New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரபஞ்சத்தின் தோற்றம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
பிரபஞ்சத்தின் தோற்றம்
Permalink  
 


பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா?

 
images?q=tbn:ANd9GcQK4lFnHZeG4X07WIHF7d-IXVbWtVsWGu8xCeGGohQA4O-_iftVQw
எல்லா மதங்களிலும் பிரபஞ்சம் ,உயிர்கள் படைப்பு என்பதை கடவுள் நடத்தி ,காத்து பரிபாலித்து வருகிறார் என்பது நம்பிக்கை.ஆகவே பிரபஞ்சத்தின் தோற்றத்தின் இப்போதை அங்கீகரிகப் பட்ட கொள்கையான பெரு வெடிப்பு(விரிவாக்க)  கொள்கை எங்கள் மத புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது என்ற பிரச்சாரம் இதன் அடிப்படையிலானது..
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, பிறப்பு: ஜனவரி 8, 1942), ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்;இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருங்குழி (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)த, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தது.
பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design 2010) என்பது முதன்மையான இயற்பியலாளர் ஸ்டீபன் ஃகாக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவால் எழுதப்பட்ட ஒரு பொதுமக்கள் அறிவியல் நூல் ஆகும். இந்த நூலில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதிக்கப்படுகிறது. இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூல் வாதிக்கிறது. இந்த நூலின் விமர்சங்களுக்கு பதில் தருகையில், ஃகாக்கிங், "இறை இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறையை தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்..
இப்பதிவில் இந்த க்ராண்ட் டிசைன் என்னும் புத்தக்த்தின் மின் பிரதி,ஒலி வடிவம் வழங்குகிறோம்.இத்தள‌த்தில் இப்புத்த்கம் மட்டுமல்லாமல் ப்ல புத்தக்ங்கள்,ஆவணப் படங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூமியின் தோற்றம் பற்றிய கொள்கைகளின் பரிணாம் வளர்ச்சியை வரலாற்று கண்ணோட்டத்துடன் கொண்டு செல்லும் விதம் மிக அருமை.

பல பிரபஞ்சங்கள் இப்போதும் இயற்கை விதிகளின் படி தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது.ஆகவே நமது பிரபஞ்சம் மட்டு கடவுளால் படைக்கப் படவேண்டிய அவசியம் இல்லை.புவி ஈர்ப்பு விசை போல்,இயக்கவியல் விதிகள் போல் பிரபஞ்ச தோற்றமும் ஒரு இயல்பான இயற்கையின் நியதியே என்று முடிக்கிறார். 
அந்த இயற்கை விதிகளை உருவாக்கியவர்தான் எங்கள் இறைவன் என்று கூறாமல் இருப்பர்களா என்ன?.படைப்பதும்,படைப்பு விதிகளை மட்டும் உருவாக்கி தானாக் படைப்பு விளைவதை வேடிக்கை பார்ப்பதும் ஒன்றா?. அறிவியல் வளர வளர இறைவனின் சக்தியாக (செயலாக)கூறப் படுவது சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் நாம் கூறுவது.
இப்புத்தகம் பற்றிய ஒரு காணொளி.இரண்டாம் அத்தியாயம் பற்றி ஒரு சுருக்கமான் கண்ணோட்டம்.நன்றாக் இருக்கிறது.கண்டு மகிழுங்கள்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரிணாமம்&அதன் மாதிரி செயல்முறைகளும்

 
images?q=tbn:ANd9GcQHBM6EwNWCD0OOh8JrnkoKFDdqG4LK9l0vq2KQK7T-dQTVNoRW
நாம் பரிணாமம் தொடர்பாக சில விஷயங்களை விவாதித்து வருகிறோம்.நடைமுறை வாழ்வில் பரிணாம் வளர்ச்சியை பல விஷயங்களிலும் உணர்கிறோம்.இந்த பரிணாம செயல்முறை[evolutionary computation] என்பது உயிரியல் பரிணாம்த்தின்[biological evolution] மாதிரியாகும்.இயற்கை ஒவ்வொரு கால்கட்டத்தில் வாழும் உயிரினங்களின் மீது சில நடைமுறைகளை செயல் படுத்தி அவைகளை வேறு ஒன்றாக் மாற்றுகிறது என்பதே பரிணாமம்  ஆகும்.
இந்த நடைமுறை  ஒரு செயல்முறை[algorithm] ஆக மாற்றி பரிணாம் கணிதம் என்னும் புதிய துறையை தோற்றுவித்த்னர் அறிவியலாளர்கள். இம்மாதிரி மூலம் பல கடினமான கணித சிக்கல்களை தீர்க்க முடியும்.இது பற்றிய ஒரு காணொளி.
இந்த விஷயங்களில் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறேன்.

1. உயிரியல் பரிணாம்த்தின் மாதிரி பரிணாம கணிதம்[programming technique that mimics biological evolution as a problem-solving strategy.]

2.பரிணாம கணிதம் வெற்றிகரமாக் பலவித பயன் பாட்டுக்கு உதவுகிறது.இக்கணிதத்தின் முழுப் பயனையும் வழக்கம் போல் இந்தியர்கள் பயன்படுத்துகிறோம்.

நமது கான்பூர் ஐ ஐடி ன் பரிணாம் கணித ஆய்வக்த்தின் சுட்டி.

http://www.iitk.ac.in/kangal/index.shtml
3.பரிணாம கணிதத்தின் மூலம் பரிணாம்த்தின் பல் கேள்விகள் விடையளிக்க முடியும். சீரற்ற செயல்கள் மூலம் ஒரு கடினமான் அமைப்பு உருவாக முடியும் எனில் படைப்பவன் தேவையில்லை. இயற்கையே செய்ய முடியும்.
இயற்கையை யார் உருவாக்கினார் என்பது பரிணாம் கணிதத்தில் தேவையற்றது. 

பரிணாமம்&அதன் மாதிரி செயல்முறைகளும்

 
images?q=tbn:ANd9GcQHBM6EwNWCD0OOh8JrnkoKFDdqG4LK9l0vq2KQK7T-dQTVNoRW
நாம் பரிணாமம் தொடர்பாக சில விஷயங்களை விவாதித்து வருகிறோம்.நடைமுறை வாழ்வில் பரிணாம் வளர்ச்சியை பல விஷயங்களிலும் உணர்கிறோம்.இந்த பரிணாம செயல்முறை[evolutionary computation] என்பது உயிரியல் பரிணாம்த்தின்[biological evolution] மாதிரியாகும்.இயற்கை ஒவ்வொரு கால்கட்டத்தில் வாழும் உயிரினங்களின் மீது சில நடைமுறைகளை செயல் படுத்தி அவைகளை வேறு ஒன்றாக் மாற்றுகிறது என்பதே பரிணாமம்  ஆகும்.
இந்த நடைமுறை  ஒரு செயல்முறை[algorithm] ஆக மாற்றி பரிணாம் கணிதம் என்னும் புதிய துறையை தோற்றுவித்த்னர் அறிவியலாளர்கள். இம்மாதிரி மூலம் பல கடினமான கணித சிக்கல்களை தீர்க்க முடியும்.இது பற்றிய ஒரு காணொளி.
இந்த விஷயங்களில் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறேன்.

1. உயிரியல் பரிணாம்த்தின் மாதிரி பரிணாம கணிதம்[programming technique that mimics biological evolution as a problem-solving strategy.]

2.பரிணாம கணிதம் வெற்றிகரமாக் பலவித பயன் பாட்டுக்கு உதவுகிறது.இக்கணிதத்தின் முழுப் பயனையும் வழக்கம் போல் இந்தியர்கள் பயன்படுத்துகிறோம்.

நமது கான்பூர் ஐ ஐடி ன் பரிணாம் கணித ஆய்வக்த்தின் சுட்டி.

http://www.iitk.ac.in/kangal/index.shtml
3.பரிணாம கணிதத்தின் மூலம் பரிணாம்த்தின் பல் கேள்விகள் விடையளிக்க முடியும். சீரற்ற செயல்கள் மூலம் ஒரு கடினமான் அமைப்பு உருவாக முடியும் எனில் படைப்பவன் தேவையில்லை. இயற்கையே செய்ய முடியும்.
இயற்கையை யார் உருவாக்கினார் என்பது பரிணாம் கணிதத்தில் தேவையற்றது. 
 
 
 
http://citeseerx.ist.psu.edu/viewdoc/summary?doi=10.1.1.73.4550

இயற்கையே கடினமான் சிக்கலான படைப்புகளை சில சீரற்ற செயல்கள் மூலம் தொடர்ந்து செய்ய‌ முடியும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.பரிணாம் கணிதம் மூலம் ஒரு கடிகாரம் அமைக்கப் படுகின்றது.

Evolution IS a Blind Watchmaker

 
 
 
 
http://citeseerx.ist.psu.edu/viewdoc/summary?doi=10.1.1.73.4550

இயற்கையே கடினமான் சிக்கலான படைப்புகளை சில சீரற்ற செயல்கள் மூலம் தொடர்ந்து செய்ய‌ முடியும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.பரிணாம் கணிதம் மூலம் ஒரு கடிகாரம் அமைக்கப் படுகின்றது.

Evolution IS a Blind Watchmaker


 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரிணாமத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்: உண்மையில் கூறியது யார்?

 


தமிழ் பதிவுலகில் எவராவது பரிணாமம் பற்றி எழுதும் போது பல் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் பின்னூட்டத்தில் இது எப்படி அது எப்படி என்று சில கேள்விகளை வைக்கிறார்கள்.அடேயப்பா எவ்வளவு அறிவு இவர்களுக்கு!!!!!!!!!!! என்று மெய் மறக்க வேண்டம்.அக்கேள்விகள் அனைத்துமே நாம் ஏற்கெனவே பார்த்த கிறித்த படைப்புக் கொள்கையாளர்களின் கருத்து ஆகும்.இத்தளத்தில் உள்ல பல கருத்துகளை கேள்விகளாக் பார்த்து இருக்க்லாம்.


இன்னொருவரின் கேள்விகளை எடுத்தாழும் போது இது அவர்களின் கருத்து என்று குறிப்பிட வேண்டும் என்ற ஆய்வுலக ஒழுக்கம் கற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.


இவை பரிணாம்த்தின் மீது வைக்கப் படும் பொதுவான் குற்றச்சாட்டுகளாகும். நமக்கு எதிர்கருத்துகளையும் வெளியிடும் பக்குவம் இருக்கிறது.இக்கருத்துகளை அளித்த தளம் கீழே சுட்டியாக அளிக்கப் பட்டுள்ளது.அவர்களுக்கு ந்மது மன்மார்ந்த நன்றிகள்.


நீலத்தில் உள்ளவை அவர்களின் கருத்துகளுக்கும் நமது பதில்கள். 


***************************

(1) .When the mathematical laws of probability are applied to the known facts of biology, the odds against the incredible, organized complexity of our biological world evolving through blind chance, plus time, are so astronomical in size that, for all practical purposes, evolution is mathematically impossible. In fact, the more we discover about the incredibly intricate, organized complexity of the biological world which exists at the molecular level, the more amazing it is that the evolutionist can actually believe it is all a product of pure blind chance over time. The "intelligent design" model, based upon a Divine Creator, makes much more sense.


கணிதத்தின் நிகழ்தகவு கோட்பாடுகளின் படி பரிணாம் விதிகளின் படியான  மாற்றம் நடப்ப‌தற்கான வாய்ப்பு மிக குறைவு. கடவுள்(கள்) படைத்தார்(கள்) என்பது எளிதாக் புரியும்,விளக்கும் ,ஏற்றுக் கொள்ளும் வண்ணம் உள்ளது.
****************
எவாலுயுனரி கம்யூட்டேஷன்[evolutionary computation] இது நடப்பது நிஜம் என்று நிரூபித்து விட்டது!!!!!!!!!!!!!


************************
 (2) There is a complete and systematic lack of transitional life-forms (i.e., "missing links") between the various kinds of life in the fossil record. This would not be the case if the theory of evolution was a valid hypothesis. Sometimes evolutionists have tried to make a case that this or that newly-discovered fossil was a "missing link," but all such attempts have ended in failure. No missing links have ever been discovered among the voluminous number of fossils found so far.


இடைப்பட்ட உயிரின‌ங்களின் படிமங்கள் இல்லை.


இதற்கான் பதிலை அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை.இன்னும் அதிக படிமங்கள் கண்டு பிடிக்கும் போது இவ்(பிடி)வாதம் இருக்காது.பரிணாம கொள்கையே பல வேவ்வேறு காலத்தில் வாழ்ந்த ,மறைந்த உயிர்களின்  படிமங்களை விளக்கும் ஒரு கொள்கை.இதனை ன்னும் அதிகம் பொருந்துமாறு விளக்கும் வேறு அறிவியல் கொள்கை வரும் வரை பரிணாமே நிலைக்கும்.
************************************
 (3) The fossil record also shows a sudden, inexplicable appearance of a wide variety of both simple and complex life-forms. However, if evolution were true, there would only be a very gradual increase in both the numbers and complexity of such organisms.  Although it is true that we have not uncovered 100% of the fossil record, a voluminous amount of fossils have been discovered — certainly enough for basic trends or patterns to be ascertained. Therefore, certain, fundamental conclusions can be drawn, based upon the available known evidence. And so far, at least, the theory of evolution is not supported by the known facts.  Unfortunately, evolutionary scientists sometimes will try to support their opinions with erroneous assumptions and outright misrepresentations of the actual fossil record. For instance, sometimes fossils have not been found in the order or progression that was anticipated, so the “record” was conveniently changed to conform with their evolutionary presuppositions. Nevertheless, it is a scientific fact that the fossil record does not show a gradual increase in both the numbers and complexity of organisms, thereby disproving the theory of evolution.  Sometimes it is said that the fossil record shows a sudden generation of species at random points in time throughout the fossil record, and that such data poses a challenge to the theory of creation just as much as it does to the theory of evolution.  However, there can be various explanations for such questions that may arise during the course of any detailed investigation. For instance, many scientists believe that the evidence of the fossil record is simply the result of Noah’s Flood because their empirical demonstrations and flood models can explain all of the data sufficiently.  Furthermore, it is possible that the fossil record is actually a reflection of two catastrophic floods, i.e., the destruction of Satan’s pre-Adamite kingdom on earth before the creation of Adam and Eve, and then later in time, the destruction of Adam and Eve’s descendants except for Noah and his family.  Moreover, the genetic code will allow a limited amount of change and variation and mutation to occur in organisms before inducing sterility and/or death. Therefore, we should expect to see a certain amount of variation in life-forms, perhaps even new species; the Bible only limits changes in life-forms to basic “types” or “kinds.” That is why, for example, you will never see a mouse mutate into an elephant, or a cat mutate into a horse, no matter how much time you allow in the evolutionary equation. 


ஒரே சம்யத்தில் எளிய அமைப்பும் ,சிக்கலான‌ அமைப்பும் உள்ள உயிரினங்கள் பரிணாம மர விளக்க்த்தின் படி உருவாகின்றன.


பரிணாமம் பற்றிய தவறான புரிதல்.வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
*******************************************
(4.)The genetic code in any given living cell provides extremely detailed instructions to that cell concerning its inherited characteristics and attributes, so it will allow only a limited amount of change and variation to occur without inducing sterilization or death. Accordingly, the genetic code will not allow, under any circumstances, the drastic changes and continuous mutations demanded by the theory of evolution. Moreover, there is no evidence of gradually-changing DNA codes in nature that would allow periodic mutations to occur which would gradually transform a given type of organism, over long periods of time, into a completely different type of organism. Instead, organisms can mutate only so much before insurmountable DNA limits are reached. That is what the evidence demonstrates. Therefore, as noted previously, you will never see a mouse mutate into an elephant no matter how much time you allow for the alleged evolutionary process to occur. So, even though limited mutations occur in organisms, it is impossible for drastic or unlimited mutations, i.e., evolution, to occur..


சிறிய மாற்றங்கள் எல்லைகளுக்கு உட்பட்டவை.ஆகவே ஒரு  உயிரினம் இன்னொரு உயிரினமாக் பரிணமிக்க முடியாது.


இது அவர்களின் கருத்தியல்!!!!!!!!!!!!!!!!.
*****************************************************************************
 
(5) .Evolutionists frequently take the biological evidence proving that living organisms do experience a limited amount of change and variation, and then fallaciously expand such evidence to prove something entirely different and unsupportable by the evidence, namely, the alleged existence of unlimited change and mutation in life-forms. Obviously such an argument violates logic because it goes way beyond the evidence at hand.
 Likewise, when evolutionists argue that similarity in structure or function among various organisms proves evolution, they are mistaken. In actuality, similarity of structure or function proves nothing more than similarity of structure or function because it is very reasonable to assume that a Divine Creator would utilize a single master plan for creation that would consistently adhere to a limited number of basic variations.   



பிரபஞ்சத்தில் 0.001% உள்ள பூமியில்,பிரபஞ்சத் தோற்றத்தின்[13.7 பில்லியன் ஆண்டு] 99.99% நேரம் கடந்து தோன்றிய மனிதனுக்கு[2இலட்சம் ஆண்டு] மட்டுமே மதம்,கொள்கை எல்லாம்.இதில் தோன்றிய 99.9% உயிரினங்கள் அழிந்து விட்டன. நகைச்சுவையாக் இல்லை!!!!!!!!!!!!!.
படைப்பாளரின் வினத்திறமை[efficiency] மெச்சும் படி இல்லையேஏஏஏஏஏ!!!!!!!!!!
********************************************************************
6.Evolutionists can not even begin to explain how the alleged evolutionary mechanism in living cells operates. Although modern biochemistry can explain complex chemical changes and mutations in living organisms, there is no explanation about how or why an inexorable drive for ever-greater organized complexity would exist in living organisms if evolution were true. This problem is further compounded when the laws of mathematical probability are applied to the evolutionary equation.
 Furthermore, you would have to develop rational explanations for various animals and insects which possess delicately-balanced attributes that would have destroyed them if they had tried to develop such attributes through the slow, gradual process of evolutionary change. Instead, it required a Creator to bring such life-forms into existence in a mere moment of time.  


வாழும் உயிரினங்களில் பரிணாம் மாற்றம் குறித்து ஆய்வுகள் செய்யப் படுவது இல்லை.


அதாவது விட்டாலாச்சார்ய படம் போல் ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் கண்முண் மாறினால் நம்புவார்களோ.Doubting Thomas!!!!!!!!!!!!!

**********************************************************
7.Evolutionists can not explain how life could spontaneously generate from non-life, nor can they duplicate such a feat despite their impressive scientific knowledge and sophisticated laboratory equipment.


லூயிஸ் பாஸ்டியரின் கருத்து: உயிரற்றவற்றில் இருந்து உயிர் தோன்ற முடியாது.


இதற்கும் பரிணாம்த்திற்கும் தொடர்பு இல்லை.
******************************************************
 
 (8) Evolutionists can not explain how and why there is something in the universe rather than absolute nothingness, and not even they really believe that something could spontaneously generate from nothing. By “absolute nothingness,” I mean the complete absence of both energy and matter; a completely pure vacuum that is totally devoid of anything. Obviously the evolutionist faces an insurmountable challenge to his theory in this regard.


சூனயத்தில் இருந்து தானாக ஒன்றும் வர முடியாது.பெருவெடிப்பை நடத்தியவர் இறைவன்.


பல பெரும் பெரும் வெடிப்புகளும் இதனால்தான் ஏற்படுகின்றன!!!!!!!!!!!!!!!!
***************************************************************************

  (9) Recent discoveries in astronomy also prove that the universe was created, not evolved. For example, the presence of microwave radiation throughout the universe proves, according to scientists, the validity of the "big-bang" theory of creation while disproving the possibility that the universe has always existed in a relatively-unchanged condition.  Likewise, the fact that the galaxies of stars are shooting out into space away from each other indicate a common point of origin at the beginning of their existence, once again proving the theory of creation.  Evolutionists sometimes argue the universe is "oscillating" in nature, meaning that the galaxies of stars expand and contract continuously in the amount of space they occupy, thereby restarting the process of evolution at the beginning of each expansion cycle.  But this is impossible because astronomers have discovered that the galaxies of stars in our universe, which are shooting out into space away from each other, have less than ten percent of the mass which is necessary to generate sufficient gravity-pull to cause them to slow down and then contract upon each other. So, obviously the theory of an oscillating, evolutionary universe can not possibly be true. Although the Bible provides very few details concerning the original creation of our universe, it does declare that God’s Kingdom will increase or expand in size forever (Isa. 9:7) (Isa. 60:22). That means there will always be an increasing number of planets forming within our universe forever, i.e., an ever-expanding universe which is consistent with the "big bang" theory mentioned previously.  Likewise, increasing numbers of ordinary human beings will populate those increasing numbers of planets forever and forever. Christian believers who will reign with Christ over the entire universe will be a fixed and unchanging number of individuals. But, ordinary human beings who survive the “Sheep and Goats” Judgment after Armageddon is over, and those who survive the Great White Throne Judgment after the Millennial Reign of Christ is over, will procreate offspring forever so that God’s Kingdom can expand in size forever.  An ever-expanding Kingdom and an ever-expanding universe, that is what the Bible predicts for the future. Not a steady-state condition where the universe is static in nature; not an oscillating condition where the universe continually expands and then contracts upon itself; but an ever-expanding universe forever. That is what the Bible predicts.


பிரபஞ்சம் எப்போதும் இருக்கவில்லை.தோன்றியது என்றே பெரு வெடிப்பு கூறுகிறது..

நம் பிரபஞ்சத்திற்கு முன் பல் பிரபஞ்சங்கள் இருப்பதாக் கூட ஒரு கொள்கை கூறுகிறது.


பெருவெடிப்பே ஒரு கருந்துளையில் இருந்து ஏற்பட்டதாக்வும் கூறப்படுகின்றது.
***********************************************************************************************
 (10) One of the most basic, fundamental laws of science, the Second Law of Thermodynamics, states that things in nature always tend to dissolve and breakdown with the passage of time, not grow more complex which would be the case if evolution were true.  Obviously this law of science is most devastating to the theory of evolution, and desperate arguments which postulate thatdeveloping cells and organisms could have used the energy of the sun to overcome this tendency towards breakdown are absolutely irrelevantDeveloping cells and organisms simply would not have had the ability to capture and utilize such energy in the manner that fully-developed organisms can. 


இது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை பொய்யாக்குகிறது.


இது முன் பதிவின் காணொளியில் பொய்யாகப் பட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

(11) Evolutionists postulate that life began eons ago in a primordial soup of organic chemicals involving an extremely complex process that culminated in the creation of a living cell. The only problem is that oxygen would have destroyed the would-be cell in its early stages of development. So evolutionists have also postulated that the earth's atmosphere once upon a time contained only methane, ammonia, and water vapor — but no free oxygen. Unfortunately, for the evolutionist, recent scientific discoveries have proven conclusively that no such atmosphere ever existed. (See, e.g., "Oxygen in the Precambrian Atmosphere" by Harry Clemmey and Nick Badham in the March 1982 issue of GEOLOGY.) In other words, evolution could not have even started.


முதல் ஒரு செல் உயிர் எப்படி தோன்றியது என்று விளக்க முடியவில்லை.


இப்போது விளக்க முடியவில்லை.
******************************************************************************************************************************
 (12) Sometimes it is taught that evolution is true because the development of the fetus within the womb of the human mother allegedly goes through all the stages of evolution, from single cell to multi-cell to fish-like to ape-like to human. However, such a theory is based upon sketches proven to be fraudulent by the Jena University Court, and is unequivocally and absolutely rejected by modern embryologists. Thus, the infamous Recapitulation Theory is a complete fraud!  Moreover, although vestigial appendages sometimes appear temporarily during the embryonic stages of development for human beings and animals, that is not the issue at hand. For instance, just because human baby embryos go through a stage in which they grow, and then eventually lose, a set of gills, does not mean that they look like fish or that they are fish at that point in time. Naturally, there are going to be similarities at times among biological life-forms because the Divine Creator used a common biological structure and basis for creating all of them.


கருவில் வளரும் பல் உயிரினங்கள் ஒரே விதமான‌ நிலைகளை கடந்து செல்கின்றன என்பது தவறு.


அவசியமில்லை.
****************************************************************************************************************************
 (13) Over the years there have been a number of frauds and blunders perpetrated in an attempt to deceive the general public into believing there are "missing links" to be found in the fossil record. These frauds and blunders have included:  * Eoanthropus dawsoni, popularly know as the "Piltdown Man"  * Arachaeopteryx, sometimes called the "Piltdown Chicken"  * "The Orgueil Fall"  * Hesperopithecus haroldcookii, meaning "Western ape-man"  * Pithecanthropus erectus, meaning "erect ape-man"  * Australopithicines, meaning "Southern Apes." The sad reality is that school children often are still taught that the aforementioned frauds prove the theory of evolution beyond any doubt.  Sometimes people will say that science and religion do not meet within the realm of human existence because they touch on completely different, unrelated levels of reality. Hence the assertion that science can not prove or disprove the validity of religious belief. Meanwhile, others will claim that science actually disproves the validity of Christian faith.  However, my immediate response to all such assertions is this. If the evidence of history, science, ethics, values and psychology did not prove the truth claims of biblical Christianity beyond any reasonable doubt for an intellectually-honest person, I would not even be a Christian.  Because "true faith" is belief based upon reason and factual evidence and intellectual honesty; it is not blind, emotional faith based upon hypotheses and presuppositions which arbitrarily exclude vital evidence and/or alternative explanations that are more consistent with the organized complexity of our world and universe.  That is why Jesus said that we should love God with all of our heart, and soul and MIND, meaning we should love God, Ultimate Reality and Ultimate Truth, on all levels of human existence, including the emotional, the intellectual and the spiritual. Thus, our worldview of reality should encompass the entirety of human experience in a comprehensive coherent whole. For a more-detailed analysis of scientific evidence concerning the evolution-creation debate, there are a number of very excellent books and articles on the subject which are available at Christian book stores and many scientific Christian websites, including the following sites which I recommend...


பரிணாம்த்தின் சான்றுகள் என்று பல விஞ்ஞானிகள் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


விஞ்ஞானிகள் அனைவரும் யோக்கியர் அல்ல.பொய்யர்கள் எல்லா குழுவிலும் இருக்கிறார்கள்.

************************************************************************************************************* 

http://www.frankcaw.com/science.html
******************************************

ஆகவே கேள்வி எழுப்பும் நண்பர்கள் அவர்களின் ஆய்வுகளில் இருந்து முதல் முறையாக கேட்கிறார்களா,இல்லை வேறு கட்டுரைகளில் இருந்து கேட்கிறார்களா என்பது மிக முக்கியம்.இது ஒரு வகை கருத்து திருட்டே ஆகும். பரிணாம் விஞ்ஞானிகளுக்கும் ,கிறித்தவ படைப்புக் கொள்கை விஞ்ஞானிகளுக்கும் இடையே மிகப் பெரிய ஆய்வுலக போர் பரிணாம்ம் குறித்து நடை பெறுகிறது.இதற்கு இரு குழுவினரும் ஆய்வகங்கள் அமைத்து,ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு தங்கள் கருத்துகளை ஆவணப் படுத்துகின்றனர். சவுதியில் இது போன்ற செயல்கள் செய்ய கொஞ்சம் செல்வு செய்து பிறகு விமர்சிக்க ஆரம்பித்தால் நலம். 

டிஸ்கவெரி இன்ஸ்டிட்யூட்[கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களின் ஆய்வகம் Discovery Institute] அவர்களின் கருத்து கொண்ட காணொளி உபயோகப் படுத்தியதற்காக டன் எக்ஸ்டஸ்க்கும் அனுப்பிய சட்ட ரீதியான நடவடிக்கை குறித்த காணொளி.

 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

நோவா கப்பல் கதை உண்மையா?

 

இப்பதிவு நோவா காலத்தின் வெள்ளப் பெருக்கு நட்ந்ததா என்று அலசுகிறது.யூத,கிறித்தவ மத புத்தகங்களின் படி உல்க முழுவதும் இறைவன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி நோவாவின் குடும்பம் தவிர அனைவரையும் அழிக்கிறார்.அவர்கள் மட்டும் ஒரு கப்பல் கட்டி ,அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு ஜோடி கப்பலில் ஏற்றி தப்பித்ததாக கூறப்படுகின்றது.இஸ்லாமிய மத அறிவியலின் தந்தை மௌரிஸ் புகைல் இது உலக முழுவதும் ஏற்படவில்லை அப்பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.

ஜாகிர் நாயக்கின் காணொளியிலும் அவர் அப்ப்குதியில் மட்டுமே ஏற்பட்டது என்று கூறுவதை பாருங்கள்.நல்லவேளை குரானில் கால அளவு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுவது அருமையான‌ நகைச்சுவை. ஒரு இடத்தில் நட்ந்தால் எதற்கு கப்பல்? அதில் ஒவொரு பிராணியும் எதற்கு ஏற்ற வேண்டும்?.உண்மை என்னவெனில் குரான் வழக்கம் போல் இந்த விஷய்த்தையும் பொத்தாம் பொதுவாக கூறிவிட்டது.

அகழ்வாராய்ச்சி முடிவுகள் மாறு படுவதால் எப்படியாவது தப்பிக்க வேண்டுமல்லவா?.அதற்கு இப்படி கூறித் தபிக்க முயற்சி.அப்போது பழைய குரான் விளக்கங்களில் இப்படி கூறப்பட்டிருக்கிறதா?.

இத்னை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இப்படி பல விளக்கங்கள் எப்படியாவது அறிவியலுக்கு முரண்படாமல் அளிக்க வேண்டும் என்பதே ஜாகிர் நாயக்கின் கொள்கை.

இப்படி அவர்கள் கூறுவது அப்ப்குதியில்(எங்கே?) மட்டும் நடந்தது என்றால்  இத்னை அகழ்வாராய்சி ஏதாவது நிரூபிக்குமா? அப்படி ஏதாவது ஆய்வு நடை பெற்று உள்ளதா? என்று கேட்க கூடாது.



சொன்னது சரியா?
***********************
குரான் 11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:)“உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
********************
11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்”என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
********************

71:26அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:27“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
*****************************************

இப்போது 


பூமி=நோவாவின் நாடு மட்டும்


வானம்=நோவாவின் நாட்டின் மேல் உள்ள மேகங்கள்

உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

மிக சிறந்த குரான் விளக்கங்களை எழுதிய இபின் கதிர் (C.E 1301–1373) என்ன கூறுகிறார்.

http://www.islamawareness.net/Prophets/nuh.html

இபின் கதிர் உலக முழுவதும் வெள்ளப் பெருக்கு என்றே கூறுகிறார்.இது குறித்த இன்னொரு கட்டுரை.

http://answering-islam.org/Shamoun/flood.htm

*************************************************************

சரி கிறித்தவர்களின் மத புத்தக்த்தின் தெளிவான கூற்றான உலகளாவிய வெள்ளம் என்பதை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.. படைப்புக் கொள்கையாளர்கள் பரிணாம்த்திற்கு ஆதாரமாக காட்டப் ப‌டும் படிமங்கள்(fossils) நோவாவின் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டது என்று சமாளிப்பது உண்டு. இவை அனைத்தும் இக்காணொளியில் ஆய்வு செய்கின்றனர்.
கண்டு களியுங்கள்.

 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.

இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.

மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.

விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.

‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி.

வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது.

ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.

இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.

கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார்.

கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”.

போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

கலீலியோ

‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.”

ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை.

ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே!

இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம்.

எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?

விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை.

ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்!

அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.

மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள்.

இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள்.

பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது.

இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

கோபர்நிகஸ்

அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.

இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.

தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம்  உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.

கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.

விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.

கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.

எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?

தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”

எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!

‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

புருணோ

போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட்  இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான்.

குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது.

இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும்.

‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு.

மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள்.

எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.

ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது?

விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு.

இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.

இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள்.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

சிம்சன்

ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு.

தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம்.

இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள்.

ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது.

ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை.

ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை.

ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும்.

__________________________________________



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard