அரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே.
யூதர்களின் புராணக் கதை நூல் கிறிஸ்துவப் பழைய ஏற்பாடு. இவை பொ.மு.300 - பொ.கா.150 இடையே புனையப்பட்டவை(பொ.கா. பொதுக் காலம் கைவிடப்பட்ட பழைய கி.பி.; பொ.மு. பொதுக்காலத்திற்கு முன் பழைய கி.மு.)
புராணக் கதைகள்படி
ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்.
18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.