வென் வேற் கவுரியர் தொல் முது கோடிஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராமன் எனமட்டும் புகழவில்லை ஸ்ரீ இராமன் கூறும் வார்த்தை 'அருமறை' என்றே சொல்கிறது. தமிழரின் வீரத்துக்கு இலக்கிய ஆவணமாக திகழும் புறநானூற்றில் ஸ்ரீ இராமபிரான் 'கடுந்தெறல் இராமன்' என ஊன் போதி பசுங்குடையார் (புறம் 70:15) பாடியிருக்கிறார். தமிழ்-தமிழர் பண்பாடு என்றெல்லாம் பேசும் கருணாநிதிக்கு இதுவுமா தெரியவில்லை?
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16)
"நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள்? அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். " (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)அன்று மகாத்மா காந்தியால் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின் அத்தகைய புனித சின்னமொன்றை இன்று சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் திமுக எனும் இனவாத க்ட்சியுடன் இணைந்து இடிக்க முற்படுவது பாரதத்தின் சுய கௌரவம் அடைந்துள்ள தாழ்மை நிலையைக் காட்டுகிறது.
ஸ்ரீ ராமரைப் பொறுத்தவரையில் அவர் இந்த தேசதர்மத்தின் சின்னம். சத்குரு நானக் ராஜா ராமர் தென்னிலங்கைக்கு பாலம் கட்டி சென்று அரக்கக் கும்பலை அழித்ததை பக்தியுடன் பாடியுள்ளார். புனித குரு கிரந்த சாகேப்பில் ஸ்ரீ ராமபிரானின் திருநாமம் 3533 முறை பெருமைப்படுத்தப்படுகிறது. (மிக அதிக அளவில் இறை நாமமாக குரு கிரந்த சாகேப் புகழுவது ஹரி எனும் திருநாமத்தைதான். 8344 முறை).
"ராமர் பாலத்தைக் காக்க உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்....ராமர் உண்மை என நான் கருணாநிதியிடம் நேரடியாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அதில் தோற்றுவிட்டால் உயிரை விடவும் தயார்!"
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி (அகிலத்திரட்டு அம்மானை (1179-11185)
மேலே இருப்பதை எந்த அரசியல்வியாதியையும் மனதில் வைத்து சொல்லவில்லை. ஆனால் சாதியக்கொடுமைகளையும் அன்னிய மதமாற்றிகளையும் எதிர்த்து குரல் கொடுத்த ஒரு அவதார புருஷர் இராமபக்தர்களை அவமானப்படுத்தி அன்று அரசாண்ட ஒரு அரக்க அரசனுக்கு இடப்பட்ட சாபத்தை இங்கு சொல்லி இருக்கிறது. தீயவர்கள் அழிய விரும்புபவர்கள் இவ்வாறே வேண்டலாம்.
அய்யாவழி மக்களின் திருநாமம் தாங்கிய காவிக்கொடியான அன்புக்கொடி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பாலபிரஜாபதி அடிகளார் கூறியுள்ளதாவது:
சேது சமுத்திர திட்டமானது ஊழல் செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும். கடலில் செலவழிக்கிறோம் என்று பலகோடி ரூபாயைக் கொள்ளை அடிப்பதற்கென்றே இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது....இராமர் தன் கைகளால் இந்த பாலத்தைக் கட்டினார் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் கை வைப்பது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மிகப்பெரிய சாபமாகவே அமையும்.பாலம் இடிக்கப்படுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மாற்றுவழியில் இந்த திட்டத்தை ஊழல் இல்லாமல் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை....காந்தியடிகள் தற்போது உயிருடன் இருந்தால் ராமர் பாலத்தை காப்பாற்றும் இது போன்ற போராட்டன்களுக்கு அவரே தலலமை பொறுப்பேற்றிருப்பார். ராமரைப் பின்பற்றி தன்னன மகாத்மாவாக்கியவர் காந்தியடிகள். சாதிய சமத்துவத்தை விரும்பியவர் இராமர்....இந்தியாவில் ராமரை தோற்கடிக்க நினைத்த யாரும் வெற்றி பெற்றதில்லல. இராமர் பாலத்தை இடிக்க நினனத்தால் இந்தியா முழுவதும் இன்னொரு புரட்சி உருவாகும்."