முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. ‘நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்’ எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.
ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், “நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக், ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன
1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.
2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.
3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.
4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.
5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.
6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.
இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன.
இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரானஅபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.
ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.
ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.
ஹதீஸ் 1.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.
ஹதீஸ் 2.
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் “மனசாட்சி அடிப்படையில் நடந்து” என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.
இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று “முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுகிறது. ஒரு குழுவினர் ‘முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்றும் மற்றொரு குழுவினரோ ‘ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்’ என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.
இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் “முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன” என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.
ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.
எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தானே விழும். அத்தகைய இனிப்பு மிகு இஸ்லாம் என்று முஸ்லிம்களால் புகழப்படும் இஸ்லாமிய இயக்கத்தில் பொதிந்துள்ள இனிப்புப் பழத்திற்கு இணையான கோட்பாடுகள் எவை? இஸ்லாமிய அரசியல், கலாச்சார கோட்பாடுகளால் விளைந்தவைகள் என்னென்ன? கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு, அறிவியல், அரசியல், மேலாண்மை, முன்னேற்றம், மனித சமுதாய நல உரிமை — ஆகியவைகளில் இஸ்லாமிய உலகத்தின் வெற்றி அல்லது தோல்வி, எத்தகையது? இங்கே அவைகளைப்பற்றி சற்று ஆராய்வோம்.
இஸ்லாம் ஒரு முழுமைபெற்ற கலாச்சாரம், ஆகவே அது எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும் மிகச்சிறந்தது என குரான் வாயிலாகக் கூறிக் கொள்கிறது. [1]
இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு மிகச் சிறந்ததாக கருதப்படும், இஸ்லாம் இயக்கத்தைப் பின்பற்றும் நாடுகளை, தற்காலத்தில் முன்னேற்ற மடைந்த நாடுகளாகக் கூறிக்கொள்ளும் நாடுகளுடன், தக்க ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?
குரான் ஒரு முற்றிலும் பரிபூர்ணமான புத்தகம், அதில் உள்ள அரசியல், அறிவியல், சமூகக் கோட்பாடுகளால், இஸ்லாமைப் பின்பற்றும் முஸ்லிம்களை, நுண்ணறிவு சம்பந்தமான தேர்ச்சிகளில், முஸ்லிமல்லாத காஃபிகளைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்களாக ஆக்கவல்லது என இஸ்லாமின் நிலைப்பாடு. (Islam claims that the Koran is the perfect book with the perfect political and social doctrine that will make Muslims intellectually superior to kafirs). இதைக்கூறுகையில், நம் நினைவில் கொள்ள வேண்டியது, குரான் என்னும் நூல், எல்லோரைக் காட்டிலும், மிக நுண்ணறிவு படைத்த, சர்வ வல்லமையுள்ள, அல்லாஹ் என்ற இறைவனாலேயே அவர் மேற்பார்வையில், எழுதப்பட்டது. [ஆகவே, மிக பரிபூரணத்துவம் பெற்ற ஒரு கடவுளாலேயே எழுத வைக்கப்பட்டது என்பதால், அவரே நிர்மாணித்த இஸ்லாம் என்னும் இயக்கம் பூரணமான கருத்துகளைத் தானே உள்ளடக்கியிருக்க வேண்டும்?] ஆகவே உலகிலேயே முஸ்லிமளே மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்கவேண்டும். உலகளவில் இஸ்லாமே மிகச்சிறந்த, பூர்ணத்வம் நிறைந்தது. (Remember that the Koran is the perfect recording of the mind of infinitely intelligent god, Allah, so Muslims should be the absolute leader in knowledge and ideas. Islam is the finest, most perfect idea that can exist).
பெண்டிர்:
அரபு நாடுகளில்தான் பெண்டிர் கல்வி மிக குறைந்த அளவு உள்ளது. அரபு நாட்டில் சரிபாதி பெண்களும், ஆண்கள் மூன்றில் ஒருபங்கும், கல்வி அறிவற்றவர்கள், [18] முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் நாடுகளின் சராசரியைக் காட்டிலும், அரபு நாடுகளில், கல்வி அறிவற்றவர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் [19]
பெண்களின் பண சம்பாதிப்பு மற்ற உலக நாடுகளின் அளவைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது, இதில் 33% அரபு நாட்டுப் பெண்களின் பண சம்பாதிப்பு, சஹாராவுக்குக் கீழ் பிரதேச ஆப்பிரிக்க பெண்டிரைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. (சஹாரா பாலைவனத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உலகளவில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது). [20]
பாராளுமன்றத்தில் அரபு நாட்டுப் பெண்கள் பங்கேற்பு, உலக நாடுகளின் சதவீதத்தைக்காட்டிலும் தாழ்ந்தே காணப்படுகிறது. [21]
மேற்கூறிய முடிவுகள் யாவுமே இஸ்லாமினால் விளைந்த விபரீத பலன்கள். இம்முடிவுகள் யாவும் எதிபார்த்தது தான். முடிவுகளால் எவரும் வியப்படைய முடியாது.
இஸ்லாம் கோட்பாடுகளின்படி, எந்த பெண்ணும், இஸ்லாமுக்காக குழந்தைகளைப் பெற்றுத் தரவும், ஆண்களுக்கு வேண்டும் போதெல்லாம் சுக போகத்திற்காக மட்டுமே.
முடிவுரை:
எந்த கலாச்சாரத்தையும் ஓர் அளவுகோலால் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அரேபியர்கள், கடைசியிலோ, அல்லது கடைசியிலிருந்து ஒருபடி இன்னும் கீழேதான் மதிப்பிட முடியும். இதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு – இஸ்லாம்தான். இஸ்லாமின் கலாச்சாரக் கோட்பாடே எல்லாவற்றையும் உருவமைக்கிறது. இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் கல்வி முறை –அறியாமையையும், புதிதாக எதையும் திறமையுடன் உண்டாக்க இயலாமையையும், குறுகிய மனப்பாங்கையும், மற்றவர்களைப்பற்றி முழு உண்மையும் தெரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களைப்பற்றி, தப்பெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஆகியவைகளுடன் கூடிய கலவைதான். இஸ்லாமிய மத கொள்கை, அந்த கோட்பாட்டுக்கே தங்களை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்ளுதலைக் கற்றுக்கொடுக்கிறது. முழுமையாகச் சமர்ப்பித்துக் கொள்ளுதல் என்பது திரும்பத் திரும்ப சொன்னவைகளையே மீண்டும் கற்பதுதான். இஸ்லாமியர்களால் புனிதமாக்கருதப்படும் ஹடிஸ் இஸ்லாமைப்பற்றி எந்த கேள்வியையும் கேட்பதற்கு அனுமதிக்காது. இஸ்லாமிய கோட்பாடு–இஸ்லாமே எல்லா விஷயத்திலும் மிகச் சிறந்தது, முடிவில் இஸ்லாம் தான் மிக முக்கியம், உலகிலுள்ள மற்ற எதுவும், எவரும் முக்கியமில்லை. மேலாக, காஃபிர்கள் எல்லாவற்றிலும், எப்போதுமே, குற்றவாளிகள், ஆகவே அல்லாவால், வெறுக்கப் படுபவர்கள், என கற்றுக்கொடுக்கிறது. காஃபிர்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது, முக்கியமாக, தொழில் நுட்பக்கலையப் பற்றி ஆராயும் விஞ்ஞானத்தை எதிர்க்கிறது. ஆகவே கற்றுக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய அரசியல் கொள்கை என்பது, ஒட்டுமொத்தமாக மக்கள் எல்லோருமே இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அடிமைகள். அப்படி தன்னை இஸ்லாமின் அடிமை என ஒப்புக்கொள்பவனே சிறந்த (இஸ்லாமிய) முஸ்லிம் குடிமகன். இஸ்லாமியத்தால் புனிதமாகக் கருதப்படும் சுன்னாவில் சாராம்சமாக இருப்பது முகம்மது தனது கத்தியால்தான் மிகசக்திமானாக ஆகி, தன் இஷ்டப்படி ஆளத்தகுதிபடைத்தவர் ஆனார். ஆகவே கத்தியே, புத்தியைக் காட்டிலும் சாலச்சிறந்தது. [முகம்மது கூறியது, ”எனது வெற்றிகள் அனைத்தும் பயங்கர வன்முறையால் தான் விளைந்தவை”. (Hadith: Al-Bukhari, 4.52.220 - Narrated Abu Huraira: Allah's Apostle said, "I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), ..............].
இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகிறது என்று சொல்கிறீர்கள்.அதே நேரத்தில் அது முழுமையான கீழ் படிதலையும் வலியுறுத்துகிறது.முழுமையாக கீழ் படிந்தால் எதையும் கேள்வி எழுப்ப முடியாது.பின்னர் எந்த விதமான பகுத்தறிவுக்கும் இடமில்லை.அது அறிவு வளர்ச்சிக்கு மாபெரும் தடை என்பது வெள்ளிடை மலை .இது இஸ்லாம் மட்டுமில்லை எல்லா மதமும் தான்.ஆனால் இஸ்லாமில் கொஞ்சம் தூக்கல் அவ்வளவே.
மேலும் முஸ்லிம்கள் மட்டும் ஏன் தங்களை மத அடிப்படையில் அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் சுத்தமாக விளங்கவில்லை.ஒருவன் முஸ்லிம் ஆக மாறும் போது அவனுடய பாரம்பரிய மொழி இன அடையாளங்கள் அழிக்கப் படுவது ஏன் ?
//எல்லாம் “ஒற்றுமை” க்காகத்தான். இஸ்லாம் ஒரு கலாச்சாரம் அதனால்தான் மதம் என்று சொல்லாமல் மார்க்கம் என்றழைக்கிறோம்.பாரம்பரிய மொழி அழிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களே இதை தாங்கள் தெரியாமல் போட்டுவிட்டீர்களென நினக்கிறேன் //
இஸ்லாம் ஒரு கலாச்சாரம் என்று சொல்லி உள்ளீர்கள் .இது முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத வாதம்.கலாச்சாரம் என்பது ஒரு மனிதன் வாழிடம்,சூழ்நிலை,தட்பவெட்பம் ஆகியவற்றைப் பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடும்.அரபு நாட்டில் உள்ள எல்லா பழக்க வழக்கங்களையும் இங்கே அப்படியே தொடர முடியுமா ? முழுக்க குளிரில் இருக்கும் அல்பானிய முஸ்லிமும் வறண்ட பாலையில் இருக்கும் அரபியனும் ஒரே மாதிரி உடை,உணவு பழக்கங்களை கொண்டிருக்க முடியுமா ? இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது . எல்லாவற்றையும் அரபு மாடல் இன் கீழ் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துவதன் மூலம் ஒரு பாசிச சிந்தனையை கட்டமைக்க முயல்கிறீர்கள்.
ஒருவனின் மொழி அழிக்கப் படுகிறது என்றால் மொழியை முற்றிலும் அழிப்பது என்று பொருளல்ல. மதம் மாறிய பின் ஒருவன் வணங்க வேண்டிய மொழியாகவும் படிக்க வேண்டிய மொழியாகவும் அரபியை முன் வைக்கிறீர்கள்.ஏன் அவனுடைய மொழியிலயே அதை செய்ய கூடாது ?
நிஜார் அஹ்மத் க்கு
//குர்-ஆன் கூறும் அறிவியல் கருத்துகளை பொய் என நிருபியுங்கள்.//
இஸ்லாமம் அறிவியல் பூர்வமான மதம் என்றால் இதுவரை கண்டு பிடிக்கப் பட்டுள்ள அறிவியல் சாதனங்களில் எத்தனை இஸ்லாமில் இருந்து வந்தது ? எல்லாம் மனித முயற்சியினால் விளைந்தவை தான் எந்த மதமும் அறிவியலுக்கும் அறிவுக்கும் எதிரானது தான்.எல்லா மதங்களுமே அறிவியல் சாதனங்களை பயன் படுத்தி தங்களது பரப்புரையை முன்னெடுத்து மக்களை தொடர்ந்து முட்டாளாக வைத்திருக்கத் தான் முயல்கின்றன.இதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று உங்களுக்கு நீங்கள் நம்பும் அந்த இறைவன் வழி காட்டட்டும் ?!?
போடுவது என்பதும் ஆண்கள் எவரும் அதனை அவர்கள் மீது திணிக்கவில்லை என்று கூறுவதும் அப்பட்டமான பொய். ஓ ! நெத்தியடி முகம்மதே நீர்கேளும். நீர் உமது உள்ளத்தில் உள்ளதை மறைத்து பொய் கூறுகிறீர் என்பதும், முழுப்பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க எத்தனிப்பதும் நாம் அறிந்தவற்றில் மிகத் தெளிவானதே. கீழே எழுதப்பட்டுள்ளது உமக்கல்ல. பிற பின்னூட்டக்காரர்களுக்கு.
நம்ம உமரு காலிபா இருக்காருங்களே அவர்தாங்க இந்த பர்தாவை திணிப்பதில் முழு மூச்சாக நினறாரு. அவரு பல தடவை முகம்மது நபியிடம் கட்டாயப்படுத்தினாருங்க. ஒருநாள் முகம்மதுநபி மனைவிமார்களில் ஒருத்தரான சௌதா வீட்டிலேர்ந்து வெளியே மலம் கழிக்க போனாருங்களாம் (வழமையானதே! அப்போவல்லாம் ஊட்ல கக்கூஸ் இல்லீங்க) எந்த நேரத்தில் போனாங்க தெரியுமா? கருக்கல்ல. அந்த கும்மிருட்டுள்ள போனாங்கலாம். அய்யோ இந்த உமருக்கு யார் போறதுன்ன அடையாளம் தெரிஞ்சுட்டதாம். அதனால் வம்படியா சண்டை போட்டார். முகம்மதுநபியும் மௌணமா இருந்துப்பார்த்தார். உமரு விடுவதாக இல்லை. புர்காவை கட்டாயமாகக்கிட்டாருங்க. அதிலேருந்து இது இசுலாமிய பெண்களுக்கு ஷாரியத் சட்டமுங்க. அவங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போட்டாத்தாங்க இசுலாமிய பெண் இல்லைன்னா சொர்க்கத்தில் இடமில்லை நரகம்தான்.
1. இன்று, புர்கா ஆண்களால் திணிக்கப்படுவதில்லை என்று கூறுவது பொய்.
என்னோட கூட பிறந்தவங்க 7பேரு. இரண்டு பேரு பெண்கள். என் தாய் இறக்கும்வரை பர்தா அணிந்ததில்லை எனது சகோதரிகளும் தனது ஏறக்குறைய 33, 35 வயதுவரை அணிந்ததில்லை. எங்களுக்கெல்லாம் மூத்தவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துவது வழக்கம் ஏன்னா தன்னுடைய 18 வயதிலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பத்தில் அளப்பரிய தியாகம் செய்தவர். அவரும் தனது 35 வயதுவரை குடித்துக்கொண்டு இருந்தவர்தான். ஆனால் திடிரென்று பக்தியோ பக்தி புடிச்சிக்கிருச்சி. அதிலிருந்து எல்லாரையும் புர்கா போடச் சொல்லிட்டாரு. என்னுடைய அண்ணியர்கள் எவரும் அதுவரை புர்கா அணிந்ததில்லை. அதிலும் எங்களின் மூத்தவரின் மனைவி தலையில் முக்காடு கூட போடமாட்டார்கள். இந்த முக்காடு போடாதற்காக எங்க அண்ணி வாங்கிய அடிகளும் எங்க அண்ணன் தன்னைதானே காயப்படுத்திக் கொண்டு வருத்திக்கொண்டதும் ஏராளம்.
ஏன் எங்கள் குடும்பம் புர்கா அணியவில்லை? எங்கள் ஊரில் அது வழக்கமில்லை. தென் மாவட்டங்கள் எதிலும் இந்த பழக்கமில்லை. பொதுவாக இசுலாமியர்கள் என்று சொன்னதும் பலருக்கும் எளிதாக நினைவு வரும் ஊர் கீழக்கரை. (இந்த ஊருல அவுங்க தெருவுல அன்னிய ஆண்கள் நுழையக்கூடாதுன்னு தடை இருக்கு. ஒரு அறிவிப்பு பலகையும் உண்டு.) காயல்பட்டிணம், முத்துப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ஊர்கள் இந்த ஊர்களில் எவரும் புர்கா ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணிந்ததில்லை. வாணியம்பாடி உருது முஸ்லீம்கள் தவிர). பொதுவாக தமிழ் முசுலீம்கள் அணிவதில்லை. கேரள பெண்கள் விஷயம் முற்றிலும் வேறு. அவர்கள் முக்காடு போட்டாலும் அங்குள்ள பண்பாட்டைச் சார்ந்து மாராப்பு போடுவதில்லை. புர்காவும் கிடையாது.
எங்கள் குடும்பம் எங்கள் ஊரில் கண்ணியமிக்க குடும்பத்தில் நம்பர் 1 இசுலாமிய சட்டங்களில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்வது, இந்த கழிசடை ஊர் சுற்றி சுமஜ்லா போலில்லாது (அப்படி நான் சொல்லஙீங்க. இசுலாம் சொல்லுது) பெண்கள் வீணாக வெளியில் சுற்றுவதில்லை என்பது போன்ற அனைத்தையும் கறாராக கடைபிடித்தவர்கள். எனது தாத்தா பட்டம் பெற்ற ஆலிம். எனது தந்தை பட்டம் பெறாவிட்டாலும் இமாமாகவும் அரபி போதராகவும் பணியாற்றியவர் (35 வயதுக்குமேல்)
இப்பொழுது என் சகோதரிகள் தாங்கள் விரும்பியே புர்கா அணிகிறோம்; எவரும் கட்டாயபடுத்தவில்லை என்றுதான் கூறுகிறார்கள்.
எனது உறவுக்காரர் ஒருவர் தனது பருவமடையாத 11வயது மகளுக்கு பர்தாவின் கண்ணியத்தை திணித்துள்ளார் என்பது இதன் புதிய பரிணாம வளர்ச்சி.பெண்கள் அவர் விரும்பியே பர்தா
2. கண்ணியம் எங்குள்ளது?
மதுரையில் ஒரு நிகழ்வு அந்தக் குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பம் கிரானைட் அவர்களது தொழில். தந்தை மகன் ஆளாலுக்கு தனிகார்களும் உண்டு. அவர்கள் குடும்பத்துடன் ஒரு சேட்டுக்கு ( கிரானைட் வியாபாரிதான்) நட்பு ஏற்பட்டது. அவர் வீட்டுக்கு வர போக இருந்தார். மகனின் மனைவிகூட அவரிடம் சகஜமாக உரையாடுவார்.
ஒருநாள் மகனின் மனைவிக்கு ஒரு தனிக்கார் வீட்டிற்கு வந்தது. அது பற்றி அவரது மனைவி “சேட் அன்பளிப்பாக” வழங்கியதாக கூறியுள்ளார். அந்த மனைவி அடிக்கடி தனது தோழிகளை காண வெளியில் செல்வாராம். இப்பொழுது காரில் செல்லலானார். அதுவும் அதிகமாகியதால் மகனின் மனதில் ச்நதேகம் தோன்றியது. கார் அன்பளிப்பு மனதை உறுத்தியது. ஒருநாள் மனைவி வெளியில் செல்லும்போது தானும் அவருன்னுடன் வருவதற்காக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மனைவி சாக்குபோக்கு சொல்லி தடுத்துவிட்டார். அவரது மனம் நிலைகொள்ளாமல் குளம்பியது. தாங்கமுடியாத மனஉலைச்சல். ஒருநாள் மனைவி வெளியில் செல்லும் போது அவளரறியாத பின் தொடர்ந்தார். மனைவியின் கார் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு நுழைகிறது. பொருத்திருந்து கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டார். சில மணிதுளிகள் அவருக்கு நகர வேதனையாக நகர்கிறது. அந்த சில மணிதுளிகள் கடக்கும் வரை அவரது உடல் படபடக்கிறது. பிறகு மெதுவான வரவேற்பை அனுகி விவரம் கூறி அறை எண்ணை தெரிந்துகொண்டு வேகமாக விரைகிறார். அறையை அடைந்து கதவை தட்டுகிறார் . தாம் இருப்பது தனது கணவருக்கு தெரியாது என்பதில் எள்ளளவும் அந்த மனைவிக்கு சந்தேகமே இல்லை. அதனால் வேறு யாரோ ஹோட்டல் தொழிலாளியாக இருப்பார் என்று அவரது மனைவி கதவை திறக்கிறாள்.
மனைவியின் அழகில் வாலிப மிடுக்கில் கிறங்கி தனது செல்வத்தினை உள்ளம் உவக்க நனையச் செய்து, தனது மும்தாஜியாக பெருமையுடன் இணைந்து உலா வந்த அந்த மகன், தன் மனைவி கதவை திறந்த்தை கண்டு சில வினாடிகளில் கண்ணாடிபோல நொறுங்கினாலும் மறுகனமே ஆத்திரம் உச்சந்தலையை சூடாக்க உள்ளே இருக்கும். சேட்டை, அந்த அயோக்கிய காஃபிரை எதிர்பார்த்து ஆவேசமாக உள்ளே நுழைகிறார். அங்கே அதிலும் பெரும் அதிர்ச்சி!! கல்லாக உரைகிறார்!! அங்கே காண்பது கனவா நினைவா? ஆம்! உள்ளே இருப்பது சேட் அல்ல தாடியும் தொப்பியுமாய் சொல்லுக்குச் சொல் மாஷா அல்லாஹ் (அல்லா அற்புதமானவன்), அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வின் கருனையால்) என்று சொல்லும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவரது….. தந்தை! மறுநாள் அந்த இசுலாமிய “மகன்” தூக்கில்தொங்கிக் கொண்டிருந்ததை நாளிதழ்கள் வெளியிட்டன.
சுமஜிலா நீங்கள் உங்கள் தந்தையின் முன்பும், மாமனார் முன்பும், வீட்டினுள் இருக்கும் போதும்கூட பர்தாவில் இருந்தால்தான் கண்ணியமாக இருக்கும்.
தவறு எங்கே உள்ளது? எந்த பெண் வெளியில் செல்கிறார் என்று தெரிந்தால் என்ன? வெளியில் செல்ல தடை விதித்தலில் தவறு உள்ளது.
பெண்கள் பள்ளிவாசலில் தொழுக வந்தால் என்ன? உமரின் சாட்டையை கேளி செய்தவர்களை விளாசித்தள்ளாதலில் தவறு உள்ளது.
பெண்கள் புர்கா அணியாமல் வெளியில் வந்தால் என்ன? சுமஜ்லா போல் அதற்கு உண்மைக்கு புரம்பான விளக்கங்களை கூறி பெண் இனத்திற்கே துரோகம் செய்வதில் தவறு உள்ளது.
பர்தாவோ புர்காவோ ஆணின் பாலியல் வக்கிர புத்தியை அடித்து நொறுக்காதவரை பெண்கள் வன்உணர்வின் மிரட்டலில்தான் வாழ முடியும். <A href ="http://www.paraiyoasai.wordpress.com"