கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மான் வேறொருவர் பாடலை திருடி ஆஸ்கார் விருது பெற்று விட்டார்? ஆஸ்கார் விருது பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்று சொன்னீர்களாமே?
இஸ்மாயில் தர்பார்: நான் இரண்டு வருடம் முன்பு நாக்பூர் சொந்த வேலையாக போனபோது ஒரு நிருபர் ஆஸ்கார் அவார்டைப் பற்றி கேட்க 'உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு தொகைக்கு வாங்கப்பட்டது' என்றேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்.
கேள்வி: எப்படி விலை கொடுத்து வாஙகப்பட்டது என்று சொல்வீர்கள்? படமும் சிறப்பாக இருந்தது, பாடலும் சிறப்பாக இருந்தது.
இஸ்மாயில் தர்பார்: பாடல் சிறப்பாக இருந்ததா? அது அவருடைய பாடலா? அவர் சொந்தமாக டியூன் போட்டு எழுதியதா? அப்படி அது அவர் போட்ட மெட்டு என்று நிரூபித்து விட்டால் காலம் பூராவும் அவருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆஸகார் விருது கொடுக்கும் அளவுக்கு அந்த பாடலில் என்ன இருக்கிறது?
கேள்வி: அது விருது கொடுப்பவர்களின் பொருப்பு அல்லவா? ஆஸ்கார் கமிட்டியிடம் தங்கள் கருத்தை வாபஸ் வாங்குவதாக சொன்னீர்களாமே!
இஸ்மாயில் தர்பார்: ஆம். ஆஸ்கார் கமிட்டியினர் என்னை தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே அவர்களுக்கு எனது நிலையை விளக்கினேன். வரும் காலத்தில் நானும் கூட எனது படத்தை ஆஸ்காருக்கு அனுப்பலாம். எனவே அவர்களிடம் முறுகல் நிலையை விரும்பவில்லை. ஆனால் ரஹ்மான் விஷயத்தில் எனது கருத்து அப்படியேதான் இருக்கிறது.
கேள்வி: அவர்மேல் உள்ள பொறாமையில்தான் இவ்வாறு அபாண்டமாக குற்றம் சாட்டுகிறிர்கள் என்ற கருத்து வைக்கப்படுகிறதே?
இஸ்மாயில் தர்பார்: எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நான் உழைக்கிறேன். என் குடும்பமும் நானும் சாப்பிடுகிறோம். நான் சப்பாத்தி சப்ஜி சாப்பிடுகிறேன். அவர் இட்லி சாம்பார் சாப்பிடுகிறார்.(வட நாட்டுக்காரன் தனது புத்தியை காட்டியதற்கு எனது கண்டனங்கள். இட்லி சாம்பாரின் அருமை இவருக்கு எங்கு தெரியப் போகிறது? ) இவை அனைத்தையும் எனக்கு தருவது இறைவனே! நான் யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரிடம் உள்ள திறமையை மக்கள் முன் வைக்காமல் விருதுகளை வாங்க என்ன செய்ய வேண்டும்? யாரை பிடிக்க வேண்டும் எனபதை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டு பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார். அதிலும் சொந்த பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. வேறொருவரின் பாடலுக்கு இவர் எப்படி விருது வாங்கிக் கொள்ளலாம். இதுதான் எனது கேள்வி. அவருக்கு கூஜா தூக்குபவர்கள் அவரை கீழே தள்ளப் பார்க்கிறார்கள். நான் அவரது தவறை சுட்டிக் காட்டி சரியான வழிக்கு அழைத்து வர முயற்ச்சிக்கிறேன்.
கேள்வி: விருது விவகாரத்தில் முன்பும் ஒருமுறை விமரிசிக்கப்பட்டீர்கள்தானே?
இஸ்மாயில் தர்பார்: ஆம். முன்பு தேவதாஸ் படமும் சாதியா(அலைபாயுதே) படமும் நேசனல் அவார்டுக்காக போட்டியில் இருந்தபோது விருதை சாத்தியாவுக்கு கொடுத்தார்கள். இரண்டரை வருடம் கஷ்டப்பட்டு அந்த படத்துக்கு இசை அமைத்ததன் வலி எனக்குதான் தெரியும். இதனால் 10 படங்கள் என் கையை விட்டு போனது. அதுவும் சாதியா ஒரு டப்பிங் படம். இந்த படத்துக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து எனது படத்தை ஒதுக்கியது என்ன வகை நியாயம்?
கேள்வி: உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கவில்லை என்ற பொறாமையால்தான் ரஹ்மான் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் என்கிறார்களே?
இஸ்மாயில் தர்பார்: இதற்கு முன்பே பதில் சொல்லி விட்டேன். ரஹ்மான் என்னிடம் நேரிடையாக வந்து 'யாருடைய பாடலையும் திருடவில்லை. எனது சொந்த மெட்டு' என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.... ஒரு இசை அமைப்பாளனான எனக்கு நன்கு தெரியும் அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று.
(இரண்டு காணாளிகளின் சுருக்கம் இது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக மொழி மாற்றம் செய்தேன்,)
இஸ்மாயில் தர்பார் குறைபட்டுக் கொண்ட தேவதாஸ் பாடல்.
http://www.youtube.com/watch?v=UyERhf2GnWY&feature=related
ஒருவரின் பாடலை திருடுவது என்பது எல்லோரும் செய்து கொண்டிருப்பதே! முதலில் இந்த ராகங்களுக்கும் பாடல்களுக்கும் எவரும் உரிமை கொண்டாட முடியாது. ஏழு ஸ்வரங்களை வைத்து அவரவர் திறமையால் பாடலை உருவாக்குகிறார்கள். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்பவர் பிரபல்யம் ஆகிறார். சங்கர் கணேஷ் போன்றவர்கள் கூசசப்படாமல் மற்றவர்களின் பாடல்களை அதே வருடத்திலேயே சில உல்டா செய்து “பட்டு வண்ண ரோசாவாம்” (உச்சி வகுந்தெடுத்து) மாதிரி அமைத்து விடுவார்கள்.
'தங்கப்பதக்கத்தின் மேலே....” என்ற டிஎம்எஸ்ஸின் எம்ஜிஆர் பாடல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானின் 'என்ன விலை அழகே...' பாடலை கேளுங்கள். அந்த பாடலுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள ஒற்றுமையை உணருவீர்கள். இதற்காக எம்எஸ்வி ரஹ்மானை கோபிக்க முடியுமா?
எனவே இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறாமைபடுபவரின் முக பாவம் எவ்வாறு செல்லும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி.


பால் மோர்லேயுடன் ஏஆர்ஆர்....
வைர முத்து ரஹ்மான் பற்றி ...
சங்கர் மகாதேவன் ரஹ்மானைப் பற்றி...
யுடியூபில் வந்த சில கமெண்டுகள்:
a R Rahman is such a good hearted fellow. He is a genius guy in music that everyone knows. You (ismail) don't know how to praise your own indian...Westners have been telling that Indian hate each other. Now, you proved once again..shame on you...bloody ismail...you r such a jealous fellow...if you want publicity try doing other ….
jsenthilsg
hehehhehh why would THE ARR react to stupid people like you... never seen such a looser .. first go and train yourself for todays world and todays music.... update your knowledge and take some medicines. Devdas music was just ok.... it was a sanjay lelal bansali film so u got noticed... dumbo.. sanjay lela bansali's music in gujarish has proved who is the master behind hum dil de chuke sanam and devdas... :D take your medicines and sit at your home .
giteshmediatec
டிஸ்கி: ரஹ்மான் சார்! இளம் வயதிலேயே நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது. அது போதும். சினிமா துறைக்கு ஒரு தலைமுழுக்கைப் போட்டுவிட்டு இருக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்யுங்கள். ஒரு உம்ரா ஹஜ்ஜையும் முடித்துவிட்டு நற்பணி மன்றங்கள் அனாதை ஆசிரமங்களில் கவனத்தை செலுத்துங்கள். இஸ்மாயில் தர்பார் முதற்கொண்டு சினிமாத் துறையை தூரமாக்குங்கள். தர்ஹா வணக்கத்தையும் அது சரிதானா என்பதை குர்ஆனை திறந்து கொஞ்சம் பார்வையிடுங்கள். இவை எல்லாம் உங்களின் மறு உலக வாழ்க்கையை செம்மையாக்கும் வழிகள். சிந்திப்பீர்களாக!