மதக் கோட்பாடுகளையும், அதன் அசிங்கங்களையும், அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மதவெறியர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும், கொலை செய்வதும் பன்னெடுங்காலமாக நடைமுறையில் உள்ளதே.இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. தங்கள் வேதங்களை படிக்கச் சொல்லிஆய்வு செய்யுங்கள் என்று இவர்கள் தேனொழுக கூறினாலும் கேள்விக்குள்ளாக்கப்படாமல் அப்படியே “அனைத்தும் அற்புதம்” என்று ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் நயவஞ்சமான விருப்பம்.. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களையும் இவர்கள் விடுவதில்லை. விவாதம் என்று ஒப்புக்காக சில வாதங்களை அவர்கள் எடுத்துவைத்தாலும் பதில் சொல்ல முடியாத கட்டம் வரும்போது ஆத்திரமடைகின்றனர்; கோபம் கொள்கின்றனர். பொருளற்று அரற்றுகின்றனர். தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். பிற இடங்களில் அடக்கி வாசிக்கின்றனர். அதனால் பெரும்பான்மை பாரமரர்களைத் தன்னுடைய வன்முறைக்கும் ஆதிக்கத்திற்கும் திரட்டிட கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர்.
இன்று கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தொடர்பில்லாத இந்த வலைப்பூவில் வந்துள்ள “லூத் என்ற லூசு” என்ற கட்டுரைக்கு பொறுப்பாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதை அறியும் போது மனம் வருத்தமாக உள்ளது. பெரும்பாண்மையாக இருக்கிறோம் என்ற தைரியத்தில் இந்த வன்முறையை தாங்கள் ஏதோ வீராதி வீரர்கள் போல் நடத்தியுள்ளனர். நாங்களும் ஒருநாள் பெரும்பான்மையாகுவோம்; அன்று இவற்றிற்கெல்லாம் பதிலடி தருவோம் என்று கூறிக்கொண்டு இந்த இசுலாமிய வெறியர்களின் வீரத்தை இந்தியவரலாற்றினூடே ஒரு சிறு தொகுப்பாகப் பார்ப்போம்.