ஜோதிடத்திலும் ஏழு வருகிறது.
கேது கிரகத்தின் எண் ஏழு ஆகும்.
கேது கிரகம், ஆன்மீகத்துக்கு உறுதுணையாவது. மோட்சத்துக்கு உதவுவது.
சப்த என்னும் ஏழுக்குப் பின் இப்படி ஒரு உயர்ந்த தத்துவம் இருக்கிறது.எனவே சப்தசிந்து என்றது, சிந்து நதி என்னும் நதியை இது குறிக்கவில்லை.
சப்த சிந்துவின் கதை இப்படி இருக்க, நம் திராவிடவாதிகள் என்ன செய்தார்கள்?
சிந்து என்ற ஒரு சொல் அவர்கள் மண்டையில் மணி அடித்தது போல இருந்தது.
சப்தசிந்து என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டு, சமீபத்தில் கூட்டிய செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளிப் பகுதியில் காணப்படும் ஏழு முத்திரைச் சின்னங்களை செம்மொழிச் சின்னத்தில் அமைத்து விட்டார்கள்.
செம்மொழி மாநாட்டுச் சின்னத்தைப் பற்றிய அரசு விளக்கத்தில், சப்தசிந்துவை முன்னிட்டும், தமிழிலும் ஏழு ஏழான தொகுதிகள் உள்ளன என்பதாலும் (மேலே பரிபாடல் போன்ற நூல்களில் வேத மரபை ஒட்டிக் கூறப்பட்டவை) சிந்து சமவெளியின் ஏழு சின்னங்களை அமைத்ததாகக் கூறப்பட்டது.
சப்த சிந்து என்பது ரிக் வேதத்தில் வருவது. ஆரிய வேதம் என்று இவர்கள் அழைக்கும் வேதத்தில், ஆரியர்களுக்கு முக்கியமான சப்த சிந்துவை சுவீகாரம் எடுத்துக் கொண்டு விட்ட இவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்!!
மாக்ஸ் முல்லர் முதலான ஆங்கிலேயர்கள் சப்த சிந்துவை சிந்து நதியில் காணவில்லை. ஐரோப்பாவில் இருக்கும் ரைன் நதி முதற்கொண்டு சப்த சிந்துவைக் கண்டார்கள். அந்தப் பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த ஆரியர்களது பகுதியான சப்த சிந்துவை நம் தமிழகத்துத் திராவிடவாதிகள் சுவீகரித்துக் கொண்டு செம்மொழி சின்னத்திலும் சிம்பாலிக்காக வைத்தார்கள் என்றால், இதுவே திராவிடவாதிகளின் ‘பகுத்தறிவின்” உச்சக் கட்டம் என்று சிரிக்காமல் வேறு என்ன செய்வது??