New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அயல்நாட்டுக் கிறிஸ்த்துவ பாதிரிகளின் தமிழ் பணியும், கேடுகளும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அயல்நாட்டுக் கிறிஸ்த்துவ பாதிரிகளின் தமிழ் பணியும், கேடுகளும்
Permalink  
 


ஆப்பிரஹாமிய மதங்கள் “நிர்வாக ரீதியிலான மதங்கள்”; சர்ச் அமைப்பு தன்னை வளர்த்து உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழாக்குவது தான் முதன்மையான நோக்கம்; உங்கள் சமயம் அறியவும், எங்கள் நாட்டின் சமயத்தை கூறுகிறோம், என வந்து, பின் வணிகர் வர பின் ஆய்தக் கப்பல் வர அடிமைப் படுத்தி கத்திபலத்தில் உலகின் பெரும்பாலன பகுதிகளை முமுமையும் அடிமைப் படுத்தினர்.

 

 மதமாற்றம் செய்ய வந்த வெளிநாட்டு பாதிரிகள், தங்கள் மதப் புராணக்கதை நூலான பைபிளை (விவிலியம்) தமிழ் கற்றனர். தமிழ் மக்களிடம் பேசி உரையாட இயலாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசி  கருத்து  பரிமாற்றாம் செய்ய வேண்டிய  என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என நாகரீக மேன்மையடைந்த, இறை அனுபவம்  ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழஅர்களை  பேசி மதமாற்றம் செய்ய இயலாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் மேல்  கவனம் சென்றது.

 

வெளிநாட்டிலிருந்து வந்த பாதிரிகளுக்க, மாத சம்பளம் மிக அதிகம், அதற்கு அவர்கள் மாதம் எத்தனை பேர் கிறிஸ்துவராய் மாறினேன் எனக் கணக்கு தர வேண்டும். ஆரம்பத்தில் கோவா நந்த போர்ச்சுகீசியர் புனித சவேரியர் எனப்படும் ப்ரான்சிஸ் சேவியர் போன்றோர் ஆட்சி கத்தி பலத்தில் கடவுள் கோயில்களை இடித்து உயிரோடு வாழ வேண்டுமெனில் கிறிஸ்துவனாகு எனும்படி மிரட்டி மாற்றினர். கிறிஸ்துவராய் மாறிய பின்னரும், வீடுகள் கடவுள் சிலைகள் வைத்தும், ஹிந்து வழக்கங்களைப் பின்பற்றியும் தங்கள் இறையியலை தொடர்ந்தனர். மக்கள் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்து தத்துவ விளக்கம் தந்தது அந்தணர்கள் (பிராமணர்கள் -ஐயர் - பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று தான்) தான். கிறிஸ்துவ இறையியல் வெற்று போலி கட்டுக்கதை என்பதையும் மக்களுக்கு அந்தணர்கள் நிருபித்து வந்தனர். 

 

1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்   அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க  தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார்.

 

போர்ச்சுகீசிய அரசர் அனுமதியில் கிறிஸ்துவ சமய புனித  விசாரணை மன்றம் அமைத்து மன்றம் அமைத்து தன்னால் மாற்றப்பட்டவர்களை சர்ச்சில் பிடித்துவைக்க அதைப் பயன்படுத்தினர்.

இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது....  இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549) 

 

 

மேல்நாட்டு சர்ச் ஏன் மதமாற்றம் நிகழவில்லை எனக் கேட்க, பாரதப் பாரம்பரியம் இறையியல் பலவகையில் மேன்மை பெற்றது என்றிட, அதை ஏற்காத சர்ச் அவற்றை மொழி பெயருங்கள், நாம் அவற்றின் மீது அபாண்டம் கற்பித்து தமிழர் - ஹிந்து மெய்யியலை அழிப்போம் என   தங்கள் மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்தார்கள்.

பாரத நாட்டின்  இறையியலும் கலாச்சாரமும் பாரம்பரியமும் அறிந்து, அவற்றை உடைத்து மதமாற்றம் செய்ய வதென்பது எவ்வளவு கடினம் - ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என மேல்நாட்டு முதலாளி சர்ச் உணர்வர், என இந்திய நூல்களை மொழி பெயர்த்தனர்.

 

 

 மக்கள் பார்ப்பனர்களை மதிப்பதால் தங்களை ஐயர் என அழைக்க வேண்டும் எனவும் செய்தனர்.

உவின்ஸ்லோ ஐயர் (Rev.Dr.Winslow)

கிளார்க் ஐயர் (Rev.W.Clark)

த்ரு ஐயர் (Rev. W.H. Drew)

சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900)

தெய்லர் ஐயர் (Rev.W.Taylor)

சற்குணம் உவின்பிரேட் ஐயர் (1810-1879)

போப் ஐயர் (Rev.G.U.Pope ) (1820-1903)

கால்டுவெல் ஐயர் (Rev. Robert Caldwell ) (1814-1891)

ராட்லர் ஐயர் (Rev. J.P. Rottler)

ஷீல்ஸ் ஐயர்  

ஜோகன் பிலிப்பு ஃபப்ரீசியுஸ்  (Johan Phllip Fabrciclus) (1710-1791)

சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் இரேனியுஸ் (Charles Theophilus Edward Rhenlus) (1790-1838)

பீட்டர் பெர்சிவல்  (Peter Percival) (1826)

ஹென்றி பவர் (Henry Bower) (1813-1885)

சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900)

எல்லிஸ் துரை (Francles Whyte Ellis) (1819)

வீரமா முனிவர் கான்ஸ்டைன்டின் ஜோஸப் பெஸ்கி Constanting Joseph Nesch) (1680-1742)

தத்துவ போதக சுவாமி என்ற இராபர்ட்-டி-நொபிலி  (Robert-de-Nobilii) (1577-1656)

அந்தணர்களை கொலை செய்ய வேண்டும் என புனித சவேரியார் முயற்சித்தார் எனில், இத்தாலி நாட்டில் பிறந்து, ராபர்ட் டி நொபிலி 1606ல் தமிழ்நாடு வந்தார். அந்தணர்கள் ஒழுக்கத்தோடு இருப்பதையும் மக்கள் அந்தணர்களை மதிப்போடு நடத்துவதையும் பார்த்து, நொபிலியும் பிராமணர் வேடம் அணிந்து  காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு , தனக்கு தானே தத்துவ போதகர் எனப் பெயர் சோல்லி, தான் ரோம ரிஷி என்றும் சொல்லித் திரிந்தாராம்.

 

இந்திய பிராமணர்கள் ஐந்தாவது வேதம் இருந்ததை மறைத்துவிட்டனர் என ஏசூர் வேதம் அது என ஒரு போலி வேதத்தை போர்ஜரியாய் தயாரித்தார். 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் உள்ளது.

ஆரம்பத்தில் மதமாற்றத்தில் சிறு வெற்றி கண்டவர், பின் அதிலும் பெரும் தோல்வியே.

 

முனிவர் வேடம், பெயரில் எல்லாம் ஏன்?அந்தணர்களை தமிழர் போற்றியதால் தமிழர் மெய்யியலுக்கு விரோதப் பாதிரிகள் தங்கள் பெயர்கள் பின்னால் போப் ஐயர், தோமோ ஐயர், சீகன் பால்கு ஐயர் எனப் போட்டு கொண்டதாகத் தானே சொல்கீறிர்கள். 

 

வீரமா முனிவர்  : துரைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாட சுவாமிகள் எனும் சைவசமயப் பெரியவர்  சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.

விவிலியம் மொழிபெயர்த்த திண்டேலின் விவிலிய நூல்களை வாங்கி கொளுத்தி அழைத்த சர்ச் பாரம்பரியத்தில் வீரமாமுனிவர் ஏசுமத நிராகரணம் நூலை அழித்தார் என்பது சைவ மட பாரம்பரிய செய்தி. 

வீரமா முனிவர்  தேம்பாவணி எனும் நூலை கம்ப இராமாயணத்தைத் தழுவி எழுதினார். பின்னளில் அவரே அதற்கு உரை எழுதினார். ப்ரோட்டஸ்டன்ட் பாதிரிகளை கேலி செய்ய பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை என எழுதினார், மேலும் சதுரகராதி, இலக்கண நூல்கள் செய்தார் எனப்படுகிறது. 

இவர் பற்றி மிகையாகச் சொல்லப்படுபவை பெறிது பொய்யே. இவர் பின்னாள் நூல்களின் தமிழ் செறிவைவிட தேம்பாவணி பெரிதும் மேம்பட்டு இருப்பதால் அதை அவர் இயற்றாமல், தன் குரு எழுதியதை தன் பெயரில் வெளியிட்டிருக்க வேண்டும் எனப் பல தமிழ் அறிஞர்கள் இயம்புகின்றனர்.

 
ஆறுமுக நாவலர்-இன்றைய பைபிளின் முன்னோடியாய் விளங்கும் பைபிள் மொழி பெயர்ப்பு பீட்டர் பெர்சிவல் (Peter Percival) ஐயர் எனும் பாதிரி பெயரில் இருந்தாலும் அந்த மொழி பெயர்ப்பின் முதுகெலும்ப்பாய் இருந்தவர்   இலங்கையில் பிறந்த தவத்திரு ஆறுமுக நாவலர்.
விவிலியத்தை முழுமையாய் அறிந்த அவர், அது போலி கட்டுக்கதை என்பதையும், அதை வைத்து தமிழர்களையும், தமிழ் மெய்யியலையும் கிறிஸ்துவ சர்ச் அழிபாதை எதிர்த்து பல நூல்கள் எழுதினார். அவர் நூல்கள் சர்ச்சை ஆட்டம் காண வைத்ததை  சர்ச் வரலாற்று ஆசிரியர் எழுத்தில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆறுமுக நாவலர் வெளியிட்ட இலக்கணச் சுருக்கம் (1878) மட்டும் 20 பதிப்புக்கும் மேல் கண்டிருக்கிறது.

  • தண்டியலங்காரம்
  • யாப்பருங்கலக்காரிகை
  • நன்னூல்

ஆகிய நூல்களை உரைநடையில் வெளியிட்டனர்.

இதில் நன்னூல் கவனிக்கப்பட வேண்டியதாய் உள்ளது.

ஜி.யு.போப்  தன் கல்லறை மீது "ஒரு தமிழ் மாணவன்" என்று எழுதச்சொன்னார் எனக் கிறிஸ்துவர்களால் கட்டுக்கதை பரப்பப் படுகிறது. 

http://kanichaaru.blogspot.in/2014/08/blog-post_10.html

அவர் கல்லறை புகைப்படம், மற்றும் வாசகங்கள்

proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-kmjuzSFAAEg%2FVSvdPvjq63I%2FAAAAAAAABns%2FGKQorAuO2so%2Fs1600%2Fpope.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*

 

"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born 24th April 1820. Died 11th February 1908. This stone has been placed here by his family and by his Tamil friends in South India in loving admiration of his life long labours in the cause of oriental literature and philosophy"
 
 
 

 

“Thiruvalluvar worked hard to acquire knowledge by all means. Whenever a ship anchors in Mylapore coast, Valluvar’s ‘Captain’ friend would send him message about the arrival of new visitors including foreigners. Many foreigners could have travelled in his friend’s vessel and landed in Mylapore via Sri Lanka. Within me I see the picture of Thiruvalluvar talking with the Christians gathering information and knowledge. He has gathered a lot of Christian theories in general and the minute details of Alexandrian principles in particular and incorporated them in his Thirukkural. The philosophy of Christian theories from the Church situated near Valluvar’s place is present clearly in Thirukkural. Thiruvalluvar lived between 800 AD and 1000 AD. The Christian Biblical works were certainly an evidence for Valluvar’s Thirukkural. He was certainly inspired by the Bible.”

ஜி.யு.போப் திருவாசகம் மற்றும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்தார். 

திருக்குறள் மொழிபெயர்ப்பின் முன்னுரையில், கிறிஸ்துவம் தாக்கம் வள்ளுவர் எழுதிதில் உள்ளது என பொருத்தமில்லாக திரிபு செய்தார், இதைக் கொண்டு சாந்தோம் சர்ச் செய்த ஊழல் இங்கே 

 

திருவாசகம்  மொழிபெயர்ப்பின் ஈடே இவர் கூறியுள்ள பல கருத்துக்கள் தவத்திரு மாணிக்க வாசக சுவாமிகளை இழிவுபடுத்தியும், இறந்த மனிதன் ஆவியாய் பேயாய் வணங்கும் கிறிஸ்துவ மூட நம்பிக்கையை போற்றியும் உளறி உள்ளதைக் காணலாம்.

போப்பின் குறள் மொழிபெயர்ப்பு நூலைப் பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இருபதாம் நூற்றாண்டில் வெளியிட்டது. அதில் போப் எழுதிய முன்னுரையின் சில பகுதிகள் விடுபட்டுள்ளதாக கா. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகின்றார். 
http://www.thirukkural.com/p/blog-page_10.html
 
கிறிஸ்தவ கண்டன நூல்கள்:
 
சைவ தூஷண பரிகாரம் (1854), சுப்பிரபோதம் (1853), வச்சிர தண்டம் ஆகியன கிறிஸ்தவ சமய கண்டன நூல்களாகும். இவருடைய கிறிஸ்தவ மத கண்டனங்களை கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள் "Hindu Pastor" எனும் புத்தகத்தில் மிக வியந்து எழுதியிருக்கிறார்கள். 1855இல் "சைவ தூஷண பரிகாரம்" எனும் வெளியீட்டைப் பற்றி வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையில் பின்வரும் வியப்புரைகள் கூறப்பட்டுள்ளன.
 
"இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு சைவ தூஷண பரிகாரம் எனும் நூல் வெளியீடாகும். இந் நூல் அசாதாரணமான இலக்கியமாகவும் தொன்மமாகவும் விளங்குகிறது. சைவருடைய ஒவ்வொரு நம்பிக்கையும் நடைமுறையும் கிறிஸ்தவ புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை சடங்குகளோடு இசைந்தும் இணைந்தும் இருப்பதாக நிரூபணம் செய்கிறது.
 
இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவாகத் திரட்டித் தரம் பெற்றுள்ள சாத்தியக் குவியலைப் பார்க்கும்பொழுது மிக்க வியப்பாக உள்ளது. எதிர்தரப்பின் மறுப்பை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதை புறந்தள்ளும் மதி நுட்பம் முதல் தரமான தேர்ந்த உள்ளத்த்?ற்கே உரியதாகும் என்பதையும் இந்நூலில் கான்க்?ன்றோம். இந்நூல் நமக்கு மிகுந்த இடர்களை விளைவிப்பதாகும்".
 

 

ஒரு நாட்டின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படித்தால் தான்  பண்பாடும், கலாசாரமும், ஆன்மீகப் பாரம்பரியமும் அறியமுடியும். அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய மதமாற்றத் தந்திரங்களை அமைத்துக் கொள்ளலாம் என்கிற  மனப்பான்மையுடன் தான் இவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்களே தவிர, தமிழின் பால் கொண்ட ஈர்ப்போ, ஈடுபாடோ, பற்றோ, பாசமோ அல்ல.

மூத்த தமிழறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்.

    “தமிழ்நாட்டிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழிற் பேசவும், சொற்பொழிவு நிகழ்த்தவும், நூலியற்றவும் தொடங்கினார்கள். இவ்வாறு தமிழ் மொழிக்கும், ஐரோப்பிய பாதிரிமாருக்கும் ஏற்பட்ட தொடர்பினால், தமிழிற் சில மாறுதல்கள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டன. தமிழ்மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி அனைத்து பாதிரிமார்களால் உண்டானவையே. கிறித்தவர்களால் தமிழுக்கு ஏற்பட்ட அபிவிருத்தி எல்லாம் பாதிரிமாரைச் சேர்ந்ததே”.

 

 

இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.

 

ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.

 

விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க முயன்றதால், அவர் பதிப்பு அத்தனையும் வாங்கி எரித்து - அழித்தது சர்ச்,  வில்லியம் திண்டேலையும் (1494–1536) உயிரோடு தலைகீழாக சிலிவையில் கொழுத்தி சர்ச் ஏசு சேவை செய்தது.

http://en.wikipedia.org/wiki/William_Tyndale

In 1535, Tyndale was arrested and jailed in the castle of Vilvoorde (Filford) outside Brussels for over a year. In 1536 he was convicted of heresy and executed by strangulation, after which his body was burnt at the stake. His dying prayer that the King of England's eyes would be opened seemed to find its fulfillment just two years later with Henry's authorization of The Great Bible for the Church of England—which was largely Tyndale's own work. Hence, the Tyndale Bible, as it was known, continued to play a key role in spreading Reformation ideas across the English-speaking world and, eventually, to theBritish Empire.

proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-AiC6eABAIpI%2FVSu4ZaddBNI%2FAAAAAAAABnE%2FdDTnpM75yJU%2Fs1600%2FThindale%252Bbib.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*  

 proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-glGQS4zFlMc%2FVSu4ZqT9fdI%2FAAAAAAAABnI%2FVX1iTU8DiTA%2Fs1600%2FThindale.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F* proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-dWVgCpSFp1o%2FVSu4Zr9DQ-I%2FAAAAAAAABnQ%2FX-cHaWIiYOg%2Fs1600%2FWilliam%252Bthynda%253Be.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*

 

 

 

 

கிறிஸ்துவத்தை ஆராய்ச்சி - விமர்சனம் செய்த பல நூல்களை தடை வாடிகன் போப்பரசர் தொடர்ந்து செய்தது. அந்நூல் பட்டியல்கள். (Index Librorum Prohibitorum) 

http://www.postdesk.com/banned-books-list-reasons-why-censorship


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: அயல்நாட்டுக் கிறிஸ்த்துவ பாதிரிகளின் தமிழ் பணியும், கேடுகளும்
Permalink  
 


 

 

http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/

ஜி.யு.போப் கூறியதாவது: “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.”

முனைவர் மேலும், “உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி அவர்களுக்காக இறைவனிடம் மனமுருகி வேண்டுதல் இந்து மத்த்தின் பக்தி இலக்கிய மரபு. அதன்படியே, வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக்கொள்ளும் இயல்பைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகிறார் மாணிக்கவாசகர். அதைத் திரித்து ஜி.யு.போப் கூறும் இந்த வரலாறு மாணிக்க வாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன்மானம் உள்ள தமிழ் பற்றாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அறிஞர்களும் போப்புக்குப் புகழ்மாலை சூட்டி மாணிக்கவாசகரை ஒழுக்கக்கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?” என்று கேட்கிறார்.

 

அடிப்படையில் ஒரு படைப்பை எப்படிப் புரிந்துகொள்ளுகிறோம், எவ்வாறு அர்த்தம் கொள்ளுகிறோம் என்பது முக்கியமான விஷயம். இங்கே ஜி.யு.போப் செய்துள்ளது அப்பட்டமான கிறுத்துவ அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.

சைவசித்தாந்தத்தைப் போற்றுமிடத்து உருவ வழிபாட்டைக் குறையும் கூறியுள்ளார் ஜி.யு.போப். சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அவ்வளவிற்கு ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார். அவர் கூறியதாவது: “There is in them (Saiva Saints) a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.

இங்கு உருவ வழிபாட்டை முட்டாள் தனமான செயல் என்று தூஷணை செய்வதன் மூலம் ஜி.யு.போப் மீண்டும் தன்னுடைய கிறுத்துவ தீவிரவாத்த்தைத்தான் முன்நிறுத்துகிறார். “குரு ஸ்துதியே முழுவதுமாக இருக்கும் திருவாசகத்தில் உருவ வழிபாட்டைக் கொச்சை படுத்துகின்ற போப்பின் செயல் சரி தானா” என்றும் கேட்கிறார் முனைவர்.

தன்னுடைய திருவாசக மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் மீண்டும் ஒரு இட்த்தில் மாணிக்கவாச்கரை அவதூறு செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள், “மாணிக்கவாசகருக்காக இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இறைவனின் திருவிளையாடலைப் பின்னர் அறிந்துகொண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விருப்பப்படி அவர் பாண்டிய நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கிறான். ஆனால் இவ்வரலாறை, ‘மதுரைக்கோவிலுக்கும் தில்லைக்கோவிலுக்கும் பிரச்சனை இருந்தது. மதுரையை விட்டுத் தில்லைக்குச் சென்ற மாணிக்கவாசகர், பின்னர் மதுரைக்குத் திரும்பவே இல்லை. குதிரை வாங்குவதற்காக மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் கவர்ந்து கொண்டதால் மன்னன் அவரை மன்னிக்கவேயில்லை என்பதனால் அவர் மதுரைக்குத் திரும்பவில்லை’ என்று திரித்துக் கூறியுள்ளார் போப்” என்று கூறுகிறார்.

ஜி.யு.போப் அவர்களின் கூற்று: “It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” திருவாசகத்தின் மீதான போப்பின் பற்றும் மாணிக்கவாசகரின் மீதான அவருடைய அன்பும் என்னவென்று சொல்வது!

முனைவர் மேலும் சொல்கிறார், “போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். (Ref: http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

இத்தாலிய ஐயரின் திருக்குறள்/திருவள்ளுவ இழிவுரைகள்

ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டார். போப் வாழ்ந்த காலத்தில் வள்ளுவர் பற்றி, “அவருக்குக் கப்பல் தலைவன் ஒருவர் நண்பராக இருந்தார்” என்கிற ஒரு கர்ண பரம்பரைக் கதை நிலவி வந்த்து. இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் போப். அதோடு மட்டுமல்லாமல், வள்ளுவர் காலத்திலேயே மைலாபூரிலும் அதைச் சுற்றியும் பல குடும்பங்களை புனித தாமஸ் கிறுத்துவ மத்த்திற்கு மாற்றியுள்ளார் என்றும் நம்பியவர் போப். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, தன்னுடைய திருக்குறள் மொழிபெயற்பிற்கு பின்வருமாறு முன்னுரை வரைந்துள்ளார் ஜி.யு.போப்:

“வள்ளுவர் எல்லா வகைகளிலும் அறிவைச் சேகரிப்பதில் முனைந்து வந்தார். அவருடைய ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும், அவர் நண்பரும் கப்பல் தலைவருமான அவர் அன்பர் வள்ளுவருக்குச் செய்தி அனுப்புவார். பல வெளிநாட்டார் அக்கப்பல் தலைவர் தோணியிலேயே ஸ்ரீலங்கா மூலம் மயிலைக்கு வந்திருக்கலாம். அப்படி வந்த கிறுத்துவர்களிடமிருந்து அவர்களோடு கடற்கரையில் உலாவி வந்த வள்ளுவர் செய்திகளைச் சேகரித்த்தை நான் என் மனக்கண் முன்னால் காண்கிறேன். கிறுத்துவக் கோட்பாடுகளை அதிலும் அலெக்சாந்திரியக் கோட்பாடுகளையும் நுணுக்கங்களையும் நாளும் நாளும் வள்ளுவர் உசாவி அறிந்து வந்திருக்கிறார். அவற்றைத் தம் திருக்குறளில் வடித்து வைத்திருக்கிறார். வள்ளுவர் வாழ்ந்து வந்த இட்த்திற்குப் பக்கத்தில் நிலவி வந்த கிறுத்துவக் கோட்பாட்டுத் த்த்துவம் குறளில் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவர் கி.பி.800க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்தவர். கிறுத்துவ மறை நூல்கள் நிச்சயமாக அவர் வரைந்த குறளுக்கான ஆதாரங்களில் ஒன்று. கிறுத்துவ வேத்த்திலிருந்தே வள்ளுவர் உத்வேகம் பெற்றிருக்கிறார்”. (சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வியத்தகு ஆரிய நாகரிகம்’ என்ற கட்டுரை – “தமிழக அந்தணர் வரலாறு” தொகுதி-2 பக்கம் 641-643. – எல்.கே.எம். ப்ப்ளிகேஷன், சென்னை, ஜூன்2005)

ஜி.யு.போப் திருக்குறளுக்கு அளித்துள்ள இந்த அருவருக்கத் தக்க முன்னுரையானது, அவருடைய கிறுத்துவத் தீவிரவாத மனப்போக்கையும், அவருடைய தமிழ் பற்றின் பின்னால் இருந்த தீய நோக்கத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜெர்மானிய ஐயர் ஸீகன்பால்கு

ஜோஸஃப் பெஸ்கி காலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, மற்றொரு பாதிரி பார்த்தலோமியோ ஸீகன் பால்கு (1683-1719) என்கிற ஸீகன் பால்கு ஐயர். ஆம், பிராம்மணர், முனிவர் வரிசையில் அடுத்ததாக ஐயர்! இவர் ஜெர்மனியிலிருந்து வந்த பிராடஸ்டண்டு பாதிரியார். 1706-ல் தரங்கம்பாடியில் வந்து இறங்கிய ஸீகன்பால்கு, அங்கு ஏற்கனவே இருந்த ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த அச்சு இயந்திரங்களை வைத்து அச்சகம் நட்த்திக்கொண்டிருந்த ஒரு டேனிஷ் கத்தோலிக்க நிறுவனம் சார்பாக, விவிலியத்தின் புதிய ஏற்பாடை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். பெருமளவில் மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வந்திறங்கிய இவருக்கு டேனிஷ் (Danish) கத்தோலிக்கர்களுடன் சண்டை போடுவதிலேயே பாதி நாட்கள் கழிந்தது. டேனிஷ் நிறுவனம் இவரைச் சிறையிலும் அடைத்தது.

பிராம்மணர்களிடம் மற்ற சமூகத்தவர்கள் வெறுப்பு கொள்ளுமாறு பிராம்மண துவேஷத்தை முதன் முதலில் தமிழகத்தில் உண்டாக்கியவர் என்கிற “பெருமை” உடையவர் இந்தப் பாதிரி. அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்ட இவர் 1719-ல் தன்னுடைய 36-வது வயதில் இறந்து போனபோது, தரங்கம்பாடியில் இரண்டு சர்ச்சுகளும், இந்தியப் பாதிரிமார்களுக்கான பயிற்சி மையத்தையும், தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட 250 இந்தியக் கிறுத்துவர்களையும் விட்டுச் சென்றார். இவர் சார்ந்திருந்த “லுதெரன் சர்ச்சு” பெருமளவு வளர்ந்து ஜூலை 2006-ல் இவர் வரவின் 300-வது ஆண்டு விழாவை சென்னையில் விமரிசையாக்க் கொண்டாடியபோது, தமிழக கவர்னர் சுருஜித் சிங் பர்னாலா இவருடைய “சேவையை” பாராட்டிப் பேசினார். இவர் நினைவாகத் தபால் தலையும் வெளியிடப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg )

கான்ஸ்டண்டைன் ஜோசெஃப் பெஸ்கி (1680-1746) என்கிற வீரமாமுனிவர். ராபர்ட்-டி-நொபிலி தன்னைப் பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டதைப்போல் இவர் தன்னை முனிவராக்கிக் கொண்டார். அதுவும் வீரமுள்ள மாமுனிவராக! அவரைப்போலவே, இவரும் தன்னை ஒரு ஹிந்து சன்யாஸியைப் போலக் காட்டிக்கொண்டார். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மதமாற்றங்களில் ஈடுபட்டார். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு “தேம்பாவணி” என்னும் உரைநடையில் எழுதப்பட்ட புனித ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு. கம்ப ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து அதைப்போல் கிறுத்துவத்திலும் ஒரு காப்பியம் வேண்டும் என்று எண்ணி தேம்பாவணியை இயற்றினாராம். தேம்பாவணியால் தமிழ் வளர்ந்ததா அல்லது கிறுத்துவம் வளர்ந்ததா என்று பார்த்தால், கிறுத்துவம் வளர்ந்து, புனித ஜோசப் பெயரும் தமிழகத்தில் நிலைநாட்டப் பட்டது, என்பதுதான் உண்மை. இந்தத் தேம்பாவணியால் தமிழுக்கு எதுவும் பிரயோசனம் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் அதோடு நிறுத்தவில்லை தன் தமிழ்ப் பணியை! நம் பாரத தேசத்தில் வேத காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்த குரு-சிஷ்ய பரம்பரை என்று போற்றப்பட்ட கல்வி முறையைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும்’ என்ற நூலையும் எழுதினார். முனிவர் என்று பெயர் வைத்துக்கொண்டு குரு-சிஷ்ய பரம்பரையைக் கிண்டல் செய்தவரைத் தமிழுக்குச் சேவை புரிந்துள்ளார் என்று கொண்டாடிய திராவிட இனவெறியாளர்கள், இவருக்குச் சென்னைக் கடற்கரையில் சிலையும் எடுத்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இனவெறியாளர் கால்டுவெல்

ஏறக்குறைய அதே சமயத்தில் தமிழகத்தைப் பெரிதும் பதம் பார்த்தவர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) என்கிற ஸ்காட்டிஷ் பாதிரி. எலிஸா மால்ட் என்கிற தன் மனைவியுடன் திருநெல்வேலியில் தங்கிய கால்டுவெல் கடுமையான மதமாற்றத்தில் ஈடுபட்டார். இவருடைய மனைவியும் தமிழ் பெண்களை மதமாற்றம் செய்வதில் பெரிதும் ஈடுபாடு காட்டினார். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” ((A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Harrison: London, 1856) என்ற நூலை எழுதியதால் பெரிய தமிழ் அறிஞராகத் திராவிட இனவாதிகளால் போற்றப்படுகிறார். தன்னுடைய எழுத்துக்களின் மூலம் பிராம்மண துவேஷம் எனும் விஷத்தைக் கக்கியவர் கால்டுவெல். பிராம்மண துவேஷத்தை ஆரம்பித்து வைத்தவர் ஸீகன்பால்கு என்றால் அதைத் தமிழகம் முழுவதும் பரப்ப வழிவகுத்தவர் கால்டுவெல் என்றால் அது மிகையாகாது. பிராம்மணர்களின் வைதீக வழிபாடு முறைகளும், தேவர்களின் (மறவர்குலத்தினர்) தேசபக்தியும் வீரமும் இவரின் கடும் விமரிசனங்களுக்கு உள்ளாயின. ஏன், தான் பெரிதும் மதம் மாற்றிய நாடார் சமூகத்தினரைப் பெரிதும் அவமதித்தவர் கால்டுவெல். “திருநெல்வேலி நாடார்கள்” (Tinnevelly Shanars – Printed by Reuben Twigg at the Christian Knowledge Society’s Press, Church Street, Vepery, Madras in 1849). என்கிற நூலில் நாடார்களின் வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கடுமையாக விமரிசனம் செய்திருந்த காரணத்தால், அவர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகிப் பின்னர் திருநெல்வேலியிலிருந்து உதகமண்டலத்திற்குச் சென்று தன் வாழ்வின் இறுதி வரை அங்கேயே இருந்தார். . (Ref: - http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell )

ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் புனைந்த முழுப் பொய்யும், புளுகும், புனைச்சுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக்கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப்புகுத்தி தமிழ் இந்துக்களை பிளவு படுத்தி மதமாற்றம் செய்தவர். இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தை எந்த அளவிற்கு நாசமாக்கிக் கொண்டிருக்க முடியுமோ அந்த அளவிற்கு நாசமாக்கிக்கொண்டிருக்கின்றனர். “திராவிட இனவெறி” என்கிற விஷ விதையைத் தமிழ் மண்ணில் நன்கு ஊன்றியவர் இந்தப் பாதிரி கால்டுவெல் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“ஆர்ய”, “த்ராவிட” ஆகிய இரண்டு சொற்களுமே சமஸ்கிருத சொற்கள் தாம். சங்க இலக்கியங்களில் ‘ஆரிய’ என்ற சொல் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ‘திராவிட’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் ‘திராவிட’ என்ற சொல் தமிழில் பயனுக்கு வருகிறது; அதுவும் ‘மொழி’ என்கிற அர்தத்தில் தமிழைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவத்திரு சபாபதி நாவலர் கூட தமிழ் மொழியைக் குறிக்கத்தான் அவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

மேலும் சங்க இலக்கியங்களில் ‘ஆரிய’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டபோதுகூட, ஆரியர் வேறு இனத்தவர் என்கிற அர்தத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் தென் திசையையும் (தென் பகுதியையும்) தென் பகுதி மொழிகளையும் குறிக்கப் பயன்பட்ட ‘திராவிட’ என்ற சொல்லை முதன்முதலில் வேண்டுமென்றே தவறாக ‘இனத்தைக்’ குறிக்கப் பயன்படுத்தியவர் கால்டுவெல் பாதிரிதான். ’திராவிட’ என்ற சொல்லை இனவெறியைத் தூண்டுவதற்கென்றே, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவேண்டும் என்றே உபயோகப்படுத்தியவர் கால்டுவெல்.

“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை இவர் இயற்றியதால் இவரை மொழிப்பற்று மிக்கவர் என்று தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன. ஆங்கிலேயர் அரசில் அதிகாரியாக இருந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் தான் முதலில் நம் அறிஞர்கள் (அந்தணர்கள்) இருவரின் உதவியுடன் தென்னக மொழிகளை ஆராய்ந்து திராவிட மொழிகள் என்கிற அனுமானத்தை (Dravidian Language Hypotheses) உருவாக்கி எழுதினார். அவற்றிலிருந்துதான் கால்டுவெல் பல விஷயங்களை எடுத்துத் தன்னுடைய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை எழுதியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.

கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஏன் இறங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள, ‘கணையாழி’ ஏப்ரல் 1997 இதழில் முனைவர் க.முத்தையா அவர்கள் எழுதிய ‘கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி’ என்கிற கட்டுரையைப் படிக்க வேண்டும்.

அதில், “பிரதேச வாதத்தை முக்கியப்படுத்தும் முயற்சியில் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) எட்கர் தர்ஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) கிலப்ர்ட் ஸ்லேட்டர் (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு) ஆகியோர் இறங்கினர். இவர்களின் பிரதேச வாதத்திற்குத் தனியான அரசியல் காரணங்களும் உண்டு...

கால்டுவெல்லின் ஒப்பியல் அறிவு திராவிட மொழி ஆய்வுகளில் சில, அரசியல் உள்நோக்கத்தோடே பயன்படுத்தப் பட்டுள்ளது...

அவர் வருகையின் நோக்கம் தென்னிந்திய மக்களை எப்படியாகிலும் சமய மாற்றம் செய்து அவர்களைக் கிறுத்துவர்கள் ஆக்குவதேயாகும். அவருக்கு இடப்பட்ட சமயப் பணியில் வெற்றியும் கண்டார். தாம் இடையான்குடி கிராமம் வருவதற்கு முன்னர் ஆறாயிரமாக இருந்த திருநெல்வேலி கோட்டக் கிறுத்துவ மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இலட்சமாக்கியப் ‘பெருமை’ அவரையே சாரும்...

அவர் ஆய்வை ஊன்றிப் படிக்கும்போது தமிழின் தொன்மையை நிறுவுவதை விட, தமிழர்களின் தனித்தன்மையை விளக்குவதைவிட, சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத இகழ்ச்சி, ஆகியனவற்றை விளக்குவதே தம் ஆய்வின் நோக்கமாக்க் கொண்டுள்ளார். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தம் ஆய்வில் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்...

இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எண்ணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறுத்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்கு உணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்குகிறார்.

இம்முயற்சியின் முதற்கட்டப் பணியாக ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார் அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாகத் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. கால்டுவெல்லுக்கு முன் ரபர்ட்-டி-நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார்...

கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இணக்கமான மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது.” என்று தெளிவாக்க் கால்டுவெல் பாதிரியின் உள்நோக்கம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 26-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010].

தமிழ் ஹிந்துக்களிடையே பிரிவையும் பகையையும் ஏற்படுத்தி, சம்ஸ்கிருத மொழியின் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் துவேஷத்தை வளர்த்துவிட்டு, ஆரிய-திராவிட கோட்பாட்டைப் பற்ற வைத்து, தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டி, தேச ஒற்றுமையைக் குலைத்தவர் தான் கால்டுவெல். மற்றபடி இவர் மொழிப்பற்று உள்ளவர் என்றும் இவரால் தமிழ் மொழி பயன்பெற்றது என்றும் திராவிட இனவாதிகள் கூறுவது, கடந்த அறுபது ஆண்டுகளாக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் மொழி வளர்ந்துள்ள லட்சணத்தைப் பார்த்தாலே நன்கு விளங்கும். இவர்களின் கூற்று வெறும் பொய்ப்பிரசாரமேயன்றி வேறில்லை.

நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, “வித்தாக விளங்கும் மொழி” என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், பட்டிமன்றங்கள் மூலம் தமிழகத்தில் நன்கு அறிமுகமான பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள், “ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிப்புச் செய்ய வேண்டுமென்றால் அப்பிரதேசத்தின் மொழியைக் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு கிறுத்தவர் செய்ததாக வரலாறுகள் உள்ளன. ‘அவர்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது எங்களிடம் நிலம் இருந்தது அவர்கள் கையில் வேதப் புத்தகம் (பைபிள்) இருந்தது; இப்போது எங்கள் கையில் வேதப் புத்தகம் இருக்கிறது, அவர்கள் வசம் எங்கள் நிலம் உள்ளது’ என்று ஆப்பிரிக்கர்கள் பேசுகின்ற நிலைமை இன்று உள்ளது. கிறுத்துவர்கள் கால் வைக்கிற இடமெல்லாம் இது தான் வரலாறு” என்று கூறினார். கால்டுவெல் போன்ற பாதிரிமார்களைக் கொண்டாடிய மாநாட்டில் உண்மையை மறைக்காமல் பேசிய அவரின் தைரியம் பாராட்டுக்குறியது. மேலும் நம் நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதத்தில் கோவில்கள் கட்டப்படும் முறையையும் அவற்றின் பெருமைகளைப்பற்றியும் அவர் பேசியது, கிறுத்துவமும், திராவிட இனவாதமும், கலைஞர் புகழாரமும் பிரதானமாக இடம்பிடித்திருந்த மாநாட்டில், அபூர்வமாக வீசிய தமிழ்த்தென்றல்களில் ஒன்றாக இருந்தது.

மேலும் பாதிரிகளும் தமிழ் பற்றும்

மேற்குறிப்பிட்ட பாதிரிகள் மட்டுமல்லாமல் இன்னும் பல பாதிரிகள் தமிழகத்தில் இறங்கி ஹிந்துக்களிடையே பிளவு ஏற்படுத்தி கிறுத்துவத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டுள்ள வரலாறுகள் பல ஆதாரங்களுடன் இருக்கின்றன.

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட கிழவன் சேதுபதி மன்னன் ஆட்சியின்போது, ஜான் டி பிரிட்டோ என்கிற போர்ச்சுகீசிய பாதிரி மதமாற்றத்தில் ஈடுபட்டு மன்னன் அரண்மனையிலேயே அவன் நெருங்கிய உறவினர்களையும் மதமாற்றம் செய்து பின்னர் மன்னனால் தண்டிக்கப் பட்டுள்ளார். இந்த வரலாற்றை ஆதாரங்களுடன் தஞ்சையைச் சேர்ந்த வெ.கோபாலன் அவர்கள் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். (http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/)

“டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் உரைநடை நூல்கள்” – தொகுதி 3-ல் 520-523 பக்கங்களில், தியாகராச செட்டியாரிடம் ஒரு ஐரோப்பிய பாதிரி, யாப்பிலக்கணம் படித்துள்ளதாக்க் கூறி, ஒரு திருக்குறளை சில இடங்களில் திருத்தி, அதை அவரிடம் காட்டியபோது, செட்டியார் தலையில் அடித்துக்கொண்டு கோபமுற்று, அவரைத் திட்டி விரட்டிய சம்பவம் விவரிக்கப் பட்டுள்ளது.

தியகராஜச் செட்டியார் இருப்பிடம் தேடி வந்த அப்பாதிரியார், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும் – என்கிற குறளில் எதுகை நன்றாக அமையவில்லை. அதனால் இரண்டாவது அடியை ‘மக்களாற் காணப்படும்’ என்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?” என்று கேட்டுள்ளார். தலையில் அடித்துக்கொண்டு காதைப் பொத்திக்கொண்ட செட்டியார், “திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகிவிட்டீரோ! குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர் குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்பதும் மக்களென்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையிலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்” என்று கண்டிக்க, துரை வேறு வழியின்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்.

திருக்குறளில் முதல் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தின் முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்பதை “ஆதி சிகர முதற்றே உலகு” என்று ஒரு ஆங்கிலேயப் பாதிரி திருத்தி அச்சிட்டதைக் கேள்விப்பட்ட மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர், அப்பாதிரியாரிடமிருந்த அத்தனைப் பிரதிகளையும் விலை கொடுத்து வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அன்று திருக்குறளைத் திருத்தத் துணிந்த கிறுத்துவர்கள் இன்று அவருக்கே ஞானஸ்நானம் செய்துவைக்கவும் துணிந்து விட்டனர். சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்கிற ஒரு கிறுத்துவ தீவிரவாத எவாங்கலிக்கர், தமிழகத்தில் உள்ள ஆதிக்கச் சர்ச்சுகளின் (குறிப்பாக மயிலைக் கத்தோலிக்க சர்ச்சு) ஆதரவுடன், திருவள்ளுவர் புனித தாமஸின் சீடர் என்றும் திருக்குறளில் உள்ள கருத்துக்கள் விவிலியத்தில் உள்ள கருத்துக்களே என்றும் அயோகியத்தனமான பொய்ப்பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார். கேரள மற்றும் தமிழக கத்தோலிக்கச் சபைகளும், கோடிகளைக் கொட்டிப் புனித தாமஸின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாகவும், அதில் அவருக்கும் திருவள்ளுவருக்கும் இருந்த குரு-சிஷ்ய உறவைக் காட்டப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் சென்னையில் நடந்த அத்திரைப்படத்தின் துவக்க விழாவில் திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்தவரும் குறளோவியம் படைத்தவருமான தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தது கவனிக்கத் தக்கது. (Ref: - http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1221 and http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8961 )



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard