New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மணி ஐயரும் சுசிலா மாமியும்!


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மணி ஐயரும் சுசிலா மாமியும்!
Permalink  
 


மணி ஐயரும் சுசிலா மாமியும்!

>> 24 AUGUST 2011


மாம்பலம் மாமி மெஸ்ஸில் தயிர் சாதம் சாப்பிடுவதை விடவும் பேரின்பம் வேறெதிலும் கிடைத்திடாது. தோழருக்கு மாமிமெஸ் தயிர்சாதமும் வடுமாங்காவும் போதும் வெறெதுவும் வேண்டாம். அப்படியாகப்பட்ட ஒரு மதியவேளை தயிர்சாதம் முடித்து திநகர் முப்பாத்தம்மன் கோயில் பக்கமாக பைக்கில் போய்க்கொண்டிருந்த போது அந்த போஸ்டர் கண்ணில் அகப்பட்டது!

mani%2Biyer.jpg

(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

சகோ.இரா.மணி ஐயர் – மனந்திருந்திய பூசாரி என்கிற அந்த மஞ்சள் வண்ண போஸ்டரை கண்டதுமே.. வண்டி பிரேக் அடித்து நின்றது. அருகில் போய் பார்த்தால் ஏதோ சுவிஷேச அழைப்பு போஸ்டரை போல இருந்தது. அதேதான்! ஆஞ்சநேயருக்கும் அல்லேலுயாவுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பது புரியாமல் அதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். மாம்பலம் மாமிகளை கவர் பண்ணி மதமாற்றம் பண்ண புது டெக்னிக் யூஸ்பண்றாய்ங்க போலருக்கே பாஸு என பேசிக்கொண்டோம். 

ஆனால் சில நாட்களுக்கு முன் பம்மலில் ஒரு வேலையாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இன்னொரு போஸ்டர். இதிலும் பார்ப்பன பெண்மணி (சுசிலா மாமி!) ஒருவர் கிறிஸ்தவராக மதம் மாறியும் விடாப்பிடியாக தன்னுடைய சாதிப்பெருமையை கைவிடாமல் உடும்புபிடியாக பிடித்துக்கொண்டிருந்தார். மணி ஐயரை விடவும் இவர் ஒருபடிமேலே போய் கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி என்று அமைப்பு வேறு வைத்திருக்கிறார்கள். 

suseela%2Bmaami.JPG

(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

அமாவசை நாளில் சிறப்பு பூஜை வேறு உண்டு. பில்லிசூனியங்களை எடுக்கிறார்களாம். பிசாசுகளை விரட்டுகிறார்களாம்! எண்ணெய்போட்டு ஸ்பெசல் பூஜை வேறு. உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் – யாத் 39:10 பைபிளில் இல்லாத வாசகங்களை போட்டு பயமுறுத்துகிறார்கள். பைபிளில் அப்படியெல்லாம் வாசகங்கள் கூட இல்லை! 

**********


இந்த மொக்கை கிறிஸ்தவ பிராமண கோஷ்டிகளின் காமெடிக்கு நடுவில் பொள்ளாச்சி நசனின் தமிழம் தளத்தில் பழைய சிற்றிதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது செய்தி துணுக்கு ஒன்று கண்ணில் பட்டது. யாரோ ஒரு பிராமணர் வேறு சாதி ஆள் ஒருவரிடம் பணம் வாங்குகிறார். கடன் கொடுத்தவன் திருப்பி கேட்க போன இடத்தில் நடக்கும் பிரச்சனையில் மாடுமுட்டி இறந்தார் என்னும் செய்தி எவ்வளவு நேர்த்தியாக திரித்து எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து பாருங்களேன். (கல்பதரு இதழ் 1917ல் வெளியான செய்தி இது). இதை படிக்கும் போது எழுத்தாளர் மாமல்லன் அண்மையில் எழுதிய நிறம் கதையின் சாயல் அச்சு அசலாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை. 

pops.JPG
Adien Ramanuja Dasan,  August 27, 2011 11:58 PM

நீங்கள் சொல்லும் வாசகம் பைபிளில் உண்டு பார்க்க யாத்திராகமம் 34.10. இதுமட்டுமல்ல தேவன் கோபாக்கினை உள்ளவர், பலி மாமிசத்தின் மனத்தை சுகந்தமாக சுவாசிப்பவர் என்பன போன்ற வசனங்கள் ஏராளமாக உள்ளன. ஒருமுறை சரியாக படித்துவிட்டு எழுதுவது நலம். இரண்டாவது, மற்ற சாதியாரை விடை பிராமணர்கள் வைதீக, சாஸ்த்ரிய சமாச்சாரங்கள் உணர்தவர்கள். அவர்களே இயேசுவை நோக்கி வந்துவிட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களே இப்போது யேசுவிடம் வந்துவிட்டனர் ஆகையால் சமான்யர்களே நீங்களும் மதம் மாறுங்கள் என்று கூவி இயேசுவை எல்லார் மேலும் ஏவுவதற்கு இதுபோன்ற பிராமணர்களாக இருந்து மதம் மாறியவர்களின் சாதீய பின்புலம் இவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக பயன்படும். ஒரு தலித் இவ்வாறு மதம் மாறினால் அவரது சாதியை பரகடனப்படுத்தமட்டர்கள். இதெல்லாம் ஒரு வியாபார உத்தி. மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர் உண்மையாகவே பிராமணரா அல்லது கலப்பா யார் இதெல்லாம் விசரிக்கப்போகிரார்கள்.


Anonymous,  August 31, 2011 1:25 AM

FYI... கோயில் பூசாரிகள் பார்ப்பனர் அல்ல. குருக்கள் மட்டுமே பார்ப்பனர்.

சுசீலா ரகுநாதன் தமிழர் அல்ல. கேரளாவைச்சேர்ந்தவர். அவரது சகோதரரும், அரபு நாட்டில் இஸ்லாமியர்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது அவரே வெளியிட்டிருக்கும் statement.

 

Anonymous,  August 31, 2011 1:51 AM

இன்னொரு தகவல். இந்த மணி ஐயரும் ஒன்றும் கோவில் பூசாரி இல்லை. மஸ்கட்டில் கொஞ்ச நாள் வேலை பார்த்தார். பிறகு இந்தியா வந்தார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. சரி, பிழைப்புக்கு? மனைவி ஒரு கிறிஸ்துவர். இந்தியா வந்ததும் கிடைத்த ஐடியாதான் இந்த மதமாற்றம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard