New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்
Permalink  
 



30

இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

  • THURSDAY, AUGUST 18, 2011
 
  • IBNU SHAKIR
  
 
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறோம். பிரச்சாரம் செய்வது நல்லதுதான். அப்படித்தான் பிரச்சாரம் செய்யவேண்டும். இஸ்லாம் எவ்வளவு கடினமான மார்க்கம் என்ற உண்மையை சொன்னால், யார் இஸ்லாத்தை தழுவுவார்கள்?

ஆனால், முன்பே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா என்ற கட்டுரையில் சொன்னது போல மூமீன்களே இது எளிய மார்க்கம்தான் போலிருக்கிறது என்று நினைத்து பல தவறான வழிகளில் சென்றுவிடுகிறார்கள்.

ஆகையால் மூமீன்களுக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது.

இஸ்லாத்துக்குள் வருவது எளிது. எல்லா மார்க்கம், மதங்களிலுமே உள்ளே நுழைவது எளிது. கிறிஸ்துவராக வேண்டுமென்றால், அற்புத சுகமளிக்கும் கூட்டத்துக்கு போய் அல்லேலூயா என்று கத்தினால் போதுமானது. அதே போல இந்து மதத்துக்கு போக வேண்டுமென்றால், கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்தால் போதுமானது. அதே போல இஸ்லாத்துக்கு வர வேண்டுமென்றால், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று கலிமா சொன்னால் போதுமானது. அபிஷியலாக மதம் மாற வேண்டுமென்றால் எம்மதத்தவராக இருந்தாலும் கெஸெட்டில் பதிவது அவசியம். இல்லையென்றால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாது.

அது கிடக்கட்டும். இஸ்லாத்துக்கு வருவோம்.

தாவா பணியின் போது, இஸ்லாத்தை பற்றி சில விஷயங்களை பேச கூடாது. உதாரணமாக, மற்ற மதங்கள் போல நினைத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறவும் முடியாது என்பதை நாம் சொல்லிவிடக்கூடாது. ஆனால், அதே நேரத்தில் நினைத்தால் நீ வெளியே போய்விடலாம் என்றும் சொல்லக்கூடாது.

”நெனச்சா வெளில போய்க்கலாங்களா?” என்று கேட்டால், “வெளிக்கு போகறதுதானே ? எங்க வீட்டு கொல்லையில கூட நீ போய்க்கலாம்.. நாமல்லாம் சகோதரருங்கல்லா?” என்று பேச்சை மாற்ற வேண்டும்.

இஸ்லாத்துக்கு வருவதற்கு முன்னதாக, “ இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். இதிலே ஒரே அமைதிதான். நம்ம ஜெயினுலாபுதீன் மட்டுந்தேன் சும்மா வாள் வாள்னு கத்திகிட்டிருப்பாரு. அது அமைதி இல்லத்தான். ஆனா நாங்கல்லாம் ரொம்ப அமைதில்லா” என்று சொல்லி சமாதானம் செய்யவேண்டும். (மேல் தரவுகளுக்கு: இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா? என்ற தாவாப்பணி சிறப்பு கட்டுரை பார்த்துகொள்ளவும்). அவ்வப்போது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று எழுத வேண்டும். சொல்லவேண்டும். அல்லாஹ்வுக்கு எவ்வளவு சாந்தியும் சமாதானமும் இருக்குன்னு நமக்கு தெரியாதா? சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்பாய்ங்க? அதுனால தெகிரியமா சாந்தி சமாதானமெல்லாம் சொல்லலாம். ஒன்னும் பிரச்னையில்ல. இருக்கறது கொஞ்சூண்டு. அள்ளிட்டா போய்டப்போறாய்ங்க?

சரி எளிய மார்க்கத்துக்கு வருவோம்.

இஸ்லாம் ஒரு கடினமான மார்க்கம் என்பது நமக்குத்தான் தெரியும். அதுவும் பிறந்த காலத்திலிருந்தே இது ஹராம், இது ஹலால் என்று வளர்ந்த நமக்கு ரத்தத்திலேயே ஊறிய விஷயம். ஆனா இந்த அமெச்சூர் முஸ்லீமுக்கு அதெல்லாம் தெரியாது. ஆகையால் கொஞ்சம் மார்க்க கல்வி கொடுத்தாக வேண்டும்.

முதலில் நாம் உபயோகிக்கும் அரபி வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் அர்த்தம் சொல்லித்தர வேண்டும். இல்லைன்னா ஒரே ரகளைதான். இது மாதிரி ஒரு அமெச்சூர் முஸ்லீம் நம்மளை பார்த்து முதல்ல இன்ஷா அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்புறம் எதுக்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ்தான்.

இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்
இன்ஷா அல்லாஹ் சாப்பாடு போடு
இன்ஷா அல்லாஹ் இது என்னக்கி பண்ண பிரியாணிடா?
இன்ஷா அல்லாஹ் உவ்வே வாந்தி வருது.
இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்

இப்படியே எல்லாத்துக்கும் இன்ஷா அல்லாஹ் சொல்லி கொன்னேபுட்டான்.

கொஞ்சம் முன்னேறியவுடனே அல்ஹம்துலில்லாஹ்.. அதுவும் வானம் படம் பார்த்துட்டு கொலவெறியோடத்தான் அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்கிட்டிருந்தான். எனக்கே கொஞ்சம் பயமா போயி ”மாப்ள.. எங்க மாமா ஊர்லர்ந்து வர்ரார்டா. அதனால வேற வீடு பாக்கணும்னு” சொல்லி உடுஜூட் பண்ணிட்டேன்.

ஸோ... இதுமாதிரி நெறய அரபி இஸ்லாமிய வார்த்தைகளை போட்டு பேசணும். எக்குதப்பா பேசி மாட்டிக்கக்கூடாது.

அப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீய லிஸ்டு இருக்கு. எது ஹராம் எது ஹலால் (அதாவது எதை முஸ்லீம்கள் செய்யக்கூடாது. எதை முஸ்லீம்கள் செய்யலாம் என்று)

சிம்பிளா சொல்லணும்னா எதெல்லாம் நபிகள் நாயஹம் (ஸல்) செய்திருக்காரோ, செய்ய சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹலால். எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹராம்.

நபிஹள் நாயஹம் செஞ்சதெல்லாம் நாம் செய்யலாம். ஆனா அவரு 13 பொண்டாட்டி 23 வப்பாட்டி வச்சிருந்தார். அதுமட்டும் நாம் செய்யக்கூடாது. ஏன்னா அல்லாஹ் நபிஹள் நாயஹம்(ஸல்) அவர்களோட வாயில வஹியா இறங்கி அது நபிகள் நாயஹத்துக்கு மட்டும் பெஸல் அனுமதின்னு சொல்லிட்டார். மத்தபடி அவர் விரலை ஆட்டினார்னா அது மாதிரி ஆட்டணும். அவர் அகட்டி நின்னார்னா நாமளும் அகட்டி நிக்கணும். அவர் ஆறு வயது ஆயிஷா(ரலி) யை நிக்காஹ் செய்தார்ன்னா நாமளும் செய்யலாம். ஆயிஷாவ இல்லை. வேறெதாவது ஆறு வயசு பொண்ணை. அப்புறம் இன்னொன்னு. எல்லோரட மனைவியும் புருஷன் செத்ததும் மறு நிக்காஹ் பண்ணிக்கலாம். ஆனால் நபிஹள் நாயஹத்தோட மனைவிகள் மட்டும் செய்யக்கூடாது. அவுஹ எல்லாம் மூமீன்களுக்கு உம்மா மாதிரில்லா.

அது கிடக்கட்டும்.

லிஸ்டுக்கு வருவோம்.
இந்த லிஸ்டு இருக்கே.. அது ரொம்ப கொலைவெறி புடிச்ச லிஸ்டு. ஒருத்தன் இதுதான் சரிம்பாம். இன்னொருத்தன் அது தப்பும்பாம். சீ ஒரே பாம் பாம்னும் வருது.. தப்பும்பான். தப்பும்பான்.

இப்ப பாருங்க.

ரொம்ப சாதாரணமா ஒரு கிறிஸ்துவன்கிட்ட போய் நின்னுக்கிட்டு தண்ணி குடிக்கலாமா? உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கலாமான்னு கேட்டு பாருங்க. உங்களை ஏற இறங்க பார்ப்பான்.

சரி ஒரு இந்துகிட்ட போயி, “எல முத்து! ஒரு இந்துவா சொல்லுடா. இந்துக்களெல்லாம் நின்னுகிட்டு தண்ணி குடிக்கணுமா? இல்ல உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கணுமா?” ன்னு கேட்டு பாருங்க. “என்னாச்சிடா மாப்ள? நேத்து நல்லாத்தானே இருந்தே”ம்பாம்.,.. சீ...ம்பான்.

ஆனா இதே ஒரு விஷயத்தை ஒரு முஸ்லீம்கிட்ட கேட்டு பாருங்க. அவன் என்னா சொல்வான் தெரியுமா?

“இது என்ன கேள்வி? நபிஹள் நாயஹம் ஸல்லால்லாஹூ அலைஹிவசல்லம் தண்ணி குடிக்கும்போது நின்னுகிட்டு குடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதனால நின்னு கிட்டு குடிக்ககூடாது” என்று ஆணித்தரமாக சொல்வான்.

drinking-water.jpg

(மேலே இருப்பது  ஹராம். நின்று கொண்டு குடிப்பதை சொல்கிறேன்)

after-a-workout.jpg

மேலே இருப்பது ஹலால். உட்கார்ந்துகொண்டு குடிப்பதை சொல்கிறேன். தயவு செய்து அவுஹ உடையை தொடையை பாக்காண்டாம்)


(அமெச்சூர் முஸ்லீம்களுக்கு.
இந்த இணைப்பை பார்க்கவும்

)

இதுதான் மற்ற மதங்களுக்கும் நமது மார்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம்!

இது நம்மை மாதிரி பிறவி முஸ்லீம்களுக்கு தெரியும். ஆனால் எத்தனை அமெச்சூர் முஸ்லீம்களுக்கு தெரியும்? இப்படியெல்லால் ஒரு லிஸ்டு இருக்குன்னு கூட அவனுக்கு தெரியாது.

பெரியார்தாசன் மாதிரி பகுத்தறிவை விட்டுவிட்டவர்கள் மட்டுமே வரவேண்டிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

இங்கே எதற்குமே ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது. நின்று கொண்டு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கேட்டால் நீங்கள் கெட்ட முஸ்லீம் ஆகிவிடுவீர்கள் (கெட்ட முஸ்லீம் என்றால் என்ன என்பதற்கு, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் அருட்கொடைகள் மூன்று என்ற பதிவில் மூன்றாவது அருட்கொடையை பார்க்கவும்) நபிகள் நாயஹம் செய்திருக்கார். அதனால நாம் செய்யணும். அவ்வளவுதான்.

ஆனால் பிரச்னை அத்தோடு முடிந்துவிடாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்
Permalink  
 


naren said...
August 19, 2011 12:04 AM

மெளலானா சாகிர்,

நன்றாக மதராசாவில் ஓதி வந்தீர்கள் என் தெரிகிறது. ஹாலாலா, ஹாராமா என்று எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதை அறியும் போது.

================================================

புகாரி

. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார் 
நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே' என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள். 
Volume :6 Book :74

================================================


//வலது பக்கம் துப்பக்கூடாது இடதுபக்கந்தான் துப்பணும்னு ஒரு ஹதீஸ் இருக்கு. அதுக்கு நம்ம ஜெயினுலாபுதீன் என்ன வச்சிக்கார்ன்னு தேடி பாக்கணும்//

பி.ஜே. என்ன சொல்கிறார் என்று தெரியாது, ஆனால் என் பதில் இது, சரியா தவறா என்று தெரியவில்லை

“ வானிலை அறிவியலை எடுத்துக்கொண்டால், பூமி, சூரியன், நிலா, மற்ற கிரகங்கள், பால் வழி, அண்ட சராசரங்கள் எல்லாம் இடது பூரமே(anti clock wise) சுற்றுகின்றன் சுழுலுகின்றன.

அதனால் வலதுபுறம் துப்பக்கூடாது, இடதுபுறம் துப்பணும்”

என்ற அதீஸ் அறிவியல் பூர்வமாக வந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் கடைசிவரை அது எந்த “தண்ணி” என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்களே...இது நியாயமா

....காபிரின்...வணக்கம்...சீ..நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அஸ்ஸலாமும் அலைக்கும் சகோதரரே,

இவர்& பல பிரச்சார பீரங்கிகளின் பல விளக்கங்கள் இதே விதத்தில் தான் இருக்கும்.இவர் சொல்வது எல்லாம் உண்மை என்ற சீடர்களின் சவால்கள் அனைவரும் அறிந்ததே.

1.இதாவது பரவாயில்லை ஹதிதுகளில் மதம் மாறிய யூதர்கள்களால்தான் இப்படிப்பட்ட குழப்பங்கள் வந்தது என்பார்கள்.இதற்கும் ஆதாரம் இல்லை.முகமதுவை பின்பற்றுங்கள்(குரான் 7.158) என்றால் முகமதுவிற்கு பிற 200_ 300 வருடங்களில் ப்ஹாரி,முஸ்லிம்... போன்ற்வர்களால் தொகுக்கப்பட்ட ஹதிதை பின்பற்றுவோம் என்று பொருள் என்பவர்களை ஒன்றும் விளங்க வைக்க முடியாது.

2. குரானுக்கு மாற்றும் கருத்துள்ள ஹதிதுகளை ந்ராகரிப்போம் என்கிறார் பி.ஜே.மிகவும் சர்சைக்குறிய இத்னை செய்ய முடியுமா?.உலகின் பிற பகுதி இஸ்லாமிய அறிஞர்கள் ஒத்துக் கொள்வார்களா?

3.பி.ஜேவின் மொழி பெயர்ப்பில் சில இடங்களில் ஏற்கெனவே இருக்கும் வசன விளக்கத்திற்கு நெர் எதிரான பொருள் வருகிறது.இது வேறு எந்த மத புத்தக்த்திலுமே நடக்க முடியத சிறப்பாகும்.

4.குரானில் சொல்லாத வஹியும் உண்டு என்கிறார். 

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/

அபோது என்ன அர்த்தம் ஆகிறது?

5.துல்கர்கனன் என்பவர் கட்டிய சுவர் அத்தாட்சிகயாக (குரான் 18:98) மறுமை நாள்வரை இருக்கும் என்றால் எங்கே என்று நாம் கேட்டால் சுவர் மறைந்து இருக்கும் மறுமை நாளின் போதே வெளிப்படும் என்று புது விளக்கம்.
______________
18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
________________

6. முகமது காலத்தில் அல் அக்சா ஜெருசலேம் மசூதி இல்லை(சாலமன் என்பவர் கட்டிய கோயிலே சரித்திர ஆதாரமற்றது).இல்லாத மசுதி போய் அங்கிருந்து சொர்க்கம் போய்.அனைவரையும் பார்த்து வந்தார் என்கிறார்கள்.சொர்க்கம் நரகத்தில் மறுமை நாளுக்கு முன் எப்படி இருக்க முடியும் என்றால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

naren said...
August 21, 2011 2:22 AM

ஹழ்ரத்து சாகிர்,

//இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்
இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்//

ஆகியவகளை செய்தால் ”இன்ஷா அல்லாஹ்” சொல்லவேண்டும் என்கிறீர்கள்.

ஆனால்
================================================
முஸ்லிம்

அத்தியாயம்: 3, பாடம்: 3.32, ஹதீஸ் எண்: 563 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது "அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி" என்று கூறுவார்கள் (இறைவா! ஆண்-பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
================================================
எனச் சொல்ல சொல்கிறது.

எது சொன்னால் சரி என்று உங்கள் பட்வா தேவை.

இந்த காஃபிருக்கு நல்ல மார்க்கத்தை காட்டுங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தருமி said...
September 1, 2011 10:14 AM

நீங்கள் தான் லிஸ்ட் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள்; எனக்குத் தெரிந்த லிஸ்ட் ஒன்று கொடுத்துள்ளேன்:

தாடி வளர்க்கணும் .. மீசை இல்லாட்டா நல்லது ..
தாடிக்கு கலர் அடிக்கணும் .. (என்ன கலர்னு தெரியலையே.)
ரெண்டு நாளைக்கொரு மட்டும்தான் தல சீவணும் ..
நின்னுக்கிட்டு ஒண்ணுக்கு அடிக்கக்கூடாது ..
உட்கார்ந்து தான் தண்ணி குடிக்கணும் ..
தொழுகும் போது அண்ணாந்து பார்க்கக்கூடாது ..
விருத்த சேதனம் பண்ணணும் ..
எப்ப எப்பவோ நிர்வாணமா இருக்கலாம் / இருக்கக்கூடாது ..
தும்மல் ஓகே .. 
கொட்டாவி நோ .. நோ ..
ஒற்றைப்படை ஓகே ..
ஷைத்தான் காதுக்குள் உச்சா போவது .. 
மூக்குக்குள் ஷைத்தானின் ஜாகை ..
இடது கைப் பழக்கம் ச்சீ .. ச்சீ ..

இந்த ஹதீசுகளில் மற்ற ஹதீசுகளை இஸ்லாமியர் follow செய்கிறார்களோ இல்லையோ, விருத்த சேதனம் மட்டும் கட்டாயம் செய்து விடுகிறார்களே .. அதற்கான காரணம் என்ன? ’அது’ இல்லாவிட்டால் இஸ்லாமியன் இல்லை என்ற அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக் காரணம் என்ன?


Ibnu Shakir said...
September 1, 2011 3:05 PM

தருமி நல்ல கேள்வி,

தற்போதைய இஸ்லாமிலேயே பலர் இதனை ஒப்புகொள்வதில்லை.

http://www.quranicpath.com/misconceptions/circumcision.html

நபிஹள் நாயகத்துக்கு சின்ன வயதில் எடுத்துவிட்டுவிட்டார்கள் என்று காணக்கிடைக்கிறது.

இது ஒரு அரபிகளின் பழக்க வழக்கமே அன்றி, இது அல்லாஹ்வின் கட்டளைப்படி என்று சொல்லவியலாது.

"And He designed you, and has perfected your design. " (Qur'an 40:64)

"You will not see any flaw in what the Lord of Mercy creates." (Qur'an 67:3)

என்று சொல்லும்போது ஏன் வெட்ட வேண்டும் என்ற கேள்வி வருகிறது. 

ஒரே ஒரு இடத்தில் கூட குர் ஆனில் விருத்தசேதனம் பற்றி இல்லை. 

விருத்தசேதனம் மாதிரியான முக்கியமான விஷயம் ஏன் குர் ஆனில் இல்லை என்பது பிஜேவிடம் கேட்க வேண்டிய கேள்வி.

"(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).


"விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 5889, 5891, 6297, முஸ்லிம் 377, 378, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா மாலிக்)

இயற்கை மரபுகள் என்றால் பழங்குடி அரபு மரபுகள். நகம் வெட்டுவதெல்லாம் பழங்குடி அரபு மரபுகள்! நம்முடைய பிஜேவிடம் கொடுத்தால் இதனையும் அவர் பெலஹீனமான ஹதீஸாக மாற்றிகொடுத்துவிடுவார். (நம்பலாமய்யா!)

குரான் ஒளியில் பார்த்தால், விருத்த சேதனம் செய்துகொள்வது சாத்தானின் வழிகெடுத்தல் என்று கருத நிறைய இடமிருக்கிறது.

4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். 

ஆகவே அல்லாஹ் படைத்த உருவங்களை சிதைப்பவன் சைத்தானால் வழிகெடுக்கப்பட்டவன் என்றுதான் கருதவியலும். 
அதனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் (பெரியார்தாசன் உட்பட) எல்லோருமே சைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard