New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு
Permalink  
 


http://www.tamilvu.org/library/l5F20/html/l5F20ind.htm

 
சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
 
கருப்பக்கிளர் சு, அ, இராமசாமிப் புலவர்
விளக்கக் குறிப்புரையுடன்

http://www.tamilvu.org/library/l5F20/html/l5F20his.htm

சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு
 

சான்றோர் வாழுந் தொண்டை நாட்டில், உலகைப் புரக்கும் உமையம்மை 
வெள்ளப்பெருக்கிற்கஞ்சித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனையுடையது காஞ்சிமா நகரம்.
காஞ்சிமா நகரை ஐம்பூதத் தலங்களில் ஒன்றாகிய மண்தலம் என்று ஆண்டவனருளைப் பெற்ற அருளாளர்கள் கூறிப் போற்றுவர். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நகரில் வேளாண் மரபுக்குக் 
குருக்களாயிருந்தவர் குமாரசுவாமி தேசிக ரென்பவர். இவர் வீரசைவர். இத் தேசிகர் தம் 
இல்லறத்தின் பயனாக மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றனர். 
இந்நால்வர்க்கும் முறையே அவர் சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம், ஞானாம்பிகை எனப் பெயரிட்டார். ஆண்மக்கள் மூவரும் தண்டமிழ்க்கல்வி வாய்ந்தவர்கள்; இறைவனைப் 
பத்திமையாற் பணியும் பேறு பெற்றவர்கள்; என்றாலும், பேரிலக்கணங்களைப் பெரிதுங் கற்க அவாவிச் சிவப்பிரகாசர் தென்னாட்டிற்குச் சென்றனர். இடையில் அவர் வாலி கண்டபுரத்திற்குத் தெற்கிலுள்ள துறைமங்கலம் அண்ணாமலை ரெட்டியார் என்பவரால் ஆதரிக்கப்பெற்று, 
அவருக்கு அறநெறி கற்பித்துப் பின்பு அவரிடம் விடைபெற்றுச் சிந்துபூந்துறை தருமபுர 
ஆதீனத்து வெள்ளியம்பலசுவாமிகளை அடைந்தனர்.

வெள்ளியம்பல சுவாமிகள் சிவப்பிரகாசரை மாணவராக ஏற்றுக்கொள்ளுமுன் கல்வியின் 
ஆழத்தைக் கண்டறியக் ‘கு’ என்பதை முதலிலும் முடிவிலும் வைத்து ‘ஊருடையான்’ என்பதை இடையே நிறுத்தி ஒரு செய்யுளியற்றப் பணித்தனர். சிவப்பிரகாசர், ஆசிரியர் பணித்தபடியே,
 

 குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
 முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
 தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
 ஊருடையான் என்னு முலகு

 

என்று ஒரு வெண்பாவைத் திருவாய்மலர்ந்தருளினர். இவ்வெண்பாவில், ‘ஊருடையான்’ 
என்பதோடு ‘வடக்கோடு தேருடையான்’ என வந்துள்ளதையும் ஆசிரியர் வியந்து பாராட்டி, 
அவர்க்கு ஐந்திலக்கணங்களையும் பெருமகிழ்வுடன் கற்பித்து முடித்தார். ஐந்திலக்கணங்கற்ற அன்பின் பெருக்கால் அவர் தம் ஆசிரியர்க்குக் காணிக்கை கொடுக்க முற்பட்டனர். ஆசிரியர் காணிக்கையை மறுத்துத் தம்மைப் பழிக்கும் தமிழ்ப் புலவரொருவரை வென்று அவரைத் 
தம்மிடம் பணிய வைக்குமாறு கூறினர். சிவப்பிரகாசர் அலைவாய் சென்று முருகப்பெருமானைப் போற்றும்போது, அவ்வூரவரான தமிழ்ப்புலவர், அவர் வெள்ளியம்பலசுவாமிகள் மாணவர் என்பதறிந்து வழக்கம்போல் பழிக்கத் தொடங்கினார். அதனால் ஒருவர்க்கொருவர் வாதம் நிகழ்ந்து, ‘யாரொருவர் திருச்சீரலைவாய் முருகன் பேரில், ‘நிரோட்டகயமக வந்தாதி’ ஒன்று முதலிற்பாடி 
முடிக்கின்றார்களோ அவர்களுக்கு மற்றையவர் அடிபணிந்தவராவர்’ என்று முறை ஏற்படுத்திக் கொண்டனர். முருகனருளால் முதலில் முடித்தவர் சிவப்பிரகாசரே. அதனால் அவ்வூர்த் தமிழ்ப் புலவர் அடிபணியவேண்டியதாயிற்று. புலவரைச் சிவப்பிரகாசர் செந்தூரிலிருந்து அழைத்து வந்து ஆசிரியர்முன் நிறுத்தி நடந்தவை கூறித் தலைவணங்கச் செய்தனர்.

பின்பு அவர் ஆசிரியரிடம் விடைபெற்றுத் தில்லையை அடைந்தனர். இடையிற் சிவனுறையும்
ஊர்கள்தோறுஞ் சென்று வணங்கினர். அவ்வாறு வணங்கிய ஊர்களுள் திருவெங்கையும் 
ஒன்றாகும். அங்கே பல நூல்களைச் செய்தருளினர். வெங்கைப் பிடாரியின் தேர்விழாவன்று அடியார்க்குதவும் முருங்கை, அத்தேரால் அழிந்தமை கேட்டுக் காளிக்குக் கடிதமெழுதித் தேரையழித்தனர். தம்பியரிருவர்க்குந் திருமணத்தை முடித்தனர். ஒருநாள் திருவெங்கைத் தெருவில் உப்பு விற்கும் ஒரு மாதின் தமிழ்ப் புலமையைப் பிறர்க்குப் புலப்படுத்த “நிறைய வுளதோ வெளிதோ” என்னும் வெண்பாவை யுரைத்தலும், அம்மாது உடனே “தென்னோங்கு தில்லை” என்னும் வெண்பாவைப் பாடி முடித்து அடிபணிந்து மனமுருகவே அவர் அருள் பொழிந்து வாழ்த்தினர். இதன்பின் வன்றொண்டர்க்குக் கண் தந்த ஏகம்பரை வணங்கக் காஞ்சிமா நகர்க்குச் செல்லும்போது வழியில் பேரூரிலிருந்து வரும் சாந்தலிங்க சுவாமிகள் என்னும் அடியார் ஒருவரோடு கலந்துறவாடி இருவரும் சிவஞானபாலைய சுவாமிகளைக் காணவேண்டும் என்னும் நோக்கத்தோடு சென்றனர். செல்லும்போது சாந்தலிங்கசுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகளைச் சிவஞானபாலைய சுவாமிகள்பேரில் வணக்கப் பாடல்கள் சில கூறுமாறு 
வேண்டினர், சிவப்பிரகாச சுவாமிகள் “நரர்களைப் பாடுவதில்லை” என்று கூறிவிட்டார். இது நிற்க.

ஒருகால் உமையவள் தான் நீர்விளையாடிவரும் வரையில் ஒருவரையும் உள்ளே விடாதே எனச் 
சங்குகன்னருக்குக் கட்டளையிட்டபடி சிவபெருமான் உள்நுழையும்போது சங்கு கன்னர் ஒன்றுங் கூறாதிருந்தமையின், உமையம்மையும் மற்றையோரும் நாணத்தால் வெட்கி ஒருபுறம் ஒதுங்க, அது கண்ட சிவபெருமான் சங்குகன்னருக்குச் சாபந்தந்தனர். சங்குகன்னர் சிவபெருமானை 
அடிபணிந்து ‘சாபம் நீங்கு நாள் எந்நாளோ?’ என்று வினவ, ‘முருகப் பெருமானொடு மாறுபட்டுப் போர் தொடுக்கும் நாளே சாபத்தின் முடிவு நாள்’ என அவர் விடை 
கிடைத்தது. அவ்வாறே அவர் உலகத்திற் பிறந்து பாலசித்த ரெனப் பெயர்பெற்று அருந்தவம் ஆற்றி மயூரமலையிற் றங்கினர். தேவியர் வேண்டுகோளுக்கிரங்கிச் சித்தருக்கு முருகர் அருள் கூராதுவிடவே, அவர் மனைவியர் இருவரும் மண்ணுலகுக்கு வந்து சித்தருக்கு மகளிராயினர். காதலியரைக் கைவிட்ட முருகப்பெருமான் வேட்டையணிபூண்டு அங்கே அரசர் 
வடிவிற்றோன்றினர். பாலசித்தர் அரசரை வெறுத்து விற்போர், வாட்போர் தொடுத்தார். மற்போர் புரிந்தார். அவர் வேலைச் செலுத்தித் தாம் முருகரென விளக்கினர். சித்தர் தாம் மக்களாகக் கொண்ட அம்மையாரிருவரையும் முருகர்க்கு மணம்புரிவித்தனர். முருகப்பெருமான் பால 
சித்தருக்குத் திருவுளமிரங்கி, “ஐந்நூறாண்டுகள் உலகத்தில் மக்களுக்குச் சைவ சமயத்தைப் பரவச் செய்து பின் எம்மைச் சேர்வீராக” எனக் கட்டளையிட்டனர். பாலசித்தர், 
பச்சைக்கந்த தேசிகர் மரபில் மகப்பேறின்றி வருந்திய அம்மவை என்பவளால் பெருமுக்கல் மலையில் சதுரக்கள்ளிப்பால் கொடுக்கப்பெற்று உண்டு சிவஞான பாலைய சுவாமிகள் எனப் பெயர் பெற்றனர். உலகில் பல அற்புதங்களும் நிகழ்த்தி முடிவில் பொம்மபுரத்திலே 
தங்கியிருந்தார்.

பொம்மபுரத்துக் கருகிலுள்ள புத்துப்பட்டு என்னும் நகரத்தையடைந்து அன்றிரவு சிவப்பிரகாச சுவாமிகளும் சாந்தலிங்க சுவாமிகளும் ஐயனார் கோயிலின் பின்புறத்திற் றங்கினர். அன்றிரவு முருகப்பெருமான், சில விடுமலர்கள் கொடுத்துத் தொடுத்துத் தமக்கு அணியக் கட்டளையிட, அதுகொண்டு சிவஞான பாலைய சுவாமிகளின் பத்தித்தன்மை ஈதெனவறிந்து சில பாடல்கள் பாடி வழுத்திப், பாலையசுவாமிகளிடமிருந்து சிவஞானம் பெற்றனர். பின்பு ஆசிரியரின் ஆணைப்படி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தம் தங்கை ஞானாம்பிகையைத் திருமணம் முடித்து வைத்தனர்.

சில நாட்கள் கழிந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் இறைவனொடு இரண்டறக் கலந்தமை 
கண்டு மனங்கலங்கிப்பின் ஒருவாறு தெளிந்து. தாமும், சில நாட்கள் உலகில் இருந்து பல
நூல்கள் இயற்றிய பின், தமது முப்பத்திரண்டாம் ஆண்டில் ஒரு முழுநிலவுநாளில் சிவப்பிரகாசர் இட்டலிங்க பரசிவத்தில் இரண்டறக் கலந்தருளினர்.

சிவப்பிரகாச சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்தபொழுது சோண சைலமாலையும் 
திருச்செந்தூரில் தமிழ்ப் புலவருடன் வாதிட்டு வெற்றிகாண நிரோட்டகயமகமும்; 
திருவெங்கையூரில் இருந்தபொழுது திருவெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், 
திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம் ஆகியவைகளும்; பொம்மபுரத்திற் றங்கியக்கால் தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடுதூது என்னும் நூல்களும்; காஞ்சீபுரத்திலிருந்த காலத்தில் வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, திருப்பள்ளி யெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்பவைகளும், கூவத்தில் திருக்கூவப் புராணமும், விருத்தாசலத்திலிருந்தபொழுது 
பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகியம்மை 
நெடுங்கழிநெடிலடியாசிரியவிருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை என்பவைகளும்; மீண்டும் பொம்மபுரத்திற்கு வந்தபின் சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம், 
நன்னெறி என்பவற்றோடு வீரமாமுனிவரை மறுத்து ஏசுமத நிராகரணம் என்பதும், 
நல்லாற்றூரை யடைந்து சிவநாம மகிமை, அபிடேகமாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை, சீகாளத்தி புராணத்தின் கண்ணப்பச் சருக்கம், நக்கீரச்சருக்கம் ஆகிய பல நூல்களும் இன்னும் ஆங்காங்குச் சிற்சில தனிப் பாடல்களும் 
அருளிச்செய்தனர் என்ப.





__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பதிப்புரை    http://www.tamilvu.org/library/l5F20/html/l5F20pat.htm

பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய புலவர் இருவர். ஊமைப் பிள்ளையாயிருந்து உமையாள் மைந்தனின் அருள்பெற்றுப் பேசிய குமரகுருபரர் ஒருவர். சான்றோருடைத்தான 
தொண்டை நாட்டில் தோன்றிக் கவிச்சுடராகத் திகழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 
மற்றொருவர்.

சிவப்பிரகாசர் செந்தமிழ்ச் சுவைக் கனிகளை ஈந்தவர். அவர்தம் கடன்மடை திறந்தது போன்ற 
கவிப் பெருக்கைக் கண்டு வியக்காத புலவர்கள் இல்லையெனலாம். சிற்றிலக்கிய வகைகளில்
சிறப்பான அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா போன்ற பல துறைகளிலும் சிவப்பிரகாசர் நூல்கள் இயற்றியுள்ளார்.

தமிழ் பயில்வோர் பெரும்பாலும் ஆசிரியர்களையடுத்து முதற்கண் அந்தாதி, உலாபோன்ற 
சிற்றிலக்கியங்களையே பாடங்கேட்டுப் பயில்வது வழக்கம். அவ்வாறு பயில்வோர் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு, குமரகுருபரர் பனுவல்திரட்டு, சிவஞானமுனிவர் பனுவல்திரட்டு ஆகிய 
நூல்களையே முறையாகப் பயின்று வந்தனர்.

எனவே குமரகுருபரர் பனுவல்திரட்டையும், சிவஞான முனிவர் பனுவல்திரட்டையும் முதற்கண் வெளியிட்டோம். அதன்பின் பாகனேரி இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாகச் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டை 1941இல் கழகவழி வெளியிடப்பெற்றது. அதன்கண் குறிப்புரை நூலிறுதியில் பின் இணைப்பாகச் சேர்க்கப்பெற்றது.

இப்போது அதனைக் கழக வெளியீடாகவே விளக்கக் குறிப்புரையினைத் திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களைக் கொண்டு எழுதுவித்துச் செய்யுள் வரும் பக்கத்தின் அடியிலேயே படிப்போர் எளிதிலே செய்யுளின் பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் இணைத்து 
அச்சிட்டுள்ளோம்.

இச் ‘சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு’ என்னும் நூலில் சோணசைல மாலை முதலாய ஆறு மாலை நூல்களும் இரு அந்தாதி நூல்களும் இரு கலம்பகமும் தூது, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, ஆகியவற்றில் ஒவ்வொரு நூலும் பிற தனித்தனி நூல்களும் 
சேர்க்கப்பெற்றுள்ளன. மாணவர்க்கு என்றென்றும் பயன்தரக்கூடிய ‘நன்னெறி’யும் இதில் 
சேர்க்கப்பட்டுள்ளது.

இலக்கியக் கருவூலமாகத் திகழும் இந்நூலைத் தமிழ் பயில்வாரும் பயின்றாரும் படித்துப் பயன்பெற வேண்டும். இலக்கிய நயத்திலாழ்ந்து இன்பம் காண விழைவோருக்கும் இலக்கியம் கற்றுச் 
சொல்லாற்றலைப் பெருக்கிக்கொள்ள விரும்புவோர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத் திரட்டு என்னுந் தலைப்பில் திரு சிவஞான பாலைய தேசிகராதீனத்துச் சிதம்பரம் ஈசானிய மடம் 
இராமலிங்க சுவாமிகளால் பல ஏட்டுச் சுவடிகளைக்கொண்டு ஆராய்ந்து அருஞ்செய்யுள் உரைக் குறிப்போடு 1890ஆம் ஆண்டிலும், 1906ஆம் ஆண்டிலும் வெளியிடப்பெற்றது.

அதன்பின் 1916ஆம் ஆண்டில் மூவர் தேவாரத்தைத் தலமுறையில் மிகவும் அழகாக 
வெளியிட்ட சிவத்திரு சுவாமிநாத பண்டிதரவர்கள் அருஞ்சொற் குறிப்புரையினைப் பின் 
இணைப்பாகச் சேர்த்தும், நூல் முழுமையிலுமுள்ள செய்யுட்களைச் சீர்பிரித்தும் சிவப்பிரகாசர் பனுவல் திரட்டை வெளியிட்டனர்.

1944ஆம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட பனுவல் திரட்டிலுள்ள நூல்களோடு சுவாமிகள் 
இயற்றியருளிய திருக்கூவப்புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, இயேசுமத நிராகரணம், சீகாளத்தி புராணம் இடைப்பகுதி ஆகிய நூல்களையும் சேர்த்து 
நல்லாற்றுச் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்’ என்ற தலைப்பில் திருமயிலம் தேவத்தான வெளியீடாக திருமயிலம் ஆதீனம் 18ஆம் பட்டம் திருவருட்டிரு சிவஞான பாலைய சுவாமிகளால் வெளியிடப்பெற்றது.

இப்பதிப்பு தமிழின்பத்தில் திளைக்க விரும்புவோர்க்குப் பெரிதும் பயன்படுமென எண்ணுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

 http://sathyasenthil77.blogspot.in/2012/10/blog-post_4470.html
சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால் தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம், தமக்கை ஞானாம்பிகை ஆகியோருடன்திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.
 
தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார்.
 
சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார். சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.
 
ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார். அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.
 
அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.
 
வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர், காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.
 
அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப் பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.
 
சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர் அவரின் ஆற்றலை அறிய விரும்பி "கு" என்று தொடங்கி "கு" என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசைவெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார்.

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
 முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
 தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
 ஊருடையான் என்னு முலகு
 
சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார். வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார். அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார். "இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும்" என்று கேட்டார்.
 
வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும் கற்றுக் கொடுத்தார்.
 
சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார். வெள்ளியம்பல சுவாமிகளோ," இவை எமக்குவேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே  இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை  ஒடுக்கி எம் கால்களில் விழச்செய்ய வேண்டும்" என்றார்.
 
குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு  வலம் வந்தார். அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார்.
 
புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பலசுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறிபொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.
 
புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும் நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர் தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான்.
 
சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை வெட்கித்தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
 
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை நீர் அவருக்கே அடிமையாதல் முறை என்று கூறி தம்குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கேஅடிமையாக்கினார்.
 
வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தைபரம் பொருளிடத்தே செலுத்த வைத்து "நல்வாழ்வு வாழ்ந்து வா" என்று கூறி அனுப்பி வைத்தார்.
 
குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன் துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.
 
வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே திருவெங்கைக் கோவை, திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார்.
 
சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம் புறப்பட்டார்.
 
சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை,  சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார்.
 
அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை வந்து, அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.
 
சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை, பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார். அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள் இறைவனைத் துதிக்கும் நாவால் மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.
 
இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்
 
Puthupattu+Koil.jpg
 
(புத்துப்பட்டு ஐயனார் கோவில்)
 
 
 
 
அன்றிரவு தங்கினர். சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.
 
காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார் தேசிகர்.
 
சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் வந்து உணர்த்தியுள்ளார் என்று விளக்கினார்.
 
மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார் சிவப்பிரகாச சுவாமிகள்.
 
சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள். சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
 
தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில்வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார். மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களை தன் ஞானாசிரியர் மேல் பாடினார்.
 
காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை அடைந்துதிருக்கூவப்புராணம் பாடி அருளினார்.
 
அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம்,  அனுபவம்,  ஈசனின்  உறைவிடம் அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்து கொண்டார்.  பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.
 
சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார்.  குருவின் சந்நிதானத்தில் வீழ்ந்து,  அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
 
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே "நன்னெறி" வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை எழுதிக் கொண்டனர்.
 
காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.
 
அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.
 
அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.
 
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும் அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும், நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.
 
பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது. தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது. தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார். புரட்டாசி மாதம்பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
 
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது. அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாம்பலாகியது. ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.
 
சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும். சுவாமிகள் வாழ்ந்தது 32 ஆண்டுகள்.

 
சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன.
 
முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.
contd

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 




இயற்றிய நூல்கள்:-
 
 
  1. திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும்ஒருவகை பா வகை)
  2. திருவெங்கை உலா
  3. திருவெங்கை அலங்காரம்
  4. நால்வர் நான்மணி மாலை
  5. சிவப்பிரகாச விகாசம்
  6. தருக்கப்பரிபாஷை
  7. சதமணி மாலை
  8.  வேதாந்த சூடாமணி
  9. சிந்தாந்த சிகாமணி
  10. பிரபுலிங்க லீலை
  11. பழமலை அந்தாதி
  12. பிட்சாடண நவமணி மாலை
  13. கொச்சகக் கலிப்பா
  14. பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை
  15. சிவநாம மகிமை
  16. இஷ்டலிங்க அபிஷேக மாலை
  17. நெடுங்கழி நெடில்
  18. குறுங்கழி நெடில்
  19. நிரஞ்சன மாலை
  20.  கைத்தல மாலை
  21. சோணசைல மாலை
  22. சீகாளத்திப் புராணம்
  23. திருவெங்கைக்கோவை
  24. நெஞ்சுவிடு தூது
  25. சிவஞான பாலையர்
  26. திருக்கூவ புராணம். 





காலம் கடலூர் மாவட்டம்  நல்லாற்றூரில் உள்ள 
தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் அவர்தம் துயிலிடம்.(சமாதி)



sivapiragasr+6.JPG
 
சிவப்பிரகாசர் துயிலிடம் முகப்பு
 
 

 

sivapiragasar+2.JPG 
 
சிவப்பிரகாசர் துயிலிடம் பின்புறம்.  
 
 
 
1.       சோணசைல மாலை

 

2.       நால்வர் நான்மணி மாலை

 

3.       திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி

 

4.       பழமலையந்தாதி

 

5.       பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
6. விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
7.       பெரியநாயகியம்மை கலித்துறை
8.       நன்னெறி
9.       திருவெங்கைக் கோவை
10.   திருவெங்கைக் கலம்பகம்
11.   திருவெங்கையுலா
12.   இட்டலிங்க அபிடேக மாலை
13.   நெடுங்கழி நெடில்
14.   குறுங்கழி நெடில்
15.   நிரஞ்சன மாலை
16.   கைத்தல மாலை
17.   சிவநாம மகிமை
18.   சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
19.   சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
20.   சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
21.   சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
22.   சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
23.   இட்டலிங்க வகவல்
24.   திருவெங்கை மான்மியம்.

தொகுப்பு :-சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,   
தமிழ்நாடு - இந்தியா.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)

சிவப்பிரகாசர் (துறைமங்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர்அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.

குடும்பம்[தொகு]

தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப் பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறந்தார்.

கல்வியும் இறையருளும்[தொகு]

தந்தை இறந்த பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலை சென்று, அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர் நாள், திருவண்ணாமலையை வலம்வரும்பொழுது, இறையருளால் "சோணாசலமாலை" என்னும் நூலை நூறுபாக்களாக இயற்றிப்பாடி இறைவனை வணங்கினார்.

துறைமங்கலம் செல்லல்[தொகு]

அதன் பின்னர், சிவப்பிரகாச அடிகளார் தமிழ்மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்கள் கற்பான்வேண்டி, தணியா வேட்கையுடன் வடநாட்டுக்குத் தன் தம்பியருடன் சென்று வாலிகண்டபுரத்துக்குத் தென்பாலுள்ள துறைமங்கலம் அடைந்து ஆங்கோர் நந்தவனத்தில் சிவவழிபாடு செய்தார். அப்போது அவ்வூரின் அதிபதியும் கல்வி கேள்விகளில் சிறந்தவருமான அண்ணாமலை ரெட்டியார் அங்கு வந்து வணங்கி நின்றார்; அடிகளின் நல்லருள் பெற விழைந்தார். அடிகளை அங்கேயே தங்கியிருந்து அருட்பணிபுரிதல் வேண்டுமென இறைஞ்சியதால், அடிகளாரும் ஒப்பினார். அதன்பின், அண்ணாமலை ரெட்டியார், தம் குருவாகிய சென்னவசவையர் திருமடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடம் கட்டுவித்து, அதில் அடிகளை இருக்கச் செய்து தானும் அணுக்கத் தொண்டனாக அருகிருந்து அறிவுரைகள் பெற்று இரண்டரையாண்டு ஆனந்தித்திருந்தார்.

தென்னாட்டில் அடிகளார்[தொகு]

அதன்பின் அடிகளார் தென்னாடு செல்ல விழைந்து தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்துப் புறப்பட்டுத் திருநெல்வேலியை அடைந்தார்.

திருநெல்வேலியை அடைந்த அடிகளார், அங்கிருந்த சிந்துபூந்துறையில் தருமபுர ஆதீன "வெள்ளியம்பலவாண சாமிகள்" இலக்கண இலக்கிய நூற்புலமையில் வல்லுனரெனக் கேள்வியுற்று, அவரிடம் சென்று வணங்கி நின்று தாம், "இலக்கணம் கற்கவேண்டி வந்தோமென்றார்." அதற்கியைந்த குரு, சிவப்பிரகச அடிகளாரின் இலக்கியப் பயிற்சியைச் சோதிக்க எண்ணி, "ஐயா! 'கு'விலாரம்பித்து, 'ஊருடையான்' என்பதை இடையிலமைத்து, 'கு'என்னும் எழுத்தில் முடியுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடுக" என்றார்.

உடனே அடிகளார்:

"குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு."

என்னும் வெண்பாவை இயற்றிப் பாடினார்.

இருவருக்கும் பதினைந்து தினங்களில் ஐந்து இலக்கணங்களையும் பாடம்சொல்லி அவர்களின் இலக்கணப் புலமையினை நிறைவுபெறச் செய்தார்.

குரு காணிக்கை[தொகு]

அடிகளார் தனக்கு அண்ணாமலை ரெட்டியார் வழிச்செலவுக்காகத் தந்தனுப்பிய பொன்னில் 300 பொன்னைக் குரு காணிக்கையாகத் தர அதை மறுத்த குரு, "திருச்செந்தூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் புலவரை வென்று செருக்கழித்து வாரும்; அதுவே குரு காணிக்கை" என்றார்.

கருத்தறிந்த சிவப்பிரகாச அடிகளார் திருச்செந்தூர் சென்று திருக்கோவில் வலம்வருங்கால், செருக்குற்ற புலவரைச் சந்தித்தார். சொற்போர் ஆரம்பித்தது. போட்டி என்ன? என்றதற்குத் திருச்செந்தூரார், "நாம் இருவரும் நீரோட்டக யகமம் (வாயிதழ் குவியா அடிமுதல் மடக்கு) பாட்டு முருகப் பெம்மானைப் போற்றிப் பாடவேண்டும்; முன்னர் பாடி முடித்தவற்கு, அஃ·தியலாதார் அடிமையாக வேண்டும்" என்றார். அடிகள்நீரோட்டக யமகவந்தாதியின் "கொற்ற வருணை" எனத் தொடங்கும் காப்புச் செய்யுளை முதற்கொண்டு "காயங்கலையநலி" என முற்றுப்பெறும் செய்யுளோடு, முப்பத்தியொரு கட்டளைக் கலித்துறைப் பாக்களை முதலில் பாடி முடித்தார். திருச்செந்தூராரோ, ஒரு பாடலைக்கூட முடிக்க இயலவில்லை. திருச்செந்தூராரை அடிமையாக்கித் தம் குரு, வெள்ளியம்பலத் தம்பிரானிடம் அவரை ஒப்புவித்தார்.

பின்னர் தம்பிரான், "தாங்கள் பாடிய செய்யுளில் சிவனுக்குகந்தது சிதம்பரமே எனக் குறிப்பாலுணர்த்தியதால், அத்தில்லையில் சில காலம் இருக்க" எனப் பணித்து விடை கொடுத்தார். அடிகளார் அவ்வாறே சிதம்பரத்தில் சிலகாலமிருந்தார்.

துறைமங்கலம் மீளல்[தொகு]

பின்னர், சிவதலங்களுக்குச் சென்று வணங்கிப் பின்னர் துறைமங்கலத்திற்குப் போய் அண்ணாமலை ரெட்டியாரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கித் திருவெங்கைமாநகரில் தம்பொருட்டு அவரால் கட்டப்பட்ட திருமடத்தில் வாழ்ந்து, அந்நகரிலுள்ள பழமலைநாதரைப் போற்றி திருவெங்கைக்கோவைமுதலிய நான்கு நூல்களை இயற்றித் தந்தார்.

பின்னர், அண்ணாமலை ரெட்டியார் "அடிகள் இல்லறம் மேற்கொள்ளவேண்டும்" என்று தம் உள்ளக் கிடக்கையைத் தெரிவிக்க அடிகள் உடனே,

"சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீச் சுரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தளவிருந்து
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே."

என்னும் பாவால் தம் இசைவின்மையை உணர்த்தினர். இதேபோல, அடிகளின் தம்பிகள் இருவரிடமும் ரெட்டியார் வினவ, அவர்கள் திருமணம் செய்துகொள்ள இயைந்தனர். இளவலிருவரின் இச்சையைப் புரிந்துகொண்ட அடிகள் இருவருக்கும் தக்கபடி திருமணம் செய்து வைத்தார்.

மீண்டும் சிதம்பரத்தில்[தொகு]

அதன்பின்னம், ரெட்டியாரோடு சிதம்பரம் சென்று, ஆங்கொரு திருமடம் கட்டுவித்து இறைவழிபாடு செய்து வந்தனர். அப்பொழுது, தருக்க பரிபாஷை, சிவப்பிரகாச விலாசம், நால்வர் நான்மணிமாலை, சதமணிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். பின் அங்கிருந்து கிளம்பி பல சிவத்தலங்களுக்கும் சென்று பின்னர் திருக்காட்டுப்பள்ளியை அடைந்தார்.

சிவஞான பாலைய தேசிகரைப் பாடுதல்[தொகு]

ரெட்டியாரோடு காஞ்சி செல்லும் வழியில் சாந்தலிங்க சுவாமிகளச் சந்தித்தார். சாந்தலிங்க சுவாமிகள் போரூர் செல்லும் காரணத்தை வினவ, அதற்கு அவர் சிவஞான பாலைய தேசிகரைத் தரிசிக்கச் செல்வதாகக் கூறினார். பின்னர் இருவரும் போரூர் செல்லும் வழியில் புத்துப்பட்டு கிராமத்தில் தங்கி இருக்கும்போது, அடிகளாரை நோக்கி சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய தேசிகரைப் புகழ்ந்து சில பாக்களை இயற்றவேண்டினார். அதற்கு அடிகளார், "யாம் மக்களைப் பாடுவதில்லை" என மறுத்தார். இரவு உறங்குங்பொழுது, முருகன் கனவில் தோன்றி ஒரு பாத்திரத்தில் விடுபூக்களை இட்டு, "இவற்றைத் தொடுத்து மாலையாக்கி எமக்கிடுவாயாக" எனக் கூறி மறைந்தார்.

உதயத்தில், சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவைக் கூறுகையில், "முருகன் உத்திரவு வந்துவிட்டது; பாடுங்கள்" என்றார். மறுக்கவியலாது, சிவஞான பாலைய தேசிகரின் பெருமையை, "நெஞ்சுவிடு தூது, தாலாட்டு" என்னும் நூல்களாக இயற்றிச் சிவஞான பாலைய தேசிகரின் முன் அரங்கேற்றினார். தேசிகரும் அடிகளாருக்கு உண்மையறிவைப் புகட்டினார். தேசிகனாரின் கட்டளைக்கிணங்கி சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தன் தங்கை ஞானாம்பிகையாரைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, ரெட்டியாரைத் துறைமங்கலத்துக்குச் செல்லுமாறு பணித்துவிட்டுத் தான் சிவஞான பாலைய தேசிகருடன் தங்கிவிட்டார்.

தொடரும் இலக்கியப் பணி[தொகு]

சிலகாலம் கழித்து, சிவஞான பாலைய தேசிகரிடம் விடைபெற்று காஞ்சி சென்று இறைத்தொண்டு புரிந்திருந்தபோது, நிசகுணயோகி என்பவரால் கன்னட மொழியில் இயற்றப்பட்ட விவேக சிந்தாமணியின்ஒரு பாகமாகிய "வேதாந்த பரிச்சேதத்திற்கு வேதாந்த சூடாமணி" என்னும் பெயரிட்டுத் தனி நூலாகப் பாடினார். இரேணுகர் என்னும் கணத்தலைவரால் அகத்தியருக்கு அருளப்பட்ட சித்தாந்த சிகாமணியையும் பாடினார். அத்தருணத்தேதான் அல்லமதேவராகிய பிரபுதேவர் வரலாறான பிரபுலிங்க லீலையும் இயற்றி அருளினார்.

சிவப்பிரகாச அடிகளார் இன்னும், திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், திருக்கூவப் புராணம், பழமலையந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகியம்மை ஆசிரிய விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, நன்னெறி ஆகிய நூல்களை இயற்றினார். அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.

இறுதிக் காலம்[தொகு]

இறுதியாக, நல்லாற்றூரையடைந்து, சிவநாம மகிமை, அபிசேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தலமாலை முதலிய நூல்களையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்ப சருக்கம், நக்கீரர் சருக்கம் ஆகியவற்றையும் பாடி முடித்துத் தன் முப்பத்திரண்டாம் அகவையில் புரட்டாசிப் பவுர்ணமியில் இட்டலிங்கப் பரசிவத்தில் காலமானார். அவர் இயற்றியவற்றில் எளிதாகக் கிட்டுவது பிரபுலிங்க லீலை மட்டுமே.

இயற்றிய நூல்கள்[தொகு]

இவர் வீரசைவச் சமயச் சார்புள்ள பல நூல்களை இயற்றினார். [1]



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில்

First Published : 11 October 2009 12:30 AM IST

தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் நால்வர் (ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்) பெருமக்கள். அவர்களின் திரு அவதாரத்தால்தான் சைவமும், தமிழும் ஒருசேரப் புத்தொளி பெற்று தழைத்து வளர்ந்தது. அச்சான்றோர்களின் அளப்பரிய சாதனைகளைப் பின் வந்தவர்கள் நினைத்து நினைத்து உள்ளம் உருகி, பக்திப் பாக்களைத் தந்த அந்நால்வரையும் தமது பாக்களாலேயே வழிபாடு செய்தனர்.

அப்படிப்பட்டவர்களுள் தலைமை சான்றவர், "கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். இவர், "கவி சார்வ பெüமா', "கற்பனைக் களஞ்சியம்', சிவப்பிரகாச சுவாமிகள், "நன்னெறி சிவப்பிரகாசர்', "துறைமங்கலம்' சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். அந்நால்வருக்கும் அவர் எழுப்பிய கவிதைச் சொற்கோயில்தான், "நால்வர் நான்மணி மாலை' என்ற பக்திப் பனுவல்.

திருச்செந்தூர் நீரோட்டக யமக (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா வகை) அந்தாதி, திருவெங்கை உலா, திருவெங்கை அலங்காரம், நால்வர் நான்மணி மாலை, சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணிமாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சகக் கலிப்பா, பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோணசைல மாலை, சீகாளத்திப் புராணம், திருவெங்கைக்கோவை, நெஞ்சுவிடு தூது, சிவஞான பாலையர், திருக்கூவ புராணம் போன்ற பக்தி நூல்கள் இவர் இயற்றியதாக அறியக் கிடைக்கின்றன. இறைவனுக்கு, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட வார்க்கப்பட்ட கற்பனை மிகுந்த அற்புதச் சொற்கோயில்கள் இவரது அனைத்துப் படைப்புகளும்.

"நால்வர் நான்மணி மாலை'யில் சிவப்பிரகாசரின் கற்பனைச் சொல்லோவியங்கள் மிக அற்புதமானவை. நால்வர் பெருமக்களையும் நான்கு மணி (முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்) மாலைகளாக்கி, நெஞ்சுருகிப் பாடியுள்ளார்.

சம்பந்தரை வெண்பாவிலும், அப்பரைக் கலித்துறையிலும், சுந்தரரை விருத்தப்பாவிலும், மாணிக்கவாசகரை அகவற்பாவிலும் போற்றிப் பரவுகிறார் சிவப்பிரகாசர்.

96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று நான்மணிமாலை. நால்வர் பெருமக்கள் மீது நான்மணி மாலை என்ற இலக்கணம் அமையப் பாடப்பட்டதால் இந்நூல் "நால்வர் நான்மணி மாலை' என்ற பெயர் பெற்றது.

முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளை முறையே கோர்க்கப்பட்ட மாலை போன்று வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா (அகவற்பா) என்னும் நால்வகைப் பாக்களை நிரலே நிறுத்தி, அந்தாதித் தொடை இலக்கணம் பொருந்தப் பாடப்படுவதால் இது நான்மணிமாலை என்று வழங்கப்படுகிறது. இதில் நாற்பது செய்யுள்களே இருக்க வேண்டுமென்ற வரைமுறையும் உள்ளது.

""வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல்

பின்பேசும் அந்தா தியினாற் பதுபெறின்

நன்மணி மாலை யாமென நவில்வர்''

என்பது இலக்கண விளக்க நூற்பா.

வாழ்க்கையில் நிகழ்ச்சி காரண, காரிய அமைப்புடையவை. இறையருள் வீழ்ச்சிக்கும் காரண, காரிய அமைப்பு உண்டு. இவைகளை உட்கிடையாகக் கொண்டு அமைக்கப் பெற்றதே அந்தாதித் தொடை என்பர்.

""முந்திய மோனை முதலா முழுவதும் ஒவ்வாறு

விட்டால் செந்தொடை நாம் பெறும்''

என்பது யாப்பிலக்கணம். எதுகை, மோனை முதலிய தொடைகள் முழுவதும் ஒவ்வாறு வந்தால் அதற்குச் செந்தொடை என்று பெயர்.

சிவப்பிரகாசர், மாணிக்கவாசகப் பெருமானுக்கு அமைத்த ஆசிரியப்பாவில் மூன்று, நான்கு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மோனை, எதுகை விதிகளைக் கடந்தே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்பாவும் - முத்தும்:

வெண்பா, உத்தம இலக்கணம் உடையது; வெண்சீரே வருதல் வேண்டும்; செப்பலோசை அமைய வேண்டும். சைவசமய உண்மைகளை நிலைநாட்ட முற்பட்டதே திருஞான சம்பந்தர் தேவாரம். ஒரு பொருள் இருக்கிறது என்பதை நிலைநாட்டவும், அதன் இலக்கணத்தை வரையறுக்கவும் முற்படுவது முதற்காரியமாகக் கருதப்படும். உண்மையையும், இலக்கணத்தையும் "செப்புதல்' என்ற அடிப்படையில் சைவ சமயத்தை நிலை நாட்டப் புகுந்த திருஞான சம்பந்தரை வெண்பாவால் - செப்பலோசையால் பாடிப்பரவியுள்ளார்.

முத்து எனப்படுவது கறையிலாத மழைநீர். ஆவணி "சுவாதி'யில் சிப்பியின் வயிற்றில் புகுந்து கட்டித்தன்மையதாக ஆன ஒருபொருள். கரையற்ற தெய்வ நலம் ஒன்றே மனிதக் குழந்தையாகி, தெய்வ அமுதமே உண்டு, தெய்வ இலக்கணத்தையே பேசியதால், முத்து, ஞானசம்பந்தப் பெருமானுக்கு இணைப்புடையதாயிற்று. இறைவன், சம்பந்தருக்கு முத்துச்சிவிகையும், முத்துப் பந்தரும் அளித்தமை இதனால்தான்!

கட்டளைக் கலித்துறையும் - பவளமும்:

"கலி' என்ற சொல்லுக்குச் "செருக்கு' என்றும் "மகிழ்ச்சி' என்றும் இருபொருளுண்டு. முதற்சீரின் இறுதி அசையாகிய காய், இரண்டாம் சீரின் மூல அசையாகிய நிரையுடன் சேரும்போது, மெத்தென்று ஓடிவரும் அருவி, தடையாக உள்ள கல்லின்மேல் மோதி எழும்போது உண்டாகும் ஓசையைப் போல ஒலிக்கும்; இதுவே துள்ளலோசை. செருக்கை நிலைநாட்ட இவ்வோசை பயன்படுத்தப்படும். இதற்கு மாறாக மகிழ்ச்சியால் தோன்றும் கலிப்பா வகைகளும் உண்டு. வாழ்க்கையில் உத்தம இலக்கணத்தோடு வாழ்ந்து, பேரின்ப வாழ்வை இவ்வுலக வாழ்விலேயே பெற்றும், பெறுமாறு அறிவுறுத்தியும், சமணர்களின் செருக்கை அடக்கியும் நின்ற நாவுக்கரசர், இலக்கண நெறியோடு அமைத்து கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டுள்ளார்.

கடலினுள் இருந்தாலும் கடலின் தன்மையை ஏற்றுக்கொள்ளாது இருப்பதும், பழுத்தல் இன்றி காயாகவே நிற்றலும் பவளத்தின் இயல்புகள். இவ்வுலகில் இருந்தாலும் இவ்வுலகியல் நெறிக்கு அடிமைப்படாமல் இருந்து காட்டியவர் நாவுக்கரசர். காயின் தன்மை புளிப்பு; அது பழமாக மாறியபின் இனிக்கும். புளிப்புத் தன்மைத்தாகிய இம்மனித உடலிலேயே இனிப்புத் தன்மையை-பேரின்பத்தை ஏற்று, இன்பம் துய்த்து வாழ்ந்த திருநாவுக்கரசர் காயாகவே நிற்கும் பவளத்தோடு இணைக்கப்பட்டார். செம்மைக்கு உதாரணமாக நிற்கும் பவளம் வாழ்வின் இலக்கணத்திற்கு உதாரணமாக நின்ற நாவுக்கரசருக்கு இணையாயிற்று.

ஆசிரியவிருத்தமும் - மரகதமும்:

அகவலோசை, தழுவுவதாய் இனமென அமைந்த அமைப்புடையது இது. இறைவனை, நினைப்பற நினைந்து, அவன் மகிழடியிலேயே எத்தனை இடையூறுகள் வரினும் தளராது நின்ற மயிலின் தன்மை நம்பியாரூரரின் இயற்கை. ஆனால் நம்பியாரூரர் நம்போல் அவர்களும் வாழுமாறு எளிதில் இவ்வுலகம் போற்ற வாழ்ந்து காட்டிய செயல்களையும் மேற்கொண்டவராதலின், அவருக்கு "விருத்தம்' அமைத்தார்.

மரகதமும் மாணிக்கமும் மலைபடு பொருள்கள். மலையில் கிடைக்கப்படுபவை ஆயினும், மரகதம் கல் வகையைச் சார்ந்தது; மாணிக்கம் நீர்ப்பொருள் (விஷம்) கட்டிப்பட்டதால் அமையும் வகையைச் சார்ந்தது. இயல்பிலேயே கற்புத்தன்மை அமைய நின்று உலகினர்க்கு ஒளிவூட்டிய நம்பியாரூரர் மரகத மணியைச் சாரும் நிலைபெற்றார்.

அகவலும் மாணிக்கமும்:

ஞான நிலையை வெளிப்படுத்துவது மயில். மயிலின் ஓசையே அகவலோசை எனப்படும். நினைவின் முதிர்ச்சியே மயிலுக்கு உருவாக அமையும். தன்னை மறந்து பிறிதொன்றை நினைப்பற நினைந்து நிற்கும் நினைவின் தன்மையை வழியாகக் கொண்டு இறையருள் இன்பம் துய்த்த "அறிவாற் சிவமாம்' மாணிக்கவாசகப் பெருமானை, அகவலோசையில் அமைத்துப் பாடினார் சிவப்பிரகாசர்.

நீர்த் தன்மையாயிருந்தும் தம்முடைய ஒழுக்கத்தினால் மாணிக்கத் தன்மையைப் பெற்ற மாணிக்கவாசகரை, மாணிக்கம் என்ற மணியைக் கொண்டு பாடியுள்ளார்.

  இந்நூலை "துதிநூல்' என்றும் "புகழ்நூல்' என்றும் கொள்வர் பலர். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் இந்நூலை, "ஓர் ஆராய்ச்சி' என்று கூறுகிறார். ""என்பாட்டுக்கு நீயும் அவனும் ஒப்பீர் எப்படியினுமே'' என்ற வரிகளில் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  வரலாறுகளில் காணப்படும் சிக்கல்கள், தத்துவ உண்மையில் கொள்ள வேண்டிய கருத்துகள், அறவழியும், அருள்வழியும் மோதும் நிலையில் எழுகின்ற மாறுபாடுகள் போன்றவற்றை எடுத்துக்கூறி விளக்கி, சிக்கல்களை நீக்கியுள்ளார்.

கற்பனையும், உவமையும், உருவகமும், எதுகை மோனையும் அமையப்பாடி, நால்வர் பெருமக்களான நான்கு சைவ மணிகளுக்கும் நான்கு சொற்கோயில்கள் கட்டியுள்ளார் சிவப்பிரகாசர். இந்நூலில் உள்ள 40 பாக்களில் ஒன்றிரண்டை மட்டும் படித்தால் போதாது. அனைத்துப் பாக்களையும் நிரல்பட படித்துச் சுவைக்க வேண்டும்! கற்பனைக் களஞ்சியத்தின் கவித்திறனுக்கு நால்வர் நான்மணி மாலை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://www.tamilhindu.com/2009/08/christianity-in-india-book-intro/

  1.  
  2. முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 8:57 am

    ஏசுமத நிராகரணம் என்னும் நூல் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் செய்யப்பட்டது. வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால், அவர் எழுதிய, சாந்தலிங்க சுவாமிகளின் நூலான, ‘கொலைமறுத்தல்’ உரையில் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது.

     
  3. ஜடாயு on August 19, 2009 at 9:09 am

    // வீரமாமுனிவருடைய ஆட்களால் இந்த நூல் இந்த நூல் முழுவதும் கையகப்படுத்தி அழிக்கப்பட்டது. //

    அன்புள்ள முத்துக்குமாரசுவாமி ஐயா, இதற்கு ஆதாரம் உள்ளதா – வேறு நூல்களில், பதிவுகளில், ஆவணங்களில்?

    வீரமாமுனிவர் என்கிற ஜோசப் பெஸ்கி ஒரு உயர்ந்த தமிழ் அன்பர்,புலவர் என்று பயங்கர பிரசாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

     
  4. முத்துக்குமாரசுவாமி on August 19, 2009 at 12:57 pm

    அன்புள்ள ஜடாயு அவர்களே, நான் வீரமாமுனிவர் பற்றிச் சொன்ன இந்தச் செய்திக்கு வலுவான ஆதாரம் இல்லைதான். ஆனால்,துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளோடு தொடர்புடைய அன்பர்களின் வழிவந்தவர்கள் கூறக் கேட்ட செவிவழிச் செய்திதான். இது அவர்களுக்கு எதிராக வைக்கத்தக்க ஆதாரம் இல்லைதான்.

  5. http://velmahesh.blogspot.com/2009/11/blog-post_8788.html



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://muelangovan.blogspot.in/2008/10/blog-post_07.html

sivapiragasr+6.JPG

sivapiragasr+3.JPG



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://rajiyinkanavugal.blogspot.in/2013/06/blog-post_21.html

சித்தர்கள் சமாதி - புண்ணியம் தேடி ஒரு பயணம்..,

புண்ணியம் தேடி போகும் பயணத்தில் இன்னிக்கு நாம பார்க்க படிக்க போறது.., பன்ருட்டியிலிருந்து ஒண்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற "சிவப்பிரகாச ஜீவ சமாதியை”.., என்னடா! வெள்ளிக்கிழமை அதுமா ராஜி சமாதிக்குலாம் கூட்டிப்போறாளேன்னு ஜெர்க் ஆக வேணாம்.., என்ன விசேசம்ன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க சகோ’ஸ்...,
                                                                 00.JPG

0a.JPG
 
சிவப்பிரகாச சுவாமிகள் காஞ்சிப்புரத்தில் பிறந்தவராம். அவருடைய காலம் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாம்.., அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகள் மட்டுமே.., ஆனா, அந்த முப்பத்திரண்டு வயத்துக்குள்ள முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் எழுதினாராம்..., அதனாலயே இந்த சிறப்பு.., சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்ட சிவப்பிரகாச சுவாமிகள் தனது தம்பி தங்கையுடன் “திருவண்ணாமலைக்கு வந்துவிட்டாராம், பிறகு அவரது தந்தையின் குருவான “குருதேவை” சந்தித்து அவருடன் தங்கி, கல்வி கற்றாராம்..,
 
திருவண்ணாமலை கிரிவலத்தி பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டாராம். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் அருனாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினமே 100 பாடல்கள் இயற்றினாராம் ...,
                                
1.jpg

அதற்கு ”சோண சைலமாலை”ன்னு பெயரிட்டாராம். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால், தமது சகோதர்களுடன் தென்னகம் நோக்கி சென்று.., திருச்சிக்கருகில் உள்ள “பெரம்பலூரில்” இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தாராம்,,ம்
 
குருநாதரிடம்  சொல்லி விடை பெற்று தமது சகோதரர்களுடன் “துறைமங்கலம்” வந்து, பின்னர் அங்கிருந்து, “வாலி காண்டபுர”த்தின்  வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்து வந்தாராம்.  வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே “திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலபகம், திருவெங்கையுலா, திருவெங்க அலங்காரம் என்னும் நான்கு நூல்களை எழுதினாராம். பின்னர் தமது சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் தனது புனித பயணத்தை தொடங்கினாராம்...,
 
சிதம்பரத்திற்கு திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவப்பெருமானை தரிசனம் செய்து சில காலம் தங்கியிருந்துட்டு பிறகு காஞ்சிப்புரம் புறப்பட்டு போனாரம். பின்னர் புதுவை வந்து அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தாராம்.. காலம் வேகமாக சென்றது.. 
 
பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு, நல்லாத்தூர் வந்து சேர்ந்தார். அது ஒரு சிற்றூர். எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும் கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது.., அக்கோவிலின் முன்னே உள்ள நுணா மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டாராம்.
 
பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுப்பட்டிருந்தார். தவம் முடிந்து தவசித்தி பெற்றாற். சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.., தாம் சிவமாகும் காலம் நெருங்குவதை உணர்ந்து “புரட்டாசி மாதம் - பௌர்ணமி திதியில் ஐக்கியமானார் என்கின்றனர்..,
 
11.jpg
 
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள  நுணா மரம் வெட்டப்பட்டது.., அந்த நுணா மரத்தின் கீழ்தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப்பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அப்படி போட்ட மறுகணமே பச்சை நுணா மரம் எரிந்து சாம்பலாகியது.., அதுமட்டுமில்லாமல் அவ்வீட்டில் இருந்த மற்ற பொருட்களுக்கு தீ பரவவுமில்லை.., அதனால் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை.
 
மேலும், இதை மூவர் சமாதி என்றும் சொல்வர்.., 3 சித்தர்கள் ஜிவ சமாதியான் இடம் இது..,
 
12.jpg
 இவர் ”சீர்மன்   குமாரசுவாமி தம்புரான்”. சிவப்பிரகாச சுவாமிகளுடைய சிஷயர்” என்று சொல்கிறார்கள்..,
 
14.jpg
இவர் ”சடை சுவாமிகள்” ன்னு சொல்லப்பட்டாராம்.., இவருடைய சமாதியும் இங்க இருக்கு..,
 
15.jpg
 
இவர் ஸ்ரீகுண்டலி பரதேசி சுவாமிகள்.., இவர் ”சீர்மன்னு குமாரசுவாமி” தம்பிரானுடைய சிஷ்யன் என்று சொல்றாங்க...,
 
மேலும் ஆலயத்துக்குள்ள நிறைய மகான்களின் சிலைகள் இருக்கு...,
 
16.jpg
ஸ்ரீசுக பிரம்ம ரிஷி..,
 
17.jpg
ஸ்ரீகாகபுஜண்டர் தன் பத்தினியுடன்..,
 
18.jpg
  திலகவதி அம்மையாரும்.., அவர் அருகில் திருநாவுக்கரசருக்கும்..,
 
மேலும் நாங்க போகும்போது நிறைய பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க..., அவங்களை கேட்டபோது TNPCCதேர்வுகளில் நிறைய பேர் இங்க வந்து உக்காந்து படிச்சுட்டு போய் பரிட்சை எழுதி அரசு உயர் பதவிகளில் இருக்காங்களாம்.., அதனால.., இங்கு படிச்சா வெற்றி நிச்சயம்ன்னு படிக்கிறாங்களாம்..,
                                                            19.jpg
மாணவர்களும், சிலர் படிப்பதை பார்த்தோம்.., பகல் நேரங்களில் வயதானவர்களும் வெட்டியாய் கொஞ்ச நேரம் படுத்டிருக்காங்க.., இந்த கோவில வழிப்பட உகந்த நேரம் மாலை நேரமே!!
 
  21.jpg
 
இந்த சமாதி.., இங்கிருந்து படித்து அரசின் உயர் பதவிக்கு சென்றவர்களின் நிதி உதவியுடன் இப்போ ரொம்ப அழகா பராமரிக்கப்பட்டு வருது..,
  
12.jpg

13.jpg

கோவிலின் வெளிப்புறம் ஒரு சின்ன கோவிலும், குதிரை சிலையும் இருக்கு. வெளியூர் போறவங்க தான் நினைச்ச காரியம் ஈடேற கற்பூரம் ஏற்றி கும்பிட்டு போறதை பார்க்க முடிஞ்சுது..,

அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பேசலாம்.., இப்போ வர்ட்ட்ட்ட்ட்ட்டா?!
8037EB78DDF59672A1FE983E43E79B6B.png
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருச்சிற்றம்பலம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

*ஏசுமத நிராகரணம்

		அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருக மாதி 
		யிறையவ னென்றா யோரீ யீன்றிட மலமீ தூருஞ் 
		சிறுபுழு விரையு றாதென் செய்குவை யதனை நோக்க 
		வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய். 			1 

		வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி 
		நேயமற் றெவர்கூற் றாய நிகழவதெ னுலகத் தந்நாட் 
		டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி 
		னாயகோ வாதி மாந்தர்க் கடங்கிய விதமென் கொல்லோ. 			2 

		சொல்லின னவர்க்கச் சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே 
		கொல்லமற் றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி 
		நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி 
		யல்லல்செய் திடலாற் றீயோ யறைந்தசொற் பழுதே யாகும். 			3 

(* ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யியற்றிய வீரமாமுனிவரென்னும் கிருஸ்துவரைக் கவிச் சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித் தெழுதியதாமென்பர்.)


(குறிப்பு :- இந்நூல் இப்போது அகப்பட்டிலது, அன்பர்கள் கண்டுதவின் வெளியிடலாம்.)

http://www.shaivam.org/tamil/sta_svp_easumadha_nirakaranam.htm



-- Edited by Admin on Saturday 11th of April 2015 07:12:24 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

ஏசு மத நிராகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

ஏசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூலாகும். இந்நூல் வீர சைவ இலக்கிய வகையைச் சார்ந்தது. சதுரகராதி என்ற நூலை இயற்றியமைக்காக கிறிஸ்துவர் வீரமா முனிவரைகண்டித்து சிவப்பிரகாசர் எழுதிய நூலாகும். [1]

http://paarvatheyan.blogspot.in/2012/09/blog-post_29.html

 

http://mapyourinfo.com/wiki/ta.wikipedia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

http://ta.sciencegraph.net/wiki/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

ஏசு மத நிராகரணம்

ஏசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூலாகும். இந்நூல் வீர சைவ இலக்கிய வகையைச் சார்ந்தது. சதுரகராதி என்ற நூலை இயற்றியமைக்காக கிறிஸ்துவர் வீரமா முனிவரை கண்டித்து சிவப்பிரகாசர் எழுதிய நூலாகும்.
This is an excerpt from the article ஏசு மத நிராகரணம் from the Wikipedia free encyclopedia. A list of authors is available at Wikipedia.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard