மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.
போப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் – “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.
போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.
போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் – “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.
ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.
“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.
திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. போப் எழுதியுள்ளார். ஜி.யூ. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு. ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
ஜி.யூ. போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஞானாசிரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் திருவாதவூரரை ஆட்கொள்ளுகிறான். இதன் பின்னர் அடிகளுக்கு மதுரையினொடு தொடர்பு முற்றிலும் நீங்குகிறது. பூவுலகிற்குத் தான் எழுந்தருளிய பணி நிறைவுற்றதும் இறைவன் உடனிருந்த அடியவர்கள அங்குக் குருந்த மரத்தடியில் ஓர் பீடம் அமைத்துத் தன்னை வழிபட்டு வருக என்றும் சிலநாட்களில் அங்குள்ள பொய்கையின் ந்டுவில் ஒரு பேரொளி தோன்றும் என்றும் அதில் அனைவரும் புகுந்து திருக்கயிலை வருக என்றும் கூறியருளினான். திருவாதவூரரை மட்டும் அவர்களுடன் பேரொளியில் புகாமல் யாத்திரையாகத் தில்லைக்கு வருக என்றும் வழியில் அவர் வழிபடும் தலங்களில் குருவடிவாய் காட்சி அளிப்பதாகவும் கூறியருளித் திருக்கயிலைக்கு எழுந்தருளினான்.
இறைவனின் பிரிவாற்றாமையால் வருந்திய திருவாதவூரர் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு இறைவனின் காட்சியைப் பெறாமையால் வருந்தி நீத்தல்விண்ணப்பம் என்னும் இந்தப் பதிகத்தை அருளினார். இறைவன் காட்சி நல்கினான். இது மாணிக்கவாசகரது வரலாற்றைப் பாடிய கடவுண்மாமுனிவர் அறிவிக்கும் செய்திகள்.
‘உன்னை பிரிந்த யான் என் உடலைத் தீவாய் மடுக்கிலேன், மலைமேல் உருண்டு உயிரை மாய்ப்பேனல்லேன், நாதனே! இந்த உடலும் உயிரும் உன்னுடைய உடைமையென்றே இவ்வுடலைவிட்டு உயிரைப் பிரிக்க அஞ்சினேன், என் செய்வேன்’ என நிலத்தில் வீழ்ந்து புரண்டு அழுது புலம்பினார். கற்றைவார் சடையார் கோலங்காட்டி ஆட்கொண்ட அன்றே, வாதவூரர், சுற்றமும் தொடர்பும் முற்றிலும் நீத்தார்; இன்பமும் துன்பமும் அற்றார்; உடல்மேல் அபிமானம் துறந்தார்; வெறுக்கை (செல்வம்)மேல் வெறுக்கை வைத்தார்; செற்றமும் செருக்கும் காய்ந்தார்; நல்வினை தீவினை இரண்டும் தீர்ந்தார். இறைவன் திருவாதவூரரை ஆட்கொண்ட பின் அவரது நிலையாகப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தில் அறிவிப்பது இந்நிலை
இனி, போப் இந்த கட்டத்தில் மணிவாசகரை எப்படி அறிமுகம் செய்கின்றார் எனக் காண்போம்.
நீத்தல் விண்ணப்பம் முழுவதும் ஆன்ம முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஐம்புல மயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தெய்வத்தின் துணை வேண்டி மானுடம் எழுப்பும் உணர்ச்சி மிக்க பாடல்கள் என்ற முன்னுரையுடன் ஜி.யூ. போப், மாணிக்க வாசகர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றைக் கூறுகின்றார் -
”சிவன் குருவாக வந்து ஆட்கொண்டு பிரிந்த பின், திருவாதவூரர் பாண்டி நட்டில் உள்ள சிவத்தலங்களைக் கண்டு வழிபடலை மேற்கொண்டார். முதலில் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கினார். திருப்பெருந்துறையிலும் மதுரையிலும் பெற்றிருந்த இறையனுபவத்திற்கு எதிர்விளைவான சோதனைகள் உத்தரகோச மங்கையில் திருவாதவூரருக்கு ஏற்பட்டன.
இளமையும் பாண்டியமன்னனின் தனிப்பட்ட பேரன்பும் பெற்றிருந்த அடிகள் இதுவரை செல்வச்செழிப்புடன் இல்லற இன்பத்தில் வளமாக வாழ்ந்திருந்தார். இப்பொழுது அனைத்தையும் துறந்த துறவியாக மாற்றம் பெற்றார். மதுரையில் அமைச்சராக இருந்தபோது பெற்றிருந்த சுகபோக வாழ்க்கை அனுபவ நினைவும், உத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் இருந்த சூழலும் அடிகளுடைய புதிய தவவாழ்க்கைக்குப் பெருஞ்சோதனையாக இருந்தன. புலனிச்சை செய்யும் மயக்கத்தில் சிக்கிய அவர் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோளை அங்கு அவர் எட்ட முடியவில்லை.
உத்தரகோசமங்கைக் கோயிலின் சூழல் அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்தது. நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள பாடல்களைப் பார்த்தால் அவர் இருநிலைகளில் வருந்தி வந்தார் என அறிகிறோம். ஒன்று, அந்தக் கோவிலில் கூட்டம் கூட்டமாக இருந்த தேவரடியார்களின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட மனமயக்கம்; இரண்டாவது, புதிதாக அவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கைக்கு உரிய விரதங்களைக் மனம் ஒன்றிக்கடைப் பிடிக்க இயலாமை.
இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.” – From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.
ஜி.யூ. போப் கூறும் இந்த வரலாறு மணிவாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன் மானம் உள்ள தமிழர்கள் போப்புக்குப் புகழ்மாலை சூட்டித் திருவாதவூரடிகளை ஒழுக்கக் கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?
போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்.
திருவாசகத்தில், குறிப்பாக நீத்தல் விண்ணப்பத்தில், திருவாதவூரடிகள் தாம் பெண்மயக்கத்தில் வருந்துவதாகக் கூறுவது போன்ற செய்திகள் அவர் தம்மைப் பற்றிக் கூறிய ஒப்புதல் வாக்கு மூலமல்ல. இது வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக் கொள்ளும் இயல்பைத் திருவாதவூரடிகள் தம்மேல் ஏற்றிக் கொண்டு கூறியதாகும். இதற்கு இவ்வாறன்றி, நம் அடிகளே மகளிர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் மனத்தளவில் மகளிரை நினைந்திருந்தார் என்றும் அவ்வாறு இருப்பினும் விழுத்தொழும்பில் நின்றதால் தம்மைக் கைவிடலாகாது என இறைவனிடம் மன்றாடினார் என்றும் அறியாது கூறிய போப்பை எம்பெருமான் மன்னிப்பாராக.
உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி உலகவருக்காக இறைவனிடம் வேண்டுதல் இந்து பக்தி இலக்கிய மரபு. இதற்குத் தமிழிலேயே ஒரு சான்று காணலாம்.
காரைக்காலம்மையார் பெண்ணடியார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. அவர் அருளிய ‘திருவிரட்டைமணிமாலை’ என்னும் திருப்பதிகத்தில்,
என்னும் பாடலில் தமக்கு மனைவியும் மக்களும் உள்ளதாகவும், நெஞ்சம் அவர்களை நினயாதொழிய வேண்டும் எனவும் பாடுகிறார். காரைக்கால் அம்மையாருக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என இந்தப் பாடலின் அடிப்படையில் கூறினால், அவ்வாறு சொல்பவனை அறிவுடையவன் எனலாமா?
போப்பின் கருத்து அவருடைய கிறித்துவ மரபையொட்டி எழுந்ததுவாகும். கிறித்துவ Saint களில் பலர் Sinner களாக இருந்து Saint ஆனவர்களே. இந்த மரபில் எழுந்ததுதானே “Every saint had a past; and ever Sinner has a future” (Imitation of Christ) எனும் கொள்கை.
இந்தக் கோட்பாடு நம் ஆசாரிய மூர்த்திகளுக்கும் இந்து மரபுக்கும் ஒவ்வாத ஒன்று.
முத்தி நிலையில் பரமுத்தி அபரமுத்தி என்று இருநிலைகள் உண்டு. பரமுத்தியாவது சிவவியாபகத்தில் இரண்டறக் கலந்துவிடும் நிலை. இத்தகையோருக்கு மறுபிறப்பில்லை.
அபரமுத்தி என்பது பதமுத்தி என்றும் சொல்லப்படும். பதமுத்தியில் உள்ளவர்கள் இறைவன் ஆணையின்படி மீண்டும் உலகநன்மையின் பொருட்டுப் பிறந்து உரிய காலத்தில் பரமுத்தி அடைவர்.
இத்தகைய உயர்ந்த ஆன்மாக்களாக சிவனடியை மறவாப் பான்மையராக இருந்து, இறைவன் ஆணையால் ஒருபயன் கருதி உலகிற்கு அனுப்பப்பட்டவரே நம் ஆசாரிய மூர்த்திகள். அவர்களுடைய அருளிச்செயல்களிலேயே இதற்கு அகச்சான்றுகள் உள்ளன.
“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.
கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.
மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.
திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! திருவாசகத்தை மொழிபெயர்த்ததனல் அதன் பெருமையை உலகெங்கினும் போப் பரப்பினார் என்றால் இப்புகழோடு, மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார் என்றும் ஆம்..
இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே.
போப் சைவ சித்தாந்தத்தைப் நூல்கள் வாயிலாகப் படித்திருந்தாலும் சித்தாந்த மரபினை அறியார். திருமுறைகளில் ஐயம் வந்தால், அதனை சித்தாந்த நெறி நிற்கும் சான்றோரிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். வெறும் தமிழ்ப்புலமை மட்டும் போதாது.(இதற்குச் சான்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய ‘தியாகராய செட்டியார்’ வரலாறு பார்க்கவும்). இந்த அறியாமையால் அவர் தவறான குறிப்புக்களும் எழுதியுள்ளார். இதனால் போப் சைவ நெறியைப் பாராட்டுகின்றாரா அல்லது பிற கிறித்துவர்களைப் போலக் கேலி செய்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுமாறு சில இடங்களில் கருத்துத் தெரிவிக்கின்றார்.
எப்படி ‘சங்கீதம்’ என்ற பைபிள் பகுதி கிறித்தவர்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றதோ அப்படியே திருவாசகமும் காலங்காலமாகத் தமிழ்மொழி பேசும் மக்களின் பெரும்பான்மையோரின் மனத்தைத் தொட்டுள்ளது எனத் திருவாசகத்தைப் புகழ்ந்த போப் அவர்கள், இதில், மேன்மையான ஆன்மிகத் தத்துவச் சிந்தனைகளோடு மடமையானது என்று சொல்லத்தக்க உருவவழிபாடு பேணலும் கலந்துள்ளது; இன்றைய சைவநெறியில் ஒன்றையொன்று மறுதலித்துக்கின்ற, அதேசமயத்தில் பரஸ்பரம் வலுவூட்டுகின்ற இரு இயல்புகள் செழித்துள்ளன. சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எத்துணைக் கெத்துணை முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அத்துணைக்கு அத்துணை ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார் (There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen on another. The more philosophical and refined the caivite becomes , the more enthusiastic does he often apper to be in the performance of the incongruous rites of the popular worship. )
சைவம் உருவவழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஆன்ம ஞானியும் புறவழிபாட்டைக் கைவிடலாகாது. சிவச்சொரூபம் அருவமாய் எங்கும் வியாபித்துள்ளது. உருவுடைய சீவர்களாகிய நாம் அந்த வியாபகத்தின் உள் உள்ளோம். நமக்குப் புறத்தேயுள்ள பொருள்களையே காண வல்ல கருவிகளைக் கொண்டுள்ள நாம் நமக்கு உள்ளும் புறம்பும் உள்ள அருவமாக உள்ள நம்மை நடத்திச் செல்லும் இறையின் அந்த வியாபக வடிவம் வழிபடுவதற்கு முன்னிலை(சன்னிதானம்) ஆகாது. அதனால்தான் உருவ வழிபாட்டை இந்து சமயம் வற்புறுத்துகின்றது. இறைவன் அடியவர் உளங்கொள்ளும் எந்த வடிவத்திலும் வந்து அருள்புரிவான், அந்த வடிவங்களெல்லாம் அருள்வடிவமே அன்றிக் கல் மண் பொன் போன்ற மாயாகாரிய வடிவங்கள் அல்ல என்பது இந்து மதக் கோட்பாடு. இறைவன் எந்த வடிவில் தங்களுக்கு அருள் செய்தானோ அந்த உருவினைத் திருமுறையாசிரியர்கள் போற்றியுள்ளனர். மணிவாசகப் பெருமானுக்குச் சிவன் குருவடிவில் வந்தருளினான். ஆதலால் திருவாசகம் முழுவதும் குருஸ்துதியே ஆகும்.
தங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்று கூறிக் கொள்ளுகின்ற கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அக்கிறித்து, முகம்மது என்பாரையே தம்முடைய மூர்த்திகளாகக் கொள்ளுவதால் அந்த இருவரும் அடைந்த கதியை அக்கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அடைவர் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை. இவர்களும் உருவ வழிபாடு உடையவர்களே.
போப் மணிவாசகப் பெருமானைப் பிழைபடக் காட்டிய மற்றொரு முக்கியமான இடத்தை அறிய வேண்டும்.
இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டுத் தான் மணிவாசகரை ஆட்கொண்டதை உலகுக்கு அறிவித்தபின் , மணிவாசகர் தில்லைக்குச் செல்லுமுன் நடந்த நிகழ்ச்சிகளைத் திருவிளையடற் புராணமும் திருவாதவூரர்ப் புராணமும் விரித்துக் கூறுகின்றன. இறைவன் தன்பொருட்டு மண்சுமந்து கோவால் மொத்துண்ட கருணைத் திறத்தை நினைந்து மணிவாசகர் நினைந்து பலவாறு அழுது புலம்பினார். பாண்டியன் வாதவூரடிகளை அடைந்து வணங்கித் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ‘யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங்களே ஏற்று நடத்தல் வேண்டும்’ என மன்னன் மணிவாசகரிடம் வேண்டி நின்றான். அரசனது அன்பினை உணர்ந்த வாதவூரடிகள், ‘என்னைத் திருபெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்றார். அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் ‘பெரியீர் நும் திருவுளப்படி செய்க’ எனக் கூறி விடை அளித்தான். திருவாதவூரர் நற்றவக் கோலம் பூண்டு திருப்பெருந்துறை நோக்கிச் சென்றார்.
தமிழ்ச் சான்றோர்கள் கூறும் வாதவூரடிகள் வரலாறு இவ்வாறு இருக்க போப் இதனை வேறு விதமாகக் கூறுகின்றார். பாண்டிய நாட்டில் உள்ள மதுரைப் பெருங்கோவிலுக்கும் சோழமண்டலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லைப் பெருங் கோவிலுக்கும் ஏதோ ஒரு பெரிய போட்டி இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தில்லைக் கோவில் மதுரைக் கோவிலை பலநிலைகளில் முதன்மை பெற்றது எனலாம். மாணிக்க வாசகர் மதுரையை விடு நீங்கிய பின் மீண்டும் மதுரைக்கு வரவேயில்லை. இவர் குதிரைவாங்க அளித்த தன் பொருளைக் கவர்ந்து கொண்டதனைப் பாண்டிய மன்னன் மனதார மன்னிக்கவே இல்லை என ஊகிக்கலாம். போப்பின் ஊகத்தின்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் தன்னை மனதார மன்னிக்காததால்தான் அவர் மீள மதுரைக்கு வரவில்லை என்பதாகும்.(It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses)
திருவாசகம் மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரையில் போப் மாணிக்கவாசகர் வரலாறு எழுதியுள்ளார். அதில் பாண்டிய மன்னன் தன்னுடைய பிழைக்கு மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரைத் தன்னுடைய அமைச்சராகப் பணிகொள்ளுவதற்குத் தனக்குத் தகுதியில்லையாதலால் நாட்டை ஆளும் உரிமையை அவருக்கு அளித்துவிட முன் வந்ததாகவும் கூறியதற்குக் கண்டபத்து என்னும் பதிகத்தின் அறிமுகத்தில் கூறியுள்ள இந்தச் செய்தி முரண்படுகின்றது.(The King now pays the saint a visit, acknowledges all his mistakes, declares his unworthiness to have such a , and offers to resign to him the kingdom)
இந்த முரண்பாடுகளால் ஒன்று நன்கு தெரிய வருகின்றது. புராணங்களும், சைவ உலகமும் மாணிக்க வாசகருக்கு அளித்துள்ள உயர்வையும் அவருடைய மேன்மையையும் போப் அறிந்திருந்தாலும் , அவருடைய கிறித்துவ மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
தமிழனுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் தாமஸ் எனக் கூறுவோருக்கும் போப்புக்கும் என்ன வேறுபாடு? ஒரே குட்டையில் ஊறியவர்கள் தானே!
திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.
டேனியல் தங்கப்பா
நரேந்திரன் on October 6, 2009 at 1:05 pm
ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி பூர்வமான பல உண்மைகள் சான்றுகளுடன் எடுத்துரைக்கப்பட்ட கட்டுரையை படித்தபின் சற்று அயர்ச்சியாக/சோர்வாக/உணர்ச்சிபூர்வமாக உணரும் அனைத்து வாசகர்களும் ‘டேனியல் தங்கப்பா’ வின் மறுமொழியை படித்தால் ஒரு பெரிய நூற்றாண்டு நகைச்சுவையை (Millenium Joke) படித்த சிரிப்பு வரும். அதன் மூலம் அந்த சோர்வை நீக்கிகொண்டு அடுத்த கட்டுரைகளை படிக்க வேண்டுகிறேன்.
இன்னமும் திருவள்ளுவரை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லுவோர்க்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம்பெற்றிருக்கும் ‘திருவள்ளுவர் ஒரு இந்து’ என்ற கட்டுரையை படித்து தெளிவுறவும். இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை.
ராபர்ட் டி நொபிலியில் ஆரம்பித்து, ஜி.யூ.போப், ஜோசெப் பெஸ்கி, கால்டுவெல் வரை அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பேன் நான். இவர்கள் தமிழ் கற்றது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல. அதன் மூலம் நம் ஆன்மீக நூல்களைத் திரித்து, நம் கலாசாரத்தை மாற்றியமைத்து, நம் மக்களை குழப்பி மதமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்குத் தான்.
கலாசாரக் களவை ஆரம்பித்தது ராபர்ட் டி நொபிலி தானே! திராவிட இனம் என்ற புளுகு மூட்டையினை அவிழ்த்துவிட்டது கால்டுவெல் தானே! இன்னும் இங்கு திராவிட இனவெறிக் கொள்கை பேசிக்கொண்டிருக்கும் கழகங்களின் பகுத்தறிவு முட்டாள்கள் கால்டுவெல் பேரைச் சொல்லித்தானே தங்கள் பிழைப்பை ஒட்டிக் கொண்ட்டிருகிறார்கள்!
இந்தக் கிறுஸ்துவ வேடதாரிப் பாதிரிகள் வழியில் வந்து இன்னும் நம்மை ஏமாற்ற முயற்சிப்பவர்கள் தானெ மைகேல் விட்ஸல், ஃப்ரான்ஸிஸ் க்ளூனி போன்றவர்கள் எல்லாம்! இவர்களின் அடிவருடிகளாக இருந்து கொண்டு குழப்பத்தை விளைவிப்பவர்கள் தானே தெய்வநாயகம் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள்!
இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த ஏமாற்றும் கிறுஸ்துவக் கும்பலுடன், வைதீக/ஸம்ஸ்க்ருத வழிபாட்டுமுறைகளை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்க்கும் ஒரு சில தமிழ் சைவ ஸ்தாபனங்கள், கைகோர்த்துக் கொள்வது தான். அவர்கள் விரைவில் விழிப்புணர்ச்சி கொண்டு கிறுஸ்துவக் கும்பலிலிருந்து வெளிவரவேண்டும். அதற்கு சிவ பெருமான் அருள் புரியட்டும்.
Satyamitram on October 6, 2009 at 4:39 pm
டேனியல்,
திருநாவுக்கரசர் மதம் மாற மறுத்தபோது கல்லில் கட்டி கடலில் தள்ளப்பட்டார். அப்போதும் அவர் “கற்றுணை பூட்டி ஓர் கடலினுள் பாய்சினும் நற்றுணையாவது நமசிவாயவே ” என மன உறுதியுடன்பாடினார்.
சீக்கியர்களின் குரு கோவிந்தசிம்மனின் பால்மணம் மாறாத இரண்டு பச்சிளம் குழந்தைகள் கூட கொடியவன் ஔரங்கசிபினால் இசுலாமுக்கு மதம் மாற செய்த கொடுமையும் கண்டு அஞ்சாது மரணத்தை ஏற்றது இந்த பாரத மண்ணில்.
தனது குருதியினால் பாவங்களை கழுவ வந்ததக பிதற்றிய இயேசு, சாவைய்ம் சிலுவைபாட்டையும் கண்டு அஞ்சி நடுங்கி எல்லாம்வல்ல தேவனை “ஏலி ஏலி லாமா ஸெபதநிக்” ( ஏன் தேவே, ஏன் தேவே ஏன் என்னை கைவிட்டீர். மத்தேயு 27:46) என்று கூவி கதறி தேவ நிந்தனை செய்து பெரும் பாவியாக மரித்ததை கண்டால் வருவது அருவருப்பு .
ஏசுவே தேவன் என்றல், என் தேவனே, என் தேவனே என்று அவன் அழைத்து யாரை ? ஏன் ?
வள்ளுவரை கிருஸ்துவர் என்று கூறும் நீர், உம் இயேசு “என் தேவன, என் தேவனே” என்று அழைத்து எம் சிவனை என்று அறிவீரோ ?
தன்னை தேவன் கூறி இயேசு செய்த தீவினை பயன் எம்பெருமான் அவனை மரணத்தில் இருந்து காக்கவில்லை.
யேசுவின் சீடரென்று சொல்லிக்கொள்ளும் தாமஸ் இயேசு நாட்டிலிருந்து கால்நடையாக பாலைவனங்களையும் மலை கடல்களையும் தாண்டி கேரளாவுக்கு வந்து அங்கிருந்தவர்களை தேவமக்களாக்கி விட்டு பல நூறு கிலோமீட்டர்களை தாண்டி மயிலாப்பூர் வந்து சத்து போனதாக கதைகட்டுபவர்கள், அதை வரலாறாக்க துடிக்கும் நமது போலி மதசகிப்பு அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தமாதிரி பித்தலாட்டம் நடக்கத்தான் செய்யும் . இந்து புராணங்களிலிருந்து வரிகளை திருடி அது தங்கள் இயேசுவை சொல்லுவது என்று சாதிப்பது.இதையெல்லாம் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்த்து பதில் கொடுத்து சரிசெய்யவேண்டிய இந்து சாதிப்பிரிவினையை பேசிப்பேசி தழ்ந்துக்கொண்டேபோகின்றது. படகோட்டியை தழுவி குகனோடும் ஐவரானோம் என்று உருகிய ராமனையும் எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் என்று சமத்துவம் சொன்ன யாதவக்ருஷ்ணனையும் பாமரர்களுக்கு எடுத்துச்சொள்ளவேண்டிய மடாதிபதிகளும் பீடதிபதிகளும் தங்களுக்கு கிடைக்கும் விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் போலி மதசகிப்பு அரசியல்வாதிகள் முன்னால் தலைகுனிந்து நிற்கும்போது நாம் தான் நம்மை காத்துக்கொள்ளவேண்டியுள்ளது.நமது பாரதத்தின் வேத புராண இதிகாச பொக்கிஷங்களை நாம் மதித்து படித்து வரும் தலைமுறைகளுக்கு சொல்லவேண்டும். இல்லைஎண்டல் பெரு நரகத்துக்குப்போகவேன்டிவரும். கிறிஸ்துவர்களுக்கு டானியல் தங்கப்பன் போன்றவர்களுக்கு நன் சொல்வது அப்படி உங்கள் எசுவைப்பற்றித்தான் சைவமும் வைணவமும் சொல்லுகிரதுஎன்றல் இறைமகன் யேசுவைப்பற்றி சொன்ன இந்துமதம்தானே உங்கள் தாய்மதம். அப்படிஎன்றல் பேசாமல் இந்துமதத்துக்கே வந்து தைரியமாக வணங்குங்கள். எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை முப்பத்துமூன்று கோடி தெய்வ வடிவங்களுக்கு பூஜை செய்து சாப்படுபோடும் நாங்கள் ஒரு எசுவுக்குக்கூட சாப்படுபோட்டு ஒன்றும் குறைந்து போகமட்டோம். ஆகவே வீணாக ஜோக்கடித்து காலம் களையாமல் வாருங்கள் தெய்வராஜ்ஜியம் உங்களுக்குள்ளே இருக்கிறது.
// சரி டேனியல் தகர டப்பா // நீங்க..? “சூப்பர”இஷ்டாரா..? அடப்போங்கய்யா காலிப் பெருங்காய டப்பாவ விட மோசமான..?..! தனி மனித தாக்குதல்களை விட்டு எதிர் கருத்தினை மட்டும் அழுத்தமாகப் பதித்தல் போதுமே..!
// போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்
இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன //
இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்; அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..! பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?
// இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே //
இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின் மூன்றாம் அதிகாரத்தினை வாசித்துப் பாருங்கள்.(Gospel according to John;chapter.3)
இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்; அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..! பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?
But G.U.Pope did not believe in God and only believed in Falsehood and bluffed.
If you have evidences on what ever you are talking about -why don’t you produce them instead of attacking me personally- either here or at my blog?
யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.
AUthor of this Gospel died, Paul died as well Jesus Died?
C.N.Muthukumaraswamy on October 7, 2009 at 10:23 am
Chillsam
/இயேசு பெருமான் மறுபிறப்பை மறுக்கவில்லை; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் ஒரு மனிதன் மறுபிறப்படைதல் வேண்டும் என்றே இயேசு பெருமான் போதித்தார்; இதற்கு ஆதாரமாக விவிலியத்திலிருந்து யோவான் எழுதிய நற்செய்தி நூலின்/
திரு சில்சாம் அவர்களே, நீங்கள் காட்டியுள்ள யோவான் சுவிஷேசத்தின் பகுதி, ‘தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பல்வேறு பரிமாணங்களில் மறுபிறப்படைய வேண்டும்’ என்பது ஒரே பிறப்பில் ஒருவன் அடைகின்ற அல்லது அடைய வேண்டும் என சுவிஷேசம் கூறுகின்ற நிலையாகும். அது ஒன்றும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதோ, அந்தப் பரிமாணங்களுக்கேற்ற உயர்நிலைகளைக் கொண்டதோ அல்ல. யோவான் சுவிஷேசம் கூறுவது ஒரேபிறப்பு. தாயின் வயிற்றிலிருந்து பெற்ற ஒரே உடல். அந்த உடல் குழந்தையாக இருந்து முதிய கிழமைபருவம் அடையும் மூப்பினைப் பரிமாணம் என்று சொல்லுவது பொருந்தாது. அது பல பிறவியும் அல்ல மறுபிறப்பினையும் அதனால் அடையும் பல உடல்களையும் மாணிக்கவாசகர், ‘செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” எனக் குறிப்பிடுகின்ரார். இந்தப் பல்வகைப் பிறப்பினையும் திரு ஜி.யூ.போப் அவர்கள், His various embodiments என்னும் தலைப்பில், Within these immobile and mobile forms of life, In every species born, weary I’ve grown, great lord! ” என அழகாக மொழிபெயர்த்திட்டுள்ளார். அவர் species என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ள சிறப்பை நோக்குக. தாய் வயிற்றில் பிறந்த ஒரு உடலைக் கொண்டு அடையும் வளர்ச்சி, மூப்புகளை species எனலாமோ?
யோவன் சுவிஷேசம் 3:5 ‘இயேசு நிக்கொதேமுக்குக் கூறுகிறார் “நான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. 6ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிட்மிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது”
இங்கு இயேசு குறிப்பிடுவது, மனிதனுக்கு ஒரே பிறப்பு உண்டு. இந்த ஒரே பிறப்பில் ஞானஸ்நானம்( நீரிலிருந்து) பெற்று செம்மறியாட்டுக் கூட்டத்தில்( ஆவியில்) ஒருவனாக ஆகவேண்டும்.. இப்படிச் செம்மறி ஆட்டு,மந்தையில் ஒரு ஆடாகாமல் போனால் தேவனின் இராஜ்யமாகிய ஆட்டுப்பட்டியில் உனக்கு இடம் கிடைக்காது. உனக்கு நிரந்தர நரகமே கிடைக்கும்.
பைபிளையும் Imitation of Christ by Thomas Kempis போன்ற கிறித்துவநூல்களையும் தமிழ் இந்துக்கள் படித்துச் சுவைப்பது உண்டு. யோவான் சுவிஷேசத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ப்குதிக்கு இந்து நூல்களில் கூறப்பட்டுள்ள அறங்களின் அடிப்படையில் தமிழ் இந்துவாகிய நான் வேறு விதமாகப் பொருள் காண்பேன்.
பிறப்புக்களில் எல்லாம் மனிதப் பிறப்பு மிகவும் உயர்ந்தது. இதனைத் தவற விட்டால் இனி எந்தப் பிறப்பு வந்து வாய்க்குமோ? அறியோம். கிடைத்தற்கு அரிய இந்தப் பிறப்பிலேயே பிறப்பினை அறுத்து வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியத்தைச் செய்துகொள்ள வேண்டும். அதற்கு சற்குருவை அடைந்து தீட்சை(நீரினால்) பெற்று, அவர் காட்டிய வழியில் நின்று இறையருளை (ஆவியை)ப் பெறவேண்டும். குருவருளும் திருவருளும் இன்றி ஒருவன் பிறப்பை அறுப்பதோ வீடுபேற்றை அடைவதோ இயலாது. ஒருவன் தாய் வயிற்றிலிருந்து பிறப்பது ஒரு இறப்பு; குருவருளும் திருவருளும் பெறத் தகுதியாக்கும் தீட்சை மற்றொரு பிறப்பு.
நீங்கள் பைபிளை மேற்கோள் காட்டிச் சிலவற்றைக் கூறியதால் நான் இவ்விளக்கம் அளித்தேன். டேனியல் தங்கப்பாபோல் தகரடப்பா ஒலி எழுந்திருந்தால் கேளாது போயிருப்பேன்
AGNIPUTHIRAN on October 8, 2009 at 6:36 pm
தேவபிரியா,, ஆர்.சி. மதத்தின் வழிபாடுகளில் மாம்சமும் இரத்தமும் சாப்பிடும் ஒருபழக்கம் உள்ளது. இதோ நித்திய உடன்படிக்கைக்கான எனது உடல், எனது இரத்தம் என்று கூறப்பட்டு இயேசுவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் சாப்பிடுகிறீர்கள். எப்படிதோன்றுகிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு நீங்கள் செய்யப்போகும் பாவங்களுக்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சிலுவையில் மரித்த (ராஜதுரோகத்துக்காக என்பது வேறுவிசயம்) தேவ ஆட்டுக்குட்டியான தேவமைந்தருடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் சாப்பிட. அவர்தானே சொல்லியிருக்கிறார் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் வியர்வைசிந்தி உழைத்த உங்கள் அப்பா சாகும்போது எனது அன்பு மக்களே எனது மரணத்துக்குப்பிறகு என் மாம்சத்தையும் இரத்தத்தையும் நீங்கள் பங்குவைத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு இறந்துபோனால் அவரது கடைசி ஆசையாச்சே என்று நீங்கள் சாப்பிடுவீர்களா…? அதுபோன்ற பாவம் தானே இதுவும். என்று விடுவீர்கள் இந்த பாவச்செயலை. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாவது தெரியுமா…?
ஜி.யு. போப் அவர்களின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதோடு திருவாசகத்தை மொழியாக்கம் செய்தபோது அவரது அணுகுமுறை என்ன, நோக்கங்கள் என்ன என்பதையும் ஆய்ந்து அருமையாக எழுதியுள்ளீர்கள் முத்துக்குமாரசுவாமி ஐயா. மிக்க நன்றி.
ஹைதராபாத் நகரில் டேங்க் பண்ட் சாலையில் தியாகராஜ சுவாமிகள், பத்ராசல ராமதாஸ், அன்னமாசாரியர் ஆகிய பக்த கவிகளுக்கு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். பெங்களூரில் பசவேஸ்வரர், கனகதாசர் ஆகிய சைவ, வைணவ குருமார்களின் சிலைகள் உள்ளன..
தமிழகத் தலைநகரில் கடற்கரை சாலையில் ஜி.யு. போப்புக்கு சிலை உள்ளது, அவர் திருவாசகத்தை மொழியாக்கம் செய்ததற்காக! ஆனால் உலகின் உன்னத பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியத்தின் ரத்தினமுமான திருவாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானுக்கு இங்கு பொது இடத்தில் சிலை உண்டா? அவரது புனித நினைவைப் போற்றும் வகையில் அரசு ஏதாவது செய்திருக்கிறதா? மாறாக, இன்று தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் உட்பட திராவிடக் கட்சி அரசியல்வாதிகளில் பலர் மாணிக்கவாசகரையும், நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் ஏளனம் செய்தும், கிண்டலடித்தும், அவமத்திதுமே மேடைகளில் பேசி வந்திருக்கிறார்கள்! இன்னும் பேசி வருகிறார்கள்.
”மொழிபெயர்த்த” வெள்ளைய மிஷநரிக்கு ராஜ மரியாதை! (அதுவும் தவறான அணுகுமுறையுடனும், பிழைகளுடனும் உள்நோக்கத்துடன்மும் மொழிபெயர்த்தவர்) ஆனால் மூலநூலை எழுதிய சமயக் குரவருக்கு, பேரருளாருக்கு அவமதிப்பு! தமிழர்களின் பகுத்தறிவு உண்மையிலேயே புல்லரிக்க வைக்கிறது.
”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள். போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்! சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.
ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.
அந்தக் கல்லறைக்கு அருகில் இருக்கும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தத்துவ ஞானியின் கல்லறைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் அதே புகைப்படக் காரர் படமெடுத்துப் போட்டிருக்கிறார் (பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்).
தமிழக கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு இஷ்டதெய்வமல்லவா போப்? அதனால், அவரது கல்லறையை நன்கு போற்றிப் பாதுகாக்கிறார்கள். அவர்களது நன்றியுணர்வும், தங்களுக்காக உழைத்தவர்களது நினைவைப் போற்றும் மாண்பும் பாரட்டுக்குரியவை.
daniel நீங்கள் எழுதுவதை உணர்ந்து தான் எழுதுகிறீர்களா?
//திராவிடர் அல்ல அவர் சர்வ உலகத்துக்கும் மீட்பரான ஏசு கிறிஸ்து. தமிழர்களிடம் ஏசுவின் மீட்பை அப்போஸ்தலன் தோமா கொண்டு வந்தார். திராவிட சமயத்தில் ஆரியர்கள் கொண்டுவந்த சாதி முறை விக்கிரக ஆராதனையை புனித தோமாவும் புனித திருவள்ளுவரும் கண்டனம் செய்தார்கள். இதைத்தான் ஜி.யு.போப் சொன்னார். மாணிக்கவாசகர் குதிரை வாங்க போன இடத்திலே அங்கு பரிசுத்த ஆவியாலே ஞானமுழுக்கு செய்யப்பட்டார்.//
சர்ச் செய்துள்ள கேவலமானவற்றை ஏன் இங்கே வ்ந்து அருவருப்பாக்கும் வண்ணம் வாந்தி எடுக்கீறீர்கள்.
திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா- நான் சில குறள்களையும் அதற்கு G.U.Pope உரைகளையும் தருகிறேன்.
திருவள்ளுவர் கிறிஸ்துவத்தின் அடிப்படைகளை பல குறள்களில் எதிர்க்கிர்றார், ஒன்றில் கூட வைதீகத்தை எதிர்க்கவில்லை, முழுமையாக ஆதரிக்கிறா.
படியுங்கள். போப் ஆங்கில மொழிபெயர்ப்பை.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials. 19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of ‘penitence’. If rain fall not, penance and alms- deeds will not dwell within this spacious world. 20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. ]When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’. If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water. 543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king. The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described. 559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain. If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers. 560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie. If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
மழை இல்லை என்றால் உலகமே இல்லை என்றவர், அதைவிடவும் நாட்டுக்குக் கேடு அந்தணர்கள் வேதம் ஓதுதலை விடுவது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
chillsam நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்பியது வேறு, நீங்கள் கேட்கும் கேள்வி வேறு; வரலாற்றில் இருந்திருக்க முடியாத ஒரு நபரைக் குறித்து உங்களுக்கு என்ன அக்கறை..?
இதனை “தேவப்ரியா”விடம் சொல்லவேண்டும்; அவர்தான் ஓயாமல் ஆதாரம் கே(கெ)ட்டுக்கொண்டிருப்பார்..! பைபிள்,யூதர்,இயேசுகிறிஸ்து அனைத்தும் கட்டுக்கதை என்பவர் அந்த காலத்து அறிஞர்களையெல்லாம் கூட அறிவிலிகள் என்பாரோ..?
தேவப்ரியா அவர்களுக்கு, ‘கவுண்டர் க்வெஸ்டியன்’ பண்ணும் எல்லோரும் இயேசு நாதராகி விடமுடியாது, நண்பரே.//
நண்பரே,
பைபிளிற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை.
கிடைத்துள்ள ஆதாரங்கள் ந்ல்லாம் நடுநிலை பைபிளியல் அறிஞகளால் பைபிளிற்கு எதிராக் உள்ளது என்பது தான். அதைப் பாமரரிடம் மறைத்து சர்ச் எத்தனை காலம் தான் ஏமாற்றும்? நீங்கள் உண்மை கூறுவோரை எத்கனி நாள் பொய்யாக நிந்திப்பீர்.
இஸ்ரேல் அகழ்வாய்வுகள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்பது பொய், எபிரேயர் இஸ்ரேலின் ஆதி கானானியரே என்கிறட்து.
எகிப்திலிருந்து யாத்திரை முழு பொய் என்றும், அந்த காலகட்டத்தில் கானான் எகிப்திற்கு அடிமைப் பட்டு இருந்தது.
ஜெருசலெம் 7ம் நூற்றாண்டு வரை சிறு கிராமமாகவே இருந்தது. தாவீது, சாலமொன் கதைகள் வெறும் கட்டுகதைகள்.
ஏசு கன்னிக்கு பிறந்தார், உயிர்த்தெழுந்தார் என்பவை சற்றும் ஆதாரமில்லத புனையலகள். ஏசு- பவுல் தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தனர் -சுவிசேஷப்படி. இவை அனைத்தும் இன்றைய நிலையில் நடுநிலை பைபிளியல் அறிஞர் ஏற்பவை