New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சைவமும்சமஸ்கிருதமும்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சைவமும்சமஸ்கிருதமும்
Permalink  
 


சைவமும்சமஸ்கிருதமும்

முதல் நூல்

 
சேனாவரையமும், நன்னூல் விருத்தியும் தமிழ் இலக்கண நூலரைகள். அவற்றுள் சேனாவரையும் ‘வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது’ என்றது. விருத்தி ‘ஆரியச்சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொது’ என்றது.  அதனால் சம்ஸ்கிருதம் பாரததேசத்தின் பொதுமொழி, எல்லா மகாணங்களுக்கும் சமமாக வுரியது. தமிழகத்துக்கும் அதுவே யென்பது சித்திக்கிறது.
 
இருக்கு முதலிய நான்கும் வேதங்கள், காமிக முதலிய இருபத்தெட்டும் சிவாகமங்கள். அவை முதன் முதல் அம்மொழியிலுளவாயின. அவை முதல் நூல்கள். அவற்றை யாக்கிய முனைவனார் பரமசிவனார். அதுபற்றி அம்மொழி சைவசமயத்துக்கு விசேடமாகவும் உரியதாயிற்று. ‘ஆரியத்தோடு செந்தமிழ்ப்பயனறிகிலா வந்தகர்’, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றது திருமுறை.
 
அம்முதல் நூல்கள் சைவசமயத்துக்குச் சர்வபிரமாண சாத்திரங்கள். மந்திர ‘மறைநாலுந் தம்பாட் டென்பர்’, ‘மிக்க வேத மெய்ந்நூல்’, ‘தெருளு நான்மறை’, ‘பண்டாய நான்மறை’, ‘முடிவில்லா வோத்து’, ‘சுருதிமறை நான்கான செம்மை’, ‘ஆரணம் பொழியும் பவளமாய்’, ‘வைதிகத்தின் வழியொழுகாதவக் கைத்தவம்’, ‘மறைவழக்க மிலாத மாபாவிகள்’, ‘பதிக நான்மறை’ , ‘இருக்கு நான்மறை’, ‘தொல்லிருக்கு மறை யேத்துகந்து’, ‘சந்தோக சாமமோதும் வாயான்’, ‘வேதவேதாந்தன்’, ‘ மறையீறறியா மறையோன்’, ‘சுருதி சிரவுரை’, ‘வேத விழுப்பொருள்’, ‘வேதாந்த நிலைக்குறை’, ‘தெய்வ நான்மறைகள் பூண்ட தேரானை’, ‘மந்திமுந் தந்திரமுந் தாமே’, ‘அண்டர் தமக்காகமநூல் மொழியும்’, ‘அரவொலி யாகமங்கள றிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்ணெலாம்வந் தெதிர்த் திசைப்ப’ என்றது திருமுறை.
 
அவ்வடிகளில் அம்முதனூல்களின் பெயர்கள், அடைகள், சரிதைகள் முதலிய வுள. அவற்றை நோக்குக.  அம்முதனூல்களைப்பற்றிய துதிகள் புலனாம்.  வைணவமுந்தமிழ் நாட்டுச் சமயமாம். சிலர் கருத்தது. அச்சமய நூல் நாலாயிரப்பிரபந்தம். அதுவும் ‘இருக்கெசுர் சாமவேத நாண் மலர்…..’ என்று பெயர் வரிசை கூறித்துதித்தது.
 
சைவ விதி
 
மக்கள் அரசின் வழியாகத் தமக்கெனச் சட்ட திட்டங்களை வகுத்துகொள்வர். அவை இலெளகிக விதி, அவ்வகுப்பில் காலதேசங்களுங் கவனிக்கப்படும். ஆதலின் அவ்விதியை வசதிப்படி மாற்றுவர், நீக்குவர். வேறும் வகுப்பர் அவர். அது குற்றமாகாது. ஏன்? உலக சுகமே அதன் குறிக்கோள்.  இன்னொன்று சமய விதி. அஃதிங்குச் சைவ விதி. அதை வகுத்தவர் பரமசிவனார். அது தான் அம்முதனூல்கள்.  சைவசமூகம் சைவாலாயம் சைவாதீனம் எல்லாம் அந்நூல்களைப் போற்றுக, விசுவசிக்க, அவற்றின் வரம்புக்குள் அடங்குக. அவற்றில் விதித்தவாறே ஒழுகுக. அவ்வளவே அவற்றின் கடன்.‘மெய்ச்சுருதி விதிவழியோர் தொழும்’ என்றது திருமுறை. காலம் தோறும் இவ்வுலகில் சைவ மக்கள் வருகின்றனர், வாழ்கின்றனர், மாள்கின்றனர். அவ் வக்காலத்து அவர் தொகை கைம்மண்ணளவே. ஆனால் உலகம் அழியும்.  அதுவரை எதிர்காலத்திலும் அவர் வந்து போய்க் கொண்டிருப்பர்.  அத்தனை பேரையுஞ் சேரக் கணக்கிடுக. அத்தொகை உலகளவிற்கும் அதிகமாகும். சைவ விதி அவர்க்கும் உரியது.  அதை அக்கைம்மண்ணளவினர் தம் காலமிட முதலியவற்றிற்கு கேற்ப மாற்றலாமா? அதற்கவர் யார்? அவ்வுலகளவினர்க்குப் பிரதிநிதிகளா? மேலும் அவ்விதிக்குக் குறிக்கோள் வீடுபேறு. காலம் இடம் முதலியவற்றால் அவ்விதி பாதகமடையாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

தமிழகத்தில் தமிழரானவருஞ் சைவசமயத்தினரல்லர்.  அச்சமயத்துக்குப் பரமதுரோகிகளாயுள்ள தமிழரு மிருந்து வருகின்றனர். அவருங் கணக்கற்றவர். அவரிருப்புந் தொன்று தொட்டது. ஆனால் சைவ சமயத்தினர் அனைவருந் தமிழரே.  அவருள் தமிழை வெறுப்பர் யாருமிலர். அதனை விளங்கவைத்த புலவர் பெருமக்கள் பலர். அவரை யெண்ணுக. பெரும் பகுதியனர் சைவரே. அது தெரியவரும். அவர் தமிழை வளர்ப்பார். ஆனால் அத்துரோகத் தமிழரின் துரோகச் செயலும் அவருக்குத் தெரியும்.  அதற்கு இரையாமாறு தம் சமயத்தை அவர் விட்டுக்கொடார்.

 

 
நாத்திகத் தமிழர், சிரத்தையின்றி ஆத்திகம் பேசுந்தமிழர், சம்ஸ்கிருதத்தைப் பழிக்குந் தமிழர், பார்ப்பனரைப் பகைக்குந் தமிழர், எந்த ஆத்திக சமய நூலிலும் சிறிது பயிற்சியுமில்லாத தமிழர், தாழ்த்தப்பட்டவரென்ற வகுப்பாருள் சைவமாதி சமயங்களை யாசரித்தால் உலகில் முன்னேற முடியாதென நம்பிக்கையிழக்குந் தமிழர், எம்மதமுஞ் சம்மதமென்னுந் தமிழர், தமக்கென எதுவுமிலாத தமிழர் எனச் சில தமிழருளர்.  அவரெல்லாங் கூடினர். அஃதொரு தமிழர் கூட்டம்.

 

 
சில காலமாகத் தமிழ்ச் சைவருட் சிலரும் அக்கூட்டத்திலகப்பட்டனர். அவர் நிலையென்ன? அவர் தமிழ்ச் சைவ நூற்களைப் படிப்பர். அவற்றிலுள்ள தமிழைச் சிறிது சுவைப்பர். ஆனால் சைவத்தை அறவே உமிழ்ந்து விடுவர். அவர் திருநீறு பூசிக்கொள்வர், உருத்திராக்கந் தரித்துக்கொள்வர், சமயப் பிரசாரமுஞ் செய்து வருவர். அப்பிரசாரத்திற் சமயமிருக்கும்.  தமிழ்ச்சமய மிருக்கும், ஆனாற் சைவசமயமாத்திரமிராது.

 

 
தமிழ் ஒரு மொழி. சைவம் ஒரு சமயம், ‘மொழி வேறு’, சமயம் வேறு. அவ்வேறு பாட்டை அவர் விடுவர். சைவமென்று சொல்லுதற்கான சந்தர்ப்பங்கள் பல நேரும். அப்போதெல்லாம் தமிழென்றே அவர் சொல்வர். அது சகவாச தோஷமாகும்.  சைவசமூகம் சைலாயம் சைவாதீனம் முதலிய வெல்லாம் சைவத்தி னுடைமை, சைவத்துக்கே யுரியன. ஆனால் அவை தமிழனுடைமை, தமிழுக் குரியன என்பாரவர். அத்துரோகத் தமிழரின் கை வலுப்பெற அது ஏதுவாகும்.  மொழிப்பொதுமைபற்றி அவ்வுடைமையையாள, அதிற் பங்குபெற அவர் முற்படுவர். சைவ சமயத்துக்கு அது பெருந்தீங்காகும்.

 

 
அச் சைவருக்கு ஒரு குலத்தில் வெறுப்புண்டு. சம்ஸ்கிருதம் அக்குலத்துக்கே யுரியதாம்: அப்படி அவர் மயங்கினர். அதனால் அம்மொழியும் அவருக்குக் கசந்தது. அக்கசப்பே அவரிடம் தமிழ்ப் பற்றாயிற்று. அது நீண்டது. வேதாகம நிந்தையிலும் அவர் இறங்கினார். அந்நூல்கள் சைவ சமயத்துக்குப் பிரமாணவரம்பா யிருந்து வருவன. அவ்வரம்பை யழிக்க அவர் முந்துகிறார்.  கற்புவரம் பழிந்தாள் ஒருத்தி, அவளோடு வாழ்கிறான் அவள் கணவன். அவனால் இல்லறத்தைச் சரியாய் நடத்த முடியுமா?  அதன் பயனை அடைய முடியுமா? அப்படியே பிரமாண சாத்திர வரம்பழிந்த சைவம் சைவமாகாது. அதை வைத்துச் சைவ சமூகம் வாழ முடியாது. வாழ்வதாற் பயனுமில்லை. சைவத் துரோகிகளின் செயலே உருப் பெறும். அதற்கு அவ்வரம் பழிப்பே முதற்படி. ஆகையால் அச்சைவரிடம் சைவசமூகம் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இனி அச்சைவர் இந்தக் கட்டுரையில் நவீனர் எனப்படுவர்.

 

 
தமிழ் மந்திர மோகம்

 

 
ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாகாண மொழியுண்டு. ஒரு மாகாணத்தில் சமபலமுடைய இரண்டு மூன்று மொழிகளும், மிகச்சிறிய அளவில் வியாபித்த மொழிகளுமிருக்கலாம். பாரத தேசத்தில் மாகாணந்தோறும் சைவாலயங்கள் பல. அவற்றில் பிரதிட்டை, உற்சவம், அர்ச்சனை யாதிய நடைபெறும். அப்போது மந்திரங்கள் ஓதப்படும். அவை சம்ஸ்கிருத வேதாகமங்களி லுள்ளன. வேறெம் மாகாணத்தாரேனும் தம் மாகாண மொழியில் அம்மந்திரங்க ளிருக்கவேண்டுமென விரும்புகின்றனரா? கிளர்ச்சி செய்கின்றனரா? தமிழகத்தில் மாத்திரம் அந் நவீனர் தமிழ் மந்திரங்கள் வேண்டு மென்கின்றனர். தமிழில் மந்திரங்களிருந்தால் அவற்றை எடுத்தாளலாம். இல்லா விட்டால் சிருட்டித்தாளலாம் என்கிறா ரவர். அவரும் இரு வகையினர்.

 

 
சம்ஸ்கிருத மந்திரங்களை அறவே நீக்குக என்பர் ஒரு வகையார்.  வழக்கத்திலுள்ள சம்ஸ்கிருத மந்திரங்களு மிருக்கட்டும், அவற்றோடு தமிழ் மந்திரங்களையுஞ் சேர்த்துக் கொள்க என்பர் இன்னொரு வகையார். ஒட்டகம் கூடாரத்தை ஆக்கிரமித்தது.  அராபியன் வெளியில் தள்ளுண்டான். அக்கதை பிரசித்தம்.  இப்பிந்தியார் செயல் அக்கதை போலவே முடியும். ஆகையால் இவர் அம்முந்தியாருக்கு மறைமுகத் துணைவரே. தமிழ் மந்திரப் பற்றென்பது ஒரு மோகம். அது அந் நவீனரைப் பீடித்தது.  தமிழவைணவராதி பிறசமயத்தாரு முளர். அவரையும் அது தொட்டதோ என்னவோ?

 

 
தமிழ் மக்களுக்குச் சம்ஸ்கிருத மந்திரங்களின் பொருள் விளங்காது. ஆகையால் தமிழகச் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களே வேண்டும். அவர்க்கு அவற்றின் பொருள் விளங்கும்.  அதனால் மனங்கலந்த் பக்திவழிபாடு கூடும். நாத்திகந் தொலையும். இவை அந்நவீனர் கூற்று. அது பற்றிச் சிறிது ஆராயலாம்.

 

 
பெயர்ப்பு மந்திரங்கள்

 

 
சம்ஸ்கிருத மந்திரங்களைத் தமிழிற் பெயர்த்து அப்பெயர்ப்புக்களைத் தமிழ் மந்திரங்களெனக் கொள்க. இப்படிக் கூறுவாரும் அவருளிருக்கின்றனர். மந்திரமென்ற பதமே சம்ஸ்கிருதம். மனனம், திராணம் என்பவை சேர்ந்தன.  அப்பதந்தோன்றியது. நினைப்பவரைக் கரை சேர்ப்பது என்பது அதன் பொருள். அப்பதத்தின் தமிழ்ப் பெயர்ப்புச் சொல்லே இன்னுங் காணப்படவில்லை. அது கிடக்க. இனி அம்மந்திரங்களைப் பெயர்த்துக் கொள்ளட்டும். அம்மூல மந்திரங்களை என் செய்வது? ஒதுக்கிவிடுவதா? அது நன்றிகெட்ட செயல். மேலும் பெயர்ப்புக்கள் சரியானவையென்று எப்போதும் நம்பப்படல் வேண்டும். அதற்காக அம்மூலங்களைப் போற்றி வைத்தல் அவசியம். இன்றேல் அன்னிய சமயிகள் திரிவு செருகல் நீக்கல் என்பவற்றைச் செய்வர். அம்மூலங்கள் கெடும்.  அப்பெயர்ப்புக்களும் நம்பிக்கையிழக்கும். இன்னும் அவ்விரு மொழிப் பயிற்சியும் வேண்டும். இன்றேல் பெயர்ப்பும், மூலங்களைப் போற்றிக் கோடலும் இயலா.

 

 
ஏகாக்கரம், பஞ்சாக்கரம், ஷடக்கரம், அஷ்டாக்கரம், நவாக்கரம், ‘மிக்கவா கமத்தாற் பூசை விளைந்தெழுந் தொன்றிரன்டு – தக்கநான் கைந்தாறெட்டுத் தாமிரா றிருபத் தெட்டிற் – றொக்கமந் திரங்களாதி பல’, காயத்திரி, ஹம்சம், பஞ்சப்பிரமம், ஷடங்கம், ஹிருதயம், பிராஸாதம், ஸப்தகோடி, கலா, ஸம்ஹிதா.  ஆசமனம், பீஜம், அஷ்டோத்திரசதம், ஸஹஸ்ரம் என மந்திரங்கள் பல. அத்தனையும் சைவானுட்டானத்துக்கவசியம். பிரதிஷ்டை, அஷ்டபந்தன மாதிய ஒரு புறம், தீ¨க்ஷ, உபநயனம், கலியாணம், ஸீமந்தம், பிரேதகாரியம், அந்தியேஷ்டி, சிராத்தமாதிய மற்றொருபுறம், அவையெல்லாம் வேதாகமோக்தமான சைவக்கிரியைகள். அவை அற்ப சொற்பமல்ல. மந்திரங்கிரியை பாவனை யில்லாத சைவம் ஏது? அம்மூன்றனுள் ஒன்றையின்றி யொன்றில்லை. ஒன்று மாறினால் மற்றவையும் மாறும்.  அம்மந்திரங்களை யெல்லாந் தமிழிற் பெயர்க்க வுத்தேசமா?  முடியுமா?

 

 
இன்னும் ஏகாக்கரம் பஞ்சாக்கர முதலியன எண்ணடியாகப் பிறந்த பெயர்கள் அவற்றைத் தமிழிற் பெயர்க்க, அப்பெயர்ப்புக்களை விட்டு அப்பெயர்கள் விலகும். அந்நஷ்டம் சிறிதா? பத்தாந் திருமுறையிற் பல சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் அப்பெயர்ப்பு மந்திரங்களின் எழுத்துக்கள் அடங்குமா?  அச்சக்கரங்களையும் மாற்றியமைக்க வேண்டுமோ?

 

 
அத்திருமுறையில் ‘இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே – யட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் – கிட்ட வீதழ்களின் மேலே கிரோம்சிரோ- மிட்டுவ மத்திற் கிரோங்கென்று மேவீடே’ என்று வருகிறது. அன்ன பாடல்கள் பல. அவற்றிலுள்ள மந்திரங்களெல்லாம் சம்ஸ்கிருதமே. அவ்வாசிரியர் அவற்றை யப்படியே தந்தார். அவற்றுள் ஒன்றையாவது தமிழிற் பெயர்க்கவில்லை. ஏன்? அவற்றை அப்படியே ஓத வேண்டும்.  அவர் கட்டளை அது. அதனாற்றான் அத்திருமுறை திருமந்திரமென் றாயிற்று.

 

 
அத்துவாக்கள் ஆறு, அவற்றுள் வர்ணம் ஒன்று. பதம் ஒன்று.  வர்ணம் – எழுத்து, பதம் – சொல், சம்ஸ்கிருதத்தில் உயிர் பதினாறு, மெய் முப்பத்தைந்து, அவ்வைம்பத்தோரெழுத்துக்களுமே வர்ணாத்துவா. அவ்வெழுத்துக்களால் எண்பத்தொரு பதங்க ளியன்றன. அவை பதாத்துவா. அவ்வெழுத்துக்களைத் தமிழாக்க முடியாது. அப்பதங்களுக்குத் தமிழிற் பொருள் தெரியலாம்.  ஆனால் அத்தமிழ்ச் சொற்கள் பதாத்துவா ஆகா. ஏன்?  அச்சம்ஸ்கிருத வர்ணங்களா லாகிய அச்சம்ஸ்கிருத பதங்களே பதாத்துவா: அப்படி தெளியக் கூறியது சிவாகமம்.& ரம், மமகாரம், அஹங்காரம், ஹ்ரீங்காரம் என்பன சம்ஸ்கிருத வழக்கு.  ஓங்காரமும் அன்னதே. திருமுறையும் ‘ஓங்காரத்துட் பொருள்’ எனக் கூறி அவ்வழக்கை ஏற்றது. ஆகையால் அம்மந்திரமும் சம்ஸ்கிருதமே. தமிழ்ச்சொற்களைக் காரச்சாரியை கொடுத்து வழங்கலாமா? அதற்கு விதியென்னை?

 

 
சிவ மந்திரம், உமாமந்திரம், விநாயக மந்திரம், ஸ்கந்த மந்திரம், விஷ்ணு மந்திரம், காருடமந்திரம் என்பன தெய்வம் பற்றிய வழங்கற்பாடுகள். சமயம் பற்றியும் மந்திரங்கள் வழங்கப்படும்.  முன் காட்டப்பட்ட ஏகாக்கர முதலிய வழக்குகளு முள.  அத்தனையுந் துவேஷக் கலப்பற்றன. ஆதலின் தம்முள் மோதா.  ஆனால் தமிழ்மந்திரமென்ற மாத்திரத்தில் தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் மந்திரந் தோன்றுதற்கு இடங்கொடுக்கப்பட்டதாகும். அதனால் தமிழ் மந்திரம், தெலுங்கு மந்திரம், ஹிந்தி மந்திரம், குஜராத்தி மந்திரம் என மொழிபற்றிய வழக்குகளும் முளைக்கும். அது ஆரிய மந்திரம், திராவிட மந்திரம், நீக்ரோ மந்திரம் முதலிய இனம் பற்றிய வழக்குகளையும், சென்னை மந்திரம், சீன மந்திரம், இலங்கை மந்திரம் என நிலம்பற்றிய வழக்குகளையும், பிறவற்றையுந் தோன்றச் செய்யும். அவை பரிகாசத்துக் கிடம். அன்றியும் ஒரு சமயத்தினருக்குள்ளேயே சண்டையை மூட்டும். ஆகையால் துவேஷ ஜன்யமு மாம்.

 

 
மந்திர சப்தம் உமாமயம், மந்திர அர்த்தம் சிவமயம்.  வேதாகமோக்த மந்திரங்களுக்கே அவ்விலக்கண முண்டு.  ஆகலின் அச்சப்தமும் அர்த்தமும் ஆற்றலுடையன. அந்நவீனர் விரும்பும் மந்திரங்கள் வேறு. அவற்றுக்கு ஆற்றல் சொல்லிலா?  பொருளிலா? இரண்டிலுமேயா? சொல்லிலெனின், தமிழ்ச்சொற்களிற்றான் அ·துண்டெனச் சாதிக்க வேண்டும். அ·தவரால் முடியுமா? தெலுங்கர் முதலியோர் அதனை யேலார். அவர் தம் மொழிகளிலேயே அ·துண்டென்பர். பொருளிலெனின், சம்ஸ்கிருத மந்திரப்பொருள் தமிழுக் கிரவலே, அதற்குத் தமிழுக்குஞ் சம்பந்தமில்லை. இரண்டிலுமேயெனின், அம்மந்திரங்கள் தமிழுக்கே உரியவாதல் வேண்டும். தமிழ் மந்திரங்க ளுளவா?

 

 
செய்யுளை வசனமாக மாற்றலாம். அதுவும் பெயர்ப்புத்தான்.  தேவாராதிகள் செய்யுள். அது பலருக்கு விளங்காது. அதனை வசனத்திற் பெயர்க்க, அவ்வசனத்தை அவர் படிப்பர். ஆனால் அச்செய்யுளைப்போல் அவ்வசனத்தையும் ஓதலாமா? அவ்விரண்டிற்கும் ஓதும் பயன் ஒன்று தானா? ஆமெனின், அச்சம்ஸ்கிருத மந்திரங்களையும் அவற்றின் பெயர்ப்புக்களையும் ஓதுதற்குப் பயன் ஒன்று தான்.

 

 
செய்யுள் நடையில் தரவேறுபா டுண்டு. வசன நடையிலும் அப்படியே. மந்திரப் பெயர்ப்புக்கு வேண்டுவது செய்யுளா? வசனமா? எந்நடைதரம்?

 

 
சம்பந்தரை வணங்கி முத்திபெற்றார் பலர். அப்படியே மாணிக்கவாசகரையும் வணங்கி முத்தி பெறலாம். அவர் திருவாசகத்தை யருளினார். அதை ஆங்கிலத்திற் பெயர்த்தார் போப் என்பவர். இலண்டனின் ஒரு சிவாலய மிருப்பதாகக் கொள்க. அதில் அப்பெயர்ப்பைத் தானே ஓத வேண்டும், தமிழருக்குத் தமிழ் போன்றது ஆங்கிலருக்கு ஆங்கிலம். ஆகலின் அம்மூலத்துக்கும் பெயர்ப்புக்கும் ஓதற்பயன் ஒன்று: அப்படிக் கூறுவதே அந்நவீனருக்கு நியாயம். இங்கு மாணிக்கவாசகர் திருவுருவம் வணங்கப்படுகிறது. அங்குப் போப்புருவம் வணங்கப்படலாமா? ஆமெனின். அவ்வுருவை இங்கும் வணங்கினா லென்ன? மாணிக்கவாசகரின் பெயர்ப்பே போப். அப்படியுஞ் சொல்லிக்கொள்ளலாம் அந்நவினர்.

 

 
வாக்குக்கள் மூன்றுவகை. அவற்றுள் ஒன்று ஞான வாக்கு. அது பரமசிவனாருடையது. வேதாகமங்களே அது. இன்னொன்று அனுபவவாக்கு. அது சம்பந்தராதியருடையது. தேவாராதி திருமுறைகளே அது. பின்னொன்று பிராகிருதவாக்கு. அது சிவானுபவ மில்லாத ருடையது. நான்போன்றா ரெழுதும் நூல்கள் பல. அவையெல்லாம் அது. ஞானவாக்கும் அனுபவ வாக்கும் அருள் நாதவொலி. பிராகிருத வாக்கு மாயா நாதவொலி. அந்த ஞானவாக்கி லுள்ளன சம்ஸ்கிருத மந்திரங்கள். ஆகலின் அவையும் அருள் நாத வொலியே. அவையே சித்தி முத்திகளைப் பயக்கும். அவற்றைப் பெயர்ப்பதென்ப தென்ன? மாயா நாதவொலியாக்குவெதேயாம். அவ்வொலிச் சொற்கள் அப்பயனைத் தரா. தேவராதிகளைப் பெயர்த்த வசனமும் மாயாநாதவொலிதான். ஆகவே எங்குள்ள சைவாலயங்களிலும் அவ்வொலிச் சொற்களை மந்திரங்களாக ஓதக்கூடாது


__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

திருமுறை மந்திரங்கள்
தேவார முதலிய திருமுறைகளுள; அவற்றிலிருந்து சிலபலபதிகங்களையாவது, பாடல்களையாவது, பாதங்களை யாவது. பதத்தொடர்களையாவது, பதங்களையாவது எடுத்து வரிசைப்படுத்தி அக்கோவையை மந்திரங்களெனக் கொள்ளலாம். இப்படிக் கூறுவர் அந்நவீனர்.

 

தமிழகத்துச் சைவாலயங்கள் பல. அவற்றில் தேவாரத்திகள் ஓதப்பட்டே வருகின்றன. அவற்றை ஓதிவருபவர் ஓதுவார். அந் நியமந் தொன்றுதொட்டது. அவ்வாலயங்களில் திருவுருவங்களுள. அவற்றிற்கு உபாசாரங்கள் செய்யப்படும். அவற்றுள் அவ்வோதுகையுமொன்று. அதற்கும் அந்நவீனர் விரும்பும் அக்கோவையை ஓதுகைக்கும் வேறு பாடென்னை?

எல்லாரும் ஞானவாக்கின் விதிப்படியே யொழுக வேண்டும். அப்படியொழுகாதவரைப் பிறப்பிறப்புக்கள் விடா. தேவார முதலியவற்றின் ஆசிரியன்மார் தம் முன்னைப் பிறப்புக்களில் அவ்விதியைக் கசடறக் கற்றனர்.  கற்றபின் அதற்குத் தக நின்றனர். அவர்க்கு முத்தி சித்தித்தது.  அவ்வேதாகமங்களே கற்பவை யென்ற உண்மையை அவர் அனுபவித்துக் கண்டனர். ஆகலின் அவரருளிய தேவராதிகள் அனுபவ வாக்கெனப்பட்டன.

 

திருமுறைப் பாடல்கள் பல்லாயிரம். அவற்றுள் அவ்வாசிரியன்மார் தம்மைப் பற்றியுங் கூறியிருக்கின்றனர். ‘நான்மறை வல்ல ஞானசம்பந்தன்’, ‘நான்மறை யங்கமோதிய நாவன் – வன்றொண்டன்’, ‘செழுமறை தெரியுந்திகழ்கருவூரன்’, ‘மறைவல வாலி’, ‘மாசிலா மறைபலவோது நாவன் வண்புருடோத்தமன்’, என்பவற்றை நோக்குக. அவரெல்லாங் சம்ஸ்கிருத சதுர்வேத விற்பன்னரென்பது விளங்கும். அவர் தம் பாடல்களைப்பற்றியும் பேசினர்.  ‘ஆரணம் பொழிந்த பவளவாய் சுரந்த வமுதமூ றியதமிழ் மாலை’, ‘ஆரணத் தேன்பருகி யருந்தமிழ் மாலை கமழவரும்’, என்பன காண்க. திருமுறைகள் வேதக்கருத்தையே பிரதிபலிக்கின்றன வென்பது விளங்கும். ஆனால் ஒருவகையில் அவரெல்லாம் ஒருமுகமான எச்சரிக்கையுட னிருந்திருக்கின்றனர். என்னை? தம் பாடல்களை வேதமென்றோ, மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ அவர் புகழவில்லை.

ஆனால் அவர் ‘மந்திர வேதங்கள்’, ‘மந்திரத்தமறை’, ‘மந்திரமறை’, ‘மந்திர நான் மறை’, ‘மந்திர மாமறை’, என்று பாடினார். சம்ஸ்கிருத வேதங்களே சர்வ மந்திரங்களுக்கும் ஆகரம். அவ்வுண்மையை அவ்வடிகள் ஏற்றுள்ளன. வேதம் மந்திர மயம்; அதனால் மந்திரமென்ற பெயரும் பெற்றது. ‘மந்திரமுந் தந்திரமுந்தாமே’ என்றது காண்க.

 

மந்திரம் – வேதம்; தந்திரம் – சிவாகமம். ‘இருக்குருவா மெழில் வேதம்’ என்றது பத்தாந் திருமுறை. இருக்குரு- மந்திரவடிவம்.

இன்னும் ‘நன்றுமிகு நாண்மலரா னல்லிருக்கு மந்திரங்கொண் – டொன்றிவழி பாடுசெயலுற்ற வன்ற னோங்குயிர் மேற் — கன்றிவரு காலனுயிர் கண்டவனுக்கன்ற ளித்தான் – கொன்றைமலர் பொன்சொரியுங் கோளிலியெம் பெருமானே’, ‘வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் – போதத்தால் வழிப்பட்டான்’, ‘நலமலி தருமறை மொழியொடு… … …மலரவை கொடுவழிபடுதிறன் மறையவ னுயிரது கொளவ… … …மற லிதனுயிர் கெடவுதை செய்தவன்’ என்றது திருமுறை. அவற்றிலுள்ள இருக்குமந்திரம் வேதத்தின் மந்திரம். மறைமொழி யென்பன வொன்றே. இருக்கு மந்திரத்துக்கு நல் என்பதும், மறைமொழிக்கு நல மலிதரு என்பதும் விசேடணங்கள்.  அவற்றையுங் கருதுக. போதத்தால் வழிபட்டான் என்றுமிருக்கிறது, போதம் – ஞானம். வேதமந்திரத்தால் வழிபடுவதே ஞானவழிபாடு அது விளக்கம். வேறு மந்திரங்களால் வழிபடுவது மூட வழிபாடு. அது தொனி. சம்ஸ்கிருத வேத மந்திரங்களே மந்திரங்கள். அவைகொண் டர்ச்சிப்பதே அர்ச்சனை. எமபயம் நீக்கினதே அதற்குச் சாட்சி. நீத்தார். அதற்கேற்ற மந்திரங்களை வேதத்திலிருந்து கண்டெடுத்தானே அம்மறையவன். அதுவே அவனுடைய திறல். அம்மந்திரங்களையப்படி வந்தித்தன

 

திருமுறைகள்.

ஆகவே வேதத்தை விட்ட அறமில்லை. அப்படியே திருமுறைகளும் வேதத்தை விடா. ஆகலின் வேதத்தை விசுவசிப்பவரே அவற்றை ஓதுதற் குரியார். அவையும் அவருக்கே அனுக்கிரகிக்கும். வேத நிந்தகர் அவற்றையும் நிந்திப்பவரே. அவர் அவற்றை வேறெப்படியும் போற்றுக, ஓதுக, அவை அவரைக் கண்டு நாணி விலகும். அவ்வோதுகை வெறும் ஆரவாரம், ஆதலின் ஞானவாக்கின் ஸ்தானத்தில் ஞான வாக்கு இருப்பதாக, அதை அநுசரித்த ஸ்தானத்தில் அனுபவ வாக்கு இருக்க வேண்டும். அனுபவ வாக்கை என்ன வகை செய்தும் ஞானவாக்கின் ஸ்தானத்தில் வைக்கக்கூடாது. வைத்தால் அவ்விரு வாக்குகளுமே அவமதிக்கப்பட்டனவாகும். சைவாலயங்களில் சம்ஸ்கிருத வேத மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன. பின்னர் தான் தேவாராதிகள் ஓதப்படும். அம்மரபைக் காண்க.

 

வேதம் பதிகப் பாகுபாடுக ளுடையது. தேவாரமும் அப்படியே. வேதத்தை அனுசரித்தது தேவார மென்பதை அதனாலுந் தெரியலாம்.
 
 
அர்ச்சனை பாட்டே யாகும்’ என்றது பன்னிரண்டாந் திருமுறை; ஆதலின் அர்ச்சனைக்கு திருமுறைகளை ஓதினாலென்ன? என்பர் அந்நவீனர்.  அப்பாட்டாவது ஏழாந் திருமுறை. அதைப் பாடியவர் சுந்தரர். அவர் எந்தச் சைவாலயத்திலாவது பதிகங்கள் பாடி அர்ச்சனை செய்திருக்கின்றனரா? இல்லை. ஆகையால் அவ்வடி அந்நவீனர் கொள்கைக்கு இசையாது. அர்ச்சக குலத்தினராகிய அச்சுந்தரரை மாத்திரம் ‘நீ அர்ச்சனை செய்ய வேண்டாம்.  நம்மைப்பாடிக்கொண்டே யிரு. போதும். உன் பாடல்களையே நாம் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்வோம்’ என்று பரமசிவனார் அனுமதித்தார்.  அர்ச்சனைக்குப் பாட்டு என்றில்லை. பாட்டே அர்ச்சனை. அவ்வேறுபா டறிக.

 

இனிக், கைவல்ய நவநீத முதலியன மாயாவாத நூல்கள். பிரபுலிங்க லீலை முதலியன ஐக்கியவாத நூல்கள். வடலூர் இராமலிங்கர் சைவசமய்த்தவ ரல்லர். அதை அவரே சொல்லி விட்டார். அவர் பாடியவும் பல. நான் போன்ற ராக்கும் பாடல் களுமுள. அவையுங் கணக்கில. அவையெல்லாந் தமிழே.  அவற்றிலுஞ் சிவதுதிகள் மிகுதி. சைவாலயங்களில் அர்ச்சனை யாதியவற்றிற்கு அவற்றிலிருந்துந் தமிழ் மந்திரங்கள் திரட்டலாமா? ஆகாதா? ஆமெனின், அப்பாடல்களோடு திருமுறைப் பாடல்களுஞ் சமமென்றாகும்.  அதுவுந் திருமுறை நிந்தையே. ஆகாதெனின், அவற்றின் தமிழை நிந்தித்த தாகும். அந்நவீனருக்கு அது நியாய மன்று.

 

தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித் தோன்றின. திருமுறைகள் பிந்தியவை.  அம்முந்திய காலத்தில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ் முறைகள் மந்திரங்களாக ஓதப்பட்டன? சம்ஸ்கிருத வேத மந்திரங்களே இன்றே போல் அன்றும் ஓதப்பட்டன.

 

அவ்வோதுகைக்கு முந்திய காலமென்பதில்லை.  இருந்தால் அது சைவாலயங்களுக்குந் தோன்றாத காலமே யாம்.

சிருட்டி மந்திரங்கள்

நினைப்பவரைக் கரை சேர்ப்பது மந்திரம். அப்பொருள் கொண்ட மந்திரங்கள் சம்ஸ்கிருத வேதத்திற்றா னுள. தவமுடையார் நிற்கு முறையில் நிற்பர்; அவற்றை ஓதுமுறையில் ஓதுவர். அதனால் தம்மை நிறைமொழி மாந்தராக்கிக் கொள்வர். அவரே நீத்தார்.

ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு தேவதை அதிட்டிக்கும். அவர் அம்மந்திரத்தைச் செபிக்கும்போது தம்மை அத்தேவதையாகப் பாவிப்பர். அதனால் அவரிடம் ஒரு சக்தி பிறக்கிறது. அது தான் சாபானுக்கிரக சக்தி. அவர் தீயவரைச் சபிப்பர்.  நல்லவரை அனுக்கிரகிப்பர். அச்சாபானுக்கிரவசனங்கள் மந்திரங்களென உபசரிக்கப்படும். செபிப்பவரை நிறை மொழி மாந்த ராக்குவது சம்ஸ்கிருத மந்திரம். தொல்காப்பியத்தில் தமிழ் மந்திரமென வொன்றுளது. அது தான் அச்சாபானுக்கிரக வசனங்கள். அது செபிப்பதற்குரிய தன்று. செபிப்பவரை நிறைமொழி மாந்த ராக்கவுஞ் செய்யாது. அதனையே அந்நூல் மறைமொழி யென்றது.

திருக்குறளிலுள்ள மறைமொழியும் அதுவே. திருமுறைகள் சொன்ன ‘மறைமொழி’, ‘வேத மொழி’ கள் சம்ஸ்கிருத வேத மந்திரம்.

தொல்காப்பியரும் வள்ளுவருங் கூறிய மறைமொழிகளும், மந்திரத்துக்கும் மதமும் மறுப்புமான விருத்தியுரையில்லை. ‘மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குகாரணம் மந்திர நூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க’ எனவும், ‘அவர், ஆணையாற்கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க……இவை தமிழ் மந்திரம்….’ எனவுமே இப்போதுள்ள தொல்காப்பியவுரை யிருக்கிறது. மந்திரப் பொருட் கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவதெற்றுக்கு? ஆணையாவது யாது? அதற்கும் அவர்க்கு முள்ள சம்பந்தமென்ன? புறத்தா ராவார் யார்? புலனாகாம லென்பதெது? மறைத்துச் சொல்வானேன்? இவ்வினாக்கள் எழுகின்றன. விடை வேண்டும். அந்நவீனரால் தரமுடியுமா? மந்திரமும் அதன் பொருளும் எல்லார்க்கும் புலனாக வேண்டும்: அவர் கொளகை அது. அதற்கு அத்தமிழ் மந்திரமாவது பொருந்துகின்றதா? இல்லை.

 

இன்னும் திருமுறைகளில் மந்திரப் பொருளின் கண் அப்பொருட்கு உரித்தான சொல்லே வந்துள்ளது. அந்நூல்களின் பொருள் புறத்தார் முதல் எல்லார்க்கும் புலனாகும் என்று கொண்டால் அவை தொல்காப்பியவுரையின் படி மந்திரங்க ளாகா. அவற்றில் மந்திரப் பொருளின்கண் அப்பொருட்கு உரித்தல்லாத சொல்லே வந்துள்ளது. அவற்றின் பொருள் புறத்தார் முதல் யாவர்க்கும் புலனாகாது என்று கொண்டால் அவை நவீனரின் கொள்கைப்படி மந்திரங்களாகா. ஆகவே அவ்வுரைப் பகுதியால் அவராசை தீருமாறில்லை.
அன்றியும் அவ்வுரைப்பகுதித் தமிழ் மந்திரத்துக்கு உதாரணத்தோடு கூடிய விளக்கம் வேண்டும். மந்திர நூல் வல்லாரே அதனைத் தரக்கூடியவர்.  அவ்வுரைக்காரர் அப்படிச் சொல்லிக் கையை விரித்து விட்டார். தமிழ் மந்திரநூல் உண்டா? அதில் வல்லா ருளரா? அவர் விளக்குந் தருநாள் என்று?  அன்றுவரை அப்பகுதியை ஒதுக்குக. மந்திர விசாரணைக்கு அது உதவாது.  மேலும் தமிழ்மந்திரமென்ற பிரஸ்தாபம் அ·தொன்றுதான். அது பிற பிரமாணங்களால் வலியுறவில்லை. அந்நவீனர் அதனை யெடுப்பானேன்? விளம்பரஞ் செய்வானேன்? ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்றோ ரறிவாராய்ச்சி நூலுள்ளது. திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் அதனாசிரியர்.  தமிழ் மந்திரமென்பது முதலிய பல அசைவக் கொள்கைகள் அதிற் சர்ச்சை செய்து மறுக்கப்பட்டுள்ளன. அந்நூலிற் காண்க.

 

நிற்க, தமிழ்மந்திரங்க ளில்லை யாகுக: அவற்றைப் புதியவனாகச் சிருட்டித்துக் கொள்ளலாம்: அப்படிக் கூறுவர் அந்நவீனர். சீடர்களின் பக்குவத்தில் தாரதம்மியமுண்டு. அதற்கேற்ப ஆசிரியன் அவருக்கு மந்திரோப தேசஞ் செய்வான். அவனும் மந்திரங்களைச் சிருட்டித்துபதேசியான். அவனுக்கே அவ்வுரிமை கிடையாது. தகுதியுமில்லை. அந்நவீனர்க்கு மாத்திரம் அவை வந்துவிடுமா? அவருக்குங் குருபரம்பரை யிருக்கலாம். அதில் எத்தனையோ குருமார் வந்திருப்பர். அவருள் யாராவது மந்திரத்தைச் சிருட்டித்து உபதேசித்திருக்கின்றனரா? இப்போதும் ஆதீன பீடாதிபதிக ளுளர். அவருந் தமக்கு முந்திய ஆசாரியரிடம் உபதேசங்கேட்டவர் தான். அது திருமுறை மந்திரமா? தொல்காப்பியத் தமிழ் மந்திரமா? சிருட்டி மந்திரமா? அவற்றுள் எதுவு மன்று. அவர் கேட்ட வுபதேசம் வேதாகமோத்த சம்ஸ்கிருத மந்திரமே.  மேலும் மந்திரத்தை அவரவரே சிருட்டித்துக் கொள்ளட்டும்: குருபரம்பரை குலைந்தேபோம். ஒருவேளை அந்நவீனருக்குச் சற்குரு ப்ரம்பரையில்லையோ? இல்லையென அவர் சொல்லட்டும். பிறகு அவர் தம்மனம்போற்செய்க. அன்றியும் மந்திரங்களே மற்றவற்றைச் சிருட்டிக்கும்.  பெரியோர் கருத்தது. அந்நவீனர் மந்திரங்களையே சிருட்டிக்கப்பட்டு விட்டனரா? அவருக்கு அச்சிருட்டிசத்தி வந்தவாறெங்ஙனே? மந்திரசிருட்டி சத்தி முன்னது. அதன் விளைவாய்ப் பின்னது அம்மந்திரம். இப்பின்னது அம்முன்னதை எய்துவியாது. ஆகலின் அம்மந்திர செபம் அவருக்கு வேண்டாம். அதனைப் பிறகும் விரும்பா. தமக்கு வேண்டும் மந்திரத்தை அவருஞ் சிருட்டித்துக் கொள்வர். சைவ சமய வரம்பு அழிக்கப்பட்டுவருங் கால மிது. ஆகலின் அவரவ ரறிவே அவரவருக்கு வழியுந்துணையுமாம். ஆனால் அச்சிருட்டி மந்திரங்கள் அவரவர் வீட்டிலோ, ஏட்டிலோ இருந்திடுக.  சைவாலயங்களில் அவை நுழையக்கூடாது. சிவாகமங்கள் அனுமதிக்கவில்லை.

 

மனங் கலந்த பத்தி

 

தமிழருக்கு மனங் கலந்த பத்திவழிபாடு வேண்டும். அதற்கு சம்ஸ்கிருத மந்திரங்கள் உதவா, அவற்றின் பொருள் விளங்காது. தமிழ் மந்திரங்கள் பொருள் விளங்குவன, அவையே அப்பத்தி வழிபாட்டிற்கு உதவும்: இதுவும் அந்நவீனர் கூற்று. நோய்கள் மணிமந்திர மருந்துக்களால் தீரும். மாந்திரீகன் நோயாளிமுன் செபிக்கிறான். அச்செபம் பெரும்பாலும் மானதம் அல்லது மந்தமாகவே யிருக்கும். நோயாளிகன் காதில் அம்மந்திரமே விழாது. அவன் அதன்பொருள் தெரிவதெங்கே? ஆயினும் அவன் நோய் நீங்குகிறது. மந்திர சப்தமும் அர்த்தமும் விளங்காத அவன் சுகமடைகிறான். இனி மாந்திரீகருட் பலர் மந்திரங்களைச் செபிப்பர், சக்கரங்களுள் எழுத்துக்களை அமைப்பர்.  ஆயினும் மந்திரப்பொருளை யெல்லாம் அவர் அறிந்தவர்தானா? சொல்லமுடியாது. எனினும் அவர் செபம் பலிதமே. அது கண்கூடு. அந்நவீனர் கொள்கை அவ்வகையில் தளர்கிறது.

 

மந்திரப் பொருள் விளங்கவே வேண்டுமோ? அந்நியாயம் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு மாத்திரந்தானா? தமிழ் மந்திரங்களுக்கு மாகும். அப்போது தான் அம்மந்திரங்களாலும் மனங்கலந்த பத்திவழிபாடு சித்திக்கும். ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார்’ என்றது திருவாசகம். அதிலுள்ள ‘உணர்ந்து சொல்லுவார்’ என்பதை நோக்குக. உணர வேண்டுவது எதை? சொல்லவேண்டுவது எதை? உணரவேண்டுவது பொருளை. ஆனால் சொல்ல வேண்டுவது பாட்டையே, சொல்லுவர் – ஓதுவார். சம்ஸ்கிருத மந்திர விஷயத்திலும் அதுவே கொள்ளற்பாலது. அம்மந்திரங்களின் பொருளைத் தெரிக. ஆனால் அம்மந்திரங்களையே ஓதுக.  பாட்டிற்கு உரை தெரி, அவ்வுரையையே ஓது. பாட்டை விடு என்று அவ்வடிகள் உபதேசிக்கவில்லை.

 

இனிப்பொருள் தெரிவ தெப்படி? பொருள் இரண்டு வகை. இல் என்பது ஒரு சொல். அது இலக்கிய வழக்கு. அதற்குப் பொருள் வீடு என்பது. அதுவும் ஒரு சொல்லே. அது உலக வழக்கு. அப்படி ஒரு சொல்லுக்கு இன்னொரு சொல்லைப் பொருளாகக் கொள்வது ஒன்று. இல் என்பது கல் மண் கட்டை கண்ணம் முதலியவற்றா லாயதொரு கட்டடம். அதனைப் பொருளாகக் காண்பது மற்றொன்று. மூன்றாம் வகையில்லை. சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இரண்டாம் வகைப் பொருள் முனைப்புடையவராற் காணமுடியாது. முதல் வகைப் பொருள் தெரியாதிருப்பதையே அந்நவீனர் எடுத்துக் காட்டுவர். எல்லாத் தமிழ்ச் சைவரும் சம்ஸ்கிருதப் பயிற்சி பெறுக. அத்தெரியாமை தீரும். அதற்கு அப்பயிற்சி யொன்றே வழி. அதுவரை அம்மந்திரங்களுக்குத் தமிழில் உரை தரச்சொல்லித் தெரிக. தம் சமயத்தின் பொருட்டு அவர் அவ்வளவாவது சிரமப்படுக. அத்திறமுங் கெட்டவர்க்கு வாயேன்? அப்படி எவரும் அம்மந்திரங்களுக்கு எந்தப் பிரதி பதங்களாலும் அர்த்தந் தெரியலாம்.  ஆனால் அம்மந்திரங்களையே ஓத வேண்டும். மந்திர மென்ற பெயருக்கு அவையே முற்றிலுந் தகுதியுடையன. அவற்றின் பிரதி பதங்களும் பின்ன பதங்களும் அவை யாகா.

 

தமிழிர் சைவ நூல்கள் பல. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே அவை அவ்வப்போது இயற்றப்பட்டன. அவை மங்கலத் தமிழ், சின்மயத் தமிழ், மதுரத் தமிழ், மடமடை யுடைத்து வளர்ந்த தமிழ். அவை செம்பாடல்களாயுயிருக்கும். சிறந்த வசனங்களாயுமிருக்கும். அவற்றின் ஆசிரியன்மார் மனங்கலந்தசிவபத்தி வழிபாடு முதிரப்பெற்றவர். இன்றேல் அன்ன நூல்கள் தோன்றியிரா. அவர்பாலிருந்த அப்பத்தி வழிபாட்டிற்கு அவையே சான்று. இனி நூலியற்றாமற் காலஞ்சென்ற சைவரும் எண்ணற்றவர். அவ ரெப்படி? அவருள் எத்தனையோ பேர் சைவவரம்பு கடவாதவர். சிவதீக்ஷ¡வான்கள், விபூதி ருத்ராக்ஷதாரண சீலர். சிவபூஜாதுரந்தரர், சைவாலயங்களில் நித்திய நைமித்திகாதிகளை ஆகமமுறையில் நடத்தி மகிழ்ந்தவர், அச்சேவையில் தினந்தோறும் திளைத்தவர். ஏனைய ஆசாரங்களிலுங் குறையாதவர், இருமொழிச் சைவ நூல்களிலும் வல்லவர், சத்தியம், அஹிம்ஸை, பரோபகாரம் முதலிய சாதாரண தருமங்களிலுஞ் சிறந்தவர். இன்னும் என்ன வேண்டும்? அவர் வாழ்ந்த காலங்களில் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களா ஓதப்பட்டன?  சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டன. அவை அச்சிவ புண்ணிய சீலரின் மனங்கலந்த பத்திவழி பாட்டைச் சிறிதுந் தகையவில்லை. பெரிதும் வளர்த்தே வந்தன. அவ்வுண்மையை யாராலும் மறுத்துரைக்க முடியாது.

 

அது சில வருடங்களுக்கு முன்வரை யுள்ள நிலை. இப்போது எப்படி? அந்நிலை மாறியது. அந்நவீனர் ஆங்காங்கே தோன்றினர். அவருக்குச் சம்ஸ்கிருத தூஷணமே ஆசைத்தொழில். அதுவே தமிழ் வெறியாயிற்று. அவ்வெறி கொண்ட சுவடிகள் மலிந்தன. அவற்றில் தமிழ்மொழி ஒரு தெய்வமாகக் கற்பிக்கப்பட்டது. பிறமொழிகள் எத்தனை? அவற்றுக்குரியாருமுளர். அவர் அவற்றை அப்படிக் கற்பிக்கவில்லை. அந்நவீனரே தம் சுவடிகளில் அக்கற்பனை செய்தனர். அத்தெய்வத்துக்கே தம் மனங்கலந்த பத்தி வழிபாட்டை அவை சமர்ப்பித்தன. அவ்வழிபாட்டிற்கு அர்ச்சனை மந்திரங்கள் வேண்டுமே. அத்தூஷணங்களே அம்மந்திரங்கள் அவை அச்சுவடிகளில் நிரம்பக் கிடைக்கும். அந்நவீனரே அவ்வர்ச்சகர். இப்போது அத்தெய்வமே கானல்நீர் போற்காட்சி யளிக்கிறது. அதனால் சைவ சமயம் அந்தர்த்தானமாகிவருகிறது. பரமசிவனாரும் அப்படியே. மனங்கலந்த சிவ பத்தி வழிபாடு எங்கிருக்கும்? அதுவுங் குறைகிறது. அதற்குக் காரணம் சம்ஸ்கிருத மந்திரமா? அன்று. அந்நவீனரின் தமிழ் வெறியே.

 

அவர் கொள்கைப்படி மற்ற மகாணங்களின் மக்களுக்கும் அப்பத்திவழிபாடில்லையென்றே சொல்லவேண்டும். ஏன்? அங்குள்ள ஆலயங்களிலும் சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டு வருகின்றன. ஆகவே அந்நவீனர் அவரையும் நிந்தித்தவராகிறார். என்னே அவர் தம் செருக்கு!

 

ஒரு சமயம் பல மொழிகளிற் பிரசார மாகும். எச் சமயத்தையும் அச்சமயிகளே பிரசங்கிப்பர். அவருள் சொந்தமொழி பயின்றார் சிலர். அவர் பிரச்சாரம் அம்மகாணத்தளவி லடங்கும். சொந்த மொழியும் பிற மொழிகள் சிலபலவும் பயின்றார் சிலர். அவர் அப்பிற மொழிகள் வழங்கும் பிரதேசங்களுக்குஞ் செல்வர். அங்கும் அவர் பிரசாரம் நடைபெறும். ஆயினும் அவ்வொரு மொழி வல்லாரும் பலமொழி வல்லாரும் ஒரே சமயிகளே. அச்சமயத்தில் அறிவும் ஆராய்ச்சியும் பற்றும் உடையாரவர். அப்பலமொழி வல்லார் பிரதேசந்தோறுஞ் சென்று அங்கொரு விதமாகவும் இங்கொருவிதமாகவும் பிரசிங்கிப்பாரா?

 

உலகெங்கும் கிறிஸ்துவ இசுலாமிய பிரசாரம் நடந்து வருகிறது. அப்பிரசாரகர் தமிழில் ஒரு விதமாகவும் தெலுங்கில் இன்னொரு விதமாகவும் துளுவில் மற்றொரு விதமாகவுமா பிரசங்கிக்கின்றனர். இது தமிழ்க் கிறிஸ்தவம். இது தெலுங்குக் கிறிஸ்தவம், இது துளுக் கிறிஸ்தவம் எனப் பேதக் கிறிஸ்தவமுண்டா? எங்கும் ஒரே கிறிஸ்தவம், ஒரே இஸ்லாம். தமிழ்க் கிறிஸ்தவம் உயர்வு, தெலுங்குக் கிறிஸ்தவம் தாழ்வு, அல்லது இது உயர்வு.  அது தாழ்வு என அவ்விருமொழிக் கிறிஸ்தவரும் வாதப்பிரதிவாதங்கள் செய்து கொள்ளார். இசுலாமியரும் அது செய்யார். பிறசமயிகளும் அப்படியே. சமயம் ஒன்றானால் அது எம்மொழியிலும் ஒன்று போலவே பிரசங்கிக்கப்பட்டிருக்கும்.

 

அந்நவீனர் மாத்திரம் விசேடப் பிறவிகள், மொழியை அடிப்படையாகக் வைத்துச் சமயத்தைப் பிளக்கும் புத்திசாலிக ளவர். அதனால் அவர் தமிழ்ச்சைவம் வேறு. சம்ஸ்கிருத சைவம் வேறு என்பார். தமிழ்ச்சைவம் வாழ்க; சம்ஸ்கிருத சைவம் ஒழிக; தமிழ்சைவ நூல்கள் வாழ்க, சம்ஸ்கிருதச் சைவ நூல்கள் ஒழிக; தமிழ்ச் சைவாசிரியன்மார் வாழ்க, சம்ஸ்கிருத சைவாசிரியன்மார் ஒழிக; தேவாரம் வாழ்க, சுருதி சூக்தி மாலை ஒழிக; சம்பந்தர் வாழ்க, ஹரதத்தர் ஒழிக என கத்துபவர்க்குப் புத்தி சிறிதாவதுண்டா? சைவம் எத்தனை மொழிகளிலிருக்கட்டும். அது ஒரே சமயந்தான். மொழிபற்றி அதை நோக்குவதும் பிளப்பதும், அழைப்பதும் சமயாபிமானமே யாகா, அவற்றில் மொழிவெறியே முனைந்து நிற்கும். சம்ஸ்கிருதச் சைவம் ஒழிக என்றால் சம்ஸ்கிருதம் ஒழிக என்பது தான் கருத்து. தமிழ்ச் சைவம் வாழ்க என்றால் தமிழ் வாழ்க என்பது தான் கருத்து. ஆகவே அப்பிளவு அச்சமயத்தை யழிக்கவே உதவும். ஒரு மொழியில் பல சமயங்களில் இலக்கியங்களிருக்கும்.  அதனால் இந்நூல் சைவத்தமிழ். இந்நூல் வைணவத் தமிழ் இந்நூல் சமணத்தமிழ் எனப் பிரித்தற்கிடனுன்டு. அப்பிரிவால் அம்மொழி பாதகமுறாது.  ஆனால் ஒரு சமயம் மொழிதோறும் வேறுவேறாதலில்லை. அந்நவீனரின் புத்தியே பிளந்தது. இப்போது மனங்கலந்த சிவபத்தி வழிபாடு குறைவே.  அதற்கு காரணம் அப்பிளவைப் புத்திதான்; சம்ஸ்கிருத மந்திர மன்று.

 

வைணவத்தையும் தமிழ் வைணவம், சம்ஸ்கிருத வைணவம், என அவர் பிரித்துப் பேசுவர். அப்பேச்சைத் தமிழ்வைணவர் சிறிதும் மதியார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

சம்ஸ்கிருதமும் நாத்திகமும்
 
சம்ஸ்கிருத மந்திரத்தால் நாத்திகம் பரவுகிறதாம். அந்நவீனர் சொல்கிறார். தமிழில் மந்திரமுமில்லை. அது சைவாலயங்களில் எக்காலத்திலும் ஓதப்பட்டதுங் கிடையாது. அவ்வாலயங்கள் தோன்றியது என்று அன்று முதல் இன்று வரை அங்குச் சம்ஸ்கிருத மந்திரமே ஓதப்பட்டு வருகிறது. சைவரான தமிழர் என்றிலிருந்து சைவராயினர் அன்றிலிருந்து இன்று வரை அவர் வீடுகளில் கலியாண முதலிய பலவேறு சைவக்கிரியைகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஓதப்படுவதும் அம்மந்திரமே. ஆகலின் நாத்திகம் அன்று முதலே பரவியிருக்க வேண்டும். அ·தில்லை. அது பரவத் தலைப்பட்டது சமீபகாலத்திற்றான். மற்ற மாகாணங்களிலும் அம்மந்திரமே ஆட்சி புரிகின்றது. நாத்திகம் அங்குப் பரவவில்லை ஏன்? அங்கும் பரவியிருக்கிற தென்னலாமவர். அதற்கு மாற்றாக மாகாணமொழி மந்திரக் கிளர்ச்சி அங்கும் நடைபெற வேண்டும். அ·தில்லை. அன்றியும் நாத்திகம் பரவியிருப்பது பாமரரிடமா? படித்தவரிடமா? படித்த சிலர் தான் அப்பிரசாரஞ் செய்கின்றனர். அவர் புத்திதான் திருந்த வேண்டும். அதற் கென் செய்வது? தமிழில் ஆத்திக நூல்கள் பல. அவற்றை அவர் படிக்கலாம். அதனால் அவர் புத்தி தெளியும். இன்றேல் அது தமிழ் மந்திரந்தாலுந் தெளியாது. ஆகவே நாத்திகம் பரவுதற்குச் சம்ஸ்கிருத மந்திரங்காரண மன்று.
 
 
தமிழ்ச் சைவருக்குந் தமிழும், சம்ஸ்கிருதமும், இரண்டு கண். தெய்வீக சைவ நூல்கள் அவ்விரண்டிலுமுள. ஆகலின் சைவம் அக்கண்ணொளி ‘ஆரியத்தொடு செந்தமிழ் பயன்’ என்றது திருமுறை. அப்பயனாவது சைவ சமயமே. அச்சைவருக்குச் சம்ஸ்கிருத துவேஷத்தை ஊட்டுக: அம்மொழியிலுள்ள சைவ நூல்கள் தெரியாமற்போம். அவர் அவற்றைத் தெரிந்தாலும் மதியார், தொடார், அம்மொழிமேற்கொண்ட பகைமையாற் பழிக்கவுஞ் செய்வர். அவருடைய கண்ணொன்றை அப்படிப் பொட்டையாக்குவர் அந்நவீனர். அச்சைவருக்குத் தமிழ் வெறியை ஊட்டுக: அம்மொழிச் சைவநூல்களிலுள்ள தமிழே இனிக்கும், சைவத்திற் சுவை தட்டாது. அப்படி அவருடைய மற்றொரு கண்ணையும் அந்நவீனர் பொட்டை யாக்குவர். அவ்விரு வகையாலும் அச்சைவரின் கண்ணொளி முழுக்க மறையும். அவர் ‘ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயனறிகிலா அந்தக’ ராவார். அவர் நாத்திக ராதல் எளிது. ஆகவே நாத்திகம் பரவுதற்கு காரணம் யாது? அது தான் அந்நவீனரின் அத்துவேஷ வெறிப் பிரச்சாரங்கள்.
 
கருப்புச்சட்டைக் கூட்டமே அதற்குச் சான்று. அந்நவீனராலேயே அக்கூட்டம் தலையெடுத்து ஆடிவருகிறது. சம்ஸ்கிருத மந்திரத்தால் நாத்திகம் பரவவில்லை. தமிழ்ச்சைவர் இரு மொழிச் சைவ நூல்களையும் பயிலட்டும். அவரால் நாத்திகம் இருந்துவிடந் தடந்தெரியாமற் போம்.
 
அந்நவீனர் போல் நாத்திகரும் தமிழர்ச்சனை வேண்டுமென்கிறார். அந்நவீனரின் உள்ளம் பூரிக்கிறது. ஆனால் அவ்வர்ச்சனையால் மனங்கலந்த பத்திவழிபாடு உண்டாகும், நாத்திகந் தொலையும், ஆத்திகம் வளரும் என்பது அந்நவீனர் கருத்து. அ·துண்மையா? ஆயின் அவ்வர்ச்சனை நாத்திக வளர்ச்சிக்குத் தடையே. அதை நாத்திகர் எதிர்க்க வேண்டும்; ஆனால் ஆதரிக்கிறார். ஏன்? அது அகில பாரத சைவ சமூகத்திலிருந்து தமிழ்ச் சைவரைத் துண்டித்துவிடும். எருதுகள் தனித்தையாமாறு பிரிக்கப்பட்டன, புலிதன் காரியத்தைப் பார்த்துக்கொண்டது. அக்கதை பிரசித்தம். அப்படியே நாத்திகப்புலிக்குத் துண்டிக்கப்பட்ட அத் தமிழ்ச் சைவ எருதுகள் இரைதான். அந்நவீனர் அதையறியார். அவ்வர்ச்சனை வந்துவிட்டால் அந்நாத்திகரும் ஆத்திகராய்விடுவராம்: அப்படிச் சொல்கிறா ரவர். அது சைவ மக்களை ஏய்க்கவேயாம். அவ்வர்ச்சனைக் கொள்கை முழுநாத்திகம். ஆத்திக வாசனை தானும் அதிலில்லை. ஒரு சமயக் கொள்கையை இன்னொரு சமயி ஆதரித்தால் ஆதரிக்கிற சமயி தான் அக்கொள்கையையுடைய சமயத்திற் போய் வீழ்கிறான். அக்கொள்கையை யுடைய சமயத்தைச் சேர்ந்தவன், ஆதரிக்கற வனுடைய சமயத்திற் போய விழவில்லை. அதனை யறிக, அம்முறையில் அந்நவீனரே அவ்வர்ச்சனைக் கொள்கையை யாதரித்து நாத்திகச்சேற்றைப் பூசிக் கொள்கிறார். அதனால் நாத்திகத்துக்கு இரை அதிகங்கிடைக்கும். நாத்திகர் மகிழ்வர். ஆனால் ஆத்திக ராகார். இன்னும் தமிழர்ச்சனை யென்பதில் நாத்திகர் விரும்புவது தமிழே. அர்ச்சனை யன்று. அந்நவீனரும் அப்படியே. ஆகலின் அவர் அந்தரங்க நாத்திகரே.
 
பாமரத்தமிழர் சிறுபகுதியினரா? அவருக்குத் தமிழாவது எழுதப்படிக்கச் சரியாய்த் தெரியுமா? அவர் சம்ஸ்கிருதம் படிப்பதெங்கே? அவர் தம் கொச்சைத் தமிழிற்றானே இறைவனை வேண்டுவர்? அவன் அதனைக் கேளானா? அவருக்கருளானா? அவருக்குச் சம்ஸ்கிருத மந்திரத்தை ஏன் விடான்? இப்படி வாதிப்பர் அந்நவீனர். பாமரர் பண்டதர் எல்லோருமே தம் குறைகளைக் கொச்சைத் தமிழிற்றான் முறையிடுவர். அது இன்றும் நடைபெற்றே வருகிறது. இறைவன் அதற்கிரங்கானென யாருஞ் சொல்லவில்லை. ஊமைகளுக்குக் கொச்சைத் தமிழும் வராது. அவரும் முறையிடுகின்றனர். அவனருள்வதுமுண்டு. அதனைக் காட்டிக் கொச்சைத் தமிழ் மந்திரமும் வேண்டாமென்றால் அந்நவீனர் என்ன செய்வர்?
 
பாமரத்தமிழருக்குத் திருமுறைகளுந்தான் ஏன்? அம்மந்திரங்களும் வேண்டாம். அவர் கொச்சைத் தமிழே அவருக்குப் போதும். மனங்கலந்த பத்தி வழிபாடு நிச்சயம். ஆனால் திருமுறை மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அதனால் அப்பாமரத் தமிழரை அவரும் புறக்கணித்தவராகிறார்.
 
மேலும் சம்ஸ்கிருத மந்திரத்தை வெறுப்பவர் பாமரா? அல்லர். அந்நவீனரே. அவர் பாமரத் தமிழருக்குப் பரிவு காட்டுவதுபோல் நடிக்கின்றனர். அவ்வழிபாட்டிற்கு அம்மந்திரம் தடை: அப்படி அப்பாமரரைக் கொண்டும் சொல்விக்க வேண்டும். தம்கொள்கை வலுக்கும், அவர் நம்பிக்கை அது. அதற்கே அந்நடிப்பு உதவுகிறது. ஆனால் குரான் முதலில் அரபு மொழியில் தோன்றியது. இப்போது அதற்குப் பல பெயர்ப்புகளுள, உலகத்து இசுலாமியரும் பல பாஷையினர். அவருள்ளும் பாமரரே பலர். ஆயினுமென்? அத்தனை கோடிப்பேரும் பயபக்தியுடன் ஓதியும் மதித்தும் வருவது அரபுமொழிக் குரானே. உலகெங்கு முள்ள கத்தோலிக்கரும் பல மொழிகளுக்குரியர் தான். அவருள்ளும் பாமரர் வெகுபேர். இலத்தீன் அச்சமயத்துப் பாஷை. அவரெல்லாம் தம் சமய விஷயத்தில் அம்மொழி வாக்கியங்களையே போற்றுகின்றனர். குரானை வெறுக்கிற பாமர இசுலாமிய ருளரா? இலத்தீனை வெறுக்கிற கத்தோலிக்கப் பாமர ருளரா? அப்படியே சம்ஸ்கிருத வேத மந்திரங்களை வெறுக்குந் தமிழ்ச்சைவப் பாமரரும் இலர். அவர் அவற்றை மதிக்கவே செய்வர். ‘அவன் சொல்வது வேத வாக்கா? வேத விதியா? நான் ஏற்றுக் கொள்ள ‘ என்பது உலக வசனம். அதுவே இன்றும் சான்று. அவ்வேதாகமங்களும் அவரைப் புறக்கணிக்க வில்லை. அவர் பால் வைத்த கருணையாலேயே அவை தோன்றின. அவற்றைக் கற்க. அவ்வுண்மை புலனாம்.
 
மேலும் அவற்றுக் காசிரியர் பரமசிவனார். அவரொருவரே பரமாப்தர். அவரைக் காட்டிலுமா அந்நவீனர் கருணையுடையார்? ஆனால் பரமசிவனார் கற்றவர் விழுங்குங்கற்பகக்கனி, கல்லார் நெஞ்சில் நில்லார். அவ்வுண்மையை மறுக்க முடியாது. ஆயினும் அவர் பாமரரைப் படிப்படியாயேற்றிப் பண்டித ராக்கியே அவருள்ளத்தில் விளங்குவார்.
 
உலகத்தில் இரண்டு சமயங்களைக் கலக்க முடியுமா? அவற்றை ஒரே சமய மாக்க முடியுமா? அவை எவனாலும் முடியா. அவ்விரண்டு சமயங்களையும் அக்கலவையழிக்கும். இன்றேல் அக்கலவை மூன்றாஞ் சமயமாகும். அப்படியிருக்க எல்லாச் சமயங்களையுமே கலக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அ·தாவதென்ன? அவற்றையெல்லாம் அழிக்க வேண்டுமென்பதே யாம். அல்லது சமயங்களின் எண்ணைப் பெருக்க வேண்டு மென்பதாம். அல்லது அக்கலவையில் ஏதேனுமொரு சமயத்தைக் கரவாகப் புகுத்த வேண்டுமென்பதாம். அதில் மற்றொரு குறையுமுண்டு. என்னை? எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படையொன்றே, ஆகலின் எவரும் எச்சமயத்தையும் ஆசரிக்கலாம்: அவர் சொல்வது தது. அது தான் அவருடைய சமரசப் பிரசங்கம். அச்சமரசம் அவருக்கு வெகுப்பிரியமானது. அச்சமரசமாவது யாது? அது தான் விபசாரம். சமய விபசாரமே சமய சமரசம். வரம்பழியாத சைவாசாரமுடையார் பலர். அவரெல்லாம் சைவசமய வெறியராம்: அவர் பிதற்றலது.

 

கற்பு வரம்புள் நிற்பாள் ஒருத்தி. அதனால் அவள் ஒரே கணவன் பால் ஆசை கொண்டவள். அவளை அக்கணவன்பால் வெறி கொண்டவள் என எண்ணலாமா? அப்படிச் சொல்லிப் பரிகசிக்கிறாள் இன்னொருத்தி. அவள் எப்படிப்பட்டவளா யிருப்பாள்? அப்பரிகாசம் போன்றதே அப்பிதற்றலும். அதனால் சூழ்நிலை கீழ்நோக்கியது. அதற்கிரையானார் அச்சைவருட் சிலர். அவர் அச்சமரசபதத்தைக் கேட்டனர். அது கெளரவார்த்தமுடையது போல் அவருக்குப் பட்டது. அன்றியும் சைவப் பிரமாண சாத்திரங்களை அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லை. ஏன்? அந்நவீனருக் கேற்ற சுவடிகள் பல. அவற்றை யெல்லாம் அவர் பிரமாணங்களெனக் காட்டினர். அதனால் சைவசமய வரம்பு கலகலத்தது. மேலும் சாத்திர வரம்புள் நின்றே சைவத்தை யாசரிக்க வேண்டும். அதுதான் சைவக்கற்பு. அக்கற்பைக் காத்தலும் அச்சைவருக்குக் கஷ்டமா யிருந்தது. சூழ்நிலையும் அக்கஷ்டத்துக் கேற்புடைய தாயிற்று. ஆகையால் அச்சைவரும் அவ்விபசாரத்தி லிறங்கினர். ‘அழிந்த பிறகு அண்ணனோடு போனா லென்ன? தம்பியோடு போனா லென்ன?’ அது பழமொழி. அவர் அதைப் புதுக்கினர். அவருட் சிதறலுண்டாயிற்று. சமய மாற்றத்துக்குக் காரணம் பலவாகலாம். ஆனால் சைவருள் வேறு சமயங்களிற் புகுவார்க்கு அவ்வரம்பின் கலகலப்பே காரணம். அச்சிதறியவர் வேறு சமயங்களிற் புகுந்தனர். ஒரு சிலர் நாத்திகருமாயினர்.அதிலென்ன விநோதம்? மேலும் அவரெல்லாம் சைவத்தை விடு வெளியேறியவர். விபசார பிரதி பத மாகிய அச்சமரசம் அம்மட்டில் ஓயவில்லை. சைவசமயமாகிய கிருகத்தில் இருந்து கொண்டே சமயவிபசாரஞ் செய்வாருமுளர். அச்சோரரும் எண்ணற்றபேர். அவரையும் அது சிருட்டித்துவிட்டது. அநியாயம்! இப்படியிருந்தால் நாத்திகம் ஏன் பரவாது?

 
மனங்கலந்த சிவபத்தி வழிபாடு எங்கிருந்து வரும்? அத்தனை கேட்டுக்குங் காரணம் எது? அந்நவீனரின் அச்சமரசக் கொள்கையே. ஆனால் அக்கேடு சம்ஸ்கிருத மந்திரங்களால் வந்ததாம். அவர் சொல்கிறார். அது பொய்.
 

சைவ சமயந் தோன்றியது என்று அன்றே அதன் அநுட்டானத்துக் குரிய விதிநியமங்களுந் தோன்றியிருக்க வேண்டும். அது முந்தியும் அவை பிந்தியுந் தோன்றா. அதையாக்கிய பரமசிவனாரே அவற்றையும் ஆக்கினார். அவற்றைவிட்ட மாந்தர் அதனையும் விட்டவரே. தமிழ் மந்திரக் கொள்கைக்கு மூலவசனமே யில்லை. சமீப காலத்துத் தமிழ் வெறியின் விளைவே அக்கொள்கை. அதனால் சம்ஸ்கிருத மந்திரங்களைப் பெயர்த்துக் கோடல், திருமுறைப்பகுதிகளை மந்திரங்களெனக் கோடல், புதுத் தமிழ் மந்திரங்களைச் சிருட்டித்துக் கோடல் ஆகிய குழப்பங்கள் தலை தூக்கின. அக்கோடல்கள் பொருந்துவனவே யாகுக. அவற்றைச் செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் வேண்டும். அவராவார் யார்? தனி மனிதரா? குழுவினரா? அவ்வதிகாரத்துக்கு வேண்டப்படும் தகுதி யாது? அ·தவரிடமுண்டா? அவ்வதிகாரம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? மக்களிடமிருந்தா? ஆமெனின், இப்போது சம்ஸ்கிருத மந்திரங்கள் வழக்கத்தி லிருந்து வருகின்றனவே; அவையும் அக்காலை அப்படித்தான் வந்தனவா? எதிர்காலத்திலும் சைவமக்கள் தோன்றுவர். அவரும் தமக்கிஷ்டமான அதிகாரிகளை நியமிக்கலாம். முந்தையோர் கொடுத்த மந்திரங்களை அப்பிந்தையோர் மாற்றுவர். அம்மாறுதல் அடிக்கடி நேரக்கூடும். மந்திரங்களே வேண்டா மென்கிற கட்சியும் உருவாகலாம். அதுவும் பெரும் பகுதி வாக்குச் சீட்டு பெறமுடியும். அதனால் மந்திரங்ளென்பதே மறையும். அவை வல்லாரும் இல்லாற் போவர். சைவாசாரத்திக்குப் பிரமாண சாத்திர சம்மதந் தானே வேண்டும். வெகுஜன சம்மதமும் ஏன்? சாஸ்திரம் ஸ்திரமா? ஜனம் ஸ்திரமா? அவற்றுள் பிரதானமாவதும் எது? அவ்வதிகாரிகள் செய்தனவற்றை மந்திரங்களென எலாதாருமிருப்பர். அவரை யார் என் செய்வர்? அவரவர் தத்தமக் கிஷ்டமான மந்திரங்களை யாக்கிக் கொண்டா லென்னை? இன்னும் அவ்வதிகாரங் கொடுத்தவர் பாமரரும் பண்டிதருமா? பண்டிதர் மாத்திரமேயா? பண்டிதரே யெனின், அவர் தமிழ்ப் பண்டிதரா? சைவ பண்டிதரா?



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

சம்ஸ்கிருத மந்திரங்கள்

சந்திராங்கத னென்பா னொருவன். அவன் இவ்வுலகத்தரசன். அவன் நாகலோகஞ் சென்றான். நாகரசனும் அவனும் சந்தித்தனர். அந்நாகராசன் அவனை நோக்கி ‘நீங்கள் திறந்தெரித் தேத்துந் தேவன் யார்?’ என்றான். அதற்கவன் ‘கங்கையை முடியிற் சூட்டிக் கவுரியை பாகம் வைத்துப்- பொங்கர வங்கடம்மைப் புரிகுழை யணிந்து பாதச் – செங்க மலத்தை வேதச் சிரத்தினி லிருத்தித் தேவ – ரங்கைகள் கூப்ப நின்ற வவனெம்மை யளிக்குந் தேவே’ என்று விடை கொடுத்தான். உடனே அந்நாகராசன் ‘சிறியனீ யாயுமென்முன் சிவனது தகுதியெல்லா – மறிவுற மொழித லாலேயருங்களி யெய்து கின்றேன்’ என்று கூறி மகிழ்ந்தான். சந்திராங்கதனுக்குப் பல வரிசைகளுங் கிடைத்தன. இச்செய்தியைச் சைவ சமய சிரோமணியாகிய வரதுங்கராமபாண்டிய மகாராசர் தெரிவிக்கிறார். இதனால் சைவசமயத்தின் வியாபகம் புலனாகும்.

பிரமனுலகம், விட்டுணுவுலகம், இந்திரனுலகம் முதலிய வுலகங்கள் பல. அவை சாத்திரப் பிரசித்தம். அங்கும் சீவ வர்க்க முண்டு. பாஷையிருக்கும். அப்பாஷை ஒன்றேயாகலாம், பலவு மாகலாம். அவ்வுலகங்களின் தலைவன் மாரும் ஏனைச் சீவரும் இப்பாரத தேசத்துக்கு வருவர். இங்குள்ள சைவாலயங்களில் பரமசிவனாரை ஏத்தித் தொழுவர். அ·தென்று முள்ள வழக்கம். ‘முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி…..இமையவர் பரவி யேத்த’, ‘வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவியேத்த’, ‘இந்திரன் பிரமனங்கி யெண்வகை வசுக்களோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த’, ‘வானவரிருக்கொடும் பணிந் தேத்த விருந்தவன்’, ‘அருமறையால் நான்முகனும் மாலும் போற்றுஞ் சீரானை’, ‘புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட’, ‘அண்டர்தமக் காகமநூன் மொழியும்’ என்றது திருமுறை. அவ்வேதாகமங்கள் சம்ஸ்கிருதமே. அவ்வானவ ரனைவரும் அம்மந்திரங்களைச் சொல்லியே துதிக்கின்றனர். அவ்வடிகளிற் காண்க. அரக்கரும் இருக்கு மந்திரங் கொண்டே துதித்தார். ‘முன்கைமாநரம்புவெட்டி முன்னிருக் கிசைகள் பாட’, ‘மந்திரத்த மறைபாட வாளவனுக்கீந்தான்’ என்ற திருமுறை காண்க. அவ்வடிகலில் இராவணன் செய்தி கூறப்பட்டது. இவற்றால் சைவ சமயத்தின் வியாபகம் புல னாவதோடு வேத சிவாகமங்களின் வியாபகமும் புலனாகும்.’ எண்டிசைகள் கீழுலக மேலுலக மெங்கு – மண்டுமறை யன்றியில் வழங்குவ….’ எனப் புராணமும் அதை யாதரிக்கிறது.

சம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது – நன்னூல் விருத்தி.

சம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது என்றது நன்னூல் விருத்தி. அதற்கு மூலவசனங்கள் வேண்டுமே. மேற்காட்டிய ‘முந்திய் தேவர்’ என்றது முதல் ‘அண்டர் தமக்கு’ என்றது வரையுள்ள திருமுறை யடிகளே அவை. இன்னும் கலை விளங்கிய மக்களுக்கும் வானவ ராதியோரும் சந்திக்க நேரும். அப்போது அவர் அம்மொழியிற்றான் பேசிக்கொள்வர். தமயந்தி சுயம்வரம் நடந்தது. அதில் பல நாட்டரச குமாரரும் வானவருங்கூடினர். அவர் பேசிக்கொண்டது அம்மொழியே. அதை இரு மொழி நைடதத்திலுங் காண்க. இதனால் சம்ஸ்கிருதத்தின் வியாபகமும் புலனாகும். ஆகவே அகில புவனங்களுக்குமே உரியதாகிய சைவசமயத்தின் சர்வபிரமாண நூல்களாகிய் வேதசிவாகமங்களை அப்புவனங்களுக்கும் பொது மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அச்சமய முழுமுதற் கடவுளாகிய பரமசிவனாரருளிச் செய்தார். இப்பேருண்மை அந்நவீனர் தலையில் ஏறுமா? அவர் தான் தமிழ் வெறி கொண்டலை கின்றனரே.

இனிக், காசுமீரச் சைவர் இராமேசுவரத்துக்கு யாத்திரை வருவர். இராமநாதாலயத்தில் மந்திரங்கள் ஓதப்படும். அவருக்கு அவற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். தமிழகச் சைவர் காசிக்கு யாத்திரை போவர். விசுவநாதால்யத்திலும் அவை ஓதப்படும். அவருக்கு அவ்ற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். அவ்விரண்டாலய மந்திரங்களும் பொதுவாயதொரு மொழியிலிருந்தாற்றான் அது சாத்தியமாகும். சைவாலயங்கள் எல்லா மாகாணங்களிலுமுள. அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதப்படும். அவற்றின் பொருளுந் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அம்மொழி அம்மாகாணங்களுக்கும் பொதுவாயிருத்தல் நல்லது. சம்ஸ்கிருதமே அப்படியிருப்பது. ஆகலின் அம்மொழி மந்திரங்களே சகல சைவாலயங்களிலும் ஓதப்பட்டு வரலாயிற்று. திருப்பழுவூர் என்பது ஒரு தலம். அவ்வூர்ச் சிவாலயத்தில் ‘அந்தணர்களானமலை யாளரவ ரேத்’துகின்றனர். அவர் சொந்த மொழி மலையாளம். ஆயினும் அம்மொழி மந்திரங்களை அவர் அங்கு ஓதவில்லை. ‘வேதமொழி சொல்லி’ (அம்) மறை யாளரிறைவன்றன் பாதாமவை யேத்’தியே அர்ச்சிக்கின்றனர். வேதமொழி – சம்ஸ்கிருத மந்திரம். திருச்செந்தூர் முதலிய சில ஆலயங்களுள. அங்கு அம்மலையாளர் வந்து அர்ச்சிக்கின்றனர். அ·தெப்படியோ நேர்ந்து விட்டது. ஆனால் அங்கும் அவர் ஓதுவன சம்ஸ்கிருத மந்திரங்களே. அதையுங் காண்க.

மாகாணந்தோறும் சைவாலயங்களுள, அவற்றை அவ்வம் மாகாணத்துச் சைவர்கள் தம்பொருட் செலவில் நிருமித்திருக்கலாம். ஆயினும் அவ்வெல்லா வாலயங்கலும் வேத சிவாகம விதிப்படிதான் நடந்துவரும். ஒன்றிரண்டில் அவ்விதி சிறிது திறம்பி யிருக்கலாம். அவற்றைத் திருத்திகொள்ள வேண்டும். அவ்வாலயங்களின் பொருட்செல்வம் அவ்வம் மாகாணத்துச் சைவமக்களுக்கே உரியதாகுக. ஆனால் ஒரு மாகாணத்துச் சைவமக்களுக்கு மற்ற மாகாணங்களிலுள்ள சைவாலயங்களும் சேவாயோக்கிமாயிருந்துவர வேண்டும்: இருந்தும் வருகின்றன. அவருக்கு அவற்றைச் சேவிக்கு முரிமை மறுக்கப்படவுங் கூடாது: மறுக்கப்படவில்லை. அவை வேதசிவாகம முறையில் நடந்துவருவதே அதற்கு அனுகூலமாம். அவ்வளவில் அவ்வெல்லா மக்களுக்கும் அவ்வெல்லா வாலயங்களும் பொதுவுடைமையே. அதில் தடையிருக்க முடியாது.

 

இன்னும் இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த் சிவலிங்கமே இராமநாதர். நளனும் வடநாட்டானே. அவனே திருநள்ளாற்றுச் சிவாலயத்தைக் கண்டான். இந்திர லோகத்தாரே திருவாரூர்த் தியாகராஜர். சம்ஸ்கிருத வேதம் பிரதிட்டித்ததே திருமறைக் காட்டுச் சிவலிங்கம். தமிழகத்துக்கு வெளியே ஈசான திக்கிலிருந்து வந்தவரே பாண்டியன் மகளை மணந்து சோமசுந்தர பாண்டியரென மகுடந் தரித்துத் தென்னாடுடைய சிவனாகித் திருவாலவாய்ச் சொக்கலிங் ரானார். விநாயகர் வடநாட்டுத் தெய்வமாம். அதனை மெய்யெனக் கொண்டால் அவரும் வடவரே. அவ ரியற்றியதே திருச்செங்காட்டங்குடிச் சிவாலயம். கந்தபுராணக் கந்தரும் வடநாட்டவராம். அதை யொத்துக்கொண்டால் அவ்வடவர் செய்தது திருச்சேய்ஞ்ஞலூர்ச் சிவாலயம். பிரமன், விட்டுணு, இந்திரன் முதலியோர் வேற்றுலகத்தவர். அவர் இத்தமிழகத்தி லாக்கிய சைவாலயங்களும் பல. அவ்விராமன் முதலியோர் தமிழ ரல்லர், தமிழு மறியார். ஆயினுமென்? அவரெல்லாம் சைவசமயத்தினர். பாரத தேச முழுவதும் சைவஸ்தான். ஆதலால் அவருக்கும் அச்சமயம் பற்றித் தமிழகமும் உரியதாயிற்று. இங்கும் அவ்வாலயங்களை அவர் ஆக்கினர். சில சைவாலயங்கள் விண்ணசி விமானங்கள். தமிழகத்துக்கும் அதிலுள்ள சைவாலயங்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவு தான். ஆனால் அவ்வாலயங்க ளனைத்தும் எல்லாச் சைவருக்கும் பொதுவுடைமை. அதனால் தமிழ்ச்சைவர் அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கின்றனர், எப்போதும் சேவிக்கின்றனர். அவ்வுரிமை அவருக்கு கிடைப்பதாயிற்று. அச்சைவர் தம்மைத் தமிழரென்று மாத்திரஞ் சொல்லிக் கொள்ளட்டும்: அப்போதே அவருக்கு அவ்வுரிமை போயிற்று. அவர் அவற்றுக்கு வெளியிற்றான் நிற்க வேண்டும். மீறுவது பலாத்காரமே. அவற்றின் பொருட் செல்வம் அவருடைய தன்று, சைவருடையதே. தமிழருடையதென வாதிப்பாரு மிருக்கலாம். ஆயினும் அது சைவ சமயத்துக் கெனவே கொடுக்கப்பட்டு விட்டது, பிறகு அவர் அதில் உரிமை பெற முடியாது. அவர் சைவ சமயத்தவராகுக. அவ்வுரிமை பெறலாம்.

மாகாண மொழி மந்திரக் கிளர்ச்சிக்கு மூலம் சமயாபிமான மன்று, மொழி வெறியே. அவ்வாலயங்கள் பொதுவுடைமையா யிருந்து வருவதை அம்மந்திரம் அடியோடு கெடுத்துவிடும் எப்படி? அம்மந்திரம் புகுத்தப்படட்டும்: தமிழகச் சைவருக்கு ஆந்திரச் சைவாலயங்கள் சேவாயோக்கிய மாகுமா? ஆகா. ஏன்? அங்குத் தெலுங்கு மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. ஆந்திரச் சைவருக்குத் தமிழ் சைவால்யங்கள் சேவாயோக்கிய மாகுமா? ஆகா. ஏன்? அங்குத் தமிழ் மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. இப்படியே பிறவும். அப்போதும் அவை பொதுவுடைமையாக வேண்டும்; என் செய்வது? ஒவ்வொரு மாகாண மொழிக்குரிய சைவரும் எல்லா மாகாணங்களின் மொழிகளையுங் கற்க வேண்டும். அது முடியுமா? மேலும் அது தேளுக்கஞ்சிப் பாம்பின் வாயிற்பட்டது போலாம். ஆகவே ஒரு மாகாணத்துச் சைவருக்குப் பிறமாகாணங்களிலுள்ள நூற்றுக்கணக்கான சைவாலயங்கள் சேவாயோக்கியமாகாதபடி அம்மந்திரங் குறுக்கிடுகிறது. அது சைவசமயத்துக்குப் பெருங்கேடு. அக்கேட்டுக்குப் பாமரரும் பண்டிதருமே யிரையாவார். பாமர சகாய நவீனர் அதை யோரார். ஆனால் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதுக. அக்கேடில்லை. அவ்வோது கையில் சிவ சங்கர சம்பு ஹர உமா பார்வதி விநாயக சுப்ரமண்ய முதலிய சப்தங்களாவது எங்கும் ஒன்று போல் ஒலித்துக் கொண்டிருக்கும். பாமரர் அவற்றைக் கேட்டு மகிழ்வர். அதுவே அவருக்கிலாபம்.

தமிழ் மந்திரப்பித்து அந் நவீனரை அவ்வளவில் விடாது. அம்மந்திரத்துக் கியைந்த கிரியைகள் வேண்டும். இப்போதுள்ள கிரியைகள் இயையா. அவற்றையுந் தாறுமாறு செய்ய அப்பித்துத் தூண்டும். சைவாலயங்களில் திருவுருவங்கள் பல. அவர் அவற்றுட் சிலவற்றை அகற்றுவர். சிலவற்றை மாற்றுவர். புதிய சிலைகளையும் நடுவரவர். அவற்றுக் கெல்லாஞ் சிறப் பொடு பூசனை வேண்டுமே. அதற்கு விதியேது? முறையேது? அவர் வைத்ததே வரிசை. ஆகவே அச்சிறப்பும் பூசனையுஞ் சீர்குலையும், இனிப் பாவனையின் கதியென்ன? சிவோகம்பாவனை விடை பெற்றுக் கொள்ளும். அவர் தமிழோகம் பாவனையை செய்வார் அந் நவீனர். அப்பாவனைக்கு முத்தித்தானம் தமிழுலகம். அவருக்கு இலயமே யிராது. ஏன்? இலயித்தாலும் அவர் மீண்டும் இங்குதான் வருவார். அவருடைய போக்கு வரவுக்கு முடிவேயில்லை. மீளாப் போக்கிடம் அவருக்கேது? அவரதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அவ்வதிர்ஷ்டம் பிறமொழிச் சைவருக்கும் வரவேண்டும்: அந்நவீனரின் கருணையுள்ளம் அது. வந்தால் அச்சைவருக்கும் அவர் மகாணங்களுக்குமுள்ள பந்தத்துக்கும் அந்தமில்லை. இப்படி அந்நவீனரால் வேதாகமோத்த மந்திரங் கிரியை பாவனைகளெல்லாம் நாசமாகும். அம்மட்டோ? தீர்த்த யாத்திரை, தலயாத்திரை முதலியவும் சிவபுண்ணியங்கள். அவற்றிலும் அவர் கொள்ளி வைப்பவரே.

சைவாலயங்களென்பது சமயம் பற்றிய பெயர். மாகாணமொழி மந்திர நுழைவால் அப்பெயர் மறையும். தமிழாலயங்கள் தெலுங்காலயங்கள் முதலிய பெயர்களே பெருவழக்காய் விடும். அவை மொழிபற்றிய பெயர்கள். அந்நவீனர் மொழிக்கே முதலிடங் கொடுப்பர். அச்சமய நிலயங்கள் அப்படிப் பாஷா நிலயங்களாக மாறாலாமா? அதற்கிடங்கொடுப்பது தான் சமய சேவையோ? அன்று அன்று. சமயத்தைப் பாஷையின் கால் மாட்டிற்கிடத்திப் படுகொலை செய்வதே அது. சம்ஸ்கிருதத்துக்கென ஒரு மாகாணமோ இனமோ குலமோ இல்லை. சமயம் பற்றியே அம்மொழி மந்திரங்கள் எங்கும் அங்கீகாரமாயின. ஆகலின் சம்ஸ்கிருதாலயங்களென்றே பெயர் வராது. நாளிதுவரை அப்பெயர் வழங்கவுமில்லை. சைவாலயங்களென்ற பிரசித்தமே எங்கு மாம்.

சைவாலயங்கள் வைணவாலயங்கள், மசூதிகள், மாதா கோவில்கள், பிற சமயங்களின் கோயில்கள் ஆகியவை சமய நிலயங்கள். அவற்றை மொழி நிலயங்களென்னலாமா? பெயரை மாற்றினாற் போதும். பொருளை யபகரிப்பது வெகுசுலபம். நாத்திகத் தமிழரும் அச்சமய நிலயங்களின் பொருட்செல்வத்தில் உரிமை பெற்றுவிடுகிறார். அன்றியும் ஒரு சமயத்தார் இன்னொரு சமயத்தின் நிலயங்களிற் போய் விழுந்து உரிமை கொண்டாடி உழக்குவர். ஏன் செய்யார்? அவரனைவருந் தமிழரே: அந்நிலயங்களெல்லாந் தமிழருடைமையே: அப்படி அவர் தம் செயலுக்கு அம்மொழியின் பொதுமையைப் புகலாகக் காட்டுவர். அம்மொழிப் பொதுமை சைவநிலயங்களையே அதிகம் பாதிக்கிறது. அவற்றின் தலைவர் அவற்றின் பொருளை அன்னிய சமயங்கள் பற்றிய பிரசாரங்கள், நூல் வெளியீடுகள், கட்டடங்கள் முதலியவற்றுக்கெல்லாங் கொட்டிக் கொடுக்கின்றனர். ஏன்? அவையெல்லாந் தமிழாம். அந்நவீனர் பேச்சைக்கேட்டு அப்படி மோசம் போவானேன்? ‘தன்கையாயுத முந் தன்கையிற் பொருளும் பிறன் கையிற்கொடுக்கும் பேதையும் பதரே’. அது ராஜவாக்கியம். அத்தலைவர் அதை யோர்க. அந்நவீனர் செயல் இன்னும் பல கேடுகளைத் தர விருக்கின்றது. எதிர்காலத்தைச் சிந்திக்க. முட்டின பிறகு குனிய வேண்டாம். வேத சிவாகமங்களின் ஆட்சிக்கு எல்லையெது? அதுவரை சைவாலயங்கள் பொது. தமிழகத்துச் சைவாலயங்களுக்கு மாத்திரம் தமிழகத்தளவிலா எல்லை? அவ்வளவில் வகுக்க விரும்புகின்றனரவர். அது சைவத் துரோகம். அதைக் களைந்தாக வேண்டும்.

பாரத தேசத்தில் சுதந்திரப்போர் நடந்தது. அப்போது எங்குங் கிளம்பிய கோஷம் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்பன. இப்போது ஜனகணமன, ஜெண்டா ஊஞ்சா என்பன தேசிய கீதங்கள். அவையெல்லாந் தமிழல்ல. அவற்றுக்குப் பொருள் தெரியாத தமிழர் பலராவார். அவர் அவற்றைத் தமிழிற் பெயர்த்தா முழங்கினர்? அந்நவீனராவது அப்படிச் செய்தனரா? அவரும் பிற மாகாணத்ரோடு சேர்ந்து கொண்டு அவ்வயல் மொழிகளையே மண்டை பிளக்கக் கத்தினர். அவ்விஷயத்தில் அவருக்கு அயல்மொழிப் பகைமையுந் தமிழ்மொழிப் பற்றும் மண்மூடிப் போயின. ஆனால் சமய விஷயத்தில் அவர் தமிழ் தமிழ் என்று துள்ளுகின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணம். அவர் நடுநிலை அது. ஆயினும் அவ்வந்தேமாதர ஜெய்ஹிந்த் கோஷங்கள் இத்தேசத்துக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தன. அவரும் சுதந்திர புருஷராயினர். அவர் வாயிலும் அத்தேசீய கீதங்களே இப்போதுமுள்ளன. அப்படியே சம்ஸ்கிருத மந்திரங்களும் சைவமக்களுக்குப் பேரின்ப வாழ்வை யெய்துவிக்கவே செய்யும். ஆகலின் சைவாலயங்களில் அவையே ஓதப்படவேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

தமிழ் வெறி

தமிழர் தமிழைப் போற்றுக. அ·தவசியம். ஆனாபோற்றுவதென்பதென்னை? பழம் பேரிலக்கியங்களைக் கற்றல், சுவைத்தல், புத்திலக்கியங்களை யாக்கல் இவையே. தமிழ்ச் சைவரும் அது செய்யாமலிருக்க வில்லை. ஆனால் அவருக்கு அதன் மேலும் ஒரு கடனுண்டு. அது தான் சைவ சேவை. அவர் ஏனைத் தமிழரோடு சேர்ந்துகொண்டு அச்சமயத்தைப் புறக்கணியார். அவர் தமிழெல்லாம் அச்சமயத்தையே மகுடமாகக் கொள்ளும். அவருக்குத் தமிழ் மலர், சைவம் வாசனை; தமிழ் உடல் சைவம் உயிர்; தமிழ் மாது, சைவம் மாங்கல்யம், தமிழ் பெட்டகம், சைவம் அணிகலன்; தமிழ் கண், சைவம் ஒளி. அவ்விரட்டைகளை இணைத்துக் காண்க. இன்னும் சைவரே தமிழைக் கண்டார் தமிழரால் சைவத்தைக் காணவே முடியாது. அப்படிக்கொள்வர் அச்சைவர். ஆனால் அந்நவீனர் போக்கு வேறு.

வெறி இருவகைப்படும். நேரிய அபிமானம் மீதூர்வது ஒன்று. நேர்மை திறம்பிய அபிமானம் மீதூர்வது மற்றொன்று. இப்பின்னதே அந்நவீனரிடமிருப்பது, அவருக்குஞ் சில தலைவரிருந்தனர். குருமாரும் அவரே. அவரெழுதிய சுவடிகள் சில. அவற்றில் சைவசித்தாந்த தத்துவங்கள் சிறிது விளக்கப்பட்டிருக்கும். அவை சைவநூல்களிலிருந்து எடுக்கப்பட்டன. ஆனால் அவர் அப்படி சொல்லார். அச்சமயம் தமிழ் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டதாம் ஆகலின் தமிழர் கண்டதாம். அவர் சொல்கிறார். அ·தாவ தென்னை? சைவம் தமிழரை அறிவுடையராக்கவில்லை. அச்சமயஞ்சார்தற்கு முந்தியும் அவர் அறிவுடையராய்த்தா னிருந்தனர். அவ்வறிவே அச்சமயத்தை பின்ன ருண்டாக்கியது என்பதே அது. இப்பகுதி தான் அந்நவீனருக்கு ருசித்தது. அதனால் அவர் தமிழைச் சைவத்தோடு, பிணைத்தே பேசுவர். சைவம் பரவு மிடங்களில் தமிழும் பரவுக, இன்றேல் சைவமும் சிறகொடிந்து தமிழகத்திலே கிடக்க என்கிறா ரவர். அதனால் தமிழுஞ் சைவமும் வாழ்க என முழங்குவர். ஆயினும் அம்முழக்கம் அதிகமில்லை. அவர் தமிழும் சமயமும் வாழ்க வெனவும் முழங்குவர். அதில் சைவம் போய் விடும். சைவம் சிறப்புச் சொல். சமயம் புகுந்து கொள்ளும், சமயம் பொது சொல். அம்முழக்கம் முன்னயதை விட அதிகம். தமிழ் வாழ்க என்பது அவரது மற்றொரு முழக்கம். அதில் சமயமும் போய்விடும். அம்முழக்கம் வானைப் பிளக்கும். ஆனால் சைவம் வாழ்க என அவர் தனித்தெடுத்து முழங்கார். ஏன்?

அவருக்கு நெஞ்சில் சைவம் நஞ்சு; தமிழ் தெய்வம்; ஈ-வே-ரா, வி-என்- ஏ முதல் எல்லாத் தமிழருந் தேவகணங்கள். அவ்வளவிலவர் மகிழுக. இன்னும் சைவம் தமிழர் கண்ட சமயமாகவே யிருக்கட்டும். அதற்காக அவரையும் அத்தமிழையும் பிறமொழிகளுக் குரியார் என்ன செய்ய வேண்டும்? தூக்கித் தலை மேல் வைத்துக் கொள்ள வேண்டுமா? அது செய்ய மாட்டார். அ·தவசியமுமில்லை. ஆனால் அச்சமயம் தமிழின்றித் தமிழரின்றி வியாபிக்கும். அதன் சக்தி அபாரம்.

தமிழ் வெறி வளர்ந்தது. தான் பேசுவது இன்ன தென அவருக்குத் தெரியவில்லை. தமிழரே சிவனைக் கண்டனராம்: அவர் சொல்கிறார். மனிதனே கடவுளை யாக்கினா னென்பர் நாத்திகர். அதில் மனித னென்னு மிடத்தில் தமிழரென்பதையும், கடவுளை யென்னுமிடத்தில் சிவனை என்பதையும், ஆக்கினானென்னுமிடத்தில் கண்டனரென்பதையும் வைத்தார் அந்நவீனர். அவ்வளவு தான். கருத்தில் வேற்றுமை சிறிது மில்லை. அவரும் ஏன் நாத்திகரல்லர்? அவர் சைவ வேடர். ஆனால் நாத்திகநெஞ்சரே.

சில சமயங்களை அச்சமயங்களின் கடவுளர் தந்திருப்பர். சிலவற்றை அவ்வவற்றால் மதிக்கப்பட்ட தனி மனிதர் தந்திருப்பர். அப்படித்தான் எல்லாச் சமயங்களும் சொல்லும். ஹிந்து வென்பது ஒரு சமயமன்று. அதை விடுக. ஆனால் ஓரினத்தால் ஒரு சமயத்தைத் தரவே முடியாது. தமிழரே சைவசமயத்தை உலகிற்குத் தந்தனராம்: போப் என்னும் ஆங்கிலப் பாதிரியார் சொன்னார். அது அவருடைய பாதிரிப்புத்தி. அதனை அப்படியே யெடுத்து அந்நவீனர் விழுங்கினார். இப்போது அதையே தமிழகமெங்கும் அவர் கக்கிவருகிறார். சைவத்தை ஆதியில் இன்ன தமிழ் மகன் தந்தானென அவர் ஒருவனைச் சுட்டிக் கூற வல்லரா/ அவன் பெயர் சொல்லத்தான் அவர் பிறக்கவில்லையே.

கோயில்கள், சிவலிங்க முதலிய திருவுருவங்கள், வழிபடுமுறைகள் முதலியன சாதனங்கள். அவற்றைப் பண்டைத் தமிழரே வகுத்துக் கொண்டனர் என்பர் அந்நவீனர். அவையே முத்தியை யெய்துவிப்பன. அதைக் கொடுப்பவர் பரமசிவனார். ஆகலின் அவரே அவற்றை வகுத்துத் தரவேண்டும். முத்தியை யெய்துதற்குரியரே அத்தமிழரும். அவரும் மலப் புழுக்கள் தான். அவரால் அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது. அவர் பெயரைச் சொல்லி கொண்டு அந்நவீனரும் புதுமுறையர்ச்சனையை வகுக்க முனைகின்றனர். அம்மலப்புழுக்களாலும் அது முடியாது. சைவம் சிவத்தோடு சம்பந்தம். ஆகலின் சைவருக்குப் பரமசிவனாரேயெல்லாம். அவரே முத்திசாதனங்களை வகுத்தருளியவர். அவற்றின் சமூகமே அவ்வேத சிவாகமங்கள். இசுலாமியருக்குக் குரான் எப்படி? சைவருக்கு அவை அப்படி.

 

வேதங்கள் ரிஷிகளின் வாக்கு, சிவாகமங்கள் கோயிலர்ச்சகரின் புனைவு, புராணங்கள் பார்ப்பனரின் புளுகு எனப் புலம்புவர் அந்நவீனர். ஆனால் தமிழிலுள்ள சங்க விலக்கியங்கள் முதற் சகல சைவ விலக்கியங்களும் அவ்வேத சிவாகமங்களைப் பரமசிவ வாக்கு, புராணங்கள் பதினெட்டையும் பங்க மில்லாதன என்றே கூறிப் போற்றுகின்றன. புராண சரிதங்கள் திருமுறைகளிலெங்குங் காணப்படும். திருக்குறளும் ‘இந்திரனே சாலுங் கரி’, ‘திங்களைப் பாம்புகொண் டற்று’, என்றது. ஆகவே பின் வந்த சைவப் பெரு நூல்கள், தொன்று தொட்டுள்ள சைவ மஹாஜன சமூகம், சைவகுரு பரம்பரை ஆகியவற்றுக்கு அம்முதல் நூல்களின் கெளரவம் அங்கீகாரமே. ஆனால் ‘ பலவேதமங்கமாறு மறை நான்கவையுமானார்’, ‘மறைகள் வேதம் விரித்து’, ‘மறையுடைய வேதம்’, ‘அருமறையோடாறங்க மாய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம்’, ‘வேதமாகி யருமறை….தானே யாகி’, எனத் திருமுறையில் சில அடிகள் வருகின்றன. அவர் அவற்றைக்காட்டி வேதம் வேறு மறை வேறு. அவ்வேதம் சம்ஸ்கிருத வேத மாகுக, அம்மறை தமிழ் மறையே என்கிறார். முதலடியில் ‘பல வேதம்’ என்பது ‘அநந்தாவை வேதா:’ என்பதற்குத் தமிழ். ‘மறை நான்கு’ என்பது அவை நான்கான பிறகு பெற்ற பெயர். மற்றை நான்கடிகளிலுமுள்ள ‘வேத’ மாவது இருக்காதிகள். ‘மறை’ யாவது உபநிடதங்கள். ‘வேதத்து மறை நீ’ என்றது பரிபாடல். மறை – உப நிடதங்கள். அந்நூலூரை காண்க. தமிழ் மறையென்ப தொன்றுமில்லை.

பிறகு அவர் சங்கவிலக்கியங்களைத் தொடுகிறார். அவை சொல்லுவதுதானென்னை? புறநானூறு ‘நன்றாய்ந்த நீணிமிர் சடை – முதுமுதல்வன் வாய்போகா- தொன்று புரிந்த வீரிரண்டி-னாறுணர்ந்த வொருமுதுநூல்,’ ‘கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்’,’நாஅல் வேத நெறிதிரியினும்’ என்றும், குறுந்தொகை ‘எழுதாக் கற்பு’ என்றும் திருமுருகாற்றுப்படை ‘மந்திர விதி’ என்றும், பரிபாடல் ‘மாயா வாய்மொழி’, ‘வேத மாபூண் வையத்தே ரூர்ந்து’, என்றுங் கூறின. வேதங்கள் பரமசிவ வாக்கு; அவையே குதிரைகளான சரிதத்தை யுடையன. இத்தனையும் அவ்வடிகளிற் பிரசித்தம். இன்ன பிரமாணங்கள் இவ்விலக்கியங்களில் இன்னும் பல. ஆகலின் அவ்விலக்கியங்களனைத்தும் அப்பேதங்களை அவலம்பித்தனவே. ஆனால் அந்நூல் வேதங்களும் சம்ஸ்கிருத வேதங்கள் தானா? அப்படி அவர் வினாவுவார். இருசுடர் சூரிய சந்திரரே. மூவேந்தர் சேர சோழ பாண்டியரே. நாற் பொருள் அறம் பொருள் இன்பம் வீடுகளே. ஐம்பூதம் பிருதிவி முதலியவே. அத் தொகைப் பெயர்கள் வேறு பெயர்களைக் குறியா. அப்படி நால்வேத மென்பதும் இருக்காதியவற்றையே குறிக்கும். நச்சினார்க்கினியர் கூறிய நால்வேதங்கள் அவற்றின் பூர்வரூபமே. ஆகவே சங்க விலக்கியங்களும் அந் நவீனரை நட்டாற்றில் விட்டது. எஞ்சியுள்ளன மிலேச்ச நூல்கள். அவைதான் அவர்க்குப் பிரமாணங்களாம். அவற்றைக்கொண்டு அவ்வேத சிவாகமங்களின் முதன்மையை அவர் சிதைக்க பார்க்கின்றனர். முடியுமா? அம்மிலேச்ச நூல்கள் மென்முளை. அம்முதல் நூல்கள் வன்மலை.

அவர் கொள்கைக்கு எந்த நூலாவது நூற்பகுதியாவது ஆதரவாயிருக்க வேண்டும். அல்லது அக்கொள்கையைப் புகுத்திக் காட்ட அவற்றில் சந்து பொந்துகளிருக்க வேண்டும். அவைதான் அவர்க்குப் பிரமாணம்.

திருமுறைகள் அதற்கிடமல்ல. ஆகலின் அவற்றுக்கும் அவர் குறை கண்டனர். என்னை? அறிவாராய்ச்சிக்குப் போதுமான சாதனங்க ளகப்படாத காலம் அது; அக்காலத்தவர் அத்திரு முறைகளின் ஆசிரியன்மார்; ஆகலின் அகப்பட்ட வற்றைக் கொண்டுதான் அவரால் பாட முடிந்தது; அ·தவர் குற்ற மாகாது; ஆனால் இப்போது அச்சாதனங்கள் பலவாய்க் கிடைக்கின்றன; புதுக்கருத்துக்கள் உருவாதற்கு அவையே ஏது; திருமுறைகளோடு அக்கருத்துக்கள் மாறுபடக்கூடும்; அதனால் அவற்றைத் தள்ளவேண்டாம் அத்திருமுறைகளை யொதுக்கிவிடலாம். இப்படி வாதிப்ப ரவர். உண்மையில் அவர் அவ்வாசிரியன்மாரின் காலத்தைக் குறை கூறவில்லை; அம்முகத்தால் அவ்வாசிரியன் மாரையும், அத்திருமுறைகளையுமே பழிக்கின்றனர். தம் காலத்தை மதிக்கு முகத்தால் அவர் தம்மையும் தம் சுவடிகளையுமே மதித்துக்கொள்கிறார். எந்த இசுலாமியராவது குரான் விஷயத்தில் இப்படிப் பேசுவரா? மேலும் அந்நவீனர் அம்மிலேச்ச நூல்களைப் பிரமாணமாக்கவேண்டும்; அதற்காகவும் அப்பழிப்பைப் பரப்புகின்றார். ஆனால் உண்மை யாது? அவ்வாசிரியன்மாரினறிவு காலவசமன்று, பிரகிருதி குணவச மன்று, பரமசிவனாரின் திருவருள் வசமானது. ஆகையால் அவரருளிய திருமுறையுபதேசங்கள் முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சத்திமேயாம்.

தமிழ் ஒரு மொழி. அதன் பெயருந் தமிழென்பதே. அம்மொழியும் பெயரும் ஒரு சேரத் தோன்றின. அப்படியே சைவம் ஒரு சமயம். அதன் பெயருஞ் சைவமென்பதே. அச்சமயமும் பெயரும் ஒருங்கு தோன்றின, முன்பின்னகத் தோன்ற வில்லை. அச்சமயம்போல் அப்பெயரும் சர்வகால சர்வஜன சர்வசாஸ்திரப் பிரசித்தம். அப்படியிருக்க அந்நவீனருக்கு மாத்திரம் அப்பெயரில் அசூயை ஏன்? அவர் ஊர்தொறுந் திருக்கூட்டம் ஸ்தாபிக்கின்றனர். அது சைவசமயத் திருக்கூட்டமன்று அதன் பெயர் வேறு. அப்பெயரைப் பார்த்தால் அத்திருக்கூட்டம் சைவசேவை செய்ய வந்ததாகச் சொல்லமுடியாது. அப்பெயர்சேற்றில் நட்ட கம்பம். இழுத்த பக்கமெல்லாம் அது சாயும். அதுவும் சைவ மென்பதன் பிரதிபதமே யென்பாராவார். பிரசித்தமான பெயரை அவர் ஏன் விட்டனர்? அக்கரவு என்றாவது வெளிப்படும். இன்னும் தமிழ்க் கழகத்தை இனிமைக் கழகம், நீர்மைக் கழகம் என வழங்கலாமா? அதற்கு மட்டில் அவ ரிசையார். வடநாட்டில் ஆரியசமாஜம், பிரமசமாஜம், ஸாயிசமாஜம் எனச்சில சமாஜங்களுள. அப்படி யொன்று தமிழகத்திலும் உண்டாக்க வேண்டும். அவராசையது. அதன் விளைவே அத்திருக்கூட்டம். சமாஜம் – கூட்டம். அத்திருக்கூட்டமும் அச்சமா ஜங்களோடு சேரத் தகுந்ததே. அவர் வடவரைவைவர். பிறகு அவர் கொடுக்கைப் பிடிப்பர். மேலும் அச்சமாஜங்கள் அகில பாரதா நோக்கமாவது உடையன. அத்திருக்கூட்டத்துக்கோ தெய்வ முதல் சகலமுந் தமிழ்மொழியே. சைவ மக்களுக்கு அங்கு என்ன வேலை?

அந்நவீனர்பால் இன்ன வெறிகள் இன்னும் பல. இங்கு இவ்வளவு போதும், பிற பின்.

அவருக்கு உபதேசித்தகுருமார் சிலர். அவருள் முக்கியமாவார் இரண்டொருவரே. அவர் போய்விட்டனர். அவர் சீடருள்ளும் பலர் போயினர். எங்கே? ‘புத்திவித் தாரந் தன்னற்பொருகலி வசத்தாற் பூண்ட – வித்தையாற் பொருளிச் சிப்பால் வேதத்தின் வழியைவிட்டுக்-குத்திர மார்க்கங் காட்டுங் குரவனும் புதல்வன் றானும் – பத்திர நரகில்வீழ்வர் பன்னிரத் தியானஞ் சான்று’ என்றது ஒரு தமிழ். அவரெல்லாம் போயிருக்கு. மிடத்தை அதனால் தெரிக. இப்போதுள்ள அந்நவீனரும் அங்கேதான் போக விரும்புகின்றனரா? அன்றியும் தமிழகத்திற் பெரும் பகுதி அன்றே கடலில் மூழ்கியது. காரணம்? அக்காலைத் தமிழர் செய்த தீவினையே. அத்தீவினை எது? சைவத் துரோகம். இன்றேல் அப்பெருங்கேடு சம்பவித்திராது. அந்நிலம் ஆழ்ந்தது. தமிழறிவு நூல்கள் பல மறைந்தன. தமிழர் பலர் செத்தனர். தமிழென்னுங் கற்பனைத் தெய்வத்தால் அக்கேட்டைத் தடுத்துக் கொள்ளமுடியவில்லை. அதன் தவிப்பு அந்தோ பரிதாபம்! இப்போது சிறுபகுதித் தமிழகமே எஞ்சியுள்ளது. அதுவாயினும் நிலைபெற வேண்டும். அந்நவீனர் செய்யுஞ் சைவத்துரோகம் அச்சந் தருகிறது. அவர் விரைவில் திருந்துக. தமிழை விட்டாலுஞ் சைவஞ் சீவிக்கும். சைவத்தை விட்டால் தமிழுக்குச் சீவனமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 முடிப்புரை

தமிழ் மந்திரங்க ளென்பது என்றுமில்லை. அவை அந்நவீனரின் கற்பனையே. அவற்றைத் தமிழகச் சைவாலயங்களில் ஓதவே கூடாது. அவ்வோதுகை சைவசமயத்துக்கு முற்றிலும் புறம்பானது. அங்கு வேதாகமோக்த சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதத் தகுவன. அவற்றையே அன்றே போல், இன்றே போல், என்றும் ஓதிவர வேண்டும். அதுவே சைவ நலம். இவ்விஷய நிரூபணமே இப்புத்தகம். இன்ன எதிர்ப்புக்கள் இன்னுமிருக்கலாம். அவை அந்நவீனரை உறுத்துகின்றனபோலும். ஆயினும் அவர் கொண்டது விடார். தம் கொள்கையைச் சிறிதாவது பலிதமாக்க வேண்டும்: அவர் துடிப் பது. என்னை? தமிழர்ச்சனையை விரும்புவார் ஆங்காங்குளர். அவருக்காகத் தனிப்பட்ட முறையிலாவது அவ்வர்ச்சனையே நடத்தவேண்டும். அவ்வேற்பாடவசியம்: இப்படிச் சொல்கிறாரவர். சைவாலயங்கள் பரார்த்த பூசா நிலயங்கள். அங்குள்ள பூசைகளுக்கு விதிநூல் சிவாகமங்கள். அங்கு வழிபட வருகிறவர் எவரேனுமாக, அவர் விதிநூலுக் கடங்கியே விரும்பவேண்டும். அதற்கு மேல் விரும்ப அவருக்குரிமையில்லை. விதியைக் கடந்த தனிப்பட்ட விருப்பம் இலெளகிகங்களிற்றானுஞ் செல்லாது. இலெளகிக விதிகளே அதை மட்டந் தட்டிவிடும்.

சைவாலயங்களில் அக்கிரமங்கள் மலிந்து விட்டன, அவற்றை யொழிக்கவேண்டும்: அந்நவீனர் கதற லது. அக்கிரமங்களை யெடுத்துப் பேசலாம். அது திறமையன்று. கிரமங்கள் எவை? அவற்றைப் பிரமாண சகிதம் அவர் வெளியிடுக. அவ்வக்கிரமங்கள் தாமே போய்விடும். ஆனால் கிரமப்பிரசாரங்கள் அவர் திருக்கூட்டத்தில் எவரிடமுமே கிடையா. ஏன்? கிரமங்கள் சிவாகம விஷயம். சிவாகமப் பயிற்சி அவரிடம் சூனியம். அன்றியும் சைவாலய நிர்மாணம், பிரதிஷ்டை, உத்ஸவம், அர்ச்சனை முதலியவெல்லாம் சிவாகம விதிப்படி நடப்பன. அ·தாவது அவ்வாலயங்களைச் சிவாகமங்களே ஆட்சி செய்கின்றன என்பது. சைவாதீனங்களிலும் அவ்வாட்சிதானுள்ளது. அந்நவீனர் அவ்வாலயங்களாதியவற்றை அவ்வாட்சியிலிருந்து பறிமுதல் செய்ய பார்க்கின்றனர். நாயகனிடமிருந்து நாயகி வஞ்சனையாற் பிரிக்கப்பட்டாள். பிறகு அவளுக்கு ஆதரவாவார் யாருமிலர். அவள் கதி யென்ன? வல்லவருக்கெல்லாம் அவள் ஆடபடுவாள். அவ்வளவு தான். அந்நவீனரும் அப்பறிமுதல் செய்ய முயல்வதன் மூலம் அச்சைவ நிலயங்களை அந்நாயகிபோலாக்கி வருகின்றனர். அதனால் அவற்றில் எத்தனைபேர் எத்தனை புதுமைகளைப் புகுத்தினர்? அவருள் எவருக்காவது சைவம் சமயமாயிருந்ததா? சிவாகமங்களில் கெளரவ புத்தி யிருந்ததா? அவை சைவசமய தெய்வ விதி நூல்க ளென்ற பிரக்ஞை தானு மிருந்ததா? சைவ சமூகத்துக்கும் அந்நினைவு போக்கப்பட்டது.

சைவசமயம் சிவாகமங்களைப் பரமசிவ வாக்கென்னும் அச்சமயத்துக்கு அவற்றில் விதிக்கப்பட்டனவே தருமங்கள். விலக்கப்பட்டனவே அதருமங்கள். எல்லாச் சமயிகளுக்கும் போல் சைவ சமயிகளுக்கும் அச்சைவ தருமாசரணையிற் பாதுகாப்பளிப்பதே அரசுக்குக் கடன். அப்பாதுகாப்பே பரிபாலனம். அந்நவீனர் அந்நிலயங்களைக் கண்டவர் கொள்ளையாக்கினர். அவை கேட்பா ரற்றின வாயின. போவார் வருவாரெல்லாம் அவற்றில் கைவைத்தனர். அவற்றின் கற்பைக் கலக்கினர். அம்மந்திரியுந் தம் பங்கைச் செய்ய எத்தனிக்கிறார். தமிழர்ச்சனை முதலிய தம் புதுமைகளைப் புகுத்தவும், அதனாற் புகழ் பெறவும் அந்நவீனருக்கும் அப்போதுதான் இயலும். அதற்கேற்பத் தமிழகத்தில் அவருக்குத் திரண்ட செல்வம், அகன்ற கலகலக் கல்வி, உயர்ந்த பதவி, பரந்த செல்வாக்கு, படாடோபப் பிரசங்க சாமர்த்தியம், சாமானியரை அவருக்கு நலஞ்செய்வது போல் நடித்துத் துணை சேர்த்துக்கொள்ளுஞ் சூழ்ச்சித்திறம், பிற பெருமிதங்கள் எல்லாமிருக்கின்றன. அவை நல்ல சாதகங்கள். அவற்றைக் கொண்டு தம் ஆசையை நிறைவேற்ற அவர் முயல்கின்றனர். அதைவிட அடாத செயல் வேறு முண்டோ?

அவ்வக்கிரம நவீனருக்கு – யூதாஸ்காரி யோத்துக்களுக்குப் -புகழ் வரக்கூடும். ஆனால் அது சான்றோரிடமிருந்து வந்த சபாஷ் ஆகாது. ஆகலின் முதலில் அவருடைய அக்கிரமத்தைத் தொலைக்க வேண்டும். சைவ சாஸ்திர விறபன்னரால் அது முடியும். சைவ சமுகத்தில் அவர் அத்தமித்துப் போகவில்லை. இன்றும் எத்தனையோ பேரிருக்கின்றனர். அவர் முற்படுக. சமூகம் பாரம்பரியமாகவே சிவதருமத்தில் ஊறியது தான். அந்நவீனரின் ஆரவாரத்தால் அது தனனை மறந்து கிடக்கிறது. ஆயினும் அது தற்காலிகமே. அவ்விற்பன்னர் தம் கடனைத் தொடங்கட்டும். சமூகம் நிச்சயம் விழித்துக் கொள்ளும். அந்நவீனரைக் கண்டே அவ்விற்பன்ன ரஞ்சுகின்றனர். அவர் காலத்துக்கு முன் தமிழகத்தில் எத்தனையோ சைவத்தமிழ்ப் பெருநூல்கள் மலிந்து கிடந்தன. அவர் தலையெடுத்தனர். அவற்றுட் பல மறைந் தொழிந்தன. அவரே அதற்குக் காரணம். அந்நூல்களை யொழித்த அவர் அம்மொழி யபிமானிக ளாத லெப்படி? அவர் சைவ வேடமும் அவரைச் சமூகத்திற்கு மாற்றிக் காட்டுகிறது. வேடநெறி அவருக்கில்லை. அன்று வைகைக் கரையில் கழுவேறினர் சமணர். அவர் சைவர் பால் வஞ்சந் தீர்த்துக்கொள்ள எண்ணினரோ? அப்படி யானால் அவரே அவ்வேடம் பூண்டு அந்நவீனராய்த் திரிகின்றார். அவர் சுவடிகளே அத்தனைக்குஞ் சான்று. அவ்வுண்மையை அவ்விற்பன்னர் எடுத்துக் காட்டுக. அந்நவீனருக்குக் குலைநடுக்கங் காணும். காலப்போக்கு, உலகப்போக்கு, சமூகப்போக்குகளை யனுசரிக்க வேண்டுமென அவர் அவ்விற்பன்னருக்குப் புத்திகூற வருவர். இலெளகிகத்துக்கு அது சரியாகலாம். சமய விஷயத்தில் அது ஆபத்தே. மேலும் ஆற்று வெள்ளம் மரக்கட்டையை யடித்துக்கொண்டு போகிறது. அக்கட்டைபோலாகுக என்பது அப்புத்தி. அது தகுமோ? அவ்விற்பன்னர் ஆண்மையோ டெழுந்து செயலாற்றுக. சைவ பரிபாலனம் அவர்க்கே கடன். அவர் ஒதுங்கி நின்று அந்நவீனருக் கிடங்கொடுக்கக் கூடாது. கொடுத்தால் அவருஞ் சைவத் துரோகிகளே.

மாகாண மொழிப் பகைமை ஆங்காங்கே தலைத்தூக்குகின்றது. பாரத தேசாபிமானத்தால் அது மறையுமெனச் சொல்ல முடியாது. ஏன்? தேசாபிமானம் பலித்த பிறகு தான் அது புறப்பட்டது. அது மறையவேண்டும். அதற்கு வழியொன்றே. அது தான் சமயாபிமானம். சைவ சமயமே இத்தேசத்துச் சனாதன தருமம். அதை தேசமுழுதும் அறிக. ஆசரிக்க. அதற்கானவற்றை அவ்விற்பன்னர் செய்யட்டும். அப்போது ஆந்திரச் சைவர் சைவத் தமிழ் நூல்களை மதிப்பர். தமிழகச் சைவர் சைவத் தெலுங்கு நூல்களை மதிப்பர். அப்படியே பிறவும். அப்படிச் சமயத்துக்கு முதலிடங்கொடுக்க, மாகாண மொழிகளை அதனுளடக்கிப் போற்றுக. அப்பகைமை யொழிவ துறுதி. அவற்றைமாறிச் செய்தால் அது புகைந்து கொண்டுதானிருக்கும். மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறாமனம், தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடுதிறன், நினைவில் வேறொரு கடவுளை வழிபடாநிலை, இம்மூன்றுமே சைவ சமய மானம். அவற்றை யுடையாரே அதனை யுடையார். அந்நவீனருக்கு அம்மூன்றும் இல்லை. அவரை விடுக. சைவ மக்களுக்குப் பிற சமய தூஷணம் காரியமன்று. ஆனால் சைவ தூஷணத்தை எக்காரணங்கொண்டும் அவர் சகியார். அவருக்கு நாத்திக பயமில்லை. அதனை யொழிக்க அவரால் முடியும். நாத்திகத்துக்குப் பயந்த சமயங்களோடு கூட்டு அவருக்கு அநாவசியம். இறுதியில் அக்கூட்டு கேலிக்கிடமாகும். காங்கிரசுக்குப் பயந்த ஐக்கிய முன்னணிக் கதையைக் காண்க. மேலும் அக் கூட்டால் சமயங்கள் குழம்பும்: எச்சமயியுந் தன்சமயத்தை உள்ளபடி அறிந்து கொள்ளமாட்டான். ஒருக்கால் அரசியல் நிர்ப்பந்தம் அக்கூட்டை அவசியப்படுத்தும். அப்போது அச்சைவர் தம்சமயத்தின் தனி இயல்பைக் காத்துக்கொள்க. அவ்வகையில் அவர் சிறிதும் ஏமாறக்கூடாது. ஏமாறினால் அக்கூட்டு அச்சமயத்துக்கு நாத்திகத்தினுங் கேடாய் முடியும்.

சம்ஸ்கிருதம் ஒரு மாகாணத்துக்கோ, இனத்துக்கோ, குலத்துக்கோ, உரியதன்று. உரியதெனச் சொல்பவர் மடவோரே. சைவத்தை அப்படிச் சொல்பவரும் மடவோர் தான், மாகாண மொழிகளுள் எதிலும் அச்சமயம் அடங்கிவிடாது. எச்சமயத்துக்குமே நாடு, மொழி, இனம், குலம் பற்றிய பெயர் கிடையாது, சைவத்துக்கும் அ·தில்லை. அந்நவீனருக்கு அது தெரியுமா? அவர் கட்டையும் விழும். அதுவரை அவர் தமிழர் சமயம், தமிழர் மதம் என்றே கத்துவர். அப்படியே அவர் காலங்கழியும். குதிரைக்கொம்பு தான் தமிழர் சமயம்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் சைவத்தைத் தமிழர் சமயமென்பாரவர். அது பெயர் மாற்றம். பெயரை மாற்றுவது அடாத செயல். இக்காலைச் சைவத்துக்குக் கேடர் வேறெச் சமயத்தினரு மல்லர். நாத்திகர்தானு மல்லர், அவ்வஞ்சரே, சைவமக்கள் அவரோ டிணங்கிச் சமயதரித்திர ராக வேண்டாம். அவர் சம்ஸ்கிருதத்தையும் பயிலுக! அதிலுள்ள சைவப்பெரு நூல்களையுங் கசடறக் கற்க. அவ்வழியாய்மற்றை மாகாணச் சைவரோடு நூல்களையுங் கசடறக் கற்க. அவ்வழியாய்மற்றை மாகாணச் சைவரோடு அளவளாவுக. அவ்வளவளாவிய வாழ்வு மிக மிக அவசியம். அதுவே அகில பாரத வைதிக சைவ சம்மேளனத்தைக் கூட்டவல்லது. அச்சம்மேளனம் சைவசேவைக்குப் புறப்படட்டும். அச்சமயம் எவ்வளவு விளக்கம் பெறும்! எத்தனை கோடி மக்களுக்குப் பயன் தரும்! அச் சம்மேளனம் இன்றியமையாத தன்றோ? சைவர் அதனை உணர வேண்டாமா? என்று? அன்றே நன்னாள். அவரே சத்தியமான ரோஷமிக்க சைவாபிமானிகள். ஆனால் அவ்வாக்க வேலைக்கு வழியடைக்குங் கல் அந்நவீனரே. அவர் புத்தி தமிழ்ப்பித்துக் கொண்டது. மிகக் குறுகலானது. மிகமிகக் கீழ்த்தரமானது. சைவாபிவிருத்திக்கு அவரை நம்புவதும் ஆற்றைக் கடத்தற்கு மண் குதிரையை நம்புவதும் ஒன்றே. சைவப்பிரச்சார மேடைகளில் ஏற்றுக; அங்கும் அவர் சைவப் பிரச்சாரஞ் செய்யார்; தமிழ்ப் பெருமை, தமிழர் பண்பாடு என்றுதான் கூவுவர். அவரை வைத்துக்கொண்டு சைவமக்கள் என்ன செய்ய? ஆகலின் முதலில் அம்முத்தநாதரை திருத்தியாக வேண்டும். அல்லது அடக்கியாக வேண்டும். அதன் பொருட்டுச் சைவப் பெருமக்கள் இன்றே ஒருப்பட் டெழுக.

சைவமே ராஜாங்க சமயம்; பரமசிவனாரே அச்சமய முழுமுதற்கடவுள். சம்ஸ்கிருத வேத சிவாகமங்கள் அவரருளிய முதல் நூல்கள். அவையே பாரத தேச முழுவதற்கும் சைவசமய சர்வ பிரமாண சாத்திரங்கள். அவற்றோடு தமிழ்ச் சைவருக்குப் பன்னிரெண்டு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், ஸ்ரீ சிவஞான மஹாபாஷ்யமும் சர்வ பிரமாணங்கள். இருமொழிகளிலுள்ள அந்நூல்கள்தான் சைவ சமய சாத்திர வரம்பு. அவற்றோடு ஒத்துச் செல்லும் சைவஞான நூல்கள் பிறவுமுள. அவையும் பிரமாணங்களே. அச்சர்வ பிரமாணங்களோடு ஒத்துச் செல்லாத நூல்களோ நூற்பகுதிகளோ பிராமாணங்களாகா. அவை தமிழாயினும் ஒதுக்கத் தகுந்தனவே. அச்சர்வ பிரமாண சாத்திரங்கள் இட்டுள்ள கட்டளைகள் பல. சைவ சமூகம் அவற்றுக் கடங்கவே வேண்டும். அதுவே அச்சமூகத்துக்குக் கெளரவம். அம்முறையில் அச்சமூகத்தின் ரொவ்வொருவரும் சிவதீ¨க்ஷ பெற்றுக்கொள்க. சிவசின்னந் தரித்துக் கொள்க. ஆன்மார்த்த சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொள்க. சைவ விரதங்களைச் சிரத்தையோடனுட்டித்து வருக. சைவாலயங்களைச் சிவாகம விதிப்படி நிருவகிக்க. அச்சேவையையும் ஆர்வத்தோடு புரிக. குருபூசைகளையும் அவ்விதிப்படி செய்க. சைவ ஆசிரியன்மாரையும் ஏனைச் சிவனடியார்களையும் பொது நீக்கி வழிபடுக. சரியை யாதி சாதனங்களை வழுவாமற் கடைப்பிடிக்க. குடும்பங்களில் நடைபெறுங் கலியாணம், சீமந்தம், சிராத்தம் முதலிய வனைத்தையும் சைவ முறைப்படி அதற்கதற்குரிய மந்திரங் கிரியை யாடிகள் சகிதம் செய்து மகிழ்க. அம்மந்திர மாதியவற்றைச் சிவாகமங்களிலிருந்து கிரமமாகத் திரட்டி வைத்துக் கொள்க. அவற்றுக்கிணக்கமான குலாசார சம்பிரதாயங்களையும் வேண்டுமாயிற் சேர்த்துக் கொள்க. சைவப் பெருநூல்கள் மலிந்து கிடக்கிற தமிழ் சம்ஸ்கிருதங்களை நன்கு பயிலுக. அந்நூல்களை யெல்லாந் திறம்பட கற்றாய்க. தமிழை ஒட்ட வையாமல் சைவத்தை எடுத்து பிற மாகாணங்களிலும் சென்று பரப்புக. பிற சமயங்களைக் குறைகூறற்க. சைவ சமயத்தைப் பிறர் தூஷிக்கவும் இடங் கொடாதிருக்க. அச் சமயம் பற்றிய குழறுபடைப் பிரச்சாரங்களை விடுக. சமூகம் சமயம் பற்றி குழம்புமாறு செய்யற்க. அதனிடம் சமயங்களின் கலவைகளை புகுத்தற்க. தந்நலத்தை மறக்க. சைவ நலத்தையும், ஜன நலத்தையுமே கருதுக. இத்தனையுந் திட்டங்கள். இவை சிலவே. இவற்றுக் கிணக்கமானவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. இவற்றை நோக்கமாக வைத்து ஊர்தொறும் சைவ சித்தாந்த சபைகளை நிறுவுக. பாரத தேசமுழுவதற்கும் நன்றாம்படி அவற்றைத் திறமாக நடத்துக. அவற்றின் வழியாய்ச் சைவ சமயத்தைப் பரிபாலிக்க. மக்களெல்லாஞ் சைவ நலங்கனிய வாழுமாறு காண்க. அந்நலம் வழிவழி கிடைத்து வருதற்கும் ஆவனவற்றைச் செய்க.

சங்கரநயினார்கோயிற் சைவ சித்தாந்த சபையும் அந்நோக்கங் கொண்டே தொண்டாற்றி வருகிறது.

பெருமழுவர் தொண்டல்லாற் பிறிதிசையோம்

பழைய வைதிக சைவம் பரக்கவே

மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

வடமொழியும்தென்மொழியும்

தமிழைத் தென்மொழியென்றும் சம்ஸ்கிருதத்தை வடமொழியென்றும் சொல்வது வழக்கம். சிவபெருமானின் உடுக்கை நாதத்தின் ஒருபுரத்திலிருந்து தமிழும் மறுபுரத்திலிருந்து வடமொழியும் தோன்றியதாக புராணங்கள் கூருகின்றன.தென்னாட்டில் இருக்கும் மொழிகளுக்கெல்லாம் அடிப்படை தமிழ் என்றும் வடநாட்டில் இருக்கும் மொழிகளுக்கெல்லாம் அடிப்படை சமஸ்கிருதம் என்றும் கூறப்படுகிறது.ஆனால் வடநாட்டில் வழங்கிவரும் மொழிகளைவிட அதிகஅளவு சமஸ்கிருத மொழிக் கலப்பு தென்னக மொழிகளிலேயே உள்ளது. அதில் குறைந்த அளவு சமஸ்கிருத கலப்பைக்கொண்டிருப்பது தமிழ்மொழி ஆகும்.

தற்பொழுது ஆன்மிக அன்பர்களிடையே வழிபாட்டிற்கும் ஆன்மிக உயர்விற்கும் சிறந்தது தமிழா? சமஸ்கிருதமா? எனும் சர்ச்சை நிகழ்ந்துவருவது வருந்தத் தக்கது. சமஸ்கிருதத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கு ஆதரவாக தமிழ் சான்றோர்களை மேற்கோள் காட்டுவது வழக்கம், உண்மையில் அதை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மை அச்சான்றோர்களிடத்து ஒருபோதும் இருந்ததில்லை ஒதுக்கிவைக்கவும் முடியாது. வடமொழிச் சொற்களை எப்படி எடுத்துக் கையாளுதல் வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர்,கம்பர்,திருவாதவூரார் போன்றவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளனர்.

பாரத தேசத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், எழுத்து அமைப்பு சமஸ்கிருத அக்ஷர அமைப்பை அனுசரித்து அமைந்துள்ளன.தமிழ் எழுத்து வரிசையும் இதற்கு விதி விலக்கல்ல. உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து தமிழில் முப்பது எழுத்துக்கள் உள்ளன.சமஸ்கிருதத்திலோ ஐம்பத்தொரு எழுத்துக்கள் உள்ளன. ஆகவே அனைத்துவிதமான ஒலிகளையும் சமஸ்கிருதம் மூலம் உச்சரிக்கமுடிக்கிறது. சமஸ்கிருதத்தின் ஐம்பத்தொரு அக்ஷரங்களைச் சிறப்பித்தே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ஐம்பத்தொரு திருப்பதிகங்கள் அமைத்துள்ளார்.

தற்பொழுது தமிழ்மொழி பேச்சுவழக்கில் இருக்கிறது ஆனால் சமஸ்கிருதம் தனிமொழியாக பேச்சுவழக்கில் இல்லை, அதன்பொருட்டே அம்மொழி தாழ்ந்தது என்றுகூறமுனைவது தவறான அணுகுமுறை ஆகும். சமஸ்கிருதம் எந்தக்காலகட்டத்தில் பெருவாரியான மக்களின் பேச்சுமொழியாக இருந்தது என்பது தீர ஆராய்ந்து அறியப்படவேண்டிய விஷயமாக உள்ளது. பேச்சுவழக்கில் இருக்கக்கூடிய எந்த ஒருமொழியும் காலஓட்டத்தினால் மாறுபாடடைவது இயல்பு. ஆகவே உயர்ந்த அறிவியல் உண்மைகளும்,ஆன்மிக அனுபவங்களும் எவ்வித மாறுபாடுகளுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாகாமல் வழிவழியாக வழங்கப்படவேண்டும் எனும் நமது முன்னோர்களின் உயர்ந்த ஞானத்தினால் அதற்காகவே உருவாக்கப்பட்ட அறிவியல் ஆன்மிக உலக பொதுமொழிதான் சமஸ்கிருதம் என்பது பல அறிஞர்களின் கருத்து.

இவ்வுலகிலேயே மிகவும் பழயது ரிக்வேதம் அது சமஸ்கிருதத்திலேயே அமைந்துள்ளது இதிலிருந்து அதன் தொன்மை புலப்படும். சமஸ்கிருதம் எனும் சொல்லுக்கு தெளிவுறத் திருத்தி அமைக்கப்பட்டது என்பது பொருள்.

ஆறு சமயங்களுக்குண்டான சாஸ்திரங்களும் இன்னும் பல சாஸ்திரங்களும் அம்மொழியில் உள்ளன.

சிவா சகஸ்ரநாமம்
லலிதா சகஸ்ரநாமம்
விஷ்ணு சகஸ்ரநாமம்

ஆகியன அம்மொழியிலேயே உள்ளன , தத்துவங்களே இந்த நாமங்கள் ஒவ்வொன்றுமாக உள்ளன என்று பெரியோர் கூறுகின்றனர்.

“பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி”

என்று தமிழ் முனிவர்கள் கூறுவது இவற்றை அங்கீகரிப்பதே ஆகும்.

கல்லும் கரையும் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப்பெருமான் வடமொழியை வெறுக்கச் சொல்லவில்லை. அவர்தம் காலத்திலேயே தமிழகத்தில் திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் வேதம் பாடப்பட்டுள்ளது. அதை அவர் சிறப்பித்தே கூறியுள்ளார்.

“இன் இசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினார் ஒருபால்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.”

என்று எம்பெருமான் முன்னிலையில் ரிக் வேதம் ஓதப்பட்டதை “இருக்கொடு தோத்திரம்” எனப் பெருமைப்படுத்தி உள்ளார்.

மேலும்

“அரியொடு பிரமற் களவறி யொண்ணா” – ஹரி,பிரம்மன்,
“ஈண்டு கனகம் இசையப் பெறா” – கனகம்,
“தூண்டு சோதி தோயற்றிய தொன்மையும்” – ஜோதி

என்று பல இடங்களில் வடமொழி வார்த்தைகளைக் கையாண்டுள்ளார்.

ஆனால் இன்று அவரது சீடர்கள் எனக்கூறிக்கொள்வோர் வடமொழிமீது வெறுப்பை உமிழ்வது புரியாத புதிராக உள்ளது.

தமிழ்மொழி தொன்மையானது, அதிலும் மேன்மையான ஆன்மிக அனுபவங்களைக் கூறக்கூடிய, வாழ்க்கைநெறிகளைக் காட்டக்கூடிய எண்ணற்ற நூல்கள் உள்ளன, அதற்கும்மேலாக அது நமது தாய்மொழி.நமது முன்னோர்களின் அனுபவங்கள் ஒளிவிளக்காக அதில் பொதிந்துள்ளன என்பது அதன் தனிச்சிறப்பு. சமஸ்கிருதாதத்தை உருவாக்கியவர்களும் அவர்கள்தான். மாணிக்கவாசகப்பெருமான் போன்றோர் வடமொழியை வெறுக்கச்சொல்லவில்லை தமிழ்பாக்களை இயற்றி தமிழர்வாழ்வில் ஒளியேற்றிய அம் மகான்கள் வடமொழிப்புலமை பெற்றே இருந்தனர். ஆன்மிக வாழ்வில் முன்னேற விரும்பும் தமிழனுக்கு தமிழும்வேண்டும் சமஸ்கிருதமும் வேண்டும். எதை எங்கு எதற்குப் பயன்படுத்தவேண்டும் என்கின்ற தெளிவும் வேண்டும். இதில் ஒன்றைச் சிறப்பித்து மற்றதை இழிவுபடுத்தமுயல்வோர் பாதை தவறுகின்றனர் என்றுமட்டுமே கூறமுடியும். சரியான பாதையைக் கண்டுகொள்ளுங்கள் வாழ்வில் உயர்வடையுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 சமஸ்கிருதம்-திராவிடரின்மொழி

ஆரியர்கள், படையெடுப்பின்மூலம் (பிறகு குடியேற்றம் மூலம் என மாற்றிக்கொண்டனர்) இந்தியாவிற்குள் வந்தனர் எனும் கருத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஆரியர்களின் தனி அடையாளம் எனக் கூறுவது அவர்களது மொழி, அது சமஸ்கிருதம். அதைத்தவிர ஆரியர்களது அடையாளமாக வேறெந்த குறிப்பிட்ட பாரம்பரிய பண்பாட்டுக் கூறையோ அல்லது கலைச்சிறப்பையோ சிறப்பித்துக் கூறுவதில்லை.

இங்கு இந்த ஆய்வாளர்களின்(?) கூற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளைக் காணலாம். அவை எவையென்றால் அந்த காலகட்டத்தில் நாகரீகமற்ற நடோடிப் போராளிக்கூட்டமாகக் கூறப்பட்ட ஆரியர்களது மொழியான சமஸ்கிருதம் உலகின் மிகச்சிறந்த மொழிகளில் ஒன்றாக அனைத்து அறிஞர்களாலும் பாராட்டப்படுகிறது. அதன் ஒழுங்கமைப்பின் காரணமாக கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு உகந்தமொழியாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின்மீது பல்வேறு இனமக்களால் நடத்தப்பட்ட படையெடுப்பை அந்நாட்டின் மக்களது மொழியான ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள பிரெஞ்ச், ஜெர்மன், டேனிஷ், கிரீக் மற்றும் லத்தின் ஆகிய மொழிகளின் கலப்பு பிரதிபலிக்கிறது. ஆனால் ஆங்கிலத்தைப்போல் அல்லாமல் சமஸ்கிருதம் தன்னிறைவுடன் விளங்குகிறது.

மேலும் சமஸ்கிருதம் ஒழுங்கமைந்த தாளக்கட்டோடமைந்த இன்னிசை நயம் கொண்ட மொழியாக உள்ளது. அம்மொழி மிகவும் பழமையான சிறப்புத்தன்மைமிக்க இலக்கணத்தைக் கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக அம்மொழியின் பொருட்செறிவு அம்மொழி நெடுங்காலமாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளதை உணர்த்துகிறது.

இதன் பொருள் சமஸ்கிருதம் காட்டுமிராண்டிக்கூட்டத்தினரின் மொழி அல்ல மாறாக அது ஒரு பழமையான, பெருமைமிக்க சிறந்த கலாச்சாரம் கொண்ட மக்களின் மொழி என்பதாகும். இந்த சிறப்பான மொழி அத்தகைய சிறந்த கலாச்சார சூழலில்தான் உருவாகமுடியும். ஆகவே அக்காலகட்டத்தில் எந்தஒரு வெளியார் படையெடுப்பும் அக்கலாச்சாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்ததாக எங்கும் எதிலும் எவ்வித குறிப்பும் இல்லை. அந்தகாலகட்டத்தில் இருந்த அத்தகைய கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரமாகும்.

ஆகவே வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுவோர் கூற்றுப்படி

ஹரப்பா நாகரிகம்-திராவிட நாகரிகம்,

ஆகவே

ஹரப்பா மக்களின்மொழி-சமஸ்கிருதம்

அப்படியானால்

திரவிடரின் மொழி – சமஸ்கிருதம்

திராவிடரின் தாய்மதம் சந்தேகமே இல்லை வேதமதம்(இந்து மதம்)

அல்லது

சமஸ்கிருதம் ஆரியர்மொழி என்றால்,ஹரப்பா நாகரிகம் ஆரிய நாகரிகம்

நல்லா யோசிச்சுக்கோங்க

நன்றி ; டாக்டர் டேவிட் ப்ராலே



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard