New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
Permalink  
 


அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3

 art-sd_fate.jpg?w=468&h=347

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14

நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான வசனங்கள் இருக்கின்றன. ஆனால் அதை முரண்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. இரண்டாவது பகுதியில் முஸ்லீம்களாக இருப்பவர்கள் ஏன் விதியை மறுத்து தர்க்கிக்கிறார்கள் என்பதை விளக்கியிருக்கிறார்கள், இதிலும் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. மூன்றாவது பகுதி நாத்திகர்கள் விதியை மறுப்பது, அதில் தர்க்கிப்பது அறிவுடையது தானா? என்பதை அலசியிருக்கிறார்கள். எனவே மூன்றாம் பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரையை ஆக்கியிருக்கிறேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முதலில், ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். விதி என்பது இழப்புகளிலிருந்து மனிதனை ஆற்றுப்படுத்தும் கருவி என்று ஆத்திகர்களும், சுய தேடல்களை மறுத்து மனிதனை முடக்குகிறது என்று நாத்திகர்களும் கூறுகிறார்கள். இதுவரை விதி குறித்து செய்யப்பட்ட விவாதங்கள் இந்த வகைப்பட்டதாக மட்டுமே இருக்கின்றன. விதி என்பது சாராம்சத்தில் மனிதனுக்கு சிந்தனை இருப்பதையே மறுக்கிறது. பதிலெழுதும் யாரும், ஆய்வுக்(!) கட்டுரைத் தொடர் எழுதும் யாரும் இந்த அம்சத்தைக் கணக்கிலெடுக்கவே இல்லை. தொடக்கத்திலிருந்து நான் எழுதிக் கொண்டிருப்பது இதைதான். விதி இருப்பதை நம்புகிறீர்களா? அது முழுமையாக, ஒரே மாதிரியாக நம்புவதாக இருந்தாலும், இரண்டாகப் பிரித்து தனித்தனியாக நம்புவதாக இருந்தாலும் அதன் பொருள் மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதை மறுப்பது தான். ஆனால் எந்த மதவாதியாலும் மனிதன் சிந்திக்கிறான் என்பதை மறுக்க முடியாது. அன்று முகம்மது விதி குறித்து விவாதிக்காதீர்கள் என்று பின்வாங்கியதற்கும், இன்று விதி குறித்த தெளிவான அறிவை இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லை என்று மதவாதிகள் பசப்புவதற்கும் இதுவே காரணம். இதற்காகத்தான் அறிவியல் தொடங்கி தர்க்கவியல் ஈறாக அனைத்தையும் இழுத்து போர்த்திக் கொள்ள துடிக்கிறார்கள்.

 

அறிவு என்பது என்ன? தன் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களை தொகுத்து தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்வது தான். சிந்தனை என்பது அறிவின் வலிமையால் கற்பனையான முன்முயற்சிகளை சோதனை செய்து பார்ப்பது. மனிதன் இன்று பெற்றிருக்கும் அனைத்து வகை முன்னேற்றங்களும் அறிவின் வலிமையாலும் சிந்தனையின் வீரியத்தாலும் தான். இந்த வலிமையும், வீரியமும் எந்த எல்லையையும் எட்டிவிடும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதா? இந்த பேரண்டத்தின் விரிவுடன் மனிதனை ஒப்பு நோக்கினால் எந்த எல்லையையும் அடைவது சாத்தியமா? எனும் கேள்விக்கு சாத்தியமில்லை என்றே பதில் கூற முடியும். அதேநேரம் இது மனிதனின் பலவீனம் அல்ல.

 

இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். மனிதனின் அறிவு என்பது அவனுடைய தேவைகளோடு பிணைந்தது. எது குறித்த தேவை மனிதனுக்கு இல்லையோ அது குறித்த அறிதல் மனிதனுக்கு அவசியமில்லை. இதுவரை மனிதன் சென்றெத்திய எல்லைகளெல்லாம் அவனுடைய தேவையின் உந்துதல்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன.  இன்று மனிதன் முயன்று கொண்டிருக்கும் புதிய எல்லைகளுக்கும் தேவையே அடிப்படை. எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை மனிதன் அறிந்திருக்கிறான். எது மனிதனுக்கு தேவையாக இருக்கிறதோ அதை அறிய முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவன் அறியாத ஒன்று இருக்குமானால் அதை அறியாதது அவனுடைய பலவீனமல்ல. மாறாக, அவனுக்கும் அவன் தேவைக்கும் இடையிலான இடைவெளி.

 

மனிதன் எதை நோக்கி பயணப்படுகிறான்? எதை அடைய முயல்கிறான்? என்பது தேவையிலிருந்தே கிளைக்க முடியும். ஆனால் தேவை என்பது மனித குலம் முழுமைக்குமான தேவையா? இல்லை. வர்க்கங்களாக பிரிந்து கிடக்கும் உலகம், தனிமனித சிந்தனையினூடாக வர்க்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. ஒரு வர்க்கத்தின் சிந்தனை இன்னொரு வர்க்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது.  ஆளும் வர்க்கத்தின் சிந்தனை ஒருபோதும் உழைக்கும் வர்க்கத்திற்கு பலனளிப்பதாய் இருக்க முடியாது. அதன் வடிவம் நீதி முறைமையாக இருந்தாலும், சீர்திருத்தங்களாக இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான மேலாண்மையையே கோருகிறது. இந்த அடிப்படையில் தான் கடவுள், மதம், விதி போன்றவைகளும் வருகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாமியர்கள் பொதுவாக வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விதி நீங்கலாக ஏனைய அனைத்தும் அறிவியல் உண்மைகளாக, காலம் கடந்து நிற்பவைகளாக, மனித அறிவுடன் முரண்படாதவைகளாக இருப்பதால்; முரண்பாடு போல் தோன்றினாலும் விதியை ஏற்றுக் கொள்வது அறிவுடைய செயல் தான் என சாதிக்கின்றனர். ஆனால் வேத வசனங்களுக்கு முஸ்லீம்கள் ஏற்றும் அறிவியலும், காலம் கடந்து நிற்கும் தன்மையும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கற்பிதங்களேயன்றி உண்மைகளல்ல. விதியின் மீது எப்படி கேள்விகள் எழுப்பப்படுகிறதோ அது போன்றே அனைத்தின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எனவே, 99 நூற்றுமேனி நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றில் ஒரு நூற்றுமேனியை ஐயுறுவது அறிவுடமையன்று என வாதிப்பது அடிப்படையற்ற அபத்தம்.

 

இது போன்றது தான், அறிவியலைக் கொண்டு முழுமையையும் மனிதன் அறிந்து கொள்ள முடியாது என்பதும்.  இப்பேரண்டத்தில் மனிதன் தன் வல்லமையை விரித்திருப்பது சொற்ப அளவு தான். அவன் அறியாதவைகள் இருக்கின்றனவா என்றால் ஏராளம். இந்த அறியாதவைகளின் பட்டியலில் விதியையும் வைத்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள் என்பது அறிவியல் ரீதியாக மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் பெரும் ஓட்டையாக இருக்கிறது. விதி பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்றால் மனித வாழ்வில் விதிக்கு என்ன பங்களிப்பு இருக்க முடியும்? எங்கோ பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருக்கிறது என்றால் சாத்தியம், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தக் கோளில் இருந்து தான் மனிதன் புவியில் பரவினான் என்றால் அதற்கு சான்றுகள் வேண்டும். மனிதன் அனைத்தையும் அறித்து விட்டானா? அவன் அறியாதவைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே அந்தக் கோளில் இருந்துதான் புவிக்கு மனிதன் வந்தான் என்பதை நம்புவது அறிவுக்கு ஏற்புடையது தான் என்று வாதிட்டால் அதில் உண்மைக்கு இடமில்லை. விதி என்பது மனிதனோடு வேறெதையும் விட அதிக நெருக்கம் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அப்படியான ஒன்றை, அன்றிலிருந்து இன்றுவரை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை, கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருக்கும் ஒன்றை, இல்லை என்று மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை வெறுமனே நம்பு என்பது எப்படி அறிவுடமையாகும்? எனவே மனிதன் அறியாதவைகளும் இருக்கின்றன என நீட்டி முழக்குவது கடவுளின் இருப்பை தக்கவைப்பதற்கு தேவையானதாக இருக்கிறதேயன்றி, மனிதனின் அறிவை விளக்குவதற்கு தேவையானதாக இல்லை.

 

மனிதன் பலவீனமானவன் என்று மதவாதிகள் கூறுவது அறிவியல் ரீதியில் பொருளற்ற சொல். பலம் பவீனம் என்பது பொருளுடையதாக வேண்டுமென்றால் அது பிரிதொன்றுடன் ஒப்பு நோக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதன் பலத்தில் புலியை விட பலவீனமானவன். மனிதன் புத்திசாலித்தனத்தில் குரங்கைவிட பலமானவன். மனிதன் இடம்பெயர்வதில் குதிரைவிட பலவீனமானவன், ஆமையைவிட மிக பலமானவன்.  பலமானவன் பலவீனமானவன் என்பதை இந்த அடிப்படையில் தான் கூறமுடியும். இப்போது மதவாதிகள் கூறும் மனிதன் பலவீனமானவன் என்பதை இதனுடன் இணைத்துப் பாருங்கள். எதனுடன் ஒப்பிட்டு மனிதன் பலவீனமானவன் என்கிறார்கள்? கடவுளுடனா? கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே முதன்மையான விவாதமாக இருக்கும் போது, கடவுளுடன் மனிதனை ஒப்பிடுவது அறிவுடமையா? \\\மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும்/// இவைகளெல்லாம் மனிதனின் பலவீனங்கள் என்றால் மனிதனின் பலம் தான் என்ன? அல்லது இந்த பலவீனங்கள் இல்லையென்றால் அது மனிதனாக இருக்க முடியுமா? ஆக மனிதன் பலவீனமானவன் என மதவாதிகள் கூறுவது மிகப் பெரிய மோசடி. கடவுளை பிரமாண்டப்படுத்திக் காட்ட செய்யப்படும் செப்படி வித்தை.

 

மனிதனின் அறிவு குறைபாடுடையது எனும் குழப்பம், மனிதன் பலவீனமானவன் எனும் மயக்கம் இவற்றின் மீதுதான் விதிக் கோட்பாடு எனும் மாயத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்கள் மதவாதிகள்.விதி என்பதை நேரடியாக விளக்க முடியாது. விளக்க முடியாது என்பதை விட விளக்கினால் கடவுள் மாட்டிக் கொள்வார். அதாவது கடவுள் மீதான பற்று மனிதனுக்கு இற்று விடும். அதனால் தான் விதியை விளக்கமுடியாது என்று கூறிவிட்டு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிட்டு கடவுளை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

 

நடந்து முடிந்துவிட்டால் அது விதி, நடக்க இருப்பது என்றால் நீயாக சிந்தித்து செயல்படு என்று விதியை இரண்டாக பிரிக்க முடியாது. ஏனென்றால் மனிதனுக்குத்தான் கடந்த காலம் எதிர்காலம் என்ற பேதமுண்டு. விதிக்கு எதிர்காலமில்லை, இறந்த காலம் மட்டும் தான். எதிர்காலம் இருக்கிறது என்றாலே அது விதி இல்லை என்றாகிவிடும். விதி என்றால் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்பது தான் பொருள். ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்றை மனிதன் நிகழ் காலத்தில் நின்று கொண்டு சிந்திக்க முடியுமா? இதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் தான் விதி பற்றிய விளக்கம் மனிதனுக்கு தரப்படவில்லை என்று தப்பித்துக் கொள்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அடுத்து சோதனை என்றொரு போலித்தனத்தை வைத்திருக்கிறார்கள்.\\\இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களையும் அல்லாஹ் அறிவுப் பூர்வமாகத் தந்து விட்டு விதியை மட்டும் நமது அறிவுக்குச் சிக்காமல் வைத்திருப்பது நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகத் தான். எல்லாவற்றையும் சரியாகவே சொன்ன இறைவன் விதியையும் சரியாகத் தான் சொல்லியிருப்பான் என்று மனிதன் நம்புகிறானா? அல்லது விதியை மாத்திரம் வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் மறுக்கிறானா? என்று மனிதனை சோதித்துப் பார்க்கக் கூட விதியை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கலாம்/// பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த ஒரு மனிதனின் அறிவைத் தாண்டி குரானிலும் இஸ்லாத்திலும் ஒன்றுமில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். மனிதன் யாருக்குமே சிக்காமல் இருக்கும் விதி குறித்த அறிவை வைத்து விட்டு விதியை மட்டும் மனிதன் மீது சாட்டியிருக்கும் இறைவன் எதை சோதித்தறிய விரும்புகிறான்? சோதித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றால் அவன் எந்த அடிப்படையில் இறைவன்? தன்னையே கேள்விக்குள்ளாக்கும், தன் இருப்பையே மறுக்கும் ஓர் இன்றியமையாத கேள்வியை விள்க்கமின்றி முன்வைத்துத்தான் இறைவன், மனிதனைப் பற்றி அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான் என்றால்; இந்த மதவாதிகள் இதுகாறும் கூறிவந்த இறைவனுக்கான தகுதிகளை அவர்களே வெடிவைத்து தகர்த்து விடுகிறார்கள் என்பதல்லவா பொருள்.

 

அடுத்து, பத்து கோடி ரூபாய் கதை ஒன்றையும் கூறியிருக்கிறார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் இதில்? தனக்கு இதுவரை துன்பம் செய்வதைப் பற்றி நினைத்திராத பெற்றோரை ’அட்வான்ஸாக’ நம்புவதுபோல் அத்தனையையும் அறிவுபூர்வமான தந்திருக்கும் இறைவன் மீது விதி விசயத்தில் ‘அட்வான்ஸாக’ நம்புங்கள் என்கிறார்கள். இந்த சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘அட்வான்ஸாக’ நம்புகிறார்களா? ‘தள்ளிப் போட்டு’ நம்புகிறார்களா என்பதல்ல விதி குறித்து எழுப்பிய கேள்வி, ஏன் நம்ப வேண்டும்? என்பதே விதி குறித்து விளக்கமளிக்கும் அத்தனை மதவாதிகளும் செய்வது இதைத்தான், கேள்வி எதுவோ அதற்கு பதில் கூற மறுத்துவிட்டு, எது கேள்வி இல்லையோ அதற்கு வளைத்து வளைத்து விளக்கங்கள் கூறுவது.

விதியில் முரண்பாடு இருக்கிறது, ஓர் எல்லைக்குமேல் அதற்கு பதில் கூற முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் மதவாதிகள். இருந்தாலும் ஏன் விதியை விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? விதியினால் மதங்கள் அல்லது கடவுள் அடையும் பலன் என்ன? விதி தான் கடவுளின் உயிர்.விதி இல்லையென்றால் கடவுள் உயிர்வாழ முடியாது. அதனால் தான் மதவாதிகளுக்கு விதி இன்றியமையாததாக இருக்கிறது.  கடவுளுக்கு முட்டுக் கொடுக்க விரும்புபவர்கள் விதியை நாங்கள் நம்புகிறோம், அதை விவாதிக்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்து விடட்டும். பின் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.  ஆனால் அதை ஏற்பது தான் அறிவுடைமை என்று அறிவியல், தர்க்கவியல் விளக்கங்கள் அளிக்கிறார்களே, அங்கு தான் கேள்விகள் எழுகின்றன.

 நீங்கள் விதியை நம்புகிறீர்களா? மனிதன் சிந்திக்கிறான் என்பதை ஏற்கிறீர்களா? என்பது தான் ஒற்றைக் கேள்வி. இரண்டையும் ஏற்கிறோம் என்றெல்லாம் கூற முடியாது. ஏனென்றால், ஒன்றை ஒன்று மறுக்கிறது. சொல்லுங்கள் நீங்கள் எந்தப் பக்கம்?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard