சிந்து நதியை விட சரஸ்வதி நதிக்கே ரிக் வேதம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று முந்தின் பகுதியில் பார்த்தோம். இதன் அடிப்படையில் திராவிடவாதிகள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம்.
சிந்து நதிகரையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டிவிட்டு வந்தவர்கள் ஆரியர்கள். அவர்கள் சிந்து நதியை ஏன் போற்ற வேண்டும்? அவர்களது தெய்வம் சரஸ்வதியாக இருக்கும் எனவே அதைப் போற்றி இருக்கலாம். சிந்து நதிக்குத் தனிபாடல் இல்லாததே ஆரியர்கள் அதன் கரையில் இருந்த மக்களை வெறுத்தற்குச் சாட்சி என்றும் திராவிடவாதிகள் வாதிடலாம்.
இந்த மாதிரி ஒரு வாதம் இதுவரை எந்த திராவிடவாதியும் செய்யவில்லை. காரணம், அவர்களுக்கு சிந்து நதி நாகரிகம் பற்றியும், மாக்ஸ் முல்லர் அவர்களே பின்னாளில் ஆரியம் என்பது ஒரு இனமல்ல என்று விளக்கம் கூறியது பற்றியும், அவருக்குப் பின் கடந்த நூறு வருடங்களில் அந்தப் பகுதியில் நடந்த ஆராய்ச்சிகள் பற்றியும் ஒன்றும் தெரியாது. எங்கேயாவது யாராவது திராவிடம் என்று என்ற ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அது போதும். அப்படி ஒருவர் சொன்னார் என்பது மட்டுமே போதும். அவருக்குப் பாராட்டு நிச்சயம். அப்படி சொன்னவர் பெயரைச் சொல்லியே இன்னும் சிறிது காலம் ஓட்டி திராவிடம் பேசி திராவக அரசியல் செய்துவிடுவார்கள்.
இவர்கள் கேட்கவில்லையென்றாலும், நாம் இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்வோம். சப்தசிந்து என்று சொல்லுமிடத்தே தத்துவக் கருத்து இருக்கிறது என்று சொன்னோம். அந்தக் கருத்துக்கு உறுதுணையாக ஒரு ஆதாரம் இருக்கிறது.