இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல் அனைத்து சம்பவங்களையும் முறையாக தொகுத்தது போலத் தோற்றம் வரும். இதன் கதைப்படி, கல்தேயர் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாமை, இஸ்ரேலிற்கான எல்லைத் தெய்வம் யாவே அல்லது கர்த்தர், தேர்ந்தெடுத்து, அவன் வாரிசுகளுக்கு கானான் எனப்படும் இஸ்ரேலின் மீதான ஆட்சி உரிமை தந்தார். இதுவே யூத பைபிளின் அடிப்படை.
ஆபிரகாமிற்கு சில தலைமுறை முன்பு, தேவ குமாரர்கள் மனிதப் பெண்களோடு, உடலுறவு கொள்ள அரக்கர்கள் நிறைய தோன்ற, பூமி முழுமையும் அனைத்து உயிர்களையும் கொல்ல பிரளய வெள்ளத்தால் பைபிள் தெய்வம் மூட, அதற்கு முன்பு நோவா என்பவர் குடும்பத்தையும், எல்லா உயிரினங்களையும் ஒரு கப்பலில் இட்டு, காப்பதாகவும் ஒரு கதை. இதற்குப்பின் ஆபிரகாம் கதை.
இந்தக் கதைகள் எல்லாம் பைபிள்படி எப்படி எழுதப்பட்டன, என பைபிளே தரும் தோற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆபிரகாமின் பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக எகிப்து செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எபிரேயர் மக்கள் தொகை வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை செய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல 2 தாதிகள் செய்யவில்லை. எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை புதரில் விட்டுவிட, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். அவர் எபிரேயர்களுக்கு உதவிட பார்க்கிறார். பின் ஒதுங்கிறார். இஸ்ரேலின் எல்லை கடடவுள் இவரிடம், எபிரேயர்களை ஒன்றிணைத்து, எகிப்து மன்னனிடம் சென்று இஸ்ரேல் செல்ல அனுமதி கேட்குமாறு சொல்கிறார். எகிப்து மன்னன் ஏற்றாலும், கர்த்தர் அவர் மனதைக் கடுமைப் படுத்தி, எகிப்து மக்களுக்கு 10 விதமான பெரும் தொல்லைகள் தர பின் ஆடு, மாடு பொருட்களோடு எகிப்தியர் யூதர்களை அனுப்பி வைக்க, கிட்டத்தட்ட 30 லட்சம் யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் வருகின்றனர்.
பஞ்சத்ற்கு எகிப்து செல்ல அங்கே அடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே தலைமையில் வர - செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழி விட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் செங்கடலைத் தாண்டியதாகக் கதை. பின் இஸ்ரேல் வர 40 வருடம் ஆனதாம். வரும் வழியில் கர்த்தர் கொடுத்த கதைகளே பழைய ஏற்பாட்டின் சட்டங்கள்(முதலைந்து நூல்கள்) பகுதி.
மோசே சட்டங்கள் கர்த்தர் தர, இதற்குப் பின்பு, இஸ்ரேலியர் தங்கள் வரலாறை முறையாக எழுதி வைத்ததின் தொகுப்பே பழைய ஏற்பாடு எனும் தோற்றத்தைப் பார்க்கலாம்.