New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலதாரமணம் ஏன்?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பலதாரமணம் ஏன்?
Permalink  
 


பலதாரமணம் ஏன்?

நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பல கன்னியர் அவர் காலடியில் இருந்திருப்பார்கள். அவர் திருமணம் செய்ததில் ஆயிஷா அவர்களைத் தவிர யாரும் கன்னியரில்லை. நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் அனைத்தும் இச்சையின காரணமாக செய்யப்பட்டதல்ல. அனைத்தும் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் பலவாறாக பிளவுபட்ட அரபு சமுதாயங்களை இணைக்கவே இத்தனை பெண்களுடன் வாழ்ந்தார் என மார்க்க அறிஞர்கள்   வாதிடுகின்றனர்.  நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய திருமணங்களுக்கு இப்படியொரு விளக்கத்தை எங்கும்எப்பொழும் தரவில்லை. ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க உலகில் இதைவிட வேறு வழிகளே இல்லையா?. 

 

நமது  நாட்டில் இன்றும் பலவிதமான தீவிரவாத அமைப்புக்களும், பிரிவினைவாத குழுக்களும் உள்ளது. இவர்களால் எப்பொழுதும் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தீவரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அடக்கியாள,  பிரதமரோ அல்லது உள்த்துறை அமைச்சரோ  தீவிரவாதிகளுடன் திருமண ஒப்பந்தங்களை, செய்து  கொண்டதாக கூறினால் அவர்களை எள்ளிநகையட மாட்டீர்களா?

 

சமுதாயங்களின் தலைவர்கள் தங்களைச் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வளிக்க, திருமணம் செய்யத் துவங்கினால் என்ன ஆகும்? உதாரணத்திற்கு நமது பிரதமர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். பிரதமரின் மனைவியர்களின் சிறிய தேவைகளை நிர்வகிக்கவே தனிஅமைச்சரவை தேவைப்படும். மனைவியர்கள் தங்குவதற்கு அந்தப்புரங்கள் கோடிக்கணக்கில் அமைக்க பெரியதொரு தனி மாநிலமே உருவாக்க வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களின் இவ்விளக்கம் முட்டாள்தனமாகத்  தெரியவில்லையா?

இன்றும் உலகில் ஆதரவற்ற நடுத்தர வயது பெண்கள் மூதாட்டிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வாறு வாழ்கின்றனர்? பிளவுபட்ட சமுதாயத்தை அல்லாஹ்வினாலும் அவன் கொள்கைகளாலும் இணைக்க முடியவில்லையா?.

முஹம்மது நபி  அவர்கள் மட்டுமல்ல அவருடைய அன்பு (சகோதரன்) மருமகன்  அலீ அவர்களின் மனைவியரின் எண்ணிக்கை எவ்வளவு என வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என ஒரு ஏழு பெண்களைக் குறிப்பிடுகின்றனர். இங்கும்  அடிமைப் பெண்களும், வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் கணக்கு தனி.இவரும் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தவர்தானா?.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அலீ  அவர்களும் தனது மனைவியரின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டார். ஆனால், அதை முஹம்மது நபி விரும்பவில்லை. தனது அன்பு மகள் பாத்திமா    இருக்கும் பொழுது வேறு எந்த பெண்ணையும்  திருமணம்  செய்யக்கூடாது என தடைவிதித்தார்.காரணம்பாத்திமா   விரும்பவில்லை எனவே முஹம்மது நபியும் அதை விரும்பவில்லை.

புகாரி ஹதீஸ் -5230

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டுஅவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்.) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.

 

 பலதாரமணம் அல்லாஹ் அனுமதித்த வழிமுறை. பொதுவாக, திருமணத்திற்கு  மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் பொறுப்பாளரின் (தந்தை)  சம்மதம் மட்டுமே போதுமானது. பலதாரமணத்தை விரும்புபவர்கள் மற்ற மனைவியரின் ஒப்புதலையோ அல்லது அவர்களுடைய பொறுப்பாளர்களின்(மாமனார்) ஒப்புதலையோ பெற வேண்டுமென்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதிக்கு எதிராக முஹம்மது நபி  ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தன் அன்பு மகளுக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்பாதவர், தன்னுடைய மனைவியர்களின் விஷயத்திலும் இதே நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லையே?. அலீ பின் அபீதாலிப் அவர்களின் இரண்டாவது திருமணம் தன் மகளை வெறுப்படையச் செய்து விடும் என்று வேதனைப்பட்டவர் தன்னுடைய மற்ற மனைவியர்களும் இதேபோல அடைந்த மனவேதனையை குறித்து எந்த கவலையும் அடையவில்லையே? இந்தசம்பவம் முஹம்மது நபியின் இரட்டை வேடத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா?எப்படி இருக்கிறது இவர்களது நியாயம்? 

முதல் மனைவி ஃபாத்திமா உயிருடன் இருந்தவரை அலீ   வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அடிமைபெண்களின் கணக்கு தனி. அலீ  அவர்களின் செயல்களில் அதிருப்தி அடைந்த அவருடைய மகன்கள் ஒரு காலகட்டத்தில் அலீ  அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தனர்.

ஷரீயத்தின்படி ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கை நடத்தலாம்ஆனால் ஷரீயத்தை உருவாக்கியவர் நாற்பது மனைவிகளுடன் வாழ்கை நடத்தலாம்.  இது நடுநிலையற்றது என வாதிடும் சமஉரிமை விரும்பிகளுக்கு அல்லாஹ்வின்  பதில்,

 (ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் (அடிமைகள்) தவிர (இவர்களிடம் உறவு கொள்வதில்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்

(குர்ஆன் 23:6, 70:30)

சமஉரிமை விரும்பிகள், வைப்பாட்டிகளை தங்கள் விரும்பும் எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்கான அனுமதி.

குடும்ப வாழ்க்கையை, பலதார மணவாழ்கையை, பெண்களின் குணங்களையும் செயல்பாடுகளைப் பற்றி தன் கருத்துக்களை அல்லது அறிவுரைகளை தெரிவிக்க பல மனைவிகளுடன் வாழ்ந்து சுயஅனுபவம் பெற்று விளக்கமளித்தார் என்பதும் உலமாக்களின் பதில்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பொய், திருட்டு, மது அருந்துதல், விபச்சாரம், கொலை, கற்பழிப்பு பற்றி ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மேற்கண்ட செயல்களில் சுயஅனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று  வாதிட்டால் உங்களால் ஏற்க முடியுமா?.

மேலும் மதவிடாய் பற்றி  உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர் (அவர்களுக்கு) நீர் கூறுவீராக, அது ஓர் அசுத்தமான உபாதையாகும் அந்த மாதவிடாயி(ன்     காலத்தி)ல்  பெண்களை விட்டு விலகி இருங்கள் அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்…

(குர்ஆன் 2:222)

மனைவியின் மாதவிடாய் காலங்களிலும் பிரசவ காலங்களிலும் ஆண்கள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வது சிறப்பானது. அவ்வாறு உணர்ச்சிகளை அடக்க முடியாத சபலபுத்தி உள்ள ஆண்கள்  விபச்சாரம், தவறான தெடர்பு என வழிதவறி விடுகிறார்கள். எனவே அதற்கு இஸ்லாம் தரும் ஒரே தீர்வு பலதார மணம் என்பதே மார்க்க மாமேதைகளின் விளக்கம். 

 

அப்படி என்றால் முஹம்மது நபி  அவர்களும்  ஒரு சபலபுத்திகாரரா?.  – ஆம்…!

புகாரி ஹதீஸ் -302

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (நபியின் மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் போகுமிடத்தை துணியால் கட்டிக் கொள்ளுமாறு  கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைகளுக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.)

புகாரி ஹதீஸ் -300

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்கள் என்னை துணி கட்டிக்கொள்ளுமாறு பணிப்பார்கள். (நான் அவ்வாறே செய்து கொள்வேன்) அப்போது என்னை அணைத்துக் கொள்வார்கள்.

புகாரி ஹதீஸ் -303

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில்  ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்.

புகாரி ஹதீஸ் -299

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

 பெருந்துடக்குடனிருந்த  நபி (ஸல்) அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம்.

புகாரி ஹதீஸ்          : 1929         

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ,உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா, என்று கேட்டார்கள். நான், ஆம்!, என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.

Sunaan Abu Dawud: Book 1, Number 0270:

Narrated Aisha, Ummul Mu’minin:

 Umarah ibn Ghurab said that his paternal aunt narrated to him that she asked Aisha: What if one of us menstruates and she and her husband have no bed except one? She replied: I relate to you what the Apostle of Allah (peace_be_upon_him) had done.

One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.

Sunaan Abu Dawud: Book 13, Number 2380:

Narrated Aisha:

The Prophet (peace_be_upon_him) used to kiss her and suck her tongue when he was fasting.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

(ஆயிஷா அறிவிக்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்),  நோன்பு வைத்திருக்கும் வேளையிலும் முத்தமிட்டு அவருடைய (ஆயிஷா) நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.)

 புகாரி ஹதீஸ்  : 1928         

உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.

புகாரி ஹதீஸ் -297

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்கள் நான் மாதவிடாயுடன் இருக்கும் பொழுது எனது மடியில் தமது தலையை வைத்தபடி திருக்குர்ஆன் ஓதுவார்கள்.

 

பெண்களுக்கு ஒரு குறிபபிட்ட வயதைக் கடக்கும் பொழுது தாம்பத்தியத்தில் நாட்டம் முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் நிலை வேறுவிதமாக மாறிவிடுகிறது. வயதானாலும் அவர்களின் தாம்பத்திய உணர்வுகள் குறைவதில்லை. எனவே அவர்கள் வழி தவறி விடாமல் இருக்கவும் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது என்கின்றனர் மார்க்க வல்லுனர்கள்.

 

ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை மிக சுலபமாக பட்டியலிட முடியும்.

 பெண் மோகம்

துணையின் மீது வெறுப்புஇணையின் அழகு மற்றும் குணம்

துணையின் நோய் -  உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள்

வாரிசு



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சவ்தா அவர்களைத் தவிர முஹம்மது நபி அவர்களின் மனைவியர் அனைவருமே மிக மிக அழகானவர்கள்ஓரிருவரைத்தவிர அனைவரும் முப்பது வயதிற்குட்பட்ட இளம் பெண்கள்எனவே முஹம்மது நபி  அவர்களுக்கு இரண்டாவதுமூன்றாவது மற்றும் நான்காவது காரணங்கள் பொறுத்தமற்றதுமேலும்அதற்கு ஆதரமாக ஹதீஸ், வரலாற்று செய்தி, அல்லது அறிஞர்களின் விளக்கம் என எந்த ஒரு தகவலும் இல்லைஇஸ்லாமில் பலதாரமணத்திற்கான அனுமதி ஏன்? மிக பிரபலமான இஸ்லாமிய பேச்சாளர் Dr.ஜாகீர் நாயக் அவர்களின்பதில்

                இப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒருஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.
1. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.
குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.
மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் கொள்கைகளில் – செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:
1. ‘ஃபர்லு’- கட்டாயக் கடமைகள்

2. ‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை

3. ‘முபாஹ் ‘- அனுமதிக்கப்பட்டவைகள்

4. ‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.

5. ‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.

மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.

முஹம்மது நபி  ஏன் நான்கு மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்? என்ற கேள்விக்கு Dr.ஜாகீர் நாயக்அவர்களின்பதில்

 

 2. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணினத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

                இயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.
                யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

3. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.  

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.

மறுப்பு :

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள் எண்ணிக்கை

வயதுசதவீதம்ஆண்களின்

 

எண்ணிக்கை

பெண்களின்

 

எண்ணிக்கை

0-14 வயதிற்குள்20.4%3,10,95,8472,97,15,872
15-64 வயது வரை67.2%10,00,22,84510,04,13,484
65 வயதிற்கு மேல்12.5%1,55,42,2882,16,53,879

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயதுஆண்/பெண்

 

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது1.05
 15 வயதிற்குள்1.05
15-64 வயது வரை1.0
65 வயதிற்கு மேல்0.72
மொத்த மக்கள் தொகையில்0.97

எனவே மேற்கண்ட வாதத்தின் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இளம்வயது ஆண்களும் வயதான கிழவிகளுடன் பலதாரமணம் புரிந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதை உங்களால் ஏற்க முடியுமா?

 

ஒரு புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம்ஒருவனுக்கு ஒருத்தி என்று உறுதியாக இருந்தால் பல  பெண்களின் திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் தடைபடும் அதன் காரணமாக ஒழுக்க கேடுகள்தான் அதிகமாகும்எனவே பலதார திருமணத்தின் மூலம் இஸ்லாம் தீர்வு காண்கிறது என்பதும்  Dr.ஜாகீர் நாயக் போன்றவர்களின் வாதம்.

Dr.ஜாகீர் நாயக்:

4. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.

ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.

உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

Dr.ஜாகீர் நாயக் அவர்கள் தவறான வாதத்தை முன்வைக்கிறார்.அவரின் வாதத்திலுள்ள முரண்பாடுகளைக் காண்போம்

ஆண்/பெண் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, 2006 est.).

வயதுசதவீதம்ஆண்களின்

 

எண்ணிக்கை

பெண்களின்எண்ணிக்கை
0-14 வயதிற்குள்27.4%91,92,19,44687,02,42,271
15-64 வயது வரை65.2%2,15,20,66,8882,10,03,34,722
65 வயதிற்கு மேல்7.4%21,31,6021627,01,46,721

இதை வயது அடிப்படையில் பிரித்தால், உலகில் ஆண்/பெண் விகிதாச்சாரம்

வயதுஆண்/பெண்

 

விகிதாச்சாரம்

பிறப்பின் பொழுது1.06
15 வயதிற்குள்1.06
15-64 வயது வரை1.03
65 வயதிற்கு மேல்0.79
மொத்த மக்கள் தொகையில்1.01

எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard