ஆரம்பத்தை நோக்கி: பகுதி 5
1. கதீஜா
நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும் உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர்மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா(ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள் (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா அவர்களது உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்) மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்) இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து வைத்தீர்களே தெரியவில்லையா?” என்றார்.
தச்சஆளே ///அல்-புகாரி பாகம் 3, அத்தியாயம் 51,
எண் 2617 , அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்கள் “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். ////
///அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: “இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?” என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: ” நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்” .அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.////
தச்சஆளே ,ஒரு பத்திக்கு இடையில் இவ்வளவு பெரிய பொய்யா? முதல் பத்தியில் புகாரி ஹதிதில்,நபி ஸல்] அவர்கள் அந்த பெண்ணை கொல்ல வேண்டாம் என்று கூறியதை போட்டுவிட்டு,அடுத்த பத்தியில் அவளை கொல்லும்படியாக உத்தரவிட்டதாக உளறுகிறார், அவ்வாறெனின் இவ்வளவு பெரிய பொய்களை அள்ளி ,அள்ளி யூதர்களும் சங்க பரிவார்களும் மிஞ்சும் அளவில் சொல்ல வேண்டியதன் அவசியம் உங்களுக்கு வந்தது எதனால்? வின் டிவியில் பிறந்த ஞான ஒளியிலா? நம்ப முடியவில்லை தச்ச சாமி
///அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்து, இஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார். மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறது. அங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.///
///நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. ////
இதில் உள்ள முரண்பாட்டை தச்சஆள் விளக்குவாரா?
விஷம் வைக்கப்பட்டது கைபர் போருக்கு முன் நடந்தது .ஆனால் அது கைபருக்கு பின்னர் நடந்ததாகவும் இங்கே தனது அடுத்த உளறலை உளறி யுள்ளார்
//இதை அறிந்த முஹம்மது நபி, யூதர்களை வெளியில் வரவழைக்க அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும், அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும், தீயிட்டும் கொளுத்தினார்.///
///போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார், புழுதியில் புரண்டு கதறுகிறார். ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார். இதில் இரண்டாமவரே ஸஃபியா. இந் நிலையில் நபி (ஸல்) அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.////
இந்த செய்திகளுக்கு ஆதாரம் தாருங்கள் .இல்லையெனில் பொய்யரென்று ஒப்புக் கொள்ளுங்கள்.
இப்ராஹிம் அவர்களுக்கு,
முதலில், கணவனைக் (கினானா) கொன்று மனைவியை வம்படியாக அபகரித்த முஹம்மதுவின் செயலுக்கு பதில் செல்லுங்கள். ஹதீஸின் முரண்பாடுகளை மீண்டும் விளக்குகிறேன்.
தஜ்ஜால்
முஹம்மது ஆரம்பத்தில் அப்பெண்ணை மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்) ஆதாரம் ..
http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-87.html
இப்ராஹிம் அவர்களுக்கு,
ஆதாரம் …http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-87.html
கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
இப்போரில் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள் குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள் அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும் கூறுகின்றனர்.
அறிஞர் மன்சூர்ஃபூ (ரஹ்) கூறுவதாவது: “ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இப்போல் கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில் ஒரு பெயர் ‘தப்ரி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் ‘வாகிதி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.” (ரஹ்மத்துல் லில் ஆலமீன்) ஆதாரம்
யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.” (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)