New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி.ஜே யின் அறியாமை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பி.ஜே யின் அறியாமை
Permalink  
 


பொய்யன் பி.ஜே யின் அறியாமை

 

பொய்யன் பி.ஜே யின் கேள்வி:-
கமர் என்ற சொல் மூன்று நாட்களுக்கு பிறகு உள்ள
பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்று பட்டுக் கூறும் கருத்தாகும். இதற்க்கு மாற்றமாக அரபு மொழி அறிஞ்சர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாத மடையன் தான் இதற்க்கு மாற்றமாக சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் இல் எழுதியுள்ளான். ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும் இல்லாததை இட்டுக் கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்ட போதும் அவர்களிடம் பதில் இல்லை.
கோவை விவாதத்தில் இந்தப் பொய்யன் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் பதில் கூறியது. இமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மை தன்மைக்கு இறைவன் காட்டிய அற்புத அடையாளத்தை (சூரிய சந்திர கிரகணம்) மறுத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து விட்ட காரணத்தால்தான் இந்த ஆட்சேபனையை கிளப்பி இருக்கிறான்.
மூன்று இரவுகளுக்கு மேற்பட்ட இரவில் தோன்றும் சந்திரனுக்குத்தான் 'கமர்' என்று அரபியில் கூறப்படும். மூன்று நாள் வரை அதனை 'ஹிலால்' என்பார்களே தவிர 'கமர்' என்று கூறமாட்டார்கள். சிலருடைய கருத்தின்படி ஏழு நாள் வரை 'ஹிலால்' என்றே அழைக்கப்படும். 'லிசானுல் அரப்' எனும் பிரசித்திப் பெற்ற அரபிமொழி அகராதியில் 'கமர்' என்ற சொல்லின், சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஹுவ பஹத ஸலாசி லயாவின் இலா ஆகிரிஷ் ஷஹ்ர்" அதாவது மூன்றாவது இரவுக்கு பின்னுள்ள இரவிலிருந்து மாதத்தின் கடைசியில் தோன்றும் சந்திரனுக்கு கமர் என்று கூறப்படும். (நான்காவது இரவிலிருந்து கடைசி வரையுள்ள சந்திரனே கமர் என்றழைக்கப்படும். முதல் மூன்று இரவில் தோன்றும் சந்திரனை கமர் என அழைக்கமுடியாது).
முதலிரவில் தோன்றும் சந்திரன் 'கமர்' ஆக இல்லாதிருக்கும்போது 'கமர்' என்ற சொல்லின் பெயருக்கான காரணம் அதில் இல்லாதிருக்கும் போது (கமர் என்ற சொல்லின் பொருள் மிகுந்த ஒளிமிக்கது என்பதாகும்.) கமருக்கு முதலிரவில் கிரகணம் ஏற்படும் என்று கூறுவது எங்கனம் சரியாகும்)

அவ்வாறு கூறுவது எப்படிப்பட்டதென்றால், ஒரு இளம் பெண் முதலிரவிலேயே கற்பமாகிவிட்டால் என்று ஒருவர் கூறியதை செவியுற்ற ஒரு மௌலவி, முதலிரவில் கர்ப்பமானால் என்பதன் பொருள் அப்பெண் பிறந்த அதே இரவில் கர்ப்பமானால் என்பதுதான் என்று பிடிவாதமாகக் கூறினால் அது சரியான பொருளாகுமா? எவராவது அந்த மௌலவியிடம், பிறந்த முதலிரவில் அவள் பெண் என்றே அழைக்கப்படமாட்டாளே, மாறாக அவளை 'சபிய்யா' அல்லாது குழந்தை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறிருக்க அவள் கருவுற்றதாகக் கூறுவது எவ்வளவு பேதைமை?" என்று கூறமாட்டாரா என்ன? மேலும் இங்கு முதல் இரவு என்பதன் பொருள் திருமணம் முடிந்தபின் முதன்முறையாக ஒரு பெண் தன் கணவனிடத்தில் செல்லக்கூடிய இரவுதான் என்பதை அறிவுடையோர் நன்கறிவார்கள்.
ரமளானில் முதல் பிறை பார்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிட்டியை 'ஹிலால் கமிட்டி' என்றே பெயர் வைத்திருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் 'கமர் கமிட்டி' என்று பெயர் வைத்ததாக நாம் எங்கும் பார்க்க முடியாது.

பொய்யன் திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினால் அதற்கான விளக்கத்தை நாம் கொடுப்போம்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆன்லைன் பொய்யனின் ஆகாசப் புளுகு

 

 
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

"சத்தியத்தின் விரோதிகள் முன்பு எப்போதாவது தங்களின் கொடூரமான குற்றமுடைய செயல்களால் வெற்றி பெற்றிருந்தால் இவர்களும் வெற்றி பெற முடிந்திருக்கும். ஆனால் இறைவனுக்கும் அவனுடைய நோக்கங்களுக்கும் விரோதமாக செயல் புரிந்து வந்தவர்களுக்கு எப்பொழுதும் தோல்வியே கிடைத்தது. இது உண்மைஎன்றால் இவர்களுக்கும் இழிவும் அழிவும் தோல்வியும் வரக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இறை வசனங்கள் ஒரு போதும் தோல்வி அடையாது. இறைவனும் இறைத்தூதர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு சட்டமாக ஆக்கப்பட்டிருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.... எனவே ஆதாமின் காலம் முதல்எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை மேற்கூறப்பட்ட விதியும் சட்டமும் சத்தியமாகப் பூர்த்தியாகி வந்ததைப்போலஎன்னுடைய விஷயத்திலும் அது நிச்சயமாகப் பூர்த்தியாகியே தீரும் என்று நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன். (நுஸூலுல் மஸீஹ்)
ஆதிகாலத்திலிருந்தே இறைத்தூதர்களையும் அவர்களால் நிறுவப்பட்ட ஆத்மீக இயக்கங்களையும் தீய சக்திகள் எதிர்த்து வந்ததாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. இதுபற்றி திருமறையில் இறைவன் மிகத் தெளிவாக கீழ்வருமாறு கூறியுள்ளான்.
"ஒவ்வொரு நபிகேதிராகவும் நாம் குற்றவாளிகளிலிருந்தே விரோதிகளை உண்டாக்குகின்றோம்." (சூரா புர்கான்)
"கொடூரமான இயல்புள்ள ஜின்களிலிருந்தும்நாம் ஒவ்வொரு நபிக்கெதிராகவும் விரோதிகளை உண்டாக்குகின்றோம்." (சூரா அன்பியா)
"அடியார்களுக்கு அந்தோ பரிதாபம்! அவர்களால் ஏளனம் செய்யப்படாத எந்த ஒரு நபியும் அவர்களிடம் தோன்றியதில்லை.(சூரா யாசீன்)
அல்லாஹ்வுடைய இக்கூற்றின் படியே ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் ஹஸ்ரத் முஹம்மது நபி அவர்கள் வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் அவரவர் காலத்திலுள்ள மக்களும் பண்டிதர்களும் எதிர்த்துக் கொண்டே வந்துள்ளனர்.
இதே சட்டத்தின் படியே இக்காலத்தில் தோன்றிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தி(அலை) அவர்களை ஆன்லைன் பொய்யனும் அவனுடைய அடிவருடிகளும் எதிர்கிறார்கள் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றுமில்லை.
மேலும் முஸ்லிம்களைமுஸ்லிமல்லாதவர்கள் என பிரகடனப்படுத்துவதும் ஆன்லைன் பொய்யனுக்கு கைவந்த கலையாகும். இந்த ஆன்லைன் பொய்யனின் கைங்கரியத்தால் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் என்னத்தனைய பிரிவுகள் மலிந்துள்ளன.
இமாம் மஹ்தி அலை அவர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதி வந்த ஆன்லைன் பொய்யன் தற்போது புதிதாக இரண்டு குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்க்கு முன்பு எழுப்பிய 11 குற்றச்சாட்டுகளுக்கும் நாம் விளக்கம் கொடுத்தோம் இதற்க்கு மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் புளுகு மூட்டை என்ற பெயரில் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி இந்த ஆன்லைன் பொய்யன் புளுகியிருக்கிறார்.
இது போன்ற குற்றச்சாட்டுகள் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலேயே இறையச்சமற்ற முல்லாக்களால் எழுப்பப்பட்டது. அப்போதே அதற்க்கு பதில் கொடுக்கப்பட்டு அந்த முல்லாக்களின் வாய் முத்திரையிடப்பட்டது. இப்படிப்பட்ட அவுட் ஆப் டேட் ஆனா ஆகாசப் புளுகுகளுக்கு புதுவடிவம் கொடுத்திருக்கிறார் இந்த ஆன்லைன் பொய்யன். இதன் மூலம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி தவறான என்னத்தைப் பரப்பி தங்களுடைய வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது பகற்கனவேயாகும். ஏனென்றால் நாம் கொடுத்த விளக்கங்களைப் பார்த்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றும்நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி இல்லை என்றும் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இதுபோன்ற ஆகாசப் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிடுவதை நிறுத்தி விட்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்.
இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு இறைவன் இறக்கிய இல்ஹாம்
"இன்னி முஹீனுன் மன் அராத இஹானத்தக்க"
"எதைக் கொண்டு ஒருவன் உம்மை இழிவுபடுத்துவானோ அதைக் கொண்டே நாம் அவனை இழிவுபடுத்துவோம்"
மேலும் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் தமது பார்ஸி கவிதை ஒன்றில் தம்முடைய எதிரிகளை நோக்கி கூறுகிறார்கள். "எனது பகைவனே! எச்சரிக்கையாய் இரு. நல்லடியார்களின் துஆக்களின் ஓசையால் உனக்கு பயம் ஏற்படுவது இயல்பே!அதிலும் அந்த பத்துவா மிர்சாவுடையதாக இருந்தால் நீ அதிகமாகப் பயப்பட வேண்டும்."
இனி ஆன்லைன் பொய்யனின் குற்றச்சாட்டைப் பார்ப்போம்.
ஆகாசப் புளுகு
ஆகாசப் புளுகன் பொய்யன் ஜைனுலாப்தீன் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் இறங்கிய வஹியின் தவறு இருத்ததாக புளுகி இருந்தார். ஆனால் அவர்களுக்கு இறங்கிய வஹியில் எந்த தவறும் ஏற்படவில்லை.
1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு இந்த வஹி இறங்கியது. அது ததுகிறா என்ற நூலில் பக்கம் 78 யில் இவ்வாறு காணப்படுகிறது.
Though all men should be angry but god is with you. He shall help you. Words of god can not exchange.
அதன் போட்டோ காபி
notcan+exchange.JPG
 








1883 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்(இந்த வஹி இறங்கி ஐந்து மாதம் கடந்த பின்னர்) மீர் அப்பாஸ் அலி என்பவருக்கு எழுதிய கடிததத்தில்words of god not can exchange என்று எழுதியுள்ளார்கள். இதன் மூலம் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹியில் தவறில்லை. அதை எடுத்து எழுதும் போதுதான் அவர்களுக்கு தவறு ஏற்பட்டிருக்கிறது. இதை ஆன்லைன் பொய்யன் உணரவேண்டும். ஆன்லைன் பொய்யன் தத்தகிர என்ற நூலில் இருந்து எடுத்த போட்டோ காபி தான் கீழே இடம்பெற்றிருக்கிறது.

image+1.jpg


ஆன்லைன் பொய்யனுக்கு நாம் கூறும் அறிவுரை. திருக்குரானைன்யும் ஹதீசையும் பிறருக்கு சொன்னால் மட்டும் போதாது. அதை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுங்கள். இல்லை என்றால் நீங்கள் மக்கள் மத்தியில் செல்லாக்காசாகிவிடுவீர்கள். விரைவில் உங்களுடைய தௌஹீது புளுகு மூட்டையை கட்டிக் கொண்டு ஓட நேரிடும்.
ஆட்சேபனையுடன் சேர்த்து இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்தான் திருக்குரானில் வருகிறது "மா அர்ஸல்னா மின் ரசூலின் இல்லாபி லிசானிக் கவ்மிஹி லியு பய்யின லஹும்" நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை அவருடைய சமுதாய மொழியிலேயே அன்றிஅவர் அவர்களுக்கு விளக்கிச்சொல்வதற்க்காக. ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியில் தான் வஹி இறங்க வேண்டும். அனால் இவருடைய சமுதாய மொழி பஞ்சாபிமற்றும் உருது மொழியாகும். இவர் தனக்கு ஆங்கிலத்தில் வஹி இறங்கினதாக குறிப்பிடுகின்றார். இந்த திருக்குரானுடைய வசனத்திற்கு இவர் முரண்படுகிறார். என்று எடுத்துவைத்தார். இதற்க்கு அஹ்மதியா தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. எனவே இந்தப் பொய்யன் அதை இங்கு குறிப்பிடவில்லை.
இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியை அவர் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே. இங்கு மொழியைப் பற்றி வருகிறதே தவிர அந்த இறைத்தூதருக்கு இறைவன் இறக்குகின்ற வஹியைப் பற்றி வரவில்லை.ஏனென்றால் திருக்குரானில் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியில் வஹி இறங்கியதாக வருகிறது.

"உல்லிம்னா மந்திக்க தைர்நாம் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியைக் கற்றுக் கொடுத்தோம் என்று வருகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குரானை இறைவன் கற்றுக் கொடுத்தது போன்று சுலைமான் நபிக்கு பறவையின் மொழியை கற்றுக் கொடுத்ததாக வருகிறது. எந்த சமுதாயத்திற்கு சுலைமான் நபி தூதராக அனுப்பப்பட்டாரோ அந்த சமுதாயத்தினுடைய மொழி பறவையின் மொழியாக இருந்ததாஉலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தில் வஹி இறங்கியதை இஆட்சேபனையும் செய்யும் இந்தப் பொய்யன்சுலைமான் நபிக்கு பறவையின் மொழியின் வஹி இறங்கியதை எந்த அளவுக்கு ஆட்சேபனை செய்ய வேண்டும். இந்தப் பொய்யன் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீது எந்த ஆட்சேபனை செய்தாலும்அந்த ஆட்சேபனைகள் மற்ற நபிமார்களையும் நிராகரிக்கும்படி தானாகவே வந்து அமைந்துவிடும்.

வஹி இறங்கும் போது ஒரு வேகம் வருகிறது என்று இமாம் மஹ்தி (அலை) கூறியதை இந்தப் பொய்யன் கிண்டலடித்தான்.

வஹீ இறங்கும் போது ஒரு வேகம் வருகிறது என்பதை ஹதீதும்,திருக்குரானும் கூறுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குரானுடைய வசனங்கள் வஹியாக இறங்கும்போது மனனம் செய்ய வேண்டும் என்பதற்காக தம்முடைய நாக்கை மிக வேகமாக அசைத்ததாக வருகிறது . இதைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது"வலா துகர்றிக் பி லிசானிக்க" நீர் உம்முடைய நாக்கை அசைக்கவேண்டாம். இதனை தொகுப்பது தம்முடைய பொறுப்பாகும் என்று வருகிறது.
இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் இறங்கிய ஒரு வஹியில் இலக்கணப் பிழை இருந்ததே தவிர கருத்துப் பிழை எதுவும் வரவில்லை.

வஹீ இறங்கும்போது இது போன்ற பிழைகள் வருவது சகஜம் என்று உளறினான். என்று இந்தப் பொய்யன் குறிப்பிடுகின்றான். இஸ்லாத்தின் எதிரிகள் திருக்குரானிலிருந்து இந்தமாதிரியான ஆட்சேபனையை கிளப்பினார்கள். உதாரணமாக திருக்குரானில் வருகிறது
"காலு இன்ஹாசாணி ல ஷாஹிரானி'iஇவ்விருவரும் இரு ஷாஹிர்கள் (மந்திரவாதிகள்) என்று வருகிறது.

அரபி இலக்கணத்தின்படி இன் என்று வந்தால் ஹாஷானி என்று வரக்கூடாதுஹாஷைனி என்று தான் வரவேண்டும் என்று கூறினார்கள். இதற்க்கு இஸ்லாமிய அறிஞ்சர்கள் கூறிய விளக்கம் என்னவென்றால் இலக்கணம் என்பது மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் பின்னால் இறைவன் போக வேண்டிய அவசியமில்லை. என்று விளக்கம் கொடுத்தார்கள்.

இஸ்லாத்தினுடைய எதிரிகள் திருக்குரானில் இருந்து எடுத்துக் காட்டும் இந்த ஆட்சேபனையை வைத்து இந்தப் பொய்யன் "அல்லாஹ் திருக்குரானில் பிழையாகப் பேசியுள்ளான் (நவூதுபில்லாஹ்) என்று கூறுவானா?


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஆன்லைன் பொய்யனின் அட்டகாசம்

 

ஒரு நபிக்கு கொடுக்காத சிறப்பை வேறொரு நபிக்குக் கொடுத்திருப்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா நபிமார்களைவிடவும் காத்தமுன் நபியாகிய நபி(ஸல்) அவர்களுக்கு எல்லாவகையிலும் அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுத்திருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறைமுகமாக அல்லாமல் நேரடியாக பதில் கூறுங்கள். நாங்கள் குரானின் அடிப்படையிலேயே மறுத்து நபி(ஸல்) அவர்கள்தான் எல்லா நபிமார்களை விட எல்லாவகையிலும். சிறந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படாத எந்த அந்தஸ்தையும் வேறொரு நபிக்குக் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறோம். நிரூபித்துக்காட்டி வருகிறோம்.

 அடுத்து 4:157,158 வசனங்களைக் காட்டி அவர் மரணிக்கவில்லை அவரை தனன்ளவில் உயர்த்திக் கொண்டான். என்று கூறி இதில் அந்தஸ்து என்பது ஏற்புடையதாகாது. உடல் ரீதியாகத்தான் உயர்த்திக் கொண்டான் என்று விரிவுரை வழங்கியுள்ளீர்கள்.இதற்க்கு துணையாக 43;61 ஆயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளீர்கள். 

 இறைவன் ஜடபொருளாகவோ, அவனுக்கென்று ஒரு தனி இடத்தைஅமர்த்திக் கொண்டாலோதான்
உங்களின் உடல் ரீதியான உயர்வு, வாதம் எடுபடும். ஆனால் இங்கு அந்தஸ்துதான் என்பதற்கு இறைவனின் இருப்பிடம் சம்பந்தமான ஒரு கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி ஒரு சான்றாக உள்ளது. 

 நீங்கள் அந்நஜாத்தில் ஆசிரியராக இருந்த போது 1986, செப்டம்பர் இதழில் பக்கம் 46  இல் சிறுவர் பகுதியில் அலாவுதீன் அவர்கள் கேள்வி-பதில் பகுதியில் 'அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் மீதிருக்கிறான் அர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்' (20:5) என இறைவன் தன்னைப் பற்றி குறிப்பிடுகின்றான். அதாவது 'மதிப்பில் உயர்ந்திருக்கிறான். கண்ணியத்தால் உயர்வு பெற்றிருக்கிறான்' என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என நபி(ஸல்) கூறியதாக புகாரியில் ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அல்லாஹ் தன்னளவில் உயர்த்திகொண்டான் என்றால் அந்தஸ்து அளவில் உயர்த்திக் கொண்டான் என்றே பொருள் கொள்ள வேண்டுமேயல்லாது உடல் ரீதியாக அப்படியே உயர்த்திக்கொண்டான் என்றால், அதனால் எழும் பல்வேறு கேள்விகளுக்குப் பகுத்தறிவு ரீதியிலான பதில் சொல்லமுடியாமல் போய்விடும். இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையில் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான். 

 மேலும் (4:157,158) வசனங்களின் அடிப்படையில் யூதர்கள், மரியமின் குமாரரைக் கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள், ஏன் கொலை செய்ய எண்ணவேண்டும்? அவருடைய உடலைக் கொன்று விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனை அங்கு 'நபித்துவம்' என்ற அந்தஸ்து விஷயம்தானே அல்லாது உடல் சம்பந்தப்பட்டதல்ல, 

 ஈசா(அலை) தம்மை இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்று வாதித்தார்கள் யூதர்கள் அவரை எப்படியும் பொய்ப்படுத்தியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து தோல்வியடைந்து, இறுதியில் அவரைத் தங்களின் வேதத்தில் கூறப்பட்டபடி சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டால் அவர் சபிக்கப்பட்ட மரணத்தையடைந்து விட்டார் என்று பிரபல்யப்படுத்தி, சபிக்கப்பட்ட மரணத்தை அடைந்தவர் எப்படி நபியாக அந்தஸ்தில் உயர்ந்தவராக இருக்கமுடியும் என்று கூறி அவரைப் பொய்ப்படுத்தி விடலாம் என்று எண்ணி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லத் திட்டம் தீட்டி செயல் பட்டனர். நபி என்ற அந்தஸ்திலிருந்து சபிக்கப்பட்ட அந்தஸ்திற்கு கொண்டுவரவே அவர்கள் முனைந்தனர். 

 யூதர்களுக்கும் ஈசா(அலை) அவர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனை சொத்துத் தகராறோ, கொடுக்கல் வான்கள் தகராறோ அல்ல. அவர்களின் உடலை மட்டும் கொன்று அவர்களுக்கு அதனால் என்ன லாபம்? அந்த இடத்தில்தான் இறைவன் ஈசா(அலை) அவர்கள் உண்மையான நபி: அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவரல்ல என்று நிரூபிப்பதற்காக அவரை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி அவருக்கு அந்தஸ்தில் உயர்வைக் கொடுத்தான். இதில் யாரும் திடீரென அந்தஸ்துக்குத் தாவவில்லை. பிரச்சனையே ஈசா(அலை) அவர்களின் நபித்துவம்(அந்தஸ்து) பற்றியதுதான். நீங்கள்தான் 'உடல்' என்று தாவி புதுவடிவம் கொடுத்து விரிவுரை என்ற பெயரில் விளையாடியுள்ளீர்கள். 

 நிச்சயமாக அவர் இறுதிநாளின் அடையாளமாவார்(43:61) என்ற ஆயத்திற்கு நீங்களாகவே ஒரு விளக்கமளித்ததோடல்லாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த ஆயத்திற்கு விளக்கமளித்ததுபோன்று ஒரு தோற்றத்தை புகாரி,முஸ்லிம் ஹதீஸ் மூலம் காட்டியுள்ளீர்கள். அந்த ஹதீஸ், இப்னு மர்யமின் வருகையைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் அந்த வருகை எப்படி நிகழும் என்பதையும் சுன்னத்துல்லாவின் அடிப்படையில் ஏற்கனேவே விளக்கியுள்ளோம். அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்திற்கு அந்த ஹதீஸ் விளக்கமாகாது. 

 விளக்கமில்லாத ஹதீஸை உங்களுக்குச் சாதகமாக விளக்கம் என்று எடுத்துக் காட்டி. உண்மையிலேயே ஈசா(அலை) அவர்களின் மரணத்திக்கு சான்றாக நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளதாக உள்ள புகாரியில் தெளிவாக வந்துள்ள (பலம்மா தவபைத்தனி என்ற (5:118)  ஆயத்திற்கு விளக்கம்) ஹதீஸை மறைத்துள்ள காரியம், நீங்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பதை தெளிவாக உணர்த்தக் கூடியதாக உள்ளது. ஒரு பிரச்சனை சம்பந்தமாக திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து, எல்லா வசனங்களையும் இணைத்து முரண்படாத வகையில் விளக்கமளித்து, ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், விரிவுரை எழுதுவதாகக் கூறிக்கொண்டு முரண்படக்கூடியவிதத்திலும் யுக்திக்கும், புத்திக்கும் பொருந்தாத விதத்திலும் ஒன்றைக் காட்டி மற்றொன்றை மறைத்து எழுதினால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும்தான் ஆளாக நேரிடும். அறிவுடைய மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்வார்கள், சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் மத்தியில் உங்களின் வாதம் எடுபடாது. விரைவில் உங்களின் தவ்ஹீது மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓட நேரிடும். உங்களின் தவறான கருத்துக் அடிகிடைக்கின்றபோது அந்த ஆயத்துகளையும், ஹதீஸ்களையும் கண்டுகொள்ளாமல் நழுவுவதும் உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது.
 
 'இன்னஹுல இல்முஸாஅத' என்ற வசனத்தில் ஈசா(அலை) இறுதி நாளின் அத்தாட்சியாகும் (அடையாளம்) என்று எழுதியுள்ளீர்கள். 'இன்னஹு' என்பதில் 'ஹூ' என்பது குரானைக் குறிக்கும் என்று பல விரிவுரையாளர்கள் எழுதியுள்ளார்களே! அது எப்படி உங்களுக்கு உறுதியான சான்றாக முடியும். இறுதி நாள் என்று எங்கேஉள்ளது? அந்த வசனத்திலுள்ள 'ஸாஅத' என்பது அந்த நேரம் என்றல்லவா பொருள்படும். 

 இதனால் அவர் விண்ணில் உள்ளார் என்பதற்கு என்ன சான்று? உயிருடன் விண்ணிலிருந்து இறங்குவார் என்று அதில் எழுதப்படவில்லையே, இனி ஹதீஸில் அவர் இறங்குவார் என்றிருக்கிறது என்றால் அதற்கு திருக்குரானின் அடிப்படையிலேயே பொருள் கொள்ளவேண்டும். 

 இன்னும் 'இல் முஸ்ஸாஅத்' என்பது ஈசாதான் என்று அடம்பிடிப்பதானால். அந்த சூராவின் 86 வது வசனத்தில் 'வ இன்ஹு இல்முஸ்ஸாஅதி' என்று வந்துள்ளது. அதாவது உங்கள் கருத்துப்படி ஈசா(அலை) அவனிடம் இருக்கிறார் என்று பொருள் வைத்துக் கொண்டாலும் தொடர்ந்து அல்லாஹ்கூறுகின்றான்  'வ இலைஹி துர்ஜவூன்' என்று, அதாவது நீங்கள்தான் அவரிடம்  செல்லவேண்டுமே அல்லாது ஈசா இங்கே வரமாட்டார், எனவே இனிமேலாவது 'இல்முஸ்ஸா அ' என்று கூறி ஏமாறவும் வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் இப்னு மர்யம்வருவார்கள்., இறங்குவார்கள் என்று கூறியுல்லார்களே அதற்க்கு என்ன பொருள்? என்று வினவலாம். அதற்க்கு பதில் ஏற்கனேவே கூறியுள்ளேன். 

  'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்பதற்கு முன்னாள் ஈசா(அலை) அவர்களின் உடலையும் சேர்த்துக் கூறப்பட்டதனால் (கொலை செய்தல், சிலுவையில் அறைதல்) 'ரபா ஆ' என்ற உயர்த்துதலும், உடலோடுதான் என்று எழுதியுள்ளீர்கள். 'ரபா ஆ' என்பதற்கு நீங்கள் சுயமாகக் கொடுத்துள்ள பொருள் தவறானதாகும் ஏனெனில் திருக்குரானில் 'ரபா ஆ' என்ற சொல் நீங்கள் கொடுக்கின்ற பொருளில் எங்கேயும் வரவில்லை. ஹதீஸ்களிலும் 'ரபா ஆ' என்ற சொல் உடலுடன் உயர்த்துவதாக எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காண முடியாது. உங்களைவிடப் பெரிய விரிவுரையாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக 'ரபா ஆ'  என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். அரபு அகராதி 'லிஸானுல் அரபு' விலும் 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. எல்லாம் உங்களின் கூற்றை மறுக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள், சென்றகாலப் பெரும்,பெரும் விரிவுரையாளர்கள், அகராதி ஆகியவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உங்கள் தவறான கற்பனைப் பொருளை என் ஏற்றுக் கொள்ளவேண்டும்? திருக்குரான், ஹதீஸ்களிலிருந்து 'ரபா ஆ'  என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்தப்பட்டதற்க்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் ஏற்கிறோம். 

 மேலும் 'ரப அஹூ' எனபதில் ஹூ என்பது ஈசாவின் உடலையும் சேர்த்துதான் குறிக்கும் என்ற உங்களின் சுயசிந்தனையின் அடிப்படையிலான வாதத்தையும் திருக்குர்ஆன் மறுக்கிறது. (3:170) இல் இறை வழியில் கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களின் இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கியவற்றால் மகிழ்ச்ச்சி அடைகின்றார்கள் என்று வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்களா? உடலுக்கும் சேர்த்துதான் உணவளிக்கபப்டுகின்றார்களா? உடலுடந்தான் மகிழ்ச்சியடைகின்றார்களா? ஏனெனில் இதில் வந்துள்ள சுட்டுப் பெயர்கள் 'குதிலூ' என்று கொலை செய்யப்பட்டவர்கலையே குறிக்கும். 

 ஈசாவைக் கொல்லவில்லை. சிலுவையில் அறையவில்லை என்று சொல்வதானால் கொலைசெய்யப்படாதவரும், சிலுவையில் அறையப்படாதவரும் சாகக் கூடாது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? சிலுவையில் அறையப்படாமல், கொலை செய்யப்படாமல் இறந்த பின்னர் 'ரப அ' செய்யப்பட்டார் என்று சாதாரண அறிவுடையவர்கள் கூட எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் (3:56) இல் அல்லாஹ். 'நான் உன்னை என்னளவில் உயர்த்துவேன்' என்று வாக்குறுதி அளிப்பதற்கு முன்னதாக நான் உன்னை மரணிக்கச் செய்வேன் என்று கூறியிருந்தான். என்னளவில் உயர்த்துவேன் என்ற வாக்குறுதியைப் பூர்த்தி செய்ததாக 'பல் ரபவுல்லாஹு இலைஹி'  என்ற வசனத்தில் உறுதிப் படுத்திவிட்டான் என்றால் அதற்க்கு முன்னர் மரணமடையசெய்வேன் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியதாகத் திருக்குர்ஆன் ( 5:118 ) இல் (பலம்மா தவப்பைத்தனி) என்ற சொல்லால் இறைவன் உறுதிபடுத்தியுள்ளான்

 ஈசா மீண்டும் உலகிற்கு வந்து, இறந்துபோன பின்னர்தான் மேற்கண்ட ஆயத்தில், குறிப்பிட்டவை நிகழும் என்று நினைப்பதாக இருந்தால், அது உங்களின் கற்பனையே தவிர உண்மையில்லை. ஏனெனில் அந்த உரையாடல் 'வ இத்காலல்லாஹூ' என்று இறந்த காலச் சொல்லில்தான் ஆரம்பிக்கிறது. மேலும் ஈசாவின் இந்த வார்த்தைகளை எடுத்தாளுகின்றபோது நபி (ஸல்) அவர்கள் ; ப அகூலு கமாகால அப்துஸ்ஸாலிஹ் - (புகாரி கிதாபுத் தப்சீர்) அதாவது அதாவது அல்லாஹ்வின் நல்லடியார் கூறியதுபோல் நானும் கூறுவேன்' என்றுதான் கூறியுள்ளார்களே தவிர 'கமா யகூலு' அவர்கள் கூறப்போவதுபோல் என்று கூறவில்லை. எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஈசா உயர்த்தப்படுதளுக்கு முன்னதாகவே அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது என்பதாகும். இதனை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் உறுதிப்படக் கூறியிருக்கும்போது, நீங்கள் மட்டும் அதனை மறுக்கிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்க்கவேண்டுமா? குரான் ஹதீஸ் அறிவுடைய நபி(ஸல்) அவர்களை மதித்து நடக்கக் கூடிய எந்த முஸ்லிமும் என்றுக் கொள்ள மாட்டான். 

 மேலும் நீங்கள், ஈசா(அலை) உடலுடன் உயர்த்தப்பட்டு உயிருடன் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் இறைவன் குர்ஆனில் கூரிவதைப் பாருங்கள். 'ஈசா தான் அல்லாஹ் என்று கூறிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: மஸீஹ் இப்னு மர்யம். ஒரு தூதர் மட்டுமே, அவருக்கு முன் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர்', (5:73-76 ) என்று இங்கே ஈசாவுக்கு முன்தோன்றிய தூதர்கள் இறந்துவிட்டதைப் போல் ஈசாவும் இறக்காமல், அவர் மட்டும் விண்ணில் உயிருடனும், உடலுடனும் இருக்கிறார் என்றால், ஈசா மற்ற தூதர்களைப் போன்றல்லாததால் இறைவனாவார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு இவ்வசனம் எவ்வாறு மறுப்பாக முடியும்? அல்லாஹ் கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கையை மறுத்து சான்றாகக் காட்டும் இந்த வசனம் பயனற்றதாகப் போய்விட்டதா?  

 உடலோடும் இருக்கிறதாகக் கூறுகிறீர்களே; அல்லாஹ் நாடினால் உணவளிக்க முடியும் என்கிறீர்களே; அவருடைய உடலும் இப்போது இல்லை. உணவு உண்பதுமில்லை என்று அல்லாஹ் கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா? அல்லாஹ் ஈசாவைப் பற்றி உணவருந்திக் கொண்டிருந்தார் என்று (5:76) கூறுகிறான். அதாவது இப்போது அவர் உணவருந்தவில்லை: சென்ற காலத்தில் தான் உணவருந்தினார். இப்போது என் உணவருந்தவில்லை என்றால் அதற்குத் தேவையான உடல் இல்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார். என்று இறைவன் கூறுகிறான். 

 (21:9) இல் ஈசா உட்பட உள்ள எந்தத் தூதருக்கும் உணவருந்தாதத் தேவையில்லாத உடலை வழங்கவில்லை என்கிறான். எனவே அவருக்கு உடல் இருந்தால் கட்டாயம் அவர் உணவருந்தியே ஆகவேண்டும். என்பது அல்லாஹ்வின் கூற்று எனேவேதான் அவர் இப்போது உணவருந்துவது எப்படி? என்று நாங்கள் கேட்கிறோம். 

 அடுத்து ஈசாவும் அவருடைய தாயாரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள் (5:76) என்று இறைவன் கூறி, இப்போது உணவருந்தவில்லை என உறுதிப்படுத்துகிறான். நீங்கள்தான் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு உணவு ஊட்டுகிறீர்கள். ஆனால் அவர் இப்போது உணவு உண்ணவில்லை என்று இறைவன் அறிவிப்பதால் அவர் உடலுடன் இல்லை என்று உறுதியாகிறது. இன்னும் அவர் உணவு தேவை இல்லாத உடலுடன் விண்ணில் இருப்பதாக அடம்பிடிப்பதானால், அதன் பொருள் (21:9) இன் படி அவர் நபியாக முடியாது. ஏனெனில் நபியாக இருந்தால் இறைவாக்குப்படி உணவு உட்கொள்ளக்கூடிய உடல் தேவை (21:9) 

 ஆகவே அவர் கிறிஸ்தவர்கள் கூறுவது போல் இறைவனின் மகனோ, இறைவனோ ஆவார் என்று மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகிவிடும். இதுதான் மறைமுகமான 'ஷிர்க்' இப்படிப்பட்டவர்கள்தான் 'முஷ்ரிக்'. முஸ்ரிக்குகளைப் பற்றி அவர் 'நஜீஸ்' ஆவார் என்று (9:28) அல்லாஹ் கூறுகிறான். அப்படிப்பட்ட நஜீஸ்களால் திருக்குரானின் உண்மையை உணரமுடியாது என்று அல்லாஹ் (56:80) கூறுகிறான். எனவே இப்படிப்பட்ட கொள்கையை உடையவராக இருந்தால் திருக்குரானை விளங்கவே முடியாது, அறிந்து திருந்திக் கொள்க. திருத்திக் கொள்க. 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா?

 

 
அந்நஜாத் அக்டோபர் 2010 இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி, 'அவர்கள் செல்வது நேர்வழி அல்லகோணல் வழிகளில் ஒன்றே என்பது குரான்ஹதீஸை எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகின்றவர்கள் அறிய முடியும்எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்க்கு அவர் எடுத்து வைத்திருக்கும் சான்றுமார்க்கம் முழுமையடைந்துவிட்டதுஅதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை. (5:3)அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப் படுத்தப் பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) ஆகியையாகும்.

இவ்விரு வசனங்களின் படி இனி இறைவனிடமிருந்து எந்த நபியும் தோன்ற முடியாது என்றால் ஈஸா நபியின் வருகையை அவர் எப்படி எதிர்பார்த்திருக்கிறார்.இந்த மார்க்கத்தில் ஒன்றுமே புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை என எழுதும் அவர் ஈஸா நபி அவர்களை எதற்க்காக எதிர்பார்க்கிறார்? 1431 ஆண்டுகளுக்கு முன்னறே முழுமைப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் ஈஸா நபி தன நபிப் பதவியை இழந்து வந்து நிற்க வேண்டிய தேவை என்ன?

நஜாத் பிரிவினர் என மக்களால் அறியப்படும் இவர்கள்பிற முஸ்லிம்களிடம் காணப்படும் சில ஷிர்க்கானபித்தத்தான கொள்கைகளை விட்டு விலகியிருந்தாலும் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுப்பதில் கிறிஸ்தவர்களிடமும்பிற முஸ்லிம்களிடமும் காணப்படும் அதே ஷிர்க்கான கொகைகளைக் கொண்டிருக்கின்றார்கள். அபூ அப்தில்லாஹ் சாஹிப் பாணியில் சொல்லப்போனால்அந்த வகையில் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமல் கடந்த ௨௦௦௦ ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார் என்ற இந்தக் கிறித்தவக் கொள்கையை திருக்குர்ஆன் முற்றிலுமாக மறுக்கிறது!
"நாம் (தூதர்களாகிய) அவர்களுக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததுமில்லை." (21:9)

இந்த வசனத்தின்படி ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை இறைதூதராக நம்பும் எந்த முஸ்லிமும் உணவு உண்ணாத உடலை அவருக்கு வழங்கியதாக நம்பமாட்டார். அவ்வாறு நம்பினால் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் அசாதாரணமான பண்பு அவருக்கு இருப்பதாக கிறித்தவர்களைப் போன்று அவரும் நம்புகிறார் என்று பொருள்
அடுத்து 'நபி(ஸல்) அவர்கள் இறந்து ஈஸா(அலை) அவர்கள் எப்படி உயிரோடு இருக்கமுடியும் போன்ற காதியானிகளின் வாதமெல்லாம் அறிவு குறைந்த மக்களை மாற்றும் தந்திரமே அன்றி யதார்த்தம் அல்லஎன நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுகிறார்.
"உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்காலம் வாழும் வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் நீண்ட நெடுங்காலம் வாழ்வதா? (21:35)
மேற்கண்ட வசனத்தின் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்து அன்னாருக்கு முன்னர் தோன்றிய ஈஸா நபி (அலை) எப்படி உயிரோடு இருக்க முடியும் என்ற கேள்வி அறிவு குறைந்த மக்களை ஏமாற்றும் தந்திரமல்ல. மாறாக யதார்த்தமே என்பதை அல்லாஹ் நமக்குப் புரிய வைத்துள்ளான். மார்க்கத்தை அதன் தூய விடிவில் எடுத்துரைப்பவர்கள் என மார்தட்டும் நஜாத் பத்திரிகையை சார்ந்தவர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
21:9 வசனத்தில் இறைத்தூதர்களுக்கான விதிமுறைகளையும் 21:35வசனத்தில் மனிதர்களுக்கான விதிமுறைகளையும் எடுத்துக் கூறி இறைவன் விளக்கியிருக்கும் போதுஈஸா நபி (அலை) வானத்தில் உயிருடன் உணவு உண்ணாமல் வாழ்ந்து வருகிறார் என்று நம்புவது அவருக்கு மனிதனுக்கும் இறைதூதருக்கும் அப்பாற்பட்ட ஒரு அந்தஸ்த்தைக் கொடுப்பதாகிவிடும். மேலும் அது தவ்ஹீதுக்கு மாற்றமானஷிர்க்கான கிறிஸ்தவக் கொள்கையாகும்.
நபியின் அந்தஸ்தில் உயர்த்தப்பட்ட ஈஸா (அலை) எதற்க்காக நபிப்பதவியை இழந்தார்ஒரு நபிக்கு நபிப்பதவி வழங்கப்பட்டு அதனை அவரிடம் இருந்து பறித்ததாக மார்க்க வரலாறு உண்டாஅல்லாஹ்வின் நடைமுறை ஏதாவது இருக்கிறதாவானத்திற்கு ஏறிச்சென்றதுஉணவு உண்ணாத உடலை கொண்டிருப்பதுஇறந்தவர்களை உயிர்ப்பித்தது போன்ற விஷயங்களிலெல்லாம் ஈஸா நபிக்கு மட்டும்தான் இவர்கள் தனிச்சிறப்பை வழங்குகின்றனர்.
இவ்வாறு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற முஸ்லிம்களைப் போன்றே இவர்களிடமும் ஈஸா நபி(அலை) அவர்கள் விஷயத்தில் மட்டும் பல நூதனமான கொள்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஓர் உதாரணத்தை எடுத்து வைக்கின்றோம். அந்நஜாத் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:
'..... இறைந்தவர்களை உயிர்பித்தது இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதுஇவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று உறுதியாக நம்புவது ஈமானில் உள்ளதாகும்.' (அந்நஜாத் அக்டோபர் 2010பக்கம் 18)
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றிஉஹ்யில் மௌத்தா பி இஸ்நிஹி (அவன் கட்டளையினால் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் எனவும் (3:50),நீர் உயிரற்றவர்களை என் கட்டளையினால் எழுப்பிய நேரத்தையும் எனவும் (5:11) திருக்குரானில் உள்ள வசனத்திற்கு நேரடியான வெளிப்படையான பொருளைக் கொடுக்கின்றனர். பௌதீகமாகஉடல் அளவில் உயிரூட்டினார் என்று நம்பி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஏனெனில் படைத்தல்மரணிக்கசெய்தல்உயிரூட்டுதல் ஆகிய பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்றும்இனையாக்கப்பட்டவர்களுள் எவராலும் இதனை செய்ய முடியாது என்று இறைவன் திருக்குரானில் திட்டவட்டமாக குறிப்பிடுகின்றான்.
"அல்லாஹ்வே உங்களைப் படைத்தான் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிரூட்டுவான் உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களில் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனராஅவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (இறைவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மெக்க மேலானவன்." (30:41)
மக்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஈஸா (அலை) அவர்கள்தான். இணையாக்கப்பட்டவர்களில் எவருமே உயிரூட்டுவதில்லை என்று அல்லாஹ் குறிப்பிடும்போது அது மிக அதிகமாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குதான் பொருந்துகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
எனவே திருக்குர்ஆன் 3:50 ல் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக வந்திருப்பது அவர் பௌதீகமாக இறந்தவர்களை உயிர்பித்தான் என்று பொருள் கொள்ள முடியாது. அது மேற்கண்ட 30:41 வசனத்திற்கு முரணானது. ஈசாவுக்கு இறைத்தன்மையைக் கொடுப்பதாகிவிடும். இந்த வகையில் ஜமாஅத் அல் முஸ்லிமீன் என தம்பட்டம் அடிக்கும் பிரிவினருக்கு கிடைக்கும் பட்டம் முஷ்ரிக் என்றே ஆகிவிடும்!
இதே சொல்லை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் அல்லாஹ் திருக்குரானில் இவ்வாறு கூறியிருக்கிறான்.
"நம்பிக்கை கொண்டவர்களே! இறைதூதர் உங்களை உயிர்பிப்பதற்க்காக உங்களை அழைத்தால் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவருக்கும் பதில் அளியுங்கள்." (8:25)
இவ்வசனத்தில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும் உயிர்பித்தல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்திற்கு எவருமே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் பௌதீகமான முறையில் இறந்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்கள் என்று பொருள் கொள்வதில்லை. மாறாக ஆன்மீகமான முறையில் உயிரற்றோருக்குதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்றே விரிவுரையாளர்கள் எழுதியுள்ளனர். 'உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அலைக்கும் போது அவருக்கு பதிலளியுங்கள்என p.j யும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனால் இதே சொல் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும் போது மட்டும் உண்மையிலேயே இறைந்தவர்களுக்கு உயிரூட்டினார் எனக் கூறி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுத்து கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர்.
சுன்னத் ஜமாஅத்தினரை விட காதியானிகள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள்காரணம்சுன்னத் ஜமாஅத்தினர் இறைவனால் மன்னிக்கவேபடாத ஷிர்க்கை செய்கின்றனர் என அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் முதலில் தாமும் ஷிர்க்கில் தான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதே என்பதே எமது அவாவும் துவாவுமாகும்.
ஆக ஒரே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வரும்போது அதற்க்கு ஆன்மீகமாக உயிரூட்டுதல் என்பதுதான் பொருள் என்பதை விளங்கிய இவர்களால் ஈஸா (அலை) அவர்களுக்காக அதே சொல் வரும்போது உடல் ரீதியாக உயிரூட்டினார். என்று பொருள் கொள்பவர்கள்தான் 'திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுத்து வழிகெடுக்கின்றார்கள்என்பதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணர்ந்தவர்களால் புரியாமல் இருக்க முடியாது. அந்நஜாத் பத்திரிகையை கண்மூடித்தனமாக தக்லீது செய்பவர்களால் புரியாமர்போனத்தில் வியப்பேதும் இல்லை.
ஈஸப்னு மர்யம் இறங்குவார் என்ற சொல் ஹதீஸில் வருவதனால் அதில் வானம் என்ற சொல்லையும் சுயமாக சேர்த்து வானத்திலிருந்து இறங்குவார் என்று பொருள் கொடுப்பதன் மூலம் பிற முஸ்லிம்களைப் போன்றே ஜமாத்துல் முஸ்லிமீன் வாதிகளும் ஷிர்க்கில் தான் இருக்கின்றனர். நூஸுல் (இறங்குதல்) என்ற இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக திருக்குரானில் இவ்வாறு வருகிறது.
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு தூதரை இறக்கியுள்ளான்." (65:11-12) இங்கே அவர்கள் வானத்திலிருந்து இறங்கினார்கள் என பொருள் கொடுக்காத இவர்கள் ஈஸா (அலை) விஷயத்தில் மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என பொருள் கொடுப்பதும். ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும் கிறிஸ்தவர்களைப் போன்று தனித்தன்மையை உருவாக்க முயல்வதும்தான் திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுப்பதாகும் என்ற உண்மையை தமிழன் tv யில் நமது நிகழ்ச்சியை பார்த்த பலர் புரிந்து கொண்டனர்!
மாறாக அல்லாஹ் அவரை (அதாவது ஈஸாவை) தன்னளவில் உயர்த்தினான் (4:159) என்ற வசனத்தில் உயர்த்துதல் என்பதற்கு அப்படியே நேரடியான,வெளிப்படையான பொருளை கொடுத்து ஈஸாவுக்கு தனிச்சிறப்பை காட்ட முனைவதில் ஜமாத்துல் முஸ்லிமீன் வாதிகளும் இனைவைப்பவர்களே! இறைவன் ஒருவரை உயர்த்தினான் என்று சொன்னால் அரபி மொழி சொல் வழக்கின்படி அவருடைய அந்தஸ்தை உயர்த்தினான். என்றுதான் பொருளே தவிர உடலோடு உயர்த்தினான் என்ற பொருள் அல்ல. இதனை திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுக்காதவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
:"மேலும் நாம் அவரை (இத்ரீஸை) ஓர் உயர்வான இடத்திற்கு உயர்த்தினோம்." (19:58)
நாம் விரும்பியிருந்தால் அதன் மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார்.(7:177)
7:177 வசனத்தில் உயர்த்தியிருப்போம் என்பது மட்டுமல்லாது (வானத்திற்கு எதிர்சொல்லான) பூமியின் பக்கம் அவர் சாய்ந்துவிட்டார். என்று குறிப்பிடப்பட்டிருந்தும் எவரும் அதற்க்கு அல்லாஹ் அவரை வானத்திற்கு உயர்த்த விரும்பினான் என்று பொருள் கொள்வதில்லை. ஈஸா நபிக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சிறப்புஎன்பதே நம் கேள்வி.
அடுத்து 'அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களை தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருப்பது அல்லாஹ்வின் வல்லமைக்கு இயலாத சாத்தியமில்லாத ஒன்றல்லஎன அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டிருக்கிறார். (நஜாத் அக்டோபர் 2010 பக்கம் 18)
கடவுளுக்கு வல்லமை உள்ளது என்றால் அவனுக்கு பொய் சொல்ல வல்லமை உள்ளதா என நத்திர்கர்கள் கேட்பது போன்று அபூஅப்தில்லாஹ் சாஹிபின் கேள்வி இருக்கிறது! இது ஓர் அப்துல்லாஹ்வின் (அல்லாஹ்வின் அடியாரின்) கேள்வியாக இருக்க முடியாது. காரணம்அல்லாஹ்வுக்கு சாத்தியமுள்ளது எனபது வேறு: அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு மாறுபட்டது என்பது வேறு. இவ்விரண்டையும் பிரித்துணர்ந்தவர்தான் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்) என்பதை அபூ அப்தில்லாஹ் திருக்குரானின் ஒளியில் புரியத் தவறிவிட்டார். குரான்ஹதீஸை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் உள்ளாது உள்ளபடி உணர்கிறோம் என்று வாதம் புரிய முடிபவரால் இதை ஏன் புரியமுடியாமற் போய்விட்டதுஎன்பதை நினைக்கும் போது நாம் அவருக்காக பரிதாபப்படுகிறோம்.
மக்கத்து காபிர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டனர்:
"நீங்கள் வானத்திற்கு ஏறிச் செல்லவண்டும் நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டுவராதவரை நீர் வானத்திற்கு ஏறிச்சென்றதையும் நாங்கள் நம்ப மாட்டோம் (என அவர்கள் கூறினர்). நீர் கூறுவீராக : என் இறைவன் தூயவன்: நான் ஒரு மனிதராகிய ஒரு தூதரேயன்றி வேறில்லை." (17:94)
வானத்திற்கு உயர்த்திச் செல்லுதல் என்பது அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருப்பது போன்று 'இறைவனின் வல்லமைக்கு இயலாத,சாத்தியமில்லாத ஒன்றுஎன்பதனால் அன்று என்பதை அன்றே அல்லாஹ் விளக்கிவிட்டான். மாறாக அவ்வாறு செய்வது இறைவைனின் பரிசுத்ததன்மைக்கு மாறுபட்டது என்பதனால் ஆகும். அது இறைவனின் சுன்னத்திற்கு - நடைமுறைக்கு மாறுபட்டது என்பதனால் ஆகும். மேலும் அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். என்று அல்லாஹ்வே திருக்குரானில் குறிப்பிடுகின்றான். (பார்க்க : 17:78; 33::63; 35:44)
மௌலவி p.j. சாஹிபும் இவ்வசனத்தில் வந்துள்ள சுப்ஹான் என்ற சொல்லின் விளக்கவுரையில் இக்கருத்தை ஆமோதித்தவாறு இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"சுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை என்ற சொல்அழுக்குஅசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் சுப்ஹான் அதைவிட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும். கடவுள் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே சுப்ஹான் என்பதன் பொருளாகும்." (p.j. திருக்குர்ஆன் தமிழாக்கம் அடிக்குறிப்பு எண்:10 பக்கம் 959)
"காதியானிகளின் கூற்றுப்படிஈஸா (அலை) உயிருக்கு பயந்துதனது தூதுத்துவ பணியைக் கைவிட்டு அல்லது மறந்து காஷ்மீருக்குத தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப்போய் ....என கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் அபூ அப்தில்லாஹ் சாஹிப் தனது நம்பிக்கைப்படிஈஸா நபி (அலை) அவர்களை எந்த இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்? 4:158 வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டு யூதர்களின் ஒருவருக்கே ஈஸா நபியின் உருவம் தரப்பட்டது. அவர்கள் அவனை பிடித்து சிலுவையில் அறைந்தனர். இவ்வாறு இறைவன் ஆள்மாறாட்டம் செய்து தன் பக்கம் உடலளவில் அப்படியே உயர தூக்கிக் கொண்டான் என்றும்கடந்த 2000 ஆண்டு காலமாக ஈஸா நபி தனது தூதுத்துவப் பணியைக் கைவிட்டு அல்லது மறந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வானத்தில் சென்று அமர்ந்து கொண்டார் என கொச்சைப்படுத்தி தானே நம்பி வருகிறார்! 21:9, 21:35 வசனங்களுக்கு முரணாக உணவு உண்ணாமல் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார் என்று தானே நம்புகிறார்இயேசு கர்த்தரின் வலது பாரிசத்தில் சென்று அமர்ந்து கொண்டார்உண்ணாமல் உறங்காமல் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்ற கிறித்தவர்களின் கொள்கைக்கும் இவர்களின் கொள்கைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இவர்களின் நம்பிக்கைப்படியும் ஈஸா நபி 2000 ஆண்டுகளாக தூதுத்த்வப் பனி புரியாமல் சும்மாதானே உட்க்கார்ந்து கொண்டு இருக்கிறார்திரும்பி வரும்போது அவர் நபி பதவியுடன் வருவாரென்று நம்பினாலாவதுஇடையில்2000 ஆண்டுகள் சும்மா இருந்ததை நியாயமாகக் கொள்ள இடமுண்டு. வருபவர் பாவம் நபிப் பதவியையும் இழந்துவிட்டு வந்து நிற்பார் என்று நம்பும் இவர்களை நினைக்கும்போது மிக பரிதாபமாக இருக்கிறது!
இதில் வேடிக்கை என்னவென்றால் நபி பதவியை இழந்து விட்டு வருவார் என்ற இவர்களின் சுய விளக்கத்திற்கு எவ்வித சஹீஹான ஹதீஸ் சான்றும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அதற்க்கு நேர்மாற்றமாகவரும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாக இருப்பார்) அன்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். முஸ்லிமில் உள்ள நபிமொழியில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி முறை நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபி) என ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது அதை மறுப்பவர்களை நாம் எந்த சொல்லால் குறிப்பிடுவது?
இந்த ஹதீஸை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நாம் அபூஅப்தில்லாஹ் சாஹிபின் வீட்டிற்கு சென்று கருத்துபரிமாற்றம் செய்தபோது எடுத்து வைத்தோம். நபி மொழியைப் படித்து பார்த்து விட்டு. பரிசீலிக்க வேண்டியது என்றார். இன்றுவரை பரிசீலித்துக் கொண்டே இருக்கிறார். பதில் இல்லை.

வருகின்ற ஈஸாவை அல்லாஹ்வின் தூதர் என்று ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறிய பிறகு அப்பதவியை அவரிடமிருந்து பறிப்பதற்காக என்ன பரிசீலனை வேண்டிக்கிடக்கிறது?
ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனக்கும் அவருக்கும்அதாவது ஈசாவிற்கும் இடையில் எந்த நபியுமில்லை".(அபூதாவூத்கிதாபுல் மலாஹிம். பாபு. குருஜுத் தஜ்ஜால்)
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளிலும்வருகின்ற ஈஸாவை அல்லாஹ்வின் நபி என்று ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் நிலையில். திருக்குரானில் வழி கெட்ட கொள்கை என இறைவனால் எச்சரிக்கை செய்யப்பட்ட கடைசி நபிக் கொள்கையை(அது பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பார்ப்போம்) இவர்களும் கொண்டிருப்பதால் மேற்கண்ட நபிமொழிகளுக்கு மாற்றமாக ஈஸா நபியிடமிருந்து நுபுவத்தைப் பறிக்கும் கட்டாய நிலை பிற முஸ்லிம் பிரிவினர்களைப் போல இவர்களுக்கும் இருக்கிறது! புது ஷரியத்தோ உம்மத்தோ இல்லாத நபி வரமுடியும் என்ற இஸ்லாமியக் கொள்கையை டம்மி நபி என கிண்டல் அடிக்கும் இவர் ஈஸாவையும் டம்மி நபியாகத்தானே கிண்டலடித்துள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2

 
அடுத்து ஈஸா நபி (அலை) ௦௦2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும்,கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.


அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என ௫:௭௫ இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.
அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித் தோழர்களுக்கு முன்னாள் இந்த (3:145) வசனத்தை ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏன் ஓதிக் காட்டினார்கள்? (3:145) வசனத்தை (5:76) வசனத்தையும் அபூ அப்தில்லாஹ்,பி.ஜே. போன்றோர் இணைத்துப் பார்க்கத் தெரிந்தது போல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களால் கூட இன்று அபூ அப்தில்லாஹ் சாஹிபும் பி.ஜே சாஹிபும் உணர முடிந்த உண்மையை உணர முடியாது போயிற்று என்று சொல்ல வருகிறார்களாஈஸா நபி உயிருடன் இருக்கும் கிறித்தவக் கொள்கையை அன்று நபித்தோழர்களில் எவருக்காவது இருந்திருக்குமென்றால் (5:75) (43:61) வசனங்களை எல்லாம் எடுத்துவைத்திருப்பார்கள். ஆனால் அன்று எவருமே இன்று இவர்கள் காட்டும் எந்த வசனத்தையும் எடுத்துவைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதிலிருந்தே இது இவர்களின் கைச்சரக்கு என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். தற்போது இறையருளால் பலர் புரிந்து கொண்டும் வருகின்றனர்.

அபூஅப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டதுபோல், (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (3:145) இல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறந்து போகவில்லை. ஆயினும் இனிமேல் இறப்பவர்களே என்று கருத்து கொள்ள இடம் இருக்கிறது. காரணம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் நபித்தோழர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் அதே வசனத்தில், 'அவர் மரணமடைந்துவிட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிக்கால்களில் திரும்பிச் சென்றுவிடுவீர்களா?' என்று அல்லாஹ் கேட்கிறான். இதுதான் அவர் இதுவரை மரணமடையவில்லை: கொலை செய்யப்படவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஆனால் (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (5:76) ஆம் வசனத்தில் 'மர்யமின் மகன் மெஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லைஅவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துவிட்டார்கள்'. என்று கூறிய பிறகுள்ள வாசகங்கள் அந்த வசனம் இறங்கும் நேரத்தில் நிச்சயமாக ஈஸா நபி மரணமடைந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.


 அல்லாஹ் கூறுகிறான்:

"அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்."(5:76)

இங்கு அவர் ஓர் இறைத்தூதர்தான்: மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உணவு உண்ணாத உடலை நாம் அவ்விருவருக்கும் வழங்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். உணவு உண்ணாத உடலை இறை தூதர்களுக்கு வழங்கவில்லை என்ற (21:9) வசனத்தை இணைத்துப் பார்க்கும் போதுஇது ஈஸா நபி மரணிக்கவில்லை: ஆயினும் இனிமேல் மரணிப்பவர்களே என்ற கருத்தை அல்லமாறாக உணவு உண்ணத் தேவையுடைய உடலைக் கொண்டிருந்த ஈஸா தற்போது உண்ணவில்லை. என்பதிலிருந்து அவர் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்பது மட்டுமல்ல;மரணித்தும் விட்டார் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

அந் நஜாத் அக்டோபர் (2010) இதழில் அதன் ஆசிரியர்ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருக்கிறான் எனக் குறிப்பிட்டிருந்தார்உணவு உண்ணத்தக்க உடலைப் பெற்றிருந்த நபிமார்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமலும்உறங்காமலும் (2000) ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிருடன் இருக்கின்றார் என்ற கிறித்தவர்களின் இந்த ஷிர்க்கான கொள்கைக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. என்பதை நிரூபித்திருந்தோம்.

'காதியானிகளின் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்என்ற உள் தலைப்பில் நம்மீது பிற முஸ்லிம்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை ஜனாப் அபூ அப்தில்லாஹ் சாஹிப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருப்பதை நாம் பாராட்டுகிறோம். அது மட்டுமல்லாது சுன்னத் ஜமாத்துகளிடம் காணப்படும் பெரும்பாலான ஷிர்க்,குப்ர்பித்அத் செயல்பாடுகள் காதியாநிகளிடம் இல்லை என்ற நம்மைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தையும் நாம் மனமாற வரவேற்கிறோம். இதனால் அவருக்கு சிலர் எழுதிய கடுமையான விமர்சனங்களுக்கு அந்நஜாத் ஜனவரி இதழில் அவர் நேர்மையான பதில் எழுதியிருப்பதும் போற்றத்தக்கதாகும்.
திருச்சியில் (1987) பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் நாம் விநியோகித்த பிரசுரங்களை மிஸ்பாஹிகள்ரஹ்மானிகள் ஆகிய அனைத்து ரக மௌலவிகளும் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குதித்ததையும் காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள குர் ஆன்ஹதீஸுக்கு முரண்பட்ட கொள்கைகளை தெளிவுபடுத்த வக்கற்றவர்கள்தான் பிரசுரம் கொடுப்பதை தடுக்க முற்படுவார்கள். காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள தவறுகளை தெளிவுபடுத்த எம்மால் முடியும்பிரசுரம் கொடுப்பதை தடுக்க வேண்டாம் எனக் கூறி பிரசுரம் கொடுக்க அனுமதித்தோம் என்ற சம்பவத்தையும் அபூ அப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மேற்குறிப்பிட்ட அனைத்து ரக மௌலவிகளும் காதியானிகளின்கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கற்றவர்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் கூட அபூஅப்தில்லாஹ் சாஹிப் கொடுத்துள்ளார். ஆயினும் காதியானிகளின் தவறுகளை எம்மால் தெளிவுபடுத்தமுடியும் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவந்திருந்த இவர்களின் கொள்கையைச் சேர்ந்த சிலர் அந்த நேரத்திற்குப் பிறகே அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கொள்கைப் பற்றி நன்கு ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து இதில் இணைந்து விட்டனர். அது நஜாத் பிரிவினரிடம் தெளிவான பதில் இல்லை என்பதையும் அவர்களின் கொள்கையில் இருந்தவர்களே கண்டு கொண்ட உண்மையாகும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இறுதி நபிக் கொள்கைக்குஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே காத்தமுன் நபி - முத்திரை நபி - இறுதி நபி (33:40) எனக் குறிப்பிட்டுள்ளார்.

காத்தம் என்ற இந்தச் சொல் நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது போன்று திருக்குரானிலோஹதீஸிலோஎங்கேயும் ஒருமைச்சொல்லுடன் இணைந்து குறிப்பிடப்படவே இல்லை என்ற உண்மையை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாககாத்தம் என்ற இந்தச் சொல் திருக்குரானிலும்,ஹதீஸிலும் நபிய்யீன்அன்பியா என்ற பன்மைச் சொல்லுடன்தான் இணைந்து வந்திருக்கின்றது. அவ்வாறு காத்தம் என்ற இந்தச்சொல் பான்மையுடன்இணைந்துவரும்போது அதற்க்கு சிறந்தது மேலானது,மென்மையானது என்ற பொருளைத்தான் தருமே தவிர இறுதியானது என்ற பொருளை ஒருபோதும் தராது. திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நாம் பெற்ற உண்மையாகும். இதனை யாரும் மறுக்கவும் முடியாது: மறுக்கவும் கூடாது என்பதே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணர்ந்தவர்களின் நிலையாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உதாரணமாக திருக்குரானில் வந்துள்ள காத்தமுன்னபியீன் என்ற (33:41) வசனத்திலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம் - அதாவது சிறந்தவர் என்ற பொருளைத்தான் தருகின்றது. எனவேதான்நஜாத் ஆசிரியரும். 'காத்தமுன் நபிஎன காத்தம் என்ற சொல்லுடன் ஒருமைச் சொல்லான நபி என்பதைத்தான் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரே தவிர நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லைக் குறிப்பிடவில்லை. போலும்.!
ஹஸ்ரத் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த பொருள் இதுதான். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனா காத்தமுல் அன்பியாயிவ அந்த யா அலிய்யு காத்தமுல் அவ்லியாயி." (தப்சீர் ஸாபி - காத்தமுன் நபிய்யீன் என்ற வசனத்திற்கான விளக்கவுரை பக்கம் - 111)

அதாவதுநான் நபிமார்களில் சிறந்தவனாக இருக்கிறேன்அலியே! நீர் வலிமார்களில் சிறந்தவராக இருக்கின்றீர்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்:

"இத்மயின் யா அம்மி! ப இன்னக காத்தமுல் முஹாஜிரீன பில் ஹிஜ்ரத்தி கமா அன காத்தமுன்னபிய்யின்ன பின்னுபுவதி." (கன்சுல் உம்மால் தொகுதி 6பக்கம் 178)
அதாவதுஎன சிறிய தந்தையே! நீங்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்களாக,நான் நுபுவத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருப்பதைப் போன்றே நீங்கள் ஹிஜ்ரத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருக்கின்றீர்கள்.

காத்தம் என்பதற்கு இறுதியானவர் என்ற பொருளைத் தர முடியாது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அவ்வாறு இறுதியானவர் என்ற தவறான பொருளைக் கொடுத்தால் இந்த உம்மத்தில் நபி மட்டுமல்லஒருவலியுல்லாஹ்வோ(இறை நேசரோ)ஒரு முஹாஜிரோ (இறைவனுக்காக தம் ஊரை விட்டு இடம் பெயர்ந்து செல்பவரோ) தோன்ற முடியாது என்றும் நம்ப வேண்டியது வரும். ஆனால் ஹஸ்ரத் அலி(ரலி) அவர்களுக்குப் பிறகு பல வலிமார்களும் (இறைநேசர்களும்)தோன்றியிருக்கிறார்கள் என்பதை நஜாத் கூட்டத்தினர் உட்பட எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர்.

திருக்குரானில் ( 33:41) வசணைமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. அதில் இவ்வாறு வருகிறது:

"முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை அல்லர்ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார். மேலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம்(சிறந்தவர்) ஆகவும் இருக்கின்றார்."

இந்த வசனத்தில் 'லாகின்' (ஆனால்) என்ற சொல் வந்துள்ளது. இந்தச் சொல் அரபி மொழியில் இஸ்தித்ராக் என்பதற்காக வருகிறது என்பதை அரபி இலக்கண அறிஞ்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்தித்ராக் என்றால் முந்தைய சொற்றொடறினால் எழும் ஐயத்தை நீக்குவதற்காக வருகிறது என்பதாகும். இயல்பாக 'ஆனால்என்ற இந்தச் சொல் தமிழ் மொழி உட்பட எல்லா மொழிகளிலும் இதே பயன்பாட்டிர்க்காகத்தான் வருகிறது. உதாரணமாக,எவரும் வரவில்லை. ஆனால் செயத் வந்தார் என்று கூறுகிறோம். இதில் எவரும் வரவில்லை என்ற எதிர்மறை அம்சத்தைக் கொண்ட ஒரு சொற்றொடரைக் கூறிய பிறகு 'ஆனால்என்ற (இஸ்தித்ராக்) சொல் வந்து விட்டால் அடுத்து வரும் சொற்றொடர் அதற்க்கு எதிராக நேர்மறை அம்சத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இலக்கண விதியாகும். எவ்வாறெனில்எவரும்வரவில்லை ஆனால் என்று சொன்னால் அதற்குப் பிறகு வரும் சொற்றொடர் ஸைத் வந்தார் என்று நேர்மறைக் கூற்றில் இருக்க வேண்டும். இல்லைஎன்றால்பொருளற்றதாகிவிடும். எவரும் வரவில்லை;ஆனால் ஸைத் வரவில்லை என்று கூறினால் அது அர்த்தமற்றதாகும்.

இதேமாதிரிதான் காத்தமுன் நபியீன் பற்றிய வசனத்திலும் லாகின் என்ற இஸ்தித்ராக் வருகிறது. முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை இல்லை எனக் கூறி பௌதீகமான முறையில் அவர்கள் தந்தை இல்லை எனக் கூறுகின்ற அதே சமயத்தில்ஆனால் அவர் ஆன்மீகத் தந்தையாக இருக்கிறார் என்ற நேர்மறை அம்சத்தை எடுத்துக் கூறும் வகையில்அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொடர்ந்துஅதைவிட மேலாக அவர் நபிமார்களுக்கு காத்தமாக (சிறந்தவராக்முத்திரையாக) விளங்குகின்றார் எனக் கூறுகிறான். இதன்படி,இனி அன்னாரின் சாட்சி முத்திரையில்லாமல் எவரும் நபியாக முடியாது என்ற பொருளையே தரும்.

இஸ்லாத்தின் பலவேறு மார்க்க அறிஞ்சர்களும் இமாம்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாகஹஸ்ரத் முல்லா அலிய்யுள் காரீ (ரக) அவர்கள் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள்:

(கத்தமுன் நபிய்யீன் என்பதன்) பொருள் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்னாரின் மார்க்கத்தை (ஷரியத்தை) ரத்து செய்கின்றஅன்னாரின் உம்மத்தைச் சேராத எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்."(மௌலு ஆத்தே கபீர் பக்கம்: 59 )
இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று இவ்வாறு அமைந்துள்ளது:

"நீங்கள் (ஹஸ்ரத் நபி (ஸல்)) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று கூறுங்கள்: அனால் அவர்களுக்குப் பிறகு எந்த நபியுமில்லை என்றக் கூறாதீர்கள்". (தக்மில மஜ்மயி பிஹாரில் அன்வார் தொகுதி 4, பக்கம்: 85 )

ஹஸ்ரத் இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷிஹ்ரானீ (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்:
"எல்லா நுபுவத்தும் முடிந்துவிட்டது என்பதன்றுஷரீஅத்துடைய நுபுவத் மட்டுமே முடிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (அல் யவாகியது வால் ஜவாகிர் தொகுதி 2, பக்கம் 24)
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தால் கடைசியானவர் என்ற பொருளைக் கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பெருமையுமில்லை என்ற இஸ்லாமிய கருத்தை தேவ்பந்த் மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் சாஹிப் நானுத்வி அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர் கூறுகிறார்.

'ரெஸுலுல்லாஹ் அவர்கள் காத்தமுன்னபிய்யீன். ஆக இருக்கிறார்கள் என்பதுபொது மக்களின் பார்வையில்அன்னாரின் காலம்சென்ற கால நபிமார்களின் காலத்திற்கு பிற்பட்டதுநபி (ஸல்) அவர்கள் அனைவரையும் விட கடைசி நபியாவார்கள் என்ற பொருள்ளாகும். ஆனால் காலத்தால் முற்பட்டவராக இருப்பதிலோபிற்பட்டவராக இருப்பதிலோ தனிப்பட்ட முறையில் எந்த சிறப்பும் இல்லை என்பது அறிவுள்ளவர்களுக்கு மிகத் தெளிவான விஷயமாகும். பிறகு, 'ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கு காத்தமாகவும் இருக்கிறார்எனக் கூறுவது புகழ்ந்துரையாகும் என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்இந்தப் பண்பை புகழ்ந்துரையாகக் கூறப்பட்ட பண்பு அல்ல என்று கூறுவீர்கள் என்றால்இந்த அந்தஸ்தை புகழ்ந்துரையின் அந்தஸ்து அல்ல எனக் கூறுவீர்கள் என்றால் அப்போது வேண்டுமானால் அந்த காத்தமிய்யத் காலத்தால் பிற்பற்றது(இறுதியானது) என்று கூறுவது சரியானதாக இருக்க முடியும். ஆனால் இஸ்லாத்தைச் சேர்ந்த எவரும் இ(இப்படிப் பொருள் கொடுப்ப) தை விரும்ப மாட்டார் என்பதை நான் அறிவேன்".(தஹ்தீருன்னாஸ் பக்கம் 3)

மேலும் அவர் கூறுவதைப் பாருங்கள்:

"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்குப் பிறகும் ஒரு நபி தோன்றினாள் அப்போது முகம்மதியா காத்தமிய்யத்திற்கு (முத்திரைக்கு) எந்த வித்தியாசமும் வந்து விடாது" (தஹ்தீருன்னாஸ் பக்கம்:28)

எனவேநபிமார்களில் முத்திரையானவர் என்றால் காலத்தால் இறுதியானவர் என்பதல்ல என்ற உண்மையை மார்க்க அறிவுள்ளவர்களால் வியாலன்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. ஏனெனில் தேவ்பந்தி மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் நானுத்வி காதியானி அல்லவே! எனினும் அவரால் இந்த மேலான பொருளை விளங்க முடிந்திருக்கிறது. ஆனால் விளங்காதவர்கள்விளன்காதவர்கலாகவே இருக்கிறார்கள் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இதே கருத்தைதான் நபி மொழிகளும் எடுத்துரைகின்றன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணமடைந்த பொது ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

"அவர் உயிரோடிருந்தால் கண்டிப்பாக அவர் உண்மை நபியாக இருந்திருப்பார்." (இப்னு மஜா - கிதாபுல் ஜனாயிஸ்)

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


 "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் கபர் மீது கை வைத்தவாறு,அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக இவர் நபியும் நபியின் மகனும் ஆவார் எனக் கூறினார்கள்".
(தாரீகுல் கபீர் லி இப்னி அஸாகிர் பக்கம்: பதாவா அல் ஹதீஸிய்யா பக்கம்:176 )

காத்தமுன்னபிய்யீன் என்ற (33:41) வசனம் ஹிஜ்ரி ஆம் ஆண்டில் இறங்கியது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இந்த இறங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் மரணமடைகின்றார். காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பார்வையில் இறுதி நபி என்பது பொருள் என்றால் அன்னார் என்ன கூறியிருக்க வேண்டும்இப்ராஹீம் உயிருடன் இருந்தாலும் அவர் நபியாக மாட்டார். ஏனெனில் நான் காத்தமுன்னபிய்யீன் ஆக இருக்கிறேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும்.அவ்வாறு கூறியிருந்தால் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கும் இவர்கள் கூறுவதுபோல்நபிமார்களில் இறுதியானவர் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ,அவர் உயிருடன் இருந்தால்உண்மை நபியாக இருப்பார் என்றல்லவா கூறியிருக்கிறார்கள்!

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பின்படிஇவர் ஒரு நபியும்நபியின் மகனுமாவார் என்ற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்று இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை நாம் மட்டுமல்லநமக்கு முன்னரே மார்க்க அறிஞ்சர்களும் கூறியிருக்கிறார்கள். ஹஸ்ரத் இமாம் முல்லா அலியுல் காரீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

"இப்ராஹீம் உயிரோடு இருந்துநபியானாலும் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவராகவே இருந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில் அவர் நபியாவது காத்தமுன்னபிய்யீன் என்பதன் கருத்தில் எந்த முரண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஏனெனில் காத்தமுன்னபிய்யீன் என்பதன் பொருள்ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யக் கூடியவரும்அவர்களுடையா உம்மத்தை செராதவருமாகிய எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்".(மௌளு ஆத்தே கபீர் பக்கம்: 66,67)

அடுத்து இறுதிகடைசி என்று கூட ஒரு நபிமொழியில் வந்துள்ளதே என்று சிலர் கேட்கலாம். அங்கேயும் காலத்தால் இறுதியானவர் என்ற பொருள் கொடுக்கவே முடியாது: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பொருள் கொடுக்கவில்லை என்பதற்கு அந்த நபிமொழியின் பிற்பகுதியே சான்றாகத் திகழ்கின்றது. உதாரணமாக,

நான் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறேன். எனது இந்தப் பள்ளிவாயில் பள்ளி வாயில்களில் இறுதியானதாக இருக்கிறது என ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்பாபு பஸ்லுல் ஸலாத்தி பீ மஸ்ஜிதில் மதீனா)

இதில்ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதே நபவியை பள்ளிகளில் இறுதியானது என்று கூறியிருந்த போதிலும் அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கான பள்ளிவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே,பள்ளிகளில் இறுதியானது என்றால்இனி உலகத்தில் எந்தப் பள்ளிவாசலும் கட்டப்படக்கூடாது என்று பொருள் அல்லமாறாக இனி எனது பள்ளிவாயிலுக்கு எதிராகவிரோதமாக எந்தப் பள்ளிவாயிலும் காட்டப்படமாட்டாது. எந்த பள்ளிவாயில் கட்டினாலும் அது எனது இந்தப் பள்ளிவாயிலைப் பின்பற்றியவாறு கட்டப்படும் என்றே பொருள்படும். அவ்வாறே நபிமார்களில் இறுதியானவன் என்றால்காலத்தால் இறுதி நபியானவன். இனி எந்த நபியும் வரமாட்டார் என்று பொருள் அல்ல. மாறாக எனக்கு எதிராகவிரோதமாக எந்த நபியும் இல்லைஎன்னைப் பின்பற்றிய நபியே வரமுடியும் என்றுதான் பொருளாகும்.

இறுதி என்றாலும் எந்தக் கருத்தில் தமக்குப் பொருந்துகிறது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே நமக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். அதாவது காலத்தால் இறுதியானவர் என்பதல்லஅந்தஸ்தால் இறுதியானவர்இனி அன்னாரைப் பின்பற்றாமல் எவரும் நபியாகவோசித்திக்காகவோ,ஷஹீதாகவோஏன் சாலிஹாகவோ கூட ஆக முடியாது. இந்த உயரிய கருத்தைத்தான் நாம் திருக்குர்ஆன் 4:70 வது வசனத்தில் விளங்கிக் கொள்கிறோம்.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

"நமது நபி (ஸல்) அவர்களை உண்மையாகவும்முழுமையாகவும் பின்பற்றாமல் சிறப்புமென்மையின் எந்தவொரு பதவியையும்கண்ணியம்,நெருக்கத்தின் எந்தவொரு அந்தஸ்தையும் நாம் ஒருபோதும் பெற்றுவிடமுடியாது. நமக்குக் கிடைப்பதெல்லாம் நிழலாகவும்அன்னாரின் மூலமாகவும் கிடைக்கின்றது". (இஸாலே அவ்ஹாம் பக்கம்: 138)

"ஒவ்வொரு மென்மையும் எனக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைப் பின்பற்றியதன் மூலமாகக் கிடைத்திருக்கிறது." (ஹகீகத்துல் வஹி பக்கம் 150)

"நபிமொழிகளில் எத்தகைய வரவேண்டிய வாக்களிக்கப்பட்ட மசீஹைப் பற்றி தெரிய வருகிறதோ அவரின் அடையாளமாகஅவர் நபியாகவும் இருப்பார்: உம்மத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மரியமின் மகன் உம்மத்தைச் சேர்ந்தவராக முடியுமா என்னஅவர் நேரடியாக அல்ல: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியதனால்,நுபுவ்வத் பதவியைப் பெற்றிருந்தார் என்று யார் நிரூபிப்பார்?" (ஹகீகத்துல் வஹி பக்கம்: 29)

எனவேஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் மூலமாக ஒருவருக்கு நபிப் பதவி கிடைத்தல் என்பதுதான் அன்னாருக்கு கண்ணியமாகும் என்பதை வாக்களிக்கப்பட்ட மசீஹாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குள்ளம் அஹ்மது(அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கி விட்டார்கள். திருக்குர்ஆன்ஹதீஸ் ஒளியில்இறையச்சத்துடன் ஆய்வு செய்தவர்கள் இதனை விளங்கியும்விட்டார்கள்.

அடுத்துஇறுதி நபிக் கொள்கை இன்று அல்லபழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோதுஅவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள்." (40:35)

யூசுப் நபியின் காலத்திலும்அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.

"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு,எப்பொழுதுஎவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு,வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை;படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறதுஅது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும்அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36)

இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்ற்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

''நல்ல விஷயத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள் (5:2) என்று அல்லாஹ் கூறுகின்றான். உதவலாம் என்பதில் பெறலாம் என்பதும் அடக்கம். ஸவூதியிலிருந்தோ வேறு எங்கிருந்தோ நல்ல காரியங்களுக்கு பணம் வந்தால் அதைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம். அல்ஜன்னத் ஜூன் 95

ஸவூதி மற்றும் எந்த பகுதியிலிருந்தும் பணம் பெறுவது சரியானதுதான் என்றும், எங்களுக்கு பணம் வரவில்லை என்பதால்தான் வரவில்லை என்கிறோமே தவிர வந்தால் பெற்றுக்கொள்வோம் என்று பீஜே அவர்கள் அன்று சொன்னதற்கு மாற்றமாக, இன்று 'பாலிஸி' பேசி முரண்படுகிறார். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லையே இரண்டாகப் பிரித்து, வஹீ அடிப்படையில் அவர்கள் சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்றும், நபியவர்கள் நேரம்போகாமல் பேசிய[?]வைகளை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற கொள்கையுடைய அறிஞர் பீஜே, வஹீ அடிப்படையில் வெளிநாட்டு நிதி கூடும் என்று சொன்ன தீர்ப்புக்கு மாற்றமாக, பாலிசி எனும் தனது கருத்தை சட்டமாக்கி அதை தன்னை தலைவராக கொண்ட ஜமாஅத்தின் சட்டமாக்கி, தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களை பின்பற்றச் செய்கிறார் என்ற நமது கருத்துக்கு சம்மந்தப்பட்ட அறிஞர் பீஜே பதில் சொல்லவில்லை.

ஆனால் அவரது இயக்கத்தினர் பதில் என்ற பெயரில் பாய்ந்து வந்து நேரடியாக 'பஸ்'ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். இது ஒருபுறமிருக்க மேற்கண்ட அல்ஜன்னத் பதிலில், எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்ற தனது கூற்றிற்கு மீண்டும் முரண்பட்டு தான் அப்பட்டமாக பொய் சொல்லும் ஒரு பொய்யர் தான் என்று பீஜே நிரூபிப்பதை கீழே படியுங்கள்.

''இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக்கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைபிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் நான் இருந்தபோது, அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் நான் இருந்தேன். நான் என்னளவில் அத்தகைய உதவியை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபிகள் கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்த காலகட்டத்தில் எதாவது [வெளிநாடுகளில்] உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.எழுதியும் இருக்கிறேன். மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன.கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார். நாளடைவில் பணமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை (வெளிநாட்டு நிதி) வெறுக்கலானேன். லிங்க்;

மேற்கண்ட பீஜேயின் இந்த வாக்குமூலம் மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கு அவர் எழுதிய மறுப்பில் இருந்து எடுத்ததாகும். இந்த வாக்குமூலத்தில், ஜாக்கில் இவர் இருந்தபோது ஜாக் வெளிநாட்டு நிதியை பெற்றுள்ளது. அதை இவரும் சரிகண்டு அந்த அமைப்பில் இருந்துள்ளார். அந்த ஜாக் வாங்கும் வெளிநாட்டு சல்லிக்காக, இவரும் ஒத்து ஊதும் வகையில் இவருக்குப் பிடிக்காத சலபிக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். கஷ்டப்படும் பலருக்கு வெளிநாட்டு நிதியை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார்.

பல கடிதங்களும் வரைந்துள்ளார். இப்படி தான் வாங்காவிட்டாலும் தனது இயக்கம் வாங்கியதை சரிகண்ட இவர், அதற்காக இவரது கொள்கைக்கு முரண்பட்ட சலபியையும் சரி கண்டு அவர்களின் மேடையில் முழங்கிய இவர், மற்றவர்களுக்காக வெளிநாட்டு நிதி பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்த இவர், இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு, மற்றவர்களை அரபு நாட்டு சலிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது கேளிக்கூத்தல்லவா? ஜாக் பெற்ற சல்லிக்காக இவர் சலபிக்கூட்டத்தில் மாரடித்தார் என்று சொல்லலாமா? இதைஎல்லாம் விட ஜாக் வெளிநாட்டு நிதி பெற்று வந்த நிலையில், இவர் ஜாக்கில் இருந்த நிலையில், அல்ஜன்னத் பத்திரிக்கையில் பீஜே ஆசிரியராகவும், கமாலுத்தீன் மதனி வெளியீட்டாளர் ஆகவும் இருந்த காலகட்டத்தில் கேட்கப்பட்ட வெளிநாட்டு நிதி பற்றிய மேற்கண்ட கேள்விக்கு, எங்களுக்கு அப்படி பணம் ஏதும் வராததால் வரவில்லை என்கிறோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார்.

எங்களுக்கு வரவில்லை என்பதன் அர்த்தம், எனக்கு அதாவது பீஜே எனும் எனக்கு வரவில்லை என்று அர்த்தம் என்று வார்த்தை ஜாலம் காட்டமுடியாது. அப்படி பீஜே தனிப்பட்ட தனக்கு வரவில்லை என்றால், 'நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு நிதி வாங்கவில்லை. ஆனால் நான் சார்ந்துள்ள ஜாக் அமைப்புக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். வெளிநாட்டு நிதியை தனது அமைப்பு வாங்கிய நிலையில் அதை மறைத்து எங்களுக்கு அப்படி பணம் எதுவும் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் சொல்லியுள்ள இவரைத் தெரிந்து கொள்ளுங்கள். 

இஸ்லாத்தை தூய வடிவில் சொல்ல துவங்கப்பட்ட அல்ஜன்னத்தில் அதன் ஆசிரியரான இவரே ஒரு பொய்யராக இருந்துள்ளார். இவர் நினைத்தால் எதை மறைக்கவும் எத்தனை பொய்யும் சொல்லத் தயங்காதவர் என்று அறிந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

-முகவை அப்பாஸ்.

http://www.intjonline.in/2612.do



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard