பயங்கர இரகசிய சமுதாயம் பாகம் 2
The Hiram Key: Pharaohs, Freemasons, and the Discovery of the Secret Scrolls of Jesus |
கிறிஸ்தோபர் நைட் மற்றும் ரோபர்ட் லோமஸ் என்ற இரு பிரீமேசன்களால் எழுதப்பட்ட The Hiram Key என்ற நூல் பிரீமேசன் பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாறு பற்றியும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.இந்த இரு ஆசிரியர்களினதும் கூற்றுப்படிFREEMASONARY என்பது KNIGHT TEMPLARS இன்
அடிச்சுவடுகளை பின்பற்றி தொடர்ந்து வரும் ஒரு அமைப்பாகும்.மேலும் இவர்கள் இந்த நூல் மூலம் KNIGHT TEMPLARS இன் ஆரம்ப வரலாற்றையும் அதன் கொள்கைகளில் தாக்கம் செலுத்திய ஏனைய நம்பிக்கைகளையும் விலாவாரியாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
இவ்விருவரின் ஆய்வுப்படி கிருஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மதத்தைக் காக்க என உருவான இயக்கம் அது ஜெருசலத்தில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது அது அதன் அடிப்படை கொள்கைகளிலிருந்து தடம்புறலத் துவங்கியது.ஜெருசல நகரில் இருந்த TEMPLE OF SOLOMAN என்ற ஆலயத்தை இவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படும் விடயமே இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.மேல் கூறப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு அமைய புனித ஜெருசல நகருக்கு வரும் கிருஸ்தவ யாத்ரீகர்களின் பாதுகாப்பாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் ஈடுபட்ட விடயங்கள் கிருஸ்தவ மதத்துக்கு முற்றிலும் மாற்றமான விடயங்களாகும்.
".......அவர்கள் ஜெருசலம் வரும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.ஆனால் அவர்கள் இரண்டாம் ஆலயத்தில் அதாவது Herods Temple இன் இடிபாடுகளுக்கு கீழே பரவலான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன."
(REF : Hiram Key Page 37)
இரண்டாம் ஆலயத்தின் மாதிரி படம். |
Hiram Key நூலின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல Gaetan Delaforge என்ற புகழ்பெற்ற பிரஞ்சு வரலாற்றாசியரும் இது பற்றி பல ஆதாரங்களை முன்வைக்கிறார்.
Knight Templar இயக்க உறுப்பினர்கள் இரண்டாம் ஆலயத்தின் இடிபாடுகளுக்கிடையில் சில நினைவுச் சின்னங்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் தேடி பாரிய அளவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் அவற்றை தேட ஒரு காரணமும் இருந்தது.அவற்றில் பண்டைய யூத மற்றும் எகிப்திய கலாச்சாரங்களின் இரகசியமான மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறைகள் அடங்கி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
(REF : Templar Tradition In The Age Of Aquarius - Gaetan Delaforge)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Royal Engineers சார்பாக Charles Wilson என்பவர் ஜெருசல நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.அவரின் கருத்துப்படி ரோம ஆக்கிரமிப்பின் போது அழிந்து போன Soloman Templeபற்றி ஆராய்ச்சி செய்யவே Knight Templar குழுவினர் ஜெருசலத்துக்கு வந்தார்கள் எனவும்,தான் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் போது Knight Templar களால் பயன்படுத்திய கருவிகளையும் அவர்கள் அந்த இடத்தில் ஆராய்ச்சி செய்ததற்கான தடயங்களையும் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
Knight Templar இயக்கத்தினர் ஜெருசல நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் அவர்களுக்கு பயனளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் உலகை பார்க்கும் போக்கை மாற்றிக் கொண்டார்கள் என Hiram Key இன் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய கிருஸ்தவ உலகத்திலிருந்து கிறிஸ்தவத்தை தாங்கி ஜெருசல நகருக்கு வந்தவர்கள் கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் மாற்றமான சடங்குகளில் இடுபட ஒரு பலமான காரணம் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
பல ஆராய்ச்சியாளர்களின் பொதுவான கருத்துக்கு அமைய "அந்த பலமான காரணம்" தான் "THE KABBALAH " என்ற பண்டைய யூத சூனியக் கலை.
KABBALAH என்பது யூத மதத்தின் ஒரு விசித்திரமான ஒரு கிளை என்கிறதுஅகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்.ஆனால் நாம் இந்த விடயத்தைப் பற்றி இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும் போது இந்த விசித்திரமான சடங்கு முறைகளில் யூதர்களின் தவ்ராத் வேதம் அருளப்பட முன் நடைமுறையில் இருந்த உருவ வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நாட்டின் பிரீமேசன்களில் ஒருவரான Murat Ozgen என்பவர் எழுதிய What Is Freemasonry ? What Is It Like ? என்ற நூலில் KABBALAH பற்றி இவ்வாறு கூறுகிறார்.
" KABBALAH எப்போது எங்கிருந்து எப்படி உருவானதென்பது பற்றி எங்களுக்கு அவ்வளவு தெரியாது.ஆனால் அது தனித்துவமான வாழ்வின் மெய்ப்பொருளை அறியக் கூடிய யூத மதத்துடன் தொடர்புள்ள ஒரு விசித்திரமான வாழ்வியல் தத்துவம்.இத் தத்துவம் யூத மதத்தில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒரு விடயம்.ஆனால் இந்த KABBALAH வில் யூத மதத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளன."
(REF: What Is Freemasonry ? What Is It Like ? P: 298,299 )
பிரஞ்சு வரலாற்றாசிரியர் Gogenot Des Mousseaux என்பவரின் விளக்கத்துக்கு அமைய KABBALAH கலையில் யூத மதத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட சில முக்கியமான சடங்குகளும் அடங்கியுள்ளன.
யூத வரலாற்றாசிரியரான Theodore Reinach என்பவற்றின் கருத்துக்கு அமைய KABBALAH என்பது யூத மதத்தில் மிக நுட்பமாக புகுந்த ஒரு கொடிய விஷம்.அது முழு யூத மதத்தையும் நாசப்படுத்தி விட்டது என்கிறார்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவரும் பல மந்திர சடங்குகளில் KABBALAH என்ற இந்த கலையே அடித்தாலமாக விளங்குகிறது.சில யூத ரப்பிகள் கூட இந்தக் கலை மந்திர சக்திகளைக் கொடுக்கும் என நம்பி கற்றும் உள்ளார்கள்.யூத மதம் சாராத இன்னும் பலரும் இந்த கலையை கற்றார்கள்.வரலாற்றின் மத்திய காலப் பகுதியின் இறுதிக் கால கட்டங்களில் இந்த ரகசிய போக்குடைய கொள்கைகள் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்தது.
ஓரிறைக் கொள்கையை சுமந்து கொண்டு தவ்ராத் வேதம் அருளப்பட்டு மூஸா (அலை) அவர்களால் வழிநடத்தப்பட்ட யூத மதம் இந்த கலையின் ஆரம்ப அச்சாணி என்பது ஆச்சரியமான விடயம்.உண்மையில் KABBALAHஎனும் இந்தக் கலையில் யூத மதத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பல சடங்குகள் உள்வாங்கப்பட்டு அது யூத மார்க்கம் ஆக்கப்பட்டதே உண்மை.
அப்படியெனில் இந்த கலையின் ஆரம்பப் புள்ளி எங்கே உள்ளது ???