New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்
Permalink  
 


ஏசுவை கொச்சைப் படுத்தும் பைபிள்

 

 

இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்

இயேசுவை பைபிளில் மத்தேயுவும் லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இயேசுவின் சந்ததிப்பட்டியல் என்று பட்டியல் ஒன்றை பைபிளில் சொல்லியிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர் 'அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பைபிளின் பின்வரும் போதனையை நினைவில் கொள்க!

 


விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையாவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது. (உபாகமம் 23:22,3)


 

எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார் எனவும் அதே பைபிள் கூறுகின்றது.


யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். (மத் 1:3)


 

இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் 'தாமார்” என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்

'தாமார்” என்பவள் யார்?

"யூதா" என்பவன் யார்? 

"பேரேஸ்” என்பவன் யார்?


 

இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க)

 


விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் -அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில்- இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.


மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும் மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின்படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)


தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்(மத்; 1:6)

 


இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?

 

 

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது'மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னிகொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும் ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியர்ள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்;ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடல்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே-அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்- அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாலால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.


அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும் தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும்மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள்.பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம்மனம்இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;


அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும்அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர்உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடிஉன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்... (எசக்கியேல் 23-ஆம் அதிகாரம்)


 

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன்கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்;பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார்தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடுஅவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான். (இரண்டாம் சாமுவேல் 13:1-15 )

 

 


சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். (மத் 1:5

என்றும் வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது.

 

இந்த ராகாப் யார்?

அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா? கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஜோசியம், ராசிபலன், மாயவித்தை, குறி சொல்லுதல் - மரணதண்டனை!

"தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாய வித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்" - உபாகமம் 18:10-12
"கர்த்தராகிய நான் பரிசுத்தராய் இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும் படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி சொல்லுகிறவர்களுமாய் இருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக் கடவது என்று சொல் என்றார்" - லேவியராகமம் 20:26,27
  • ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும்சொல்லப்பட்டு வருகிறது.
  • ஆதியாகமம் 35:20 அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
  • ஆதியாகமம் 47:26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலேஇந்நாள் வரைக்கும் நடந்து வருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.


-- Edited by Admin on Thursday 15th of May 2014 09:26:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்
Permalink  
 


"16ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரே லத்தீன் பிரதியும், 18ஆம் நூற்றாண்டை சார்ந்த ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஸ்பானிஷ் வசனங்களும் மட்டுமே பர்னபாவின் சுவிசேசத்திற்கு என்று நம்மிடம் தற்போதுள்ள கையேடுகள். இதையன்றி வேறெதுவும் இல்லை" என்பதை நினைவில் கொள்க.

 

முதலாவதாக, 4ஆம் நூற்றாண்டு கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் "பர்னபாவின் சுவிசேசம்" என்ற நூலும் தற்போது நம்மிடம் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பர்னபாவின் சுவிசேசம் என்ற நூலும் ஒரே நூல் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

 

1) முதல் நூற்றாண்டு ஞானம் ஆசிரியருக்கு இல்லை

ஆ) சரித்திர ஞானம் இல்லாத ஆசிரியர்:

இ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம் ஆசிரியருக்கு இல்லை:

இதுவரை அகழ்வாராய்ச்சி இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் சுவிசேஷ ஏடுகளுக்கு ஒத்துதான் வருகின்றனவே தவிர எதிர்மாறாக இல்லை. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

2. கிறிஸ்தவம் சாராத பழங்கால கையேடுகள்:
 
யூதர்கள்:
இயேசு என்ற நபர் இல்லையெனில் அதிகமாக ஆதாயமுள்ளவர்கள் யூதர்கள். யூதமத வீழ்ச்சிக்கே காரணம் ஏசுதான். ஆனால் அக்கால யூத சரித்திர ஆசிரியர் ஜோசபஸ் (கி.பி 37-101) இயேசுவை பற்றி "யூத மரபு வரலாறு" என்ற தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.
"அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மேசியாவாக இருக்கலாம்" - பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3
மேலே உள்ள மேற்கோளில் சில வார்த்தைகளை குறித்து சர்ச்சை இருப்பினும் இயேசுவின் சரித்திர வாழ்விற்கு ஜோசபஸ் தரும் அத்தாட்சியை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்று கொள்கின்றனர்.
 
ரோம வரலாற்று ஆசிரியர் தாத்திசு (கி.பி 56 -117): "தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள் தாம் கிறெஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு ஆட்சிக் காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை சிறிது காலம் அடக்கி வைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக் கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம் தானே"
 
3. பழங்கால கிறிஸ்தவ கையேடுகள்
ஆதிகால கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கில் இயேசுவை குறித்து கடிதங்களும் போதனைகளும் விளக்கவுரைகளும் எழுதி உள்ளனர். இயேசு இறந்து 5 வருடங்களுக்குள் இருந்தே இவ்வாறு கிறிஸ்தவ போதனைகளை வலியுறுத்தி கையேடுகள்  எழுதும் வழக்கம் ஆரம்பித்துவிட்டன.
 
பைபிளிற்கு புறம்பே எழுதப்பட்ட அந்த கிறிஸ்தவ கையேடுகளிலும் சிலுவைப்பாடுகளும் உயிர்த்தெழுதலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 36,000 பைபிளில் சேராத கிறிஸ்தவ பழங்கால கையேடுகள் எடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் சில முதல் நூற்றாண்டை சேர்ந்தவை.
 
கிறிஸ்தவ சமூகத்தினரால் எழுதப்பட்ட கையேடுகளை ஏற்க மறுப்பது அர்த்தமற்றது. ஜூலியஸ் சீசரின் வீரதீர செயல்களை பற்றி அவரது சமூகத்தினர் தான் எழுதி வைத்துள்ளனர். சரித்திரம் ஜூலியஸ் சீசரை வரலாற்று நபராகவே ஏற்றுகொள்கிறது.இயேசுவின் சமூகத்தினருக்கு தான் அவரது அருமை பெருமைகள் தெரியுமே அன்றி பிறருக்கு இல்லை. அவரை குறித்து ஆதிகால கிறிஸ்தவர்கள் எழுதியவை கருத தகுந்தவையே.
 
4. பண்டைய புதிய ஏற்பாடு பிரதிகள்:
புத்தர் குறித்த வரலாற்று பதிவுகள் அவர் இறந்து 500 ஆண்டுகளுக்கு பின்பே எழுதப்பட்டவை. இருப்பினும் வரலாறு புத்தரை சரித்திர நபராக தான் ஏற்று கொள்கிறது.இயேசு இறந்து 100 ஆண்டுகளுக்குள்ளாகவே இன்று புதிய ஏற்பாட்டில் உள்ள நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. பல நூல்கள்  கண்ணார கண்டவர்கள் கூறிய செய்திகளை திரட்டி எழுதப்பட்டது. பல நூல்கள் கண்ணார கண்டவர்கள் உயிரோடு இருக்கும் காலத்திலேயே எழுதப்பட்டவை.  
"மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று" - லூக்கா 1:1-4
புதிய ஏற்பாடு நூல்களுக்கு இதுவரை 24,000த்திற்கும் மேற்பட்ட பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில 100 ஆண்டுகளுக்குள் உட்பட்டவை. எந்த பழங்கால நூலிற்கும் இவ்வளவு எண்ணிக்கையில் பிரதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கற்பனை நபரை குறித்து இத்தனை கையேடுகள் சிறிது காலத்திற்குள் எழும்பியதாக வரலாறு இல்லை.
 
5. சரித்திரத்தில் ஏற்பட்ட தாக்கங்கள்:
ஒரு கற்பனை நபரால் வரலாற்றில் தாக்கத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்திவிட முடியாது.
 
இயேசு ஒரு சாதாரண ஏழை தட்சன். பெரும் பணக்காரரோ, மன்னனோ, பெரும் படை உடையவரோ அல்ல. அடித்து இழிவுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர். அவர் எந்த புத்தகங்களையும் எழுதவில்லை. யூதர்களும் ரோமானியர்களும் அவரது நினைவை மக்கள் மனதில் இருந்து அகற்றவே முற்பட்டனர். ஆனால் ரோமாபுரியின் பழமை வாய்ந்த சங்கதிகள் மண்ணோடு மண்ணாகி விட்டன. ஜூலியஸ் சீசரின் வாழ்க்கை வரலாறுகள் பழங்கால கதைகளாகி விட்டன. ஆனால் இயேசு எந்த நிலையில் உள்ளார்?
 
இயேசு ஒரு சரித்திர நபருக்குரிய அத்தனை தகுதிகளையும் மிகையாக உடையவர். அவரது மண்ணுலக வாழ்க்கை மறுக்க முடியாதது, மறைக்க முடியாதது. இதன் காரணமாகவே, சரித்திரம் அவரை வரலாற்று நபர் என்று முத்திரை இடுகிறது. ஆனால் சிலர் கிறிஸ்தவத்தின் மீது கொண்ட சுய விருப்புவெறுப்புகளின் காரணமாக உண்மையை அறிந்தும் அவரது உலக வாழ்வை மறைக்க முயற்சிக்கின்றனர்.
"ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மை விட்டு எறிந்து போடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்" - சங்கீதம் 2:1-4

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard