New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் என்றொரு மாயை-ரிச்சர்ட் டாக்கின்ஸ்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
கடவுள் என்றொரு மாயை-ரிச்சர்ட் டாக்கின்ஸ்
Permalink  
 கடவுள் என்றொரு மாயைTHE GOD DELUSION

THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================மதங்களுக்கு நம் சமூகம் தரும் அதீத மரியாதையைத் தெளிவாகக் காண்பிக்க கீழ்வரும் நிகழ்வைத் தருகிறேன்.

2006 பிப்ரவரியில் நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வு வேடிக்கையும் வேதனையும் கலந்தது. 2005 செப்டம்பரில் டென்மார்க் நாட்டுச் செய்தித்தாள் – Jyllands-Posten – முகமது நபியின் படங்கள் பன்னிரண்டை வெளியிட்டன. அதிலிருந்து அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு டென்மார்க்கில் அரசியல் அடைக்கலம் பெற்ற இரு இமாம்களும், அங்கு வாழும் சில இஸ்லாமியர்களின் குழுவும் இணைந்து இஸ்லாமிய நாடுகள் முழுவதிலும் டென்மார்க்கிற்கும் அந்த செய்தித்தாளுக்கும் எதிராக பெரும் புரளியைக் கிளப்பி விட்டனர்.

2005-ன் கடைசியில் இந்தத் தீய எண்ணங்கொண்ட குழு தாங்களே தயாரித்த சுற்றறிக்கை ஒன்றோடு எகிப்துக்கு சென்றனர். அங்கிருந்து அவர்களின் அந்த அறிக்கை உலகின் பல இஸ்லாமிய நாடுகளுக்கும்,குறிப்பாக இந்தோனேஷியாவிற்கும் பரப்பப்பட்டன. அந்த அறிக்கையில் டென்மார்க்கில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், Jyllands-Posten டென்மார்க் அரசு நடத்தும் செய்தித்தாளென்ற பொய்யான செய்தியையும் பரப்பின. அதோடு அச்செய்தித்தாளில் வந்ததாக 12 படங்களும் இருந்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அதில் இருந்த 12 படங்களில் ஒன்பது மட்டுமே அந்தச் செய்தித்தாளில் ஏற்கெனவே உண்மையில் வந்த படங்கள். புதிதாகச் சேர்க்கப்பட்ட மூன்று படங்கள் எங்கிருந்து வந்தன என்பது ஒரு பெரிய கேள்வியாக முதலில் இருந்தது. இந்த மூன்று படங்களுமே எல்லோரும் நினைத்தது போல் முகமதின் படங்கள் என்று உலகம் முழுமைக்கும் பரப்பப்பட்ட அந்த படங்கள் நிச்சயமாக அவரை இழிவுபடுத்தும் படங்களாக இருந்தன. அந்த மூன்று படங்களிலும் ஒரு படம் மற்ற படங்கள் போல் கார்ட்டூனாக இல்லாமல் ஒரு புகைப்படமாக இருந்தது. அது, தாடி வைத்த ஒரு மனிதன் பன்றி முகமூடியோடு இருப்பது போன்றது. பின்னால் அது Associated Press-ன் ப்ரான்ஸ் தேசத்து ஆள் ஒருவன் (pig-squealing contest) பன்றி போல் கத்தும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது. அந்தப் படம், இஸ்லாமுக்கும், நபிக்கும், நபியைப் பற்றி வந்த மற்ற புகைப்படங்களுக்கும், டென்மார்க்குக்கும், டென்மார்க்கின் Jyllands-Posten-க்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு புகைப்படம். ஆனால் கெய்ரோவில் ஆரம்பித்து இஸ்லாமிய நாடுகள் முழுமைக்கும் இந்தப் பொய்த்தகவல் பரப்பப்பட்டது; பரப்பியவர்கள் எதிர்பார்த்தது போலவே எல்லாமே நடந்தேறியது.

Jyllands-Posten-ல் 12 கேலிச்சித்திரங்கள் பதிப்பிக்கபட்ட பின் 5 மாதங்கள் கழித்தே இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

முக்கியமாக பாகிஸ்தானிலும், இந்தோனேஷியாவிலும் டென்மார்க் நாட்டின் கொடிகள் எரிக்கப்பட்டன. (எப்படி அவர்களுக்கு அந்நாட்டு கொடிகள் எல்லாம் கிடைத்தனவோ?) டென்மார்க் அரசு மன்னிப்பு கேட்கவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன. ( எதற்காக அந்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்? கேலிச்சித்திரங்களை அரசா வரைந்தது? இல்லை அவர்களா அதைப் பதிப்பித்தார்கள்? இஸ்லாமிய நாடுகளில் இல்லாத, அவர்களில் பலரால் புரிந்து கொள்ள முடியாத சுதந்திரமான அச்சு ஊடகம் உள்ள நாடு அது.) டென்மார்க் நாளேட்டிற்கு ஆதரவு தரும் வகையில், இங்கிலாந்து தவிர்த்து, நார்வே, ஜெர்மன், ப்ரான்ஸ், அமெரிக்க நாட்டு அச்சு ஊடகங்கள் அந்த கேலிச்சித்திரங்களைத் தங்கள் ஊடகத்திலும் அச்சேற்றின. இது எரிகிற எண்ணெயில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. டென்மார்க் தூதரகங்கள் உலகெங்கும் தாக்கப்பட்டன; அவர்களது இறக்குமதிப் பொருட்கள் புறந்தள்ளப்பட்டன.டென்மார்க் மக்கள் மட்டுமல்லாமல் பல மேற்கத்திய நாட்டு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள கிறித்துவ ஆலயங்கள் தாக்கப்பட்டன - அவர்களுக்கும் இச்சம்பவத்திற்கும் ஏதும் தொடர்பில்லாவிட்டாலும். லிபியாவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 RESUTLS & DISCUSSION !!


மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.

சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் intersting ஆன விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், 'பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ' என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார். 

கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித சால்ஜாப்புகள் / காரண காரியங்கள் தரப்பட்டன. கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் (Oxofd theologian: Richard Swinburne). Swinburne ஏற்கெனவே ஹிட்லரால் யூதர்கள் கொல்லப்பட்டதுகூட ஒரு விதத்தில் நல்லது என்று சொன்னவர். இவர் மட்டும் இல்லை; வேறு சில மத நம்பிக்கையாளர்களும் இந்த சோதனை முடிந்த பிறகு 'ச்சீ .. சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போன்ற கருத்து முத்துக்களை உதிர்த்தார்கள். ஆனால், ஒரு வேளை இந்தச் சோதனையில் வழிபாடுகளுக்கு வலு உண்டு என்பதுபோன்ற முடிவு கிடைத்திருந்தால், இதே நம்பிக்கையாளர்கள் அவைகளை அப்போது சும்மா விட்டிருந்திருப்பார்களா? (91)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


*


*


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder" (pp28)


delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. வாசிக்க ஆரம்பித்ததுமே மிகவும் பிடித்துப் போனது. இருக்காதா, பின்னே! நம்ம 'சைடு' ஆளாச்சே. ஆரம்பித்திலிருந்தே நிறைய கருத்துக்கள் பிடித்துப் போக, அதிலும் அவர் ஒன்று சொல்கிறார்: இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற ஆளுககிட்ட இந்த நூல் சொல்ற சேதிகளை பண்டமாற்று செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் இந்தத் தொடர் பதிவுகளை இட நினைத்துள்ளேன்.

அவ்வப்போது, அங்கங்கே பிடிக்கிற இடங்களை தமிழ்ப்படுத்தி இங்கு இடலாமென ஆவல். சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்துக்களாகவே இருக்கும். நான் ஏதாவது சொல்ல ஆசைப்பட்டால் அதைக் கருப்பில்லாத வேறு வண்ணத்தில் தருவதாக உத்தேசம். அப்போதுதானே கேள்வி-பதிலுக்கும் வழியிருக்கும்.

==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ROBERT M. PIRSIG (Author of ZEN AND THE ART OF MOTORCYCLE MAINTENANCE:

WHEN ONE PERSON SUFFERS FROM A DELUSION, IT IS CALLED INSANITY. WHEN MANY PEOPLE SUFFER FROM A DELUSION IT IS CALLED RELIGION.(pp 28)

புரிஞ்சிருக்குமே; அதான் தமிழில் சொல்லலை!!

========================================ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:

* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை. (pp 36)


ஐன்ஸ்டீனின் மத மறுப்பு அறிக்கைகளுக்குப் பிறகு அவரைக் கண்டித்து பலரும் எழுதியும் பேசியும் வந்தனர். எல்லா பெரிய மனிதர்களையும் போலவே ஐன்ஸ்டீனும் கடைசிக் காலத்தில் கிறித்துவரானார் என்ற புரட்டுச் செய்திகளும் அவர் காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்டன!
====================================


CARL SAGAN in his book, "PALE BLUE DOT":

எந்த ஒரு பெரிய மதமாவது அறிவியல் உண்மைகளை அறிந்து, பின், "அடே! நாம் நினைத்தவைகளை விடவும் இந்தப் பிரபஞ்சம் பெரியது; நம் நபி / தூதுவர் / (புத்தகத்தில்: prophet) சொன்னதைவிடவும் மகத்தானது; பிரமிப்பூட்டுவது" என்று ஏன் சொல்வதில்லை? அதற்குப் பதிலாக, "இல்லை .. இல்லை ..! என் கடவுள் அப்படி ஒன்றும் பிரமாண்டமானவரில்லை; (அவர் இந்த உலகுக்கானவர் மட்டுமே)" என்றுதான் சொல்கிறது. (நம் மதங்கள் யாவுமே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நினைவில் கொள்வதில்லை; மனிதகுலம், இந்த நமது உலகம் இதைத்தாண்டி யோசிப்பதில்லை.) (pp 33)

=====================================__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

DOUGLAS ADAMS: 

இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல - இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews)சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி! என்பது எவ்விதத்தில் சரி. 

சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? (pp 43)
=====================================

மதம் என்றால் சட்டமும் வளையும்.

மதம் என்றாலே சும்மா அதிருதில்ல ...!

2006-ம் ஆண்டு, பிப். 21-ம் தேதி வழக்கு ஒன்று அமெரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு வந்தது. 
Centro Espiritia Beneficiente Uniao do Vegetal என்ற ஒரு கிறித்துவ மதக் குழு தடை செய்யப்பட்ட dimethyltryptamine என்ற வேதிப்பொருள் அடங்கிய hoasca tea-யைக் குடித்தால்தான் தங்கள் கடவுளோடு தாங்கள் ஐக்கியமாக முடியும் என்றும் அதனால் அந்த டீயை அருந்த தங்களுக்கு உரிமை வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடர்ந்தனர். மதத்தின் பெயரே இங்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டது. வழக்கும் வென்றது! மதம் என்னும் தாயத்து செய்த மாயம் அது!

2004-ம் ஆண்டு ஜேம்ஸ் நிக்சன் என்ற மாணவன் ஒரு டி-சட்டையைத் தன் பள்ளிக்கு அணிந்து வந்தான். அதில், "ஓரினச்சேர்க்கை பாவம்; இஸ்லாம் ஒரு பொய்; கருச்சிதைவு கொலைக்குச் சமம்" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. பள்ளி அவன் அந்தச் சட்டை அணிவதை அனுமதிக்க மறுத்தது. பெற்றோர்கள் வழக்கு மன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை. பதிலாக, "மதச் சுதந்திரம்" என்பதே வழக்கின் அடிப்படையாக எடுக்கப் பட்டது; வழக்கும் வெற்றி கண்டது.

இதுபோல் பல வழக்குகள். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்த்து பல வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாமே 'நான் கிறித்துவனாக இருப்பதால் எனக்கு அடுத்தவனின் தனிப்பட்ட செயல்களிலும்கூட மூக்கை நுழைக்க உரிமையுள்ளது' என்ற நினைப்பில்தான் தொடுக்கப் பட்டன; வெற்றியும் பெற்றன. (pp44-46)
__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பாகிஸ்தான் இமாம் ஒருவரால் கேலிப்படம் வரைந்தவரின் தலைக்குப் பத்து லட்சம் அமெரிக்கன் டாலர்கள் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்தக் கேலிப்படங்கள் பன்னிரண்டு கார்ட்டூனிஸ்டுகளால் வரையப்பட்டன என்பதோ, அந்தப் பன்னிரண்டு கேலிப்படங்களில் முக்கியமான மூன்று படங்கள் டென்மார்க்கில் வரையப்படவோ, அச்சிடப்படவோ இல்லை என்பதோ தெரியாது.(அதோடு அவர் அறிவித்த பத்து லட்சம் அமெரிக்க டாலர் அவரிடம் ஏது?)

நைஜீரியாவில் பல கிறித்துவக் கோயில்கள் தாக்கப்பட்டன; கிறித்துவ கருப்பின மக்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர். பிரிட்டனில் நடந்த எதிர்ப்பு ஊர்வலங்களில் மக்கள் தாங்கிவந்த பதாகைகளில் சில: "இஸ்லாமைப் பழித்தவர்களை வெட்டு"; "இஸ்லாமைக் கேலி செய்தவர்களை வெட்டு"; "ஐரோப்பா இதற்கு தங்கள் அழிவின் மூலம் பதில் சொல்லியாக வேண்டும்". 

இந்த நேரத்தில் நம் அரசியல்வாதிகள் பலர் எப்படி இஸ்லாம் ஒரு அமைதியையும், இரக்கத்தையும் கொண்டாடும் மதம் என்பதை நமக்கெல்லாம் நினைவூட்டிக் கொண்டிருந்தார்கள்.

பாகிஸ்தானில் நடந்த ஒரு ஊர்வலத்தில் ஒரு பெண்மணி தாங்கியிருந்த பதாகையில் எழுதப்பட்ட வாசகம்: "ஹிட்லரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்"!

யாரையும் கேலி செய்யவோ,துன்புறுத்தவோ யாருக்கும் அதிகாரமில்லைதான். ஆனால்,மதங்களுக்குக் கொடுக்கப்படும் அதீத சலுகைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் அவர்களது கேலிச்சித்திரங்களை நித்தம் நித்தம் ஊடகங்களில் பார்க்கிறார்கள். அதை யாரும் எதிர்த்து பெருங்குரலேதும் எழுப்புவதில்லை. ஆனால் மதத்தொடர்பானவைகளுக்கு மட்டும் ஏனிந்த தனிச்சலுகைகள். மெங்கன் (H.L. Mencken) சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன்: "ஒருவன் தன் மனைவிதான் அழகு என்றோ, அவன் தன் பிள்ளைகள்தான் புத்திசாலிகள் என்றோ சொல்லும்போது அவனது கூற்றை எந்த அளவுக்கு நாம் மதிப்போமோ அந்த அளவிற்கு மட்டுமே மற்றவர்களின் மதக்கோட்பாடுகளை நாம் மதிக்க வேண்டும்".(pp 46-50)


*

ஆக, இந்தப் பதிவில் என் தனிக்கருத்துக்கள் ஏதுமில்லை; தேவையுமில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 


CHAPTER 2: THE GOD HYPOTHESIS

"The religion of one age is the literary entertainment of the next." -- RALPH WALDO EMERSON

*

கதைகளில் வரும் மிகவும் மோசமான பாத்திரப்படைப்புகளையும் தாண்டியதாகவே பழைய ஏற்பாட்டின் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொறாமை, அதன் மீதான பெருமிதம்; சின்னத்தனமான (petty), நீதியற்ற, மன்னிக்காத, பழிவாங்கும், இனவாதியான, குழந்தை, சகோதரன், பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் கொல்லும், வீண்பெருமையடிக்கும், பெண்களை வெறுக்கும், தலைக்கனம் மிகுந்த, மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் கொள்ளும் மிக மோசமான ஒரு பாத்திரப் படைப்பு.(51)

*

தாமஸ் ஜெபர்சன்: மோசஸின் கடவுள் மிகவும் பயங்கரமான ஒரு பாத்திரம்(character): கொடூரமான, பழிவாங்கும், தன்னிஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும், நியாயமற்ற பாத்திரம்.(51)

*

கிறித்துவத்தில் பேசப்படும் தமதிரித்துவம் (Holy Trinity)ஒரு வேடிக்கையான தத்துவம். அதையும் தாண்டி கத்தோலிக்க கிறித்துவத்தில் நாலாவதாக மரியாளும் சேர்க்கப்படுகிறாள். அதனால் கடவுளே கூட இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறார். (55)

அதிலும்தான் எத்தனை விதவிதமான மரியாள்கள்: Our Lady of Fatima, Our Lady of Lourdes, Our Lady of Guadalupe, Our Lady of Medjugorje, Our Lady of of Akita, Our Lady of Zeitoun, Our Lady of Garabandal, Our Lady of Knock ... (அடடா! .. இதில நம்ம ஊரு பூண்டி மாதா, வேளாங்கண்ணி மாதா - இதெல்லாம் விட்டுப் போச்சு!!)

1981-ல் இரண்டாம் ஜாண் பால் என்ற போப்பாண்டவர் ஒரு கொலை முயற்சியில் குண்டடி பட்டு மயிரிழையில் தப்பினார்.( நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கு நடந்த மாதிரியேதான்!!) அதற்கு 'அன்னையின் கருணைக் கரங்கள் அந்த துப்பாக்கிக் குண்டை (விலகும்படி) வழிநடத்தியதாலேயே' அவர் தப்பித்ததாகக் கூறினார். அன்னையின் கரங்கள் அவருக்குக் காயம் ஏற்படாமலேயே இன்னும் கொஞ்சம் சரியாக 'வழிநடத்தியிருக்கலாமே'! (56)

*__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

GORE VIDAL: காட்டுமிராண்டிகளாக மனிதன் இருந்த காலத்தின் மத நூலான 'பழைய ஏற்பாட்'டிலிருந்து யூதமதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று மனித குலத்திற்கு எதிரான (anti-human religions) மதங்கள் பரிணமித்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் வானுலகத்தில் இருக்கும் இந்தக் கடவுளாலும், அவரை வழிபடும் ஆண்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். (58)

*

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தவரை மனிதர்களை ஏழு படிகளில் பிரிக்கலாம்: 

1. நூத்துக்கு நூறு நம்பிக்கையாளர்கள்.
2. நூத்துக்கு நூறைவிட சிறிதே குறைந்த நிலை: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது; ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
3. 50%க்கு மேல் .. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுளை நம்புவர்கள்.
4. சரியாக 50%. கடவுள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
5. <50%. முழுவதாக நம்பிக்கையில்லையெனினும், கடவுள் மறுப்பின் பக்கம் சாய்பவர்கள். 6. >0%. முழுவதாக மறுப்பதில்லை; ஆனால் கடவுள் பக்கம் சாய்வதில்லை.
7. கடவுள் இல்லையென்று முழுமையாக நம்புவர்கள். (73)

*

BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு. 

நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.


*__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

அடிக்கடி சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு: எப்படி என்பதை விளக்குவது விஞ்ஞானம்; ஏன் என்பதை விளக்குவது மெஞ்ஞானம் என்று.

விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விக்கு மதங்கள் பதில் சொல்லிவிடும் என்பது என்ன விதமான நம்பிக்கை?! 

ஆக்ஸ்போர்டில் Martin Rees என்ற விண்வெளிப் பயணி 'விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அனேகமாக மதங்கள்தான் அதற்குரிய பதில்களைத் தரவேண்டுமென்று சொல்லியிருந்தார்'. ஒருமுறை நானும் அதே ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்டபோது, அவர் இந்தக் கேள்விக்குரிய பதிலைத்தர நான் நமது மதகுருவைத்தான் அழைக்க வேண்டுமென்றார். விஞ்ஞானிகளுக்கே தெரியாத பதிலை இந்த மதக்குருக்கள் மட்டும் எப்படி தர முடியும்?

விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை. மனிதன் நடக்கவேண்டிய நல்வழி பற்றி சொல்வது விஞ்ஞானத்தின் கட்மையல்ல. மதங்களுக்கு உண்டென்கிறார்கள். அவைகளுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்பதாலேயே அவைகளுக்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது சரியா? அப்படியே கொடுப்பதாயின் எந்த மதத்திற்கு அந்தத் தகுதியைக் கொடுப்பது? பைபிளில் விபச்சாரம் செய்தவர்களோடு, ஓய்வு நாளில் (Sabbath day) விறகு பொறுக்கியவர்களையும், பெற்றோரிடம் மரியாதையில்லாமல் பேசியவர்களையும் ஒன்றாக்கி இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான மரண தண்டனை என்று சொல்லியிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்? எந்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது? (81)


*

அடுத்த பதிவில்:ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 


CHAPTER 2: THE GOD HYPOTHESIS
PART II

*

ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:


முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது Francis Galton. இவர் டார்வினின் (ஒன்றுவிட்ட!?) சகோதரர். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எல்லா கோயில்களிலும் அந்த நாட்டின் அரச குடும்பத்தினருக்காக மக்கள் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது வழக்கம். மற்ற சாதாரண மக்களுக்கு அவர்களின் உற்றார் உறவினர்கள் மட்டுமே வேண்டுவார்கள். அப்படியானால், அரச குடும்பத்தினர் மற்ற சாதாரணர்களை விடவும் திடகாத்திரமானவர்களாக, ஆரோக்கியத்தோடு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அப்படியேதும் இல்லை.

வேறு வேறு நிலங்களில் நின்றுகொண்டு அங்குள்ள பயிர்களுக்காகவும் ஜெபித்தார். ஆனால் அந்தப் பயிர்கள் ஜெபிக்கப்படாத பயிர்களை விடவும் அதிக விளைச்சல் எதுவும் தரவில்லை!


சமீபத்தில் 2006-ம் ஆண்டு ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. "Study of the therapeutic effects of intercessory prayer (STEP) in cardiac bypass patients". American Heart Journal151: 4, 2006, 934 - 42. நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள Templeton Foundation. 
விளையாட்டல்ல; இதற்காக செலவிடப்பட்ட காசு: 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!

மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே. (இந்த ரெண்டை வச்சே கடவுள் சரியான நோயாளியைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா என்ன!)வழிபாடு நடத்தியவர்கள் வேறு வேறு தொலைவில் உள்ள மாநிலங்களில் உள்ள நம்பிக்கையாளர்கள். 

நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும். முதலிரண்டு குழுவும் ஜெபத்தின் / தொழுகையின் தாக்கம் குறித்து அறிய. மூன்றாவது குழு ஜெபத்தால் ஏற்படக்கூடிய மன-உடல் பாதிப்புகளைக் கண்டு கொள்ள.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter 3: ARGUMENTS FOR GOD'S EXISTENCE (pp100 - 136)


Can omniscient God, who
Knows the future, find
The omnipotence to 
Change His future mind?

(என் முந்தைய பதிவொன்றில் இதை ஒட்டிய என் கேள்விகளை வைத்திருந்தேன்.)

*

எனது கல்லூரி இளங்கலை நண்பன் ஒருவன் மிகவும் கடவுள் நம்பிக்கையாளன். அவன் ஒரு முறை தன் தோழியோடு ஸ்காட் தீவு ஒன்றில் தங்கியிருக்கும்போது நள்ளிரவில் சாத்தானின் குரல் கேட்டு விழித்தார்களாம். அந்தக் குரல் எழுப்பிய பய்ங்கரத்தைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாதெனக் கூறினான். 
பின்பு ஒரு முறை விலங்கியல் நிபுணர்கள் சிலரோடு இருக்கும்போது நான் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிய போது அவர்கள் அதிரடியாகச் சிரித்து 'Manx shearwater' என்றார்கள். இந்தப் பெயருடைய பறவை ஒன்று இதுபோல் நாராசமான குரலெழுப்பக் கூடியது என்றும், அதனாலேயே அது 'Devil Bird' (பேய்ப் பறவை) என்று அழைக்கப் படுவதாகச் சொன்னார்கள்.

*

இதைப் போலவே நம்பிக்கையாளர்கள் பலரும் தங்களுக்குக் கடவுளின் 'தரிசனம்' கிடைத்ததாகக் கூறுவதுண்டு. எனக்கும் கூட அப்படி ஒரு "தரிசன அனுபவம்" என் இளவயதில் கிடைத்ததுண்டு. இன்னும் பசுமையாக அது மனதில் இருக்கிறது.


*

பீட்டர் (Peter Sutcliffe) என்ற ஒரு கொலைகாரன் தன் காதில் பெண்களைக் கொலை செய்யச் சொல்லி ஏசுவின் குரல் ஒலித்ததாலேயே தான் பெண்களைக் கொன்றதாகக் கூறினான். George Bush கடவுள் ஈராக் மீது படையெடுக்க தான் கடவுளால் ஏவப்பட்டதாகக் கூறித்தான் அப்போரைத் தொடங்கினார்.(pp112)Sam Harris என்பவர் தன் 'The End of Faith' என்ற தன் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: மிகுந்த நம்பிக்கையாளர்களை நாம் ('religious') மத நம்பிக்கையாளர்கள் என்கிறோம். அனால், அவர்களை mad, psychotic ,or delusional என்றே அழைக்க வேண்டும் .... 

மத நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்தி பிசகியவர்கள் அல்ல; ஆனல் அவர்களது அடிப்படை நம்பிக்கைகள் அறிவற்றவையே. (pp113)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மத்தேயுவும் லூக்காவும் தங்களது விவிலியங்களில் ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகையில் ஆளுக்கொரு விதமாக சொல்லியிருக்கிறார்கள். .. தாவீதின் குலத் தோன்றல் என்று எழுதப்பட்டிருப்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில், லூக்கா ஏசுவும் மரியாளும் பெத்லேகம் சென்றதாக எழுதியுள்ளார். உண்மையிலேயே தாவீது இருந்திருந்தாலும் அவர் ஏசுவின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவர். அவரது பிறப்பிடத்திற்குத்தான் அவரது வாரிசுகள் மக்கள் கணக்கெடுப்பிற்காக செல்ல வேண்டும் என்று எப்படி ரோமர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்? இதனாலேயே, Lane Fox தனது நூலான The Unauthorised Version-ல் லூக்காவின் கதை வரலாற்றுப்படி நடந்திருக்க முடியாததாக உள்ளது என்கிறார். (pp119)

*

Robert Gillooly ஏசு கதையில் வரும் - அவரது பிறப்பில் கீழ்த்திசையில் உதித்த விண்மீன், குழந்தை ஏசுவை ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள், அவர் வாழ்வில் ஏசு நடத்திய அதிசயங்கள், கொல்லப் பட்டது, உயிர்த்தெழுந்தது, பரலோகத்திற்கு எழுந்தருளியது - இவை எல்லாமே ஏற்கெனவே Mediterranean and New East regions-களில் இருந்துவந்த மதங்களில் இருந்துவந்த கதைகளே.

மத்தேயு், ஏசு தாவீதின் குடும்பத்தில் அவதரித்தவர், பெத்லேகமில் பிறந்தார் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கும், லூக்கா, ஏசுவை மற்ற சாதியினருக்கும் பொதுவாக்க நினைத்ததால் கன்னிப்பிறப்பும், ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள் கதையையும் இணைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நடுவில் எழுந்த பிரச்சனைகளே இந்த இருவரின் விவிலியங்களில் உள்ள வேற்றுமைகளுக்கான காரணம். ஆனாலும் இந்த வேற்றுமைகள் மிகத்தெளிவாக இருந்தாலும் அவைகளை நம்பிக்கையாளர்கள் கண்டு கொள்வதில்லை. 

எப்படி இவைகள் வேத வார்த்தைகள் என்று நம்பும் மக்கள் இது போன்ற வித்தியாசங்களைக் கண்டு கொள்வதில்லை? மத்தேயு ஏசுவிற்கும் தாவீதுக்கும் நடுவே 28 பரம்பரைகள் இருந்ததாகச் சொல்கிறார். லூக்காவோ 41 பரம்பரைகள் நடுவில் இருந்ததாகச் சொல்கிறார். இரண்டிலும் வரும் பெயர்கள் ஒத்திருக்கவுமில்லை. அதோடு ஏசு உண்மையிலேயே கன்னித்தாயின் மூலமாகப் பிறந்திருந்தால் அவரது தந்த ஜோசப்பின் பரம்பரை தேவையற்றதாகி விடுகிறதே! (pp120)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

புதிய ஏற்பாட்டின் 4 விவிலியங்களும் ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு விவிலியங்களுக்கும் மேலானவைகளிலிருந்து (தாம்ஸ், பீட்டர், நிக்கோடீமஸ், பிலிப். பார்த்தலோமியோ, மரிய மக்தலேனாள் போன்றோரின் விவிலியங்களிலிருந்து..)குத்து மதிப்பாக (arbitrarily) தெரிந்தெடுக்கப்பட்டவையே.(pp121)

*

மொழிபெயர்ப்புகளினால் ஏற்படும் பல மாற்றங்களுக்கு சில உதாரணங்களைத் தருகிறார்:
ஜோசப் தச்சு வேலை செய்தவர் என்று சொல்லப்படிகிறது. tekton என்ற க்ரீக் சொல்லுக்கு அந்தப் பொருளுண்டு.இந்த சொல்அராமிக் மொழியின் naggar என்ற சொல்லின் மொழியாக்கம். ஆனால் இந்த அராமிக் சொல்லுக்கு தச்சன் என்ற பொருளோடு, படித்தவன் என்ற பொருளும் உண்டு.

அடுத்து, ஹீப்ரு மொழியில் almah - இளம்பெண் - என்ற சொல்லே க்ரீக்கில் parthenos கன்னிப்பெண் என்று மொழி பெயர்க்கப்பட்டு ஏசுவின் பிறப்பு ஒரு கன்னித்தாயிடம் என்பதாக மாறியுள்ளது.

விவிலியங்களில் உள்ள இந்த மொழிபெயர்ப்பு வினோதங்களுக்குப் போட்டியாக குரானில் ஒரு வேடிக்கையான மொழி பெயர்ப்பு நடந்துள்ளது. Why I am not a muslim? என்ற நூலை எழுதிய Ibn Warraq தன் கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது: மார்க்கத்திற்காக தன் உயிரைக் கொடுக்கும் மதத் தியாகிகளுக்கு 72 "கன்னியர்கள்" சுவனத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது தவறு. ஏனெனில், கன்னியர்கள் என்பது ஒரிஜினல் சொல்லின் தவறான மொழியாக்கம்; உண்மையில் அது - white raisins of crystal clarity - அதாவது 72 நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்பதாகும்! இந்த உண்மை மட்டும் எல்லாருக்கும் தெரிந்திருந்தால் எத்தனை எத்தனை மனித வெடி குண்டுகள் வெடிப்பு தடுக்கப்பட்டு, எத்தனை எத்தனை மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்க முடியும்? (pp123) __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

BERTRAND RUSSEL: பெரும் விஞ்ஞானிகள் பலரும் கிறித்துவ மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். ஆனால் தங்கள் வருமானம் தடைபட்டுப் போய்விடுமே என்பதால் பலரும் அந்த உண்மையை மறைத்துவிடுகிறார்கள். (pp123)

*

Nobel prize-winning Scientific Christians பற்றியான ஒரே ஒரு வலை மனையில் (web site) ஆறே ஆறு விஞ்ஞானிகளின் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்களில்லை! மீதி இரு்வரில் ஒருவர் சமூகக்காரணங்களுக்காக மட்டும் கோவிலுக்குச் செல்பவர் என்பது எனக்குத் தெரியும். (pp126)

அமெரிக்க மக்களை விடவும் அமெரிக்க விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையற்றவர்களே. .. and the most distinguished scientists are the least religious of all. (pp127)

*

Results of Paul Bell's meta-analysis in Mensa Magazine in 2002: படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அட! இந்தக் கண்டுபிடிப்பு நல்லா இருக்கே! (pp129)

*__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

CHAPTER 4: WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD


நூலின் இந்தப் பகுதியில் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், அதன் மறுப்பாக நம்பிக்கையாளர்கள் சொல்லும் intelligent design - ID - (திறன் படைத்த படைப்பமைப்பு என்று மொழிபெயர்த்துக் கொள்வோமா?)என்பதனையும் ஒப்பிட்டு டாக்கின்ஸ் விவாதிக்கிறார். அறிவியலும்,பரிணாமக் கொள்கைகளும், இயற்பியலுமாக இப்பகுதி கொஞ்சம் சிக்கலான பகுதியாக உள்ளது. இதைத் தமிழ்ப்படுத்துவதிலும், விளக்கங்கள் சொல்வதிலும் நிறைய பிரச்சனைகள் என்பதால் வெகு முக்கியமானவைகளை மட்டுமே இங்கே தருவதாக உத்தேசம். 

ஒளிச்சேர்க்கையில் 72 நுதிப் பொருட்களின் வெவ்வேறு வித மாற்றங்கள் நடைபெறுகின்றன. இதெல்லாம் (பரிணாமம் சொல்லும் chance (தற்செயல்)களால் நடந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு டாக்கின்ஸ் சொல்லும் பதில்: Design is not the only alternative to chance;Natural Selection is a better alternative. It is the only workable solution that has ever been suggested. (pp146-147)

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திலும் ஏதேனும் ஒரு இடைவெளி (gap in knowledge) கிடைத்தால், அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.

பென் (Penn), டெல்லர்(Teller) இரு பெரும் மாஜிக் நிபுணர்கள். ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று அடையாளமிடப்பட்ட நிஜ குண்டுகளால் ஒருவரையொருவரை சுட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த நிஜ குண்டுகளை அவர்களால் தங்கள் பற்களால் கடித்து நிறுத்திக் காண்பிப்பார்கள். துப்பாக்கிகளில் நன்கு பரிச்சயமானவர்கள் அவர்களுக்கு அருகே இருந்து் உன்னிப்பாகக் கவனித்தாலும் இது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அதனால்,உடனே இது ஒரு miracle என்று கூறிவிட முடியுமா? நிச்சயமாக இதற்கு ஒரு விளக்கம் இருக்கும்;ஆனால் நமக்கு அது தெரியவில்லை; அவ்வளவே. அதைவிட்டு விட்டு இதற்கு அசாதாரணமான காரணம் சொல்வது அறிவுடைமையன்று. (pp155)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)

நான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.

பரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா? __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

நூலின் இந்தப் பகுதியில் கூறப்பட்டவைகளின் சாராம்சம்:

1. உலகின் பல்வேறு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களே அறிவியலுக்கும் மனிதன் அறிவாற்றலுக்கும் சவாலாக இருந்து வருகின்றன.

2. ஒரு கடிகாரத்தைச் செய்ய அறிவுள்ள ஒரு நிபுணர் தேவை, அதைப் போலவே ஒரு மனிதக் கண், பறவையின் சிறகு - இவைகளைச் செய்யவும் ஒரு 'நிபுணர்'(Designer) தேவைதானே?

3. அப்படி ஒரு Designer hypothesis-யை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் பிறகு அந்த டிசைனர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது போன்ற பதிலற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அறிவியல், ஒரு தூக்கி (crane)செயல்படுவது போல், மெல்ல மெல்ல இவைகளை விளக்க முடியும்.

4. இந்த 'டிசைனர் கருத்து' விளக்க முடியாததை டார்வினின் பரிணாமக் கொள்கைகளால் நன்கு விளக்க முடியும்.

5. உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.

6. அப்படிப்பட்ட ஒரு தீர்மானமான crane இயற்பியலுக்கு இல்லாவிடினும், இப்போது இருக்கும் அதிகத் திறமற்ற cranes மற்ற 'டிசைனர் கருத்தை' விடவும் மேலானவையே.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter V. THE ROOTS OF RELIGION

*
நாமும் டார்வினியனின் பரிணாமக் கொள்கைகளின் இறுதிப்படைப்பே என்பதன் மூலம், நாம் ஏன் அல்லது எந்த அழுத்தங்களுக்கு உட்பட்டு, (natural selection) இயற்கையின் தேர்வின் உந்துதலால் இந்த மதம் என்பது எப்படி ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

*
இப்பகுதியில், டார்வினின் கொள்கைப்படி எப்படி மதங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்பதெல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. Direct Advantages of Religion; Group Selection, Religion as a by-product of something else - போன்ற தலைப்புகள் இதில் வருபவையே. விட்டில் பூச்சிகள் விளக்கொளியில் விழுவது எதற்கு? என்பது போன்றவைகளும், மீமீ-களும் ..., genes, DNA, ... இன்னும் பல. 

*
மக்களுக்குள்ளே இருக்கும் மாறு்பட்ட இனச்சேர்க்கை ஈர்ப்பு போலவே, மத நம்பிக்கைகள் மக்க்ளுக்குள்ளே இருக்கும் ஒரு பரவலான விஷயம். ஆயினும், இரு வித நம்பிக்கைகளுமே பலவித மாறுபட்ட விஷயங்களுக்கு உட்பட்டதாயிருக்கும்.

*
மத நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது நம்பிக்கை மன அழுத்தத்தால் ஏற்படும் பல வாழ்வுச் சிக்கல்களிடமிருந்து விடுபட உதவுகின்றது.

*
George Bernard Shaw: ஒரு மத நம்பிக்கையற்றவனை விடவும் மத நம்பிக்கையுள்ளவன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறானென்றால், அது ஒரு குடிகாரன் சாதாரணமாக இருப்பவனை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறானென்று பொருள்.

*
கண்முன்னால் தெரிந்த சில மதத்தொடர்பான செயல்கள், ஆச்சரியங்கள் எல்லாமே மனித மூளையின் (temporal lobe epilepsy) பிறழ்வே.

*


நூலின் இந்தப் பகுதியே டார்வினின் கோட்பாடே இயற்கையின் தேர்தல் விதிகளில் (Natural Selection) தேவையற்றவைகளுக்கு இடமேயில்லை என்ற தொடர் விதியை வலியுறுத்தும். அப்படியானால் மதங்களால் ஏதோ ஒரு நன்மை இருப்பதால்தான் அது இத்துணை காலமும் இருந்து வந்துள்ளது. மதம் எப்படியோ எதனோ ஒன்றின் பகுதிப் பொருளாக (by-product) இருந்து வந்துள்ளது. மதங்களினால் எந்த நேரடிப் பயனுமின்றி இருப்பினும், அதன்பகுதிப் பொருள் ஏதேனும் ஒரு பயனோடு இருக்க வேண்டும்.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

டாக்கின்ஸ் இந்த நிலையை விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு விளக்குகிறார். வான்வழி விளக்குகளோடு பலகாலமாய் பழகிய விட்டில் பூச்சிகள் சாதாரண காலங்களில் இன்றும் அந்த விளக்கொளிகோடுகளோதான் தங்களது இன்றைய இடமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. இருப்பினும் நாம் காணும் சூழலில் அவைகள் நம் முன் உள்ள விளக்கொளியைப் புரிந்து கொள்ளாது, ஈர்க்கப் பட்டு மாய்ந்து விடுகின்றன.

இவைகள் ஒன்றும் தற்கொலைகளல்ல; அவைகள் எல்லாமே அவைகள் உடம்பிலுள்ள காந்த சக்தியின் தவறுதலான வழிகாட்டல்கள் ஆகும். (It never was right to call it suicide. It is misfiring by-product of a normally useful compass.)

*

விளக்கில் விழுந்து சாகும் இந்தப் பூச்சிகளைப் போலவே, ஆயிரக்கணக்கான மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்காகவே சாகிறார்கள், சாகடிக்கிறார்கள். அதைப் பார்த்து ஆச்சரியப் படுவதோடு தவறான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டுள்ளோம். 

*

மதங்கள் மற்றொன்றின் பகுதிப் பொருள் என்றால் எதனுடைய பகுதிப் பொருளாக இருக்க வேண்டும்? 

*

குழந்தைகள் மனது போல் Casabianca கதை போலவும், இன்னும் சில கதைகள் போலவும் சொல்லிச் சொல்லியே இளம் வயதில் நம் குழந்தைகள் எப்படி 'கீழ்ப்படிதலுள்ள" பிள்ளைகளாக இருக்க வேண்டுமெனச் சொல்லித் தருகிறோம். இயல்பிலேயே உள்ள அடிமைத்தனமான கீழ்ப்படிதலை (slavish gullibility) அவர்களிடம் ஊட்டி விடுகிறோம். குழந்தைகளும் அவைகளை அப்படியே எடுத்துக் கொள்கின்றன. 'முதலை இருக்கும் நீரில் விளையாடப் போகக் கூடாது என்பதற்கும், ஒரு ஆடு வெட்டி பலி கொடுக்கவில்லையென்றால் இந்த ஆண்டு மாரியாத்தா மழை தராது' என்ற இரண்டிற்கும் அந்தக் குழந்தைக்கு எப்படி வேற்றுமை காண முடியும்? இரண்டுமே மரியாதைக்குரிய ஒரே வழியிலிருந்துதானே வருகின்றன. __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஒரு வேடிக்கையான கதை:
Religion Explained என்ற நூலை எழுதிய Pascal Boyer Cameroon-ல் உள்ள Fang என்ற மக்களைப் பற்றி ஆராய்ந்தவர். அவரு ஒரு முறை தன் நண்பர்கள் குழாமில், எப்படி அவர்கள் மத்தியில் மந்திரவாதிகள் பல கேடுகளை விளைவிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு கிறித்துவ மதக்காரர், 'எப்படித்தான் இப்படி மூடத்தனமான விஷயங்களை மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களோ?' என்று வியந்த போது டாக்கின்ஸுக்கு நினைவுக்கு் வந்த சில விஷயங்கள்: 

* தகப்பன் இல்லாமல் கன்னிக்கு ஒரு குழந்தை பிறந்தது. நம்ம ஐயப்பன், ஆறுமுகம், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி ... 
* செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது ...
* செத்து மூணு நாள் கழிச்சி உயிரோடு வந்தது.
*** இப்படியாக .....

*
"பெரியவர்களை நம்புங்கள்". இது குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் ஒரு மதிப்பான வாதம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பயனற்ற ஒன்றாகலாம்.

*
கண்கள் பார்ப்பதற்கும், காதுகள் கேட்பதற்கும் என்பது போல் மூளை என்பதும் பல உறுப்புக்களின் ஒரு தொகுதி; இது, பல - specialist in data-processing needs. உறவுகளுக்கும், எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கவும் ... இப்படி பல காரியங்களுக்கானது. 

*
Paul Bloom, ஒரு மனோதத்துவர்; இவர் குழந்தைகள் "இரட்டை மனக்காரர்கள்" (dualistic mind) என்ற தத்துவக்காரர். 

மதத்தைக் கட்டிப் பிடிக்க வல்லது நம் மனது என்பாரிவர்..

நம் இரட்டை மனதால் நாம் 'ஆன்மா' என்பது நம்முடம்பில் தங்கியுள்ளது என்பதை நம்புவோம்.

*
ஒரு குழந்தை எந்த அடிப்படைக் குணங்களோடு வளர்கிறதோ, அதே குணங்களை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துச் செல்லும்.

*
அழியா பிறவி என்பது நம் ஆழ்ந்த மனத்தின் ஒரு வெளிப்பாடு.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Martin Luther: காரண காரியங்கள் மதங்களின் நேர் எதிரி. "காரணம் (reason) என்பது நம்பிக்கைக்கு நேர் எதிரானது. அவைகள் நம்பிக்கைக்கான ஆன்மாவுக்குரிய விஷயங்களில் நேர் எதிரி; கடவுளிடமிருந்து வரும் எல்லா விஷயங்களுக்கும் அவைகள் நேர் எதிர். ... ஒரு நல்ல கிறித்துவனாக இருக்க வேண்டியவன் தன் கண்களை இந்த காரணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வெண்டும். .. காரணங்கள் எல்லா கிறித்துவர்களாலும் அழித்துப் போட வேண்டிய விஷயம்.

*
Cargo cults என்பதிலிருந்து சில சான்றுகள் தருகிறார். அதில் ஒன்று John Frum என்ற ஒரு 'தேவமகனை"ப் பற்றியது. நடந்தது Tanna in New Hebries. அவருக்காக 19 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒருவரை அதைப் பற்றிக் கேட்ட போது, 'நீங்கள் இரண்டாயிரம் வருடங்களாகக் காத்திருக்கும்போது 19 வருஷம் என்பது பெரிதா?' என்று கேட்டிருக்கிறார். 

* இந்த வித cultகளைப் பற்றிப் பேசும் டாக்கின்ஸ் இதிலிருந்து மதங்கள் எப்படி ஆரம்பித்திருக்க முடியும் என்பதற்குரிய நான்கு காரணங்களைக் கூறுகிறார்:
1. இந்த வித குழு அமைப்புகள் (cults)மிக மிக வேகமாக வளரக்கூடியவை.
2. இக்குழுக்களின் ஆரம்ப கால விஷயங்கள் எப்போதுமே பின் தள்ளப் படக்கூடியவை.
3. இதுபோன்ற பல குழுக்கள் ஆரம்பிப்பதை எப்போதும் காண முடியும்.
4. இதைப் போன்றே எல்லாவித மதங்களும் ஆரம்பித்து, வளர்ந்து வந்தன என்பதைக் காண முடிகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter: 6 
THE ROOTS OF MORALITY: 
WHY ARE WE GOOD?ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:

இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமய்ங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே.

*

பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.சில மத நம்பிக்கையாளர்களுக்கு தங்கள் நம்பிக்கையோடு தொடர்பில்லாதவர்கள் மீது வெறுப்பு இருப்பதும் கண்கூடு.

*

பசி, பயம், பாலியல் ஈர்ப்புகள் - இவை எல்லாமே நாம் வாழவும், வாழ்க்கைப் பாதையில் தொடரவும் தோதுவான விஷயங்கள். ஆனால், ஒரு அனாதைக் குழந்தை அழுவதைக் கேட்கும்போதும், தனித்து விடப்பட்டு அல்லல்படும் ஒரு ஏழை விதவையைக் காணும்போதும், வலியில் அல்லல்படும் ஒரு விலங்கினைக் காணும்போதும் நம் மனத்துள் ஏற்படும் வேதனைக்குக் காரணம் என்ன? எங்கோ, நம் கண்ணில் நிச்சயம் படக்கூடாத, நாம் செய்யும் உதவிக்கு நன்றி சொல்லக்கூட முடியாத, சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?
நல்ல சமாரித்தனாக இருக்க வேண்டும் என்ற நினைவு எப்படி நம்மிடம் வருகிறது? 

*
வரலாற்றுக்கு முந்திய நம் முன்னோர்கள் தன் குழுவினரைப் பாதுகாத்து, அதே சமயத்தில் அடுத்த குழுவினரைப் பகைமையோடு பார்த்து, பொருது தங்கள் குழுவினரைக் காத்தார்கள். ஆனால் இப்போது நாமோ பெரும் நகரங்களில் வசிக்கும் பலரும் உறவற்ற, ஏனைய மக்களோடு இணைந்திருந்தும், இனி இவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏதுமில்லை என்று தெரிந்த மக்களிடமும் இணைந்த நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்கிறோமே – எப்படி இந்த நல்ல குணம் வந்தது?

*
இதுபோன்ற நல்ல பண்புகள் இந்த மதத்தினருக்கு மட்டுமே என்பது போலன்றி எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றோர்களுக்கும் நடுவில் பொதுவாக எங்கும் விரவி இருக்கிறது.
(இவ்விடத்தில் Marc Hauser, a Harvard Biologist கேள்வித்தாள் மூலம் செய்த ஒரு திறனாய்வு இப்புத்தகத்தில் மேற்கோளிடப்படுகிறது.)

*
Hauser-ன் திறனாய்வு மூலம், மத நம்பிக்கையாளர்கள் அவர்கள் மதக் கோட்பாட்டின் படி மத நம்பிக்கையற்றோரை விடவும் தங்களது நன்முறைக் கொள்கைகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பது இல்லை.

அதோடு அவரது திறனாய்வின் வாக்கெடுப்பின் புள்ளிவிவரத்தில் மத மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடுமின்றி தங்கள் விடைகளைத் தந்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், நம்மை நல்லவர்களாக வைத்திருக்கக் கடவுள் தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

*
ஐன்ஸ்டீன்: மக்கள் எல்லோருமே தண்டனைக்குப் பயந்தோ, அல்லது வெகுமதிக்கு ஆசைப்பட்டோ மட்டும் நல்லவர்களாக இருக்க முயற்சித்தால், அது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

*
தனிமனிதக் குற்றங்களை முன்னிறுத்தும் மதங்களை (ஆப்ரஹாமிய மதங்கள்?) நம்புபவர்கள் எப்போதும் தங்கள் மத நம்பிக்கைகள் மட்டுமே தங்களை மனிதநேயத்தில் முன்னிலைப் படுத்துகின்றது என்று நம்புகிறார்கள்.

*
நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள, சுய விழைவோடு தவறான காரியங்களில் இறங்காமலிருக்க கடவுளாலேயோ அல்லது வேறொன்றாலோ நமக்கொரு காவல்துறை – policing – தேவையா?

*
Steven Pinker கனடாவின் மோன்ரியாலில் 1960-ல் காவல்துறை ஒரு வேலை மறியல் நடத்திய போது நடந்தவைகளை விவரிக்கிறார்: காவல்துறை 10 மணிக்குத் தங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததும், 11.20க்கு முதல் வங்கிக்கொள்ளை; மதியத்திற்குள் எல்லா கடைகளும் மூடப்பட்டன; இரு கார்கள் தீவைப்பு; ஒரு காவல்துறையாளர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை; நாள் முடிவதற்குள் 6 வங்கிகளில் கொள்ளை; 12 தீவைப்புகள் --- இன்னும் பல.

கேள்விகள்: காவல் துறையினர் இல்லாமல் இருக்கட்டுமே .. ஏன் அவர்கள் இல்லையென்றதும் இத்தனை கட்டுப்பாடற்ற கலகங்கள்; ஏன் கடவுளின் பயம் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை?

கடவுளின் மேலுள்ள பயம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்கான ஒரு பதிலை இந்த நிகழ்வு பதில் கொடுக்கவில்லையா?

மதங்கள் வேண்டும் மனிதனை நல்வழிப்படுத்த என்று பலர் சொல்லும்போது அவர்கள் நிஜமாகச் சொல்வது – எங்களுக்குக் காவல்துறை மிகவும் தேவை!

*
சிறைகளின் உள்ளே இருப்பவரில் கடவுள் மறுப்பாளர்கள் மிகக் குறைவே.

*
கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது. 

அதோடு,
கடவுள் மறுப்பு இன்னொரு முக்கியமான விஷயங்களோடு ஒன்றிப் போகிறது; உயர் படிப்பு, புத்திக் கூர்மை, reflectiveness இவைகளோடு கடவுள் மறுப்பு ஒன்றிப் போவதால், குற்றம்புரியும் தன்மைகள் குறைகின்றன்.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Sam Harris என்பவர் Letter to a Christian Nation-ல் அமெரிக்க மக்களைப் பற்றி எழுதியது: 
ரிபப்ளிக்கன் கட்சி பெரும்பானமையான அமெரிக்க மாநிலங்கள் சிகப்பு மாநிலங்கள் – red states – என்றும், குடியரசுக் கட்சி பெரும்பான்மையான மாநிலங்கள் நீல மாநிலங்கள் – blue states – என்று அழைக்கப்படும். இதில் ரிபப்ளிக்கன் கட்சி ஆட்கள் பெரும்பாலும் அடிப்படைக் கிறித்துவர்கள் (conservative Christians). 

• குற்றங்கள் குறைவாக நடக்கும் 26 நகரங்களில் 62 விழுக்காடு நகரங்கள் ‘நீலம்’.
• குற்றங்கள் அதிகமாக நடக்கும் 25 நகரங்களில் 76 விழுக்காடு நகரங்கள் ‘சிகப்பு’.
• அதிலும் அங்கே மிகவும் மோசமான குற்றங்கள் நடக்கும் என்று கருதப்படும் 5 நகரங்கள் ‘பக்திப் பிரவாகம்’ மிகுந்த டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ளன.
• மிகவும் அதிகமான பூட்டுடைப்புக் குற்றங்கள் நடக்கும் 12 மாநிலங்களுமே ‘சிகப்பு’தான். 
• 29 மாநிலங்களில் நடக்கும் திருட்டுக் குற்றங்களில் 24 மாநிலங்கள் ‘சிகப்பு’.
• கொலைக்குற்றங்கள் அதிகமாக நடக்கும் 22 மாநிலங்களில் 17 மாநிலங்கள் ‘சிகப்பு’. 


*

இது மட்டுமல்ல. மேலெழுந்தவாரியாக இல்லாமல், முழுவதுமாக ஆராய்ச்சி செய்து மேலே சொன்னவைகளுக்கு முழு ஆதாரம் கிடைக்கும் வகையில் Gregory S. Paul என்பவர் Journal of Religion and Society (2005)-ல் 17 வளர்ந்த நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகமான மத நம்பிக்கையும் கடவுளை முழுவதுமாக நம்பும் நாடுகளில் அதிக அளவிலான மனிதக் கொலைகள், இளமையில் இறப்பு, பாலின வியாதிகள், இளம்வயதில் கர்ப்பமாகுதல், கருக்கலைத்தல் (homicide, juvenile and early mortality, STD infection rates, teen pregnancy, and abortion in the prosperous democracies) மிக அதிகமாக உள்ளன. 

இந்த ஆராய்ச்சி பற்றி Dan Dennett என்பவர் Breaking the Spell என்ற நூலில் சொல்வதில் முக்கியமான ஒன்று: கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். ஏனெனில் பல மதக் குழுக்கள் தாங்கள் காலங்காலமாய் நம்புவது போல் அதுபோன்ற ஒரு நிலைகண்டால் அதை அறிவியல் மூலம் உலகுக்கே அறிவித்து விட மாட்டார்களா?__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter 7.

THE ‘GOOD’ BOOK AND THE CHANGING MORAL ZEITGEIST.

உலகத்தில் அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது; ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. – Sean O’Casey

*

வேதப் புத்தகங்கள் இரு வழியில் நமக்கு நன்னெறி காட்ட முடியும். ஒன்று நேரடியான வழிகாட்டுதல்களால். இன்னொன்று கடவுளே நமக்கு ஒரு வழிகாட்டியாய் இருந்தும் வழிகாட்ட முடியும்.

*
9 நூற்றாண்டுகளாய் பலரால் எழுதப்பட்ட, திரிக்கப்பட்ட, தொடர்பற்ற நூலே பைபிள். (268)

*
bishop John Shelby Spong தான் எழுதிய The Sins of Scripture-ல் சொல்லியபடி தங்களுடைய வாழ்வின் நெறிகளை பைபிள் மூலமாக நடத்த நினைப்பவர்கள் ஒன்று முழுமையாக பைபிளைப் படித்திருக்க மாட்டார்கள்; அல்லது அதனை முழுவதுமாகப் புரிந்திருக்க மாட்டார்கள். (269)

*
கடவுள் மிகவும் மலிந்த ஒரு பார்வையை மனிதர்கள் மேல் வைத்திருந்தார் போலும். ஒரே ஒரு குடும்பத்தை – நோவாவின் குடும்பத்தை மட்டும் – காக்க நினைத்து, மற்ற பாவப்பட்ட மக்கள் எல்லோரையும், குழந்தைகளையும் அதோடு எந்தப் பாவமும் பண்ணாத மிருகங்களையும் சேர்த்து கூண்டோடு ஒழிக்கிறார்.இதெல்லாமே 'சின்னப் பிள்ளைகள் கதை போல் இருக்கிறதல்லவா?)

*
தனி மனிதனின் ஒழுக்கங்கள் கூட கடவுளை மிகவும் பாதிக்கும் போலும். ஒரு தெய்வீகக் கடவுள், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்த அந்தக் கடவுள், ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தின் மீது இவ்வளவு பெரிய அக்கறை கொள்ள வேண்டுமா? (270)

*
நோவாவைப் போலவே ஆபிரஹாமின் மருமகன் லோத் குடும்பத்தைக் காப்பாற்ற இரு ஆண் தேவதூதர்களை (angels; அதுசரி! ஆப்ரஹாமிய மதங்களில் தேவதைகளே கிடையாதோ? gender bias ... ?) அனுப்பி வைக்கிறார். ஆனால் லோத்தின் ஊர்க்காரர்களுக்கு அந்த தேவதூதர்களை 'know' செய்ய வேண்டுமென்று ஆவல். இதில் know என்பது அந்த 'ஆண்களைப் புணர்வதற்கு' என்ற கருத்தில்தான் வந்துள்ளது. Genesis19:5) ஆப்ரஹாமிய வேத நூல்களில் விஷயம் இப்படி இருக்க AIDS-க்கு எதிராக கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துங்கள் என்றாலோ, gay marriages போன்றவற்றிற்கோ இந்த மூன்று மதத்தினரும் 'கொடி பிடிப்பது' கொஞ்சம் வேடிக்கைதான்!

ஆனால் மிகவும் 'புத்திசாலித்தனமாக' அந்த தேவதூதர்களைக் காப்பாற்ற ஆண்களையே அறியாத தன் இரு மகள்களையும் அவர்களிடம் 'பண்டமாற்று' செய்துவிடுகிறார்.(Genesis 19:7-8)நல்ல வேளையாக அந்த தேவதூதர்கள் தங்களைப் பிடிக்க வந்த கிராமத்துக்காரர்களை குருடாக்கி விடுகின்றனர். அதோடு லோத்தை அந்த ஊரை விட்டு தன் கால்நடை, குடும்பத்தாரோடு தப்பி ஓடவைக்கின்றனர்; அதிலும் அந்தப் பாவப்பட்ட லோத்தின் மனைவி தப்பி ஓடும்போது பின்னால் நடந்த அழிவுக்காட்சியைக் காண திரும்பிப் பார்த்ததால் - மற்றவர்களின் குற்றங்களோடு ஒப்பிடும்போது, மிகச்சின்ன தவறு செய்திருந்தாலும் - சிலையாகி விடுகிறாள்.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

கதை மேலும் தொடர்கிறது. மனைவியை இழந்த லோத் தன் மகள்களோடு ஒரு குகையில் தங்கியுள்ளான். ஆண்களைக் காணாத மகள்கள் இருவரும் தன் தந்தைக்கு மது வெறியேற்றி அவரோடு இருவரும் புணர்கிறார்கள்; கர்ப்பமடையவும் செய்கிறார்கள். (Genesis 19: 31-36)
//If this dysfunctional family was the best Sodom had to offer by way of moral, some might begin to feel a certain sympathy with God and his judicial brimstone.// இப்படித்தான் தங்கள் குடும்பங்களை சோடோம்காரர்கள் உருவாக்க வேண்டுமென கடவுள் நினைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகளால் அந்தக்கடவுளைப் பார்க்க நமக்கு பாவமாகத் தான் தோன்றுகிறது.

இதுபோல் இன்னொரு கதையும் உண்டு. (Judges 19:23-24; 19:25-26)லெவித்தியர் என்ற ஒரு குரு தன் மகளோடும் தன் வைப்பாட்டியோடும் அடுத்த ஊருக்குச் செல்லும்போதும், ஊர்க்காரர்கள் முன் கதை போலவே தேவதூதர்களைத் தேடி வருகிறார்கள். லெவித் முன் கதை போலவே தன் மகள், வைப்பாட்டி இருவரையும் - //.. humble ye them, and do with them what seemeth good unto you; but unto this man do not so vile a thing'// (Judges 19: 23-24) அடக் கடவுளே!

*
மேலே சொன்ன லோத்தின் மாமா தான் ஆபிரஹாம்/இப்ராஹீம்; யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்த்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவிமேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார். இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல!அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (Genesis 12: 18-19)

ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் - Abimelech, the King of Gerar - ஆபிரஹாம் தன் பழைய கதையை எடுத்து விடுகிறார். (Genesis 20; 2-5)அந்த மன்னனும் சாராவைத் திருமணம் செய்து, மீண்டும் அரசர் புரிந்து விரட்டி விட ... கதை இப்படியே போகிறது. (இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!) 

*

தொடரும் ஆபிரஹாமின் கதையில் வரும் இன்னுமொரு நிகழ்வு இதுவரை நடந்ததையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாயுள்ளது. கடவுளுக்கு திடீரென ஒரு ஆசை. ஆபிரஹாமிடம் உன் மகனை எனக்கு பலியிடு என்கிறார். ஆபிரஹாமும் ஐசக் (கிறித்துவக் கதை), / இஸ்மாயில் (இஸ்லாமியக் கதை) என்ற தன் மகனைப் பலியிடத் தயாராகிறார். ஆனால் கடைசி வினாடியில் கடவுள் மனமிறங்கி விடுகிறார்! God was only joking after all, 'tempting' Abraham and testing his faith!!!!!! இப்போதைய காலத்தில் உள்ளவர் எப்படி இது அந்தக் குழந்தையைப் பாதிக்கும் என்று யோசிப்பார். ந்யூரம்பர்க் (Nuremberg)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 'நான் எனக்கிட்ட் ஆணையை மட்டும் நிறைவேற்றினேன்' என்று சொல்வதுபோல்தான் இது உள்ளது. மூன்று ஒரு-கடவுள்-மதங்களின் அடிப்படைக் கருத்து இப்படியுள்ளது!__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

நாம் நமது ஒழுக்கங்களை நமது வேத நூல்களிலிருந்து பெற முடியாதென்பதற்காகவே இந்தக் கதைகளை இங்கே கொடுத்துள்ளேன்.

*
இன்னொரு கதை. (Judges chapter 11) இது Jephthah என்ற மன்னன் Ammonites என்ற தன் விரோதிகளோடு போரிடப் போகும்போது கடவுளிடம் வேண்டுகிறான். தான் வெற்றி பெற்று விட்டால் தன் கோட்டைக்குப் போகும்போது யார் முதலில் வெளிவந்து தன்னை வரவேற்கிறார்களோ அவர்களைச் சமைத்து உணவாக்கித் தருகிறேன் என்று வாக்குத் தருகிறான். வெற்றி பெற்று வரும்போது அவனது ஒரே மகள் எதிர் வருகிறாள். அவனும் அவளை சமைத்துக் கடவுளுக்குப் படைக்கிறான். ஏனோ இந்த தடவை கடவுள் வந்து Jephthah மன்னனது மகளைக் காக்கவில்லை!

*
பிற கடவுள்களை வணங்கும்போது இந்த ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் மனிதர்களுக்கு வரும் பாலியல் பொறாமை, கோபம் மாதிரியே உள்ளது.

*
மோசஸ்/ மூஸா கடவுளைச் சினாய் மலையில் 'பார்க்க'ச் சென்ற போது அவரது மக்களான இஸ்ரவேலர்கள் அடுத்த கடவுளைக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பத்துக் கட்டளைகளை எடுத்துவரும் மோசஸுக்குக் கோபத்தில் அந்தக் கட்டளைகளைக் கோபத்தில் கீழே போட்டு விடுகிறார். (ஆனாலும் கடவுள் அதை replace செய்துவிடுகிறார்!) இதற்குப் பிறகு கடவுள் அந்த மக்களுக்குப் பெரும் தண்டனை தருகிறார். மூவாயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட, மீதி மக்களுக்கு ப்ளேக் நோய் வருகிறது. கடவுள் என்ன வைரஸ் அனுப்பினாரோ தெரியவில்லை - சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், கோழிக்காய்ச்சல் ...ம்ம் ..ம் .. ??? __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

மோசஸ் Midianites என்பவர்கள் மேல் படையெடுக்கும்படி கடவுள் ஆணையிடுகிறார். போர் முடிந்த பிறகு மோசஸ் தன் படையாட்கள் எதிரிகளின் குழந்தைகளையும், பெண்களையும் அழிக்காமல் விட்டிருப்பதைப் பார்த்து மிகுந்த கோபமடைந்து, எல்லா ஆண் குழந்தைகளைக் கொல்லவும், திருமணமான பெண்களைக் கொல்லவும், கல்யாணமாகாத பெண்களை அவரது வீரர்கள் அனுபவிக்கவும் கட்டளையிடுகிறார். (Numbers 31:18) இந்த மோசஸ் நமக்கு வழிகாட்டும் தூதரா?

*
அடுத்த கடவுளை வணங்குவதால் ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் பற்றி பழைய ஏற்பாட்டில் மீண்டும் மீண்டும் வருகிறது.

*

பால் (Baal) என்ற 'எதிர்க்கடவுளை' வணங்கும் மக்களை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட மோசஸுக்கு ஆபிரஹாமியக் கடவுள் ஆணையிடுகிறார். (Numbers 25)

*

தாலிபான் அல்லது அமெரிக்க கிறித்துவ அடிப்படைவாதிகள் தவிர வேறு யாரும் இப்படி இந்த தேவ நூல்களில் சொல்லப்படும் நீதிகளை மேற்கொள்வதில்லை.

*

உங்கள் பிள்ளைகளை இது போன்ற நீதிகளைப் பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இப்புத்தகங்களை நாம் அவர்களிடம் தருவோமா?

*
பழைய ஏற்பாட்டில் பல குற்றங்களுக்கு மரணமே தண்டனையாகச் சொல்லப்பட்டுள்ளது. (Where is that AMNESTY INTERNATIONAL??!)ஆனால் அதையெல்லாம் விடவும் (sabbath) ஓய்வு நாளன்று வேலை செய்பவர்களுக்கும் அதே கொலைத்தண்டனைதான். (Numbers 15)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஒருவேளை புதிய ஏற்பாடு பரவாயில்லையோ?

ஏசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பது போல் பேசியதும், ஓய்வு நாள் பற்றிக் கூறியதும் பழைய ஏற்பாட்டிலிருந்து மிகவும் மாறுபட்டதுதான். ஆனாலும் அவர் குடும்ப உறவுகளைப் பற்றிக் கூறியது மிகவும் கடுமையானது. எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுத்து ஒதுக்கி விட்டு தன்னிடம் வரும்படி தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார்.

*

Christian focus is overwhelmingly on sin sin sin sin sin sin sin.

*
ஜோஷுவா தங்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட Promised Land-யை வெற்றி பெற்ற கதையை வைத்து குழந்தைகளுக்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. அந்தக் கதையே அப்படியே சொல்லி குழந்தைகளை ஓட்டு போட வைத்தார்கள். அதன்பின் இன்னொரு குழந்தை குழுவிடம் கதைப் பெயர்களை, நாட்டினை மாற்றி வைத்து கதைசொல்லி ஓட்டிடச் சொன்னார்கள். நிஜக்கதைக்கு ஜோஷுவாவிற்கு ஓட்டு. ஆனால் மாற்றிச் சொன்ன கதைக்கு மாற்றிய ஓட்டு.
முதல் கதையில் ஜோஷுவாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், மாறிய கதையில் நியாயமானவைகளுக்கு ஓட்டும் என பிரிந்தன.

*
நமது நாட்டில் நடந்த மதப்பிரச்சனைகள் பற்றி சல்மான் ரஷ்தி தன் கட்டுரை ஒன்றில் எழுதியது:
What is there to respect in any of this, or in any of the crimes now being committed almost daily around the world in religion’s dreaded name? How well, with what fatal results, religion erects totems, and how willing we are to kill for them! And when we’ve done it often enough, the deadening of affect the results makes it easier to do it again.

So Indian’s problem turns out to be the world’s problem,. What happened in India has happened in God’s name.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

The problem’s name is God.

*
மதங்கள் தவறு ஏதும் நேரடியாகச் செய்யாவிட்டாலும், அவைகள் தனிக் குழுமங்களை ஏற்படுத்தி அவைகள் ஒரு தீமைகளை உருவாக்கும் அமைப்பாகின்றன.

*
ஆபிரஹாம் ஐசக்கைப் பலியிட்டிருந்தால் இன்றைய நிலையில் அவர் மீது முதல்தர கொலைக்குற்றமல்லவா சாட்டப்பட்டிருக்க வேண்டும்.

*
கடவுள் மறுப்பு யாரையும் கெடுதல் செய்ய தூண்டுகிறது என்பதற்கு எவ்வித சிறு ஆதாரம்கூட கிடையாது.

*
கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter 8:

WHAT'S WRONG WITH RELIGION?
WHY BE SO HOSTILE?


========================================

மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது. 

புலப்படாத அந்த மனிதனும் நாம் செய்யக் கூடாத பத்து கற்பனைகளை ஒரு நிரலாகத் தொகுத்து வைத்துள்ளார். அப்படி வி்லக்கப்பட்ட அந்தப் பத்துக் கட்டளைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அவர் ஒரு 'தனியிடம்' ஒன்றை வைத்துள்ளார்; அக்கினி மிகுந்து சூடும் புகையும் நிறைந்த, தவறுகள் செய்யும் நம்மையெல்லாம் சித்திரவதை செய்யும் அந்த இடத்திற்கு அனுப்பி, காலமெல்லாம் நாம் அங்கே கஷ்டப்படவும், எரிந்து வேதனைப் படவும், துக்கத்திலும் துயரத்திலும் நாம் முடிவில்லாத காலம் வரை அழுது துயருறவும் அனுப்பி விடுவார். .... ஆனால், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்!:) (பக்:317)

.................................ஜார்ஜ் கார்லின்

===============================================ஏன் இவ்வளவு வேகமாக மதங்களை நீங்கள் வெறுக்க வேண்டும்? இதுவே ஒருவகை அடிப்படை நாத்திகம்தானே என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.(319)

*
எந்த வேதப் புத்தகத்தையும் படித்துவிட்டு எந்தக் கேள்வியுமில்லாமல் அப்படியே நம்புவதில்லை. மாறாக, எனக்குப் பிடித்த பரிணாமக் கொள்கையை நான் எந்த வேத நூலையும் வாசித்து விட்டு நம்பாமல், உண்மையான அறிவியல் சான்றுகளைப் படித்துவிட்டு அவைகளை நம்புகிறேன்.(319)

*
சான்றுகளைப் படித்துவிட்டு அதனால் பரிணாமக் கொள்கைகளை நம்புகிறேன். நாளையே புதிய சான்று ஒன்று வந்து பரிணாமத்தை எதிர்த்தால் அப்படியே பரிணாமத்தைத் தூக்கி எறிந்து விடுவோம்.இதை அப்படியே ஒரு மத அடிப்படைவாதியால் சொல்ல முடியுமா?(320)

*
எனக்கு மத அடிப்படைத்தன்மை பிடிக்கவேயில்லை; ஏனெனில் அது அறிவியலை மிகவும் துச்சமாக்குகின்றது. நம் மனதை மாற்றவோ இன்னும் புதிதாக நிறைய தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமோ இன்றி அவர்கள் இருப்பதற்கு அந்த அடிப்படைவாதமே காரணம்.(321)

*
மத மறுப்புக்குத்தான் பழைய ஏற்பாட்டில் பெரிய தண்டனை சொல்லப்பட்டிருக்கிறது. இன்றும் கூட பாகிஸ்தானின் சட்டமான Section 295-C -ல் மத மறுப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.(324)

*
ஆப்கானிஸ்தானத்தில் 2006-ல் அப்துல் ரஹ்மானுக்கு கிறித்துவத்திற்கு மாறியதற்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
இன்றும் 'விடுதலையாக்கப்பட்ட' ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மறுப்பிற்கு உள்ள தண்டனை மரணதண்டனைதான்.(326) 

இப்படியெல்லாம் மத 'ஈமானை" காத்து ரட்சிக்கணுமா? நீங்கள் 'காக்கவேண்டிய' கடவுள் அவ்வளவு பாவப்பட்ட பலஹீனமானவரா?! __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

ஆப்கானிஸ்தானத்தில் ஒருபால் சேர்க்கைக்கு (homosexuality) கொடுக்கப்படும் தண்டனை உயிரோடு புதைக்கப்படுவதாகும்.
இங்கிலாந்திலும் ஒன்றும் லேசான தண்டனை இல்லை. Alan Turing என்ற கணினியின் முதல் முன்னோடிகளில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை (1967) அவரை தற்கொலைக்குத் தள்ளியது.(327)

*
நம்பிக்கையின் பாற்பட்ட 'குணவான்களுக்கு' அடுத்தவன் என்ன செய்கிறான்; அவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று பார்ப்பதில்தான் அத்துணை விருப்பம்.(327)

*
மனிதக் கரு, மத நம்பிக்கைகளின்படி ஒரு முழு உயிர். ஆகவே கருக்கலைப்பு பெரிய 'பாவம்'. (329)

*
(கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களை மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட கதைகளை இப்பகுதியில் விவரிக்கிறார்.)

*

ஈரானிலும், செளதியிலும் உள்ள சட்டங்களின்படி எந்த ஒரு பெண்ணும் தனியாக வீட்டை விட்டுச் செல்லக் கூடாது - ஆனால் ஒரு ஆண் கைக்குழந்தையுடன் (!) அவ்வாறு செல்லலாம். இதை வைத்து Johann Hari என்பவர் தினசரியில் எழுதியது: இஸ்லாமிய ஜிகாதிஸ்டுகளை அடக்க அவர்களது பெண்கள் போராடுவதே சரியாக இருக்கும்.(341)

*
லண்டன் வெடிகுண்டு நிகழ்ச்சிக்குப் பிறகு, Muriel Gray தினசரியில் எழுதியது: இந்தத் துயரமான, பயங்கரமான, முட்டாள்தனமான வெடி குண்டுகளுக்குக் காரணம் மதம் என்பதை மறைத்துவிட்டு, ... அரசும் ஊடகங்களும் இவைகளுக்குக் காரணம் மதங்கள் அல்ல என்பதுபோல் நடந்து கொண்டன. 

இதற்குக் காரணம் முழுமையான கேள்விகளற்ற, தொட்டிலிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளே காரணம். (344)__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

இந்த பயங்கரவாதங்களுக்கு ஒரு சிறு உதாரணம். பாலஸ்தீன தற்கொலைப்படையினரில் ஒருவன் பிடிக்கப்பட்ட போது அவன் (Nasra Hassan)2001-ல் The New Yorker என்ற தினசரியில் கொடுத்த பேட்டி: 

"உன் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?"

"எங்கள் ஆத்மாவின் இழுப்பு மேல் நோக்கியே இருக்கும். .."

"உங்களின் முயற்சி தோற்றுவிட்டால் ..?"

அப்போது நாங்கள் எங்கள் நபியை சந்தித்து, அவரோடு ஒரு துணையாளர்களாகி விடுவோம். ... எங்கள் ஜிகாதின் உறுதிமொழியின் பெயர் bayt al-ridwan. சுவனம் நபிகளுக்காகவும், வேதங்களுக்காக உயிரைத்தரும் எம்போன்றோருக்காகவும் உரித்தானது. ... 
இந்த பேட்டியில் ஒளிபரப்பிய ஒரு சிறு காணொளியில், இந்த நபரும் இன்னொரு நபரும் ஒன்றிணைந்து, குரானின் மேல் கைவைத்து சபதம் எடுப்பதும், இறுதியில் அந்த இன்னொரு திட்டம் தீட்டியவர் இவனிடம் கூறுகிறார்: 'நாளை நீ சுவனத்தில் இருப்பாய்'." 

டாக்கின்ஸ் கேட்கிறார்: இந்த இளைஞன் அந்த திட்டம் தீட்டியவரிடம், பின் ஏன் நீயே இதைச் செய்து, விரைவாக சுவனத்திற்குச் செல்லக் கூடாது' என்று கேட்டிருக்க வேண்டும்.
(345)


*

இப்படிப் பேசும் மக்கள் தாங்கள் பேசுவதை முழுவதும் அறிந்தே புரிந்தே பேசுகிறார்கள். இதன் மூலம் நாம் பெறும் ஒரு முக்கிய பாடம்:மதத் தீவிரத்தையல்ல, நாம் மதங்களைத்தான் சாடவேண்டும். 

மத நம்பிக்கைகள் என்பதற்காகவே மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், ஓசாமாவின், மற்ற தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் நம்பிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.(345)

மத நம்பிக்கைகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பை நிறுத்தியே ஆக வேண்டும்.__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Chapter 9.

CHILDHOOD, ABUSE AND ESCAPE FROM RELIGION

=========================================

ஒவ்வொரு ஊரிலும் விளக்கேற்றுபவர் ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு ஆசிரியர்.

ஒவ்வொரு ஊரிலும் அந்த விளக்கை அணைக்க ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு மதகுரு.
- VICTOR HUGO
 (349)


*

David i. Kertzer என்பவர் எழுதிய The Kidnapping of Edgardo Mortara என்ற நூலில் கதையுடைத் தலைவனாக வரும் எட்கார்டோ என்ற அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் கத்தோலிக்க கிறித்துவர்களின் மத 'வெறியாட்டத்தில்' நடந்த உண்மைகளை வெளிக்கொணர்கிறார். Spanish Inquisition நடந்த 1850களில் கதை இது. தற்செயலாகக்கூட ஒருவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஜெபித்துவிட்டால்கூட அவன் "உண்மையான", திருமுழுக்கு (baptism) பெற்றவனாக மாறிவிடுகிறான் என்ற கத்தோலிக்கரின் நம்பிக்கையை முழுவதுமாக எழுதுகிறார்.

பதினான்கே வயதான வேலைக்காரப் பெண்ணால் தலையில் நீரூற்றப்பட்டு திருமுழுக்கு பெற்ற பையனை அரசு அவனது யூதப் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுகிறது. ஏனெனில் அந்த மதக்காரர்களது நம்பிக்கை அத்தனை ஆழமானது. திருமுழுக்கால் கிறித்துவனாவன் கிறித்துவர்களால்தான் வளர்க்கப்பட வேண்டும் என்பது அப்போதைய போப், மதகுருமார்கள், தினசரிகள் என எல்லோரின் நம்பிக்கை. (349 - 354)

*
சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மதக்கல்வியின் அழுத்தம் இவைகள் பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். (354 - 366)

*
டாக்கின்ஸுடன் வேலைபார்த்த மனோதத்துவர் Nicholas Humphrey ஒரு சொற்பொழிவில் கூறியவைகளில் சில:
தனிமனித சுதந்திரத்தில் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மற்றவர்களின் - அவர்கள் யாராக இருந்தாலும் - தவறான முடிவுகளைக் கொடுப்பது தவறு. அவர்களது வாழ்க்கையின் நீட்சிகளை அவர்களே முடிவு செய்ய விட வேண்டும். மூட நம்பிக்கைகள் மலிந்த கடவுள் கோட்பாடுகளை அவர்களிடம் விதைத்து, அவர்களுக்கென்று ஒரு குறுகிய ஒற்றைவழிப்பாதையைத் தரக்கூடாது.

குழந்தைகள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கக் கூடாது. (367)

*
எந்த ஒரு மத எதிர்ப்பாளனும் இப்போதெல்லாம் அமெரிக்காவில் bright என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தையும் ஒரு bright-ஆக மாறுவதற்குரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். (380)

*
குழந்தைகளை கிறித்துவக் குழந்தைகள், இஸ்லாமியக் குழந்தைகள் என்றெல்லாம் அழைப்பது அருவருக்கத் தக்கது. எந்தக் குழந்தையும் கிறித்துவ குழந்தை, முஸ்லீம் குழந்தை என்றல்ல; கிறித்துவ பெற்றோருக்குப் பிறந்த குழ்ந்தை, முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்று வேண்டுமானால் அழைக்கப் படலாம். (381)__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

God and Religion are 2 separate entities

GOD - Omnipotent or Supernatural who has the control of the world or universe
Religion - Administration strategy created with few policies by the Religious Leaders/Disciples (mostly, for their own political and monitory beneficial) in the name of GOD

As long as science (6th sense) could not explain the cause and remedy/control for all the events happening around the world(surroundings) and individual life, believing on GOD (7th sense) could not be avoided

Science is not about creation but about explaining those existing creations in a logical or methodical manner which is understandable and acceptable to the human minds (6th sense)

Hence, Science (6th sense) cannot replace GOD (7th sense). One should obtain 7th sense to realize GOD

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard