New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை பதிவு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை பதிவு
Permalink  
 



ஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை பதிவு

 
இஸ்லாமிய மத விளம்பர பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மருத்துவ கல்வி பயின்றவர். இருந்தாலும் மத விளம்பரம் செய்வதே முழு நேரப் பணியாக கொண்டவர். இந்த காணொளியில் டார்வின் எப்படி பரிணாம் கொள்கையை வடிவமைத்தார் என பாடம் எடுக்கிறார்.இதை பார்த்தவுடன் நல்லவேளை இவர் மருத்துவத் தொழில் பார்க்கவில்லை .பார்த்து மட்டும் இருந்தால் "ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்" என்னும் பழமொழியை உண்மையாக்கி இருப்பார் என தோன்றியது.
அருமையான நகைச்சுவை கண்டு களியுங்கள்.நகைத்து மகிழுங்கள்!!!!!!!!!
டிஸ்கி அது ஆயிரம் வேர் கொன்ற என்று விள்க்கம் அளிக்க சில நண்பர்கள் முன் வரலாம் எனினும் ஜாகிர் நாயக்கிற்கு இது பொருந்தாது!!!!!!!!!!! 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: ஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை பதிவு
Permalink  
 


naren said...

cro-magnon @ homosapiens சார்வாகன் அவர்களே, என்னால் முடிந்த மொழிப்பெயர்ப்பு.

1) சாகிர் நாயக் : சார்ல்ஸ் டார்வின் keletropist(கேலப்டரபிஸ்ட்) என்ற தீவின் மேல் சென்றார்.
பதில் : டார்வின் சென்றது Galapagos(கேலாபேகஸ்) தீவு.

2) சா. நா : அங்கே டார்வின் பறவைகள் niches(நிட்சஸ்)யை கொத்துவதை பார்த்தார்.
பதில் : (niches என்பது எளிதாக- பறவைகள் வசிக்குமிடத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமிப்பு செய்த பகுதி) பறவைகள் niches யை கொத்தவில்லை. அவைகள் தனிதனி niches சுற்றுசூழலில் வாழ்வதிஅ டார்வின் பார்த்தார்.

3) சா. நா: அந்த மாதிரி niches யை கொத்துவதால்??? பறவையலகு நீளமாகவும் குட்டையாகவும் இருக்கும் – என்றார் டார்வின்.
பதில் : பறவையலகை பற்றி மட்டும் சொல்லவில்லை. நிறம், சாப்பாடு, பாட்டு, அளவு போன்றவற்றைகளை பற்றியும் சொல்லியுள்ளார்.

4) சா.நா : இந்த மாதிரி கவனிப்பு ஒரே இனத்தில் செய்யப்பட்டன.
பதில்: ஒரே இனத்தில் செய்யவில்லை 14 வெவ்வேறு இனப்பறவைகளை ஆராய்ந்து கவனித்தார்.

5) சா.நா. டார்வின் Charles thromtan என்ற அவரின் நண்பருக்கு கடிதம் எழுதினார்.
பதில் : அந்த மாதிரி அவருக்கு நண்பர் கிடையாது. அந்தப் பெயருடைய நபரிடம் கடிதப் போக்குவரத்தும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.

6) சா. நா. அதில் அவர் இணைப்புகள் காணவில்லை, அதனால் பரிணாமம் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை.
பதில் : டார்வின் இணைப்புகள் காணவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். அதை எங்கே கண்டுப்பிடிக்க முடியும் என்பதையும் சொல்கிறார். அவர் ஒருப் போது பரிணாம கொள்கை ஒப்புக்கொள்ளவில்லை என்று சொன்னது கிடையாது.

….தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இஸ்லாமிய பேராசிரியர் சல்மான் ஹமீத் பரிணாம கொள்கைக்கு ஆதரவு

 
 
 
நண்பர்களே
நாம் பரிணாம கொள்கை  குறித்த தேடல் புரிபவர்கள் என்பதும் அதனை முறையாக கற்றும் வருகிறோம்.பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள்(யூதம்,கிறித்தவம் ,இஸ்லாம்) சார்ந்த பிரச்சாரகர்கள் பரிணாமத்தை எதிர்த்து வருகிறார்கள் என்பதை அறிவோம்.பரிணாம கொள்கை இஸ்லாமிய உலகில் மிக அதிகமாக் எதிர்ப்பை சந்திக்கும் அறிவியல் கொள்கை என்றால் மிகையாகாது.இஸ்லாமிய நாடுகளில் பரிணாமம் கற்பிக்கப்படுகிறதா என்ற விவரம் அறிய ஆவல் உண்டு என்றாலும் அவ்விவரங்கள் சரியாக கிடைப்பது இல்லை.
நமக்கு பிடித்த பதிவுலக சகோதரர்  ஒருவரின் பதிவில் இஸ்லாமிய நாடுகள்   அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிக பொருட்செலவில் சில திட்டங்களை முன்னெடுக்கின்றன என்ற செய்தியை அறிய முடிந்தது.
அவர் குறிப்பிட்ட கட்டுரை படித்த போது திரு சல்மான் ஹமீத் என்னும் பேராசிரியர் பற்றியும் இஸ்லாமிய உலகில் அறிவியல் கல்வி பரப்ப அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் தெரிந்தது.இவரை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்துவது நம் கடமை என்று எண்ணியதுதான் இப்பதிவு.

இவர் நம் சகோதர நாடு பாகிஸ்தானை சேர்ந்தவர்.இப்போது இங்கிலாந்தின் ஹாம்ப்சயர் கல்லூரியில் பேராசியராக பணியாற்றுகிறார்.
இது அவருடைய தளம்.அறிவியலும் மதமும் முரண் என்பது தவறு என்கிறார்.பரிணாம் கொள்கைக்கு கூட ஆதரவு அளித்து மத புத்தகத்தில் அறிவியல் தேடுவது அவ்சியம் இல்லை அதில் ஆன்மீகம் மட்டுமே தேடவேண்டும் என்று கூறும் இவரை பாராட்டாமல் இருக்க இயலவில்லை.

அறிவியல் வளரும் போது இவர் போன்றவர்கள் உருவாவது காலத்தின் கட்டாயம்.இவர் போன்றவர்களை முன் உதாரண்மாக கொண்டால் உண்மையாகவே இஸ்லாமிய நாடுகள் அறிவியலில் முன்னேறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
கேளுங்கள் பேராசிரியர் சல்மான் ஹமீத்தின் காணொளி உரையை!!!!!!!!!!!! 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

naren says:

நண்பர் சுவனப்பிரியன்….

ரஹ்மானும், இஸ்மாயில் தர்பாரும் show businessல் இருக்கின்றார்கள். அவர்கள் அப்படிதான் பேசுவார்கள். பொறாமைபடுவார்கள். அது அவர்களின் வியாபார தந்திரம். சினிமாவே தேவையில்லை என்று இறையச்சம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டார்கள், அவர்களின் கூத்தை படிக்கவும் விமர்சிக்கவும் மாட்டார்கள். சினிமா உங்களை ஈர்க்கின்றது என தெரிகிறது. நாங்கள் செய்வதை நீங்கள் செய்யலாமா? சினிமா போதை ஒரு பக்கம் கிடக்கட்டும்.

எனது கேள்வி ரஹ்மான் இஸ்லாமியரா? இல்லையா? முழு இஸ்லாமியரா இல்லை பாதி இஸ்லாமியரா?

அவர் பாட்டில் முழ்கி அடிமையாக இருக்கிறார் என்பது எப்படி நமக்கு தெரியும். வெளிச் செய்திகளை பார்த்தால் இஸ்லாமிய கடமைகளை செய்து கொண்டுதானிருக்கிறார். பாட்டையும் உருவாக்குகிறார்.

இமாம் ஷேக் அப்துல்லா ஜமாளி, எப்படி அழகாக தர்காகள் இஸ்லாமிய சுன்னத் என்று விளக்குகிறார். அப்படி ஒரு பெரிய மார்க்க அறிஞர் சொல்லும் போது தர்க்கா எப்படி தப்பாகும்.

என்னையே எடுத்துக் கொள்ளங்குள் பல தர்க்காகளுக்கு சென்றுள்ளேன். கியாமத நாளில் தர்கா சென்ற காஃபீர்களுக்கு எண்ணை கொப்பரை தவிர special treatment ஏதாவதை அல்லா வைத்திருக்கிறாரா?

ரஹ்மான் பல நல்ல காரியங்களை செய்கிறார் இஸ்லாமிய கடமைகளை செய்கிறார் என தெரிகிறது. அப்படி இருக்கும் போது அவர் அந்த துறையில் இருக்ககூடாது என்ற நேரிடியான வசனம் அதீஸ் இல்லாத போது, அது போதும் விட்டு வா என்றால் எப்படி சரி. பாட்டு என்றும் கிடையாது எந்த துறையில் obsession அதிகதன்மை இருந்தால் ஒரு தனிமனிதனுக்கு தவறுதான். இருமல் மருந்தில் மது அதிகமானாலும் தவறுதான்.

ரோடோரம் வியாபாரம் செய்யும் ஒரு இஸ்லாமிய அன்பர் உங்களை பார்த்து சவுதியில் சம்பாதித்தது போதும், இந்தியா வந்து நல்ல காரியங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அண்மையில் டாக்டர் ஜாகிர் நாயிக்கின்  விஜயத்தின் நிமித்தம் 

{ 23-05-2010 }
அழைப்புமுன்வைக்கப்பட்டது

எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. 

மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை. 
எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம். 
சமூகத்திலுள்ள மக்களின் இந்த வரைவிலக்கணம் எமது இமாம்கள் (அஇம்மதுல் முஸ்லிமீன்) காட்டித் தந்த வரைவிலக்கணமல்ல.  இவர் கூட்டத்தை உருவாக்கினார். பெயரை வளர்த்துக் கொண்டார். எனவே உம்மத்துக்கு வழிகாட்டும் ஆலிமாக மாறி விட்டார். 
இதனால் எந்த உலமாக்கள் இவரை ஒரு ஆலிமென்று சமூகத்துக்கு அடையாளம் காட்டினார்களென்பதோ இவர் எந்த உலமாக்களிடம் அமர்ந்து கல்வியைப் பெற்றுக் கொண்டாரென்பதோ மக்களுக்கு தேவையற்றதொரு விடயமாக மாறி விட்டது. அதன் அவசியத்தை எவரும் பொருட்படுத்தவில்லை.

அஸ்ஸுன்னாவின் கல்வி தவிர்த்து மாற்றுமதத்தவர்களின் நூல்களான பைபிள் இந்து மத நூற்கள்,ஏனைய இணைவைப்பாளர்களின் நூற்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், தத்துவங்கள், தர்க்கங்கள் ஆகிய கல்விகளைத் தான் கற்று சுமந்திருக்கிறார். இவர் கல்வியை வழிகெட்ட அஹ்மத் தீதாத் என்பவரிடமே  கற்றுள்ளார். 

இவர் இந்த அடிப்படையிலேயேதான்  விஞ்ஞானக் ஆராய்ச்சிகள், தத்துவங்கள் தர்க்கங்கள பைபிள், இந்து மதநூற்கள் ஏனைய இணைவைப்பாளர்களின் நூற்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொள்வதுடன் அதனை மனனமிட்டும் தஃவா பணி என்ற பெயராலும்  இஸ்லாமிய மார்க்கம் என்ற பெயராலும் இஸ்லாத்தை எம் சமூகத்தின் மத்தியில் எத்தி வைத்து முஸ்லிம் சமூகத்தை வழிகேடான பாதைக்கு இட்டுச் செல்பவர்.

 

இவர் அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் நம்புவது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் ஒப்பு நோக்கியே ஆகும்.  இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலனவர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்.  
ஆக அல்குர்ஆனை நம்புவதற்கும், விளங்குவதற்கும் யூத, கிறிஸ்தவர்களின் ஆராரங்களையே அடிப்படையாகக் கொள்கின்றார்.  ஏந்தளவுக்கென்றால் அல்குர்ஆனும்; விஞ்ஞான விளக்கமும் முரண்படுகின்ற பொழுது விஞ்ஞான விளக்கத்தையே அல்குர்ஆனின் விளக்கம் என ................

 

  • ஷாகிர்  நாயிக்கின் பேராபத்து  1  2
அல் குர் ஆனையும் சுன்னாவையும் , தர்கானுகூலமான விவாதம் , தர்க்க சாஸ்திரம் , விஞ்சான உண்மைகள் ஆகியவற்றுடன் அனுசரித்து சொல்கிறோம் என்று கூறுகிறார். 
இந்துக்கள் மற்றும் ஏனைய அல்லாஹ்வை மறுப்பவர்கள் தமது வியாபார நிலையங்களில் எவ்வாறு தமது கடவுள்களின் உருவங்களை தொங்க விட்டிருப்பார்களோ , அது மாதிரி , மதங்களை குறிப்பிட்டு , இவரது இணைய தளத்தில் மாற்றுமத கடவுள்களின் உருவங்களை தொங்கவிட்டுள்ளார்.
இவர் அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் இஸ்லாத்தையும் நம்புவது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் ஒப்பு நோக்கியே ஆகும். ஆக அல்குர்ஆனை நம்புவதற்கும், விளங்குவதற்கும் யூத, கிறிஸ்தவர்களின் ஆராரங்களையே அடிப்படையாகக் கொள்கின்றார். ஏந்தளவுக்கென்றால் , அல்லாஹ் சுபஹானஹுதாலா மறைவானதை நம்புவது ஈமான் என்று சொல்ல , இவரோ தனது மறுமை பற்றிய கொள்கை தர்கானுகூலமானது என்கிறார். இதோ கீழே அவரது கேள்வி பதில் நிகழ்ச்சியை வாசியுங்கள். 

 

கேள்வி : மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள் ?.
பதில்:   மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமான பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். 
அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. 
இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. 
அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. 
எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. 
எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.
http://tamilsalafi.edicypages.com/httptamilsalafisects/zakir-naik


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard