New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்‍ஆன் இறங்கிய விதம்-ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
குர்‍ஆன் இறங்கிய விதம்-ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
Permalink  
 


குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம்

சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

சாம் ஷமான்

குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185) 

ஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7) 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: குர்‍ஆன் இறங்கிய விதம்
Permalink  
 


நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

இதோ! நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்) 

Lo! We revealed it, that is, the Qur'an, IN ITS ENTIRETY, [sending it down] from the Preserved Tablet to the heaven of this world, on the Night of Ordainment, that is, [the Night] of great eminence. (Tafsir al-Jalalayn; source; capital emphasis ours)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106) 

இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32) 

And those who disbelieve say: "Why is not the Qur'an revealed (nuzzila) to him all at once?" Thus (it is sent down in parts), that We may strengthen your heart thereby. And We have revealed it to you gradually, in stages. (It was revealed to the Prophet in 23 years.). S. 25:32 Hilali-Khan

இந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.

முதல் வெளிப்பாடு: 

பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு "பைத் அல் இஜ்ஜாஹ்" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை "லைலத்துல் கதிர் (The Night of Decree)" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185) 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.

இபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை "மேல் வானங்களில்" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 12; comments within brackets and underline emphasis ours)

இன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

ரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

இபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: "இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: "நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் "நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)

இஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)

ரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது. 

மேற்கொண்டு படிக்க:

இந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா? 

இன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு

இப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா? 

ஆங்கில மூலம்: Quran Contradiction: The descent of the Quran Piecemeal or all at once? 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard