http://iraiyillaislam.blogspot.in/2012/03/blog-post.html
எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், இஸ்லாத்தில் சனநாயகம்இல்லை தோழர் என்று. அதற்கு மேல் வேறு எந்த விளக்கமும் கூறியதில்லை..அவர் எதையோ மனதில் வைத்து வெளிச்சொல்ல இயலாமல்புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் உணரமுடிந்தது.. அவரதுபிரச்சினை என்னவாக இருக்கும் என்பதனை பல நேரங்களில் சிந்தித்துபார்த்ததுண்டு. பொதுவாக எல்லா மதங்களிலுமே சனநாயகம் கிடையாதுதான்.ஆனாலும், இந்து மதத்தின் சாதீய கொடுமைகளை அனுபவபூர்வமாகஉணர்ந்திருந்த எனக்கு அத்தகைய நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதாகவேஎண்ணியதுண்டு.
கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கட்டி துராப்ஷா என்பவர்இஸ்லாத்தில் இருந்து விலக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி அவர் என்னுடன்விவாதித்த உரையடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருநாள், இதைப் படியுங்கள் தோழர் என அவர் கையில் வைத்திருந்தசெய்தித்தாளின் கட்டிங் பேப்பர் ஒன்றைக் கொடுத்தார், அதில், கடையநல்லூர்மக்கட்டி துராப்ஷா ’காபிர்’ என அறிவிக்கப்பட்டு இஸ்லாத்தில் இருந்துவெளியேற்றப்பட்டதான செய்தி இடம்பெற்றிருந்தது. அதை முழுவதுமாகபடித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடையமையித்தை அடக்கம் செய்யக்கூடாது
அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது
இவர் இஸ்லாத்தில் இருந்து விலகி விட்டதால் இவருடைய மனைவி திருமணபந்தம் முரிந்துவிட்டது.
மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கியமைக்காகத்தான் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் என்று புரிகிறது.. ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுபிரயோகிக்கும் அதே அளவிலான வன்முறைகள். கூடுதலாகஅத்தம்பதிகளுக்கிடையேயான திருமண உறவை முறிக்கும் தண்டனை. இந்தமுல்லாகளுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுப்பது யார்? நான் நண்பரை ஏறிட்டுநோக்கினேன்.. அவரது கண்களில் ஒருவித அச்சம் பரவியிருந்தது. அவர்என்னை விலக்கி, விட்டத்தை வெறித்தவாரே தொடர்ந்தார்.
இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை என்பது எவ்வளவு உண்மையாயிற்று.இந்த துராப்ஷாவின் நிலையைப் பாருங்கள், ஒன்று அவர் முல்லாக்களிடம்சரணாகதி அடையவேண்டும், இல்லையேல் தனது குடும்ப உறவைமுறித்துக்கொள்ள வேண்டும் முக்கியமாக தனது மனைவியை பிரியவேண்டும்.இப்போது அவர் இந்த இரண்டில் ஒன்றை விரைவில் தேர்ந்தெடுக்கவேண்டும்என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். இந்த மணமுறிவு கணவன் மனைவியிடையேஏற்பட்ட பிணக்கினால் அல்ல, அல்லாவின் பெயரால் இந்த முட்டாள்முல்லாக்கள் தான் முன்னின்று பிரித்துவைக்கின்றனர். இவர்கள் முறித்துவைப்பது விடலைப் பருவ காதலை அல்ல, பல வருட கால வாழ்வின்களிப்பினாலும் அன்பினாலும் உருவான காதலை முறிக்கிறார்கள். ஒருகணவன் மனைவிக்குமிடையே உள்ள உறவு என்பது உணர்ச்சிப் பண்பாடில்லாதஅந்த அல்லாவின் பெயர் கொண்டுதான் பிணைக்கப்பட்டிருக்கிறதா என்ன! இந்தமுட்டாள் முல்லாக்களுக்கு காதல் என்பது காமம் என்பதாக மட்டுமேசொல்லப்பட்டிருக்கிறது போலும். போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள்எல்லாம் முஸ்லீம்கள் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்! அவ்வடிமைகளுடன்போர் நடந்த அந்த இடங்களிலேயே அப்பெண்கள் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டனரே!. அது யாரால் என்பது இந்த முல்லாக்களுக்கு தெரியாதாஎன்ன! அப்பொழுது எங்கே போனது இந்த மத உணர்வும், பத்வாக்களும்.இதுதானே 1400 வருடகால வரலாறு. இவர்களது வரலாறே இவர்களைபின்னங்கால் பிடரியில் பட ஓடவைக்கிறது. ஆனால், இதை நாம்அம்பலத்துக்கு கொண்டுவரும்போது மட்டும் நம்மீதே பாய்ந்து பிராண்டுகிறார்கள்இந்த முட்டாள் முல்லாக்கள்.
Contd