ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அங்குள்ள மக்கள்எப்பொழுதிலிருந்து அங்கிருக்கிறார்கள், எப்படி வாழந்தார்கள், அவர்கள்கலாச்சாரம் என்ன என்று தெரிந்துகொள்ள எல்லோருக்குமே ஆர்வமாகத் தான் இருக்கும். பாரத மக்களான நமக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது.நம்முடைய சரித்திரத்தைப் பற்றித் தெரிவிக்கும் நூல்களும் கதைகளும் நிறையவே உள்ளன. ரிஷிகள் எழுதிவைத்த புராணங்கள், இராமாயண, மகா பாரதம் போன்றவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது சரித்திரத்தைப் பற்றிச் சொல்லுகின்றன. பாரத நாட்டின் ஒரு அங்கமான தமிழர்களாகிய நமது சரித்திரமும் தமிழ் நூல்கள் மூலம் தெரிகிறது. இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு பிளஸ் பாயிண்ட்.
இந்த மாதிரி பழமையான சரித்திரம் ஆங்கிலேயனுக்கும்,ஐரோப்பியனுக்கும் இல்லை என்பதுதான் நமக்கு துரதிஷ்டமாகிப் போய் விட்டது. அவர்கள் சரித்திரத்தைத் தேடப் போக, நமது சரித்திரத்தை மாற்றி விட்டார்கள். அதன் பெயர்தான் ஆரியப் படையெடுப்பும், ஆரிய - திராவிடச் சண்டையும்.
ஐரோப்பாவில் உள்ள நாடுகள் தனித் தனியாக இருந்தாலும், அங்கு பேசப்படும் மொழிகள் வேறு வேறாக இருந்தாலும், அந்த நாடுகளின் கலாச்சாரம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது. அந்த மொழிகளுக்குள்ளும் நிறைய ஒற்றுமை இருந்தது. அந்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி போல கிரேக்க, லத்தீன் மொழிகள் இருந்தன. எனவே அந்த நாட்டு மக்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட இனத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள். தொழில் புரட்சியும், விஞ்ஞான வளர்ச்சியும் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த நேரம் அது. தங்களை மிஞ்சி யாரும் இல்லை. தாங்களே உயர்ந்த இன மக்கள் என்று அவர்கள் பெருமைப் பட்டுக் கொண்டிருந்த காலம் அது.