மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.
போப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் – “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.
போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.
போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் – “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.
ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.
“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.
ஜி.யு. போப் அவர்களின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதோடு திருவாசகத்தை மொழியாக்கம் செய்தபோது அவரது அணுகுமுறை என்ன, நோக்கங்கள் என்ன என்பதையும் ஆய்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள் முத்துக்குமாரசுவாமி ஐயா. மிக்க நன்றி.
ஹைதராபாத் நகரில் டேங்க் பண்ட் சாலையில் தியாகராஜ சுவாமிகள், பத்ராசல ராமதாஸ், அன்னமாசாரியர் ஆகிய பக்த கவிகளுக்கு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். பெங்களூரில் பசவேஸ்வரர், கனகதாசர் ஆகிய சைவ, வைணவ குருமார்களின் சிலைகள் உள்ளன..
தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா? அவரது புனித நினைவைப் போற்றும் வகையில் அரசு ஏதாவது செய்திருக்கிறதா? மாறாக, இன்று தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் உட்பட திராவிடக் கட்சி அரசியல்வாதிகளில் பலர் மாணிக்கவாசகரையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் ஏளனம் செய்தும், கிண்டலடித்தும், அவமத்திதுமே மேடைகளில் பேசி வந்திருக்கிறார்கள்! இன்னும் பேசி வருகிறார்கள்.
”மொழிபெயர்த்த” வெள்ளைய மிஷநரிக்கு ராஜ மரியாதை! (அதுவும் தவறான அணுகுமுறையுடனும், பிழைகளுடனும் உள்நோக்கத்துடன்மும் மொழிபெயர்த்தவர்) ஆனால் மூலநூலை எழுதிய சமயக் குரவருக்கு, பேரருளாருக்கு அவமதிப்பு! தமிழர்களின் பகுத்தறிவு உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது.
”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள். போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்! சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.
ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.
ஜி.யு.போப் கல்லறை புகைப்படம்:
http://www.flickr.com/photos/93039296@N00/759184087/
அந்தக் கல்லறைக்கு அருகில் இருக்கும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தத்துவ ஞானியின் கல்லறைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் அதே புகைப்படக் காரர் படமெடுத்துப் போட்டிருக்கிறார் (பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்).
தமிழக கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு இஷ்டதெய்வமல்லவா போப்? அதனால், அவரது கல்லறையை நன்கு போற்றிப் பாதுகாக்கிறார்கள். அவர்களது நன்றியுணர்வும், தங்களுக்காக உழைத்தவர்களது நினைவைப் போற்றும் மாண்பும் பாரட்டுக்குரியவை.
ஜடாயு அவர்களே,
தங்களது பல படைப்புகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.
தங்களது கேள்வி:
தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா?
எனது பார்வை:
தயவு செய்து மாணிக்கவாசகப் பெருமானையும், போப்பையும் ஒப்பிடற்க.
மாணிக்கவாசகப் பெருமான், நாயன்மார்களில் சேர்க்கப் படாவிட்டாலும், சமயக் குறவர் நால்வரில் ஒருவராக, நமது சிவாலயங்கள் அனைத்திலும் இறைத்தொண்டராக நமக்கு அருள்பலித்துக்கொண்டிருப்பவர். அறுபத்துமூவர் உற்சவம் எங்கு எடுப்பினும், அங்கெல்லாம் எழுந்தருளுபவர்.
சிவச் சன்னதியில் ஓதுவார் மூர்த்திகள் திருப்பதிகங்கள் பாடும்போதெல்லாம் அவர்களது நாவில் நர்த்தனம் செய்பவர்.
போப்புடன் நோக்குங்கால், நமது “அரசு” (அரசியலார்) செய்யாதது தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயருக்குச் சிறப்பு செய்யாதது, மகத்தான துரோகமாகும். தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயர் அவர்கள் புறநானூற்றைக் குப்பைகளாய்க் கிடந்த குவியல்களிலிருந்து எடுத்து, இன்றைய எழுத்து வடிவில் பதிப்பித்திருக்காவிட்டால், தற்போதைய (தம்மைத் தாமே நியமித்துக்கொண்ட) “தமிழினத்தின் தலைவர்” கருணாநிதி அவர்கள், புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சியை மெச்சி நீண்ட கட்டுரை எழுதிப் புகழ் அடைந்திருக்க முடியாது. கலைஞர் என்ற அடைமொழியையும் அடைந்திருக்க முடியாது. ஆனால் அவரோ, தமிழ்த்தாத்தாவின் நூற்றாண்டு பிறந்த அன்று தாம் முதல்வராக இருந்தும், தமிழ்த் தாத்தாவின் திருவுருவப்படத்துக்குக் கூட மாலையிடவில்லை. அண்ணா நூற்றாண்டு கொண்டாடும் அரசு, கடந்த ஓராண்டாக “தமிழ்த்தாத்தா” என்ற சொல்லைக்கூட உச்சரிக்கவில்லை. ஏனென்றால், வீரமணி, அன்பழகன், கருணாநிதி உள்ளிட்டோரின் நோபல் பரிசுக் கண்டுபிடிப்பு தமிழ்த்தாத்தா ஒரு தமிழரல்லர் !!! போப்போ பச்சைத் தமிழர் !!!
உமாசங்கர் ஐயா, உ.வேசாவுக்கு உரிய மரியாதை செய்யாத அவலத்தையும் கூறியதற்கு நன்றி. கோடிக் கணக்கான தமிழர்கள் நெஞ்சில் தமிழ்த் தாத்தா வாழ்கிறார்.
கேரளத்தின் கம்யூனிச அரசே ஆதி சங்கரர் பெயரில் காலடியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவியது, அந்த வளாகத்தில் அவரது சிலை கூட உள்ளது என்று நினைக்கிறேன். அப்போதைய கேரள முதல்வர் ஈ,.எம்.எஸ் அந்தத் திறப்பு விழாவில் ஆதிசங்கரரைப் போற்றினார்; கேரளத்தின் தத்துவ ஞானத்தின் அடையாளமாக சங்கரரைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.
நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் நாம் ஆலயத்தில் வணங்கிப் போற்றுகிறோம் தான்! அது மரபு, பாரம்பரியம். ஆனால், அது போதும், பொது இடங்களில் அவர்களது திருவுருவங்கள் அவசியமில்லை என்ற பார்வை சரியானதல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். ஏனென்றில், இவர்கள் சமயாசாரியர்கள் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின், பண்பாட்டின் தலைசிறந்த அடையாளங்களும் ஆவார்கள்.
நமது உண்மையான கலாசாரம் வீதிகளிலும் உலா வரவேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் ஆயிரம் ஆண்டு பழைய கோயில்கள் படைத்த ஊர்களில், முச்சந்திகளில் கலையுணர்வும் இல்லாமல், காட்சியழகும் இல்லாமல் கைவிரலை நீட்டிக் கொண்டும், நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருக்கும் அரசியல் இனவெறி கரும்பூதங்கள் தான் இந்த மண்ணின் அடையாளம் என்ற எண்ணம் இங்கு வாழும் இளைய தலைமுறைக்கும், இங்கு பயணிகளாக வரும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்! அதனை நாம் தடுக்க வேண்டும்.
எனவே இந்தக் காரணம் கருதியாவது, தெய்வீக உன்னதங்கள் தெருவுக்கு வரட்டும்.
//திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//
நெசம்மாவா? முடியல சாமி. ஆண்டவா! (நீ இருந்தால்) இந்த டேனியலை மன்னிக்கவும்.