இஸ்லாத்தை கடந்த சுவடுகள் பகுதி 1 -
72 கூட்டத்தினர் யார்?
புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .
அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.
ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)
என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.
குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.
புஹாரி ஹதீஸ் : 7082
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.
இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.
உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.
இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர். ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.
போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?
இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?
அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.
போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.
புஹாரி ஹதீஸ் :7070
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
புஹாரி ஹதீஸ் : 7072
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?
பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.
நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?
மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.
மற்றவர்கள் போரில் வெற்றி பெற்றால் எதிரிகளை கைது செய்து பொருட்களை கைப்பற்றினார்கள்,என்று எழுதுவார்கள்.முஸ்லிம்கள் வெற்றிபெற்றால் கொள்ளையடித்தார்கள் ,கற்பழித்தார்கள் என்று பொருள் கொள்வதுதான் எழுத்தாளர்களின் தர்மம்.சரி சில போர்களில் முஸ்லிம்கள் தோற்று பெண்களை கற்பழித்து உள்ளார்களே ,பொருட்களை கொள்ளையடித்து உள்ளார்களே அதைப்பற்றி மவுனம் சாதிப்பது ஏன்? நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்களின் சம காலத்தில் நடந்த போர்களில் நடந்ததை கவனித்தால் நபி[அவர்கள் மீது சமாதனாம் உண்டாகட்டும்]அவர்கள் போர் தர்மம் வகுத்தே செயல் பட்டார்கள்.
இப்போது நவநாகரீக காலத்திலும் அமேரிக்கா இராக்கை கொள்ளையடித்து எண்ணெய் திருடவில்லையா? அங்குள்ள அப்பாவி மக்களை கொல்லவில்லையா?பெண்களை கற்பலிக்கவில்லையா? பேரழிவு ஆயுதங்கள் என்று உலகை பகிரங்கமாக் ஏமாற்றி ,தனது பொருளாதார பேரழிவை சரிகட்ட எண்ணெய் மார்கெட்டை தனது அதிகாரத்திற்குள் கொண்டுவரவில்லையா? லிபியாவை திருடவில்லையா? ஐநா போன்ற அமைப்பு இல்லாத காலத்தில் நடந்ததை விமர்சிக்கும் கயமை படைத்தவர்கள் ,ஐநா என்ற அமைப்பை செல்லாக்காசாக்கி தனது பொல்லாத குணத்தை நிலை நாட்டவில்லையா?
இ.சா.
//நெருப்பின் பிறப்பே//
அட, கேள்விப்பட்டிராத புதுமையான சாபமாக இருக்கே.
////
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்
////
இ.சா.முபஹிலாவில் ஈடுப்படும்போது பயனுள்ளதாக இருக்கும்.
ஸலாம் இப்ராஹிம்
இப்பதிவில் திரு முகமது பற்றி விவாதிக்கிறோம்.அமெரிக்கா ஒரு திருடன் என்பது பாதி உண்மை மட்டுமே சவுதி அரச குடும்பம் உள்ளிட்ட அவனுடைய ஏஜெண்டுகள் மத்தியக் கிழக்கை பினாமியாக் ஆள்கிறார்கள் என்பதும் மீதி உண்மைதான்.
1.சவுதி பதிவர்கள் இஸ்லாமிய எதிரி அமெரிக்காவே சவுதியை விட்டு வெளியேறு என்று தமிழ்,ஆங்கிலம்,எப்படியாவது மொழிபெயர்த்து அரபி பதிவிட்டு ,அதனை ஆராம்கோ முன்பு அங்கு ஒரு போராடம் நடத்தி பிறகு என்ன நடக்கிறதுஎன்று பார்க்க வேண்டுகிறோம். ஒரே நல்லது நடக்கும்.அது என்ன? ஹி ஹி ஹி
*********
2.சரி இதை செய்ய துணிச்சல் உள்ளவர்கள் மட்டும் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும்.சரி நாம் முகமதுக்கு வருவோம்.பாதிர் போரில் முகமது கொள்ளையடிக்கச்சென்று வெற்றி பெறுகிரார்.கொள்லை அடிக்கத்தான் சென்றார் .கொள்ளையும் அடிக்கவில்லை என சான்றுகள் த்ர முடியுமா?குரான் 8.41 முகமதுக்கு கொள்ளையில் 1/5 அளிக்கிறது.இதுவும் அச்சமயத்தில்தான் இறங்கிய வசனமா?
************
3.சிறிது காலம் கழித்து குரேஷியர்கள் திருப்பி தாக்க
உஹுதுப்போரில் முகமது தோல்வியுறுகிறார்.முகமதுவின் தலைக்கவசம் உடைந்து காயம் அடைந்ததாக் புஹாரி கூறுகிறது.இபோது குரேஷியர்கள் [மதினாவை] கொள்ளை அடித்தார்கள் என சான்றுகள் தர முடியுமா?
**********
எதுக்கு காஃபிர்கள் ஹதித் சான்றுகள் அளித்தால் உடனே இது நல்ல,கெட்டது என்று 1008 கதை கூறுகிறீர்கள்.பொருத்தி விட்டோம் ஏதோ ஒரு அருளால் தகர்த்துக் காட்டுங்கள்!!!!!!!!!!!!!!.
காபிர் சார்வாகன்
பல போர்களில் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் ஒரு முறையேனும் யூதர்களோ அல்லது மற்ற அராபியர்களோ முஸ்லீம் பெண்களை கற்பழித்ததாகவோ அல்லது முஸ்லீம்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாகவோ படித்த ஞாபகமில்லை.
மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் அப்படி நிறைய இருக்கிறது என்கிறார்.
ஆதாரம் கொடுத்து உதவ வேண்டும்
ஹஸரத் முகமது அவர்கள் கூறினார்கள்: ஒற்றைப் படையில் அதாவது 1,3,5,7,9… என்ற கணக்கில் பேரீச்சை பழங்களை சாப்பிட்டால் விஷமுறிவு ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)
முகம்மதுவே சிறந்த doctor.
மார்க்கமல்ல மதம் பிடித்த சகோ. சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் இந்த ஹதீஸ்களை practicalலாக நிரூபித்தால் நலமாயிக்கும்.
அல்லா உங்களுக்கு நற்கூலி தருவானாக.
வண்க்கம் நரேன்
என்ன நீங்க இப்ராஹிம் சொல்வதை புரிந்து கொள்ளவே மாட்டென் என்கிறீர்கள்.
இந்த இரு வசனங்களை பாருங்கள்.
**************
15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
*****************
இபோது நெருப்பின் பிறப்பு என்றால் கொள்கைக்குன்று அண்ணன் இனமானப் போராளி இப்லீஸ் என்று புரிந்து இருக்கும்.அப்புறம் [உங்கள் போன்ற] காஃபிர்களுக்கும் நெருப்பு தயாராக உள்ளது.அஞ்சுங்கள்!!!!!!!!!!
***************
3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
@ஸலாம் மார்க்க மேதை இ.சா
இப்லீஸ் ஆதம்(அலை) அவர்களுக்கு [ஸஜ்தா ]பணிய மறுத்து அல்லாவிற்கு இணை வைக்க மறுத்து ஏகத்துவத்தை நிலைநாட்டிய முதல் வஹாபி கொள்கை கோமான் குணசீலன் இப்லீஸ் என்றே இவ்வசனத்தின்[7.12] பொருள்.
அல்லாஹ் எதுக்கு இணை வைக்க சொன்னார்?[சஜ்தா என்பது இணை வைப்பது அல்ல என சகோ இப்ராஹிம் போட்டுத் தாக்குவார் என்பதும் தெரியும்]
விள்க்குங்கள்!!!!!!!!!!!!!!!!
நண்பர் சுவனப்பிரியன்,
அருமையான அறிவியல் பதிவு.
அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.
சூரியன் கழுதை அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும், சூரியன் breast stroke, butterfly stroke, crawl, backstroke, side stroke, dog paddle, free style, போன்ற வகையில் நீந்துதுவதை அந்த “சிலை வணங்கி” அனானிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. அது பெலமான அதீஸா, பெலஹீனமான அதீஸா என்று அதீஸ் கலையுடன் விளக்கி சொல்லியிருந்தால் அந்த அனானிக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.
மக்கா குறைஷிகள் ,மதீனாவை சேர்ந்த அப்துல்லா இப்னு உபை க்கு கடிதம் எழுதினார்கள்
.நீங்கள் ,எங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம் .நிச்சயமாக நீங்கள் அவரிடம்[முகம்மதுநபி [ஸல்] போர் செய்ய வேண்டும்.அல்லது அவரை வெளியாக்கிட வேண்டும்..இல்லைஎன்றால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்கள் போர்வீரர்களை கொன்று குவித்து உங்கள் பெண்களின் கற்புகளை சூரையாடுவோம் .இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தனர் [ சூனன் அபூதாவுத்]
////உஹுதுப்போரில் முகமது தோல்வியுறுகிறார்.முகமதுவின் தலைக்கவசம் உடைந்து காயம் அடைந்ததாக் புஹாரி கூறுகிறது.////
உஹத் போரில் முஸ்லிம்கள் தோல்வியுறவில்லை..எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் வியுகம் வகுத்தவாறு போரை வீரர்கள் நடத்துவதால் பின்னடைவு ஏற்பட்டது.
வரம்பு மீறிய நாடுகள் பொருளாதார தடை ஐநா ஏற்படுத்துகிறது ஏன்? இராக் இரான் நாடுகள் மீது பொருளாதார தடையை சரி காணவில்லை என்பது வேறு விஷயம்.
ஆக அவர்கள் செய்யவில்லை,.. சும்மா மிரட்டினார்கள்.
காககககே செய்து காட்டினார்.
முஸ்லீம் பெண்களை கற்பழித்ததாகவோ அல்லது முஸ்லீம்களதுபொருட்களை கொள்ளையடித்ததாகவோ எத்வுமே இல்லையா?
மூமின் இ.சா.
காஃபிர் சார்வாகன் சொல்வதைப் பார்த்தால், இப்லீஸ்தான் முதல் தவ்வீதுவாதியா?, ஓரிறை கொள்கையை முதலில் ஓங்கி மேலேப் பிடித்தர் அவரா?. அப்போ நமது தமிழ் நாடு தவ்வீது அண்ணன்கள் எல்லாம் இப்லீஸின் அடியாளர்களா தொண்டர்களா?
ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு இது தெரியுமா?
இறைவன் ஒருவனே என்று ஓரிறைப் பக்கம் செல்ல எத்தனித்தால் இது என்ன ஒரு புது RDX குண்டு.
ஐயோ, கண்ணு கட்டுதே, தலை சுத்துதே, உலகம் தட்டையாகுதே……
தொப்.( யாராவது சோடா வாங்கி தந்தால் நல்லது)