New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜனநாயகவாதிகள் பின்னே வால் பிடித்து வாழும் இஸ்லாம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஜனநாயகவாதிகள் பின்னே வால் பிடித்து வாழும் இஸ்லாம்
Permalink  
 



ஜனநாயகவாதிகள் பின்னே வால் பிடித்து வாழும் இஸ்லாம்

 


மதக் கோட்பாடுகளையும், அதன் அசிங்கங்களையும், அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மதவெறியர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும், கொலை செய்வதும் பன்னெடுங்காலமாக நடைமுறையில் உள்ளதே.இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. தங்கள் வேதங்களை படிக்கச் சொல்லிஆய்வு செய்யுங்கள் என்று இவர்கள் தேனொழுக கூறினாலும் கேள்விக்குள்ளாக்கப்படாமல் அப்படியே “அனைத்தும் அற்புதம் என்று ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் நயவஞ்சமான  விருப்பம்.. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களையும் இவர்கள் விடுவதில்லை. விவாதம் என்று ஒப்புக்காக சில வாதங்களை அவர்கள் எடுத்துவைத்தாலும் பதில் சொல்ல முடியாத கட்டம் வரும்போது ஆத்திரமடைகின்றனர்; கோபம் கொள்கின்றனர். பொருளற்று அரற்றுகின்றனர். தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். பிற இடங்களில் அடக்கி வாசிக்கின்றனர். அதனால் பெரும்பான்மை பாரமரர்களைத் தன்னுடைய வன்முறைக்கும் ஆதிக்கத்திற்கும் திரட்டிட கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர்.
      இன்று கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தொடர்பில்லாத இந்த வலைப்பூவில்  வந்துள்ள “லூத் என்ற லூசு என்ற கட்டுரைக்கு பொறுப்பாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதை அறியும் போது மனம் வருத்தமாக உள்ளது. பெரும்பாண்மையாக இருக்கிறோம் என்ற தைரியத்தில் இந்த வன்முறையை தாங்கள் ஏதோ வீராதி வீரர்கள் போல் நடத்தியுள்னர். நாங்களும் ஒருநாள் பெரும்பான்மையாகுவோம்; அன்று இவற்றிற்கெல்லாம் பதிலடி தருவோம் என்று கூறிக்கொண்டு இந்த இசுலாமிய வெறியர்களின் வீரத்தை இந்தியவரலாற்றினூடே ஒரு சிறு தொகுப்பாகப் பார்ப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்தியாவில் காலூன்றிய, இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுவதுக்குமான இசுலாமியர்களை இருவைகயாப் பிரிக்கலாம். ஒரு வகையினர் ‘முல்லா எனப்படுவர். இவர்களை எப்படி அடையாளம் காணுவது என்றால் ‘அரசையும் அரசு கஜானாவைய்ம் சார்ந்து வாழ்பவர்கள். அரசின் சட்ட திட்டங்களில் தலையிடுபவர்கள். அதற்கும் ஒருபடி மேலே அரசின் சட்ட திட்டங்களை வகுப்பவர்களாகவும் இருப்பவர்கள். அரசுக்கும் அதிலிருந்து கிடைக்கும் தன்னுடைய சுகத்திற்கும் இடையூறு இல்லாத இசுலாமிய சட்டங்களையே உண்மையான நபிவழி என்று சாதித்து பிற இசுலாமியக் குழுக்களை அழிக்க நினைப்பவர்கள். ஒரு வகையில் இவர்களை வகாபிகள் என்று கூட அழைக்கலாம். இவர்கள் கையிலேயே சமூக அதிகாரம் இருக்கும். அதாவது அரசு எந்திரத்தை பக்கப்பலமாகக் கொண்டவர்கள். இவர்களின் அரசு இருக்கும் இடங்களில் பிறமதங்களுக்கான உரிமை கிடையாது.வழிபாட்டுத்ளங்களை நிறுவ முடியாது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே இருக்கும் கோயில்களையும், பிறமத அடையாளங்களையும் அகற்றியுள்ளனர். அதுபோல பிற மதத்தினர்களுக்கென்று தனி வரிவிதிப்புக் கொள்கையும் கொண்டவர்கள். அச்சு அசலாக இவர்களை பார்ப்னர்களுடன் ஒப்பிடலாம். பார்ப்பனர்கள் பிற சாதிகள் மீது தொடுப்பதை இவர்கள் பிற மதங்கள் மீது தொடுக்கின்றனர். இவர்களுக்கும் தத்துவம், அறிவியல், மற்றும் சமூக வளர்ச்சிகளுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பழமையை அப்படியே நிலை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் சமூக அக்கறை. தப்லீக் ஜமாத் என்று இந்தியவில் இயங்குபவர்கள் இந்த முல்லா வகையினர்தவ்ஹீத் ஜமாத்தமுமுக என்றும் பிரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் அதிகாரத்தை சுவைப்பதற்காக அடித்துக்கொண்டு நாறுபவர்கள்,
      இரண்டாவது வகையினர் ‘ஷூபிக்கள் எனப்படுவர். இவர்கள் இசுலாமியத் தத்துவ இயல் ஆசிரியர்களின் வழித் தோன்றல்கள். உலக முழுவதும் நடந்து வரும் தந்துவங்களைப் பயிலுவதும், புதிய தத்துவ விசாரனைகளை உருவாக்குதும், இசுலாமியத் தத்துவ சாராம்சங்களுடன் அதனை பொருத்துவதும், தேவைப்படும் இடங்களில் மாற்றத்தையும் வேண்டுபவர்கள். இறைவன் ஒருவன் என்பதையே இவர்கள் கொள்கையாக கொண்டாலும் மக்களின் மனங்களில், பண்பாடுகளில் ஏக இறைவனை  காண்பவர்கள். சுருங்கச் சொல்வோமானால் இவர்களை ஆன்மீகவாதிகள் என்று கூறலாம். தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஷூபிக்களே. இவர்களின் முக்கிய பண்பு, மக்களுடன் மக்களுடைய பண்பாட்டுடன் கலந்து வாழ்வதை ஆதரிப்பதாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் குடியேறிய இவர்கள் இந்துக்களுடன் இந்துக்களின் பண்பாடுகளுடன் கலந்து இசுலாத்தை பரப்பினர். பொட்டுவைத்தல், தாலிகட்டுதல், புர்கா அணியாத பெண்கள், விவசாயம் செய்தல், விவசாயத்தில் பெண்களும் ஈடுபடுதல் போன்ற எளிய மக்களின் பண்புகளை ஆதரிப்பவர்கள் இந்து தெய்வங்களிலும் அதன் சாரமான ‘கடவுள்என்ற ஆன்மாவை “நீங்கள் சிவன் என்கிறீர்கள்; நாங்கள் அல்லா என்கிறோம்; எதுவானாலும் கடவுள்தான் என்று ஏற்றுக்கொள்பவர்கள். இவர்கள் வழியில் வந்தவர்கள் இன்று பக்கீர்சாஎன்று இசலாத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களாகாக தனி குடியிருப்புதனி கல்லரை என்று இழிவுபடுத்தப்பட்டு வாழ்கிறார்கள்.முல்லாக்களின் ‘தூய்மைபடுத்துல் என்ற வன்முறையையும் மீறி இந்த ஷூபிக்களின்  வழியிலேயே தமிழகத்தின் பெரும்பானமையான இசுலாமியர்கள் வாழ்தனர்; வாழுகின்றனர். ஆனாலும் பக்கீரசாக்களுடன் சமூக உறவு கொள்வதில்லை.
      ஷூபிக்களுக்கும் முல்லாக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் மிக முக்கியமான இரு வேறுபாடுகள் உள்ளன. முல்லாக்கள் சொத்துடமைவாதிகள். மனிதனைப் படைத்தது இறைவனை வணங்குவதற்காகத்தான்; அதாவது அதற்காக மட்டுமே உழைக்கவேண்டும் என்று இவர்கள் கூறினாலும் தனிச்சொத்தும், சந்ததிகளுக்கென்று சொத்துக்குவிப்பும் இவர்களின் முக்கிய குறிக்கோள். ஷூபி ஞானிகள் தனக்கென்று எந்த உடமைகளையும் மனங்கொள்ளாதவர்கள். அன்றாடத் தேவைகளான உணவு, உடை போன்றவற்றிற்கு ஏதாவது ஒருவகையில் ஏற்பாடு செய்து கொண்டால் போதும்; மற்றபடி இறைவனை தியானிப்பதில், இரண்டறக்கலந்துவிடுவதில் நாட்டம் கொண்டவர்கள். அதனையே மக்களுக்கும் போதித்தனர். இவர்களின் கோட்பாட்டினை புத்தரின் கோட்பாடுகளுடன் பொருத்தலாம். ஒருமுக்கிய வேறுபாடு புத்தர் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இவர்களும் எப்பொழுதுமே மக்களுக்கு சொர்கத்திற்கான வழியை மட்டுமே காட்டினார்கள். இவர்களாலும் அறிவியல் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்து கோயில்களுக்கு வரி செலுத்துதல், கோயில் விழாக்களுக்கு நன்கொடை செலுத்துதல், கடா வெட்டி சாமி கும்பிடவதற்கு ஆட்டுக்கிடா வழங்குதல், விழாக்காலங்களில் ஒருவருக்கொருவர் திண்பண்டங்களை பகிர்ந்துகொள்ளுதல், மாமா, மாப்பிள்ளை என்று உறவுமுறை சொல்லி ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளுதல் போன்று இந்துக்களுடன் தமிழக முஸ்லீம்கள் (பிற இந்தியப் பகுதிகளிலும் இருந்திருக்கலாம்) இணக்கமாக இருந்ததை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. காரணம் முல்லாக்களின் பிரச்சாரத்தைவிட ஷூபிக்களின் பிரச்சாரமே இந்திய மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதுதான். ஷூபிக்கள் இல்லையேல் இங்கு இசுலாம் விரைவாகப் பரவி இருக்கவே முடியாது. (கிறித்தவர்களும் இம்முறையையே பயன்படுத்தியதால்தான் உடையார் கிறிஸடின், தலித் கிறிஸ்டின் என்றானது) ஆனாலும் ஷூபிக்கள் முல்லாக்களால் இகழப்படுவதும் ஒடுக்கப்படுவதுமாக வரலாறு முழுக்க நடைபெற்றது.
      1990களில் உருவாக்கப்பட்ட தவ்ஹீத் பிரச்சாரக்குழுக்களால் இத்தகைய பண்புகள் குஃப்ர் (அல்லாவுக்கு மாற்றாக வேறு கடவுளை இணைவைத்தல்) என்றும், சாமிக்கு (சைத்தானுக்கு) படைக்கப்பட்டதை உண்ணக்கூடாது என்றும் விமர்சிக்கப்பட்டு தடுக்கப்பட்டது, படிப்படியாக பண்பாட்டுக் கலப்பு குறைக்கப்பட்டு “தூய இசுலாத்தை காப்பதாகக் கூறி மத அடிப்படையில் மக்களை இக்குழுக்கள் பிரித்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ததும் இதையே. தை இவர்களே உருவாக்கித் தந்தனர்.
      இன்னொன்றையும் நாம் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். இசுலாமியர்கள்,இந்துக்கள் என்ற பொதுத்தன்மையில் தங்கள் இணக்கமான உறவை அனைத்து இந்துக்களுடனும் பேணிக்காக்கவில்லை. ஆதிக்க சாதியினரிடம் மட்டும்தான் இவ்வுறவை ஏற்படுத்திருந்தனர். தலித்துக்களை ஒரு ஆதிக்க சாதியினர் எப்படி நடத்தினார்களோ அப்படியே இவர்களும் நடத்தினர். ஒரு காலத்தில் ஏறக்குறைய இந்தியா சுதந்திரம் அடைந்த சில காலங்கள் வரை கூட நிலமானிய முறையையே முசுலீம்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் திணித்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தாழ்த்தப்பட்ட மக்களை ஒருமையில் பெயர் சொல்லி வாடா போடா என்று அழைப்பது, அய்யாவை கண்டதும் இடுப்பில் துண்டை கட்டுதல், எட்ட நின்று கைகட்டி பேசுதல், இழி தொழிலுக்கானவர்களாக இருத்தி வைப்பது, கூலியில்லாத ஏவல் வேலைகளை சுமத்துவது, வருடமானியத்திற்கு வண்ணார், நாவிதர், பறையர், பள்ளரிடம் அடிமை வேலை வாங்கியது போன்றவைகளை ஆதிக்கசாதியினர் போன்றே இசுலாமியர்களும் செயல்படுத்தினர். இன்றும் அதன் எச்சசொச்சங்களை பல கிராமங்களில் காணலாம். இதற்கு முக்கியமான ஒருகாரணம் உண்டு. இந்தியாவில் இசுலாமியராக மாறியவர்கள் ஆதிக்க சாதியினராகவே இருந்தனர். இந்தியாவிற்கு மதப்பிரச்சாரத்திற்கு வந்த முல்லாக்கள், ஷூபிக்களின் குறிக்கோளும் ஆதிக்க சாதியினராகவே இருந்தது. சமீபத்தில் தாழையூத்து என்ற கிராமத்தில் திருமதி கிருஷ்ணவேணி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேரந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் என்ற மதவெறியன் ஆதிக்க சாதியினருடன் சேர்ந்துகொண்டு ஊராட்சி மன்றக்கூட்டத்தை நடத்தவிடாமல் தாக்குதல் நடத்தி திருமதி கிருஷ்ணவேணியை நடைபிணமாக்கியுள்ளான்தலித் சகோதர்களே என்று வாய்கிழிய பேசும் எந்த இசுலாமிய அமைப்பும் இது குறித்து வாயே திறக்கவில்லைநூற்றுக்கணக்காக வெளிவரும் இந்த நயவஞ்சகர்களின் பத்திரிக்கைகளும் மௌனமே சாதித்தன.இதிலிருந்தே இவர்களின் தலித் சகோதர்களேஎன்ற முழக்கம் விஷம் தோய்ந்த தேன் என்பதை அறியலாம்.
      உலக மக்கள் முழுவதையும் இசுலாமியராக மாற்றவேண்டும் என்ற முகம்மதுவின் கனவை நனவாக்கும் முல்லாக்களுக்கு முகலாயபடையெடுப்பு இந்தியாவிற்குள் தலம் அமைத்துத் தந்தது. ஆயுத பலம்தான் அதிகாரத்தை நிலைநாட்டும் என்பதால் படையெடுப்பிற்குப் பின்னே கொடிபிடித்து வந்த முல்லாக்கள் இசுலாத்தைப் பரப்பியதுடன் பிற மதங்கள் மீது ஆதிக்கமும் செலுத்தினர்.
இயற்கை எப்பொழுமே கொடுங்கோலர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதில்லைஅப்படி நடந்திருந்தால்அதுவே நிலையானதாக இருந்திருந்தால் நம் மனித சமுதாயம் எப்பொழுதோ அழிந்துவிட்டிருக்கும்.ஆளும் வர்க்கத்தில்கூட சமூக நலன் கருதுபவர்களையும் அவ்வப்பொழுது இயற்கை தேர்ந்தெடுத்தே வருகிறதுசித்தார்தன் (புத்தர்), அசோகன் என்ற வரிசையில் அக்பர் என்ற இசுலாமிய வழிவந்த மன்னனும் ஒரு விதி விலக்கு.இந்துக்கள் என்பதற்காக மட்டும் திணிக்கப்பட்ட வரி (ஜிஸ்யா), உரிமை மறுப்பு போன்றவற்றை அவன் அடியோடு ஒழித்தான்இந்துப் பெண்ணை திருமணம் செய்துஇந்துப் பெண்ணாகவே வாழ அனுமதித்ததுஇந்து – இசுலாமிய கோட்பாடுகளில் சிறந்தவற்றை ஒன்று சேர்த்து தீன் இலாகி என்ற புதிய மதத்தை உருவாக்க முயற்சித்தது என்று அக்பரின் மதநல்லிணக்கசமூக அக்கறைக்கு நிறையச் சான்றுகள் உள்ளனதூய இசுலாமியனாக இல்லாத அக்பரின் இச்செயல்களைக் கண்டு முல்லாக்கள் கொதித்தனர்பொருமினர்.பத்வாக் கொடுக்கமுடியாமல் திணறினர்ஆம் அக்பர் மன்னரல்லவா !பெரும்பான்மையும்அதிகாரமும்தானே வன்முறைக்கு வழிவகுக்கும்! அது அக்பர் கைகளில் அல்லவா இருக்கிறது! அதனால் முல்லாக்கள் பல்பிடுக்கப்பட்ட பாம்பாக அடக்கினர்இந்த வரிசையில் திப்பு சுல்தான் ஒரு புரட்சிகர சிந்தனையாளராக இருந்தாலும் ஆங்கில எதிர்ப்புப் போரில் தன் காலத்தை கழித்துவிட்டதால் சீரிய கருத்துக்களை மக்கள் முன் இவரால் எடுத்துவைக்க முடியவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அக்பருக்குப் பின் வந்த முகலாய மன்னர்களிடமும் மதவெறியே ஓங்கி நின்றதால் மீண்டும் முல்லாக்கள் படம் எடுத்து ஆடினர்ஆங்கில ஏகாதிபத்தியத்தின் வரவு மறுபடியும் முல்லாக்ளின் கொட்டம் எடுபடாமல் போகவே ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் கைக்கூலி வேலைபார்த்தனர்தில்லி மன்னன் பகதூர்ஷாஹைதரபாத் மன்னன் நிஜாம் போன்றோர் இதற்கு எடுத்துகட்டாக உள்ளனர்ஆனால் கைக்கூலி வேலைபார்ப்பதில் பார்ப்பனர்களை விஞ்சமுடியுமாவெள்ளைக்காரனிடம் பார்பனர்களின் கை ஓங்கியதும் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் (உங்கள் மார்க்கம் உங்களுக்குஎங்கள் மாரக்கம் எங்களுக்குஎன்று புலம்பிக்கொண்டனர்.
பார்பனர்களின் ஆதிக்கம் உறுதிபட்ட இதே காலக்கட்டத்தில் அம்பேத்கார்,பூலேதந்தை பெரியார் போன்றோர் இந்து ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை உயர்நிலைக்கு எடுத்துச் சென்றனர்பார்பனீயத்தையும் இந்துமதக் கோட்பாடுகளையும் நார்நாராக கிழித்தெறிந்தனர்பார்பனர்களோ,தங்களுக்கு எப்பொழுதும் அடியாளாக வேலை செய்யும் ஆதிக்கசாதி சூத்திரர்களை ஏவிவிட்டு இவர்களைத் தாக்கினர்ஆங்கில ஏகாதிபத்தியத்தியம் தமது கொள்ளைக்கு ஜமீன்களின் ஆதரவு தேவைப்பட்டதால் பார்பனர்களின் வன்முறைக்கு துணை போனது.
உலகத்தையே கட்டி ஆளப்பிறந்த உண்மையான மதத்தின் பிரதிநிதிகளின் நிலையோஆர்.எஸ்.எஸ்-ன் இசுலாமியர்கள் அந்நியர்கள்என்ற பிரச்சாரத்தினைக்கண்டு தங்கள் தாய்நாடு இந்தியாதான் என்று நிரூபிக்க படாதபாடு படவேண்டியதாகிவிட்டது.. தமது மதவெறி,  பத்தவாக்களை எல்லாம் மூட்டைக்கட்டி பரண்மேல் போட்டுவிட்டு கைகட்டி வாய் பொத்தி ஜனநாயகவாதிகள் மற்றும் நாத்திகவாதிகளின் பின்னே ஒழிந்து கொண்டனர்.பெரியாரையும்அம்பேத்காரையும் புகழ்ந்தனர்அவர்களின் எழுத்துக்களைப் பரப்பினர்பெரியார்அம்பேத்கார் கைகள் ஓங்கிவிடாதா என்று ஏங்கினர்.
இங்குதாய்நாடுஎன்றால் என்ன என்ற ஒரு சிறு குறிப்பையும் பார்த்துவிடுவோம்முகலாயஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலங்களில் இசுலாமியர்களில் முல்லாக்களும் பிரச்சாரர்களும் அரபிய தேசங்களிலிருந்து குடியேறிய வந்தேரிகளாக இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் இங்குள்ள இந்துமதத்திலிருந்து மதம்மாறிய பூர்வகுடிகளேஅதுபோல பார்ப்பனர்கள் ஆரியர்களாகவந்தேரிகளாக இருந்தாலும் பல நூற்றாண்டு காலங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து இதனையே தமது தேசமாகவும் அதனுடைய நலனையே தமது நலனாகவும் கருதுவதால் அவர்களும் இந்நாட்டினர்தான்ந்த ஒரு சமூகமும் ஒருநாட்டில் சில தலைமுறைகளாக வாழ்ந்து அந்நாட்டின் நலனையே தனது நலனாக கருதுமானால், அச்சமூகம் தான் வாழும் நாட்டினை தாய்நாடாகக் கூறிக்கொள்ளலாம்அப்படி இல்லை என்றால் எவருக்கும் எதுவும் தாய்நாடாகஇருக்க முடியாதுவரலாறு முழுக்க மனித சமுதாயம் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்தே வந்துள்ளதுஅதனால் தலைமுறை தலைமுறையாக வாழும் பார்ப்பனர்களையோபூர்வகுடிகளாக இருந்து மதம் மாறிய இசுலாமியர், கிறித்தவர்களையோ அந்நியன் என்று கூறுவது தேசபத்தியல்லதேசவெறிஇன்னும் நாம் சொல்வதென்றால் எந்த ஒரு மனிதனையும் நாடுமொழிமதம்இனம் என்று பிரித்து வன்முறையை ஏவிவிடுபவர்கள் மனிதர்களே அல்லஅவர்கள் விலங்குகள்நாயைவிட கேவலமானவர்கள்தேசபக்திமதம்என்ற போர்வையில் வாழும் வல்லூறுகள். இங்கே பாரதிதாசனுடைய ஒரு பாடலின் சிலவரிகளை நினைவு கூறுவோம்.
உன்வீடு உனது பக்கத்து வீட்டு
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகளிடையில் திரையை விலக்கி
நாட்டுடன் நாட்டை இணைத்து
மேலே ஏறு
வானிடிக்கும் மலைமேல் ஏறிநின்று
பாரடா... பாரடா உனது மானிடப்பரப்பை...
தந்தைப்பெரியாரின் வெற்றிப்படிகளும், ஜனநாயக, கம்யூனிச அமைப்புகள் இசுலாமியர்களுக்கு ‘சிறுபான்மையினர் என்று அளித்துவரும் ஆதரவும் இசுலாமிய மதவெறியர்களை மீண்டும் தலைதூக்கத் தூண்டுகிறது. ஆனாலும் இவர்கள் நாத்திகர்கள் என்பதால் எச்சரிக்கையாகவும் இருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரங்களுக்கு அடிவிழும்போது ஜனநாயக, கம்யூனிச அமைப்புகளுடன் ஒட்டிக்கொண்டு தலையைக் காப்பாற்றிக் கொள்வதும், மதவெறி என்று வரும்போது ஏதும் அறியாத அப்பாவியாக ஒதுங்கிக் கொள்வதும் என்று நயவஞ்சக நாடகமாடுகிறார்கள். மதம் என்று வரும்போது ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் கைகோர்த்துக் கெள்வதற்குக் கூட இந்த நயவஞ்சகர்கள் தயங்குவதில்லை. கேரளாவின் பாடபுத்தகத்தில் மதம் தனக்கு வேண்டாம் என்று ஒரு பாடம் இருந்ததற்காக ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இசுலாமியர்களும் இணைந்து கொண்டு வெறியாட்டம் போட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜனநாயக, கம்யூனிச அமைப்புகள் இவர்களுக்கு அளித்துவரும் ஆதரவை நிறுத்திவிட்டால் ‘பல குஜராத்துகள் இன்னேரம் நடந்தேறியிருக்கும். ஒரு குஜராத்தின் அனுபவம் அதாவது தலித்துகளை ஆயுதமாகப் பயன்படுத்திய நரேந்திர மோடியின் தந்திரத்தைக் கண்டு இசுலாமிய அமைப்புகள், எவரை வாடா, போடா அசிங்களங்கள் என்று ஆதிக்கசாதிகளுடன் சேர்ந்துகொண்டு அழைத்தார்களோ அவர்களுடன் (கட்சிகளுடன்) கூட்டுச்சேர நாயாக அலைகிறார்கள். இந்த வெட்கம் கெட்ட கட்சிகளும் கூட்டுச் சேர்ந்துகொள்கின்றன.
  அதுபோல இந்துவிலிருந்து இசுலாமாக மாறியவர்களை முன்னிருத்தி ஏராளாமான நிதிகளையும் வழங்கி தமது தோல்களை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். எடுத்துக்காட்டு அடியார்சமரசம் ஆசிரியர் சிராஜுல் ஹசன்சேக் அப்துல்லா என்ற கொடிக்கால் செல்லப்பாஅன்வர் பாலசிங்கம்,நம்ம அப்துல்லாவாகிய பெரியார் தாசன் போன்றோரைக் கூறலாம்இவர்கள் மூலம் இந்துவே போற்றும் இசுலாம் என்றும்இந்து மதத்தை விமர்சிக்கவைத்து பின்னால் ஒளிந்துகொள்வதுமாக இருக்கின்றனர்பிரச்சனை என்று வந்தால் அவர்கள் வேறு தாங்கள் வேறு என்பதுபோல் கூறிக்கொண்டு “இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்றுதான் எங்கள் மதம் கூறுகிறது என்று பசப்புவதுமாக உள்ளனர்இந்த மதவெறியர்களுக்கு இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்ற பசப்புகளுக்கு இன்னுமொரு முகமூடிகளாக செயல்படுபவர்கள்மதுரை ஆதீனம் மற்றும் குன்றக்குடி அடிகளார்.
கொடிக்கால் செல்லப்பாவின் கதை ஒரு தனிக்கதைஅவர் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து மதம் மாறியவர் என்பதால் உனக்கு தரும் நிதியைக் கொண்டு பிரச்சாரத்துடன் நிறுத்திக்கொள்பெண் வேண்டும் கீண்டும் என்றல்லாம் கேட்கக்கூடாது என்று உள்ளூர் ஜமாத்தில் எவரும் அவருக்கு பெண்கொடுக்கவில்லைஅதனால் கேரளா சென்று திருமணம் செய்து கொண்டார்காலப்போக்கில் இசுலாமியர்களின் உண்மைமுகம் தெரிந்துவிட்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இன்னும் இசுலாமியராக இருக்கிறார்டஅன்வர் பாலசிங்கம்கூட தனது கருப்பாயி என்ற நூர்ஜஹான் என்ற நாவலில் மீனாட்சிபுரத்தில் இசுலாத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும் உயர்ஜாதி இசுலாமியர்களைப்பற்றி எழுதியதால் இந்த முல்லாக்கள் எங்களிடமே காசுவாங்கிக் கொண்டு எங்களையே எதிர்த்து எழுதுகிறாயா என்று கடுப்பாகி உள்ளனர்.
ஜனநாயககம்யூனிச அமைப்புகளில்லாமல் உயிர்வாழ முடியாத இசுலாமிய அமைப்புகள்அதே ஜனநாயககம்யூனிசவாதிகள் இசுலாமிய மதவெறியை அம்பலப்படுத்தினால் பத்வாக்களை வழங்கி வெறிபிடித்த இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையில் இறங்குகின்றனர்அவர்கள் பத்துவா கொடுத்தால் இனி நாம் பதினொருவா கொடுத்து பதிலடி கொடுப்போம்.
நந்தன் 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard