முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம் – நன்றி திண்னை
22. May, 2012
இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம் எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட ஆய்வுகள் பரவலாகவே இருக்கின்றன.
ஆனால், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதை பற்றி ஒரு ஆய்வு நடந்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன் இல்லை?
ஜோசப் ஸ்மித், மார்ட்டின் லூதர், ஆண்டன் லெவி போல முகம்மதுவுக்கும் அவர் இருந்தார் என்பதற்கான தடயங்கள் ஏராளம் என்பதால் முகம்மது வரலாற்றில் இருந்த ஒரு நபரா இல்லையா என்பதை பற்றி ஆராயவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். முகம்மதுவின் போதனைகள் ஒழுக்கரீதியில் சரியானவையா, இல்லையா, அவை பிரயோசனமானவையா அல்லவா என்பதை விட, அவர் நிச்சயமாக இருந்திருக்கிறார் என்றுதான் கடுமையாக இஸ்லாமை எதிர்ப்பவர்களும் கருதுகிறார்கள். இல்லையா?
உண்மையில் இல்லை. குறைந்தது, ராபர்ட் ஸ்பென்ஸர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம், முகம்மது என்பவர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்கிறது.
தடயம் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் ஆகாது என்பது உண்மை என்றாலும், தனது புத்தகமான “Did Muhammad Exist? ” என்ற புத்தகத்தில், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறார் என்பதற்கு எந்த விதமான தடயமும் இல்லை என்பதை மிகவும் தேர்ச்சியுடனும் ஆதாரப்பூர்வமாகவும் நம்பத்தகுந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஸ்பென்ஸரே சொல்வது போல, “முகம்மது என்ற நபர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிப்பது முடியாத காரியம்” என்பதை கூறும் ஸ்பென்ஸர், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முகம்மதை பற்றிய இஸ்லாமிய கதையாடலை அப்படியே உண்மை என்று ஏற்றுகொள்வது தேவையற்றது. (நமக்கு இருக்கும் ஒரு சில ஆதாரங்களை வைத்து, முகம்மதின் தோற்றத்துக்கான வேறு கதையாடல்கள் இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்திச் செல்கின்றன என்பதையும் பார்ப்போம்)
ஆதாரங்கள்.
இந்த பெரிய விஷயத்தை அணுகுவதற்கு ஸ்பென்ஸர் ஐந்து முக்கிய செய்திகளை எடுத்துகொள்கிறார்.
1. 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய ஆவணங்கள்.
2. அரபியர்கள்/முஸ்லீம்களே எழுதிய 7 /8 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள்.
3. குரான்
4. ஹதீஸ், இஸ்லாமிய விரிவுரைகள், போதனைகள் 8 /9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை
5. முகம்மதுவின் வாழ்க்கைக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து, இபின் இஷாக் எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைவரலாறு . இந்த வரலாற்றின் அடிப்படையிலேயே பிற வாழ்க்கைவரலாறுகள் எழுதப்பட்டன.
200 பக்கங்களில், ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து, முகம்மதுவின் வரலாற்று ஆதாரத்துக்கு தடயமே இல்லை என்று நிரூபிக்கிறார்.
இஸ்லாமை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்னைப் போன்றவருக்கு, முதலாவது பிரிவே மிகவும்முக்கியமானதாக இருக்கும். அதுவே சுதந்திரமான ஒரு தடயமாகவும் இருக்கும். பெரும்பாலான மதங்களது புனித நூல்கள் போலவே, இஸ்லாமின் புனிதநூல்களும், தன்னைத்தானே சரி என்றும், தன்னையே தனக்கான ஆதாரமாகவும் அளிக்கும் என்றுமே நான் அனுமானம் செய்தேன்( அது தவறு என்று பின்னால் அறிந்தேன். அது பின்னர்)
ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?
ஒன்றுமே இல்லை.
ஸலாம் இ.சா
இங்கே படியுங்கள்!
இப்பதிவில் முகமது பிறக்ப்பதற்கு முந்தைய நூற்றாண்டில் யூதர்கள் அராபியாவில் வாழ்ந்த கிறித்தவர்களை இனப்படுகொலை செய்ததை பற்றி கூறுகிறது.இப்பதிவின் நோகம் யூதர்களும் கிறித்தவ்ர்களும் கூட சண்டையிட்டார்கள்.முஸ்லிம்கள் மட்டுமே யூதர்களின் எதிரி அல்ல என்பதை சித்தரிப்பது என கூறலாம்.
ஆனால் இக்கட்டுரை இஸ்லாமுக்கு வேறு விதத்தில் ஆப்பு வைக்கிறது. படியுங்கள்.
[யூத ராஜ்ஜியம் இனப்படுகொலை செய்த சவூதி கிறிஸ்தவர்கள்
http://kalaiy.blogspot.com/2012/05/blog-post_13.html
கி.பி. 524 ம் ஆண்டு,அல் உக்தூத் யூதப் படைகளால் முற்றுகையிடப் பட்டது. தமது அயலில் ஒரு கிறிஸ்தவ தேசத்தின் அபாரமான வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்களும், து நவாசின் படையெடுப்புக்கு உதவி செய்தனர். அன்று யூதர்களின் வெறுப்புணர்வு எந்தளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு, அடுத்து வரும் சம்பவங்கள் சாட்சியம் கூறும். முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட அல் உக்தூத் பிரஜைகள் அனைவரும், யூதர்களாக மதம் மாற வேண்டும், அல்லது மரணத்தை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இறுதிக் கணம் வரையில் போராடி மடிய விரும்பியஅல் உக்தூத்பிரஜைகள், மதம் மாற மறுத்தனர். யூதப் படைகள்,அல் உக்தூத்நகரை சுற்றி அகழி வெட்டி, சிதை அடுக்கி தீ மூட்டினார்கள். அல் உக்தூத்மக்களை, ஒருவர் விடாது எல்லோரையும் உயிரோடு நெருப்பில் போட்டுக் கொளுத்தினார்கள்.
மொத்தம் இருபதாயிரம் பேர், இனவழிப்புக்கு பலியானதாக கூறப் படுகின்றது. ரோம சாம்ராஜ்யத்தின் கிறிஸ்தவ தலைமைச் செலகத்திற்கு அனுப்பப் பட்ட கடிதத்திலும் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. அல்உக்தூத் நகரின் தியாகிகள், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவ உலகில் நினைவுகூரப் பட்டனர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனில், அல் உக்தூத் இனப்படுகொலை பற்றி பதிவு செய்யப் பட்டுள்ளது. (Surat al-Buruj of the Q'uran 85:4–8 ) ]
இது குரானில் 85ஆம் சூராவில் குறிப்பிடப்பட்டு உள்ளது என கூறுவதல் அதனை பார்ப்போம்.
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
நமக்கு பெரிய அதிர்ச்சி
யூதர்கள்=நெருப்புக் குண்டம் உடையவர்கள்(சரி பலி பீடம் வைத்து இருந்தார்கள் என பொருள் கொள்வோம்]
அராபிய கிறித்தவர்கள்=மூமின்கள்!!!!!!!!!!!!!!!
இது என்னடா இஸ்லாமுக்கு வந்த சோதனை. அப்போது இஸ்லாம் என்பது கிறித்தவ்த்தின் ஒரு பிரிவா!
சரி ஆங்கிலத்தில் பார்த்தாலும் நம்பிக்கையாளர்கள் என தாக்கியா மொழி பெயர்ப்பு தெரிகிறது.
Sahih International: And they, to what they were doing against the believers, were witnesses.
Pickthall: And were themselves the witnesses of what they did to the believers.
Yusuf Ali: And they witnessed (all) that they were doing against the Believers.
Shakir: And they were witnesses of what they did with the believers.
Muhammad Sarwar: witnessing what they were doing.
Mohsin Khan: And they witnessed what they were doing against the believers (i.e. burning them).
Arberry: and were themselves witnesses of what they did with the believers.
அரபி வார்த்தை மூமின் என்று போட்டுத் தாகுகிறது!
(85:7:5)
bil-mu’minīna
to the believers
இதை என்ன சொல்வது?
கிறித்தவர்களை மூமின்கள் என அழைக்கலாம் எனில் ஏன் அவர்களை பிறகு வழிகேடர்கள் என்கிறது குரான்?
முகமதுக்கு முன் ,பின் என தாக்கியா வாதம் தவிர்த்து பார்த்தால் இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.
ஹா ஹா ஹா
@saarvaakan, நண்பரே, உங்களுக்கு எங்கே இருந்து இவ்வளவு ஆராச்சி செய்து , படித்து எழுத சமயம் இருக்குக்கிறது? அல்லா என்ன உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48மணி நேரம் குடுத்திருக்கிறானா? ஆச்சரியமாக இருக்கிறது.