New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அல்லாவின் பார்வையில் பெண்கள்:


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: அல்லாவின் பார்வையில் பெண்கள்:
Permalink  
 


5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

 

லாமியா ஐந்து வயது பாதி எகிப்திய – பாதி சவுதி குழந்தை. இக்குழந்தையின் தாயார் எகிப்தில் பிறந்து சவுதி அரேபியாவுக்கு 25 வருடத்துக்கு முன்னர் வந்தார். அக்குழந்தையின் தந்தை பாயான் அல் காம்தி என்பவர் இஸ்லாமிய பிரச்சார தொலைக்காட்சிகளில் இஸ்லாமை பிரச்சாரம் செய்பவர். அல் காம்தி லாமாவின் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அந்த குழந்தையை எடுத்துகொண்டார். இந்த வீடியோவில்குழந்தையை தத்தெடுத்துகொண்டால் மதரீதியாக என்ன பயன் பெறலாம் என்று உள்ளம் உருகுவதை காணலாம்.

 

fayhan-al-ghamdi

 

செய்திகளின் படி, லாமா வினோதமான நடத்தை காரணமாக அக்குழந்தையின் கன்னித்தன்மையை தான் சந்தேகித்ததாக இந்த காம்தி நீதிபதியிடம் கூறியிருக்கிறார். ஒரு மருத்துவரை வைத்து இந்த குழந்தை கன்னித்தன்மையுடன் இருக்கிறதா என்று பரிசோதித்திருக்கிறார். இக்குழந்தையின் தாயார் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் லாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றதும் தான் ஏதோ தவறான விஷயம் நடந்திருக்கிறது என்று சந்தேகித்ததாக கூறியிருக்கிறார். ஆனால், லாமாவின் தந்தை தன்னை குழந்தையோடு பேச அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

தாயார், குழந்தையின் தந்தையிடம், தன் குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடும்படி கெஞ்சி கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்  ஒருவழியாக குழந்தையை அவர் பார்க்கும்போது குழந்தை ICU தீவிர கண்காணிப்பு பகுதியில் மருத்துவமனையில் இருந்தது. அக்குழந்தையின் ஒரு விரலில் நகம் பிடுங்கப்பட்டிருந்ததை பார்த்ததாகவும் கூறினார். அக்குழந்தையின் ஒருபக்க தலை சிதைக்கப்பட்டிருந்தது. அக்குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு சூடு மூலமாக அதனை மூட முயற்சி நடந்திருந்தது.  ராண்டா அல் கலீப் என்ற சமூக சேவகி அல் குலாயானி தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் நடந்த பேட்டியில், லாமாவின் முதுகு உடைக்கப்பட்டிருந்ததாகவும், அக்குழந்தை உடலெங்கும் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

lama1

 

இந்த பயங்கர கதை லாமா கடந்த வருடம் அக்டோபரில் இறந்தபோதும் முடிவடையவில்லை. மகளை பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொன்ற தந்தை அதுவரையில் சிறையில் இருந்ததே போதுமான தண்டனை என்றும், இனி அவர் ரத்தப்பணத்தை தாயிடம் கொடுத்தால் போதுமானது என்றும்  நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. நான்கு மாதங்களும், சில ஆயிரம் ரியால்களும், லாமாவின் வாழ்க்கைக்கு பதிலீடு. இந்த தீர்ப்பு ஹதீஸிலிருந்து பெறப்பட்டது.

 

பெண்மகவை கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

 

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

 

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

 

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 

http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

நேஷனல் பத்திரிக்கை செய்தி

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

 

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலிலல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

நன்றி அரபு எமிரேட்ஸ்லிருந்து வெளிவரும் நேஷனல் பத்திரிக்கை செய்தி

Read more: http://www.thenational.ae/news/world/middle-east/saudi-preacher-who-raped-tortured-daughter-5-to-pay-blood-money



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard