ஆஹா இதனைத்தான் அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்காரா என்று புல்லரித்ததில் என் மனைவி என்னை கூட்டிபோய் புல்லரித்த இடங்களிலெல்லாம் சாம்பலை தேய்த்து சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. அப்படியும் சரியாகாமல் கார்ட்டிசோன் அரிப்பு மருந்தை தேய்த்துவிட்டு படுக்கும் படி ஆகிவிட்டது.
சரி நாம் இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதுவது எப்படி என்று சிந்தித்து பார்த்தேன். இதுவரை எழுதப்பட்டு உள்ள இஸ்லாமிய அறிவியல் கட்டுரைகளை எல்லாம் படித்து அதன் இலக்கணத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
(இஸ்லாமிய அறிவியல் என்றதும் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். இஸ்லாமிய அறிவியல் என்றால் எல்லா அறிவியலும் அதில் சேர்த்தி. ஆனால் உயிரியலும் வானவியலும் மட்டும் சேர்த்தி இல்லை. உயிரியல் பற்றி வரும் எல்லா அறிவியலும் காபிர் அறிவியல், அல்லது யூத, இந்து கிறிஸ்துவர்கள் சாத்தானுடன் சேர்ந்து செய்யும் சதிவேலை. அதே போலத்தான் வானியலும், நட்சத்திரங்களின் வயது, அதன் தோற்றம் எல்லாம். கவனமாக இருக்கவும். டார்க் மேட்டர் எல்லாம் உபயோகப்படுத்தலாம். ஆனால், அல்குரானுக்கு மாறாக இருக்கக்கூடாது. அப்படி எழுதிவிட்டோமென்றால் அந்த பதிவுக்கு மட்டுறுத்தல் போட்டு நமக்கு உண்மை மூமீன்களின் சாதகமான கருத்துக்களை மட்டுமே பதிய வேண்டும். இது மிக முக்கியம். ஜாக்கிரதை! )
இதில் பல முன்னோடிகள் ஹாரூன் யாஹ்யா, இன்னும் இணையத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மூலம் தாவா செய்யும் பலர் இருக்கிறார்கள். அவற்றை காப்பியடித்து ஏராளமான தமிழ் மூமீன்கள் தமிழில் மொழிபெயர்த்து அறிவியலுக்கே இஸ்லாமிய தண்ணி காட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுகொண்டதை உங்களுக்கும் அளிக்கிறேன்,. நீங்களும் இஸ்லாமிய அறிவியல் தாவா செய்ய வசதியாக அவற்றை வரிசைப்படுத்துகிறேன்
நான் கடைசியில் குறிப்பிட்ட புல்லரிப்பை இப்போது செய்யப்போவதில்லை. ஏற்கெனவே அரித்து உடம்பு புண்ணாகிவிட்டது. ஆகவே மெதுவாஹ ரெண்டு நாள் கழித்து புல்லரித்துகொள்கிறேன்.
சரி இப்போது இஸ்லாமிய அறிவியல் கட்டுரை.
இது ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle எவ்வாறு அல்லாஹ் நபி(சல்) மீது இறக்கிய அல்குரானில் உள்ளது என்பது பற்றி.
In quantum mechanics, the Heisenberg uncertainty principle states precise inequalities that constrain certain pairs of physical properties, such as measuring the present position while determining future momentum of a particle. Both cannot be simultaneously done to arbitrarily high precision. In other words, the more precisely one property is measured, the less precisely the other can be controlled, determined, or known.
குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.
ஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது.
அதாவது ஒரு துகளின் இடத்தையும் உந்தத்தையும் கணக்கிட விழைந்தால், ஒன்று இடத்தை கணக்கிடலாம், அல்லது உந்தத்தை கணக்கிடலாம். உந்தத்தை எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறோமோ அந்த அளவுக்கு இடத்தை கணக்கிடும் துல்லியத்திலிருந்து விலகுவோம், அதாவது இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் துல்லியமாக அளக்க முடியும்
இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் வெளிப்படுத்துகிறான்.
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை(வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
இரண்டு வியாபார கூட்டங்கள் வருகின்றன. இரண்டுமே அபு ஜஹலின் தலைமையில் வருகின்றன. இரண்டு கூட்டங்களில் ஒன்றைத்தான் நபி(சல்) அவர்களால் கொள்ளையடிக்க முடியும். இரண்டையும் கொள்ளையடிக்க முடியாது என்று அல்லாஹ் நபிபெருமானார்(ஸல்) அவர்களிடம் தெளிவு படுத்துகிறான். அபு ஜஹல் ஒரு துகள். அந்த துகளுக்கு இரண்டு வியாபார கூட்டங்கள். ஒன்று இடம், மற்றொன்று உந்தம். இரண்டையும் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணமுடியாது. இரண்டில் ஒன்றைத்தான் அட்டாக் பண்ண முடியும்.
ஆஹா என்ன அழகாக ஹைசன்பர்க் uncertainty ப்ரின்ஸிபிளை விளக்கிவிட்டான்.
இபப்டிப்பட்ட அல்குரானை படித்துத்தான் ஹைசன்பர்க் போன்றோர் இயற்கை விதிகளை புரிந்துகொண்டுவிட்டார்கள். இதனை ஹைசன்பர்கே ஒரு டயரியில் எழுதி வைத்திருந்தார். அதனை ஒரு கிறிஸ்துவ காபிர் ஒருவர் அந்த டயரியை எரித்து அல்லாஹ்வுக்கு வரவேண்டிய புகழை தடுத்துவிட்டார்.
மூமீன்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இயற்கை விதிகளை காபிர்கள் சுட்டுவிட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக இருந்தாலும், இப்போது அல்லாஹ் என் மூலமாக அதனை தெளிவு படுத்திவிட்டான்..
அல்லாஹ் காஃபிர்களை வேரறுக்க தன் திருவாக்குகளால் நாடுகிறான் என்பதிலும் அறிவியல் இருக்கிறது. காஃபிர்களுக்கு வேர் எங்கே இருக்கிறது. அறிவியலில்தான் இருக்கிறது. அந்த அறிவியலை தனது திருவாக்குகளால் வேரறுக்கிறான் என்று அல்லாஹ் திருமறையில் அறிவிக்கிறான்.
காபிர்களின் அறிவியலை வேரறுக்க மூமீன்கள் கடுமையாக உழைத்துவருகிறார்கள். அதற்கு அல்லாஹ் தன் உதவியை தருகிறான்.
இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.
உசாத்துணை இணைப்புகள்
(இது ரொம்ப முக்கியம். கவனிக்கவும். இப்போதுதான் நமக்கே ஒரு பெரிய இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதிய திருப்தி வரும்.)
1) http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/uncer.html
2) http://hendrix2.uoregon.edu/~imamura/123cs/lecture-6/planck.html
3) http://farside.ph.utexas.edu/teaching/qmech/lectures/node26.html
naren says:
மார்க்க மேத(ஆவி) இ.சா அவர்களே,ஏன் same side goal போடுகிறீர்கள்.நீங்களே ஒரு கமெண்டில்//நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது//கடவுள்(கள்) சூரியனையே தாண்டவில்லை என்று நீங்க கூறிவிட்டு, இப்பொழுது, படம் போட்டு milky way பாதியில் கடவுளின் அரியாசன்ம் (அர்ஸ்) உள்ளது என்ற பிதற்றல் வருகிறது, நீங்கள் மாற்றி மாற்றி கூறுவது சரியா. காஃபீர்களுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டா, தாவா பணி செய்யுங்கள். தக்க்கியா செய்யாதீர்கள் இ.சா அவர்களே, உங்களை நீங்களே கண்ணியப்படுத்துங்கள்……குழம்பி போய்யுள்ள காஃபீர்.
இஸ்லாமின் ஐண்ஸ்டீனே.ஆங்கில படத்தை பார்த்து தமிழ் படங்ளாக எப்படி உல்டா செய்து எடுக்கிறார்கள் என்பது அறிவியல் மூமின்களுக்கு தெரியும் போல.http://www.speed-light.info/speed_of_light_12000.htmநேர்த்தியாக உல்டா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
சரியான ஆங்கிலப் படம்http://www.speed-light.info/miracles_of_quran/time_relative.htmஇதை பார்த்து எடுத்த, நோபல் பரிசு வாங்கப் போகும் தமிழ் படம்.http://carbonfriend.blogspot.com/2011/09/blog-post.html