New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்
Permalink  
 


சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 12

முஹம்மது நபி அவர்களுக்கு தேனை மிக விரும்பி உண்பார்.தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை. ஜைனப்   அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார் (புகாரி 4912, 5267, 5268).

புகாரி ஹதீஸ் -4912

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், அவர்களது (வீட்டில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம் தேன் சாப்பிட்ட பின்) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசிவைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை (பிசின் சாப்பிட வில்லை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (வீட்டில்) தேன் குடித்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும் அதைக் குடிக்கமாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

 

மனைவியர்களின் செயலால் வருத்தமடைந்த முஹம்மது நபி ஒரு மாத காலம் எந்த மனைவியர்களின் வீட்டிற்கும் செல்லாமல் இருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

புகாரி ஹதீஸ் :  5203  

அபூ ய அபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜதுந் நபிவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை (தாங்கள்) விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்தவிட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

bukhari Volume 3, Book 43, Number 648:

The Prophet did not go to his wives because of the secret which Hafsa had disclosed to ‘Aisha, and he said that he would not go to his wives for one month as he was angry with them when Allah admonished him.

 (அல்லாஹ் அவரை (நபியை) எச்சரிக்கை செய்த நிகழ்ச்சியில், ஹஃப்ஸா ரகசியத்தை ஆயிஷாவிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு மாதகாலம் அவர்களிடம் (மனைவியர்களிடம்) செல்ல மாட்டேன் என்று கூறினார்)

 இவ்விஷயத்தில் ஹஃப்ஸா மீது மனவருத்தம் கொண்டு அவரை விவாகரத்து செய்ய நாடினார். இந்த விஷயங்கள் அல்லாஹ்வின் கவனத்திற்கு வருகிறது, அவ்வளவு எளிதில் விடுவானா?  ஜிப்ரீலை உடனே அனுப்புகிறான். ஜிப்ரீல் தலையீடு காரணமாக தலாக் சொல்வது தடுக்கப்பட்டது. நபிக்கு எதிராக செயல்பட்ட மனைவியர்களை கடுமையாக எச்சரித்தான்.  உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு உணவை எப்படி நீங்கள் ஹராமாக்கலாம்?  என்று உடனே வஹி அனுப்பி தேன் சாப்பிட வைத்தான்.

1. நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

2. (இத்தகைய) உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் – அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

3. இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை அவர் (அம்மனைவி மற்றொரு மனைவிக்கு) அறிவித்து, அல்லாஹ் அவருக்கு (நபிக்கு) வெளியாக்கிய போது, அவர் (நபி) அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு (தம் மனைவியரில் ஒருவருக்கு) அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று (மனைவியரான) அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் (எல்லாவற்றையும்) தெரிந்தவனாகிய (அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) மீண்டால் (அது உங்களுக்கு நன்மையாகும்) ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் (நபிக்கு) எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

(குர்ஆன் 66:1-4)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நபியிடம், அல்லாஹ் கொண்ட அன்பை சொல்லில் விளக்க முடியாது. ஆனால் அல்லாஹ்விற்கு அந்த சக்களத்தி சண்டையை நிறுத்தத் தெரியவில்லை. அல்லாஹ்வை இதை விட வேடிக்கையாக சித்தரிக்க முடியாது.  தேன் அனுமதிக்கப்ட்ட உணவாக இருப்பினும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே.  நபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?

நபி தேன் அருந்த மாட்டேன் எனக் கூறியது வெளியானால், நபியின் செயல் முறைகளை பின்பற்றிவரும் சஹாபாக்களும் தேன் அருந்தாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சியே இந்த செய்தியை ரகசியமாக பாதுகாக்குமாறு நபி கூறினார் என்று விளக்கமளிக்கின்றனர்.

தேன் கெட்ட வாசனையுடையது அல்ல என்பது அனைவரும் மிக நன்றாக அறிந்த செய்தி. மக்ஃபிர் என்பது கருவேல மரத்தின் பிசின் என்கிறார்கள் சில அறிஞர்கள் பேரீச்சை மரத்தில் உருவாக்கப்படும்  ‘கள்’ வகை மது என்கிறார்கள். எப்படியிருந்தாலும் தேனின் வாசனைக்கும் (Maghafir) மக்ஃபிர் -ன் வாசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்ஃபிர்  மிக மோசமான வாசனையுடையது. மனைவியர்கள் மக்ஃபிர் -ன் வாசனை வருகிறது என்று முஹம்மது நபி அவர்களிடம்,  பொய்யுரைத்தவுடன் அதை அப்படியே நம்பி தேன் அருந்துவதை கைவிடுவதாக முஹம்மது நபி  கூறினாராம்.அல்லாஹ்வும் வஹீ அனுப்பி தேன் அருந்தச் செய்தானாம். அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் சிறிதும் பகுத்தறிவிற்கு பொருந்தவில்லை. தேனின் வாசனைக்கும் மக்ஃபிர்-ன் வாசனைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா முஹம்மது நபி? அல்லது மக்ஃபிர் சாப்பிட்டு இருந்தாரா?

மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்ச்சியின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் முஹம்மது நபி  அவர்களை, ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்குவதைத் தடுப்பது மட்டுமே நபியின் மற்ற மனைவியர்களான ஆயிஷா மற்றும் ஹப்ஸா ஆகியவர்களின் நோக்கம்;  தேன் அருந்துவதை வெறுக்கச் செய்வது அல்ல.  அதாவது கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் (Possessiveness) என்று எண்ணிய அப்பாவி மனைவிகளின் அன்பினால் ஏற்பட்ட சக்களத்திச் சண்டையே இந்நிகழ்ச்சி. இதில் வேறு எந்த சதித் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அல்லாஹ், மேற்கூறிய அடிப்படைக் காரணத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மனைவியர்கள் சதி செய்து விட்டதாக கூறி, ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை எச்சரிக்கிறான். நபிக்கு உதவி செய்வதற்கு ஜிப்ரீல், முஃமின்களில் ஷாலிஹானவர்கள், மலக்குகள் என நிறைய பேர் உள்ளனர் என்றும் பட்டியலிடுகிறான். இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட “தேன் குடித்த” சம்பவத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லாஹ்வே வஹீயின் மூலம் நபியின் மனைவியர்களை எச்சரிக்கை  செய்கிறான் என்றால், நிச்சயமாக வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நாம் முதலில் பார்த்த ஹதீஸில்ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். இதை விரும்பாத ஆயிஷாவும் ஹப்ஸாவும் சதி செய்ததாக கூறியது. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…

புகாரி ஹதீஸ்  :  5268        

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.…

தன்னுடைய வீட்டில், முஹம்மது நபி அதிக நேரம் தங்கி தேன் அருந்தியது ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? முஹம்மது நபி தன்னுடைய வீட்டிற்கு வருவதை ஹஃப்ஸா விரும்பவில்லையா? (என்னய்யா…!  குழப்பம் இது?)   66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கண்டிப்பது யாரை?

புகாரி ஹதீஸ் -4913

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ் முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள். ….

…பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக* அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்களின் உரிமைகள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்குதனைஅவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே, நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றhர். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி வந்துவிட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக் கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வம்ச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான் ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார். உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு…

ஹஃப்ஸா செய்த விவாதத்தால், முஹம்மது நபி கோபமடைந்து ஒரு மாத காலம் மனைவியர்களை விட்டு விலகி இருந்ததுடன் அவர்களை விவாகரத்து கூறுமளவிற்கு   சென்று விட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தேன் குடித்ததற்கு இவ்வளவு  பெரிய பிரச்சினையா? மற்ற மனைவியர்களையும்  எதற்காக விலக்கி  வைக்க வேண்டும்?

தன்னுடைய மகள் உட்பட நபியின் மனைவியர்கள் அனைவரும் தவறு செய்து விட்டதாக நினைத்து அறிவுரை கூறச் சென்ற உமர் அவர்களை, “அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார்” என்று கூறுமளவிற்கு உம்மு சல்மா என்ன பதில் விளக்கத்தைக் கூற முடியும்?

ஒரு ஹதீஸ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள் என்று கூறுகிறது. மற்றொன்று ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக கூறுகிறது. இன்னொரு ஹதீஸ்ஹஃப்ஸாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறது.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்கிவிடுவார்கள் என்று அறிவிப்பதும், ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக அறிவிப்பதும் ஆயிஷாதான். ஏன் இந்த ஆள்மாறட்ட குழப்பம்?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இதில் முக்கியமான ஒரு செய்தி மறைந்திருக்கிறது. 

66 : 1–4 வரையுள்ள குர்ஆன் வசனத்திற்கு உண்மையை தேடிய பொழுது இன்னொரு விளக்கமும்  கிடைத்தது. முஹம்மது நபி குடித்த தேன் எது? எங்கிருந்து வந்தது? இப்ன் ஸாத் –ன் தபாகத் தரும் விளக்கத்தைக் காண்போம்.

Reported by Ibn Sa’d in Tabaqat:

Waqidi has informed us that Abu Bakr has narrated that the messenger of Allah (PBUH) had sexual intercourse with Mariyyah in the house of Hafsah. When the messenger came out of the house, Hafsa was sitting at the gate (behind the locked door). She told the prophet, O Messenger of Allah, do you do this in my house and during my turn? The messenger said, control yourself and let me go because I make her haram to me. Hafsa said, I do not accept, unless you swear for me. That Hazrat (his holiness) said, by Allah I will not contact her again. Qasim ibn Muhammad has said that this promise of the Prophet that had forbidden Mariyyah to himself is invalid ? it does not become a violation (hormat). [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va Andisheh Tehran 1382 solar h (2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]

(நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறையன்று, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா (கதவு அடைக்கப்பட்டிருந்ததால்) வாயிலில் காத்திருக்கிறார், நடந்த நிகழ்ச்சியை உணர்ந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது  என்கிறார். வேறுவழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இதைக் கேள்விப்பட்ட மற்ற மனைவியர்களின் ஏளனப் பார்வையை முஹம்மது நபியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மனைவியர்களுக்கு புத்தி புகட்டவே ஒரு மாத காலம் விலகியிருந்தார். விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்த ஹதீஸைக் கூறிய வாகிதி ஒரு பொய்யர். எனவே இந்த ஹதீஸ் ஏற்புடையது அல்ல. தேன் குடித்த சம்பவமே சரியானது, அதுவே அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம். 66:1-4வரையுள்ள குர்ஆன் வசனங்களை சற்று கூர்ந்து கவனித்து அதன் பொருளைத் தெளிவாக உணர்ந்த பின், ஹஃப்ஸா வீட்டில் அதிக நேரம் தங்கியதாகக் கூறும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நம்பகமான ஹதீஸையும், அறிஞர்களால் பொய்யர் என புறந்தள்ளப்பட்ட வாகிதியால் கூறப்பட்ட ஹதீஸுடன் இணைத்து ஒப்பிட்டு பாருங்கள்.  ஹஃப்ஸா உட்பட மனைவியர்கள் அனைவரையும் மணவிலக்கு செய்யுமளவிற்கு வலுவான காரணம் எதனுடன் பொருந்துகிறது?

தேனா?  மரியத்துல் கிப்தியாவா? நீங்களே  சிந்தித்துப் பருங்கள். “தேன்” எனக் குறிப்பிடப்படுவது சங்கேத வார்த்தையே என்பதை நீங்களே அறியலாம்.

இருப்பினும் எங்களால் சங்கேத வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்று கூறுபவர்களுக்காக, ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புஹாரி ஹதீஸ் தமிழ்மொழிபெயர்ப்பில்  2468 ஆம் ஹதீஸின் 15 ஆம் அடிக்குறிப்பு மரியத்துல் கிப்தியா உடனான “ஜல்ஸா” நிகழ்ச்சியை உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 



மர்ம இரவு...!
ஆரம்பத்தை நோக்கி”  என்ற தொடரில் “மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்” என்ற தலைப்பில் சில குர் ஆன் வசனங்களையும் அதன் பின்னணியிலுள்ள ஹதீஸ்களையும் அவற்றிலுள்ள முரண்பாடுகளையும் பார்த்தோம் மீண்டும் அதே வசனங்களை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
குர்ஆன் வசனம் 24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம்எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்(அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டுஅவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.
குர்ஆன் வசனம் 24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும்முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?
குர்ஆன் வசனம் 24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமாஅவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.
குர்ஆன் வசனம் 24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை(யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?
கீழே உள்ள ஹதீஸ் சற்று பெரியதுதான்எனவே நமது தலைப்பிற்குத் தேவையானவற்றை மட்டும் பார்ப்போம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறேஅவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவேநான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். ....
நபி (ஸல்அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாஙகள் மதீனாவை நெருஙகிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்)தஙகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவேநான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்;...
படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போனஎன் மாலையைப் பெற்றுக் கொண்டேன்பிறகு நான் அவர்கள் தஙகியிருந்த இடத்திற்கு வந்தேன்அப்போது அஙகு ஒருவரும் இல்லைநான் ஏற்கனவே தஙகியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அஙகு அமர்ந்து கொண்டேன்.படையினர் நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன்நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்மிகைத்து நான் தூஙகி விட்டேன்.
ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர்நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார்....
அதன் மீது ஏறிக் கொண்டேன்அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார்இறுதியில் நாஙகள் படையினரை வந்தடைந்தோம்அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காகநடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்தஙகி விட்டிருந்தார்கள்
(புகாரி 2661)
மேற்கண்ட குர் ஆன் வசனத்தின் பின்னணி இதுதான். அதாவது இயற்கைத் தேவைகளுக்காக படையினர் முகாமிட்டிருந்த இடத்தைவிட்டு சற்று தொலைவிற்கு சென்றவர் (இரவலாக வாங்கி அணிந்திருந்த) கழுத்தணி தவறிவிட்டதை உணர்ந்து தேடும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுகிறார். இந்த விவகாரத்தை முஹம்மது உட்பட மற்றெவரும் அறிந்திராத காரணத்தால், ஆயிஷா படையினரைத் தவறவிடுகிறார். பின் அங்கேயே உறங்கியும் விடுகிறார். அங்குவரும் ஸஃப்வான், ஆயிஷாவின் நிலைமையை உணர்ந்து தன்னுடன் அழைத்துக் கொண்டு மற்ற படையினருடன் இணைத்து விடுகிறார். அதற்குள் ஆயிஷா-ஸஃப்வான் தனிமை சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு கிசுகிசுபரவிவிடுகிறது.
இந்த விவகாரம் முஹம்மதின் கோட்டைக்குள் குத்து-வெட்டு உருவாகுமளவிற்கு பூதாகரமாகிறது. எப்பொழுதும் முஹம்மதின் அங்கிப்பையிலிருந்து உடனுக்குடன் வெளியாகும் குர்ஆன் வசனங்கள் இம்முறை வேலைநிறுத்தம் செய்துவிட்டது. ஒரு மாதகாலத்திற்குப் பிறகு ஆயிஷா குற்றமற்றவர் என அல்லாஹ்வால் அறிவிவிக்கப்பட்டது என்கிறார் ஆயிஷா. இந்த வாகுமூலம் எந்த அளவிற்கு உண்மை?
இஸ்லாமில் தயமும் என்றொரு சடங்கு உள்ளதை அறிவீர்கள். (தெரியாதவர்களுக்காக: உடலைத் தூய்மைப்படுத்த தண்ணீர் கிடைக்காத காலங்களில் மண், மணல், கல், சுண்ணாம்பு சுவர் கொண்டு முகம் கை, கால்களில் தேய்த்துக் கொள்வதை தயமும் என்பர்கள்) குர் ஆனும் இதை அனுமதிக்கிறது. இவ்வனுமதி எப்படி வந்தது? இன்னும் சில ஹதீஸ்களை காணலாம்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும்கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
(குர் ஆன் 5:06)
ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம்நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையேபைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில்(வந்துகொண்டுஇருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்தஎனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டதுஅதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (அங்குதங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர்.அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை;அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.
அப்போது மக்கள் (என் தந்தைஅபூபக்ர் (ரலிஅவர்களிடம் சென்று, (உங்கள் புதல்விஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா?அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்குதங்கும்படி செய்துவிட்டார்இங்கும் தண்ணீர் இல்லைமக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர்உடனே அபூபக்ர் (ரலிஅவர்கள்(என்னிடம்வந்தார்கள்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.அபூபக்ர் (ரலிஅவர்கள் (என்னைப் பார்த்து)அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்)தடுத்துவிட்டாயேஇங்கும் தண்ணீர் இல்லைமக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் என் மடிமீது (தலை வைத்துப் படுத்துஇருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படிசெய்துவிட்டதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லைஅப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது)வசனத்தை அல்லாஹ் அருளினான்மக்கள் தயம்மும் செய்தனர். ....
                                                                     (முஸ்லீம்)
    தற்சமயம், தயமும் என்ற மடத்தனம் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குத் தேவையில்லாதது. எனவே மற்ற ஹதீஸ்களை கவனிப்போம். கழுத்தணியை தேடுமாறு சிலரிடம் முஹம்மது கூறுகிறார்.
ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரிஅஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன்அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்)தொலைந்துபோய்விட்டதுஆகவேஅதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது(வழியில்அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டதுஅந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள்அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்துநபி (ஸல்)அவர்களிடம் முறையிட்டனர்அப்போதுதான் தயம்மும் தொடர்பான(5:6ஆவதுஇறைவசனம் அருளப்பெற்றது.
இதையடுத்து (என்னிடம்உசைத் பின் ஹுளைர் (ரலிஅவர்கள்,தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும்அல்லாஹ்வின் மீதாணையாகஓர் (இக்கட்டானசம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும்அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம் களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.
(முஸ்லீம்)
ஒட்டகத்தை கிளப்பியபொழுது அதன் அடியில் கழுத்தணி இருந்தது.
......
-(இது குறித்துஅல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரானஉசைத் பின் அல்ஹுளைர் (ரலிஅவர்கள்அபூபக்ரின் குடும்பத்தாரேஉங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)துமுதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள்(பிறகுநானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோதுஅதன் அடியில் (காணாமற்போனஅந்தக் கழுத்தணி கிடந்தது.
(முஸ்லீம்)
முதலில் பார்த்த ஹதீஸ், படை முகாமிட்ட இடத்தில் கழுத்தணி தொலைந்ததாகக் கூறியது. அடுத்தது, கழுத்தணி தொலைந்தாலேயே முஹம்மதின் படையினர் முகாமிட நேர்ந்ததாகக் கூறுகிறது. படைவீரர்கள், தங்களை தண்ணீரில்லாத இடத்தில் முகாமிட வைத்துவிட்டதாக ஆயிஷாவைக் குறைகூறுவதை ஏற்றுக்கொண்டு தண்டிக்க ஆயிஷாவின் தந்தை அபூபக்கரும் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் மேலாகஅதிகாலை வரை தனது மடியில் முஹம்மது தலைவைத்துப் படுத்திருந்ததால் தன்னால் அசையக்கூட முடியவில்லை என்றும் கூறுகிறார் ஆயிஷா.
நிலைமை இப்படியிருக்க, இயற்கைத் தேவைகளுக்காக சென்றபொழுது கழுத்தணி தொலைந்தது, அதைத் தேடும் முயற்சியிலிருந்த பொழுது மற்றவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதாக ஒப்பாரி வைத்து பெரியதொரு கதையைக் கூறியது எதற்காக? மற்றவர்கள் அவதூறு கூறிவிட்டனர் என்று அல்லாஹ்வும்(!) வருத்தப்பட காரணமான, ஆயிஷா-ஸஃப்வான் தனிமைச் சந்திப்பு நிகழ்ந்தது எப்பொழுது?
கழுத்தணி தொலைக்கப்பட்டதை, முஹம்மது, அபூபக்ர் உட்பட படையினர் அனைவருமே மிக நன்றாகவே அறிவர். ஏனெனில் அனைவரும் புழுதியில் புரண்டுள்ளனர். இதற்கு காரணமான ஆயிஷாவின் நினைவு எள்ளவுமின்றி, இவர்கள் (முஹம்மது, அபூபக்ர், படையினர்) மறுநாள் மதியம்வரை கடத்தியதெப்படி?
உதாரணத்திற்கு, ஒருவர் தனது துணைவியுடன் செல்கிறார். பயணத்தின் பொழுது தன்னுடன் வந்த துணைவி என்ன ஆனார் என்பதை கவனிக்கமாட்டாரா? முஹம்மது அந்த அளவிற்கு பொறுப்பற்ற ஒரு மனிதர் என்பதையே இந்த ஹதீஸ் காண்பிக்கிறது.
அதிகாலை வரை முஹம்மது ஆயிஷாவுடனேயே இருக்கிறார், பிறகு ஆயிஷாவின் ஒட்டகத்தை கிளப்பும் பொழுது அதனடியில் கழுத்தணி கண்டெடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி ஆயிஷா முஹம்மதையும் அவரது படையினரையும் தவறவிட முடியும்? ஸஃப்வானை தனிமையில் சந்திக்க முடியும்?
இவைகள் எதுவும் நான் இட்டுக்கட்டி கூறியவைகளால்ல!. ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளவைகளை ஒருங்கிணைத்துக் காண்பிக்கிறேன் என்பதைத் தவிர வேறில்லை.

ஆயிஷா-ஸஃப்வான் சந்திப்பு நிகழ்ந்த்து எப்பொழுது?

குர் ஆன் 24:11-16 வரையுள்ள வசனத்தின் தேவையென்ன?

அந்த மர்ம இரவின் இருளில் புதைந்துள்ளது என்ன?...!

தஜ்ஜால்

பின்குறிப்பு :
திருமணம், திருவிழா இன்னும் இதர பொதுநிகழ்வுகளில் இரவல் பொருட்களிக் கொண்டு வெளிப்பகட்டுகளிக் காண்பிப்பவர்களை அன்றாடம் நாம் காணலாம். போர்க்களத்திற்கு செல்லும் பொழுது பகட்டு எதற்கு? ஒருவேளை, இவர்கள் போர்க்களத்தை பொழுதுபோக்க SHOPPING“ செய்யும் வியாபாரச் சந்தையாக நினைத்து விட்டனரோ?.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,

5133. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். 

5134. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். 
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்கள்: 

அல்லா கைகுழந்தையான ஆயிஷாவை முகமதுவின் கனவில் காட்டியதால் தான் , 53 வயது முகமது 6 வது ஆயிஷாவை மணத்து, அவரின் 56வது வயதில் 9 வயது ஆயிஷாவுடன் உடலுறவு கொண்டாரா????
சில தற்கால முஸ்லீம்கள் சொல்வது போல் அவருக்கு சிறிது வயது கூட என்றாலும். 54+ வயதுடைய முகமது அவருடன் உடலுறவு கொண்டது தவறு தான்.
இந்த காலத்தில் யாராவது இந்த மாதிரி செய்கிறார்களா??? 
நீங்கள் சொல்லலாம் - அந்த காலத்தில் இது பரவலாக நடந்தது என்று? .. என்னுடைய கேள்வி ? அறியாமை காலத்தில் நடந்த தவறுகளை மாற்ற வந்தது இஸ்லாம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் அல்லா எங்கே போயிருந்தான். முகமது இந்த தவறை செய்யும் போது.

பிரச்சனையே இது தான். நீங்கள் எது தவறு என்று தெரியாமல் இருப்பது தான். இப்பொழுது அனேக நாட்டில் 9 வயது சிறுமியுடன் உடலுற்வு கொண்டால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். முகமதுவை அப்படியே பின்பற்றி அவர் மாதிரியே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு என்று என்னுவது இல்லை. இதில் சட்டத்தை பார்க்காதீர்கள்,நீதி/நியாயத்தை பாருங்கள்- ஏன் உங்களின் மனோபாவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.. முகமது செய்தது சரியே என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்களின் 9 வயது மகளை 50+ வயதுடைய முதியவருக்கு திருமண‌ம் செய்து கொடுப்பீர்களா அல்லது உடலுறவுக்கு அனுமதிப்பீர்களா?

இந்த கால மனிதர்களுக்கு தெரிந்த தரும நீதி, நியாயம் கூட கடவுளான அல்லாவுக்கு தெரியவில்லையே!!! , சிறுவர்/சிறுமி என்பது எல்லா காலத்திலும் ஒன்றுதான். முகமது . ஆயிஷாவை அவரின் வீட்டில் பொம்மையை வைத்து விளையாட அனுமதித்திருந்தார் தெரியுமா? இந்த மாதிரி பொம்மையுடன் விளையாடும் சிறுமியுடன் படுக்கையில் விளையாடுவதா?

6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். 

இங்கே உள்ள விவாதமே, ”அல்லா”வின் தூதன் முகமது என்று உங்களால் நம்பப்படுபவர் இதை செய்தது தான். அவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
குரானும் அல்லாவும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்றால் , இப்பொழுது எதுக்கு ஒருசில முஸ்லிம் நாடுகளில் சிறுமிகளை ம்ணமுடிப்பது தவறு என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியும் முகமது செய்தது தவறு என்று அதனால் தான் இந்த சட்டம்..
கேள்வி . அல்லா எப்படி இதை அனுமதித்தார்?. 
அல்லாவுக்கு தெரியாதா இது தவறு என்று.... இதற்கு காரணம் . பெண்கள் பிள்ளை பெறுவதற்க்கு மட்டும் தான் என்று முகமது(அல்லா) நினைத்தது தான். பெண்களுக்கும் மனது உண்டு, அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம் முகம்துக்கு (அல்லாவுக்கு)
இல்லை. மனைவியானாலும் அவளின் அனுமதி இல்லாமல் - அவளுக்கு விருப்பம் இல்லாமல் படுப்பற்கு கூப்பிடக்கூடாது . அது தான் மனிதம் , பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை.

குரான் “2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!”

5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129

நன்றி: tamil blogggers...

திங்கள், 30 ஏப்ரல், 2012 8:59:00 pm GMT+08:00



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நந்தவனத்தான் கூறியது...

சு. பிரியர் ஒருவாறு மனைவி விசயத்தை சமாளித்துவிட்டார். ஆனால் முகம்மது திருமணம் செய்யாமல் பெண்ணை தொடாத உத்தமர் போல முன்னிறுத்துகின்றாரே. அவர் திருமணம் செய்யாமல் அடிமை பெண்களுடன் சல்லாபிக்கவில்லையா? அது விபச்சாரம் மட்டுமல்ல கற்பழிப்பும் அல்லவா? கமலஹாசன் மாதிரி மரியம் என்ற கிறுத்துவ அடிமைப்பெண்ணை கற்பமாக்கிவிட்டு பின் திருமணம் புரிந்தவர்தானே நபிகள் நாயகம். மரியம் அவரது பிராபர்டி என கருதி சல்லாபித்தார் நபிகள் நாயகம் என தபாரியின் வரலாறு எனும் புத்தகம் கூறுகிறதாம். இதுதவிர ரஹானா எனும் யூத பெண்ணையும் "வைத்திருந்தவர்"தான் நபிகள் நாயகம். இன்னமும் கணக்கில் வராத ஒன் நைட் ஸ்டேண்டுகள் எத்தனையோ தெரியவில்லை.

மேலும் தனது அடிப்பொடிகளுக்கு அடிமையாக சிறைபட்ட பெண்களுடன் உறவு கொள்ள (கற்பழிக்க) அனுமதித்தவர்தானே நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்லமவர்கள். இந்த திருமணமல்லாத சல்லாங்களுக்கு என்ன பெயர் விபசாரமா அல்லது கற்பழிப்பா?


இன்னொரு கேள்வி: அறியாமைக் காலத் திருமணங்கள் பலவற்றை தடுத்த முகம்மதுவுக்கும் அல்லாஹ்வுக்கும் வயதுக்குகூட வராத பெண் குழந்தை திருமணத்தை தடுக்க ஏன் தோன்றவில்லை. தடுத்தால் முகம்மது ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து வயது பெண்களையும் அனுபவித்தவர் என்ற சாதனை செய்யமுடியாது என்பதினாலா?

திங்கள், 30 ஏப்ரல், 2012 10:30:00 pm GMT+08:00



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard