New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்
Permalink  
 


ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்

ஜோ என்கிற வலைப்பதிவாளர் ஒரு நூலை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏசு என்பவர் கற்பனை என நான் சொன்னது அவரை மிகவும் 
வருத்தப்படுத்தியிருக்கும் போலிருக்கிறது. எனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' நூலை எனக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார். 
வாழ்க அவர் என் மீது கொண்டிருக்கும் பாசம். ஆனால் விசயம் என்னவென்று சொன்னால் ஏசு குறித்த புனைவுகளும் சடங்குகளும் நிறுவனமயமாக்கப்பட்ட கால கட்டம் முதல் 
இன்றைய தேதி வரை அன்னாரைக் குறித்து கிறிஸ்தவ விவிலியத்துக்கு அப்பால் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. சேவியர் தாம் எழுதிய இந்த நூலைக் குறித்து 
அதன் ஆசிரியர் என்ற முறையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்." என அவரே கூறியுள்ளார். ஆனால் அவர் அப்பதிவில் கொடுத்துள்ள 
பின்னட்டை அப்படி தீர்க்கமான ஆராய்ச்சி பார்வையை ஒன்றும் வைக்கவில்லை. ஆராதனைப் பார்வையைத்தான் முன்வைக்கிறது. அதை நான் தவறெனக் கூறவில்லை. அவர் யூதகுல மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டதாகவும், அக்கால கட்டத்தில் மௌடீகமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கி இருந்ததாகவும், இயேசுவின் குரல் அமைதி மற்றும் பகுத்தறிவினை கூறியதாகவும் எனவே அவர் குலத்துரோகியாக கருதப்பட்டதாகவும் எனவே தான் அவர் மரணத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்நூல் கூறுகிறது.


1960களில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 'மாஸ்கோவில் ஏசு' என ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டது. (என்னிடம் வெகுகாலம் இருந்த இந்த பிரசுரம் எங்கோ தொலைந்து போயிற்று. பழைய சகாக்கள் இதனை வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். சிவப்பட்டையில் ஒளிரும் சிலுவை போட்ட பிரசுரம்.). ' அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து' எழுதிய சேவியரின் நூலினை நான் படிக்கவில்லை. ஆனால் பின்னட்டை கூறுகிற கதைக்கருவே உள்ளே பக்கங்களில் விரித்தோதப் பட்டிருக்குமெனில் 'மாஸ்கோவில் ஏசு கிறிஸ்து'வின் விளக்கவுரையாகவே அது அமைந்திருக்குமென கருதுகிறேன். ஏசு உயிர்த்தெழுந்ததாக கூறும் கிறிஸ்தவ நம்பிக்கையை கூறிவிட்டு சேவியர் மறு நிமிடமே மூன்று நாட்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்தும் உயிர்த்தெழுந்ததாக கொள்ள வேணுமெனச் செப்புவது அவரது நூலின் முன்னட்டையில் 'மிகைக்கலப்பற்ற ... வாழ்க்கை வரலாறு' எனக்கூறுவதனை எள்ளி நகையாடி மறுதலிக்கிறது என்பதுடன் இந்த நூலின் வரலாற்று நேர்மைக்கும் கட்டியம் கூறுகிறது. கிழக்கு பதிப்பகம் ஏதோ மிகவும் தரமான புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் என்பதிலும் எனக்கு ஐயமுண்டு. தமிழ்நாட்டு பதிப்பகங்களில் சில பிரகடனப்படுத்தப்படாத பத்வாக்கள் உண்டு. கிறிஸ்தவத்தை ஆழமாக சர்ச்சைக்கோ விவாதத்திற்கோ உள்ளாக்கும் நூல் எதுவும் வெளி வந்திட முடியாது. ஓரளவு விமர்சனத்தன்மையுடன் கிறிஸ்தவத்தின் மையத்தை தொடாது ஏதாவது ஒரு நூல் வந்துள்ளதென்றால் அது சாதீயமும் கிறிஸ்தவமும் குறித்த ஒரு நூல் மட்டுமே. ஒரு புத்தக வெளியீட்டாளர் என்னிடம் கூறியது : "கிறிஸ்டியானிட்டியை தாக்குற மாதிரி கட்டுரைகள் வேண்டாம் சார். அது லைப்ரரி காப்பி போகமுடியாத மாதிரி அவுங்க செஞ்சிருவாங்க." கூறியவர் தனது அலமாரியில் இருந்து ஒரு கத்தையை எடுத்துக் காட்டினார். ஒரு கிறிஸ்தவ நண்பர் 'ஞான விவிலியங்களை' (Gnostic Gopels) மொழி பெயர்த்திருந்தார். "இதையே நான் வெளியிடாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். கடனைவாங்கி நடத்துற தொழில் சார் இது. அவுங்களுக்கு எங்க அடிக்கணும்னு தெரியும்." என்றார். அவுங்க என்பது யார் என்பதனை ஊகங்களுக்கு விட்டுவிடுகிறேன். அண்மையில் உலகமெங்கும் 
ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துவின் அடக்க அறை குறித்த விவரணப்படத்தை இந்தியாவில் தடை செய்த கத்தோலிக்க சபையின் வலு அதன் பாசிச பரிமாணத்துக்கு மற்றொமொரு 
எடுத்துக்காட்டு. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

முன்பு நான் எழுதி பின் பல அலுவல்களாலும் மறதியாலும் எழுதாமல் நிறுத்திய இரு கட்டுரைத் தொடர்களை மீள் தொடர என்னை தூண்டிய முன்னிலையாக சகோதரர் ஜோவின் 
செயல் அமைந்தது. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். ஏசுவின் வரலாற்று/தொன்மப் பின்னணியினை ஆராய்வதுடன் அதன் பின்னணியிலிருக்கும் அரசியலையும் அதிகார அமைப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தின் பிற மத உரையாடல்கள் உண்மையில் உரையாடல்கள் அல்ல மாறாக ஒரு வழிபாதையே ஆகும். (இது மேல்தள இறையியலாளர்களாலேயே பலமுறை ஒப்புகொள்ளப்பட சமாச்சாரம்) எனவே இக்கட்டுரை தொடர் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதப்படும். கிறிஸ்தவத்தின் தொன்ம பரிமாணங்கள், யூத-கிறிஸ்தவ உறவுகள், கிறிஸ்தவ-பாரத தருமங்களின் சந்திப்புக்கள், மானுட வரலாற்றில் கிறிஸ்தவத்தின் பங்கு (இனப்படுகொலைகள் என்றில்லை மார்ட்டின் லூதர் கிங்கும் பிஷப் டுட்டுவும் கூட கிறிஸ்தவ இறையியலின் வெளிப்பாடுகள்தாம்.) என பல விசயங்களை இக்கட்டுரைத் தொடர் மூலம் காட்ட உத்தேசிக்கின்றேன். 

யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவா ஏசு?


jesus_nazi.jpg

 

ஏசு புனைவு யூத வெறுப்பியலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது: ஏசு யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக இருக்க மூடியுமா?


இந்த நூல் முன் வைக்கும் யூத சமுதாய சித்திரம் விசித்திரமான ஒன்று: மௌடீகமான பூர்ஷ்வாத்தனமானதாக யூத சமுதாயத்தை அது காட்டுகிறது. பகுத்தறிவையும் அமைதியையும் வெறுத்த சமுதாயமாக எனவே ஏசுவை வெறுத்து அவர் கொலைக்கு காரணமான சமுதாயமாக அது யூத சமுதாயத்தினை சித்திகரிக்கிறது. வாஸ்தவத்தில் நிறுவன கிறிஸ்தவத்தின் ஏசு புனைவிலும் யூத சமுதாயம் இவ்வாறே சித்திகரிக்கப்படுகிறது. ஆனால் யூத சமுதாயம் யூத வரலாறு என்ன கூறுகிறது அக்கால கட்டத்தைக் குறித்து என்பது இந்த கிறிஸ்தவ மேன்மையாளர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. யூத நெறியின் திருமறையை பழைய ஏற்பாடு எனக் கூறுவதிலேயே கிறிஸ்தவத்தின் அகங்கார பயணம் தொடங்கி விடுகிறது எனலாம். 'உன்னைக் குறித்து நான் கூறுவதுதான் நீ' என்கிற பிறரை தீர்ப்பிடும் தன்மை. 'ஆண்டவன் உன்னோடு செய்த ஏற்பாடு பழையதாகிவிட்டது.' எனும் கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடே 'பழைய ஏற்பாடு' எனும் பதத்தில் உறைந்திருக்கும் மமதையான தீர்ப்பீடு ஆகும். என்றாலும் ஏசு பிறரை தீர்ப்பிடக்கூடாது என கூறியதாக கூறுவது இம்மதத்தின் பெயரிடும் விநோதத்திலேயே மறுக்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும். ஏசு ஒரு கற்பனை புனைவு என்பதனை பலர் கூறியுள்ளனர் என்பதுடன் அன்று முதல் இன்று வரை குறைந்தது 1700 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சபை ஏசு குறித்து போலித் தரவுகளை உருவாக்குவதை ஒரு கலையாகவே செய்து வந்துள்ளது. யூத இறையியலாளர்கள் தம் சமுதாயத்தின் இத்தகைய சித்திகரிப்பை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள் என்ற போதிலும் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்ற கதையாக கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை அவர்களது வார்த்தைகள் எடுபடவே இல்லை. அதே நேரத்தில் அவர்களது இறைநூல் கிறிஸ்தவ மொழிபெயர்ப்புகளில் அருமையான நுணுக்கமான மாறுதல்களுடன் ஏசுவுக்கான முன்னறிவிப்பாக மாற்றப்பட்டது. ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதற்கான ஆதாரங்களாக இன்றைக்கும் மிசிநரிகளால் முன்வைக்கப்படும் தரவுகள் இவ்வாறு 
மாற்று மதத்தவரின் நூலை தகாத முறையில் தவறாக மாற்றி அமைத்து செய்யப்படும் பிரச்சாரங்களே ஆகும். இது குறித்து யூத அறிஞர்கள் மிக தெளிவான ஆதாரங்களை ஒரு 
இணைய தளத்தில் முன் வைத்துள்ளனர். அதனை இங்கே காணலாம். 


jews_say.gif


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஏசு ஏன் யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையா இல்லை


இந்த இணைய தளத்தில் வேண்டிய அளவு தரவுகள் உள்ளன. உதாரணமாக 'அபிஷேகிக்கப்பட்டவன்' என தானியேல் 9:25 கூறுகிறதை கிறிஸ்தவ விவிலியத்தில் 'பிரபுவாகிய மெசையா' என மாற்றி அதனை தொடர்ந்து வருகிற வசனங்களை ஏசு குறித்த முன்னறிவிப்பாக மாற்றியுள்ளமையை என்னவென்பது! ஆனால் அதே ஹீப்ரு வார்த்தை 2-சாமுவேல் 1:21 இல் (அபிசேகிக்கப்பண்ணப் படாதவன் போல) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆக, இது கிறிஸ்தவ மொழி பெயர்ப்பாளர்கள் ஹீப்ரு தெரியாததால் செய்ததது அல்ல. மாறாக திட்டமிட்டு வார்த்தை திரிப்பு விளையாட்டில் இறங்கியதே ஆகும். யூத அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த மோசடி முன்னறிவிப்புகள் இந்தியாவில் இன்னமும் ஆன்மீக அறுவடைக்கு 
பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை சிந்தித்தால், இந்த யூத இணைய தளம் கூறுகிற விசயங்களை நாம் ஏன் தமிழ்படுத்தி துண்டு பிரசுரங்களாக மற்றும் சிறு நூல்களாக 
விநியோகிக்க வேண்டுமென தெரியவரும். இந்த மொழிபெயர்ப்பு மோசடி குறித்து முழுமையானதோர் கட்டுரையை கீழே படிக்கலாம்: மெசையா என்பதன் வேர் பொருளே 
அபிசேகிக்கப்பட்டவர் என சிலர் வாதிடலாம். ஆனால் வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதனை குறிக்கும் பதத்திற்கும் வெறுமனே அபிசேகிக்கப்பட்டவன் (அரசன் கூட அவ்வாறுதான்) எனும் பதத்திற்கும் நிச்சயமாக வேறுபாடு உண்டு என்பதனை யூத அறிஞர்கள் 2-சாமுவேல்1:21 ஐயும் தானியேல் 9:25 ஐயும் ஒப்பிட்டு காட்டி விளக்குகின்றனர். யூத சம்பிரதாயத்தின் படி தானியேல் இறை-அறிவிப்பாளர் (prophets) வரிசையிலேயே சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (பார்க்க: விக்கிபீடியா மெசியா: 
http://en.wikipedia.org/wiki/Messiah

விக்கிபீடியா யூத மெசியா:http://en.wikipedia.org/wiki/Jewish_Messiah)

அபிசேகிக்கப்பட்டவரும் வாக்களிக்கப்பட்ட மெசையாவும் கிறிஸ்தவ விவிலியத்தின் மொழிபெயர்ப்பு சரியா?: யூத 
அறிஞர்களின் விளக்கம்

 


டான் ப்ரவுன் சர்ச்சையின் ஆழமான வேர்கள்:


cover.gif


அண்மையில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைகளைச் சந்தித்துள்ள திரைப்படம் 'தி டாவின்சி கோட்'. ஏசு கிறிஸ்து குறித்து அறியப்படாத சில கதையாடல்களை 
இத்திரைப்படமும் இத்திரைப்படத்தின் அடிப்படையான டான் ப்ரவுன் என்பவரின் நாவலும் முன்வைக்கின்றன. இக்கதையாடல்கள் நிறுவன கிறிஸ்தவத்தின் தொடக்கம் முதலே 
இருப்பவை. நிறுவன கிறிஸ்தவ அமைப்புகளால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அடக்கி அழிவுக்கு உள்ளானவை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அவை மேற்கத்திய அறிவுலகில் மட்டுமே ஓரளவு பேசப்பட்டவை. 1970களில் மேற்கில் ஏற்பட்ட நிறுவன எதிர்ப்பு அலைகளின் போது பொது பிரக்ஞைக்குள்ளும் புகுந்தவை. உளவியலாளர் கார்ல் உங் மற்றும் தொன்மவியலாளர் ஜோசப் கேம்பெல் ஆகியோரின் எழுத்துக்கள் இந்த மாறுபட்ட கிறிஸ்தவ கதையாடல்களை பிரபலப்படுத்தின. நிறுவன கிறிஸ்தவ கண்ணோட்டத்திற்கு மாறுபட்ட கதையாடல்களை கொண்ட ஞான விவிலியங்கள் (Gnostic Gospels) குறித்த சிறந்த ஆராய்ச்சியாளராக எலைன் பேகல்ஸ் எனும் பெண்மணி அறியப்படுகிறார். 


pagels.jpg

 

எலைன் பேகல்ஸ்


'ஸ்டிக்மட்டா' எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்நூல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பிரபல திரைச்சித்திரமாகும். 

STIGMATA.jpg


ஆனால் மிகுந்த சர்ச்சைகளுடன் உலகின் கவனத்தையே 
கிறிஸ்தவத்தின் இந்த அறியப்படாத பரிமாணங்கள் பக்கம் திருப்பியுள்ள பெருமை 'தி டாவின்சி கோட்' திரைப்படத்தையும் நாவலாசிரியர் டான் ப்ரவுனையுமே சாரும். ஏதோ 
பரபரப்பினை ஏற்படுத்தி பிரபலமடைவதாக 'டாவின்ஸி கோட்' குறித்து கூறுகிற நண்பர்கள் சில விசயங்களை இங்கே கோட்டைவிடுகிறார்கள்.

 


starbird.jpg

 

மார்க்ரெட் ஸ்டார்பேர்ட்


மேலோட்டமாக ஏசு மேரி மேக்தலைனை மணந்துகொண்டது குறித்ததாக இந்த திரைப்படமும் நாவலும் அறியப்பட்டாலும், அதன் அடி நீரோட்டம் மேலும் வலுவான ஒன்றாகும். 
இறைமையின் பெண்மை தன்மை கிறிஸ்தவத்தில் முழுமை அடையவில்லை என்பதனால் எழும் ஒரு பூர்த்தியடையாத ஆன்மிகத் தேவையினையே இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்நாவல் எழுத அடிப்படை ஆதாரங்களாக அமைந்த நூல்களில் ஒன்றின் ஆசிரியை மார்க்ரெட் ஸ்டார்பேர்ட் என்பவர். இவருடன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இக்கட்டுரையாளன் நடத்திய உரையாடல் திண்ணை இணைய இதழில் (திண்ணை.காம். மார்ச் 4 2005) வெளியாகியிருந்தது. அவ்வுரையாடலில் தற்போதைய இச்சர்ச்சைகளை வரவேற்று ஸ்டார்பேர்ட் பின்வருமாறு கூறியிருந்தார்: "ஆயிரமாண்டுகள் பாலைவன வாசத்திற்கு பின்னர் மேரி மகதலேனை மீண்டும் வரவேற்கும் ஓர் சபையை நான் எதிர்நோக்குகிறேன். கார்டினல் ராட்ஸிங்கர் (இன்றைய போப்) அவளை என்றைக்கும் வரவேற்கப்போவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் மக்கள் கட்டாயமாக வரவேற்பார்கள். அதற்கு சில காலமாகலாம்.ஆனால் மேரி மகதலேன் ஏசு கிறிஸ்து ஆகியோரது மண-இணைவு மையமாக - சில அண்மை நாகரிகங்களின் தொன்மங்களுடன் இணைத்தன்மையுடன் (தாமுஸ் ஓஸிரிஸ் அடடீனிஸ் மற்றும் டயோனிஸ்)- 
விளங்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன...."
 இது மற்றோர் கேள்வியையும் எழுப்புகிறது. ஏசுவின் வரலாற்றுத்தன்மை குறித்தது அது. ஸ்டார்பேர்ட் கூறும் 'தொன்மங்களின் 
இணைத்தன்மை' என்பது கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டங்களைச் சார்ந்த பல புராணக்கதைகளுடன், கிறிஸ்துவ விவிலியத்தை ஒப்பு நோக்குகையில் மீண்டும் மீண்டும் 
உறுதிப்படுகிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு காணலாம். 



  • neareast-inana.jpg

    இனானா பெண் தெய்வ வழிபாட்டின் பலகூறுகளை ஏசு புனைவுக்குள் கண்டறியப்பட முடியும்
  • 'நரிகளுக்குக் குழிகளும், காயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை' என்று ஏசு கூறியதாக லூக்கா (9:58) கூறுகிறது. ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பண்பாட்டினைச் சார்ந்த தெய்வமான இனானாவின் வேதனைப்பாடல் எனும் துதி "பறவைகளுக்கு கூடுகள் உண்டு ஆனால் எனக்கோ...விலங்குகளுக்கு தலைசாய்க்க ஓர் இடமுண்டு, ஆனால் எனக்கோ - எனக்கு தலை சாய்க்க ஓர் இடமில்லை" எனக் கூறுகிறது. (சாமுவேல் கிரேமரின் 'From the Poetry of Sumer', பக். 93 கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடு 1979) 

  • cover_up.jpg

    வழிகாட்டிய விண்மீன் அல்ல சோதிட கிரக நிலை குறித்த கதையே மறு உருவாக்கம் செய்யப்பட்டது
  • 'நியூ சயிண்டிஸ்ட்' எனும் பிரபல அறிவியல் பத்திரிகை டிசம்பர் 2001 இல் ஒரு செய்தியினை வெளியிட்டது. ஏசுவின் பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவது பெத்லகேம் 
    விண்மீன். இது வழிகாட்ட கீழ்திசை ஞானிகள் குழந்தை ஏசுவை தரிசிக்க வந்ததாக விவிலிய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது வானவியலுடன் தொடர்புடைய உண்மை நிகழ்வு 
    அல்ல என்றும், பாகன் (pagan) நம்பிக்கை மற்றும் சோதிடவியல் ஆகியவை சார்ந்ததோர் நிகழ்வே என்றும் ஜோசியத்தையும் ஏசு பிறப்பு கதையும் தொடர்பு படுத்தி அந்நாளைய ரோமில் பிரபலமடைந்த புனைவே இவ்வாறு இணைந்துள்ளது. இந்த உண்மை ஆரம்பக்கால கிறிஸ்தவ தலைவர்களால் மறைக்கப்பட்டு பெத்லகேம் விண்மீன் குறித்த புனைவு 
    உருவாக்கப்பட்டதென்றும் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அப்பத்திரிகை வெளியிட்டது. ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல 
    கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும். 


(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2

 

 
வார்தாவுக்கு 2004 இல் ஒரு கிறிஸ்தவ சகோதரருடன் சென்றிருந்தேன். ஒரு நாள் காலை அருகிலுள்ள பொனார் எனுமிடத்தில் உள்ள ஆச்சார்ய வினோபா பாவேயின் ஆசிரமத்துக்கு
செல்வது என முடிவு செய்து சென்றோம். அவர்களது தியான அறையில் பல தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு சிலையைக் காட்டி நண்பரிடம் 'இது யார்
தெரிகிறதா?' என்றேன். கூர்ந்து பார்த்த நண்பர் தெரியவில்லை என்றார். 'ஏசு' என்றேன். மீண்டும் பார்த்த அவர் கடுப்பாகிவிட்டார். நிச்சயமாக ஏசு கிடையாது. என்ன சொல்கிறீர்கள்!
இஷ்டத்துக்கு ஏசு கையில் எதை வேணுமானாலும் கொடுத்து பொம்மை செய்து இதுதான் ஏசு என்பது நன்றாக இல்லை. எங்கள் மத நம்பிக்கையை கிண்டல் செய்கிற மாதிரி
இருக்கிறது. என பொரிந்து தள்ளிவிட்டார். வினோபா ஆசிரம சர்வ தரும பிரார்த்தனையில் 'யஹோவ சக்தி நீ ஏசு பிதா பிரபு நீ' என வருகிற வரிகளையும் அவர் விமர்சித்தார். இந்த ஏசு உண்மையான ஏசு கிடையாது என்றார். அதற்கு பிறகு வேறு ஏதேதோ பேசினோம். பிறகு ஊர் திரும்பிய பின்னர் அவரிடம் மற்றொரு ஏசு படத்தை காட்டினேன். இது யார் என்றேன். ரொம்ப அன்போடு 'ஏசப்பா' என்றார். விசயம் என்னவென்றால் அவர் வினோபா ஆசிரமத்தில் பார்த்த ஏசுவுக்கும் இந்த ஏசுவுக்கும் வேறுபாடு அதிகமில்லை. இதோ கீழே பாருங்கள். இது பிறகு நான் அந்த கிறிஸ்தவ சகோதரரிடம் காட்டிய ஏசு படத்தை ஒட்டிய படம்.

goodshepherd.jpg

காலண்டர் கலையில் நல்ல மேய்ப்பராக ஏசு கிறிஸ்து

கீழே இருப்பது வினோபா ஆசிரமத்தில் உள்ள ஏசு உருவம்.
vinoba_jesus.jpg

இரண்டிலும் ஏசு 'நல்ல இடையன்' என காட்டப்படுகிறார். ஆனால் ஒன்றில் ஆடு மேய்க்கும் கோல் மற்றதில் புல்லாங்குழல். இந்த வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். இடையனின்
இசைக்கருவி இழந்து ஏசு இடையன் கை கோலேந்திய இறை அரசனாக மாறியது கிறிஸ்தவ இறையியலின் முக்கிய மாற்றம் என்று கூறலாம். இதன் வரலாற்று பின்னணியை
அறிந்து கொள்ளும் போது இதனை நாம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


ஏசு குறித்த சித்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த போது அவை பிற புனைவு புராண நாயகர்களின் அம்சங்களை உள்வாங்கியே வளர்ந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 


orph1.jpg

 

ஓர்பியஸ்-மண்டல அமைப்பின்/ சக்கரத்தின் நடுவில் ஓர்பியஸ்: விலங்குகள் மெய்மறக்கும் இசை கலைஞனும் ஆன்மீக குருவும். மித்ரா இறை தெய்வ தலையணியை கவனியுங்கள்


கிறிஸ்தவத்தின் தொடக்க கால கட்டத்தில் ரோமானியத்தில் ஒரு முக்கிய மறை-சமய இயக்கமாக ஓர்பியஸ் மதம் விளங்கியது. ஒரு விதத்தில் ஓர்பியஸ் சமயம் அதற்கு முந்தைய டயனோசியஸ் சமயத்துடன் ஒட்டுறவு கொண்டதாக விளங்கியது. அதன் நீட்சியாக அதே நேரத்தில் டயனோனிஸியஸ் சமயத்தினை மறுதலிக்காதவாறு விளங்கியது. தத்துவம், புராணம், ஒழுக்க முறைகள், மறை-ஞானம் ஆகிய அனைத்தும் கொண்ட ஆர்பியஸ் சமயத்தின் மையத்தில் விளங்கியவர் ஆர்பியஸே ஆவார். ஆர்பியஸ் ஞானி கூடவே இசை மேதை. அவரது இசை மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் ஈர்த்து மெய்மறந்திட வைக்கக் கூடியதாகும். எனவே அவர் நல்ல மேய்ப்பன் என அறியப்பட்டார்.

ஆர்பியஸும் மரண உலகு சென்று திரும்பியவர். கொலை செய்யப்பட்டவர். மேலோட்டமான வேற்றுமைகளுக்கு அப்பால் ஏசு காதைக்கும் ஓர்பியஸூக்கும் பல இணைகள் உண்டு. ஏசு யாருக்காக இறந்தார்? கிறிஸ்தவர்கள் உலகின் பாவங்களுக்காக ஏசு இறந்ததாக கூறிடுவர். ஆனால் இந்த பாவத்தை இரத்தத்தால் துடைத்தல் என்பது ஏசுவை ஏற்பது மூலமே செயல்படுகிறது. ஏசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பாவங்களே அவரது இரத்தத்தால் துடைக்கப்படுகின்றன. நம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கமாவார்கள். இச்சபை ஏசுவின் மணவாட்டி ஆகும்.


சுருக்கமாக சொன்னால் ஏசு தன் மணவாட்டியினை மீட்கவே சிலுவையில் மரித்தார் எனலாம். இதையே ஆர்பியஸும் செய்தார். அவர் தம் மனைவியான யூரிடைஸுக்காக மரித்தார். மீள்கையில் அவரை கண்டவர்கள் பெண்கள் ஆவர். ஏசுகாதையிலும் மரணத்திலிருந்து மீண்ட ஏசுவை கண்டவர் மகதலேனே ஆவார். ஏசு மகதலேனிடம் தன்னை தொடாதிருக்கக் கூறுகிறார். யோவான் சுவிசேசத்தில் வரும் 'Noli me tangere' (என்னைத் தொடாதே) எனும் இலத்தீன் வாசகங்கள் பிரசித்தியானவை. பல மத்தியகால ஓவியங்களின் கருவும் கூட. இந்த ஓவியங்களில் ஏசு ஒருவித வெறுப்பு அல்லது அச்ச உணர்ச்சியுடன் மேரி மெகதலேனிடம் இருந்து விலகுவதைக் காணமுடியும். ஓர்பியஸ் காதையில் பெண்கள் ஓர்பியஸை கொல்கின்றனர். இங்கோ ஏசுவை தொடாமலே ஏசுவின் மண்ணுலக நீத்தலை அறிவிப்பவளாக மேரி மெகத்லேன் ஆகிறார். யோவான் சுவிசேசத்தின் இந்த இடம் ஓர்பியஸ் தொன்மத்தின் அழுத்தத்தையேக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.


orpheus_killed.jpg

 

பெண்களால் கொல்லப்படும் ஓர்பியஸ்

 

1525.jpg

 

'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : 1525

 


1537.jpg

 

'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : 1537

 

எனவே ஏற்கனவே ரோமானிய உலகில் நல்ல மேய்ப்பனாக அறியப்பட்ட ஓர்பியஸின் சித்திரத்தில் ஏசுவாக கிறிஸ்தவர்கள் வழிபட்டனர் என்பதனை அக்கால கிறிஸ்தவ மண்ணடியிலுள்ள அடக்க அறை சித்திரங்களில் (catacombs) காண முடிகிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எந்த ஓவியம் ரோம பிரக்ஞையில் ஓர்பியஸைக் காட்டியதோ அதே போன்ற ஓவியம் நாலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகத்துக்குள் வரையப்பட்ட போது அது கிறிஸ்துவை நல்ல மேய்ப்பனாக காட்டுவதாக ஆகியது.


christ-as-orpheus-catacombs-of-pete.jpg

 

நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவ அடக்க அறை சித்திரத்தில் ஓர்பியஸாக ஏசு - மித்ரா தலையணியுடன்:ஏசுவின் கையில் இடைக்கோல் இல்லை இசைக்கருவியே உள்ளது என்பதனை கவனியுங்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஓர்பியஸின் இடத்தில் ஏசு வந்த போது ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. டயனோசியஸ்-ஓர்பியஸ்-மித்ரா ஆகிய தெய்வச் சடங்குகளின் சுழல்தன்மை கிறிஸ்தவத்தில் இல்லாது போயிற்று, முந்தைய தெய்வ சம்பிரதாயங்களை நிராகரிக்காமல் உள்வாங்கிய தன்மை போய், அவற்றின் தன்மைகளை மட்டும் உட்கொண்டு அவற்றினை அழித்தொழித்து எழுந்தது கிறிஸ்தவ நல்லமேய்ப்பன் பிம்பம். ஆறாம் நூற்றாண்டில் 'நல்ல மேய்ப்பர்' ஏசு சிலுவையை ஆட்டிடையனின் கோலாக தாங்கி அமர்கிறார். அத்துடன் இசைக்கருவிகள் மறைந்துவிட்டன.


image_062_1.jpg

 

ஆறாம் நூற்றாண்டில் நல்ல மேய்ப்பனாக ஏசு: இசைகருவிகள், மித்ரா தலையலங்காரம் ஆகியவை மறைந்து விட்டன. மாறாக கோல் வந்துவிட்டது.

 


570_bc.jpg

 

பழம் கிரேக்க ஆடு சுமக்கும் மேய்ப்பனின் சித்திரம்: கிறிஸ்தவத்திற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் முந்தைய இந்த சிற்பம் பிற்கால ஏசு சித்திரங்களின் வடிவமைப்பில் முக்கிய இடம் வகித்தது.(கிமு 570)

 


christ_1.jpg

 

ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - தொடக்ககால சித்திரங்களில் மேய்க்கும் கோல் இல்லாமல்

 


later_shepherd.jpg

 

ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - பிற்கால இரசிய கிறிஸ்தவ சித்திரத்தில் மேய்க்கும் கோலுடன்

 


மெசபடோமிய தொன்மங்களிலும் எகிப்திய சித்திகரிப்புகளிலும் 'அரசன் மக்களின் மேய்ப்பன்' எனும் அரசதிகார பிம்பத்துக்கு ஏசு மாறிவிட்டார். பிற்கால காலண்டர் பட பிம்பங்கள் வரை ஏசுவின் இடை-செங்கோல் மாறிடவே இல்லை.

 


krishna_cows.jpg


இதற்கு நேர் எதிரானதோர் பரிணாம வளர்ச்சியை நாம் பாரதத்தின் கிருஷ்ண உருவில் காணமுடியும். துவாரகையின் அதிபதியாகவும் மதுராதிபதியாகவும் அறியப்பட்டாலும் கூட ஸ்ரீ
கிருஷ்ணரின் இடையன் பிம்பம் அவர் புல்லாங்குழல் ஊதி கால்நடைகளையும் கோபிகளையும் மெய்மறக்க செய்பவராகவே உள்ளார். கிருஷ்ணரின் வேணு பாரத இலக்கியத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாகிவிட்டது. 'சாதாரண' நாடோ டி பாடல்களாகட்டும், கண்ணதாசனின் 'புல்லாங்குழல் ஊதும் மூங்கில்கள்' ஆகட்டும், கபீரின் பாடல்களை விளக்கும் ஓஷோ உரை ஆகட்டும் இறைவன் இதழ் பொருந்திய புல்லாங்குழல் பாரதத்தின் கூட்டு தெய்வீக பிரக்ஞையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. பின் தொடரும் நிழலின் குரலில் கெ.கெ.மாதவன் நாயர் அருணாச்சலத்துக்கு எழுதுகிறார்:


SreeKrsna.jpg


"என் பேரப்பையனை தொட்டு அணைக்கும் போதெல்லாம் எனக்கு மனம் முழுக்க கிருஷ்ணனின் புல்லாங்குழல் நாதம்தான் கேட்கும். பிரசங்கம் செய்து புத்தகம் படித்து, கிருஷ்ணனின் முரளியின் தேனை இழந்துவிடாதே. அதைத் தவிர அர்த்தம் எதுவும் மானுட வாழ்வுக்கு இல்லை." ஒருவேளை கிறிஸ்தவத்தின் பெரும் சோகமே அதுவாக இருக்கக் கூடும் - தெய்வீக இடையனின் வேணு கானத்தை இழந்தது. ஆனால் கிறிஸ்து தன் ஓர்பியஸ் தன்மையை அடைய தன் ஆட்டிடைய செங்கோலை இழக்க வேண்டியிருக்கும். வரலாற்றுத்தன்மை, மதமாற்றம், விரிவாதிக்க மனப்பான்மை என்பவற்றால் ஆகிய செங்கோல் அது. காலனிய விஸ்தீகரணம், இனப்படுகொலைகள், புனித விசாரணைகள் ஆகியவற்றினை நடத்திய அதிகாரத்துவத்தின் செங்கோல் அது. ஏசுவினை எங்கும் பரவிய தெய்வீக உணர்வாக உள்ளுணர்ந்த ஞானிகளுக்கு அந்த செங்கோலினை துறந்திடுவது எளிதான இயற்கையான விஷயம்தான். தெயில் டி சார்டின்களில் ஆந்தோனி தி மெல்லாக்களில், அசிசியின் பிரான்ஸிஸ்களில் கேட்கும் ஓர்பியஸின் இசை கோவா இன்க்விசிஷன் புகழ் சேவியர்களிலும் பெனிடிக்ட்களிலும் இல்லாமல் போவதைப் போல இயற்கையான விசயம்.


gopala.jpg

 

ஓடக்குழல் ஊதும் ஓங்கார பிரம்மம்


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஏசு : வரலாற்றடிப்படையும் அப்பாலும் - 3

 

 
ஏசுவின் பிறப்பு முழுக்க முழுக்க பல்வேறு புராண கதம்பங்களால் ஆனது. அன்றைய ரோம சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரபல தொன்ம நாயகர்களின் பிறப்பு குறித்த அதீத நம்பிக்கைகள் ஏசுவுக்கு வழங்கப்பட்டன. மார்க்கு எழுதிய ஏசு காதையில் அவரது பிறப்பு விசேசமான செய்தியாக குறிப்பிடப்படவில்லை. யோவான் எழுதிய ஏசு கதையிலோ அவரது பிறப்பு தத்துவ அம்சங்களுடன் இணைத்து கூறப்பட்டாலும் கன்னியில் உதயமாகுதல், விண்மீன் முன்னறிவிப்பு, குழந்தைகள் கொலை போன்ற விசயங்கள் இல்லை. ஆக மத்தேயு, லூக்கா ஆகிய இருவர் எழுதிய ஏசு கதைகளிலேயே இந்த அம்சங்கள் விவரமாக எடுத்துரைக்கப்படுகின்றன. இயேசு காதையின் தொடக்ககால கட்டத்தில் அவரது பிறப்பு ஓரு முக்கிய விசயமாக இருக்கவில்லை. மாறாக அவரது இறப்பு-உயிர்த்தெழுதல் ஆகியவையே ஏசு காதையின் தொடக்கத்தில் முக்கிய அம்சமாக இருந்தன. மெஸபடோ மிய பலி கொடுக்கப்பட்டு மீண்டெழும் தெய்வக்காதைகளே தொடக்க கால ஏசு காதையின் முக்கிய அம்சம். எனில் ஏன் இந்த விஸ்தீகரண ஏசு பிறப்புக் கதைகள்? இதற்கு முக்கிய காரணம், யூதர்களை ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என நம்ப வைப்பதோ அல்லது யூதத்தின் வாக்களிக்கப்பட்ட உலக மெசையா ஏசு என பிற மக்களை நம்ப வைக்கவுமே இந்த விஸ்தீகரண சித்தரிப்பு உருவாகியிருக்க வேண்டும். 
ChristChild2.jpg

புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?

ஏசு பிறந்த காலத்தின் வரலாற்று அடிப்படை:
இனி இந்த காதையின் சில முக்கிய கூறுகளின் நம்பகத்தன்மையை வரலாற்றின் அடிப்படையில் காணலாம். முன்னறிவிக்கப்பட்ட தெய்வீக நாயகனை வேட்டையாடும் தீய அரசன் எனும் தொன்ம அமைப்பு ஸ்டார்வார்ஸின் கதாநாயகர்களுக்கும் ஹாரி பாட்டருக்கும் வரை நீளக்கூடியது. மத்தேயு மற்றும் லூக்காவின் ஏசுகாதைகளே ஏசு பிறப்பினை விவரிக்கின்றன. இங்கே ஏசுவின் பிறப்பு என்ற உடனேயே நமக்கு முக்கியமாக நினைவுக்கு வருவது பெத்லகேமின் எல்லைக்குட்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் எரோது கொலை செய்வதுதான். (மத்தேயு 2:16) இது முழுக்க முழுக்க ஒரு புராண நிகழ்வு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. எரோதின் மரணம் பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கிமு 4 ஆம் ஆண்டு என கருதப்படுகிறது. அடுத்ததாக லூக்காவின் ஏசு காதை மற்றொரு வரலாற்று நிகழ்வினை ஏசுவின் பிறப்பு காலத்துக்கு அடையாளமாக அளிக்கிறது அது: 'சிரியா நாட்டில் சிரேனியு (census of Quirinius) என்பவன் தேசாதிபதியாக இருந்த போது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.' (லூக்கா 2:2) இந்த முதலாம் குடிமதிப்புக்கும் எரோதுவின் சாவுக்கும் பத்தாண்டு இடைவெளி உள்ளது. வரலாற்றறிஞர் ராபின் லேன் பாக்ஸ் (Robin Lane Fox)இது குறித்து விரிவாக பேசுகிறார். சிரேனியு சிரியாவின் அதிபனான காலம் குறித்து யூத வரலாற்றாசிரியர் ஜோஸப்பஸ் தெளிவாக கூறியுள்ளார். கிபி 6 ஆம் ஆண்டு எரோதின் மகன் அர்சிலஸ் பதவி இழந்த பின்னர் சிரேனியு சிரியா அதிபனாகிறான். இது நடப்பது எரோது அரசன் இறந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்வாகும். சில கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த பிரச்சனையை சிரேனியு சிரியாவின் அதிபனாக இரண்டாம் முறை பதவியேற்றது குறித்த கல்வெட்டையும் கிமு 3 ஆம் ஆண்டு ரோம பேரரசன் ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததையும் முடிச்சு போட்டு லூக்கா 2:2 ஐ நியாயப்படுத்துவதுண்டு. ஆனால் அந்த கல்வெட்டு சிரேனியுவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் கிமு 3 ஆம் நூற்றாண்டு கணக்கெடுப்பு ரோமானிய குடிமக்கள் குறித்ததென்பதும் அது யூதர்களை உள்ளடக்கவில்லை என்பதும் இந்த தீர்வினை நியாயப்படுத்தவில்லை. எனில் இந்த காதை ஏற்பட்டது ஏன்?


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

எகிப்தும் ஏசு பிறப்பும்:


satan.jpg


எலைன் பேகல்ஸ் இதற்கு ஒரு நல்ல விளக்கத்தைக் கூறுகிறார். ஏசுவின் பிறப்பு காதை ஒரு முக்கிய யூத புராண நிகழ்வினை தலைகீழாக்கும் புனைவு ஆகும். மிக மோசமான யூத வெறுப்பியல் கிறிஸ்தவத்தில் உருவாவதற்கு கட்டியம் கூறிய புனைவு இது என்று கூட கூறலாம். பேகல்ஸின் வார்த்தைகளில் இதனை காணலாம்: " மத்தேயுவின் ஏசு பிறப்பு புனைவொன்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை காட்டும் ஏகாந்த அழகு கதை அல்ல. மத்தேயுவின் கதைப்படி ஏசு நூலிழையில் மரணத்திலிருந்து தப்புகிறார். அதுவும் யூதக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல உத்தரவிட்ட ஒரு கொலைவெறி பிடித்த கொடுங்கோல் அரசனின் கட்டளையிலிருந்து. பல விவிலியிய ஆராய்ச்சியாளர்கள் இதற்கும் மோசஸ் கதைக்கும் உள்ள இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். மத்தேயு ஏசுவை ஒரு புதிய மோசஸாக காட்ட முனைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே மத்தேயு (ஏசுவை புதிய மோசஸாக காட்டும் அதேநேரத்தில்) எப்படி மோசஸ் காதையின் பல அடிப்படை அம்சங்களை தலைகீழாக்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டியதில்லை. அந்த காதையே பாஸ்கா பண்டிகைக்காக நினைவோர்க்கப்படும் மோசஸ் யூதர்களை எகிப்திலிருந்து விடுவித்து கொண்டு சென்ற கதையாகும். அதிர்ச்சிகரமாக எகிப்திய சர்வாதிகாரியின் இடத்தில் மத்தேயு வைப்பது யூத அரசனான எரோதுவை ஆகும். இங்கு எரோதுவே -எகிப்திய பாரோ அல்ல-யூத குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல ஆணையிடுகிறான். மத்தேயுவின் வார்த்தைகளில் ஏசு பிறந்ததுமே எரோது அரசன் 'பிரதான ஆச்சாரியர் ஜனத்தின் வேதபராகர் எல்லோரையும்' (மத்தேயு 2:4) அழைத்து 'கிறிஸ்து' எங்கே பிறப்பார் என விசாரிக்கிறான். பின்னர் குழந்தையை தேடி கொல்ல உத்தரவிடுகிறான். இதனைத் தொடர்ந்தே ஏசுவின் குடும்பம் எகிப்திற்கு தப்பி செல்கிறது. ஆக எந்த எகிப்து தேசம் பாஸ்கா கொண்டாட்டத்தில் அடிமைத்தனத்தின் குறியீடு ஆகிறதோ அதே எகிப்து கிறிஸ்து பிறப்பில் கொடுமையிலிருந்து தப்பி சென்றடையும் தேசமாக மாறுகிறது. மற்றொரு விசயத்தையும் நாம் கவனித்திட வேண்டும் என மத்தேயு விரும்புகிறார். (யூதனான) எரோதுவும் அவனது சபையினரும் ஏசுவை கொல்ல முயலுகிற போது புறச்சாதி (Gentile) ஞானிகள் (மாஹி) -பின்னாள் கிறிஸ்தவ ஐதீகத்தில் கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள்- அவரை வழிபட வருகின்றனர்..." இந்த தொன்ம புனைவு நோக்கங்களை குறிப்பிடும் எலைன் பேகல்ஸ் இந்த இரு (ஏசு பிறப்பு குறித்து கூறும்) ஏசுகாதைகளும் ஒட்டுமொத்தமாக இறுதியில் உருவாக்கும் மனபிம்பத்தை வெளிப்படுத்துகிறார், " மத்தேயு உள்ளூட்டமாக யூத பெரும்பான்மையினரை சைத்தானுடன் இணைக்கிறார். லூக்கா அதனை வெளிப்படையாக செய்கிறார்." (எலைன் பேகல்ஸ், 'The Origin of Satan in Christian Tradition' யுதா பல்கலைக்கழக உரை, மே 14 1997) மற்றொரு அம்சம் என்னவென்றால் ஏசுகாதைகள் கூறுவது போலல்லாமல், எரோதுவுக்கும் பரிசேயருக்குமான உறவு நல்லதாக இருக்கவில்லை. இவர்களை கிறிஸ்தவ விவிலியம் சித்தரிக்கும் எதிர்மறை தன்மைக்கான காரணங்களை பின்னால் காணலாம். மேலும் எரோது தொடர்ந்து தன் மைந்தர்களை தனக்கு எதிராக சதி செய்வதாக கருதி வந்ததுடன் தனது சொந்த மகனையே கொலைத்தண்டனை அளித்து கொன்றான். எனவே இது குறித்து பரவிய கதைகளின் தாக்கமும் கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ளது.


bloemaert-adoration-of-magi.jpg

 

கீழ்திசை மாகியும், வழிகாட்டிய விண்மீனும்: வரலாறா? புனைவா?


வழிகாட்டிய விண்மீன்?:
ஏசுவின் பிறப்பில் மற்றொரு முக்கிய அம்சம் அவரது பிறப்பினை அறிவித்த விண்மீன் ஆகும். மத்தேயு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:"எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவரது நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்." (மத்தேயு 2:1-2) பின்னர் "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டு போகையில் இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல்வந்து நிற்கும்வரைக்கும் அவர்கள் முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்." (மத்தேயு 2:9-10) பல வானவியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இந்த விண்மீன் எதுவாக இருக்கும் என்று ஊகம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர அவர்களால் இயலவில்லை. கிறிஸ்தவ விவிலியத்தின் மத்தேயு கதை கூறுவது போல ஒரு விண்மீன் (அது வால் நட்சத்திரமாக இருந்தாலும் கூட) அது நகர்ந்து ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்னால் நிற்பதென்பது நடவாத காரியம். என்றாலும் ஏசு பிறந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் ஏதேனும் விண்மீன் தோன்றியிருக்கலாமா எனும் கேள்வி வரலாற்றாசிரியர்களாலும் வானவியலாளர்களாலும் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏசுவின் வாழ்க்கைக்கு எப்படி கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியே ஐயந்திரிபற்ற ஆதாரம் கிட்டவில்லையோ அது போலவே இந்த விண்மீனுக்கும் எவ்வித ஆதாரமும் கிட்டவில்லை. ஆனால் 2001 டிசம்பரில் ஒரு வானவியலாளரின் ஆராய்ச்சி வெளிவந்தது. மைக்கேல் மோல்னர் ரோம சோதிடத்தில் மேஷ ராசியில் (ரோம சோதிடத்தில் மேஷராசி யூதேயாவைக் குறிப்பது.) ஒரு நட்சத்திரம் தோன்றுகிற காலத்தினைக் குறித்து கூறுகிறார். இந்த நட்சத்திரம் உண்மையில் வியாழன் (jupiter) ஆகும். இது ரோம சோதிடத்தில் அரசனைக் குறிக்கும் நட்சத்திரமாகும். குறிப்பாக ஒரு பேரரசனின் பிறப்பு அல்லது பட்டமேற்பினை இது காட்டுவதாகும். ஆனால் இது ரோம சோதிடத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். அக்கால யூத மக்கள் இதனை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை மேலும் யூத குருமார்கள் ரோம சோதிடத்தை தேவனுக்கு ஆகாததென வெறுத்தொதுக்கினர். ஆனால் பிற்காலத்தில் (கிபி 3 ஆம் நூற்றாண்டுகளில்) சோதிட நம்பிக்கையுள்ள ரோமானியர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இந்த குறிப்பிட்ட சோதிட-கிரக நிலை (வானவியல் நிகழ்வல்ல) ஏசுவின் பிறப்புடன் இணைக்கப்பட்டது. அந்நாளில் பிரபல ரோம சோதிடக்காரனாகவும் கிறிஸ்தவத்தை தழுவியவராகவும் இருந்த ப்ர்மிக்கஸ் மாட்டர்னஸ் (Firmicus Maternus) என்பவர் கிபி 334 இல் ஒரு சோதிட நூலை எழுதினார். இந்நூலில் இந்த குறிப்பிட்ட (மேஷராசியில் வியாழன்) கிரகநிலையைக் குறிப்பிட்டு அது ஒரு இறப்பற்ற அரசனின் பிறப்பைக் குறித்ததாக கூறுகிறார். அக்காலத்தில் சோதிடம் ரோமானிய மக்களிடம் பெரும் ஆர்வமுடைய விசயமாக இருந்தது. அதே நேரத்தில் ஏசு குறித்த காதைகளும் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்த மட்டர்னஸின் இந்த கூற்று அவர் பெயரைக் குறிப்பிடாமல் கூறினாலும் அது ஏசுவைக் குறிப்பதென மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பதனை மாட்டர்னஸ் அறிவார். அதே நேரத்தில் அவர் ஏன் ஏசுவை பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. மோல்னர் கூறுகிறார்:" கிறிஸ்தவத்தை தழுவிய ஒரு பாகனாக (pagan) ப்ர்மிக்கஸ் இரு உலகுகளுக்கும் இடையே இழுக்கப்பட்டு துன்பப்பட்டார். எனவேதான் சோதிடத்தின் மூலம் ஒரு திரை மூடிய விதத்தில் ஏசு கதையை வலுப்படுத்தினார்." (மார்கஸ் சௌன், 'Early Christians hid the origins of the Bethlehem star', நியூ சயின்டிஸ்ட் டிசம்பர் 2001) சோதிடத்தையும் ஏசுவின் பிறப்பையும் இணைக்கும் பெத்லகேம் விண்மீனின் உண்மைத்தன்மை தொடக்ககால நிறுவன கிறிஸ்தவத்திற்கு தேவையற்ற இறையியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம் என்பதால் பெத்லகேம் நட்சத்திரத்தின் இந்த உண்மைநிலை கிறிஸ்தவ நிறுவன சபையால் விரைவில் மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டது இத்தகைய சோதிட நிலைப்பாடு கிமு மத்தேயுவின் நட்சத்திரம் ஆக உண்மையில் பின்னாளில் கிறிஸ்தவத்தாலும் அந்நாளில் யூதத்தாலும் வெறுத்தொதுக்கப்பட்ட சோதிடத்தின் அடிப்படையில் உருவானது என்பது உண்மையிலேயே ஒரு முரண் நகைதான். எண்ணாகமத்தில் உள்ள ஒரு வாசகத்துடன் இந்த நட்சத்திரம் பின்னர் இணைக்கப்பட்டது. ("...ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்; ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.." -[எண்ணாகமம் 24:17] யூத அறிஞர்கள் இந்த வார்த்தைகளை முழுக்க முழுக்க வேறுவிதமாக அறிந்துகொள்கிறார்கள் என்பதுடன் எண்ணாகமம் யூத மறைநூலே அன்றி கிறிஸ்தவ நூல் அல்ல என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.) 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கன்னித்தாயும் யூத முன்னறிவிப்பும்:


brown_messiah1.jpg


அடுத்ததாக கிறிஸ்து பிறப்பு கதையின் முக்கிய அம்சம் ஏசுவின் கன்னி பிறப்பாகும். ஏசுவினை ஒரு வரலாற்றில் வாழ்ந்த மனிதராகவே எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போஸ்தலன் பவுல் ஏசுவின் சகோதரன் என கருதப்படும் ஜேம்ஸை அறிந்திருந்தவர் ஆவார். அவருக்கு இந்த கன்னி மூலமான ஏசு பிறப்பு குறித்து எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏசு தாவீதின் வம்சத்தில் மாமிசத்தின்படி பிறந்ததாக (பவுல் அப்போஸ்தலன் ரோமபுரியாருக்கு எழுதின நிருபம் 1:5) கூறுவதோடு மட்டுமில்லாமல் பரிசுத்த ஆவியின் மூலம் ஏசு மரணத்துக்கு பின் உயிர்த்தெழுந்ததைக் குறிப்பிடுகிறார். ஆக ஏசு கன்னி மூலம் பிறந்த கதைக்கான முக்கியத்துவம்தான் என்ன? அத்தகைய புனைவுக்கான காரணமாக எது இருந்திருக்க கூடும்? பொதுவாக கிறிஸ்தவ மதப்பரப்பு இலக்கியங்களில் கன்னி மூலம் ஒரு மகவைப் பெறுவது என்பதன் மூலம் ஏசுவின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட யூத முன்னறிவிப்பைப்பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது. அந்த முன்னறிவிப்பாக முன் வைக்கப்படுவது பின்வரும் யூத விவிலிய வார்த்தைகள் ஆகும்: "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என பெயரிடுவாள்."(ஏசாயா 7:14) இந்த முன்னறிவிப்பே ஏசு கன்னிமரியாள் மூலம் பிறந்ததன் மூலம் நிறைவேறிற்று என கிறிஸ்தவ பிரச்சாரம் கூறுகிறது, முன்பே கூறியது போல காலத்தால் முற்பட்ட கிறிஸ்தவ ஏசு கதையான மார்க்கில் இத்தகைய புனைவுகள் ஏதும் இல்லை. எனவே இது பின்னாளில் யூதர்கள் ஏசுவின் 'வாக்களிக்கப்பட்ட'த்தன்மை குறித்த கிறிஸ்தவ பிரச்சாரத்தை எதிர்த்த போது உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யூதர்கள் இந்த கிறிஸ்தவ புனைவே ஒரு தவறான மொழிப்பெயர்ப்பு புரிதலின் விளைவாக எழுந்தது எனக் கூறுகிறார்கள். இன்று நேற்றல்ல கிறிஸ்தவர்கள் எப்போது கன்னி பிறப்பையும் ஏசாயாவின் வார்த்தைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கினார்களோ அப்போதிருந்தே இந்த பிரச்சனையும் தொடங்கிவிட்டது. எபிரேயத்தில் பருவப்பெண் என்பதற்கான பதம் 'அல்மா'('almah') என்பதாகும். இது கிரேக்க மொழி பெயர்ப்பில் பர்தெனோஸ்('parthenos') என மொழி பெயர்க்கப்பட்டது. இரண்டுமே மணம் புரியும் வயதடைந்த பருவப்பெண் எனும் பொருளுடையதென்றாலும் கன்னி என்பதற்கு மிக அருகில் வருவதாகும் (பின்னாளில் அப்பொருளையே அடைந்தும் விட்டது.) ஆனால் எபிரேயம் ஆண் தொடர்பறியாத கன்னி என்பதற்கு ஒரு தனி பதத்தினைக் கொண்டிருக்கிறது, அது 'பெத்துலா' (bethulah) என்பதாகும். கன்னி என்பதனை யூத விவிலியத்தை எழுதியவர் குறித்திருக்கும் பட்சத்தில் அது 'பெத்துலா' என்பது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏசுவின் கன்னி பிறப்பு யூத விவிலியத்தில் முன்னறிவிப்பு செய்ததாக கிறிஸ்தவர்கள் கூறியதற்கு இரண்டாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் 'அல்மா' என்பது இளம்பெண்ணே தவிர கன்னி என பொருள் கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ஒரு கிறிஸ்தவ அறிஞர் தமது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். (ஜஸ்டினின் 'யூதருடன் உரையாடல்). ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளுக்கு பிறகு மிகச்சிறந்த கத்தோலிக்க ஆசிரியராக அறியப்படும் ரேமண்ட் ப்ரவுன் தனது ஆராய்ச்சி நூலான 'Birth of the Messiah'வில் ஏசாயா 7:14 யூத சமயத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வான ஹெஸேக்கியாவுக்கு அகாசு பிறந்ததை குறித்ததாகவே இருந்தது என்பதனை தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்கப்பட்ட விவிலியங்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டதையும், கத்தோலிக்க சபை மொழிபெயர்ப்பாளர்களை ஏசாயா7:14 'இளம்பெண்' என மொழிபெயர்க்காமல் கன்னி என மொழிபெயர்க்க கட்டாயப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். இறுதியாக அவர் வரும் முடிவு என்னவென்றால் "ஏசாயா 7:14 கூறும் நிகழ்வு காலத்தில் பின்னால் நடக்கப்போகும் கன்னி கருவுறும் நிகழ்ச்சி குறித்ததல்ல. மாறாக வெகு அண்மைக்காலத்தில் பிறந்திடும் -பெரும்பாலும் தாவீத் வம்சத்து- இயற்கையாக கருவுற்று பெறப்படும் குழந்தையை குறித்ததுவே ஆகும்." (ரேமண்ட் ப்ரவுன் ''Birth of the Messiah",பக் 148)ஆக கன்னி மரியாள் மூலமான பிறப்பு என்பது பிற்காலத்தில் யூதர்களின் விவிலிய மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதச் செயலே ஆகும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஏசுவின் பரம்பரை:

jesuschron.jpg


ஏசுவின் பரம்பரையும் லூக்காவிலும் (3:23-38) மத்தேயுவிலுமே (1:1-17) முக்கியமாகக் கூறப்படுகிறது. இதில் மத்தேயுவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசுவின் பரம்பரையை மூன்றாக பிரிக்கலாம்: யூத புராண நாயகனான ஆபிரகாமிலிருந்து யூத அரசனான தாவீது மன்னன் - 14 தலைமுறைகள் பின்னர் தாவீதின் காலம் முதல் பாபிலோனிய சிறைவாசம் வரை 14 தலைமுறைகள் பின்னர் விடுதலையான காலம் தொட்டு ஏசுவின் நாள் வரை 14 தலைமுறையினர். இரண்டு தலைமுறை வரிசைகளும் யோசேப்புவில் (Jospeh) முடிகின்றன. ஆபிரகாமிலிருந்து ஏசுவுக்கு இடையிலான தலைமுறைகள் மத்தேயுவின் படி 38 லூக்காவின் படி 55. இதில் ஏசுவின் தாயின் கணவரான யோசேப்புவிலிருந்து 14 தலைமுறைகளுக்கு இந்த இரண்டு காதைகளிலும் கூறப்பட்டுள்ள தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 
















லூக்காமத்தேயு
1. யோசேப்பு - ஏலியின் குமாரன்யோசேப்புவை யாக்கோபு பெற்றான்
2. ஏலி - மாத்தாத்தின் குமாரன்யாக்கோபுவை மாத்தான் பெற்றான்
3. மாத்தாத் - லேவியின் குமாரன்மாத்தானை எலெயசார் பெற்றான்
4. லேவி - மெல்கியின் குமாரன்எலெயசாரை எலியூத் பெற்றான்
5. மெல்கி - யன்னாவின் குமாரன்எலியூத்தை ஆகீம் பெற்றான்
6. யன்னா - யோசேப்பின் குமாரன்ஆகீமை சாதோக்கு பெற்றான்
7. யோசேப்பு - மத்தத்தியாவின் குமாரன்சாதோக்கை ஆசோர் பெற்றான்
8. மத்தத்தியா - சேமேயின் குமாரன்ஆசோரை எலியாக்கீம் பெற்றான்
9. சேமேய் - யோசேப்பின் குமாரன்எலியாக்கீமை அபியூத் பெற்றான்
10. யோசேப்பு - யூதாவின் குமாரன்அபியூத்தை சொரொபாபேல் பெற்றான்
11. யூதா - யோவன்னாவின் குமாரன்சொரொபாபேலை சலாத்தியேல் பெற்றான்
12. யோவன்னா - ரேசாவின் குமாரன்சலாத்தியேலை எகொனியா பெற்றான்
13. ரேசா - சொராபாபேலின் குமாரன்எகொனியாவை யோசியா பெற்றான்
14. சொராபாபேல் சலாத்தியேலின் குமாரன்ஆமோன் யோசியாவை பெற்றான்

 


இந்த முரண்பாடுகளுக்கு கிறிஸ்தவ இறையியலாளர்கள் பல சமாதானங்களை கூறிவந்துள்ளனர். உதாரணமாக லூக்கா மேரியின் பரம்பரையையும் மத்தேயு யோசேப்புவின் பரம்பரையினையும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பரம்பரை கூறலும் யோசேப்புவினுடையதே. ஏசு காதை யூத புராணங்கள் மற்றும் யூத நம்பிக்கையின் மீட்பர் வருகையின் அடிப்படையில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் பரவிய போது எழுந்த எதிர்ப்பின் விளைவாக உருவாக்கப்பட்டதே காலத்தால் பிற்பட்ட மத்தேயு மற்றும் லூக்கா ஏசு காதைகளில் காணப்படும் இந்த விஸ்தீரண தலைமுறைகள் விவரணம். ஏறத்தாழ 1940 ஆண்டுகளுக்கு பின்னர் இதே ஏசு காதைகளின் அடிப்படையில் ஜெர்மானிய இறையியலாளர்கள் ஏசு யூத குலத்தை சேர்ந்தவரே அல்ல என திறமையாக வாதிட்டதையும் பிரச்சாரம் செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியை சூசன்னா கெர்ஷல் தமது 2005 உரையில் (ஆரிய ஏசு:கிறிஸ்தவர்கள் நாசிக்கள் மற்றும் பைபிள்). ஏசுவின் வரலாற்றுத்தன்மை வேண்டிய உருவெடுக்கும் திரவ நிலை கொண்டதென்பதற்கு மற்றொரு சான்று இது. 


ஆக, ஏசுவின் பிறப்பின் வரலாற்று அடிப்படை என்பது எவ்விதத்திலும் ஆதாரமற்ற வலுவற்ற சீட்டுக்கோட்டையே ஆகும். அல்லது ஏசு கூறியதாக நம்பப்படும் வார்த்தைகளில் கூறுவதானால் மணல் மீது கட்டிய வீடு. அடுத்ததாக ஏசு செய்த அற்புதங்களின் புராணத்தன்மையைக் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சைத்தானின் தொன்ம மாற்றம்-1: ஏசு வரலாற்றடிப்படையும் அப்பாலும்:

 

 
யோபு: அதிகாரம்:1
7.ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான். 
8. ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார். 
9. மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? 
10. அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? 
11.ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான். 
12. ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே:அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். 
...
16. இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.


யூத விவிலியத்தில் நாம் பார்ப்பது சைத்தான் யஹீவா தேவனின் ஊழியனாக இருக்கிறான். இன்னும் கூறினால் யஹீவா தேவனின் நெருப்பு சைத்தானின் வழியாகவே செயல்படுகிறது. உலக நடப்பை யஹீவா தேவனுக்கு சொல்பவனாகவும் இருக்கிறான். இருவரிடத்திலும் எதிரி மனோபாவம் இல்லை. அவன் மானுடரைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் இது மாறுகிறது. இந்த தொன்ம மாற்றத்தின் பலகாரணிகளும் இதன் வரலாற்று விளைவுகளும் கிறிஸ்தவத்திற்கு உரியவை - கிறிஸ்தவத்திற்கு மட்டுமே உரியவை. 
கிறிஸ்தவத்தில் சைத்தான் ஒரு விசித்திரமான கருத்தாக்கம் ஆகும். அக்கருத்தாக்கத்தை பிற்கால யூதத்தில் காணமுடியும் என்றாலும் அதன் வேர்களை யூத பண்பாட்டின் மீதான பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் தாக்கத்திலிருந்தே அடையாளப்படுத்துகின்றனர் அறிஞர்கள். மானுடத்தை யஹீவா தேவன் முன்னால் குற்றம்சாட்டுபவனாக சைத்தான் யூத தொன்மத்தில் அறியப்படுகிறான். ஆனால் முழுமையான சாத்தானிய விவரணங்கள் கிறிஸ்தவ விவிலிய கதைகளிலேயே காணப்படுகின்றன. இதற்கான காரணிகள் பல. கொம்ரான் சுருளோலைகளில் காணப்படும் மத கருத்தாக்கங்களில் ஜராதுஷ்டிர இரு-தன்மை (dualist) சமயக்கண்ணோட்டம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். ஜராதுஷ்டிர சமயத்தில் அக்ரிமான் எனப்படும் இருட்சக்தி தலைவனின் தன்மைகள் மெதுவாக சாத்தானின் மீது படர்வதை காணமுடிகிறது. ஏசுவின் காலம் என கருதப்படுவதில் யூத பிரதேசத்தில் பல மறைஞான குழுக்கள் (mystic cults) இயங்கிவந்தன. இவை பெரும்பாலும் யூத மதத்துடன் பாரசீக ஜராதுஷ்டிர மதத்தின் சில கவர்ச்சிகரமான கோட்பாடுகளை உள்ளடக்கியவையாக இருந்தன. இறுதிநாட்கள் உலக அழிவு குறித்த விவரணங்கள், சுவர்க்கம்-நரகம் குறித்த அதீதமான விவரணங்கள், ஒளிக்கடவுளுக்கு இருட்கண தலைவனுக்குமான போராட்டமாக தனி வாழ்க்கையையும் வரலாற்றையும் நோக்குதல் ஆகியவை யஹீவா வழிபாட்டுக்குழுவுடன் இணைக்கப்பட்டு இவற்றை மையம் கொண்ட இந்த குழுக்கள் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வலிமைக்கு அடிபணிந்ததாக இவர்கள் கருதிய யூத ஆச்சாரியர்களை கடுமையாக விமர்சித்தனர். தூய யூதத்தை ரோம வழிபாட்டு முறைகளால் களங்கப்படுத்தியதாகவும் இவர்கள் கருதினர். (ஆனால் இவர்களது 'தூய யூதமே' பாரசீகக் கலப்புடையது என்பது வேறு விசயம்) ஈஸீன்கள் எனப்படும் ஒரு குழுவினைக் குறித்து இதில் நமக்கு அதிகமான தரவுகள் கிடைத்துள்ளன. பலர் ஏசு இந்த மறைஞானக் குழுவினைச் சேர்ந்தவர் எனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த குழு வேதாந்த தன்மைகொண்டதாக படித்த விவரம் தெரிந்த இந்துக்கள் கூட கருதுகின்றனர். ஆனால் வேதாந்தத்திற்கும் இந்த ஈஸீன் குழு கொண்டிருந்த கோட்பாட்டிற்கும் எட்டாம் பொருத்தம் என்பது பொதுவாக வெளியே தெரியாத விஷயம். ஆனால் கிறிஸ்தவத்தில் மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டு பின்னர் குரானிலும் உருவாகியிருக்கும் கருத்தாக்கமான சாத்தான் (ஷையித்தான்) அதன் பாரசீக -ஜராதுஷ்டிர தன்மை மாறாமல் ஈஸீன் கோட்பாடுகளில் 'சாவுக்கடல் சுருளேடுகள்' (Dead sea scrolls) - அதாவது அவை தெரிவிப்பது ஈஸீன்களின் கோட்பாடு என்பது உண்மையானால்- மூலம் தெரியவருகிறது. இடியாப்பக் குழப்பமாக சாத்தியகூறுகளாகவே இந்த விஷயங்களை கூறுவதற்கு மன்னிக்கவேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே இன்னமும் முழுமையடையாதவை. ஆனால் எதுவாயினும் சில விஷயங்களை நிச்சயமாக கூறமுடியும். ஈஸீன்களோ வேறெவரோ யூத மறை ஞானக்குழுக்கள் பொதுவான யூதசமுதாயத்திலிருந்து விலகி வாழ்ந்தன. அந்த குழுக்கள் பாரசீக-ஜராதுஷ்டிர சமயத்தின் கோட்பாடுகளை தன்னுள் வாங்கி அவற்றினை யூத இறையியலுடன் இணைத்து சில கற்பிதங்களை உருவாக்கியிருந்தன. அதில் சைத்தான் எனும் கருத்தாக்கத்தினை நாம் காணமுடிகிறது. யூத விவிலியத்தில் முழுமையான இறை-எதிரியாக முக்கிய பங்கு வகிக்காத சைத்தான் கிறிஸ்தவ விவிலியத்தில் முழுமையாக உருவாக்கி வருவதிலான இடைநிலை கண்ணியாக இதனை நாம் காணமுடியும். யூத விவிலியத்தில் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து யோபுவினை சோதனை செய்பவனாக சைத்தான் வருகிறான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Was John the Baptist beheaded shortly after baptizing Jesus?

Read more: http://wiki.answers.com/Q/Was_John_the_Baptist_beheaded_shortly_after_baptizing_Jesus#ixzz1xyyfWjci

Answer

This depends entirely on one's definition of 'shortly.' Since the Gospel accounts after the Baptism of Jesus are focusing on Jesus and not John, it is difficult to get an exact time frame. However, it certainly was within the three year time period of Jesus' ministry as it occurred before Jesus' own death. John also spent some time in prison before being executed. There was also a period of time between John's being executed and Jesus being crucified. So, it would appear to have been anything from 6 months to 2 or slightly more years after. 

According to the Gospel records, it would appear that John may have been arrested relatively soon after Jesus was baptized. However, we do not know the length of his imprisonment. We know that there were gaps in the chronological record and we also know that we do not know how long these were. There is of course nothing unusual in this in either the Gospels or in other ancient writings which tended to focus on key events rather than strict chronology.  

Answer

According to the canonical Gospels, John died shortly after Jesus began his ministry. According to tradition, this would place his death about 29 or 30 CE. However, the Jewish historian, Flavius Josephus, seems to place his death much later, at about 36 CE.
Josephus says that John criticised the marriage of Antipas to his brother's former wife, Herodias, which he places at the same time as, or shortly after, the death of Philip II, who he says died in the twentieth year of the reign of Tiberius (34 CE). Antipas feared that John's words would cause an insurrection:

Herod, who feared lest the great influence John had over the people might put it into his power and inclination to raise a rebellion, (for they seemed ready to do any thing he should advise) thought it best, by putting him to death, to prevent any mischief he might cause, and not bring himself into difficulties, by sparing a man who might make him repent of it when it would be too late. Accordingly he was sent a prisoner, out of Herod's suspicious temper, to Macherus, the castle I before mentioned, and was there put to death.


Josephus makes it clear that Antipas intended to execute John, and it seems most improbable that he would long delay the execution if he feared an insurrection by John's supporters. The execution would have quickly followed the imprisonment.
Additionally, King Aretas attacked and defeated Antipas in 36 CE in revenge for the slight to his daughter, whom Antipas divorced in order to marry Herodias. We can expect a one or two year delay during which the news reached Aretas and he considered a diplomatic solution or demanded compensation, then raised an army, but an angry father is not likely to have waited ten years to take action.
Some of the Jews believed that Antipas' defeat was divine retribution for his execution of John:

Now the Jews had an opinion that the destruction of this army was sent as a punishment upon Herod, and a mark of God's displeasure to him.


This association makes it most likely that John's death was a quite recent event at the time of the defeat - closer in time to the battle than to the wedding, and certainly not something that occurred 8 or 10 years earlier. Unless the commencement of Jesus' ministry was much later than commonly accepted, John's was executed around 10 years afterwards.

Read more: http://wiki.answers.com/Q/Was_John_the_Baptist_beheaded_shortly_after_baptizing_Jesus#ixzz1xyxde9JE



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?

 
easter%2Bcross.jpg





டாக்டர் மாரிஸ் புகைலின் 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' என்ற புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே தருகிறேன் பலரும் விளங்கிக் கொள்வதற்காக.................
டாக்டர் மாரிஸ் புகைல்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த டாக்டர் உடற்கூறு சிகிச்சை வைத்தியத்தில் கை தேர்ந்தவர்.மனிதர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த மனிதனின் ஆன்மா பற்றிய சிந்தனை எழுந்து விட்டது. அது பற்றி ஆராயத் தொடங்கி உலக மதங்களின் வேதங்களை ஆராயத் தொடங்கினார். அந்த வகையில் கிறித்துவின் வாழ்வில் எந்த அளவு உண்மை மறைக்கப் பட்டுள்ளது என்பதை அதில் பவுலின் பங்கு எந்த அளவு என்பதை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டை எழுதியது யார்?

இக் கேள்வி பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கலாம். ஒரு சிலர் விவிலிய வேதமான பைபிளின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை நம்மிடம் திருப்பிக் கூறுவர். இந்நூல்கள் மனிதர்களினால் எழுதப்பட்ட போதிலும் பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு கோர்வை செய்யப்பட்டனவாகும் என்றும் எனவே இறைவனே இந்நூலின் ஆசிரியர் என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.

ஏசு நாதர் இறந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை ஒரு பட்டியலைத் தயாரித்து இதில் அடங்கியுள்ள நூல்களே வேத நூல்கள் என பொது அறிவிப்புச் செய்தது. இந்தப் பட்டியலை கி.பி.1441 ஆம ஆண்டு பிளாரன்ஸில் கூடிய திருச்சபையும் 1546 ஆம் ஆண்டில் டிரென்டில் கூடிய திருச்சபையும் 1870 ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது வாடிகன் கவுன்சிலும் அங்கீகாரம் செய்து வந்துள்ளன. அந்தப் பட்டியல்தான் 'கேனான்' என்றழைக்கப்படும் வேத நூல் தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.

இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் 1962 ஆம ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தாற்போல் மூன்று ஆண்டுகள் கலந்தாலோசனை நடத்திய பிறகு பைபிளின் புதிய வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பாமரன் மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும் போது இந்த வேதங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன என நம்பி விடுவான். இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலேசில் எழாது.

என்றாலும் குருமார்களில் ஓரிருவர் இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இல்லை. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அவை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரப் படுவதில்லை. அவை பல நூல் நிலையங்களில் மூலைகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று பேராசியர் எட்மண்ட் ஜாக்கப் பிரெஞ்சு மொழியில் எழுதிய 'பழைய ஏற்பாடு' என்ற நூலாகும். அந்நூலில் அவர் கூறியிருப்பதாவது:

'வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்கு மூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது. இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் 'தௌராத் வேதம்' என்கிறார்கள். மேற் கூரிய மூன்று ஹீப்ரோ மொழிகளில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்குக் கருவாக அமைந்தன. மூன்று விதமான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்று படுத்தும் முயற்சி ஏசு பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப் பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.”

மேற் கூரிய கருத்துக்கள் பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகளாகும்.

மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருக்குமாயின் இன்று நாம் அவைகளை ஒன்றுடன ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உய்த்து உணர்வதற்கு உதவியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவை குறித்து ஒரு துப்புக் கூட இன்று கிடைக்கவில்லை.

பழைய ஏற்பாடு முதன் முதலாக முழுமையாக கிரேக்க மொழியில் கி.மு.மூன்றாவது நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த யூதர்களே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த கிரேக்க மொழி பெயர்ப்புதான் பிற் காலத்தில் உருவான புதிய ஏற்பாட்டிற்கு மூலமாக அமைந்தது. கி.பி.ஏழாவது நூற்றாண்டு வரை இந்த 'பழைய ஏற்பாடு' அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயின்ட் ஜெரோம் என்ற மத குரு கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் ஹீப்ரு மூல நூல்களில் இருந்து லத்தீன் மொழியில் ஒரு பைபிளைத் தயாரித்தார். இதுவே உல்மேட் என்று அழைக்கப்படுகிறது. செயின்ட் ஜெரோம் தயாரித்த பைபிளே கிறித்தவ உலகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. லத்தீன் மொழி பெயர்ப்பு அல்லாமல் அராமிக் மொழியிலும், சிரியாக் மொழியிலும், பைபிள்கள் வெளி வந்தும் இருக்கின்றன.

எனவே ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் சிரியாக், அராமிக்,அரபி ஆகிய பல மொழிகளில் விவிலிய வேதம் வழக்கில் இருந்தபோது சில ஆராய்ச்சியாளர்கள் எல்லா நூல்களில் இருந்தும் அவர்களது யுக்திக்கு ஏற்ற வகையில் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்ற முறையில் பல விஷயங்களையும் ஒன்று திரட்டி புதிய பைபிள்களைத் தயாரிக்கலானார்கள். அம் மாதிரித் தயாரிப்புத்தான் 1957 ஆம் ஆண்டு லண்டன் நகரில் அச்சிடப்பட்ட வால்டன் பைபிள் என்பதாகும்.

கிறித்தவர்களுக்குள்ளேயே பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுள்ள பைபிள்கள் பல மாதிரியானதாகவிருக்கும். வார்த்தை வித்தியாசம், கருத்து வித்தியாசங்கள் உண்டு. பல்வேறு கிறித்தவ பிரிவுகளும் இன்று ஒன்று கூடி ஒரே மாதிரியான பைபிளைத் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளும், புரோட்டஸ்ட் பாதிரிகளும் கூட்டாக முயற்ச்சித்து இறுதியில் அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அவர்களது புதிய தயாரிப்புக்கு (The Ecumencial Translation Of The Old Testament) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டு விட்டது.

மேலே கூறியவற்றில் இருந்து இன்று வழக்கில் இருக்கும் பழைய ஏற்பாடு என்ற வேதநூல் எப்படி உருவாயிற்று என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதக் கரம் இதில் அதிகமதிகம் விளையாடி இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு தடவை புதிய பதிப்பு தயாரிக்கும் பொழுதெல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் வாசகங்கள் கூட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. காலா காலமாக இந்தத் 'திருத்தும் வேலை' நடந்தே வந்திருக்கிறது.

குறிப்பு: இஸ்லாத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் முகமது நபியின் போதனைக்கு மாற்றமாக இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லாம் ஊருக்கு ஊர் தர்ஹாக்களைக் கட்டி வைத்து அந்த மகான்களை இறைவனுக்கு சமமாக வழிபடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் உருவ வழிபாட்டைப் போதிக்கவில்லை. சித்தர்கள் கூட 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்று உருவ வழிபாட்டைக் கண்டிக்கிறார். திருக்குறளிலும் உருவ வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் இன்று முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காட்சியையும் பார்க்கிறோம். இவை எல்லாம் வேத நூல்கள் ஒன்றைச் சொல்ல காலப் போக்கில் மனிதனின் மனம் அந்த வேதக்கருத்துக்களையே மாற்றி அதற்கு எதிரான திசையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். எனவே இப்பதிவு அந்த தவறுகளை சுட்டிக் காட்டத்தானே யொழிய யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
ஏசுவுக்குப் பின்னர் அவருடன் வாழ்ந்த சிஷ்யர்கள்(அப்போஸ்தலர்கள்) தங்களை ஒரு சிறு கூட்டமாக அமைத்துக் கொண்டு ஏசு அவர்கள் கொண்டு வந்த போதனையைப் பரப்பலாயினர். யூதர்களுடைய பழக்க வழக்கங்களையே அந்த அப்போஸ்தலர்களும் கடைபிடித்து வந்தனர்.
யூத கோவில்களில் நடைபெறும் வணக்க முறைகளையே இவர்களும் பின்பற்றி வந்தனர்.

அப்போஸ்தலர்களின் பிரச்சாரங்களின் விளைவாக பலரும் கிறித்தவ மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். ஒரு மார்க்கத்தையும் சேர்ந்திராது காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தி வந்த பாமர மக்களும் ஏசுவின் போதனையின் பக்கம் திரும்பலாயினர். இப்படிப் புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சலுகை பவுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்டது. புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் இணைபவர்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்து கொள்ளத் தேவையில்லை என்றும், வணக்க முறைகளில் சில விதிகள் அவர்களுக்காகத் தளர்த்தப்படலாம் என்றும் பவுல் கருதினார். யூதர்களைப் போன்று பல அனுஷ்டானங்களை அப்போஸ்தலர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் புதிதாக கிறித்தவ மார்க்கத்திற்கு வந்தவர்கள் இவற்றை எல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என பவுல் வாதிக்கலானார்.

ஆக இப்படியாக ஈஸா நபி(ஏசு) மரித்து ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாக இரண்டு கோஷ்டிகள் கிறித்தவ மார்க்கத்தில் தோன்றி அலை மோதின. ஏசு நாதரோடு கூடவே இருந்த அப்போஸ்தலர்கள் காட்டிய வழியில் செல்லும் கூட்டம் ஒன்று. இவர்கள் பெரும்பாலும் யூத பழக்க வழக்கங்களையே அனுஷ்டித்து வந்தனர். மற்றொன்று பவுல்(பால்) தலைமையில் இயங்கிய கூட்டம். யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை என்றும் புதிதாக மார்க்கத்தில் வருகின்றவர்கள் விஷயத்தில் அதிக கண்டிப்பு அவசியமில்லை என்றும் இவர்கள் கருதினார்கள். விருத்த சேதனம், ஓய்வு நாள், யூத வணக்க முறை, பலி(குர்பானி), பன்றி இறைச்சியை விலக்குதல் ஆகிய பிரச்னைகள் குறித்து இரு கூட்டத்தினருக்குமிடையே பலத்த மோதல்கள் எழுந்தன.

ஏசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஏசு கடைபிடித்த பழக்க வழக்கங்களையே பின் பற்ற வேண்டும் என்று கூறினர். இக் கூட்டத்தினர் பவுலை 'விரோதி' என அழைத்தனர். ஏசு மரித்து 70 ஆண்டுகள் வரை இக்கூட்டமே (ஜூதியோ கிறிஸ்டியானிடி) பெரும்பான்மையாக இருந்தனர். ஆரம்பத்தில் பீட்டரும் யோவானும் கூட இக் கூட்டத்தினருடன்தான் இருந்தனர். ஏசுவின் சொந்தமான ஜேம்ஸ் என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஏசுவின் மற்றொரு சொந்தமான கிளியோபாஸ் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். யூத-கிறித்தவர்கள் என இக்கூட்டம் அழைக்கப்பட்டது.

யூத-கிறித்தவர்களான இவ்வமைப்பினரே முதன்முதலாக சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியில் எழுதலானார்கள். கிறித்தவ மார்க்கத்தைப் பற்றிய பல நூல்களையும் அவர்கள் தொகுக்கலானார்கள். ஏசு மறைந்து ஒரு நூற்றாண்டு வரை இவர்களது கையே மேலோங்கி இருந்தது. ஜெருஸலம், பாலஸ்தீனம் மட்டுமல்லாது எகிப்து ரோம் வரை கூட இவர்களது ஆதிக்கம் பரவி இருந்தது. அதனால்தான் பவுல் எழுதிய நிரூபங்களில் 'மோதல்கள்' பற்றி அதிகம் குறிப்பிடுகிறார். கலாத்தியா, கோரிந்த், கோலோசேயா, ரோம், தெசலோனியா ஆகிய இடங்களில் எல்லாம் பவுல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

சிரியாவிலும் ஆசியா மைனரிலும் யூத-கிறித்தவர்களின் கூட்டமே மிகைத்திருந்தது. கிரேக்க நாட்டிலும் இவர்களின் பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆப்ரிக்க கண்டத்திற்கு கிறித்தவ மார்க்கத்தை முதன் முதலில் எடுத்துச் சென்றதே இக் கூட்டம்தான். முதன்முதலாக சுவிசேஷங்களை எழுத ஆரம்பித்ததும் இவர்களே.

இத்தகைய பின்னணியில்தான் மற்ற சுவிசேஷங்கள் எழுதப்படலாயின. எதிரி கோஷ்டியின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் எழுதப்பட்டவையே இன்று வழக்கில் இருந்து வரும் சுவிசேஷங்கள் ஆகும். கி.பி.70 ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷப் போராட்டங்கள் ஆரம்பமாயின. யூதக்-கிறித்தவர்கள் யூதர்களில் ஒரு உட்பிரிவுதான் என்றும் பவுல் கோஷ்டியினர் பிரச்சாரம் செய்யலானார்கள்.

ஆனால் கி.பி. 70 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மாறலாயிற்று. அப்போது நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் தோற்றுப் போயினர். அவர்கள் ஜெருஸலத்தில் இருந்து விரட்டப்பட்டனர். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் கூட்டமே பெரும்பான்மையாக இருந்தது. இவர்களுக்கு பவுல் அதிக சலுகைகளை அளித்திருந்ததால் பவுலின் பக்கமே இக்கூட்டம் சார்ந்து நின்றது. பெரும்பான்மையாகிவிட்ட இம் மக்கள் கூட்டம் ஜெருஸலத்தையும் பிற பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. இறுதியில் பவுலுடைய கோஷ்டிக்கு வெற்றி கிட்டிவிட்டது. பவுல் எடுத்துச் சொன்னதும் விளக்கிச் சொன்னதுமான மார்க்கம்தான் கிறித்தவ மார்க்கம் என்றாகி விட்டது. யூத-கிறித்தவர்களின் செல்வாக்கு மங்கியது. அவர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போய் விட்டார்கள்.

இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு பவுல் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கட்சியே கிறித்தவ மார்க்கம் என்று நிலை நிறுத்தப்பட்டு விட்டது. யூதர்களை ஒட்டிய கிறித்தவர் நாளடைவில் நலிவடைந்து இல்லாமலேயே மறைந்து விட்டார்கள்.

http://truthneverfails.blogspot.in/2011_06_01_archive.html



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கிருத்தவ மத வரலாறு

கந்தையானாலும் கசக்கி கட்டு மதப் புரட்டானாலும் திருந்தப் புரட்டு…….

11539004_1511894249057188_5388358581193421640_o.jpg

அமெரிக்காவில் James ஜனார்தனன் ஆகிவிட்டார், லண்டனில் Christian கிருஷ்ண மூர்த்தியாகிவிட்டார், ஆஸ்திரேலியாவில் Magdalene மங்கம்மாளாகிவிட்டார் என்று வெறும் வாயில் மதப் புரட்டு பர்பி மெல்லும் புரட்டான் குஞ்சுகள் கிருத்தவ மத வரலாறுத் தெரியாமல் இந்த அவதாரத்தோட அவதாரம் இயேசு, இயேசு இந்தியாவிற்கு வந்து பாட்டி நிலாவில் வடை சுட்டக் கதை கேட்டுவிட்டுப் போனார் என்று செவ்வாய் கிரகத்தில் இவர்களின் முப்பாட்டான் முட்டைகோஸ் விவசாயம் செய்தான் என்று அடித்துவிடும் கதையாக அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் இருக்கும் கிருத்தவ மதத்திற்கு பெரிதும் காரணமானவர் பவுல் அடிகள். பவுல் அடிகள் எழுதிய கடிதங்களாகிய Epistle-களை ஆதாரமாக கொண்டே பிற்பாடு வந்த போப்புகள் கிருத்தவ மதத்தை இன்றைக்கு இருக்கும் நிலைக்கு மாற்றியமைத்தார்கள். பவுள் அடிகள் யூதர்களின் இறைவேதமான Torah-வை அடிப்படையாக கொண்டு இயேசு கிருஸ்த்துவை பைபிலின் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் கண்ணியாக மாற்றினார்.

பவுல் அடிகள் தான் நிர்மானித்த கிருத்தவ சபைகளுக்கு எழுதிய பல கடிதங்களுக்கு ஏறத்தாழ 20, 30 ஆண்டுகள் கழித்தே இயேசு குறித்த நற்செய்திகள் (Gospels) தோன்றின. இந்த நற்செய்திகளைவிட பவுள் அடிகளின் Epistle-களே பிற்கால கிருத்தவ மதத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக கொள்ளப்பட்டது. இதில் மேலும் சுவாரசியம் கூட்டும் விசயம் பவுல் அடிகளின் பெயரை உபயோகித்து பிற்பாடு பல Epistle-கள் எழுதப்பட்டு கிருத்தவ மத கோட்பாடுகளாக நிலை நிறுத்தப்பட்டது.

பவுள் அடிகளின் காலத்தில் புதிய ஏற்பாடு என்று ஒன்று இல்லை. அந்த சமயத்தில் தோன்றியது கிருத்தவ மத பைபிலின் புதிய ஏற்பாடு குறித்த முதல் கொள்கை. அதை எழுதியவர் Marcion. இவர் மிகப் பெரும் வணிகராக இருந்து பிற்பாடு இயேசு கிருஸ்துவின் ஈடுபாடு கொண்டு பவுல் அடிகளின் சீடராக மாறியவர். இவரை Marcion of Sinope என்பார்கள்.

இவர்தான் கிருத்தவ மதத்தின் புதிய ஏற்பாட்டைத் அதாவது பைபிலைத் தொகுத்த முதல் கிருத்தவ மத போதகர். இவரை மதக் கிளர்ச்சியாளர் (heretic) என்று கிருத்தவ வரலாறு குறிக்கிறது. ஆம் இவர் பவுல் அடிகளின் சீடர் என்றாலும் இவர் யூதர்களின் பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இவரைப் பொறுத்தவரை யூதர்களின் பழைய ஏற்பாட்டு யகோவா வேறு, இயேசு கிருஸ்துவை இந்த மண்ணிற்கு அனுப்பிய யகோவா வேறு.

இவர் யூதர்களின் பழைய ஏற்பாட்டு வழக்கமான தீர்க்கதரிசிகளின் போதனைகளை தவிர்த்துவிட்டு இயேசுக் கிருஸ்துவின் போதனைகளையும் இயேசு கிருஸ்துவின் ஒரு சில சீடர்களின் Epistle-களையுமே தன்னுடைய பைபிலுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டார். மேலும் இவர் இயேசு கிருஸ்துவை Jesus Christ என்று குறிப்பிடாமல் - அன்றைய சீடர்கள் வழக்கமாக குறிப்பிடுவதுபோல – இயேசு கிருஸ்துவை Isu Chrestos என்று அழைக்கிறார்.

ஆனால் இவருடைய பைபில் தொகுப்பை இவர் வாழ்ந்த காலத்திலேயே கிருத்தவ மத போதகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இவர் யூதர்களின் பழைய ஏற்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ அதேப் போல பவுல் அடிகளின் பல Epistle-களையும் வெட்டி சுருக்கிவிட்டார். இந்த செயல் இவருக்கு மதக் கிளர்ச்சியாளர் என்கிறப் பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.

இவர் தொகுத்த கிருத்த மதத்தின் முதல் பைபிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இப்படி பல வரலாற்று சம்பவங்கள் கிருத்தவ மதத்தின் தோற்றத்திற்கு பின்னனியில் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். மதப் புரட்டான் குஞ்சுகளுக்கு ஒரே வேண்டுகோள் இத்தகைய வரலாற்றை படித்துவிட்டாவது மதப் புரட்டுகளை தெளிவாக புரட்ட முயற்ச்சி செய்யப் பாருங்கள்……



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 

 
 
abuzaidalathary@gmail.com
 
பைபிளை இறைவேதமாக ஏற்றுக்கொண்டுள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் “இயேசு உலகில் அவதரித்தார்” என்றும் “அவர் பல‌ அற்புதங்களை நிகழ்த்தினார்” என்றும் “மனிதர்களின் பாவமீட்சிக்காய்” சிலுவையில் அறையப்பட்டு மரித்து, பின்பு உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர்.
 
 
எனினும் பைபிள் விபரிக்கும் இயேசு, கிருஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ‘இயேசு’ என்ற பாத்திரம் உண்மையிலேயே வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா? வாழ்ந்தவராயின் வரலாறு இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை மத, இன, மொழி, தேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் விமர்சகர்களும் ஆய்வுகள் செய்துள்ளனர்;  செய்துவருகின்றனர்.
 
 
இவ்வாறு “கிருஸ்துவ இயேசுவு“க்கும் “வரலாற்று இயேசு” வுக்குமிடையேயான ஒப்பீட்டு ரீதியான விபரங்களை தமிழில் தரும் நாம் இது பற்றிய தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், ஆதாரங்கள் அடிப்படையிலான மாற்றுக் கருத்துகளையும் பெரிதும் வரவேற்கின்றோம்.
 
 
“வரலாற்று இயேசு” தொடர்பில் அண்மைக்காலம் வரை பல்வேறுபட்ட ஆய்வாளர்களும் பல ஆய்வு நூற்களை வெளியிட்டுள்ளனர். அவைகளுள் குறிப்பிடத்தக்கதாக:
 
 
1.வரலாற்று இயேசு-  பேராசிரியர் கிரீபிலியூப்
 
2.நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவை நோக்கி- ப்ரூஸ்பர் அல்பிரீக்
 
3.இயேசு கிருஸ்து ஒரு மூடப்புராணம்- முன்னால் கிருஸ்துவ மதபோதகர் கைபூ
 
4.வரலாற்று இயேசுவைத் தேடி-  அல்பிரட்ஸ் பைஸ்டர்
 
5.கடவுளாய்ப் போன மனிதன்-  ஜீரார் மீஸாதியஃ
 
ஆகிய நூற்களைச் சுட்டிக்காட்டலாம்.
 
 
இவ்வாறு பைபிள் கூறும் “இயேசு கிருஸ்துவை” வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்திய அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” தொடர்பில் மூன்று விதமான பிரிவினராகக் காணப்படுகின்றனர்.
 
 
1. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் வரலாற்றில் ஒரு போதும் வாழவில்லை என ஒரேயடியாக மறுத்துரைக்கும் சாரார்.
 
2. கிருஸ்துவம் கூறும் ”இயேசு” என்பவர் வரலாற்றில் வாழ்ந்த, அக்காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட புராணப் பாத்திரங்கள் பலதை வைத்து திருச்சபையால் சோடிக்கப்பட்ட ஒரு “கலவைப் பாத்திரம்” என்று கூறும் சாரார்.
 
3. கிருஸ்துவம் கூறும் “இயேசு” என்பவர் ஏனைய ”தீர்க்கதரிசிகள்” போன்று சாதாரணமாக அற்புதங்கள் நிகழ்த்தி, உபதேசங்கள் செய்து வாழ்ந்த ஒருவரே அன்றி சுவிஷேசங்கள் சித்தரிப்பது போன்ற ஒரு பாத்திரம் அல்ல என்று கூறும் சாரார்.
 
 
இவ்வாறு பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த, சிந்தனைப் பிண்ணனிகளைக் கொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பைபிள் கூறும் இயேசுவை, கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு”வை நிராகரிக்கும் வகையில் முடிவுகளைக் கூறுவதற்கான முக்கிய காரணம் என்ன‌ என்பதையே இக்கட்டுரையில் நாம் அலச உள்ளோம்.
 
 
எனவே, பைபிள் கூறும் “கிருஸ்தவ இயேசு” பற்றிய விபரங்களை முதலில் பார்த்து விட்டு பின்பு “வரலாற்று இயேசு” பற்றி நோக்குவோம்.
 
 
கிருஸ்துவ இயேசு
 
 
கிருஸ்துவர்கள் இறைவேதமாக நம்பும் பைபிள், அதன் புதியஏற்பாடு “இயேசு” பற்றி பின்வரும் விபரங்களைத் தருகின்றது.
 
 
1.இயேசு பற்றிய, இயேசுவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நூற்றுக்கணக்கான “முன்னறிவுப்புகள்” பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. இயேசு, யூத சமுதாயத்துக்கு மத்தியில் யூதமத போதனைகளை க்கடைப்பிடிப்பவராக, சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பவராக வாழ்ந்தார்.
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை அக்காலயூதர்கள் நன்கறிந்திருந்தனர்.
 
 
2.இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய விஷேட நட்சத்திரத்தை அடையளங்கண்டு பாலஸ்தீனத்திற்கு கிழக்கே பாரசீகத்திலிருந்து (இன்றையஈரான்) ஞானிகள் வருகை தந்து இயேசுவை பணிந்து சென்றனர். (ம‌த்தேயு 2: 1-12)
 
 
எனவே, இயேசு பற்றிய விபரங்களை பாரசீகர்கள் அறிந்திருந்தனர்.
 
 
3. பாரசீக ஞானிகளிடத்தில் இருந்து அக்கால ஆட்சியாளன் ‘ஏரோது ராஜாவும் எருசலேம் நகரமக்கள் அனைவரும்’ இயேசு பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.(மத்தேயு 2:3)
 
 
எனவே இயேசு பற்றிய விபரங்களை ஆட்சியாளனும் எருசலேம் மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
4. ஏரோது ராஜா “யூதர்களின் அரசன்” பிறந்து விட்டான் என்ற அச்சத்தின் காரணமாக “பெத்தலேகம்” மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான். ( மத்தேயு 2:16)
 
 
இக்கொலை நடவடிக்கையில் 14,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக கிருஸ்துவ மூலங்கள் உறுதி செய்ய வேறு சிலரோ இத்தொகை 144,000ஆக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர்.
 
 
எனவே, இந்த நகரங்களில் வாழ்ந்தவர்கள், அக்குழந்தைகளின் குடும்பத்தார்கள், உறவினர்கள் என குறைந்தது கால் மில்லியன்-இரண்டரை இலட்சம் மக்களாவது இச்சம்பவத்தினால் இயேசு பற்றிய விபரங்களைஅறிந்திருந்தனர்.
 
 
5.இக்கொலை நடவடிக்கைக்குப் பயந்து இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு தப்பிச் சென்று சிலகாலம் அங்கு வாழ்ந்தனர். (மத்தேயு2: 14-15)
 
எனவே, எகிப்தியர்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
6.பின்பு, இயேசு பயணங்கள் பல மேற்கொண்டு இன்றைய பாலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசங்களுக்குச் சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் போதனைகள் செய்தார். இத்தகைய உபதேசங்களின் இறுதியில் ‘சுவிஷேச ஆசிரியர்கள்’ பெரும்பாலும் “அதிகமானவர்கள் இயேசுவை விசுவாசித்தனர்” என்று எழுதியுள்ளனர். (மத்தேயு4: 14 -15 மற்றும் 4: 23- 24)
 
 
எனவே, பலஸ்தீன், லெபனான், சிரியா ஆகிய தேசமக்களும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
7.இயேசு மக்களுக்கு பகிரங்க சொற்பொழிவுகள் ஆற்றியதுடன் யூதமதத்தலைவர்களுடன் சர்ச்சைப்படுபவராகவும், தேவாலயங்களுக்குள் நுழைந்து வியாபாரிகளின் பலகைகளை கவிழ்த்துப் போடுபவராகவும் இருந்தார்.(யோவான் 2:13-25)
 
எனவே, மத்தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
8.பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் இயேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவைகளின் எண்ணிக்கை சுமார் நாற்பது அளவில் சுவிஷேசங்களில் கூறப்பட்டுள்ளன.
 
 
இது தொடர்பில் கலாநிதி வில்லியம் ஹாம்பல் என்பவர் தனது “வரலாற்று மற்றும் விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும்” என்ற நூலில் 302ம் பக்கம் முதல் 319ம் பக்கம் வரை பைபிள் கூறும் இயேசுவின் அற்புதங்களையும் அதை அறிந்தவர்களது எண்ணிக்கையையும் பட்டியலிட்டுள்ளார்.
 
 
கீழ்வரும் அட்டவனையினூடாக அதை நாமும் நோக்குவோம்.
 
 
தொடர் இலக்கம்
அற்புதம்
ஆதாரம்அறிந்தவர்களது எண்ணிக்கை
1
முப்பெத்தெட்டு வருட நோயாளியை இயேசு குணப்படுத்தல்யோவான்5: 5-9
200
2
பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தல்லூக்கா 1 7:12-14
1000
3
நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்மாற்கு 8: 1-‍ 9
4000
4
அதிக நோயாளிகளைக் குணப்படுத்தல்மாற்கு 1: 32-34
4000
5
இரண்டு மீன்கள், கொஞ்ச ரொட்டிகளை வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்யோவான்    7: 1-‍14
5000
6
கலீலியோ,யூதேயா,எருசலேம்,இதுமேயா,யோர்தானுக்கு அக்கரை திருசீதோன் பட்டணங்களின் அநேக நோயாளிகளக் குணப்படுத்தல்மாற்கு 3: 8-11
20,000
7
கலீலியோ கடலுக்கு கிழக்கு பகுதியில் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தல்.மத்தேயு     15: 29-31
20,000
8
இயேசு தடவியவர்கள் அனைவரும் குணமடைதல்மாற்கு 6: 53-56
40,000
9
இயேசுவின் பேரால் அற்புதங்கள் நிகழ்த்தும் 72பேரை இயேசு இரண்டிரண்டு பேராக நகரங்களுக்கு அனுப்பி வைத்தல்லூக்கா 10: 1-17
72,000
10
தீய ஆவியினால் பிடிக்கப்பட்டவனை இயேசு குணப்படுத்தல்மாற்கு 5: 2-15
அப்பகுதி மக்கள் அனைவரும்
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இவ்வட்டவணையின்படி ‘கலாநிதி வில்லியம் ஹாம்பல்’ அவர்கள் “இயேசுவின் காலத்தில் 20 இலட்சம் மக்கள் வசித்தார்கள் என்றிருந்தால் அதில் குறைந்தது 5% வீதமான மக்கள் அதாவது, ஒரு இலட்சம் பேர் இயேசுவின் அற்புதங்களைக் கண்டோ அல்லது கேள்விப்பட்டோ இருப்பார்கள்” என்ற முடிவுக்கு வருகிறார்.
 
 
சுருங்கக்கூறின், மருத்துவ வசதிகள் அதிகமில்லாத அன்றைய காலகட்டத்தில் சுவிஷேசங்களில் “ஒரு நடமாடும் வைத்தியசாலையாக”சித்தரிக்கப்படும் இயேசு பற்றிய விபரங்களை அதிகம் பேர் அறிந்திருந்தார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயிருக்கிறது.
 
 
இதனோடு சேர்த்து “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகின்றேன்” (யோவான்21:25) என்ற இறுதி சுவிஷேசத்தின் இறுதி வசனத்தையும் நாம் கவனத்திற்கொண்டால் பைபிள் கூறும் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” அக்காலமக்கள் அனைவரும் அறிந்துவைத்திருந்த ஒரு “ஜனரஞ்சகநாயகனாக” இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
 
 
9.இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்ற தீர்மானம் ரோமசக்கரவர்த்தியின் பிராந்திய ஆட்சியாளரான பிலாத்து என்பவரால் நிறைவேற்றப்பட்டது. (யோவான்18:29 – 19:16)
 
எனவே அரசஅதிகார அலுவலகர்கள் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
10.பின்பு, பெருந்திரளான மக்கள் மத்தியில் பொது இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
 
எனவே, அப்பிராந்திய மக்கள் அனைவரும் இயேசு பற்றிய விபரங்களை அறிந்திருந்தனர்.
 
 
11.இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் மரணித்தவர்கள் கல்லறைகளில் இருந்து உயிர்த்தெழுந்து நகரங்களில் நுழைந்து அதிக மக்களுடன் பேசினர்.    (மத்தேயு 27:52-53)
 
எனவே, இயேசுவின் மரணத்தை அந்நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.
 
 
12.அவ்வேளையில், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு மலைகளும் பிளந்ததுடன் பூமியெங்கும் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (லூக்கா 23:44)
 
ஆக, பைபிளின் பிரகாரம் கிருஸ்தவர்களது “நம்பிக்கை இயேசு” என்பவர் முதல் நூற்றாண்டில் பாமரர்கள், மதத்தலைவர்கள், மருத்துவர்கள், அரசஅதிகாரிகள், பௌதீகவியலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என சகல மட்டத்து மக்களாலும் பிராந்திய வேறுபாடு இன்றி அறியப்பட்ட “ஜனரஞ்சக நாயகனாக” இருந்தார் என்பதை நாம் நோக்கினோம்.
 
 
இனி “வரலாற்று இயேசு” வின் பக்கம் எமது பார்வையை திருப்புவோம்.
 
 
வரலாற்று இயேசு
 
 
பைபிளை இறைவேதமாக ஏற்றுள்ள கிருஸ்தவர்களது நம்பிக்கையின்படி ‘இயேசு’ என்ற பாத்திரம் அக்கால மக்கள் அனைவரும் அறிந்திருந்த ஒரு “ஜனரஞ்சகமான பாத்திரம்” என்பதை முதல் பகுதியில் நோக்கினோம்.
 
 
பைபிள் கூறும் பிரகாரம் சகல தரப்பு மக்களாலும் நன்கு அறியப்பட்டிருந்த இயேசு பற்றிய விபரங்கள், செய்திகள் அக்காலமக்களின், அப்பிரதேசவாசிகளின் இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்களில் குறைந்தது சில நூறு தடவைகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். ஏன் சில ஆயிரம் தடவைகள் என நாம் கூறினாலுங்கூட அது மிகையாகது.
 
 
இவ்வாறு சகல விதத்திலும் சகல தரப்பு மக்களிடமும் பிரபல்யமான “கிருஸ்துவ இயேசு” பற்றி அக்கால அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் என்ன வாக்கு மூலம் தருகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
 
 
1.சிறிய பிப்லினூஸ் (கி.பி 61- 124)
 
இரண்டாம் நூற்றாண்டில் கிருஸ்துவர்கள் இயேசு பற்றிப் பாடிய பக்திப்பாடல் ஒன்றின் ஒரு வரியை மாத்திரம் இவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பைபிள் கூறும் இயேசு பற்றி எந்தத் தகவலையும் இவர் தரவில்லை.
 
 
2.தாஸிதூஸ் (கி.பி 55 – 120)
 
“நீறோன் மன்னன் காலத்தில் ரோம் நகரில் ஏற்பட்ட தீவிபத்து பற்றியும் ‘கிருஸ்து’என்ற பேரில் இருந்து தோற்றம் பெற்ற கிருஸ்துவர்கள் பற்றியும்……” என்று போகிற போக்கில்,  உறுதியில்லாத வதந்திகள் என்ற வகையில் சில வரிகளை எழுதியுள்ளார்.
 
அது தவிர இவர் இயேசு பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை.
 
 
3. பெரிய பிலீனூஸ் / காயூஸ்பிலீன் (கி.பி 23-79)
 
மிகப் பெரும் இலத்தீன் வரலாற்றாசிரியரும் பௌதீகவியலாளருமான ‘பிலீனூஸ்’ அவர்கள் கி.பி 65-70 காலப் பகுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்து ஐந்து வருடகாலம் அங்கே தங்கியிருந்து பல்வேறு விடயங்களையும் மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.
 
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட “சாக்கடல் சாசனங்களுக்குச் சொந்தக்காரர்களான கும்ரான் குகைவாசிகள்” தொடர்பில் அன்று இவர் எழுதிய குறிப்புகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் பொருந்திப் போவது இவரது நுணுக்கமான வரலாற்றுப் பதிவுக்கு சான்று பகர்கிறது.
 
 
குறித்த “கும்ரான்” பகுதியில் இருந்து சில மைல்கள் தூரத்தில்தான் “கிருஸ்துவ இயேசு” வாழ்ந்த ,அற்புதங்கள் நிகழ்த்திய பிரதேசங்கள் காணப்படுகின்றன.
 
அத்துடன் பௌதீகவியலாளரான இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி, மலைகள் பிளவுபட்ட சம்பவம், சூரிய கிரகணம் என்பன இவரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
 
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், பௌதீகவியலாளருமான “பிலினூஸ்” அவர்கள் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
4.பீலூன் அலெக்ஸந்தரிய்யா (கி.மு 10-கி.பி 50)
 
அலெக்ஸந்தரிய்யாவில் வாழ்ந்த பிரபல்யமான யூத தத்துவவியலாளரான இவர் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் தொடர்பில் பலவிடயங்களை எழுதியுள்ளார்.
 
 
இயேசு காலத்து ஆட்சியாளன் “பிலாத்து” பற்றியும் குறிப்பிட்டுள்ள இவர் “யோவான் தனது சுவிஷேசத்தை எழுத முன்னரே “வார்த்தை” (லோகோஸ்) பற்றி பல இடங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
 
 
பழைய ஏற்பாட்டின் ஆரம்ப‌நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ள இவர் “கும்ரான் குகைவாசிகள்” பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிட்டுள்ளார்?.
 
ஒன்றுமில்லை”
 
 
5ஸின்கா / லூஸியூஸ் அனாயூஸ் (கி.மு 4- கி.பி 65)
 
ரோம இலக்கியவாதியும், தத்துவவியலாளருமான இவ்வறிஞர் பன்னிரண்டு தத்துவக் கட்டுரைகளையும், ஒரு வானியல் கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் எரிமலைகள், சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தி பௌதீகவியல் தொடர்பிலும் ஒரு நூலை எழுதியுள்ள இவர் ரோம சக்கரவர்த்தி ”நீறோன்” என்பவரது ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
 
இவருக்கும் ஆரம்பகால கிருஸ்துவ போதகரான “பவுல்” என்பவருக்குமிடையே கடிதத் தொடர்புகள் காணப்பட்டதாக ஒரு வரலாற்று வதந்தி நிலவினாலும் அக்கடிதங்கள் நாலாம் நூற்றாண்டில் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை கிருஸ்துவ சமூகமே உறுதி செய்துள்ளது.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த “ஸின்கா” அவர்கள் இயேசு பற்றியோ அல்லது வானவியல் தொடர்பில் எழுதியவர் என்ற ரீதியில் “இயேசு பிறந்த போது தோன்றிய நட்சத்திரம்” பற்றியோ அல்லது பௌதீகவியலாளர் என்ற வகையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, மலைகளின் பிளவு, சூரிய கிரகணம் பற்றியோ என்ன குறிப்புகளை தந்த்துள்ளார்?
 
ஒன்றுமில்லை”
 
 
6யூஸ்த் (கி.பி 2 ம் நூற்றாண்டு)
 
இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தின் வட பகுதியில் இயேசு விஜயம் செய்த “கபர்நாகூம்” பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான இவர் “யூத ராஜாக்களின் வரலாறு” என்ற நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய எந்த நூலும் இன்று எம்மத்தியில் இல்லை என்றாலும் இவரது நூற்களில் இருந்து பலவிடயங்களை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொனஸ்தாந்து நோபில் தலைமை கிருஸ்துவ மதகுருக்களில் ஒருவரான “பூதியூஸ்” என்பவர் எடுத்தெழுதியுள்ளார்.
 
இவரது மேற்கோள்களில் இயேசு பற்றி எமக்கு என்ன தகவல்கள் கிடைக்கின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
.சுபிதோன்/ ஜாயூஸ்திரான்கிலூஸ் (கி.பி 69 -140)
 
ரோம வரலாற்றை எழுதிய இவர் கி.பி 122 வரை ரோமச்சக்கரவர்த்தி “ஹாத்ரியான்” என்பவரது அந்தரங்க செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் 12 சீசரிய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் கி.பி 39- 40 காலப்பகுதியில் ரோம சாம்ராஜ்யத்துக்கெதிராக யூதர்கள் செய்த கிளர்ச்சியையும் விரிவாக எழுதியுள்ளார்.
 
இவ் வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி எந்த விபரங்களை எமக்குத் தருகிறார்?.
 
எதுவுமில்லை”
 
 
8.  யூஸிபியூஸ் பிலாபியூஸ் (கி.பி 38-100)
 
யூத வரலாற்றாசிரியரான இவர் எருசலேம் பகுதியில் பிறந்து யூதர்களுக்கும் ரோமர்களுக்கும் சண்டை மூண்டபோது கலீலியோவுக்கான ஆட்சிப்பிரதிநிதியாக பதவி வகித்தார். எருசலேம் நகர் கி.பி 70ம் ஆண்டு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரோமுக்குச் சென்ற இவர் யூதவரலாறு பற்றி 20 பாகங்கள் கொண்ட நூலை எழுதியுள்ளார். சுமார் 50 எழுத்தாக்கங்களுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளார்.
 
 
இவரது நூல் ஒன்றில் இவர் “இயேசு பற்றிக் குறிப்பிடுவது போல்இவரை கிருஸ்துவாரச் சித்தரிக்கும் வகையில் சில பந்திகளை பிற்கால கிருஸ்தவர்கள் இடைச்செருகல் செய்துவிட்டனர்.
 
 
எனினும், இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அனைவரும் குறித்த பந்திகள் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் என்பதிலும் யூஸிபியூஸ் அவர்கள் கிருஸ்தவர் அல்ல, யூதர்தான் என்பதிலும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
 
இவ்வரலாற்று ஆசிரியர் இயேசு பற்றி என்ன குறிப்பிடுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
9புளூதர்கஸ் (கி.பி 48-125)
 
கிரேக்க வரலாற்றாசிரியரான இவர் அணியிலக்கணம்,, கணிதம் ஆகிய துறைகளில் பல நூற்களை எழுதியுள்ளார். ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கல்வி, பண்பாடு, அரசியல், மதம் தொடர்பிலான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
இன்று காணப்படும் இவரது இரு நூற்களில் இயேசு பற்றி என்ன‌ தகவல்கள் காணப்படுகின்றன?
 
ஒன்றுமில்லை”
 
 
10.சாக்கடல் சாசனச் சுருள்கள் (கி.பி 1ம் நூற்றாண்டு)
 
1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச்சுருள்களின் சில ஆவணங்கள் இயேசு வாழ்ந்த பகுதியில், இயேசு வாழ்ந்த காலகட்டதில் எழுதப்பட்டதாக இருக்கின்றன.
 
இச்சுருள்களில் பைபிள் விபரிக்கும் இயேசு பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
 
எதுவுமில்லை”
 
 
*சாக்கடல் சாசனச் சுருள்கள் எவ்வாறு கிருஸ்துவர்களது மதநம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது என்பதை தனியாக ஒருகட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.
 
 
11.ஸ்த்ராபூன் (கி.மு 58- கி.பி 25)
 
கிரேக்க அறிஞரும், புவியியலாளருமான இவர் மனித இனங்களின் மூலம், அவர்களின் இடம்பெயர்வு, ஆட்சி உருவாக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.
 
இயேசு பற்றி இவர் என்ன கூறுகிறார்?
 
ஒன்றுமில்லை”
 
 
12.ஜூபினால் (கி.பி 14 – 130)  மற்றும் லூகானூஸ் (கி.பி39- 65)
 
பிரபல்யமான ரோம இலக்கியவாதிகளான இவ்விருவரும் சில இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்கள்.
 
இவ்விருவரும் இயேசு பற்றி என்ன எழுதியுள்ளார்கள்?
 
ஒன்றுமில்லை”
 
 
இவ்வாறு வரலாற்றின் திரும்பிய திசைகள் எல்லாம் இயேசு பற்றிய தகவல்கள் குறித்து “ஒன்றுமில்லை”! ” ஒன்றுமில்லை”!! “ஒன்றுமேயில்லை”!!! என பதிலளிப்பது பைபிள் கூறும் கிருஸ்துவர்களது “நம்பிக்கை இயேசு” என்ற பாத்திரம் “வெறும் கற்பனைப் பாத்திரம்தான்”என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் முடிவுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது.
 
 
நாம் மேற்கண்டவாறு “முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூற்களிலும், ஆவணங்களிலும் இயேசு பற்றிய விபரங்கள் எதுவும் நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை ஆய்வாளர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையே வரலாற்று ஆய்வாளர்கள் “ஒரு நூற்றாண்டின் மௌனம்” என்ற பரிபாஷயில்யில் சுட்டிக்காட்டுவர்.
 
 
அத்துடன் பைபிள் கூறும் “கிருஸ்துவ இயேசு”வின் போதனைகளைக் கேட்டு விசுவாசித்தவர்கள் எங்கே? அவர் பிறந்தபோதும் மரித்த போதும் ஏற்பட்ட பூகோள அடையாளங்களைக் கண்டவர்கள் எங்கே? இயேசுவின் அற்புதங்களைக் கண்டவர்கள், கேட்டவர்கள், நிவாரணம் பெற்றவர்கள் அனைவரும் எங்கே? இவர்களில் ஒருவர் கூடவா வரலாற்றுக் குறிப்புகளிலோ, ஆவணங்களிலோ, முதுசங்களிலோ, கல்வெட்டுகளிலோ இயேசு பற்றி எந்த ஒரு குறிப்பையும் எழுதவில்லை என்ற கேள்விக்கு கிருஸ்தவர்களிடம் எந்த பதிலும் இல்லை. பதிலளிக்கவும் முடியாது


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard