New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்
Permalink  
 



எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

  • MONDAY, AUGUST 15, 2011
 
  • IBNU SHAKIR
 
 
தமிழ்நாட்டு முஸ்லீம்கள் என்றில்லாமல் மத்திய கிழக்கு இந்தியா என்று பல நாடுகளிலும் முஸ்லீம்களின் உணவுவகை என்றால் புலாவ், அல்லது பிரியாணி என்று கண்ணை மூடிக்கொண்டு காபிர்கள் சொல்லுவார்கள்.

அந்த அளவுக்கு புகழ்பெற்றது பிரியாணி.
chickenbir.jpg

ஆனால் அந்த பிரியாணிதான் முஸ்லீம்களை சுவனத்துக்கு செல்லவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அஜ்மல் கசாப், முகம்மது மதானி போன்ற தீவிர இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசாங்கம், அதுவும் கர்னாடகாவின் பாஜக அரசாங்கமே பிரியாணி கொடுக்கிறது என்று சில இந்துத்துவா பாஸிஸ்டுகள் புலம்பியிருந்தார்கள்.
அப்போதுதான் எனக்கே இந்த கேள்வி உதித்தது. சுவனத்துக்கு போகும் முஸ்லீம்களான முகம்மது மதானி, அஜ்மல் கசாப் போன்றவர்களுக்கு இந்துத்துவாகாரர்கள் பிரியாணி கொடுக்கிறார்கள் என்றால் பிரியாணியில் ஏதோ இருக்கிறது என்று முடிவுக்கு வந்தேன்.

பிறகு பிரியாணியை ஆராய்ந்தேன். அப்போதுதான் எனக்கு படார் என்று அல்லாஹ் முகம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வஹி வரும்போது வேர்க்குமே அது போல ”குப்”பென்று வேர்த்துவிட்டது.

ஆமாம். பிரியாணியில் கசகசா இருக்கிறது.

கசகசா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கசகசா (Papaver somniferum) என்பது பற்றி இங்கே விக்கிபீடியாவில் இருக்கிறது 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE


அந்த பக்கத்தில் கசகசா என்றால் என்ன என்று தமிழில் ஒன்றுமே எழுதியிருக்கமாட்டார்கள். இதுவும் இந்துக்களின் சதியாக இருக்கும். இடது புறம் கீழே English என்று இருக்கும் இணைப்புக்கு போங்கள். அதே விஷயத்தின் ஆங்கில பக்கம் தெரியும்,

http://en.wikipedia.org/wiki/Opium_poppy


ஓப்பியம் என்றால் என்ன தெரியும் அல்லவா?

பாப்பி, ஓப்பியம் என்று சொல்லக்கூடிய செடியின் விதைதான் கசகசா.
இந்த விதைகளை அரைத்து பிரியாணியிலும் போடுகிறார்கள். அப்படியே சாப்பிட்டு போதையும் ஏற்றிகொள்கிறார்கள். நம் ஈமானுள்ள முஸ்லீம்களும் தாலிபானும் இணைந்து இந்த ஒப்பியத்தைத்தான் ஆஃப்கானிஸ்தானத்தில் பயிர் செய்து ஓப்பியம் விளைவித்து காபிர் நாடுகளுக்கு அனுப்பி போதை ஜிகாத் செய்துவருகிறார்கள்.

இதனைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று சில அரைகுறை முஸ்லீம்கள் கேட்கலாம்.

இறைதூதர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அரைகுறை அறிவு இருந்தால் கூட போதும்.

அல்லது இறைதூதரை பற்றி புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அனைத்தையும் விளக்க அல்லாஹ்வின் கருணையால் அனுப்பப்பட்டுள்ள பி. ஜெயினுலாபுதீன் மவுத் வாஷுக்கு கொடுத்த விளக்கம் போதுமானதாகும்

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/alcahol_kalantha_mavuthvash/


”அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நூல் திர்மிதீ 1788, நஸயீ 5513

இந்த இணைப்பில் ஹராமான பொருளை சாப்பிட்டால் சுவனம் கிடைக்காது என்று ஹதீஸ் ஆதாரத்துடன் பதிவை படியுங்கள் 

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

ஆல்கஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தக்கூடாது. ஆல்கஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்கஹால் சிறிதளவேனும் தங்கி இருக்கும் என்று ஆல்கஹாலை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆல்கஹாலை விட பல மடங்கு போதை தரக்கூடிய ஓப்பியத்தை கசகசா என்ற உருவத்தில் நாம் பிரியாணியிலும் குருமாவிலும் போட்டு கரைத்து உண்டு வருகிறோம்

ஹராமான பொருளை தினந்தோறும் உண்பவர்களுக்கு சுவனம் உண்டா? அல்லாஹ் ஹராம் என்று அறிவித்த பின்னரும், நபி (ஸல்) போதை தரும் பொருள் மிகச்சிறிய அளவில் கூட உண்ணக்கூடாது என்று அறிவித்த பின்னரும் அதனை உண்பது எப்படிப்பட்ட பாவம் என்பதை சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு முகம்மது மதானி, அஜ்மல் கஸாப் ஆகியோர் நரகத்துக்கு போகவேண்டும் என்பதற்காக இந்திய பாஸிஸ்டு அரசு நம் பொய் குற்றவாளிகளுக்கு பிரியாணி போடுகிறது. ( உண்மை குற்றவாளிகளை தப்ப விட்டுவிடுகிறது. உண்மை குற்றவாளிகளுக்கு பிரியாணியும் போடுவதில்லை! ) இந்த தந்திரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, நம் நிக்காவில் ஆரம்பமே பிரியாணி போட்டு ஹராமான உணவுடனேயே நமது திருமணத்தை ஆரம்பிக்கிறோம்.

ஆல்கஹாலில் குளிக்கலாம். ஆனால் பல்லிடுக்கில் கூட மாட்டக்கூடாது என்று நமது பி ஜெயினுலாபுதீன் அறிவிக்கிறார். அது போல, கசகசாவை முகத்தில் தேய்த்து குளிக்கலாம். ஆனால் பிரியாணியிலோ குருமாவிலோ போடக்கூடாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கசகசா பல மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்வோம்.

இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை நாம் சமையலில் பயன்படுத்துவது எவ்வளவு ஹராமானது என்பதை நாம் உணர்வதில்லை.
அது மட்டுமல்ல, வலி நிவாரணத்துக்காக ஓப்பியத்திலிருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகள் மருந்துக்காக இந்த கசகசாவை பயிரிட்டு மருந்துகள் தயாரிக்கின்றன. இவை கோடைன், மார்பின் ஆகிய வகைகள். இவை அனைத்துமே ஹராம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வலி நிவாரணத்துக்காக அளிக்கப்படும் அனைத்து மருந்துகளுமே ஒருவகை போதைப் பொருட்கள்தான் என்பதையும் நாம் உணர வேண்டும். ஆகையால், வலி நிவாரணத்துக்காக எந்த பொருளையும் உண்ணக்கூடாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
நஞ்சும் குறைவான அளவில் மருந்தாகும்
என்பதெல்லாம் காபிர் இந்துக்களின் கொள்கைகள். அவற்றை நாம் பின்பற்றக்கூடாது.

அடுத்து காபிர் உணவு வகைகளில் இருக்கும் அல்கஹாலை கண்டுகொள்வோம்

நம் முஸ்லீம்கள் இட்லி தோசை என்று வெளுத்து கட்டுகிறார்கள்.
DSC04517_thumb%255B10%255D.jpg

பாகிஸ்தான் உருவாக உழைத்த ஒரு தீவிரவாத முஸ்லீமை எனக்கு தெரியும். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது “ஏன் நீங்கள் பாகிஸ்தான் போகவில்லை?” என்று கேட்டேன்.

”அங்கண இட்லி தோச கிடைக்காதாம்ல?” என்று பதில் சொன்னார்.

ஈமானை விட்டுவிட்டு இட்லிக்காக ஏங்கும் ஒரு மூஃமினை மூஃமின் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இட்லி தோசை உருவாகும் விதத்தை நாம் அறிந்துகொண்டால் குழப்பத்துக்கு இடமில்லை.

http://www.hindu.com/seta/2009/01/08/stories/2009010850201500.htm

இட்லி மாவை புளிக்க வைப்பது என்றால் fermentation with wild yeast என்றுதான் பொருள். இதே போலத்தான் பீர் என்ற அல்கஹால் பானத்தையும் காபிர்கள் உருவாக்குகிறார்கள்.
idli_hxuy.jpg

இட்லி தோசை மாவுடன் காற்றில் இருக்கும் ஈஸ்ட் கலந்து அதில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சர்க்கரை எடுத்து அதை கார்பன் டை ஆக்ஸைடாகவும் மறுபாதிஆல்கஹாலாகவும் ஆக்குகிறது.

இந்த ஆல்கஹால் பானத்தைத்தான் தோசைக்கல்லில் போட்டு சாப்பிடுகிறோம். இதில் இருக்கும் ஆல்கஹால் நமக்கு ஹராம் என்று தெரிந்தும் நமக்கு பழக்கிவிட்டு நம்மை ஈமான் பாதையிலிருந்து விலக வைத்த இந்து பாசிஸ்டுகளை என்னவென்று சொல்வது?
idlis-dosa.jpg

ஆகவே இட்லி தோசை பக்கம் நெருங்கவே கூடாது. அது ஹராம் என்பதை நாம் உணர்வோம்.
--
மேலும் அல்கஹாலை ஆராயும்போது நமது குடலை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்

நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாம் ஒரு அறிவியற்பூர்வமான மதம். இல்லையில்லை மார்க்கம். ஆகவே முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி இறைவன் நம்மிடம் இறைஞ்சுவதை நினைவில் கொள்ளுங்கள்.

அல்கஹாலை ஆராயும்போதுதான், நமது குடலே ஒரு ஆல்கஹால் தொழிற்சாலை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்

நமது உணவு வயிற்றுக்கு சென்று பிறகு குடலுக்கு செல்கிறது. குடலில் ஏராளமான ஈஸ்ட், பாக்டீரியா போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இது எத்தனை பேருக்கு தெரியும்? அது இருக்கட்டும் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்றால், நாம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று பி ஜெயினுலாபுதீன் போன்ற மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துவார்கள். இப்போதைக்கு அந்த அறிவுரையை தள்ளி வைத்துவிட்டு காபிர் அறிவியலை ஆராய்வோம்.

நமது குடலில் உள்ள பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற மைக்ரோ உயிரினங்கள் நமது உணவை உடைக்க நொதிக்க வைக்கும் வேதிவினையை உபயோகப்படுத்துகின்றன. அப்படியே விழுங்கிய சப்பாத்தி எப்படி மைய அரைத்து வெளியே வருகிறது என்று சிந்திக்க வேண்டும் அல்லவா?

http://en.wikipedia.org/wiki/Gut_flora#Carbohydrate_fermentation_and_absorption

அங்கே இந்த ஸ்டார்ச்சை மீண்டும் இந்த காபிர் பாக்டீரியாக்களும், காபிர் ஈஸ்ட்களும் சேர்ந்து நொதிக்க வைத்து ஆல்கஹாலை உண்டு பண்ணுகின்றன. இதனால், அப்படியே விழுங்கிய சப்பாத்தி கரைந்து அணுக்களாக பிரிந்து அதிலுள்ள சர்க்கரை மற்றும் சத்துக்கள் குடலால் உறிஞ்சப்படுகின்றன. அது மட்டுமா? அங்கு உருவான ஆல்கஹாலும் குடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால்தான் நன்றாக சாப்பிட்டால் தண்ணி அடித்தாற்போல போதையே உருவாகிறது.

இந்த காபிர் பாக்டீரியாக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையும் தெரியவில்லை. முகம்மது நபி(ஸல்) அவர்களின் அறிவுரையும் தெரியவில்லை. ஹராமானதை ரகசியமாக நம்முடைய உடலுக்குள்ளேயே உருவாக்கி நமக்கு ஆல்கஹாலை தருகின்றன என்றுதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு ஷைத்தான் இந்த பாக்டீரியாக்களுக்கு உதவி வருகிறானோ என்று சந்தேகமாக இருக்கிறது.

இப்போது ஷைத்தானில் பாதையில் செல்லும் காபிர்கள் தயிர் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் என்பதை அறிவோம். தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை வயிற்றில் சேர்ந்தால் வேறேதும் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதை குறைத்து சரி செய்கின்றன என்று சொல்லிக்கொண்டு புரோபயாடிக் தயிர் என்றெல்லாம் காபிர் தேசங்களில் விற்கிறார்கள். இவ்வாறு ஷைத்தான் மனித குலத்தினரை வழிகேடுக்கு அழைத்துச் செல்கிறான். ஷைத்தானின் சதித்திட்டங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள அல்லாஹ்வை துஆ செய்குவோம். 

இதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் வயிற்றுக்குள்ளேயே இந்த காபிர் பாக்டீரியாக்கள் அல்கஹாலை உருவாக்கி நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமான அல்கஹாலை கொடுத்துவிட்டன என்பதுதான். ஷைத்தான்அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் வாயில்தான் விளையாடினான் என்று நினைத்தோம். இப்போது வயிற்றுக்குள்ளேயே விளையாடியிருக்கிறான் என்று அறிந்து அதிர்ச்சியல்லவா அடைகிறோம். இவ்வாறு ஹராமான ஆல்கஹாலை எடுத்துகொண்டதால் அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் எத்தனை சதைகள் நரகத்தில் வாடுகின்றன என்று நமக்கு தெரியவில்லையே!!!

  
ஆனால் அதற்கு முன்னதாக இந்த பாக்டீரியாக்களிடம் சொல்லுவோம்.

86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16 நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:17 எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

மூஃமீன்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவர்கள் வயிற்றில் அல்லாஹ் படைத்த காலம் முதலாக ஹராமான அல்கஹாலை ஊற்றுபோல உருவாக்கியிருக்கிற காபிர் பாக்டீரியாக்களை இப்போது அறிந்துகொண்டோம். அல்லாவிடமிருந்தே மறைந்து வயிற்றுக்குள் இந்த சதிவேலை பண்ணிகொண்டிருக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் ஜிகாத் தொடுத்தே ஆகவேண்டியுள்ளது

ஆகவே இந்த காபிர் பாக்டீரியாக்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசமளிப்போம். அவர்களது சூழ்ச்சியிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளட்டும். பிறகு ஆண்டிபயாடிக் தான் ஒரே அட்டாக்.

நிறைய ஆண்டிபயாடிக் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். கூடவே நாமும் காலி. ஆனால் தற்கொலை செய்துகொள்வது முக்கியமா? அல்லது காபிர்களை கொல்லுவது முக்கியமா?

தற்கொலை படையாக சென்று ஒரு இருபது காபிர்களை அழிப்பதன் மூலம் சுவனத்து கன்னியரை பெறுவதற்காக ஏராளமான இளைஞர்கள் இளைஞிகள் அல்லாவின் பாதையில் அறப்போர் புரிகிறார்கள்.

ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் கோடிக்கணக்கான காபிர் பாக்டீரியாக்களை அழித்தால் எவ்வளவு உயர்ந்த சுவனத்தை நாம் பெறுவோம் என்று சிந்திக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் சிந்தித்துவிட்டு வருகிறேன். அதற்குள் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்திக்க மாட்டீர்களா என்று இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவன் அடிக்கடி நம்மிடம் இறைஞ்சுவதை உண்மையிலேயே ஏடுத்துகொண்டு கன்னாபின்னாவென்று சிந்திப்பவர் பி ஜெயினுலாபுதீன் அவர்களே!!!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கும் குரானின் வார்த்தைகளுக்கும் நேர் எதிரான பொருளை கொடுத்து தப்புவதில் அவர்தான் எனக்கு தெரிந்து பெரிய கில்லாடி. தற்போதைக்கு ஜெயினுலாபுதீனை கலந்து ஆலோசிக்கவும். மனுஷன் தப்புவதற்கு எதாச்சும் வழி வச்சிருப்பார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்
Permalink  
 


சார்வாகன் said...
August 15, 2011 4:38 PM

அஸ்ஸ்லாமும் அலைக்கும் ஜனாப் இபின் ஷாகிர்,
உங்கள் தாவா என் மீது வேலை செய்கிறதோ என்று சந்தேகமாக் இருக்கிறது.உங்களோடு சேர்ந்து சில ஜின்களும் தாவா செய்கின்றதோ என்றும் அஞ்சுகிறேன்.உங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடாவிட்டால் என்னவோ போல் இருக்கிறது.
நானும் உலக்முழுவதும் எத்தனையோ தாவாக்களை பார்த்திருக்கிறேன்,நீங்கள் செய்யும் தாவா மக்த்தானது.
________
அஜ்மல் கசாப்பை ஏன் உடனே தூக்கில் போடாமல் நிரந்தர நரகத்திற்கு அனுப்ப இந்துத்வவாதிகளும்,யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் பிரியாணி வழங்கும் சதியையும் கண்டு விட்டீரே!!!!!!!!!!.

இந்த ஆலோசனை இஸ்ரேலில் இருந்து வந்தது என்று எனக்கு தெரிந்த இரகசியத்தையும் கூறுகிறேன்,உங்களிடமோ உங்கள் ஜின்களிடமோ எதையும் மறைக்க முடியாது என்பதால் என் ஒப்புதல் வாக்கு மூலம்.


இட்லி தோசை நாங்கள் கண்டுபிடித்த‌து உண்மையான் முமின்கள் பாகிஸ்தான் சென்று ஜிஹாத் செய்து சுவனம் செல்லும் வழி கெடுக்கவே என்பதையும் உங்கள் இதயத்தை திற்ந்து விளக்கிய அர் ரகுமானை வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாருங்கள் எங்கள் ஆட்கள் முமின் வேடம் பூண்டு உங்களில் ஊடுருவி பல வழி கெடுக்கும் விஷயங்களை கூறுவதும்,அதை நீங்கள் கண்டு அளிக்கும் சுட்டிகளில் உள்ள பதிவுகளை எங்கள் ஆட்கள் வேக்மாக நீக்குவதில் இருந்தே உங்கள் தாவாவின் உண்மை வியக்க் வைக்கிறது.

என்றாலும் நாங்கல் செல்ல முடியாத சுவனத்திற்கு சென்று விடலாம் என்று மன்ப்பால் குடிக்க வேண்டாம் என்று அன்போடு எச்சரிக்கும் அதேவேளையில்.
_______
கன்னியத்திற்குறிய ஆலிம் அவர்களே,

மது பூமியில் ஹராம் என்றாலும் சுவனத்தில் அனுமதிக்கப்ப்ட்டது போல் சுவனத்தில் பிரியாணி,இட்லி தோசை கிடைக்குமா என்பதை விள‌க்குமாறு ஒரு விண்ணப்பம்.நரகத்திலும் கிடைத்தால் எங்களுக்கும் வசதியாக் இருக்கும்.
இப்படிக்கு

காஃபிர் சார்வாகன்(நாத்திக, பவுத்த, யூத, கிறித்துவ, இந்துத்வ, தர்ஹாவாதி)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சார்வாகன் said...
August 16, 2011 11:22 AM

கண்ணியத்திற்குறிய ஜனப் ஆலிம் இபின் ஷாகிர் அவர்களே,
அதென்னமோ தெரியவில்லை நீங்கள் முமின்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கு இறைவன் காஃபிர்கள் மூலமாக்வே விடையளிக்கிறான்.சிந்திக்கமாட்டீர்களா என்று இறைவன் கேட்கும் போது சிந்திக்காமல் பிரச்சாரகர்கள் பின் சென்று அவர்க்ளிடமே விடை தேடுகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்வியான முமின்கள் வயிற்றில் ஆல்ஹகாலை உருவாக்கி சுவனம் செல்ல தடயாக்கும் பாக்டீரியாக்கள்லை என்ன செய்வது ?என்ற உங்கள் கேள்விக்கு திரு பி.ஜே பதில் அளிக்காமல் போகலாம்.ஆனால் காஃபிரான நாங்கள் அப்ப்டி இருக்க முடியுமா?

இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.ஆல்கஹால் உருவாக்கும் காஃபிர் பாக்டீரியாக்கள் போல் முமின் பாக்டீரியாக்களையும் உங்கள் அர் ரகுமான் படைத்து இருக்கிறார்.

இவை ஜிஹாத் செய்து பிற பாக்டீரியாக்களை தற்கொலை போராளிகளாக்கி அழிக்கிற‌து என்பதை கேட்டதுமே உங்களது மார்க்கமே மனித குலத்தின் இறுதி மார்க்கம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன். 
_________
3474. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். 
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்" என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறினார்கள். 
Volume :4 Book :60
_____________

பாருங்கள் காஃபிர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுருக்கிறார்கள்.இறைவனின் படைப்புகளின் இரகசியத்தை காஃபிர்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்க அதனை உடனே முமின்கள் குரானில் கன்டுபிடிக்க செய்யும் ஏக இறைவனின் திருவிளையாடலை நினைத்து மெய் மறக்கிறேன்.இந்த முமின் பாக்டீரியா பற்றிய எனது ,ரிச்சர்ட் டாகின்ஸ்,கண்டுபிடித்தவர் ஆகியோரின் தாவா கணக்கில் வைக்கவும்.
______________
Scientists engineer suicide bomber bacteria to kill other bacteria
http://richarddawkins.net/articles/642640-scientists-engineer-suicide-bomber-bacteria-to-kill-other-bacteria
_______________
உங்கள் நபி(ஸ) ஒருவர் முமின் ஆகும் போது மட்டும் அவர் முன் செய்த தாவா,புண்ணியங்கள் பல்னளிக்கும் என்று கூறியிருக்கிரார் அல்லவா
__________
அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டும் அழிந்துவிடும். (அல்-குர்ஆன்-6:88)
********
5992. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார் 
நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்' என்று பதிலளித்தார்கள்.20 
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 
Volume :6 Book :78
__________.
ஒருவேளை எங்கள் காஃபிர்களில் பெரியார்தாசன் போல் முமின் ஆனால் இந்த தாவாக்கள் அவர்களுக்கு பலனளிக்க துவா செய்யுங்கள் ஆலிம்
நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இப்னு லஹப் said...
October 16, 2011 6:39 AM

ஷாகிர் ஜி ,
என்ன இப்படி துரோகம் செய்து விட்டீர்கள், நீங்கள் சொல்வதை கேட்டு எவனாவது கல்யாணத்துல பிரியாணி போடம்மா உட்டுட போறான், அப்பறோம் எங்க போய் நல்ல பிரியாணி சாபுடுறது.
அது சரி இட்லி, தோசைக்கும் ஆப்பு வக்கிறீங்களே இது சரியா பாஸ்?
கொடல்ல ஈஸ்ட் இருந்தா அதுக்கு வெட்டியா போடா முடியும்?
பின்ன எப்படி ஹதீஸின் வழிகாட்டுதலின் படி, ஆட்டு நல்லி எலும்ப கறியோட கடிக்க முடியும் பாஸ். 


Volume 7, Book 65, Number 316:
Sahih Bukhari

Narrated Ibn 'Abbas:

The Prophet ate of the meat of a shoulder (by cutting the meat with his teeth), and then got up and offered the prayer without performing the ablution anew. Narrated Ibn 'Abbas: The Prophet took out a bone with meat on it from a cooking pot and ate of it, and then offered the prayer without performing ablution anew.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard