புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநானூற்றுத் தாய்-ன்னு சினிமா வசனத்தில் கேட்டிருப்பீங்க அல்லவா? புறநானூறு என்றால் என்ன?
சங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன! புறப் பொருள் பாடல்களாக நானூறு பாட்டுக்களின் தொகுப்பு = புற-நானூறு! 150-க்கும் மேற்பட்ட புலவர்கள் பல்வேறு காலங்களில் (சங்க காலங்களில்) பாடியது!
தமிழ்நாட்டு எல்லை, அரசர்கள், படை, மக்கள், ஆயுதம், உடை, உணவு, சமூக வாழ்க்கை, போர், கையறுநிலை, நடுகல், பெண்கள் தீப்பாய்தல்... என்று சமூகத்தின் ஏற்றம்-இறக்கம் என்று அத்தனையும் ஒளிக்காது காட்டுவது புறநானூறு!
வானியல் நிகழ்வுகள், முருகன் கோட்டம், திருமால் கோயில், வான் ஊர்தி, ஊன் சோறு, வண்டிகளுக்கு சேம அச்சு (ஸ்டெப்னி) என்று மக்கள் வாழ்வில் ஒரு தனி ரவுண்டே வரலாம்!
குமணன், பெருஞ்சித்திரன், மாசாத்தன், இளவெழினி என்று பல கவிஞர்களின் பெயரைப் படிக்கும் போதே, பண்டைத் தமிழின் இனிமை விளங்கும்!
மன்னர்களும் சிறந்த கவிஞர்களாய் இருந்திருப்பதைக் காணலாம்! பாண்டியன் நெடுஞ்செழியன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் நல்லுருத்திரன் போன்றவர்கள் = கவிஞர்+மன்னர்!
மூவேந்தர்கள் மட்டுமில்லாது குறுநில மன்னர்களும் அதே மதிப்புடன் பேசப்படுகிறார்கள்! முல்லைக்குத் தேர் தந்த பாரி, மயிலுக்குப் போர்வை ஈந்த பேகன் கதையெல்லாம் இங்கு தான்!
மன்னர்களின் பட்டப் பெயர்களை வைத்து தனி ஆய்வே நடத்தலாம்! கரிகாற் பெரு வளத்தான், பஃறேர் இளஞ்சேட் சென்னி, ஒள்வாள் கோப்பெருஞ் சேரல், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று பல்திறம் வாய்ந்த தமிழ் மன்னர்கள், தமிழுலா வரும் தலையாய நூல், புற-நானூறு!
அதில், பண்டைத் தமிழ்த் தெய்வமான மாயோன் என்னும் திருமாலின் குறிப்புகள் இதோ....
புறநானூறு:57 - காவன்மரமும் கட்டுத்தறியும்! (வல்லார் - அல்லார் என்று யாதொரு பேதமின்றி, உயர்திணை/அஃறிணை அனைவருக்கும் பொதுவான மாயோன் என்று பாடுகிறார்)
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி.
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! (பாண்டியன் நன்மாறனை, மாயோன் போன்றவன் என்று வியந்து பாடுகிறார். வல்லமை கொண்டார்/வல்லமை இல்லாதார் என்று பேதம் பார்க்காமல் அருளும் மாயோன் போல்...புகழ் சால் பாண்டியா நன்மாறா என்று வியத்தல்!)
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின், நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க: நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
(போருக்குச் செல்வோர், தூய வெள்ளை ஆடைகளை அணிந்து, கருத்துப் போய் இருக்கும் மாயோன் போல் இருந்தார்கள் , அவர்கள் பருந்துப் பறவைகள் எழுப்பும் ஒலிக் குறிப்பை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறார்! மாயோன் = கரியவன், தமிழ் மண்ணின் மைந்தன் என்று தெரிகிறது அல்லவா?)
விளரிக் கொட்பின், வெண்ணரி கடிகுவென்; என்போற் பெருவிதுப்பு உறுக, வேந்தே_ கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை! மணிமருள் மாலை சூட்டி, அவன் தலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே!