New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை
Permalink  
 


பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை

  • WEDNESDAY, AUGUST 31, 2011
 
  • IBNU SHAKIR
 
 
பி ஜெயினுலாபுதீன் என்ற இறைதூதர் என்றுதான் இந்த பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால், நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அளவுக்கு அவரையும் தூக்கிவிடுமோமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். இஸ்லாமில் இறைவனுக்கு மட்டும் இணைவைக்கக்கூடாது என்று சொல்வதை நம்ப வேண்டாம். நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கும் இணை வைக்கக்கூடாது. கவனிக்கவும், இறைவனுக்கு இணை வைக்கும் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கூட விட்டுவிடுவோம். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு இணை வைத்த காதியானிகளையும், பஹாய் களையும்  ஈமான்தாரிகள்  எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இறைவனுக்கு இணை வைப்பதை விட மிகப்பெரிய குற்றம் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இணைவைப்பது! ஜாக்கிரதை.

ஆனாலும் பிஜே சில விஷயங்களில் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகம் தெரிந்தவர் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர் மட்டுமல்ல, இங்கே நிறைய பேருக்கு நபிஹள் நாயகம்)ஸல்) அவர்களை விட அல்லாஹ்வின் மனத்தில் என்ன உள்ளது என்று தெரியும். அதனை எல்லாம் இங்கே இன்ஷா அல்லாஹ் கூற விரும்புகிறேன். அவற்றின் மூலம், இப்படிப்பட்ட அருட்கொடைகள் மீது உங்கல் அன்பு சுரந்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

விஷயத்துக்கு வருகிறேன். 

வஹி மூலம் வந்த வசனம் குரானில் இல்லாததை பற்றிய பிஜே அவர்களது விளக்கம் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ளது
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/

குரான் தவிர வேறு இறைச்செய்தி இல்லை என்பது தவறு என்பதற்கு ஆதாரத்தை பிஜே எழுதியுள்ளார். ஏன் குரானில் இல்லை என்பதற்கு காரணத்தையும் பிஜே எழுதியுள்ளார். மார்க்க சம்பந்தமாக எதுவும் இந்த இறைவசனத்தில் இல்லை என்பதால் அது குரானில் இடம் பெறவில்லை.
( நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும்அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். "உங்களுக்கு இதை யார் சொன்னார் என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது அனைத்தையும் அறிந்த நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான் குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம் சமுதாயத்துக்கோ மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான் குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது)

ஆகவே அல்லாஹ் ஒரு விஷயத்தை சொல்லாமல் நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்று தெரிந்து கொள்ளலாம். அதுவும் பக்கத்தில் இருக்கும் மனைவி என்ன நினைத்துகொண்டிருக்கிறாள் என்பது கூட நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்பதே இங்கே நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை.

ஆனால் அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்பதையும் நமது உயிருக்கும் மேலான நபிஹள் நாயகம் சொல்கிறார்.

ஸஹீஹுல் புகாரி 6223
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
”அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் கொட்டாவியை வெறுக்கிறான்.” மேலும், “ ஹா என்று கொட்டாவி விடுகிற மூஃமினை பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்”
என்றும் உண்மை விளம்புகிறார்.

Angels_22_tnb.png

மேலே இருப்பது ஓக்கே!

yawn.jpg
இது ரொம்ப ரொம்ப தப்பு.. ஷைத்தான் சிரிக்கிறான் ஜாக்ரதை!

அது அவருக்கு எப்படி தெரிந்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பகல்லயே பசு மாடு தெரியாதவர், ராத்திரியில் எருமை மாட்டை எப்படி பார்க்க முடியும் என்று கேட்கலாம்.பக்கத்தில் இருக்கும் மனைவியின் உள்ளக்கிடக்கையே தெரியாதவர் எப்படி அல்லாஹ்வின் மனத்தில் அவரது விருப்பு வெறுப்பை அறிந்திருக்க முடியும்?

ஆக இதுவும் ஒரு வஹி மூலம்தான் வந்திருக்க வேண்டும். இல்லையா?

ஆனால் பாருங்கள். இந்த தும்மல், கொட்டாவி இறைவசனம் அல்குரானில் இல்லை!

மனைவியை பற்றி அல்லாஹ் நபிஹள் நாயகத்துக்கு சொன்னது நமக்கு தேவையில்லை என்பதால்தான் அது அல்குரானில் இடம் பெறவில்லை என்பதுதான் நமது பிஜே சொல்லும் விளக்கம். ஆனால், தும்மல் அல்லாஹ்வுக்கு பிடிக்கும் என்பது நமக்கு மிகவும் முக்கியமான விஷயம். கொட்டாவி பிடிக்காது என்பதும் நமக்கு முக்கியமான விஷயம். அதுவும் அல்லாஹ்வின் மனதில் உள்ள விருப்பு வெறுப்புக்களை பற்றிய மிக முக்கிய விஷயம்!

இதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

1) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொன்னார். ஆனால் அந்த இறைவசனம் அல்குரானில் இடம் பெறாமல் போய்விட்டது. இப்படி சொன்னால், அல்குரான் முழுமையானதல்ல என்று ஆகிவிடும்.

2) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொல்லவில்லை. இப்படி வைத்துகொண்டால், நபிஹள் நாயஹம் இஷ்டப்படி பொய் சொன்னார் என்று ஆகிவிடும். இதுவும் பிரச்னை.

இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாத்திகர்களும் சாதாரண கொட்டாவிக்கு ஏனய்யா இப்படி பிரச்னை பண்றீங்க. வந்தா கொட்டாவி வுடுங்க. தும்மல் வந்தா தும்முங்க. இதுக்கெல்லாம் எதுக்குடா அல்லாவை இழுக்குறீங்க என்று கேட்கலாம். இது முஸ்லீம்களுக்கு தலை போற பிரச்னை (no pun intended..man) என்று அறிந்துகொள்ளவும்.

இதே மாதிரி அல்குரானில் இல்லாத ஆனால் ஹதீஸில் அல்லாஹ் விரும்புகிறான், அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு வண்டி கிடக்கிறது.

உதாரணத்துக்கு சில.. (சிரிக்கும் காபிர்கள் சற்றி தள்ளி நிற்கவும்)
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48, 5198
அல்லாஹ்வுக்கு தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை நம்பிக்கை கொண்டு மனனம் செய்பவர் சொர்க்கம் செல்வார். அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்
5207
அல்லாஹ்வை யார் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்களை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுக்கிறார்களோ அவரை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்

அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான்

இதற்கெல்லாம் அல்குரானில் ஆதாரம் இல்லை. அவையெல்லாம் வஹி மூலமாகத்தானே வந்திருக்க வேண்டும். பிறகென்ன அல்ல்லாஹ்வின் இறுதி இறைதூதர் சும்மா வாயில் வந்ததை புளுகினார் என்றா சொல்ல முடியும்? (புளுகினார் என்று சொல்லும் காபிர்கள் சற்று தள்ளி நிற்கவும். நஜஸ்.. நஜஸ்)

ஆகவே இவற்றை எல்லாம் நாம் எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று நமது பிஜே கூறலாம்.

இரண்டாவது பிஜேவும் சும்மா லேசுப்பட்டவர் அல்ல. அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்தான் அவரும்.


எப்படி என்று கேட்கிறீர்களா?

இதோ இந்த வரியை பாருங்கள்!
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது:” 

ல்லாஹ் இந்த இறைவசனத்தில் இதற்காகத்தான் கூறுகிறான் என்று ஒருவரால் கூறமுடியுமென்றால் அவர் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவராகத்தானே இருக்க வேண்டும்? அது பிஜேதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் இறைதூதருக்கு அனுப்பிய வசனத்தில் அன்றைய இறைதூதருக்கே புரியாத தெரியாத விஷயங்களை எல்லாம் புட்டு புட்டு வைப்பவர் ஒருவர் உண்டு என்றால், அது பிஜே அவர்களே!

www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/6-allah-iyalathavana/

அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான், அல்லாஹ் கேலி செய்கிறான், அல்லாஹ் ஏமாற்றுகிறான் போன்ற வசனங்கள் அல்குரானில் காணக்கிடக்கின்றன.

அவர்கள் கேலி செய்தால், அல்லாஹ்வும் கேலி செய்வான் என்பது, அவர்கள் கேலி செய்தால் அதற்கான தண்டனை தருவான் என்றுதான் அல்லாஹ் சொல்ல வருகிறான் என்று விளக்குகிறார்.

ஆகவே அல்லாஹ் என்ன சொல்ல வந்தான் என்பதை விளக்குபவர் பிஜே என்றால் மிகையில்லை. இது போல இந்த காலத்தில் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்துணர்ந்து சொல்லக்கூடியவர் யார் இருக்கிறார்கள்?

இதே மாதிரி, முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லத்துக்கே  தெரியாத பல அறிவியல் உண்மைகளை அல்குரானின் வரிகளிலிருந்து கண்டுபிடிக்கக்கூடியவர் பிஜே அவர்களே. இதனைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான், அது முகம்மது நபிக்கு தெரியவில்லை என்று பல விளக்கங்களை கொடுத்துள்ளார் அண்ணன் பிஜே. கவனியுங்கள். இதே போல இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு என்பதற்கெல்லாம் அல்லாஹ் இதனைத்தான் சொல்லவந்தான் என்று ஒரு வண்டி நமது பிஜேவும், நமது இஸ்லாமிய அறிவியலாளர்களும் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் வஹி வந்து இந்த அறிவை பெற்றார்களா அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டினார்களா என்று யாரும் கேட்கக்கூடாது. அவர்கள் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்கள் என்று வைத்துகொண்டு மேலே போகவேண்டும்.

அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் மாதிரியே அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை மட்டுமல்ல, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் உள்ளக்கிடக்கையையும் அறிந்தவர் பிஜே அவர்கள் மட்டுமே!

அதே மாதிரி இஸ்லாமிய வருடம் என்று அரபி வருடங்களை கருதுவது தவறு என்று பிஜே கூறியுள்ள விஷயமும் முக்கியமானது.

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/hijri_epothu_armbam/ 

இதன் இறுதியில் அவர் கூறியதை பார்ப்போம்
நபிகளுக்கு பின்னால் வஹி இல்லை என்பதும், வஹியின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது” என்று அறிவித்திருக்கிறார் பிஜே. 
நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பின்னால் வஹி இல்லை என்பது குர் ஆனில் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது. காத்தமுன் நபி என்ற ஒரே ஒரு வார்த்தையை வைத்து வூடே கட்டிய மௌலவிகள் நாம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

அதனை அப்படியே வைத்துகொள்வோம்.

அப்படியென்றால், உத்மான் தொகுத்த குர் ஆனை என்ன சொல்வது என்ற கேள்வி எழுகிறது. காலிபா உத்மான் (றலி)அவர்களே அல் குர் ஆனை தொகுத்தார்கள். அது மட்டுமல்ல,எத்தனை எத்தனையோ வெவ்வேறு விதமாக தொகுத்த குர் ஆன்களை எல்லாம் கைப்பற்றி எரித்து தன்னுடைய குர் ஆனை மட்டுமே குர் ஆன் என்று சொல்லவேண்டும் என்று செய்தார்கள். இதில் அலி(ரலி) தொகுத்த குர் ஆனும் காலி. அந்த குர் ஆன் இப்போது இருக்கும் குர் ஆனுக்கு மாறுபாடானது என்பது வரலாறு. அது மட்டுமல்ல, அந்த குர் ஆன் மிக அழகாக பல முறைகளில் சரியானதும் கூட என்று சுன்னி பிரிவை சேர்ந்தவர்களே எழுதி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த குர் ஆன் அழிக்கப்பட்டு இந்த குர் ஆன் மட்டுமே நிற்கும்படி உத்மான் செய்துவிட்டார்.

குர் ஆனில் வஹியால் இறக்கப்பட்ட வசனங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு ஒரு வடிவத்தை கொடுத்து அத்தியாயங்களாக பிரித்து இந்த அத்தியாயம் முதலில், இது அடுத்தது இது அடுத்தது என்று கொண்டுவந்து அதற்கு உருவத்தை கொடுத்தது காலிபா உத்மான் அவர்களே.

இந்த குர் ஆனை இப்படித்தான் தொகுக்க வேண்டும் என்று ஒரு விவரமும் அல் குரானில் இல்லை. 

குரானை யார் யாரிடம் கற்றுகொள்ள வேண்டும் என்று நபிஹள் நாயஹம் சொல்லியிருக்கிறார் என்றால், அது அப்தல்ல இப்னு மசூத், சலிம் மாவ்லா அபு ஹுதாபியா, உபய் இப்னு காப், முஅத் இப்னு ஜபல்,



Muhammad said: "Learn the Qur'an from four persons: Abd-Allah ibn Mas'ud, Salim Mawla Abu-Hudhayfah, Ubay ibn Kab and Muadh ibn Jabal."

இன்னொரு இடத்தில் 
Narrated Qatada: I asked Anas bin Malik: 'Who collected the Qur'an at the time of the prophet?' He replied, "Four, all of whom were from the Ansar: Ubai bin Ka'b, Muadh bin Jabal, Zaid bin Thabit and Abu Zaid".[Bukhari Sahih al-Bukhari, 6:61:525]

நபிஹள் நாயகம் காலத்தில் குரானை மனனம் செய்தவர்கள் அனைவருமே அன்சாரிகள்என்று இன்னொரு ஹதீஸ் சொல்கிறது.

ஆனால், நம்ம உத்மான் (றலி) யாரை வைத்து அல்குரானை தொகுக்கிறார் என்று பாருங்கள். இந்த நான்கு பேருமே இல்லை.
முழுக்க முழுக்க குரேய்ஷிகளை வைத்து அல்குரானை தொகுக்கிறார். (அலி(றலி)யும் குரைய்ஷி பிரிவை சார்ந்தவர்) ஹஃப்ஸா(றலி) என்ற நபிஹள் நாயஹத்தின் மனைவியையும், தனது கையில் இருந்த குரானையும் சரிபார்த்து தொகுத்துகொண்டதாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

உபய் இப்னு காப் ஓதிவந்த குரானில் இருக்கும் ஒரு வரி இப்போதைய குரானில் இல்லை என்று யூசூப் அலி கூறுகிறார்.

http://al-quran.info/default.aspx?x=y#&&sura=33&trans=en-yusuf_ali&show=both,quran-uthmani&ver=2.00

3652. ^ In spiritual relationships the Prophet is entitled to more respect and consideration than blood-relations. The Believers should follow him rather than their fathers or mothers or brothers, where there is conflict of duties. He is even nearer-closer to our real interests-thari our own selves. In some Qiraahs, like that of Ubayy ibn Ka'ab, occur also the words "and he is a father of them", which imply his spiritual relationship and connection with the words "and his wives are their mothers". Thus his spiritual fatherhood would be contrasted pointedly with the repudiation of the vulgar superstition of calling any one like Zayd ibn Harthah by the appellation Zayd ibn Muḥammad (33:40): such an application is really disrespectful of the
Prophet.

ஆக உத்மான் தொகுத்த குர் ஆன் முழுமையானது அல்ல என்ற நிலைக்கு வர வேண்டியிருக்கிறது. மேலும் இன்றைய குரானின் பெயர் அல்குரான் அல்ல. அல் முஸாப் அல் உத்மானி என்பதுதான் இந்த குரானின் பெயர். இதே போல இதனை பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறியிருந்தாலும், அவர் பாதுகாப்பது இந்த குர் ஆனா அல்லது அலி(றலி) தொகுத்த குர் ஆனா என்று பிஜேவோ அல்லது மற்றவர்களோ அறிவார்களா? அல்லாஹ்வே அறிவான். அலி (றலி) தொகுத்த குர் ஆன் பத்திரமாக இறுதி இமாம் பாதுகாத்துவருகிறார் என்று ஷிஆக்கள் நம்புகிறார்கள். அதுவா?

இது மாதிரி நிறைய ஆதாரங்கள் உண்டு என்றாலும் இப்போதைக்கு உத்மானுக்கு அல்லாஹ் வஹி கொடுக்காமல் உத்மான் தொகுத்த குர் ஆனை நாம் குர் ஆன் என்று கருதலாமா என்பதற்கு பிஜே அவர்களே விளக்கம் அளித்துவிடுவார்கள்.

அவருக்கு தெரியாததா? அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிந்தவர் பிஜே ஒருவரே. அல்லாஹ் என்ன கருத்தினால் எதனை சொன்னான், நபிஹள் நாயகம் என்ன கருத்தினால் எதனை சொன்னார் என்பதையெல்லாம் புட்டு புட்டு வைக்கும் பிஜேவுக்கு இதெல்லாம் ஜூஜூபி..


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்

 
18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது.  ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும்,  ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.  ஷிர்க் ஏகத்துவமாகவும்,  பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின.
                  நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர்.  புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் பஹ்கள்” நோக்கி ஆண்களும் பெண்களும் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்ற சென்றனர். ”தர்ஜியா” என்ற மரத்திடம் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல் நிறைவேறினால், அம்மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர்.  அம்மரத்தில் இலைகளையே பார்க்கமுடியாத அளவுக்குக்கு சேலை துணிகள் தொங்கிக்கொன்டிருந்தன.
         “தாரியா” என்ற மலைகுகைக்கும் சென்று பெண் அவ்லியாக்களின் அருள் வேண்டினர்.  குபைலா என்ற ஊரிலிருந்த புகழ்பெற்ற ஜைது இப்ன் அல் கத்தாப் கப்ருக்கு மக்கள் கூட்டம் சென்றது. மொத்தத்தில் இன்று எப்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இஸ்லாமிய பெயர்களில், இருக்கும் தர்கா, தரீக்கா கத்தம் பாத்தியா, கந்தூரி மௌலிது, பால்கிதாப் போன்ற அனைத்து இபாதத்துகளும்? அங்கும் இருந்தன.
                   இந்தச் சூழலில்தான் முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)-1703-1792. அவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். மதினாவில் கற்ற மார்க்கக்கல்வியுடன் 1740 ல் தமது சொந்த ஊரான “உயைனா” வந்து தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். கடும் எதிர்ப்பு ஆயினும் அல்லாஹ்வின் துணையைக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள். அங்குள்ள குறுநில ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களின் மனங்களை வெல்கிறார்கள். முதலில் அவர்கள் ஊரிலிருந்த உயைனாவின் புகழ்பெற்ற புனித மரத்தையும், அங்கிருந்த சிலைகளையும் அம்மக்களைக்கொண்டே உடைத்தெரிகிறார்கள்.
                           இரண்டாவதாக,  “குபைலா” என்ற ஊரிலிருந்த ஜைது இப்ன் அல் கத்தாப் சஹாபி பெயரில் இருந்த புகழ்பெற்ற தர்கா கட்டிடத்தை அம்மக்களைக் கொண்டே தரைமட்டம் ஆக்கினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அரபு மண்ணில் ஏகத்துவம் நிலைபெற்று நிற்கிறது.
இந்தியாவிலும், தமிழகத்திலும் தர்காக்களே அபயமளிக்கும் ஆன்மீக பீடமாக விளங்குகின்றன, . இந்நிலையில்தான் இங்கிருந்து மதினா சென்று படித்து திரும்பிய மதனி, குறிப்பாக கமாலுதீன் மதனி,  மற்றும் திருச்சி அபூ அப்துல்லாஹ்,  ஜைனுலாப்தீன் உலவி ஒன்று சேர்ந்து அந்நஜாத் மாத இதழை ஆரம்பித்தனர்.
கலக்கமடைந்த ஷைத்தான்
                  அல்லாஹ்வின் கிருபையால் தூய இஸ்லாத்தை அந்நஜாத் மக்கள் மத்தியில் எடுத்துவைத்தது. மிகவும் குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு எழுந்தது. ஷைத்தான் கலக்கமடைந்தான். இந்நிலை நீடித்தால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்பதை உணர்ந்து சதி வலையை வீசினான்.
ஆலிம்களை பிடித்தால் ஒரு பெரும் கூட்டத்தையே தன் பிடிக்குள் கொண்டு வரலாம் என்று கணக்குப்போட்டு  மதனியை முதலில் பிடித்தான். அன்றைய தாருல் நத்வாவின் தலைவன் மார்க்க அறிஞன் அறிவின் தந்தை என புகழப்பட்ட அபூ ஜஹீலுக்கு சொன்ன டெக்னிக்கையே இங்கும் பயன்படுத்தினான்.

                                 அல்லாஹ்வின் படைப்பில் அனைத்தும் சமம், ஆனால் தான் நெருப்பில் படைக்கப்பட்டதால் உயர்ந்தவன் என்றும் மண்ணில் படைக்கப்பட்ட ஆதம் தாழ்ந்தவர் என்று பிரிவினை செய்து வெளியேறிய இப்லீஸ் மதனியாரிடம் ஆலிம், அவாம் என்ற பிரிவினை விஷ விதையை தூவி, “நீங்களெல்லாம் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள், நீங்கள் படிக்காத அபூஅப்துல்லாஹ் உடன் சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. ஆகவே ஆலிம்களாக ஒன்று சேர்ந்து இயக்கம் ஆரம்பியுங்கள். ” என்ற ஷைத்தானின் வழிகாட்டுதலில் புதிய தாருல் நத்வாவை மதனியார் ஆரம்பித்தார். அதற்க்கு பெயர் “தவ்ஹீத் ஜமாத்துல் உலமா”.

           மதனியும் உலவியும் சேர்ந்து மார்க்கம் சொன்னார்கள், அதன் விளைவு தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் தகராறு ஆரம்பமாகியது. சத்தியத்தை சொல்லும்பொழுது எதிர்ப்பு, அடிதடி சண்டை சச்சரவு எல்லாம் வரும் நபி(ஸல்) அவர்களுக்கும் வந்தது. முஹம்மது பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களுக்கும் கடும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிய அழகிய பொறுமையை கடைப்பிடித்து,  எதிர்க்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மனங்களை மாற்றினார்கள்.  ஆனால் நமது ஆலிம்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஷைத்தான் கைப்பிடிக்குள் இருப்பவர்களுக்கு பொறுமையாய் இருக்கமுடியாது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சமுதாயத்தில் பிரிவினை                   
          என்ன செய்தார்கள்? இஸ்லாத்தில் முதல் பிரிவினை செய்து கட்சி ஆரம்பித்த கவாரிஜ்கள் வழியைப்பின்பற்றி, இணைவைக்கும் இமாமை பின்பற்றுவது ஹாரம் என காபிர் பத்வா கொடுத்து ஊருக்கு ஊர் தனிப்பள்ளி கட்டி தங்கள் இயக்க,  கூலி ஆலிம்களை குடியேற்றினார்கள். அதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டினான். தவ்ஹீத் பள்ளிவாசல் என்று பெயர்வைத்து, இதுநாள்வரை தொழுத பள்ளிகளை ஷிர்க் பள்ளிகளாக மாற்றிவிட்டார்கள்.  ஆக, குடும்பத்தில் பிரிவினை, பள்ளியில் பிரிவினை ஒன்றுபட்ட மஹல்லா ஜமாத்தில் பிரிவினை.


முஸ்லிம்களை இரண்டாகப் பிரித்தனர்
    எல்லோரும் முஸ்லிம்கள் என்று ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி, தங்களை தவ்ஹீத் முஸ்லிம்கள் என்றும், மற்றவர்கள் இணைவைக்கும் முஸ்லிம்கள் என்றும் இரண்டாகப் பிரித்தனர். பிளந்தனர். தங்களுக்கென்று தனி இயக்கத்தை ஆரம்பித்து அதற்கு ‘ஜாக்ஹ்” என்று பெயரிட்டு, முஸ்லிம்களை இஸ்லாத்தின் பால் அழைக்காமல், தங்கள் இயக்கத்தின் உள்ளே இழுத்து பதவி கொடுத்து பத்திரப்படுத்தினர்.
சத்தியத்தை சொல்லும்பொழுது கடும் எதிர்ப்பு வரத்தான் செய்யும் நபிமார்கள் எதிர்க்கப்பட்டார்கள்,  அடிக்கப்பட்டார்கள்,  ஏன் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால் மதனி ஆலிம் இதற்க்கெல்லாம் அவர் தயாரில்லை. சொகுசாக மார்க்கம் சொல்ல ஆசைப்பட்டதால்,  தனி புரோகித சபை, தனி இயக்கம், தனிப்பள்ளி ஏற்ப்படுத்தி தலைவராகிவிட்டார்.
             இயக்க ஆலிம்களின் பிரிவினை செயல்களுக்கு குர் ஆனிலும், ஹதீஸ்களிலும்,  நபிமார்கள் வரலாறுகளிலும், சத்திய சஹாபா பெருமக்கள் வாழ்க்கையிலும்,  ஆலிம் பெருமக்கள் இமாம்கள் வாழ்விலும் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடிப்பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட கேடுகெட்ட கவாரிஜ்கள் மற்றும் மனோஇச்சையை பின்பற்றி தங்கள் அறிவு சொல்வதே மார்க்கம் என்ற முத்தஷீலாக்களிடமே ஆதாரம் கிடைக்கிறது.

ஆகவேதான்,  இன்று இயக்க ஆலிம்கள் நடத்துவது “கள்ளத் தவ்ஹீத் கம்பெனி” என்று கூறுகின்றோம். முஸ்லிம்களிடம் இயக்க வெறியை ஏற்படுத்தி தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்றனர். கூலி ஆலிம்களை சப்ளை செய்ய தனி மதரசாக்கள், இங்கிருந்து வெளியேறும் கூலி ஆலிம்களுக்காக தனி ஜாக்ஹ் TNTJ பள்ளிவாசல்கள்.
                            பிரிந்து கிடந்த மக்களை நபி (ஸல்) அவர்கள் தவ்ஹீத் மூலம் ஒற்றுமை படுத்தி ஒரே சகோதரர்கள் ஆக்கினார்கள், ஆனால் நமது கள்ளத் தவ்ஹீதுகள் ஒன்றாக இருந்த சமூதாயத்தை தவ்ஹீதை சொல்லி பிரித்துவிட்டார்கள். பிரிவினை செய்வது சாத்தானின் வழி என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“எனக்கும் , என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னரும். . . . . . . . ” —அல் குர்ஆன். 12:100.
சமுதாய பிரிவினை கொடிய பாவம்.  கூறுவது அல்குர்ஆன்
1.  “ எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப்போல நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. ” –அல் குர்ஆன். 3:105.
2.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து (அவர்களும்) பல பிரிவினராக ( JAQH, TNTJ, INTJ etc…) பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமுமில்லை. . . . . ” –அல் குர்ஆன். 6:159.
3.  “ எனினும் ( யூதர்கள், கிறிஸ்தவர்கள், இயக்க ஆலிம்கள் ) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக்கொண்டு சந்தோசம் அடைகின்றனர். நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுங்கள். ” –அல் குர்ஆன். 23:52-53.
4.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்திற்க்குள் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரித்து,  அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) வைகளைக்கொண்டு சந்தோசப்ப்படுகின்றனரோ ( அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்). ” –அல் குர்ஆன். 30:32.
நபிமார்கள் வரலாற்றில் நல்லதொரு படிப்பினை.   
“ அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது.  “ -அல் குர்ஆன். 12:111
யூனுஸ்(அலை) அவர்கள் அல்லாஹ் மீது கோபம் கொண்டு தான் சமூகத்தாரை விட்டு பிரிந்த ஓடினார்கள். அதன் விளைவாக மீன் வயிற்றில் வைக்கப்பட்டார்கள் இதற்கு காரணம் அல்லாஹ்வின் கட்டளைக்காக பொறுத்திருக்காமல் தானாக சமூதாயத்தை பிரிந்து சென்றதே. “நீங்கள் உங்கள் இறைவனுடைய கட்டளைக்காக பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது)மீன் வயிற்றில் சென்றவரைப்போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். ” -அல் குர்ஆன். 68:48.
அல்லாஹ் நாடியவரை தண்டிப்பான், தான் நாடியவரை மன்னிப்பான். இது அவனது நாட்டம். ஆனால் சமூதாயத்தை விட்டு பிரியவோ பிரிக்கவோ கூடாது. நமது கள்ள தவ்ஹீதுகள் இதைத்தான் செய்கிறார்கள்”. சுன்னத் ஜமாஅத் மக்கள் தர்கா சென்று இணைவைக்கிறார்கள்.  ஆகவே அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டவே “தவ்ஹீது இயக்கம்” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
யூனுஸ்(அலை) மக்கள்,  மனம்மாறி அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தியது போல் நமது மக்களும் இன்ஷாஅல்லாஹ் நாளை திருந்தலாம். அதுவரை அவர்களிடம் தொடர்ந்து நேர்வழியை உபதேசம் செய்து வருவதே நமது பணி. கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? அல் ஜமாத்தை உடைத்து கூறு போட்டு ஓடிப்போய் ஷைத்தான் ஜமாத்தை ஏற்படுத்தியதுதான்.
ஷுஐப் (அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள். “என் மக்களே! என்னால் இயன்றவரை உங்களைச் சீர்த்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களை சீர்திருத்தும் விசயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் இருக்கின்றேன். ” குர்ஆன். 11:88
கள்ளத் தவ்ஹீதுகள் கடைப்பிடிப்பது நபிமார்கள் வழிமுறையையா? அல்லது ஷைத்தானின் வழிமுறையா? கள்ளத் தவ்ஹீது கம்பெனியில் சேர்ந்துவிட்டால் உடனே சொர்கத்திற்கு அல்லாஹ் டிக்கெட் கொடுத்துவிடுவான் என்று நம்ப வைக்கிறார்கள். இது ஷைத்தான் காட்டும் வீண் நம்பிக்கை.
மூஸா (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை.
                       மூஸா (அலை) தன் சமூகத்தாரிடம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைவூட்டி எதிரிகளிடம் போர் புரியும்படி கட்டளை இடுகிறார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் மாறு செய்கிறார்கள் இதனால் மூஸா (அலை) அவர்கள் அம்மக்களுக்கு காபிர் பத்வா கொடுத்து அவர்களை பிரிக்கவில்லை.
ஏனெனில் மனிதர்களை தரம் பிரிக்கக்கூடியவன் படைத்த ரப்புல் ஆலமின் மட்டுமே, எனவே அல்லாஹ்விடமே பிரிக்கும் தீர்ப்பை வேண்டுகிறார்கள்.
“ என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரமில்லை, ஆகவே பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களை பிரித்துவிடுவாயாக! “ என்று பிரார்தித்து கூறினார். ” -அல் குர்ஆன். 5:25.
பாவியான மக்கள் என்று தெரிந்தும் அந்த மக்களை விட்டு பிரிந்து போகும் முடிவை அவர் எடுக்கவில்லை. அதிகாரமுள்ள அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றார்.  நபி(ஸல்) அவர்களும் மக்கத்து இனைவைப்பவர்களின் கொடுமைகளையெல்லாம் தாங்கி தொடர்ந்து அதே காபதுல்லாஹ்விலேயே தமது இபாதத்களை செய்கிறார்கள். அல்லாஹ் அனுமதி கொடுத்தபின்பே மதீனா ஹிஜ்ரத் செய்து அங்குதான் முதல் பள்ளி கட்டுகிறார்கள.
தனிப்பள்ளி கட்டுவதற்கு கள்ளத் தவ்ஹீதுகள் சொன்ன காரணம்,  “சுன்னத்தான முறையில் தொழவதற்கு முடியவில்லை, அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், எவ்வளவு நாட்கள் நாங்கள் அடி வாங்குவது. ஆகவே தனிப்பள்ளி. ”
அன்று மூஸா(அலை) மக்களுக்கும் இதேநிலைதான், ”அவர்களும் தங்களை பிர் அவ்ன், அவன் இனத்தவர்கள் துன்புறுத்துவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ” -அல் குர்ஆன். 20:94. ஆனாலும் அல்லாஹ் தனிப்பள்ளி கட்டி அவர்களை தொழச்சொல்லவில்லை.
“ நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக மிஸ்ரில் பல வீடுகளை அமைத்துக்கொண்டு,  உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். ” -அல் குர்ஆன். 10:87.
நபி(ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் அர்ஹம் (ரலி) அவர்கள் வீட்டிலேயே தொழுது வந்தனர்.
அல்லாஹ் கூறுகிறான் “நபிமார்கள் சரித்திரங்களில் நல்ல படிப்பினை உளளது. ” . இஸ்ரவேலர்களுக்கு சொன்ன செய்தியை இறுதி உம்மத்தின் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்ததின் காரணம், நாம் தவறு செய்துவிடக்கூடாது என்பதுதான். கள்ள தவ்ஹீத் கம்பெனிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. கம்பெனி புது Branchபிராஞ்ஜை எந்த ஊரில் தொடங்கலாம் என்பதே சிந்தனை.
மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க சென்றபின் சாமிரி என்பவன் முஸ்லிம்களை வழிகெடுத்து காளைக்கன்றை வழிபடச் சொல்கின்றான். திரும்பி வந்த மூஸா(அலை), இவர்கள் நிலையைப்பார்த்து கோபம் கொண்டு தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களைப்பிடித்து இழுக்கிறார்.
“ என் தாயின் மகனே! என் தலையையும் தாடியையும் இழுக்காதீர்! (அச்சமயம் நான் அவர்களை விட்டு விலகி இருந்தால்) “இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்திவிட்டீர். எனது வார்த்தைகளை கவனிக்கவில்லை” என்று நீங்கள் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்தே அவர்களுடன் இருந்தேன்” என்று கூறினார்.  –அல் குர்ஆன். 20:94.
மற்றொரு வசனத்தில், ”இந்த மக்கள் என்னை பலவீனப்படுத்தி என்னை கொலை செய்து விடவும் முற்பட்டனர். ” -அல் குர்ஆன். 7:150.
அயோக்கியர்களின் கடைசி புகலிடம்
                இரு நபிமார்களின் உரையாடல்களிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை, ஒன்றுபட்ட முஸ்லிம் சமூதாயம் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து அறியாமையின் காரணமாக இணைவைத்தாலும், தொடர்ந்து அம்மக்களிடம் இனைவைப்பின் தீமையை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். அவர்களை ஷைத்தானிடம் கையளித்துவிட்டு ஓடிவிடக்கூடாது.
ஆனால், நமது கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? ஓடுகாலி ஜமாஅத்,  தனிப்பள்ளி அதிலும் அடிதடி, போலிஸ்,  கோர்ட், வம்பு வழக்கு, வாய்தா, வசூல். இறுதியில் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியலிலும் புகுந்து விட்டார்கள்.
நமது அரசியல் கட்சிகள் பல உட் பிரிவு அமைப்புகளை வைத்திருப்பர்,  உதாரணமாக,  மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்று பலதரப்பு மக்களையும் இணைத்துக்கொள்வர். இதுபோல்,
இப்லீசும் தன் கட்சியை 72 குழுவாக பிரித்து நரகத்திற்கு தயார் செய்துள்ளான்.  தர்கா அணி, தரீக்கா அணி, பித்அத் அணி, பித்னா அணி. . .  இந்த வரிசையில் தவ்ஹீத் பிரிவுக்கு ஆள் பிடிக்கின்ற வேலையை மதனியிடமும், உலவியிடமும் ஒப்படைத்துள்ளான். வேலை வேகமாக நடக்கின்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கிதாபுத் தவ்ஹீத்-முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)
                    மூச்சிற்கு முன்னூறு தரம் தவ்ஹீத் கோஷம் போடும் மூடர்கள்,  “கிதாபுத் தவ்ஹீத்” நூல் எழுதி மதனி வகையறாக்களுக்கு அலிப் . . பே. . . சொல்லிக்கொடுத்த முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள்,  தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக தனி இயக்கம் எதையேனும் ஆரம்பித்தார்களா? அல்லது குறைந்த பட்சம் தொழுவதற்காகவாவது தனி தவ்ஹீத் பள்ளி கட்டி தொழுதார்களா? ஏதேனும் ஆதாரம் உண்டா?
அன்றிருந்த பித்அத் இமாம்களைப்பின்பற்றி அதே பள்ளியில் தான் தொழுதனர். யாருக்கும் காபிர் பத்வா அளித்ததில்லை. ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாத்தை பிரிக்கவில்லை. விடாது தொடர்ந்து நல்லுபதேசம் செய்து அம்மக்களை மாற்றினார்கள். தன்னை சாராத மக்களை காபிர் என்று கூறுகின்றார், என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டது.
இன்று மதனியும் உலவியும் பின்பற்றுவது இமாம் முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய தவ்ஹீத் அல்ல, மாறாக வழிகெட்ட முத்தசீலாக்களை.  இஸ்லாமிய நெடுஞ்சரித்திரத்தில் தங்களை தவ்ஹீதுகள் “அஹ்லுல் தவ்ஹீத்” என்று முதன்முதலில் அழைத்துக் கொண்டவர்கள். முத்தசீலாக்களே!.  இரண்டாவது நமது கள்ள தவ்ஹீதுகள்.
தவ்ஹீத் என்ற வார்த்தையை இமாம் அவர்கள்,  மக்கள் அமல் செய்வதற்காக அதாவது அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குங்கள், வேறு எவரிடமும் கை ஏந்தாதீர்கள். என்று அமல் செய்யச்சொன்ன வார்த்தை,  இன்று கள்ளக் தவ்ஹீத்களால் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, பேனர், பேட்ஜ், பேரணி, விளம்பரம் தலைவர் நிர்வாகிகள், என்று வளர்ந்து மல்டிநேசனல் கம்பெனியாக மாறிவிட்டது. இவர்கள் கள்ளத் தவ்ஹீதைச் சொல்லி கம்பெனி நடத்துவது வளைகுடா காசில்தான்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள்!.

                  ஏராளமான மார்க்க அறிஞர்கள் மக்கா, மதீனா சென்று மார்க்கத்தை கற்று தம் மக்களுக்கு நேர்வழியை காட்டியிருக்கிறார்கள். இமாம் அபூ ஹனிபா, இமாம் அஹமது இப்ன் ஹம்பல், இமாம் ஷாபி, இமாம் புகாரி, முஸ்லிம், ஷேக் அல்பானி (ரஹ்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மதீனாவில் கல்வி கற்றுச்சென்று தமது சொந்த நாட்டில் எவரேனும் தனி தவ்ஹீது இயக்கம் ஆரம்பித்து தனிப்பள்ளி கட்டியதாக வரலாறு உள்ளதா? இன்று குர்ஆனுக்கு அடுத்ததாக சிறப்பித்துக்கூறப்படும் புகாரி ஹதீஸை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் மக்கா, மதீனாவில் மார்க்கம் கற்றார்கள்.
ஹிஜ்ரி, 250 ல் தமது சொந்த நாடு (உஸ்பெஸ்கிஸ்தான்) புகாராவிற்கு திரும்புகிறார்கள்.  இமாம் அவர்களை வரவேற்க வரலாறு காணாத மக்கள் வெள்ளம். இவரது செல்வாக்கை கண்டு ஆட்சியாளர்களே அஞ்சும் அளவிற்கு மக்கள் கூட்டம். இதைப்பயன்படுத்தி தவ்ஹீதை சொல்கிறேன் என்று தனி இயக்கம் ஆரம்பித்து, தனிப்பள்ளி கட்டியிருக்கலாம், எதுவும் செய்யவில்லை.
மக்களை பிரிக்கும் மாபாதகத்தை உண்மையான எந்த ஆலிம்களும் செய்யமாட்டார்கள், நமது மதனியார், மதீனாவில் 4, 5 வருடத்தை கழித்துவிட்டதாலே தமிழ் நாட்டில் தனிக்கடையை திறந்துவிட்டார். இவருக்கு போட்டியாக உலவியார் பெரிய கம்பெனியை ஆரம்பித்தார்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு தெரியாத தவ்ஹீதா வீணாப்போன தீன்களுக்கு தெரிந்துவிட்டது.  புகாரி(ரஹ்) அவர்களும் தன் சொந்த செலவில் ஒன்றைகாட்டினார்கள். தனிப்பள்ளி அல்ல,  பிரயாணிகள் வந்து தங்கிச்செல்ல இலவச விடுதி.  தமது கைகளால் கல் எடுத்துவந்து கட்டினார்கள்.
இதைப்பார்த்த அவரது மாணவர், முஹம்மத் ஹாதிம் வராக் என்பவர், தான் கல் எடுத்து வருகிறேன், இவ்வேலையை என்னிடம் தாருங்கள் என்று கேட்டபொழுது, இமாம் அவர்கள் சொன்ன பதில், ” நாளை மறுமையில் இந்த வேலைக்காக அல்லாஹ்விடம் கூலி பெற ஆசைப்படுகிறேன். ”
நமது கள்ளத்தவ்ஹீதுகள் கட்டிய தனிப் பள்ளிகளுக்கும், அங்கு நடந்த அடிதடி. கோர்ட் கேஸ்களுக்கும் அல்லாஹ் இருமடங்கு கூலியை இன்ஷா அல்லாஹ் மறுமையில் கொடுப்பான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பள்ளிகளுக்காக முஸ்லிம்கள் சண்டையிட்டு அடித்துக்கொள்ளும் நாள் வராத வரை மறுமை நாள் வராது. ” அறிவிப்பவர்: அனஸ் இப்ன் மாலிக் (ரலி) ஆதாரம்:அபூதாவூது. . 449.
முஸ்லிம்கள் ஜாக்கிரதை!
                  இன்று ஜாக்ஹ் ன் துணை நிறுவனங்களாக 23 கம்பெனிகளின் லிஸ்டைப் போட்டு,  இந்தக்கம்பெனிகள் “தொய்வின்றி தொடர்ந்து நடத்த நிதி தாரீர்!” என்று கை ஏந்துவது ஏன்? ஏகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எந்த இயக்கத்தை ஏற்படுத்தினார்? எந்த ஜாமியாவை நடத்தி தனிப்பள்ளிகட்டி கூலி ஆலிம்களை சப்ளை செய்தார்? ஒன்றுமேயில்லை.
“ நபியே! நமது தூதை தெளிவாக எத்திவைப்பதை தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை!” -அல் குர்ஆன். 5:92
தொடர்ந்து தவ்ஹீதைச் சொல்லியே மக்கள் மனங்களை அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மாற்றினார்கள். தர்காக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கள்ளத் தவ்ஹீதுகள் செய்த சாதனை என்ன?
                      இவர்களின் தலைமைபீடமான கோட்டாரில் இன்றும்,  பாவா காசிம் ஒலியுல்லா இவர்களுக்கும் சேர்த்து அருள் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஒரே ஊரில் தர்கா வியாபாரம் ஒருபக்கம்,  தவ்ஹீத் வியாபாரம் மறு பக்கம் நடக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வான்கோழி பிடிக்கப்போகிறார்? இவர்கள் முஸ்லிம்களின் பொருளை பிடுங்கி இருளை விற்கின்றார்கள்.
Tri-Nitro-Toluene–ஜமாஅத்தில் ஈமானுக்கு வேட்டு.
     
      Pஜை யின் கள்ள தவ்ஹீது கம்பெனியைப்பற்றி நாம் அதிகம் சொல்ல தேவையில்லை. இவரது முரீதுகளைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இவரது தவ்ஹீது தரீக்காவை விளங்கிவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘குப்ர்’ பத்வா கொடுத்து,  கொடுத்து இறுதியில் இவரும்  குப்புற விழுந்துவிட்டார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை.  அன்று அரேபியா பொய்யன் முசைலமா “ஸஜ்ஜா” என்ற கிறித்துவ பெண்ணிடம் பங்கு போட்டு பங்கப்பட்டான். இந்தியப்பொய்யன் மிர்சா குலாம் காதியானி,  முஹம்மதி பேகம் என்ற பெண்ணிடம் மையல் கொண்டு மண்ணாப்போனான். இப்பொழுது தமிழ் நாட்டிலும் இம்முறை நடக்கின்றது.  “ஊருக்கே குறி சொன்ன பல்லி. . . கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி”.
பீர் அண்ணன் சொல்வதுதான் இஸ்லாம். சரி அவரது இயக்க முரிதுகள் அப்படியே பின்பற்றுவார்கள். சுருக்கமாகச்சொன்னால்,  “பீரண்ணன் கை பிரேதங்களாக” புரட்டப்படுகிறார்கள்.
முரீதுகளுக்கு இயக்க வெறியூட்டி மந்திரித்து விடுவதால் ஆங்காங்கு பள்ளிகளில் அடிதடி,  கடைசியில் கைத்துப்பாக்கியும் களத்திற்கு வந்து காவு வாங்கிவிட்டது. இதை திருவிடச்சேரி திருவிளையாடல் என்று கூறலாம். ஒரு முஸ்லிமை கொன்றால் நிரந்தர நரகம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களை நல்ல தவ்ஹீத் என்று சொல்லாமா? கள்ள தவ்ஹீத் என்றுதான் சொல்லமுடியும்.
ஒரே ஒரு வார்த்தை. . . .  ஓஹோன்னு வாழ்க்கை. !
                    அந்த வார்த்தை எது தெரியுமா? கலிமா ஷஹாதத். “அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலில்லாஹ்”

                  இந்த கலிமா சொன்ன மனிதர்களை அல்லாஹ்,  முஸ்லிம் என்ற அழகிய பெயரில் அழைக்கின்றான்.  ஆனால் கள்ள தவ்ஹீதுகளுக்கு முஸ்லிம் என்று சொல்வது கசப்பாக உளளது, அசிங்கப்படுகிறார்கள்,  முஸ்லிம் என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத்தாங்களே புதிதாக வைத்துக்கொண்ட,  “ஸலபி”,  “தவ்ஹீத்” பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள்.

                சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சர், Dr. முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈசா அவர்கள்,  ரியாத், இமாம் முஹம்மது பின் சவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தில் பேசும்பொழுது,  “சலபியிசத்தை இஸ்லாமாக மொழிபெயர்கக்கூடாது. ஸலபி என்பது எடுத்து நடக்கவேண்டிய ஒன்று. அது ஒரு பெயரல்ல. ” என்று கூறியது கவனிக்கத்தக்கது. ( Salabism should not be interpreted as islam. Salabism is only a descriptive approach, not a name”.  —Arab News. 13, Feb. 2012. )
இன்று ஸலபியும், தவ்ஹீதும் தனிப்பெயர் இயக்கங்களாகி மக்களை பிரிக்கின்றன.  முஸ்லிமும், தவ்ஹீதும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.  நாணயத்தில் கறை படிவதுபோல், ஒரு முஸ்லிமின் சொல்,  செயல்,  எண்ணங்களில்,  ஷிர்க்,  பித்அத், மாஷியத் போன்ற கறைகள் படியக்கூடும்.
              ஆயினும் எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் வெற்றி பெற்றுவிடுவார். உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ஆகவே முஸ்லிம் என்று அல்லாஹ் வைத்த பெயரிலேயே ஒன்றுபடுவோம். அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையையும் மன்னிப்பையும் வேண்டியவர்களாக முஸ்லிம்களாகவே மரணிப்போம்.
இயக்க ஆலிம்களின் தவ்ஹீத் எனும் பிரிவினை, செய்வினையில் சிக்கிவிடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
               “மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும், (“கலிமா தையிப்”) உறுதிமிக்க இவ்வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். . ” -அல் குர்ஆன். 14:27.
நன்றி: S. ஹலரத் அலி, ஜித்தா
ஆசிரியரின் சில வார்த்தைகள் நமக்கு உடன்படவில்லை என்பதால் நீக்கி இருக்கிறோம்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு

 
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
                         Post image for ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு  நான் தமிழகம் சென்றிருந்த போது ஒரு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பயானின் இறுதியில் ஒரு அமைப்பைச் சேர்ந்த பலர் ஒன்றினைந்து திட்டமிட்டு வந்து கேள்விகளைத் தொடுத்தனர். அதில் ஒருவர் ஆயிஷா(ரழி) அவர்களை நபி(சல்) அவர்கள் ஆறு (6) வயதில் மணந்ததாகவும், ஒன்பது (9) வயதில் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டதாகவும் புஹாரியில் ஹதீஸ் வருகின்றது. இதையும் ஏற்பீர்களா? எனக் கோட்டார். குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள தௌஹீத் அமைப்பைச் சேர்ந்தவர் அவர்.
 
                             எனவே, இது எந்த குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றது என நான் அவரிடம் கேட்டேன். இதை மனசாட்சி ஏற்குதா? நீங்கள் இந்த அடிப்படையில் செயற்படுவீர்களா? என அவர் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார். இடையில் மறித்த நான் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த நீங்கள் இப்போது மனசாட்சிக்கு முரண்படும் ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? நபி(சல்) அவர்கள் 9 வயது ஆயிஷா(ரழி) அவர்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை என் மனசாட்சி மறுக்கவே இல்லை. எனது தாய் திருமணம் முடிக்கும் போது அவருக்கு 14 வயது. அவரின் தாய் மணக்கும் போது அவருக்கு 12 வயது. இப்படி இருக்கும் போது 1400 வருடங்களுக்கு முன்னர் 9 வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது என்பது மனசாட்சி ஏற்க முடியாத கருத்து அல்ல எனக் கூறி மற்றும் சில நடைமுறை உதாரணங்களையும் கூறினேன்.
                     மக்களை எந்த மனநிலைக்கு இந்த கொள்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

هل النساء أكثر أهل النار

என்ற பெயரில் ஒருவர் ஒரு நூலை எழுதுகின்றார். பெண்கள் அதிகமாக நரகத்தில் இருப்பார்களா? என்பது இதன் அர்த்தமாகும். ஒரு பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் பெண்களை நரகில் அதிகமாகக் கண்டதாக கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும். பெண்ணிலைவாத சிந்தனையுடைய இந்த நூலாசிரியர் இந்த ஹதீஸை மறுக்கின்றார். அதற்கு அவர் வாதங்களை முன்வைக்கும் போது பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அந்த நல்ல சந்தர்ப்பத்தில் நீங்கள் அதிகமாக நரகத்தில் இருப்பீர்கள் என்ற மோசமான விடயத்தைக் கூறுவார்களா? இதை மனசாட்சி ஏற்குமா? அது வாழ்த்துக் கூறும் நேரமல்லவா? நல்ல பண்புள்ள நாகரீகமான நடத்தையுள்ள நபி(ஸல்) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு செய்தியைக் கூறி இருப்பார்களா? எனக் கேள்வி கேட்டு ஹதீஸை மறுக்கிறார்.
               குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடும். எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது. அந்த வழியில் போனால் எத்தகைய விபரீதமான கருத்துக்கள் ஏற்படும் என்பதை இந்தக் கட்டுரையூடாக விபரிக்க முனைகின்றேன்.
01. மீன் சாப்பிடலாமா?
இறந்தவைகள் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்காக   அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடுத்துள்ளான்.. .. .. .. .”   (2:173) (பார்க்க: 5:3, 16:115)
மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இறந்த பின்னரும் அவற்றை நாம் சாப்பிடுகின்றோம். நேரடியாகப் பார்த்தால் அது இந்த குர்ஆன் வசனத்திற்கு முரணானதாகும். எனினும் மீன், வெட்டுக்கிளி இரண்டும் இறந்த பின்னரும் சாப்பிடத்தக்கவை என ஹதீஸ் கூறுகின்றது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் மீன்கள் இறந்த பின்னரும் முஸ்லிம்களால் சாப்பிடப்பட்டு வருகின்றது.
அல்லாஹ் குர்ஆனில் இறந்தவை ஹராம் என பல இடங்களில் கூறியிருக்கும் போது இறந்து போன மீன்களை உண்ணலாம் என ஹதீஸில் எப்படி வரமுடியும்? இது குர்ஆனின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே என யாரும் வாதிடுவதில்லை. குர்ஆன் பொதுவாக ஹராம் எனக் கூறியிருந்தாலும் ஹதீஸும் வஹிதான். குர்ஆனில் பொதுவாகக் கூறப்பட்ட சட்டத்தில் விதிவிலக்களிக்கும் அதிகாரம் அல்லாஹ்வினாலே நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது குர்ஆனுக்கு முரண் அல்ல. குர்ஆன் கூறும் பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் மீனுக்கு விதிவிலக்களித்திருக்கிறது என்றுதான் அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்கின்றனர். இவ்வாறுதான் ஏனைய ஹதீஸ்களையும் விளங்க வேண்டும்.
02. தவறான பாலியல் உறவு:
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.” (2:223)
மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை இந்த ஹதீஸ்கள் முறையாக விளக்குகின்றன என்று எடுத்துக் கொள்வதா?
03. காபிரான சந்ததிக்கும் சொத்துரிமை
“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள்   விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11)
என அல்லாஹ் கூறுகின்றான். “அல் அவ்லாத்” என்றால் காபிரான பிள்ளைகளையும் குறிக்கும். இந்த அர்த்தத்தில்தான் குர்ஆனில் அவ்லாத் என்ற பதம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெற்ற பிள்ளை குப்ரில் இருந்தால் தாய்-தந்தையின் சொத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு வாரிசுரிமைச் சொத்து வழங்கப்படப் கூடாது. இவ்வாறே பிள்ளை முஸ்லிமாக இருந்து தந்தை காபிரா இருந்தால் பிள்ளையின் சொத்தில் தந்தைக்கும் பங்கு சேராது என ஹதீஸ் கூறுகின்றது. இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது. காபிராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் பிள்ளை பிள்ளைதான். மகன் காபிராகிவிட்டால் அவன் மகன் இல்லையென்றாகிவிடுமா? இந்த அடிப்படையில் காபிரான பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அறிவுக்கும், மனசாட்சிக்கும் முரண்படுகின்றது எனக் கூறி மறுக்க முடியுமா? அல்லது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்குள்ளது என்ற குர்ஆனின் சட்டத்திலிருந்து சொத்துக்காக கொலை செய்த வாரிசு, காபிரான வாரிசு போன்றவர்களுக்கு வாரிசுரிமையில் பங்கு இல்லை எனக் கூறி அவர்களை பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் விதிவிலக்களிக்கின்றது என்று எடுத்துக் கொள்வதா?
04. ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?
                 ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும். எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது.
“…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும்,   கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து   கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..” (4:24)
என்று முடிக்கின்றான். இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர். எனக் குர்ஆன் கூறிய பின்னர் ஹதீஸ் வேறு சிலரையும் சில சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத் தாகாகவர்கள் எனக் கூறுகின்றது. இப்போது குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுப்பதா? அல்லது ஹதீஸும் சட்ட ஆதாரம்தான் குர்ஆனின் சட்டத்தையும், ஹதீஸின் சட்டத்தையும் இணைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதா? எது நேர்வழி, எது வழிகேடு என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை மோத விடாமல் இரண்டையும் இணைத்து பொருள் கொள்வதுதானே நியாயமான நிலை? நேர்மையான விடை? இதை விட்டும் விலகிச் செல்வது நபி(சல்) அவர்களின் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்காத குற்றத்தில் அல்லவா நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்?
05. இந்த ஹதீஸ்களையும் மறுக்கலாமா? 
               சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கின்றதா? என்றொரு வாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மறுமையில் மக்கள் நரகத்தில் போடப்பட்ட பின்னர் நரகம் “இன்னும் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அல்லாஹ் தன் காலை நரகத்தில் வைத்து நரகத்தை நிரப்புவான் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தௌஹீத் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த ஹதீஸை வழிகேடர்கள் சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஏற்கனவே மறுத்துள்ளனர்.
“இதிலிருந்து இழிவுபடுத்தப்பட்டவனாகவும் சபிக்கப்பட்டவனாகவும் நீ வெளியேறி விடு!   அவர்களில் எவரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான்   நரகத்தை நிரப்புவேன்.” (7:18)
ஷைத்தானைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
“….ஜின்கள், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது   இரட்சகனின் வாக்கு பூர்த்தியாகி விட்டது.” (11:119)
மனிதர்கள், ஜின்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 32:13 ஆம் வசனம் கூறுகின்றது.
“உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றும் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை   நிரப்புவேன் (என்றும் கூறினான்.)” (38:85)
ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றியவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கடைசியில் அல்லாஹ்வின் கால் மூலம் தான் நரகம் நிரப்பப்படுவதாகக் கூறுகின்றது. எனவே, இந்த ஹதீஸ் மேற்குறிப்பிட்ட அத்தனை ஆயத்துக்களுக்கும் முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுத்தனர். இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் இந்த ஹதீஸை எப்படி எடுத்து வைக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொருத்தவரையில் குர்ஆனில் மூடலாக சொல்லப்பட்டதை ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது என்றுதான் எடுத்துக் கொள்வர். மாற்றமாக குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் பேசுவதாக அவர்கள் கருதுவதில்லை.
06. இந்த வாதத்தை முன்வைப்போர் மற்றும் பல ஹதீஸ்களையும் நிராகரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
            இறந்த ஒருவருக்காக உயிருடன் இருக்கும் ஒருவர் சில நிபந்தனைகளுடன் நோன்பு நோற்பது, ஸதகா கொடுப்பது, ஹஜ் செய்வது போன்ற கிரியைகளைச் செய்தால் அவை இறந்தவருக்கு சேரும் என்பது ஹதீஸ்கள் தரும் தகவலாகும். ஆனால் குர்ஆனில் மறுமை நாள் பற்றிக் கூறும் போது
“ஒவ்வொரு ஆத்தமாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கான கூலி…” (20:15)
வழங்குவதற்கான நாளாகக் கூறுகின்றது. அந்தந்த ஆத்மா சம்பாதித்தவைக்குத்தான் கூலி   கொடுக்கப்படும் என குர்ஆன் கூறுகின்றது.
“மேலும், நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் அவனுக்குக் காண்பிக்கப்படும்.”   (53:40)
“நிச்சயமாக இது உங்களுக்குரிய கூலியாக இருக்கிறது. மேலும், உங்களது முயற்சி   நன்றி பாராட்டத்தக்கது (என்றும் கூறப்படும்.)” (76:22)
“(அவை) தமது முயற்சி குறித்து திருப்தியுடனிருக்கும்.” (88:9)
“எனவே, எவர் நம்பிக்கை கொண்டவராக நல்லறங்கள் புரிகின்றாரோ அவரது முயற்சி   நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் (அதை) அவருக்காகப் பதியக் கூடியவர்களாக   இருக்கின்றோம்.” (21:94)
“மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை.” (53:39)
மேற்படி வசனங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்ததிற்குத்தான் கூலி வழங்கப்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது.
எனினும் ஹதீஸ்கள் நோன்பு, ஹஜ், ஸதகா என்பன சேரும் என்று கூறுகின்றன. இந்த ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுக்க நேரிடும். எனினும் சரியான பாதையில் உள்ளோர் இவற்றை முரண்பாடாக அல்லாமல் விதிவிலக்காக எடுத்துக் கொள்வர்.
07. இவ்வாறே அல் குர்ஆனின் பல வசனங்கள் ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் எனக் கூறுகின்றது.
” (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே   சம்பாதித்துக் கொள்கின்றது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.”   (6:164)
“எவர் நேர்வழியில் செல்கிறாரோ அவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். யார்   வழிகேட்டில் செல்கிறானோ அவன் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறான். எந்தவோர்   ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. மேலும் நாம், எந்த ஒரு தூதரையும்   அனுப்பாது (எவரையும்) வேதனை செய்வோராக இருந்ததில்லை.” (17:15)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. (பாவச்) சுமை கனத்த   ஆன்மா அதைச் சுமப்பதற்கு (எவரையேனும்) அழைத்த போதிலும், (அழைக் கப்பட்டவன்)   உறவினராக இருந்த போதிலும் அதிலிருந்து எதையும் அவன்மீது சுமத்தப்பட மாட்டாது.”   (35:18)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. பின்பு உங்கள் அனைவரின்   மீளுதலும் உங்கள் இரட்சகன் பாலே உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை   பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை   நன்கறிந்தவன்.” (39:7)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.” (53:38)
இத்தனை வசனங்களும் இந்தக் கருத்தைக் கூறுகின்றன. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் உலகில் ஒருவர் பிறருக்கு அநீதமிழைத்தால் அநீதமிழைத்தவரின் நன்மைகள் பாதிக்கப் பட்டவனுக்கு வழங்கப்படும். அவனது நன்மைகள் முடிந்துவிட்டால் பாதிக்கப்பட்டவனின் பாவத்தை அநீதமிழைக்கப்பட்டவன் சுமக்க நேரிடும் என வந்துள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வோர் இந்த ஹதீஸ்களையும் தமது உரைகளிலும், எழுத்துக்களிலும் பயன்படுத்துகின்றனர். இது எப்படி என்றுதான் புரியவில்லை.
ஒருவர் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது எனப் பல வசனங்கள் கூறுகின்றன. இதே வேளை,
“நிச்சயமாக அவர்கள் தமது (பாவச்) சுமைகளையும், அத்துடன் (தாம் வழி கெடுத்தோரின்   பாவச்) சுமைகளைத் தமது சுமைகளுடன் சுமப்பர். மறுமை நாளில் அவர்கள் இட்டுக்கட்டிக்   கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவர்.” (29:13)
இந்த வசனம் சிலர் சிலரின் பாவத்தை சுமப்பர் என்று வருகின்றது. குர்ஆன் ஆயத்துக்களின் வெளிப்படையான அர்த்தம் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகத் தென்படுகின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டு ஆயத்துக்களையும் நிராகரிப்பதா? அல்லது ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பதா? அல்லது இரண்டையும் முரண்படாமல் விளங்கி இரண்டையும் ஏற்பதா? எனக் கோட்டால் மூன்றாவது முடிவைத்தான் ஒரு உண்மை முஸ்லிம் எடுப்பான். அந்த அடிப்படையில்தான் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விடயத்திலும் செயற்பட வேண்டும். ஹதீஸும் வஹீ என்பதால் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது போல் தோன்றினாலும் ஆழமாக அவதானித்தால் ஏதேனும் ஒரு உடன்பாடு இருக்கும். அந்த உடன்பாட்டைக் கண்டுபிடித்து இரண்டையும் இணைத்து விளக்கம் சொல்ல வேண்டும்;. உடன்பாட்டைக் காணமுடியாவிட்டால் நான் புரிந்த கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது எனக் கருதி அந்த ஹதீஸ் குறித்து மௌனம் காக்க வேண்டும்.
எனவே, குர்ஆனை ஏற்று ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்த விடுபட்டு இரண்டையும் இணைத்து விளக்கம் கொள்ளும் நேரான பாதையில் பயணிப்போமாக!..
உண்மை உதயம் மாதஇதழ்எஸ்.எச்.எம். இஸ்மாயில்


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தடம் புரழும் டிஎன்டிஜே

 

அஸ்ஸலாமு அலைக்கும் 
04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தென்காசி வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர் மற்றும் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்.  மக்தூம் ஞானியார் தர்கா நிர்வாகி, டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல், செயலாளர் கல்பட்டான் செய்யது , கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் கலந்தரி அய்யூப்கான் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தினர்  பங்கெடுத்தனர். 
 
      07.11.2011 அன்று காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கடையநல்லூர் காயிதே மில்லத் திட­ல் நடத்துவதற்கு மேற்சொன்ன மூன்று அமைப்பினரும் அனுமதி கோரினர். தத்தமது வாதங்களை காரசாரமாக எடுத்து வைத்தனர்.



         அல்லாஹ்விடத்தில்தான் அருள் பா­லிக்க, கிருபை செய்யக் கேட்க வேண்டும் என்று சொன்னது போக தர்கா வழிபாட்டை ஆதரிக்கிற இமாமுக்குப் பின்னால் தொழுவது கூடாது. நாங்கள் தொழமாட்டோம் என்றும் எங்கள் கொள்கைக்கு எதிரானவர்களுடைய ப்ளாட்பார்மில் (கட்டுப்பாட்டில்) மேடையேறவோ செயல்படவோ மாட்டோம் என்றெல்லாம் கொள்கை முழுக்கமிட்டவர்கள் 23.08.2011 அன்று கோட்டாட்சித் தலைவர் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சியர் (RDO) மக்தூம் ஞானியார் தர்கா டிரஸ்டி இஸ்மாயில் திடல் ஏற்பாடு செய்து தருவார். டிஎன்டிஜே நோன்புப் பெருநாள் தொழுகை நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னபோது அதை டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் யூசுப் அ­ மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல் ஆகியோர் ஒத்துக் கொண்டனர்.
அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக தர்ஹா டிரஸ்டிக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போனார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்று (04.11.2011) டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல் கோட்டாட்சித் தலைவரைப் பார்த்து "அய்யா பார்த்து எங்களுக்கு கிருபை செய்யுங்கள். எங்களுக்கு வேறு வழியே இல்லை" என்று கெஞ்சிக் கூத்தாடினார். 
ஆக அல்லாஹ். அவுலி­யா எல்லாம் தாண்டி RDO அய்யா பார்த்து கிருபை செய்யுங்கள் என்று கேட்கும் அளவிற்கு தடம் புரண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் மூன்று அமைப்பிற்கும் பொதுவாக சீட்டுக் குலுக்கிப் போடுகிறோம். எந்த அமைப்பிற்குக் கிடைக்கிறதோ அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காயிதே மில்லத் திட­ல் நடத்திக் கொள்ளட்டும் என்று ஆர்டிஓ சொன்ன போது டிஎன்டிஜே மாவட்டப் பொருளாளர் நேசனல் சாகுல் "சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவெடுப்பதெல்லாம் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிரானது. ஆதலால் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்"என்றார். மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் தர்கா டிரஸ்டியும் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவெடுப்பதை ஏற்றுக் கொண்டனர். போயும் போயும் தர்காவாதிக்குத் தெரிந்த (மார்க்க) அறிவு கூட தவ்ஹீத் கொள்கையின் மொத்தக் குத்தகைதாரர்களுக்குத் தெரியவில்லை.
 
இறைவா ! உள்ளங்களை திருப்புபவனே!  எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால்  திருப்புவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் )
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) குர்ஆன் 3 : 8
அல்லாஹ் போதுமானவன்.
 

2 comments:

  1. b36-rounded.png

    அஸ்ஸலாமு அலைக்கும் 

    TNTJ மாநில தலைவரின் பதிலை உங்களுக்கு அப்படியே தருகின்றேன்.

    தவறுகள் திருத்தப்பட வேண்டும் - எனது தவறு ஸலாம் சொல்லாதது என்று எண்ணினேன். உடனே மறு மின்னஞ்சலில் ஸலாத்தினை எத்திவைத்தேன், முகமன் கூறுவதில் ஸலாம் தான் சிறந்தது என்று பிரச்சாரம் செய்யும் எங்கள் அண்ணன் ஸலாத்திற்கு பதில் கூட சொல்லமாட்டார் , இன்ஷா அல்லாஹ் நாம் அவருக்கு சொல்வதெல்லாம் ஒன்று மட்டும்தான் இறைவனை நீங்கள் அஞ்சும் விதத்தில் அஞ்சுங்கள். 

    இதில் என் மீது என்ன சட்டநடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எனது பதில் ஒன்றுதான் அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். ஈமானில் உறுதியுடன் தான் தவறை சுட்டிக் காட்டினேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சுட்டிக் காட்டுவோம்; இஸ்லாத்தில் மனோ இச்சைக்கு அனுமதி இல்லை தௌஹீதின் பெயரால் செய்யும் தவறுகள் சுட்டிக்கட்டச்சொன்னது உங்கள் ஆன்லைன் பி ஜே இணையதளம். 

    நாம் தெளிவாக புரிந்து கொண்ட மார்க்கம் இஸ்லாம். எப்போது ஸலாமிற்கு பதில் இல்லையோ அப்போது அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது நாம் நன்கு அறிந்து இனியும் உங்களுக்கு மெயில் அனுப்புவேன் என்று எண்ணியது தவறு. 

    மனிதன் தவறிழைப்பவன் என்ற திருமறை வாக்கு உண்மையானது.

    என்றும் உண்மையுடன் 
    ஹிதாயத்.


    பி.ஜைனுல் ஆபிதீன் pjtntj@gmail.com
    12:47 PM (10 hours ago)

    to me 
    எனக்கு இது போன்ற கிறுக்குத் தனங்களை இனி அனுப்பக் கூடாது. உன்னிடம் இருந்துஎந்த மெயிலும் எனக்கு வரக்கூடாது. இனி உன்னிடம் இருந்து மெயில் வந்தால் சட்டப்படி அது குற்றம் என்பதையும் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கண்டிப்புடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Reply
     
     
  2. anon36.png
    கச்சி சிக்கந்தர்Nov 6, 2011 01:07 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கருணையுள்ளம் கொண்ட வல்லவன் அல்லாஹுவின் நல்லருள் நம் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ..ஆமின் ....சகோதரர் தாங்களின் பதிவு உண்மைதான் கடையநல்லூர் தவ்ஹீத்வாதிகள் சிதறடிக்கப்பட்டு இப்படி ஆனதற்கு மூலகாரணமானவர் நமது அண்ணன் அவர்கள்தான் மர்யம் பள்ளிவாசலை கண்டிராத அண்ணன் அவர்கள் மர்யம் பள்ளிவாசல் பிரச்சினை பற்றி விசாரணை நடத்த வந்து விட்டு அதைபற்றி வாய்திறக்காமல் 4 .. கிளைகள் தான் பிரச்சினைக்கு தீர்வு என்று ஒரு அற்புதமான தீர்ப்பு சொல்லிவிட்டு கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்தை புதிய வடிவில் வளர்த்து வருகிறார் என்பது உண்மை அண்ணனின் தம்பிகளாக இருந்த நாம் இவரின் உலக விசயத்தில் தடுமாற்றத்தை புரிந்தும் அறிந்தும் கொண்டோம் இன்னும் அய்யா பார்த்து எங்களுக்கு கிருபை "செய்யுங்கள். எங்களுக்கு வேறு வழியே இல்லை ஒரு தர்ஹாவாதியுடன் உறவுவைத்த தவ்ஹீத் தங்கக்கட்டிகள் மிதம் உள்ள தம்பிகள் அறிந்திட இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் பொறுத்திருந்துதான் பார்க்க வோண்டும் by ...கச்சி சிக்கந்தர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard