முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.

 

முகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.

 

மதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.

 

மதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்தான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.

 

தங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.

 

புகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.

 

இப்னு ஔன் அறிவித்தார்:

நான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717: