அண்மையில் ஒரு மடலாடற்குழு விவாதத்தில் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நண்பர் ஒருவர் எழுதினார் – “ நேற்றுதான் `Dogma’ எனும் படம் பார்த்தேன். அது கிறிஸ்தவ சமயத்தின் பின்நவீனத்துவ விமர்சனம் என்று காண்கிறேன். ஒரு சமயம் உலக அளவிற்கு பரவுகிறது என்றால் அதன் அடிப்படை அசைக்க முடியாத உண்மைகளைக் கொண்ட சத்யமதமாக இருக்க வேண்டும். இல்லை இழுபட்டு அழியும். இன்று கிறிஸ்தவத்திற்கு அந்த நிலைதான். அது `தத்துவங்களை` அடிப்படையாகக் கொண்டு அமையாமல், யார்,யாரோ சொன்ன கதைகளை வைத்து, தேவாலயம் எனும் மையம் செய்த நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாக நடக்கிறது. அங்கு `சிந்தி` என்பதை விட `நம்பு` என்பதே பிரதானம். `அறிவு` என்பது கீழ் போய் `மூடநம்பிக்கையே` முன்வைக்கப் படுகிறது. இந்த ஆங்கிலப் படம் இது பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது… ஒரு சொற்பொழிவிற்கு நெதர்லாந்து போயிருந்தபோது, கிறிஸ்துமஸ் கொண்டாட தேவாலயம் போனால், ஆள் வராமல் தேவாலயம் மூடியே கிடந்தது. அங்கெல்லாம், கிறிஸ்தவத்தை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. அது பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறது. அவ்வளவுதான்… இந்த நிலையை சரிகட்ட, தேவாலய நிறுவனம் புதிய சந்தையை எதிர்நோக்குகிறது. .. இந்தியா போன்ற நாடுகளில்தான் காசிற்காக சிறுநீரகத்தையே விற்கும் போது, காசிற்காக கட்சி மாறும் போது, காசிற்காக `மதம்` மாறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லையே? என்ற எதிர்பார்ப்பில் இச்சந்தை விரிவில் அது ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தோல்வியுறும்”.
அவருக்குப் பதிலளிக்கையில் நான் குறிப்பிட்டேன் – ”ஆமாம், நீங்கள் கூறியது போல மேற்குலகில் கிறிஸ்தவம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறது. அதை ஒரு enlightened மார்க்கமாக சிந்திக்கும் மக்கள் யாருமே அங்கு நினைப்பதில்லை. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்த விமர்சனங்களின் துளிகள் கூட வந்து சேர்வதில்லை என்பது தானே நிதர்சனம்? இங்கு ஊடகங்கள், அரசியல் அதிகார சக்திகள் எல்லாம் கிறிஸ்தவ அமைப்புகள் கையில் இருக்கிறது. ஒருபக்கம் அவை இந்த தேசத்தின் கலாசாரத்தின் மீதும், அதன் சமயங்கள், தத்துவங்கள் மீதும் அவதூறுகளையும், ஏளனத்தையும் பரப்பி வருகின்றன. இன்னொரு புறம், இதே கலாசாரத்தின் கூறுகளைத் திருடி, அவற்றின் மீது கிறிஸ்தவ முத்திரையைக் குத்த முயன்று கொண்டிருக்கின்றன. .. கிறிஸ்தவ பொய்மை இங்கு அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. ஆனால் கிறிஸ்தவத்தைப் பற்றிய நேர்மையான விமர்சனம், ஏன் பிரான்ஸ் போன்ற “கிறிஸ்தவ” நாடுகளிலேயே தங்குதடையின்றி பொதுத்தளத்தில் கிட்டும் விமர்சனம் கூட இந்தியாவில் கிட்டுவதில்லையே??”
சொல்லப் போனால், கிறிஸ்தவம் காலூன்ற முயன்ற ஆரம்ப காலங்களிலேயே, அது இந்தியாவில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருப்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த சீசன்பால்கு என்ற பாதிரியை தமிழறிஞர்கள் நேரடியாகவே எதிர்கொண்டு கிறிஸதவ மதத்தின் அடிப்படைகள் என்று சொல்லப் படும் கருத்துக்கள் குறித்து அறிவார்ந்த கேள்விகள் எழுப்பினர். நம் தரப்பில் அவற்றைப் பதிவு செய்யாததால், காலனிய வரலாற்றின் ஒரு பகுதியாக “ஹிந்து அக்ஞானிகளின் கேள்விகள்” என்ற முத்திரையுடன் அவை பாதிரியாரால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய “ஏசு மத நிராகரணம்” என்ற நூலின் பிரதி இப்போது அச்சில் இல்லை, மறைந்தே விட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்தர், சுவாமி விவேகானந்தர் தொடங்கி “சைவதூஷண பரிகாரம்” எழுதிய ஆறுமுக நாவலர் வரை இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்.
இந்தச் சூழலில், “Expressions of Christianity, with a Focus on India” என்ற தொகுப்பு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பிரசார நெடி சிறிதும் இல்லாமல், அதே சமயம் கசப்பான உண்மைகள் எதையும் மறைக்காமல் எழுதப் பட்ட பல அருமையான கட்டுரைகள் இதில் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
நூலின் அமைப்பும் சிறப்பாக உள்ளது.
கிறிஸ்தவத்தின் தொடக்கமும் ஆரம்பகால வரலாறும், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் முகங்கள், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் கிறிஸ்தவத்தின் முகங்கள், கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள், மேற்குலகில் கிறிஸ்தவத்தின் தேய்வு ஆகிய ஐந்து பகுதிகளின் கீழ் சிறியதும், பெரியதுமாக பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் எழுதிய 40 கட்டுரைகள் உள்ளன.
”கிறிஸ்தவம் தான் பீற்றிக் கொள்வது போல அச்சு அசலான மதம் கிடையாது. பழைய ஏற்பாடு ஏராளமான விஷயங்களை பழைய மெசபடோமிய, எகிப்திய மூலங்களில் இருந்து பெற்றது என்பது இப்போது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதே போன்று புதிய ஏற்பாடு தனது மையமான படிமங்களையும், நம்பிக்கைகளையும் அக்காலத்திய பன்முகப் பட்ட கிரேக்க கலாசாரத்திலிருந்தும் (Hellenistic – cosmopolitan culture), கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அப்போது பரவியிருந்த இந்திய மதங்களிடமிருந்துமே பெற்றது. .. குறிப்பாக, உபநிஷத- பௌத்த சிந்தனைகள் கூறும் முக்தி பற்றிய *தத்துவக்* கோட்பாடு, மறுபிறவி மற்றும் பிறவிச் சுழல் பற்றி ஏதும் அறியாத யூத பின்னணியில் நுழைந்து, ஒரு இறையியல்-நம்பிக்கை சார்ந்த கோட்பாடாக உருமாறியது தான் கிறிஸ்தவத்தின் கதிமோட்சம் (liberation) என்கிற கோட்பாடு. பண்டைக் காலத்திய பலதெய்வ வழிபாட்டின் மறைமுக-சுவடுகள் தவிர்த்து இந்தக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தை இஸ்லாம், யூதம் ஆகிய “ஆபிரகாமிய” மதங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது..”
– ”Christianity, a Man made Religion indebted to India” என்ற தலைப்பில் பெல்ஜிய அறிஞர் கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst)எழுதிய கட்டுரையிலிருந்து
இந்த அரிய கட்டுரையில், எல்ஸ்ட் கிறிஸ்தவத்தின் சடங்குகள், பண்டிகைகள், சமயக் கருத்துக்கள் உருவான விதம் பற்றி சுவைபட விளக்குகிறார். தன் இளமைப் பருவத்தில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றெல்லாம் இப்போது பிரசாரம் செய்யப் படும் “Jesus in India” என்கிற கருதுகோள் உருவாகி வளர்ந்தது பற்றிய முழுமையான சித்திரமும் இதில் உள்ளது.
கிறிஸ்தவத்தில் பெண்கள் (Women in Christianity) என்ற தலைப்பில் வரலாற்று அறிஞர் மிஷேல் டானினோ (Michel Danino) வின் கட்டுரை இன்னொரு முத்து. பெண்மையைக் கீழானதாக சித்தரிக்கும் ஆதியாகமம், செயிண்ட் பாலின் பெண்மை பற்றிய வசனங்கள், கத்தோலிக்க சர்ச் அதிகார பீடம் மதத்தின் பெயரால் ஏராளமான பெண்களைக் கொன்று குவித்த “சூனியக்காரி வேட்டைகள்” (Witch hunting), கிறிஸ்தவ இறையியலில் இன்று வரை தொடரும் பெண்மை மீதான அச்சம் ஆகியவை பற்றியது இந்தக் கட்டுரை.
ஹிட்லர் இன்று உலகத்தின் மிகப் பெரிய தீய சக்தியாகவும், மகா வில்லனாகவும், “கிறிஸ்துவுக்கு எதிரானவராகவும்” (anti Christ) மேற்குலத்தால் சித்தரிக்கப் படுகிறார். ஆனால் நாசிசத்தின் உருவாக்கத்திலும், யூத வெறுப்பிலும் கிறிஸ்தவத்தின் தாக்கம் மையமானது மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய கிறிஸ்தவ அதிகார பீடங்கள் நாசிசத்தை முழுமையாக ஆதரிக்கவும் செய்தன என்றும் சொன்னால் உங்களுக்கு வியப்பு ஏற்படுகிறது இல்லையா?? மேற்குலகில் நன்கறியப் பட்ட இந்த விஷயங்கள் இந்தியாவில் வெளிச்சத்துக்கு வரவே இல்லை. கலவை வெங்கட் எழுதியிருக்கும் “From the Holy Cross to the Holocaust” (என்ன அட்டகாசமான தலைப்பு!) என்ற இது பற்றிய கட்டுரை கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டியது.
”பின்னர் காரைக்காலின் பாதிரி (Father Coeurdoux) ஒரு பெரிய சுத்தியலை எடுத்துக் கொண்டு வந்தார். சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். சுத்தியால் உடைத்தார். பின்னர் விஷ்ணு மற்றும் பிற திருவுருவங்களையும் உடைக்குமாறு காப்பிரிகளுக்கும், மற்ற ஐரோப்பியர்களுக்கும் ஆணையிட்டார். சீமாட்டி (கவர்னர் மனைவி) பின்னர் பாதிரியிடம் சென்று அவர் இஷ்டப்பட்ட படி விக்கிரகங்களை உடைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ’ஐம்பது வருடங்களாக சாத்தியப் படாதிருந்த ஒரு விஷயத்தை சீமாட்டி நடத்திக் காட்டியிருக்கிறாள்; பழங்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த மகாத்மாக்களில் ஒருவர் தான் அவள் உருவில் வந்திருக்க வேண்டும்’ என்று பாதிரி சொன்னார்.
பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான். பிறகு அவர்கள் கோவிலுக்குள் செய்த அசிங்கங்களையும், வக்கிரச் செயல்களையும் என்னால் எழுதவோ சித்தரிக்கவோ ஒண்ணாது… அவர்களுக்கு இதனால் என்ன விளையுமோ எனக்குத் தெரியாது.. ஆனால் தமிழர்கள் பிரளயமே வந்து விட்டது என்று எண்ணினார்கள். பாதிரிகளும், கிறிஸ்தவர்களாகி விட்ட தமிழர்களும், கவர்னரும், அவரது மனைவியும் அவர்கள் முன்பு எப்போதுமில்லாதது போல சந்தோஷமடைந்தார்கள் … “
– சீதாராம் கோயல் எழுதிய ”பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம்” என்ற கட்டுரையிலிருந்து.
ஆனந்த ரங்கம்பிள்ளையின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு, அனைத்து சாதி மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பாண்டிச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயம் பிரெஞ்சு காலனிய அரசாட்சியாளர்களால் தகர்ப்பட்ட வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.
தூய்மை, அன்பு, சேவை இவையே இந்தியாவில் கிறிஸ்தவத்தின் முகங்கள் என்று தீவிர பிரசாரம் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது. பாதிரி, மிஷநரி, பிஷப் எல்லாம் போய் இப்போது தமிழில் “அருட்பணியாளர்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். திரைப்படங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாவும் இத்தகைய சொல்லாட்சிகள் பரப்பப் பட்டு பிரசாரம் செய்யப் படுகிறது. எப்பேர்ப் பட்ட கொடுஞ் செயல்களையும், பயங்கரவாதத்தையும் பிரசாரம் மூலமாகவே வெள்ளைச் சுண்ணம் பூசி ம்றைத்து விடலாம் என்று காலனிய, சர்வாதிகார சக்திகள் கருதுவது போலவே கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் கருதுகின்றன.
சொல்லப் போனால் கிறிஸ்தவ மத மிஷநரி அமைப்பு முழுவதுமே காலனிய அதிகார மயமாக்கலின் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பல வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆவணப் படுத்தியுள்ளனர். ஆசிய காலனியாதிக்கத்தில் மிஷநரிகளின் அபரிமிதமான பங்கு பற்றி கே.எம். பணிக்கர் எழுதிய Christian Missions in Asia என்ற விரிவான கட்டுரையும் இந்த நூலில் உள்ளது. இந்தியாவின் கோவா கடற்கரை தொடங்கி பர்மா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் என்று ஆசியா முழுவதும் கிறிஸ்தவ மிஷன்கள் ஒவ்வொரு நாட்டிலும் நுழைந்து எப்படி அதன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என்பது பற்றிய துல்லியமான சித்திரம் அந்தக் கட்டுரையில் இருக்கிறது. (இதே பணிக்கரின் நூலின் அடிப்படையில் திண்ணை இதழில் புருஷ் அவர்கள் ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும் எனகிற விரிவான கட்டுரையை முன்பு எழுதியிருக்கிறார்).
கோவாவின் புனித விசாரணைகள், அதன் பின்னணி, அங்கு இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள் பற்றிய இரு முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. ஆல்ஃபிரடோ டிமெல்லோ (Alfredo De Mello) வின் “Pouncing on Goa”. ராதா ராஜன் எழுதிய ”Antecedents of the Goa Inquisition”.
”கிறிஸ்தவத்திற்கு அறிவுலகம் விடுத்த சவால்கள்” என்ற பகுதியில் தொகுப்பாசிரியர்களின் அயராத உழைப்பும், பரந்த வாசிப்பும், கூரிய பார்வையும் காணக் கிடைக்கிறது. ராபர்ட் இங்கர்சால் (Heretics and Heresies), பெட்ரண்ட் ரஸ்ஸல் (Why I am not a Christian) ஆகிய சிந்தனையாளர்கள் கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதிய ”கிளாசிக்” கட்டுரைகளை சேர்த்திருப்பது நல்ல ரசனை. கலிலியோ, மார்க் ட்வெய்ன் உள்ளிட்ட மேற்குலகின் பல முக்கிய சிந்தனையார்களின் மேற்கோள்கள் களஞ்சியத்தை அளித்திருப்பது அருமை.
கிறிஸ்தவம் உண்மையிலேயே உண்மையாக இருக்கவேண்டும் என்று யாராவது விரும்புவார்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் அதன் புனிதநூல் மிக வெளிப்படையாகக் கூறுவதன் அடிப்படையில் விசுவாசிகளாக இல்லாதவர்கள் நிரந்தர நரகத்தில் தண்டிக்கப் படுவார்கள்.. இந்தப் பட்டியலில் என் அப்பா, என் சகோதரர் மற்றும் என் உற்ற நண்பர்கள் எல்லோருமே வந்து விடுகிறார்கள்! இது முற்றிலும் கண்டனத்திற்குரிய கோட்பாடு இல்லாமல் வேறென்ன? (.. and this is a damnable doctrine).
– சார்லஸ் டார்வின்
கங்கையும், காவிரியும், இமயமும், பொதிகையும் பெருங்காடுகளும் சூழ்ந்த நிலப் பரப்பில் உருவாகியவை இந்து, பௌத்த, சமண மதங்கள். மாறாக அங்கங்கு சில சுனைகள் மட்டுமே கொண்ட வறண்ட பாலை நிலத்தில் தோன்றியவை ஆபிரகாமிய மதங்கள். இயற்கையின் இந்த விசித்திரமே இந்த இரு மத-கலாசாரங்களின் உலகத்தைப் பற்றிய பார்வையில் பங்கு வகிக்கிறதோ? பாரத மதங்கள் பன்முகப் பட்ட தன்மையும், இயற்கையின் கொடைகளைப் பற்றிய பிரக்ஞையும் கொண்டவையாக இருக்க, செமித்திய மதங்கள் ஒற்றைப் பார்வையுடனும், இயற்கையின் வதைக்கும் முகத்தையே அதிகம் கண்டவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சிந்தனை இழையில் தொடரும் லோகேஷ் சந்திராவின் Theo Diversity and Human Values என்கிற சுவாரஸ்யமான கட்டுரை மதங்களின் உருவாக்கத்தில் இயற்கை மற்றும் பூகோள அமைப்புகள், வாழ்க்கை முறைகள் உருவாக்கும் பங்கு பற்றி ஆராய்கிறது.
இந்த அருமையான நூலை உருவாக்கியிருக்கும் பரமேஸ்வரன், அரவிந்தன் நீலகண்டன் ஆகிய தொகுப்பாசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தின் கருத்தியலையும், வரலாற்றையும் பற்றிய முதல் தொகுப்பு, இதைத் தொடர்ந்து ”Christianity: Proselytism and Conversion: with a focus on India என்ற தலைப்பில், நடைமுறையில், சமகாலத்திய கிறிஸ்தவத்தின் மதமாற்ற செயல்பாடுகள் பற்றிய இன்னொரு தொகுப்பும் வெளிவரப் போகிறது என்று முன்னுரை கூறுகிறது. அதையும் உடனடியாக அவர்கள் வெளியிடவேண்டும். இந்து அறிவியக்கத்தின் வளர்ச்சிக்கு இந்த இரு தொகுப்புக்களும் சிறந்த துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
——————
Expressions of Christianity With a focus on India
Paperback – 600 Pages (Year: 2007)
Vivekananda Kendra Prakashan Trust /Suruchi ~ ISBN: 8189248847
இணையம் மூலம் இங்கே (வெளிநாடு) மற்றும் இங்கே (இந்தியா) வாங்கலாம்.
சென்னையில் கிடைக்குமிடம்:
விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
தொலைபேசி: 44-2844-0042
மின் அஞ்சல்: vkpt@vkendra.org
இணையதளம்: http://www.vkendra.org
//glady -15 September 2009 at 10:53 am
வரலாற்றுரீதியாக “இயேசு” இல்லை என்பதை பைபிளுக்கு வெளியிலிருந்து மட்டும் சொன்னால் நலம்;
காகிதமும் அச்சு இயந்திரமும் வந்தபிறகு வந்ததையெல்லாம் விட்டுவிட்டு
பைபிளின் சமகாலத்து ஆதாரங்களை மட்டும் முன்வைக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்;//
நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் – ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன்.
யூத புராணக் கதைகள் பற்றிய அகழ்வாய்வு உண்மைகளை தொகுத்துக் கொடுக்கிறேன்.
//josephdaniel -22 September 2009 at 12:17 pm
தள நண்பர்களே
தேவிபிரியா சாலொமொன் நாத்திகரா அல்லது கிறிஸ்தவ எதிர்ப்பாளரான இந்து மத பற்றாளரா. ஏனெனில் நாத்திகராக இருப்பின் அவர் அனைத்து சமய நம்பிக்கைகளையும் எதிர்ப்பவராக இருப்பார். கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் நோக்கம் மாதிரியே இந்து மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் குறித்து குதர்க்க வாதங்களையும் எடுத்து கூற அவரால் நிச்சயம் முடியும்.//
சகோதரரே இந்த போஸ்டிங்கிற்கு பதிலாய், சுவிசெஷங்களில் ஒரு இயேசு அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட இயேசுக்கள் உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்ட, எழுந்த கேள்விகட்கு கொடுக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஏனோ உங்களை சுடுகிறது.
//joseph -10 September 2009 at 4:18 pm
நியாயத்தீர்ப்பை பற்றி பைபிளில் தெளிவாகத்தான் போட்டிருக்கிறது, இயேசு என்ன சொல்லியிருக்காருன்னு தெரிஞ்சுக்கனுமின்னா நான்கு சுவிஷேஷங்களையும் படித்து பாருங்கள். நியாயத்தீர்ப்பு ஒருமுறைதான் நிகழும்//
நான் கூறிய கருத்துக்கள் ஆதாரங்களோடு தவறு என்னுங்கள், நான் ஏற்கிறேன், அல்லது என் ஆய்வின் நீளத்தை இன்னும் நீட்ட வேண்டும் என்பதை அறிவேன்.
நான் ஒரு முனைவர் பட்ட மாணவன், இஸ்ரேல் பற்றிய ஆய்வு என் களம்.
என் மத நம்பிக்கை- நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் உள்ளது, ஆனால் நம் செயல்களின் வினைகளின்படி தான் நடக்கும், மேலுள்ள இறைவன் நம் வினைக்கும் ஏற்ப மீண்டும் மீண்டும் பிறக்க வைத்து புவியை அனுபவிக்க வைக்கிறார்.[Agnostic]
எல்லா மதப் புராணங்களும் ஆய்வுக்கு உரியவையே, என்னை பைபிளை ஆராயச் செய்ததும் எழுத் வைப்பதும் அவ்விறைவனே.
இஸ்ரேல் நாட்டு அகழ்வாய்வுகளைவிட பாரத்தில் கண்டுள்ள அகழ்வாய்வு பல 1000 ஆண்டு முன்பே நாகரீக மேம்பாடு; என்னை உங்களை போல் நம் மூதாதயர் பல ஆயிரம் ஆண்டுகளாய் போற்றி காத்து வந்துள்ளதை ஒதுக்காமல் மதிக்கவே செய்ய வைக்கிறது.
நீங்கள் கற்பனையாக இஸ்ரேல் பற்றி புராண அடிப்படையில் நம்பிய ஊகங்களை (மூடநம்பிக்கைகளை} பற்றிய பல பைபிள் அறிஞர்கள் கூறியவையே தரப் பட்டுள்ளது. நீங்களே பல கேள்வி எழுப்பினீர்; நான் பாதிக்குத்தான் பதில் தந்துள்ளேன். மீதி அடுத்த சில நாட்களில். என் பார்வை வரலாற்று நோக்கு மட்டுமே.
இதுவரை தமிழ் ஊடகங்களில் கிறிஸ்துவ மததின் வரலாற்று ஆய்வு பின்னணியை விமர்சனத்துக்கு ஆட்பட்டதே இல்லை. அதுதான் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
நான் எல்லோரையும் சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
//Ashok kumar Ganesan – 20 September 2009 at 12:32 pm
Dear Devapriya Solomon,
//இயேசு போற்றத்தக்கவரா?//
Jesus is very much to be appriciated. One of the very important thing that Jesus was teaching is humbleness. And here Jesus knew that woman is humble. And just to show the humbleness of the woman to the world, Jesus has asked such a question. See how happy Jesus was when her humbleness is proved.
//.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.//
//As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.//
Did these people met Luke anytime? Just because some scholar (in your eyes) writes some crap, you need not beleive that.//
மேலே சாப்பிடும் பொழுது வாயிலிருந்தும் கையிலிருந்தும் விழும் எச்சையாக சாப்பிடுகிறேன் என அப்பெண் தாழ்வு காட்டுகிறார் அன்றி இயேசுவிடம் அருவெறுக்கத்தக்க இனவெறி தான் காணகிறது.
உலகில் பிறந்த ஒவ்வொருமனிதனும் கடவுளால் படைக்கப் பட்ட கடவுளின் மகன்கள். அதில் தன் மதமில்லாதவர் நாய் என்பவர் – பணிந்தாரா? என்ன சொல்கீறீர்கள்.
இன்றும் யூதர்கள் ஏசு உட்பட தினமும் சொல்லும் தினசரி ஜெபம்.
I quote from little Sedur (Jewish prayer book).
The exact prayer is this:
“Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
“Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”
This prayer is said every morning by millions of Jews around the world.
இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.
இந்த ஒரு இன வெறிக்கு ஆதாரமில்லத கற்பனை கதைகளான் தேர்ந்தெடுக்கப் பட்டவர் -எகிபிதிலிருந்து யாத்திரை என்ற வரலாற்று பொய்களை என்றும் பைபிள் கொண்டுள்ளதால் தான்.
josephdaniel 19 September 2009 at 2:23 pm
இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், COMEDY OF ALL TIMES
பைபிளை சர்ச்ச் சிறையிலிருந்து மொழி பெயர்த்துத் தந்த திண்டேல் சர்ச்சினால் உயிரோடு சிலுவையில் கொல்லப் பட்டு பின் கொழுத்தப் பட்டார்.
விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.
No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
Page-266 The Religious World.
josephdaniel September 2009 at 3:02 pm
நீங்கள் சொல்லியுள்ள புத்தகங்களை எழுதியவர்கள் எதை ஆதாரமாக வைத்து இது மாதிரி எழுதியுள்ளார்கள்???
பைபிளை ஆதாரமாக வைத்து எழுதியுள்ளார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டில் பக்கத்து நாட்டுடன் வாணிபம் பற்றியோ கடல் வாணிபம் பற்றியோ இல்லை. உலகின் பல முக்கிய வாணிபப் பொருட்களுக்கு உள்ள பெயர்களில் தமிழ் – வடமொழி என்று பார்க்கலாம். எந்த ஒரு நாட்டு பழைய இலக்கிய மொழியிலும் எபிரேயத் தாக்கம் இல்லவே இல்லை.