கால்டுவெல் புராணம் தொடர்கிறது……………
கால்டுவெல் இளமையான வயதிலேயே குடும்பம் சகிதமாக வந்து வாழ்க்கையினை அனுபவித்துள்ளார். அவரது மாமியார்-மாமனார் பற்றி முன்னமே குறிப்பிடப்பட்டது.
|
எலிஸா கால்டுவெல் அல்லது எலிஸா நீ மௌட் (1822-99) நாகர்கோவிலில்தான் சார்லஸ் மற்றும் மார்தாவிற்கு மூத்த மகளாக பிறந்தாள். இங்கிலாந்திற்கு படிப்பதற்காக அனுப்பப்பட்டாலும், தமிழ் பேசக் கற்றுக்கொண்டாளாம். 1836ல் திரும்பி வந்ததும், தனது சகோதரி சாராள் கூட அம்மாவிற்கு ஒத்தாசையாக கிருத்துவ மிஷனரி பள்ளிகளை நடத்த உதவினாள். 1844ல் ராபர்ட் கால்டுவெல்லை நாகர்கோவிலில் மணந்துகொண்டாள், இளையன்குடியில் குடும்பம் நடத்தினாள், ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். வருடத்திற்கு ஒரு குழந்தை என்றால் கூட, அதாவது, 1851-52 வரை தீவிரமாக இல்லறத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர், இந்த இளைய தம்பதியர். ஆங்கிலேயர்களுக்குக் கூட குடும்பக் கட்டுப்பாடு இல்லை போலும்! அப்படியென்றால், கால்டுவெல் இல்லற வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஈடுபட்டிருப்பார் என்பதனை அறிந்து கொள்ளலாம். இது தனிபட்ட மனிதனின் விஷயம் என்று இருந்தாலும், நாடுவிட்டு நாடு வந்து அத்தம்பதியர் மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற வெறியைத்தான் கவனிக்க வேண்டும். 1883ல் தூத்துக்குடிக்கு இடம் பெயன்றனர். தனது கணவன் இறந்த பிறகு, அங்கேயே தங்கி வாழ்ந்தாள். 1899ல் இறந்தபோது, கால்டுவெல் இளையன்குடியில் கட்டிய சர்ச்சிலேயே புதைக்கப்பட்டாள்.
|
பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும்.
https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/