் படைத்த பெரியார்
9. ஆண் பெண் உறவு குடும்பமுறையை லீகல் விபசாரம் என்று வர்ணித்த பெரியார்
10. வைகம் போராட்டதின் சொற்ப பங்கை மிகைபடுத்திய பெரியார்
11. தனது 46 வயது வரை தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த பெரியார்
12. கடவுளை மறுத்தவர் இந்துகளை சீண்டினாரே அன்றி முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் பயந்த தொடை நடுங்கிய பெரியார்
13. ஜாதி இந்துகள் முன்னேற்றத்திற்கு மட்டும் பாடுபட்ட பெரியார் தீண்டதகாதவர்களை கண்டுகொள்ளாத பெரியார்
14. சுதந்திரமே வேண்டாம் நாம் பிரிடிஷ்ஷாரால் அங்கிருந்தே ஆளபடுவதை வரவேற்று முழங்கிய அடிமை புத்தி பெரியார்

இப்படி 108 நாமாவளிகளை கூறதக்க முறையில் வாழ்கை நடத்திய சிறியாராகிய கண்னட நாயகரை பெரியார் ஆக்கியதே இந்த பிற்போக்கு திராவிட வியாதிகள் செய்தது பெரிய தவறு.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கருப்பையா on April 20, 2015 at 8:15 pm
Your comment is awaiting moderation.

உலக – பாரத ஊடகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்துவ சர்ச்சின் உடமையாய் உள்ளது. கிறிஸ்துவம் விவிலியத்தை அறிவியலை ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்தோரை துன்புறுத்தியதும் வரலாறு.
விடுதலை முதல் பக்கத்தில் சங்க இலக்கியத்தில் தாலி உள்ளதா என சவாலாக போட்டவர்கள், சங்க இலக்கியத்தில் தாலி உள்ளது, ஆவினம் காக்க வேண்டும் என உள்ளது என்பதை, அந்த அருவருப்பான நிகழ்ச்சிக்கு முன்பே விடுதலை இணையத்தில் பதித்தேன் – அனுமதிக்கவில்லை. அருள்மொழி முகநூலில் உள்ளது -அடங்கினர்., அதே போல வெங்கடேசன் எழுத்துக்களின் இணைப்பும் அருள்மொழி முகநூலில் உள்ளது. தீயகாவினர் கண்டிப்பாக படிக்கின்றனர்.
உலக – பாரத ஊடகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்துவ சர்ச்சின் உடமையாய் உள்ளது. கிறிஸ்துவம் விவிலியத்தை அறிவியலை ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்தோரை துன்புறுத்தியதும் வரலாறு.
விடுதலை முதல் பக்கத்தில் சங்க இலக்கியத்தில் தாலி உள்ளதா என சவாலாக போட்டவர்கள், சங்க இலக்கியத்தில் தாலி உள்ளது, ஆவினம் காக்க வேண்டும் என உள்ளது என்பதை, அந்த அருவருப்பான நிகழ்ச்சிக்கு முன்பே விடுதலை இணையத்தில் பதித்தேன் – அனுமதிக்கவில்லை. அருள்மொழி முகநூலில் உள்ளது -அடங்கினர்., அதே போல வெங்கடேசன் எழுத்துக்களின் இணைப்பும் அருள்மொழி முகநூலில் உள்ளது. தீயகாவினர் கண்டிப்பாக படிக்கின்றனர்.
//ஆதிகாலத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இருந்தே வந்திருக்கிறது.// ஏன் ஐயா நீர் பாதிரி என்பதை நிருபிக்க சாட்சி தருகீறீர். தோமா முதல் போப், கால்ட்வெல் என அனைவர் பெயர் பின்னும் ஐயர் எனப் பட்டம் போட்டுகொண்டது ஏன். தொல்காப்பியம்- திருக்குறள், சங்க இலக்கியம் எல்லாவற்றிலும் ஐயர், பார்ப்பனர், அந்தணர் என பிராமணரைக் குறிப்பது அனைவரும் அறிந்ததே.
பாம்பையும் பாதிரியையும் ஒண்ணாப் பார்த்தால் பாதிரியை முதல்ல அடி என்பது தென் மாவட்ட செவிவழி பழமொழி. இதை மாற்றி பாதிரிகள் மாற்றி தீயகாவினர் வாயில் பொய்யைப் பரப்புவதும் ஏனோ?

அடுத்த நிலையில் கிறிஸ்துவர் – தமிழறிஞர்கள் தீயகாவினருக்கு ஏனோ அதரவு- தமிழ் பாரம்பரியத்தை, தமிழர் மெய்யியலை அழிக்க நேர் ஆதரவு. தமிழ் சூசை என்பவர் முக பக்கத்தில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்த பி.சுப்பிரமணிய சாஸ்திரியார் பற்றி எழுத, தொல்காப்பியர் அந்தணர் என ஒருவர் எழுத, பேராசிரியர் இலக்குவனார் பதிலாய் உளறலாக- //நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை. அவர் தமிழரே! அவரை இழிவுபடுத்து முயன்று முடியாததால் பிராமணராகக் கூறுகின்றனர் அச்சாதியினர்// எனப் பிதற்றினார்.

தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)

தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)

நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயப்பாவணர்.
சுவிசேஷத்தில் ஏசு சாதாரணப் பாவி மனிதன் என வரும் வசனக்தை எல்லாம் இடைச்செருகல் எனப் புனைந்துள்ளன்ர். அது போலெ இங்கும் பலர் செய்துள்ளனர், இது போலே செய்யப்பட்ட போலி ஆய்வுகள் தவறு எனத் தெளிவாக பலமுறை சுட்டப்பட்டும் உள்ளதே. உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை என்பதை பல நடுநிலையாளர் தவறு என நிருபித்தும் உள்ளனர்.

கிறிஸ்துவப் பாவாணர் தமிழ் ஆய்வு போர்வையில் விஷம் பரப்பிய பலவற்றை நீக்கி இப்போது தமிழ் மண் பதிப்பக மறுபதிப்பில் வருகிறதே, தெரிந்து பாரத மக்களை ஆரியர் – திராவிடர் எனப் பாரப்பி பிரித்து சுரண்ட செய்தவை தானே அவை.http://solvanam.com/?p=5574
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா? – சொல்வனம்

கிறிஸ்துவ பைபிள் ஆதாரமற்ற செய்திகளை ஒருவர் சொல்ல அவற்றை மற்றொருவர் மீண்டும் சொன்னால் சுவிசேஷம் ஆகும். தமிழ் பற்று என்ற வேடத்தில் சர்ச் ஏமாற்றி கொண்டு இருக்கிறது. பாவாணர், தெய்வநாயகம், இப்போது மா.சோ. விக்டர் ஆய்வுகள். இவர்கள் கதைக்கும்படி, தமிழன் உலகின் முதல் மாந்தன், தமிழ் முதல் மொழி. ஆனால் கிறிஸ்துவம் முதல் நூலினின்று கடைசி வரை கட்டுக் கதை என நிருபிக்கப்பட்டதை மட்டும் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். தமிழை போற்றுவோர் பாலைவன மதங்களை ஏற்றல் – தமிழ்பற்று வெறும் வேடம் என்பதை நிருபிக்கும்.

தமிழில் நடுநிலை செய்தி ஊடகம் இல்லாததும், சினிமா பின்பலமும் தீயகாவினர் பொழப்பை ஓட்டியது. ஒரு 45 நிமிடம் ஒரு பத்திரிக்கையாளர் நடுநிலையோடு செயல்பட்டால் முகத்திரை கிழிய பாவம் புலம்புகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

புரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு

 

president-pm-pays-tribute-to-br-ambedkar_140414015806

சமஸ்கிருதம் என்றாலே அது தீட்டுப்பட்ட மொழிபோலவே நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அது ஆரிய மொழி, பிராமணர்களின் மொழி, அது தமிழை அழிக்கும் மொழி என்றெல்லாம்கூட கருத்தை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறோம். தலித்துகளில்கூட அப்படியான ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனங்களில் இந்த எண்ணங்களைத்தான் பல நூறாண்டுகளாக வெள்ளைக்காரர்கள் செய்தார்கள், இப்போது திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசவிரோத சக்திகள் இந்த எண்ணங்களைத்தான் தலித்துகளின் – மக்களின் மனங்களில் தொடர்ந்து விதைத்து வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழி. இம்மக்களின் மொழி. இன்று தலித்துகளின் பட்டியலில் உள்ள வள்ளுவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வானியல், ஜோதிடம் போன்றவற்றில் மிகச்சிறந்த திறமைசாலிகளாக, புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். பல்வேறு அரசர்களுக்கு நாள் குறித்து தரும் கணியன்களாக பணிபுரிந்துள்ளனர். சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெறாமல் ஜோதிடத்தையும், வானியலையும் தொழிலாகக் கொள்ள முடியாது. காலத்தையும் கணிக்க முடியாது.

இப்படி எல்லா மக்களுக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் நாளடைவில் ஒரு சமுதாயத்திற்கான மொழியாக உருமாற்றம் பெற்றது வரலாற்றின் புதிர். ஆனால் ஒரு சில இடங்களில் தலித்துகள் சமஸ்கிருதம் பயின்றனர் என்ற விபரம் நமக்குக் கிடைக்கிறது. உதாரணத்திற்கு பறையரான க.அயோத்திதாசப் பண்டிதர், அவரின் பாட்டனார் போன்றவர்கள் சமஸ்கிருத மொழியில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர்கள். அதே சமயம் அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எம்.ஆர்.ஜெயகர் போன்றவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க முடியாமல் ஆதிக்க சாதியினரால் துரத்தப்பட்ட சம்பவங்கள்தான் மிக மிக அதிகம்.

ஆனால் இதற்காக அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருத மொழியை வெறுத்து ஒதுக்கிடவில்லை. தம் சொந்த முயற்சியாலும் பண்டிதர்களின் துணைகொண்டும் சமஸ்கிருத மொழியைக் கற்றார். அவர் சமஸ்கிருத மொழியைப் பற்றி கூறும்போது ‘சமஸ்கிருதம் காவியங்களின் புதையல்; அரசியலுக்கு, த த்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில்; நாடகங்களுக்கு, தர்க்க இயலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.1

சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின்  மொழியாக, தேசிய மொழியாக வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இது பற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார்.2

संस्कृत-संभाषण (जून-2003 ) 1

இந்த செய்தி அன்றைய எல்லா பத்திரிகைகளிலும் வெளியானது. தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்: ‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ‘ 3

இதற்கு இரண்டுநாள் முன் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷன் கூட்டத்திலும் அண்ணல் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது B.P.மௌர்யா போன்ற சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பின் B.P.மௌர்யா அவர்கள் என்சிஈஆர்டி-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் அப்போது அறியாமையினாலும் சமஸ்கிருத மொழியின்மேல் இருந்த வெறுப்பினாலும் அப்படி நடந்துகொண்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.

 (இந்தக் கட்டுரை விஜயபாரதம் இதழில் வெளிவந்துள்ளது)

அடிக்குறிப்புகள்

1. 1947 ஏப்ரல் 13ஆம் நாள் நவயுகம் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பு மலரில் பேராசிரியர் சத்தியபோத் ஹட்லிக் எழுதியது. (நூல் :டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தனஞ்செய் கீர், தமிழாக்கம் – க.முகிலன், வெளியீடு :மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி.

2. The Hindu 11-9-1949

3. The Sunday Hindustan standard 11-9-1949



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

 

‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள். இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை.  தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான் என்பது பெரியாரியவாதிகளின் வாதம். அவர்கள் சில சம்பவங்களை முன்வைக்கிறார்கள். அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நாம் ஆராய்வோம்.

முதல் சம்பவமாக இதை நாம் எடுத்துக் கொள்வோம்.

kuthuoosi_gurusamy

ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது. (பெரியார் சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, பக்கம்.514-515) என்று கூறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.

அடுத்து,

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று. 1929 ஏப்ரல் முதல் வாரத்தில் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே. அத்தீர்மானம் போட்ட மறுநாள் ஈ.வெ.ரா. கோவைக்குச் சென்றுவிட்டார். பெரியார் கோவை புறப்படுவதற்கு முன்பு குருசாமியை அழைத்து கோவையிலிருந்து நான் திரும்புவதற்குள் இத்தீர்மானத்தை ஒட்டி எந்தவித நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். குருசாமியைப் பற்றி நன்கு உணர்ந்தவர் அல்லவா பெரியார்.

பெரியார் ஈ.வெரா.ரா. கோவை சென்ற அன்றே அதாவது 4-4-1929 அன்று மாலையே அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விரும்பிவிட்டார் குருசாமி. அவரைத் தடுப்பார் யார்? ஆகவே குத்தூசியார், பொன்னம்பலனார் துணையுடன், ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு முக்கியத் தெரு வழியாகச் சென்று மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவகையில் தேங்காய், பழம், பூ ஆகியவைகள் அடங்கிய தட்டுடன் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் நுழைந்தனர். (பசுபதியும், கருப்பனும் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்)

இதனைப் பொதுமக்களும் பார்ப்பனர்களும் பார்த்துவிட்டனர். குருசாமி நண்பர்களுடன் கோயிலுக்குள் கலாட்டா செய்வதற்கென்றே செல்லுகின்றான் என்ற செய்தியை ஊர் முழுவதும் பரப்பினர். குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர். குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார். (நூல்: குத்தூசி குருசாமி, ஆசிரியர் : குருவிக்கரம்பை வேலு, பக்.159-160) என்று எழுதுகிறார் குருவிக்கரம்பைவேலு.

ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவைப் பற்றி இரண்டுபேர் எழுதியதின் திரிபுகளை இப்போது பார்க்கலாம்.

  1. ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது என்று எழுதுகிறார் எஸ்.வி.ராஜதுரை. ஆனால் உண்மை என்ன? வழக்கு சா.குருசாமி மீது போடப்படவேயில்லை. ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகிய மூன்றுபேர் மீது மட்டுமே போடப்பட்டது.
  2. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன? பெரியார் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் அல்ல. துணைத்தலைவர் மட்டுமே.
  3. ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் இதற்கு ஆதாரமே இதுவரை இல்லை.
  4. ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு – என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன? ஈசுவரன் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற இருவரும்தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் வள்ளுவர், ஒருவர் பஞ்சமர். இந்த ஈசுவரன் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.
  5. குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர் என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன? வெளிக்கதவை பூட்டவே இல்லை. இரவு 7.00 மணிக்குத்தான் இவர்கள் கோயிலுக்குள் வந்தனர். மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு காவிரியில் குளிக்கச் சென்றனர். பின்பு 7.00 மணிக்கு மீண்டும் அனைவரும் திரும்பி வந்தபோது வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு போய்விட்டார்கள். இரண்டுநாள் என்பது பொய்யான தகவல்.
  6. குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன? சாப்பாட்டை கோயில் வழியாகவே கொண்டுவந்தனர். கொண்டுவந்தவர் செட்டி சாமியார் என்பவர். கொடுத்தனுப்பியது வேண்டுமானால் நாகம்மையாராக இருக்கலாம். ஆனால் மதில் வழியாக என்பதெல்லாம் கடைந்தெடுத்தப் பொய்.
  7. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார் என்று எழுதுகிறார் வேலு. இதுவும் பொய். மறுநாள் காலையே அவர்கள் குளிக்கச் சென்றுவிட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் வெளிக்கதவு மூடப்பட்டிருந்தது. பின்பு அவர்கள் சென்றுவிட்டனர்.

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு என்ற நூலை திராவிட இயக்கத்தைச் சார்ந்த வாலாசா வல்லவன் எழுதியிருக்கிறார். அதில் ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவு சம்பந்தமாக நடைபெற்ற வழக்கை விலாவாரியாக கொடுத்திருக்கிறார். அந்த வழக்கிலிருந்துதான் இந்த உண்மைகளை நான் எடுத்து எழுதியிருக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் குத்தூசி குருசாமியின் பெயரே வரவில்லை. அப்போது குருசாமிக்கு வயது 23தான் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும். குருசாமி அழைத்துப் போயிருந்தால் அவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஈசுவரன் என்பவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஈசுவரன்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குக்காக பல்வேறு பொதுமக்கள் பணத்தை தந்திருக்கிறார்கள். இதில் ஈவெரா 35ரூபாய் மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் இந்த வழக்கிற்காக சென்னை ஆதிதிராவிட சங்கம் 60ரூபாயை தந்திருக்கிறது. ஈரோட்டில் மிகப்பெரிய வணிக தனவந்தர் பெரியார்தான். அவரே வெறும் 35ரூபாய்தான் தந்திருக்கிறார், ஆனால் சம்பந்தமே இல்லாதவர்கள் பலர் அதைவிட அதிகமாக பணத்தை தந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே இது சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம்தானா என்பதில் ஐயம் இருக்கிறது.

எப்படியிருப்பினும் பெரியாரின் தொழிலாளிகள் மற்றும் இயக்கத்தவர்கள் கலந்துகொண்ட கோயில் நுழைவு போராட்டம் நடந்திருக்கிறதே என்று கூறலாம். ஆம் உண்மைதான்.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஏன் பெரியார் தலைமையில் கடைசிவரை தமிழகத்தில் ஒரு கோயிலில் கூட கோயில் நுழைவு போராட்டம் நடத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. 1925ல் காங்கிரசை விட்டு விலகிவிடுகிறார். ஆனாலும் 1927வரை காந்தியையும் கதரையும் ஆதரித்துக்கொண்டு இருக்கிறார். 1926க்குப் பிறகுதான் ஒரு புதிய இயக்கத்துக்கு வித்திடப்படுகிறது. இயக்கத்துக்கு பலம் சேர்க்க பல்வேறு போராட்டங்களை ஆரம்பிக்கவும் அன்று பெருவாரியாக அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஆதிதிராவிடர்களை தங்கள் இயக்கத்தின் பக்கம் வளைக்கவும்தான் இந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மற்றபடி தலித்துகள் கோயிலில் நுழைந்து வழிபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரியார் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றையும் எதற்காக இந்த கோயில் நுழைவு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் பின்பு பார்ப்போம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 வ.கீதாவும் நானும் Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar’ என்னும் நூலின் முதல் பதிப்பின் (1998இல் கல்கத்தாவிலுள்ள ‘சாம்யா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது) viiஆம் பக்கத்தில் அந்த நூலை எழுதுவதற்கான எங்களது ஆராய்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் உதவியவர்கள் என்ரு ஒரு பெரிய பட்டியலையே தந்திருக்கிறோம். அதில் உள்ள வரிகளிலொன்று: “None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”.

 

இந்தியாவில் இன்று புழங்கும் கருத்துக்கள் பலவற்றுக்குப்பின்னால் பல்வேறு நிதியுதவிகள் இருக்கின்றன. அவற்றை விவாதிக்காமல் கருத்துக்களை விவாதிப்பது வீண்வேலை. அவ்வாறு நிதியூட்டப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஏதேனும் வகையில் பிரிவினையை, பிளவுகளை உருவாக்கக்கூடியவை. நீண்டகால அளவில் பெரும் வன்முறைக்கும் மானுட அழிவுக்கும் வழிவகுக்கக்கூடியவை.

அவை மானுட உரிமைகள், சமூகநீதி என பல்வேறு போலி முற்போக்கு வேடங்களில் வருகின்றன. அவற்றைப்பற்றிய எச்சரிக்கை நம் சமூகத்துக்கு அவசியம். உண்மையான மானுட உரிமைகள் ,சமூகநீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களில் இருந்து அவற்றை நாம் பிரித்துக்காண வேண்டும். அவற்றின் லேபிள்களை மட்டும் கவனித்தோமென்றால் அவை நம்மை மாபெரும் மானுட அழிவை நோக்கியே கொண்டுசெல்லும். அந்த அழிவில் குளிர்காய நினைக்கும் ஏகாதிபத்திய சக்திகளால் அவை இங்கே வளர்க்கப்படுகின்றன.

அவை பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவே. நிரூபிக்கப்படத்தக்க தகவல்கள் அபூர்வம். ஏனென்றால் இந்த மாபெரும் சர்வதேச நிதிவலைப்பின்னலை நம் அரசுகள் கூட இன்னும் ஊடுருவவில்லை. ஆனாலும் அவற்றைப்பற்றி பேசுவதன் மூலம் நான் உருவாக்க விரும்பும் விளைவுகள் இரண்டு. ஒன்று, இப்படி ஒரு விஷயம் நிகழ்கிறதென்றே தெரியாமல் , தெரிந்தும் நம்பாமல் இருக்கும் பெரும்பான்மை வாசகர்களிடம் இதைப்பற்றி ஒரு விவாதத்தை உருவாக்குகிறேன். இரண்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிலரேனும் சுயவிளக்கமளிக்கும் கட்டாயத்தை உருவாக்குகிறேன்.

ஆகவேதான் இவற்றைப்பற்றி பேசுகிறேன். போதாத தகவல்களுடன். பெரும்பாலும் ஊகங்களுடன். ஆனால் இது ஒரு தொடக்கமே. இது தொடங்கிவிட்டால் ஆராய்ச்சித்திறனும் அதற்கான வாய்ப்புகளும் உடையவர்கள் உள்ளே வருவார்கள்.

என்னுடைய நினைவுக்குழப்பத்துக்கு முக்கியமான காரணம் இந்த அமைப்பின் உதவி உங்களுக்கு பெரியார் பற்றிய நூலுக்காகவே அளிக்கப்பட்டது என்றும் அதற்கும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உங்களுக்கு அவ்வமைப்புடன் தொடர்பிருந்தது என்றும் அந்நண்பர் முன்பு எனக்கு சொல்லியிருந்ததுதான்.. ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar. என்ற நூல் தமிழில் எழுதிய நூல்களை மறுஆக்கம் செய்தது என்ற நிலையில் அது இப்போதும் தர்க்கபூர்வமாகச் சரிதான்.

கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.

மிகமிக மென்மையாக அவர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்களை மேற்கோள்காட்டியே சொல்வதென்றால் The World Association for Christian Communication (WACC) என்பது ஒரு சர்வதேச தன்னார்வ நிறுவனம். அதன் தலைமையகம் கனடாவிலும் பிரிட்டனிலும் இருக்கிறது. நிதியாதாரங்கள் அமெரிக்காவிலும் பரந்து கிடக்கின்றன. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைநாடுகளில் மதப்பரப்ப்புவேலைகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு 1500 க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைகொண்ட ஒரு குட்டி அரசாங்கம். அதன் ஒட்டுமொத்த ஊழியர்கள் கிட்டத்தட்ட லட்சம்பேர்.

எந்தத் தன்னார்வ நிறுவனத்தைப்போலவும் WACC யின் அறிவிக்கப்பட்ட இலக்கு என்பது மானுட உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும் சமூகநீதியை உருவாக்குவதும்தான். ஆனால் தெளிவாகவே அவற்றை கிறித்தவ விழுமியங்களாக அவ்வமைப்பு கருதுகிறது. அதற்காக மட்டுமே அது போராடுகிறது. வறுமையும் உள்நாட்டுப்போரும் ஓங்கிய, ஆனால் கனிவளம் மிக்க, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீனமேரிக்காவிலும் தன் கிளைகளை விரித்துக்கொண்டு செயல்படும் WACC அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமைப்புகள் உலகில் மிகக்குறைவே

1950களில் இடதுசாரி கருத்துக்கள் உலகமெங்கும் பரவியபோது அதற்கு எதிராக கிறித்தவ மதக்கருத்துக்களைப் பிரச்சாரம்செய்யும்பொருட்டு உருவான அமைப்பு WACC . ஏற்கனவே தனித்தனியாகச் செயல்பட்டுவந்த பல்வேறு கிறித்தவ மதப்பிரச்சார அமைப்புகள் இந்த பொதுக்குடைக்கீழ் இணைந்தன. World Council of Churches போன்ற மாபெரும் தேவாலயக்கூட்டமைப்புகள் இந்த அமைப்புக்கு துணைச்சக்தியாகச் செயல்பட்டன. பின்னர் அவை இவ்வமைப்பில் இணைந்துகொண்டன.

1959ல் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசைக் கலைத்ததில் இந்த அமைப்பின் பெரும்நிதியுதவி இருந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் பிரிவினைவாத, இனவாத இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணிச்சக்தியாகவும் இந்த அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பு உலக அளவில் பல்வேறு வகையான பதற்றங்களையும் வன்முறைகளையும் உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

ஆப்ரிக்காவின் பலநாடுகளில் கிறித்தவதேசியவாதம் முளைத்தெழவும் அவை இஸ்லாமியதேசியங்களுடன் மோதி வன்முறைகள் வெடிக்கவும் இவ்வமைப்பு காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நைஜீரியாவில் பயாஃப்ரா என்ற கிறித்தவதேசிய இயக்கம் உருவாகி உலகின் மாபெரும் மானுட அழிவுகளில் ஒன்று நிகழ இவ்வமைப்பின் நிதி மற்றும் கருத்தியல் பின்னணி உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

[உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்று நைஜீரியா உள்நாட்டுப்பிரச்சினைகளை ஓரளவு தீர்த்துக்கொண்டு தன்னுடைய பெட்ரோலியத்தை கொள்ளையிட்டுச்செல்லும் ஐரோப்பியநாடுகளுடன் முரண்பட்டு வினவ முனைகிறது. அதற்கு பதிலடியாக பயாஃப்ரா கிறித்தவக் குடியரசை உயிர்த்தெழச்செய்ய முயல்கின்றன ஐரோப்பியநாடுகள். பயாஃப்ரா குடியரசுக்கான போராட்டத்தின் புண்களை கிளறும் நோக்கமுடைய சிமொண்டா அடிச்சியின் நாவலை [Half of a Yellow Sun ,Chimamanda Adichie] அவை விருதுக்குமேல் விருதாகக் கொடுத்து உலகமெங்கும் தூக்கிப்பிடிக்கின்றன. அந்தக்குப்பையை ஒரு மாபெரும் மானுட ஆவணம் என்று விசுவாசமாக புகழ்ந்து நீங்களும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்]

லத்தீனமேரிக்காவில் இடதுசாரி இயக்கங்கள் உருவானபோது அவற்றுக்கு எதிராக கிறித்தவ பிரச்சாரம்செய்ய WACC பெரும் நிதியையும் முயற்சியையும் செலவிட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட போலி புரட்சிச் சிந்தனையான விடுதலை இறையியல் அதன் சிருஷ்டி என்று சொல்லப்படுகிறது. இன்று அதைப்பற்றி மிகவிரிவான தக்வல்கள் வெளிவந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக WACC யின் செயல்பாடுகள் என்ன? அவர்களே அறிவித்துக்கொள்ளும் செயல்திட்டங்கள் இவை. முக்கியமாக ஊடகங்களைக் கைப்பற்றுதல். அவற்றில் கிறித்தவக்கொள்கைகளை ஊடுருவச்செய்தல். பல்வேறு பண்பாடுகளை கிறித்தவப்பிரச்சாரத்துக்கு உகந்தவகையில் மாற்றி எழுதுவதற்கு ஊக்கமளித்தல். அப்பண்பாட்டுத்தகவல்களை தொகுத்து சர்வதேசத்தன்மை கொண்ட ஒரு தகவல்களஞ்சியத்தை உருவாக்குதல். அவற்றைக்கொண்டு கிறித்தவ மதப்பரப்பலுக்கு உகந்த கொள்கைகளை வடிவமைத்தல்.

அதை இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பொதுச்சிந்தனைகளையும் ஊடுருவுதல். செய்திகளில், வரலாற்று ஆய்வுகளில், அரசியல் சொல்லாடல்களில், கல்விப்புலங்களில் தங்கள் கருத்துக்களை நுழைத்தல். தங்களுடைய நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ப பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் திரித்து வடிவமைத்தல்.

அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் ஆட்களைக் கண்டடைகிறார்கள். அவர்களுக்கிருக்கும் செல்வவளம் என்பது நினைத்துப்பார்ப்பதற்கரியது. ஒருவேளை இந்திய அரசின் வரவ்செலவு கணக்கைவிடப்பெரியது அது. அந்தப்பணத்தை பல்வேறு வழிகளில் அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள். நூலாய்வுகளுக்கு நூலாக்கங்களுக்கான நிதியுதவிகள், கருத்தரங்குகளில் கட்டுரை படிப்பதற்கான அழைப்புகள். அவற்றின் நிதியளிக்கைகள் ஒருபோதும் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற அரசுகள் எளிதில் அவற்றை பெறுவதும் சாத்தியமல்ல.

எஸ்.வி.ஆர் சொல்லுங்கள், WACC யின் மேலே சொன்ன எந்த நோக்கங்களுடன் நீங்கள் ஒத்துழைத்தீர்கள்? அப்படி ஒத்துழைக்காவிட்டால் எதற்காக அவர்கள் உங்களுக்கு உதவினார்கள்? ஒரு ’மார்க்ஸிய களப்போராளி’ ஒத்துழைக்கவேண்டிய, உதவிபெற்றுக்கொள்ளவேண்டிய அமைப்புதானா அது?

உலகமெங்கும் WACC செய்வதென்ன என்பதை மிக எளிதாக ஒருவர் இணையம் மூலமே வாசித்து மேலே ஊகிக்க முடியும். ஒன்று நிதியுதவிகள் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பரப்பத்திட்டமிட்டுள்ள நாடுகளின் பண்பாட்டாய்வுகளை எழுதச்செய்கிறார்கள். பின்னர் அந்நூல்களை அப்பண்பாடுகளுக்கான ஆவணமாக, ஆதாரநூல்களாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்நூல்களை மேற்கோள்காட்டி அப்பண்பாடுகளைப்பற்றிய தங்கள் ஊடகப்பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது நைஜீரியாவின் மதச்சூழல் பற்றி பற்றி என்ன எழுதவேண்டும் என்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன் பின் அந்நூல் ஐரோப்பாவெங்கும் பல்கலைகழகங்களில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்படுகிறது. அதன்பின் அந்நூலை மேற்கோளாக்கி நைஜீரியாவின் மதச்சூழல் பற்றிய இதழியல்கட்டுரைகள், செய்திகள் எழுதப்படுகின்றன. தொலைக்காட்சிச்செய்திகள் உருவாக்கப்படுகின்றன. விளைவாக அவர்கள் விரும்பினால் பயாப்ராவை எழுப்பலாம், அணைக்கலாம்.

உங்கள் நூல் இன்று உலகின் பல பல்கலைகளில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்நூல் பெற்ற உதவிகள் என்ன என்று பார்ப்பது இந்திய வாசகனாக என் கடமை அல்லவா? அந்நூலை மேற்கோளாக்கி இன்று ஆங்கில ஊடகங்களில் எழுதப்படும் பல்வேறுசெய்திக்கட்டுரைகளை காணும்போது, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி வட்டாரமொழிகளில் வரும் கட்டுரைகளை காணும்போது அவற்றின் பின்னணி என்ன என்று ஏன் நான் யோசிக்கக்கூடாது?

கடைசியாக எந்த ஒரு பொதுவாசகனும் கேட்கும் கேள்வி. இத்தனை பிரம்மாண்டமான ஓர் அமைப்பு, உலகம் முழுக்க பரவியிருக்கும் ஓர் அரசாங்கம், எப்படி உருவாகிறது? ஐரோப்பாவில் தேய்ந்துகொண்டிருக்கும் கிறித்தவத்துக்கு இத்தனை நிதி பக்தர்களின் நன்கொடையாக குவிகிறதா என்ன?

மார்க்ஸிய அரிச்சுவடி தெரிந்த எவருக்கும் தெரியும், இது ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என. மதம் அதன் வாகனம் மட்டுமே. அல்லது முகமூடி. நைஜீரிய அரசு எண்ணைக்கு நியாய விலை கோருவதை கைவிட்டால் பயாப்ரா கிறித்தவக்குடியரசு அப்படியே அணைந்து போகும். உலகமெங்கும் பரவும் ஐரோப்பிய வணிகநிறுவனங்களின் மீசைமுறுக்கல்தான் இந்த வகை அமைப்புகள். அதற்காகவே நிதி வந்து குவிகிறது.

உங்கள் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதாப் நைனான் தாமஸ் பற்றி இன்னும் விரிவாகவே சொல்லமுடியும். இங்கே WACC யின் உச்சநிலை தொடர்பாளராக இருந்து பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் வழிநடத்தியவர் அவர். இந்திய ஊடகங்களை ஊடுருவுவதலை விரிவாகவே ஆவணப்படுத்திய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பின்னர் WACC யில் இருந்து விலகி அதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் -ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய உடையும் இந்தியா என்ற நூலில் கூட அவரது நூலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. உலகமெங்கும் உள்ள கிறித்தவ செய்தி அமைப்புகள், பிரச்சார அமைப்புகள், ஆய்வு அமைப்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு ‘கிறித்தவ உம்மாவை’ உருவாக்கியிருப்பதை இவர் பெருமையுடன் அறிவிக்கிறார். இந்நூலில் இந்தியாவில் செயல்படும் இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகள் அவர்களின் அறிக்கைகளில் இருந்தே விரிவாக எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ.கீதா நிதி பெற்றிருக்கிறாரா என்ற கோணத்தில். இரண்டு, பாரதிதாசன் பற்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கௌரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி. அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்ற கோணத்தில்.

கடைசியாக, நீங்கள் வழக்கு தொடுப்பதைப்பற்றி. நீங்கள் அதைச்செய்யலாம். நான் அது அவசியமான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். பல காரணங்கள். ஒன்று, இந்த விஷயம் நீதிமன்றம் சென்றதென்றால் முறையாகவே ஒரு வழக்கறிஞரை அமைத்து பல விஷயங்களை ஆராயச்செய்யலாம். தகவலறியும் சட்டத்தைக்கொண்டு தகவல்களை பெறலாம்.

இது என்னைப்போன்ற ஒரு சாமானியன் எதிர்கொள்ளவேண்டிய விஷயமல்ல. கடல். ஒன்றும் உருப்படியாக சிக்காமல் போகலாம். அப்போது நான் தண்டிக்கப்படலாம். பரவாயில்லை. ஒரு பொதுவிவாதத்தை பிரபல ஊடகங்கள் வழியாக உருவாக்க அது எனக்கு உதவும். இனி இவ்விவாதம் அந்த தளத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்

உண்மையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதுரையில் இந்த நிறுவனத்துடன் உங்கள் உறவைப்பற்றி கேள்விப்பட்டபோது நான் இவ்வளவு பெரிதாக நினைக்கவில்லை. நம்மூர் கலைக்காவேரி போல கிறித்தவர்களின் ஒரு சில்லறை கலாச்சார நிதியுதவி அமைப்பு என்றே எண்ணினேன். மேலே சென்று யோசிக்கவுமில்லை. இன்று இணையம் வழியாக WACC பற்றி அறிய வரும்போது பதற்றமும் துயரமும் ஏற்படுகிறது. எஸ்.வி.ஆர், என்னதான் சொல்லுங்கள், நீங்கள் இதைச்செய்யலாமா? உங்கள் மனசாட்சியுடன் ஒரு கணமாவது இந்தச்சொற்கள் பேசாதா என ஏங்குகிறேன்.

ஜெ

 

 

WACC இணையதளம்

WACC லண்டன் இணையதளம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard