New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் மனித குல எதிரியா?சொன்னதை செய்ய முடியாதவரா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கர்த்தர் மனித குல எதிரியா?சொன்னதை செய்ய முடியாதவரா?
Permalink  
 


கர்த்தர் மனித குல எதிரியா?சொன்னதை செய்ய முடியாதவரா?

 
images?q=tbn:ANd9GcT3AJrQuHhnvPTc7V8_q-2GlOrH5Gh2_RkMSO8YGcvnhyxh1i6Ibw     images?q=tbn:ANd9GcSH6424bt7dhTY9yQ9VMZa4wZ-fNWPSnxI14tPbUWwLPpyUKUPcZQ

ஆதியாகமம் 2: 16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார். 

 

கனியை மனிதன் சாப்பிட்டான். சாகாவில்லை. கர்த்தர் சொன்னது பலிக்கவில்லை. கர்த்தருக்கு சக்தி இல்லை.                          

ஆதியாகமம்3: 9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். 10 "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன். 11 "நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். 

  மனிதன் நல்லது கெட்டது என அறிய உதவும் பகுத்தறிவை பெறாமல், ஆடை அணிதல் அவசியம் என்பது உணராத மிருகமாகத்தான் கர்த்தர் விரும்புகிறார். 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: கர்த்தர் மனித குல எதிரியா?சொன்னதை செய்ய முடியாதவரா?
Permalink  
 


ஆதியாகமம்3: 22 பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான்.  இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.   23 எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உ ருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். 24 இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார். 
அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" - மனிதன் மரணம் என்பது சரிதானே - மனிதன் -என்றென்றும்  வாழ்வின் மரத்திலிருந்து  கனி   தின்னவில்லை.                     

 

 மரணத்திற்கு ஆதாம் பாவம் காரணமில்லை.மனிதன் மரணம் நீக்க எந்த தேவகுமாரனும் அவசியமே இல்லையே- அந்தக் வாழ்வின் மரத்திலிருந்து கனியைத் தந்தால் போதுமே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

ஆதியாகமம்6:3 அப்பொழுது ஆண்டவர், "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார். 


உலகம் படைக்கப் பட்டு 6000 வருடங்கள் தான் ஆகிறது என கதை புனைகின்றது விவிலியம். 
 உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக்வரலாற்று கணக்கு 
சந்ததி       பிறந்த ஆதாமிய   வாழ்நாட்கள்   இறந்த ஆதாமிய  
                       வருடம்                                            வருடம் 
ஆதாம் ——————-000——————-930—————-------930 
சேத்————————-130————————912—————1042 
ஏனோஸ் —————–235————————-905—————1140 
கேனான்——————–325———————–910—————1235 
மகலாலெயேல்————395———————–895—————1290 
யாரேத்———————-460————————962—————1422 
ஏனோக்கு——————622————————-365————–987 
மெத்தூசலா—————-687————————-969————–1656 
லாமேக்கு ——————874————————-777————–1651 
நோவா———————-1056———————-950—————2006 
சேம்————————–1556———————-600—————2156 
அர்பக்சாத்——————1658———————-438—————2096 
************************************************************************ 
சாலா————————-1693———————433—————2122 
ஏபேர்————————1723———————-464—————2187 
பேலேகு———————1757———————–239————–1996 
ரெகூ————————-1787———————–239————–2026 
செரூகு———————–1819———————–230————–2049 
நாகோர்———————1849————————148————–1997 
தேராகு———————-1878————————-205————-2083 
ஆபிராம்———————1948————————175————-2123 
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்  பட்டுள்ளது. ****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார். 
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது 
சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன். 
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர். தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன். 
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 5000 வருடங்கட்கும் மேலாக. யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நோவா காலத்தில் கர்த்தர் மனித ஆயுளை 120 என ஆக்கினாராம் ஆனால் பட்டியல்படி அடுத்த 10 தலைமுறை ஆயுளில் கர்த்தர் சட்டம் செல்லவில்லை

 

ஆதியாகமம் 381 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.4 அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.5 கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.6 யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.7 யூதாவின் தலைமகன்ஏர்  கர்த்தர் முன்னிலையில் கொடியவனாய்   இருந்ததால்,   கர்த்தர்   அவனை கொன்றுவிட்டார்.8அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, ″நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சுகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் கசோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்″ என்றார்.9 அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அண்ணி தாமரோடு உடலுறவு கொள்கையில் தன் ஆணுறுப்பை அண்ணியின் பெண்ணுறிப்பிலிருந்து வெளியே எடுத்து , தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் ஆண் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால்,  கர்த்தர் அவனையும் கொன்றுவிட்டார்.
இறந்த சகோதரனுக்குச் செய்ய வேண்டிய கடமை
உபாகமம்25:5 உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.
 6 அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது.7 இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை என்று கூறுவாள்.8அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று கூறினால்9 அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும் என்று கூறுவாள்.10 இஸ்ரயேலில் அவனது பெயர் 'மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு' என்றழைக்கப்படும்.
 நியாயப் பிரமாணங்கள் வருமுன்னே ஏரை கர்த்தர் கொலை செய்தார். பின் அண்ணியுடன் உடலுறவு செய்து ஆண்குறியை பெண்ணுறுப்பில் விட்டவன் விந்தை கீழேவிட்டதற்காக கர்த்தர் கொலை செய்தாராம்.
தாவீது ராஜா 3 ஆண்களின் மனைவியை அபகரித்து அடைந்தான் எனக் கதை


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம்

உபாகமம் 22:22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.

ஆனால் ஆயுள் 120 வயது என்பதை செய்யமுடியவில்லை - அதற்காக கொலை ஏதும் செய்யவில்லை.

கர்த்தருக்கு பலி, மது சாராயம் மட்டும் வேண்டும்

உபாகமம்16:16 ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய  கர்த்தர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும்.  கர்த்தர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.17கடவுளாகிய  கர்த்தர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!
எண்ணாகமம்28: 7 அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுசாராய பானத்தை ஊற்ற வேண்டும்.8மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.

 

கர்த்தர் தான் தந்த நியாயப்பிரமாண சட்டங்களை நிறைவேற்ற சக்தியில்லதவராய் காண்கிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard