New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு உயிர்த்தெழுதலில்-காட்சிதந்தார் குழப்பம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு உயிர்த்தெழுதலில்-காட்சிதந்தார் குழப்பம்
Permalink  
 


இயேசு உயிர்த்தெழுதலில் குழப்பம்

 இயேசு அடக்கம்செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின்அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவதுமுரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா?அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?

 

ஓய்வு நாள் முடிந்தது.வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும் மற்ற மரியாளும்கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று!கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித்தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்தமழை போல் வெண்மையாகவும் இருந்தது. (மத்தேயு 28:1-3)

 

ஓய்வு நாள் முடிந்தபின் மகதேலேனா மரியாளும் யாகோபின் தாயாகிய மரியாளும் சலாமே என்பவளும் அவருக்குப்பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள்அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில்இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர்சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக்கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கிதரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள். (மாற்கு 16:1-5)

 

வாரத்தின் முதலாம் நாள்அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டுகல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளேசென்று போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப்பற்றி அவர்கள்கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர்அவர்கள் அருகேவந்து நின்றார்கள். (லூக்கா24:15)

 

வாரத்தின் முதல் நாள்காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்தகல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு -  (யோவான் 20:1)

 

இயேசுவின் கல்லறைக்கு ஒருமரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்கள்வந்ததாக லூக்காவும் மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்களும்சலாமே என்பவளுமாக மூவர்வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அவர்கள் வந்த போதுஅவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

ஒரு தேவ தூதன் என்றுமத்தேயுவும் மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அந்தத் தேவ தூதனைகல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்குக் கூறுவது கர்த்தரின்வார்த்தையா?

அல்லது வானத்திலிருந்துஅவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது இரண்டு பேர்  அருகே வந்துநின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றிபைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல்நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவநண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

 

 

 

உயிர்த்தெழுந்த பிறகு  தரிசனத்தடுமாற்றம்

 

 

இயேசு சிலுவையில் அறையப்பட்டுமரணமடைந்தார்; மூன்றாம் நாள்மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சிதந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்குசுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்குசுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.

 

மகதேலேனா மரியாளிடமும்மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறிசீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம்கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,         

நீங்கள்போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கேஎன்னைக் காண்பார்கள் என்றார். 

(மத்தேயு 28:10)

 பதினொரு சீஷருமோ இயேசுதங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக்கண்டு பணிந்து கொண்டார்கள். 

 (மத்தேயு 28:16)

 இயேசுவின் கட்டளைப்படிபதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம்சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார். 

ஆனால் மாற்கு,

 அவர் உயிரோடுஇருக்கிறார் என்றும் அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை.அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர்ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுதுஅவர்களுக்கு வேறுரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்குஅறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில்இருக்கும் போது அவர்களுக்கு அவர்தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாச்ததைப்பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார். 

(மாற்கு 16:11-14)

 பதினொரு சீடர்களும் இரண்டுமரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாகமத்தேயு கூறுகிறார். ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லைஎன்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்குஇயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

மத்தேயு இது பற்றி எதையுமேகூறவில்லை.

 கலிலேயா என்ற இடத்திற்குப்புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவைஅவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.

கிறித்தவத்தின் முக்கியமான கோட்பாட்டை விளக்கும்  விஷயத்தில் கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமே கர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால்இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.

 

அந்நேரமே எழுந்திருந்துஎருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும் அவர்களோடிருந்தவர்களும்கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர்தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்துஉங்களுக்குச் சமாதானம் என்றார். 

(லூக்கா 24:33,37)

கலிலேயாவிலும் இயேசுவைச் சந்திக்கவில்லை;  அவர்கள் போஜனம் பண்ணும் போதும்சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம்தந்ததாக லூக்கா கூறுகிறார்.

மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல.அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவுமுரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவுமுரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அன்று என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்குவேறு வழியிருக்கிறதா கிறிஸ்தவர்களே



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இயேசு உயிர்த்தெழுதலில்-காட்சிதந்தார் குழப்பம்
Permalink  
 


Anonymous said...

K A V Y A says:
November 16, 2012 at 3:48 pm

என் விளக்கம் இதுதான். ஏற்கனவே சொல்லப்பட்டது:

தேவப்பிரியா சாலமன் தன் வியர்வையையும் உழைப்பையும் வேறு உதவும் விஷயத்தில் செலவிட்டால் தனக்கிருக்கும் ஸ்டாமினாவை நல்வழியில் பயனப்டுத்த்வதாக முடியும்? ஏன் இந்த வாழ்க்கை விரயம்?

மதங்கள் என்றெடுத்தால், அவை இன்று நேற்று தோன்றியவையல்ல. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் தோன்றியவை. கிருத்துவமும் இசுலாமும் இந்தியாவுக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. இம்மதங்களில் இருப்போர் எண்ணிக்கை கோடிக்கணக்கில். ஆனால் இவர்கள் மூதாதையர் இந்துக்கள்.

எக்காரணங்களுக்காக இந்து மதத்தைவிட்டு விலகினரோ அவை இன்னும் இருக்கின்றன. மட சேனாவும் சிரிரங்கத்தை ஒரு பார்ப்பனரைப் பல்லக்கில் வைத்து தூக்குவதும், ஆகமங்கள் எங்களைத்தான் பூஜாரிகள் எனச்சொல்கின்றன’; இந்துமதப் போர்வையப் போர்த்திக்கொண்டு தன் ஜாதியை வளர்ப்பதும் போன்று ஏகப்பட்ட பார்ப்பனீய ஏற்றம் இன்னும் அழியாமலிருக்கின்றன. இத்தளத்திலும் அதை வலுப்படுத்தி கட்டுரைகள் இந்துக்களாலேயே போடப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறோம்.

புராணப் புரட்டுக்கள் என்று எடுத்தால், பார்ப்ப்னர்கள் செய்யதவை மற்றமதப் புரட்டுக்களை புரட்டிப் போட்டுவிடும். கந்தபுராணத்தில், மஹாபாரதத்தில், இராமாயணத்தில் இல்லாதவையா? அவற்றை நாத்திகர் மட்டுமா சொன்னார்? பக்கா இந்துக்களும் சொன்னவர்தானே? இனறும் தமிழ் ஹிந்து காமில் ஜடாயு என்பவர் மனு சுமிர்த்தியைத் தாக்கியும் அரவிந்தன் நீலகண்டன் டிவிட்டரில் மகாபெரியவாளில் ஜாதிப்பற்றைத் தாக்கியும் எழுதுகிறார்களே? வீரமணியா எழுதினார்?

ஆக, இந்துமதம் இன்னும் தன் அழுக்குக்களைத் துடிக்கவில்லையென்பதை விட, அவற்றைத் துடைக்க அவர்களுக்குள்ளேயே எதிர்ப்பு இருக்கிறதே? அரவிந்தன் நீலகண்டனை விமர்சித்து ஒரு பார்ப்ப்னர் கடுமையான பிளாக் போஸ்டை போன வாரம் எழுதி தமிழமணத்தில் வெளியானதே? பாரதியாரே, ‘கந்தபுராணத்திலில்லா புரட்டா? என்று நக்கலாகக் கேட்கிறார்.

ஆக, என் இறுதிச் சொல் இதுவே: எல்லா மதங்களுக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று நல்லது; இன்னொன்று கெட்டது. நான் ஹிந்து. நல்லதை ஏற்கிறேன். நல்லவிட்யங்கள் எவரிடமிருந்தாலும் வரவேற்றுப்போற்றி வாழுதல். மத நல்லிணக்கம்.

என் வீட்டுக்கதவைப் பூட்டிக்கொண்டு நான் வாழ முடியாது. வெளிவந்து பிறருடன் சேர்ந்து வாழத்தான் செய்யவேண்டும். அதுவே இறைவன் கட்டளையுமாகும். அவ்வெளியிருக்கும் கிருத்துவரின் இசுலாமியரின் நம்பிக்கைகளை நான் பகடி பண்ண வாழமுடியுமா? என மதம் எனக்கு. அவர் மதம் அவருக்கு என்பதுதானே வாழ்க்கை?

அவரிருக்கக் கூடாது? அவர் கடவுளை அவர் நம்பக்கூடாது? அஃதெல்லாம் பொய என்றால் அவரும் நும் கடவுளைப்பற்றியும் அப்படிச்சொன்னால் தவறாகுமா?

இதை தேவப்பிரியா யோசிக்க வேண்டும்! சுவிசேசிகளோ மிசுநோரிகளோ போலியான வாக்குகளை நம்பிக்கைக்களாகக் கொடுத்து ஏமாற்றினால், அதற்குப்பதில் கிருத்த்வமே ஒரு புரட்டு என்பதா பதில்? அவர் அம்மதத்தை வைத்து மக்களை ஏமாற்றிப்பிழைக்கிறார் என்று சொன்னால் போதுமே?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உளறல் - முரண்பாடுகள் - ஆபாசங்கள் - அசிங்கங்கள் - தரங்கெட்ட வார்த்தைகள் - அருவறுப்பு - இறைவனைக் கேவலப்படுத்துதல் - கேவலமான சட்டங்கள் - பொய்கள் கொண்ட பைபிளில் புதிய ஏற்பாட்டில் வெவ்வேறு தலைப்பில் பார்ப்போம.

1. இயேசு குடுமபமும் இயேசுவும்

2. இயேசு சீடர்கள் யார் யார்?

3. சுவிசேஷங்கள் புனைந்த கதாசிரியர்கள் யார்?

4. யோவான் ஸ்னானனும் இயேசுவும்- எல்லாமே பொய்யா?

5. தேவைக்கு ஏற்ப மாறும் சுவிசேஷக் கதைகள்.

6. வளரும் புனையல்-கொ-ஞ்சம் கொ-ஞ்சமாக தெய்வீகம்

7. இயேசுவின் கைது - யார் செய்தனர்?

8. பொந்தியூ பிலாத்து?

9. உயிர்த்து எழுந்தாரா?

10. உலகம் ஏசுவின் வாழ்நாளீலேயே அழியப் போகிறது?

11. இயேசுவின் முன்னோர்கள் யார்-யார்?

12. ஹோசன்னா?

13. ஒரே கதை மாற்றி மாற்றி புனையப்படும்?

14. பவுலும்- பேதுருவும்? 

15. தீர்க்க தரிசனம் நிறைவேறுதல் என்னும் கட்டுக் கதை? 

16. இயேசு எப்போது பிறந்தார்?

17. ஏசு குடும்பம் எங்கே வாழ்ந்தார்?

18. ஏசு சொன்னதும் ஸெய்ததும்?

19. புத்தி பேதலித்தவர்களுக்கு தேவ ஞானம் தெரியுமா?  மருத்துவம் ஏற்குமா?

20. இயேசு மேஜிக்குகள்- செய்தாரா?

21. பைபிளில் யேசூ புழங்கிய இடங்கள் தெரியவில்லை?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யோவான் 21:இயேசுவும் அன்புச் சீடரும்

20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.

Is John is still ALIVE



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard