பாரத நாட்டின் பரப்பளவு இன்றைக்குப் போலில்லாமல், முன்பு அதீதமாகப் பரந்து விரிந்திருந்தது. சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத்தீபத்தில் உள்ள பாரத வர்ஷத்தில் உள்ள பரதக் கண்டத்தின் தென் பகுதியில் நாம் இருக்கிறோம் என்று வருகிறது. பாரத வர்ஷம் என்பதன் விஸ்தீரணம் என்ன என்பதை ஸ்கந்த புராணம் விவரிக்கின்றது. பாரத வர்ஷம் 9 பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அப்படிச் சொல்லப்படும் பிரிவுகளில்தான் யவன ராஜ்ஜியம் வருகிறது. முன் பகுதியில் பார்த்த சக்ஷுஸ் நதி பாரத வர்ஷத்தின் ஒரு பகுதியே.
இந்தப் படத்தில், மத்தியத் தரைக் கடல் நோக்கிய அம்புக் குறி, மிலேச்சர்கள் என்று விரட்டப்பட்ட யயாதியின் மகனைச் சேர்ந்தவர்கள் சென்ற பகுதி. வடமேற்கு நோக்கிச் செல்லும் அம்புக் குறி இன்னொரு பகுதியினர் சென்ற வழி. அவர்கள் ஆங்காங்கே குடி அமர்ந்தும், மேலும் பரவியும் சென்றிருகின்றனர். அவர்கள் சென்ற போது அந்தப் பகுதிகளில் அதற்கு முன்பும் மக்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் எப்பொழுது, எங்கிருந்து அங்கே சென்றார்கள் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், அங்கு இருந்த மக்களுக்கும், நாம் வாழும் பாரத நாட்டில் இருந்த மக்களுக்கும் இருந்த தொடர்புகளைப் பார்ப்போம்.
சக்ஷுஸ் நதிதீரத்துக்கு அப்பால் வட மேற்கில் இருந்த பகுதிக்கு, 1000 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டு மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் வோல்கா என்னும் நதி ஓடுகிறது. வோல்காவின் கிளை நதியான ஓகா நதியின் கிளை நதிக் கரையில் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ அமைந்துள்ளது.
வோல்கா நதி காஸ்பியன் கடலில் விழுகிறது. இந்தப் படத்தில் இந்தியாவுக்கு வட மேற்கே உஸ்பெகிஸ்தான் பகுதியில் ஆரல் கடலில்கலக்கும் அமூதர்யா என்ப்படும் சக்ஷுஸ் நதியைக் காணலாம்.
இந்தப் படத்தின் இடப்பக்க ஓரத்தில் காணப்படுவது காஸ்பியன் கடல். மேல் பக்கம் அம்புக் குறி காட்டும் பகுதியில் வோல்கா நதி வளைந்து செல்கிறது. அந்த நதிக்கரையில் அமைந்துள்ள சமாரா என்னும் பகுதியில் உள்ள ஸ்தரயா மைன் என்னும் இடத்தில் எட்டு கரங்களுடன் கூடிய விஷ்ணு உருவச் சிலை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் வோல்கா நதிப் பகுதியையும், மாஸ்கோ இருக்கும் இடத்தையும், சமாரா இருக்கும் இடத்தையும் காணலாம்.
படத்தில் சமாரா என்று குறிக்கப்பட்ட இடத்தில் விஷ்ணு சிலை கிடைத்தது.
இந்தச் சிலை கோவிலில் வழிபடப்பட்ட சிலையாகத் தெரிகிறது. ஸ்தரயா மைனா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ஒரு காலத்தில் மக்கள் வசித்த அடையாளங்களும், பழைய நாகரிகச் சின்னங்களும், அயுதங்கள், காசுகள், ஆபரணப் பொருட்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு எங்காவது கோவில் இருந்த அடையாளம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷ்ணு சிலை கி-பி- 8 அலல்து 9- ஆம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தற்சமயம் ஹிந்து மதத்துடன் எந்தத் தொடர்போ, சாயலோ இல்லாத இந்த இடத்தில் இவ்வளவு சமீப காலத்தில் விஷ்ணு ஆலயம் எழுப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். கிருஸ்துவமும், இஸ்லாமும் பரவி விட்டால், ஹிந்து மதமும், வேத வழிபாடும் எப்படி மறக்கடிக்கப்பட்டு விடும் என்பதற்கு இந்தச் சிலையும், ரஷ்யா முழுவதும் சாட்சி.