New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
Permalink  
 


சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்

 
குர்‍ஆனின் சவாலை ஜின்னும் மனிதனும் எப்படி சந்தித்துள்ளார்கள் என்பதை இந்த கட்டுரை TESTING THE TRUTHFULNESS OF THE Quran - THE CHALLENGE OFFERED BY THE Quran விவரமாக‌ விளக்குகிறது.

நீங்கள் படிப்பதற்காக, குர்‍ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம்.
 
72:1 நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக. 

72:2 "அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று). 

72:3 "மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. 

72:4 "ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 




__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
Permalink  
 


72:5 மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம். 

72:6 "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர். 

72:7 "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர். 

72:8 "நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம். 

72:9 "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான். 

72:10 "அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம். 

72:11 "மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம். 

72:12 "அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம். 

72:13 "இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான். 

72:14 "இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். 

72:15 "அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று). 

72:16 "(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
 
 
இந்த அதிகாரத்தில் பதினான்கரை வசனங்களை (1b - 15) ஜின்கள் பேசினார்கள், அதுவும் குர்‍ஆனின் இலக்கிய நடையிலேயே பேசினார்கள். இந்த பேச்சும் குர்‍ஆனின் ஒரு பாகமாக உள்ளது. இந்த சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும், இதர சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா? 

ஆங்கில மூலம்: Surat al-Jinn 

இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்‍ஆன் ஒரு அற்புதமா?


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard