மஹாபாரதத்தில் பாண்டிய நாட்டில் அகஸ்தியர், குமரி, வருணன் ஆகிய மூன்று தீர்ததங்கள் இருந்தன என்று சொல்லப்பட்டுள்ளது.
அவற்றைக் கொண்டு குமரிக் கண்டத்தைக் கண்டு பிடிப்போம்.
அகஸ்தியருடன் தொடர்பு கொண்ட இடங்கள் மூன்று.
காவிரி தோன்றிய குடகும், பொதிகை மலையும் மஹாபாரதத்திலும், தமிழ் நூல்களிலும் அகஸ்தியரைத் தொடர்புபடுத்தி வருகின்றன.
மூன்றாவது இடம் கடல் கொண்ட பகுதியில் இருனதது என்று ராமாயணத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
முதல் சங்கம் நடைபெற்ற பாண்டியன் தலைநகரமான தென் மதுரை அந்த அகஸ்திய தீர்த்தத்தின் அருகே இருந்திருக்க வேண்டும்.
அகஸ்தியர் குறித்த விவரங்கள், சின்னமனூரில் கிடைத்துள்ள செப்பேடுகளில் காணப்படுகின்றன.
அவற்றில் தமிழ், வடமொழி என்று இரண்டு மொழிகளிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரஙகளில், அகஸ்தியர் பாண்டியர்களது குல குருஎன்று எழுதப்பட்டுள்ளது.
பாண்டியர்களது பழைய வரலாற்றைத் தரும் இந்த ஏடுகளில், ஆரம்பத்திலேயே இந்த விவரம் வருகிறது.
அதாவது குடகு, பொதிகை போன்ற இடங்களுக்கு முன்பே, தென் பகுதியில், பாண்டியர்கள் ஆண்ட பொழுது அவர்களுக்கு அகஸ்தியர் குலகுருவாக இருந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இந்தியக் கடலில் இருக்கும் கிழக்குப் பகுதி மலையில் அகஸ்தியர் வாழ்ந்தார் என்று ராமாயணம் கூறுகிறது என்று பார்த்தோம். இந்த மலைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
இதை 90-டிகிரீ மலை என்பார்கள்.
உலகின் வரைபடத்தில் செல்லும் தீர்க்க ரேகையில்,
90-ஆவது டிகிரியின் மீது இந்த மலை அமைந்துள்லதால் இந்தப் பெயர். இந்தப் பெயர் சமீப காலத்தில் விஞ்ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர்.