New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழமொழி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பழமொழி
Permalink  
 


http://suvanappiriyan.blogspot.in/2012/07/blog-post_04.html

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
களவும் கற்று மர
இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
களவும் கத்தும் மற
களவையும் சூதாட்டத்தையும் மற
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரண குருவே காரிய குரு!
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
காலைக் கல்; மாலைப் புல்
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கி, கீ
கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கு, கூ
குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குருவிக்கேத்த ராமேஸ்வரம்
இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
குறி வைக்க ஏற்ற ராம சரம்
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
கெ
கெடுக்கினும் கல்வி கேடுபடாது
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
கெடுவான் கேடு நினைப்பான்
கெட்டாலும் செட்டி செட்டியே,
கிழிந்தாலும் பட்டு பட்டே.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
கெட்டும் பட்டணம் சேர்
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
கே
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
கை
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
கையிலே காசு வாயிலே தோசை
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
கொ
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
கொடிக்கு காய் கனமா?
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கோ
கோள் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
கோடி வித்தையும் கூழுக்குத்தான்
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது


மேலும் புதிய பழமொழிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு?

ஆடத் தெரியாதவள் வாசல் கோணல் என்றாளாம்

செட்டி திண்டு கெட்டான்:
பாப்பான் உடுத்தி கெட்டான்:
துலுக்கன் ரெண்டும் கெட்டான்:

யாதும் ஊரே யாவரும் கேளீர்:

ஒன்றே குலம் ஒருவனே தேவன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard