ஜாகிர் நாயக்கின் காணொளியிலும் அவர் அப்ப்குதியில் மட்டுமே ஏற்பட்டது என்று கூறுவதை பாருங்கள்.நல்லவேளை குரானில் கால அளவு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுவது அருமையான நகைச்சுவை. ஒரு இடத்தில் நட்ந்தால் எதற்கு கப்பல்? அதில் ஒவொரு பிராணியும் எதற்கு ஏற்ற வேண்டும்?.உண்மை என்னவெனில் குரான் வழக்கம் போல் இந்த விஷய்த்தையும் பொத்தாம் பொதுவாக கூறிவிட்டது.
அகழ்வாராய்ச்சி முடிவுகள் மாறு படுவதால் எப்படியாவது தப்பிக்க வேண்டுமல்லவா?.அதற்கு இப்படி கூறித் தபிக்க முயற்சி.அப்போது பழைய குரான் விளக்கங்களில் இப்படி கூறப்பட்டிருக்கிறதா?.
இத்னை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இப்படி பல விளக்கங்கள் எப்படியாவது அறிவியலுக்கு முரண்படாமல் அளிக்க வேண்டும் என்பதே ஜாகிர் நாயக்கின் கொள்கை.
இப்படி அவர்கள் கூறுவது அப்ப்குதியில்(எங்கே?) மட்டும் நடந்தது என்றால் இத்னை அகழ்வாராய்சி ஏதாவது நிரூபிக்குமா? அப்படி ஏதாவது ஆய்வு நடை பெற்று உள்ளதா? என்று கேட்க கூடாது.
11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
********************
இப்போது
பூமி=நோவாவின் நாடு மட்டும்
வானம்=நோவாவின் நாட்டின் மேல் உள்ள மேகங்கள்
மிக சிறந்த குரான் விளக்கங்களை எழுதிய இபின் கதிர் (C.E 1301–1373) என்ன கூறுகிறார்.
http://www.islamawareness.net/Prophets/nuh.html
இபின் கதிர் உலக முழுவதும் வெள்ளப் பெருக்கு என்றே கூறுகிறார்.இது குறித்த இன்னொரு கட்டுரை.
http://answering-islam.org/Shamoun/flood.htm
*************************************************************
சரி கிறித்தவர்களின் மத புத்தக்த்தின் தெளிவான கூற்றான உலகளாவிய வெள்ளம் என்பதை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.. படைப்புக் கொள்கையாளர்கள் பரிணாம்த்திற்கு ஆதாரமாக காட்டப் படும் படிமங்கள்(fossils) நோவாவின் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டது என்று சமாளிப்பது உண்டு. இவை அனைத்தும் இக்காணொளியில் ஆய்வு செய்கின்றனர்.