இதே வழியில்தான் HIV, எயிட்ஸ் வியாதியை இயேசு சுகமாக்குவதை காண்கிறேன் என்றார் மோகன் சி.லாசரஸ் அந்த வாலிபனை மேடைக்கழைத்தார் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் அவரின் வியாதி சுகமாகவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதே! இந்த சாட்சியில் இயேசு பொய்யரா? மோகன் சி.லாசரஸ் பொய்யரா? நிச்சயம் இயேசு பொய் பேசமாட்டார். பொய்பேச தேவன் ஒரு மனிதன் அல்ல என்று வேதம் சாட்சியிருக்கிறது. இந்த துணிகரமான பொய்யை பகிரங்கமாக மேடையில் பேசின மோகன் சி.லாசரஸ் அவர்கள் இதுவரை யாருக்கும் பதில் கூறவில்லையே! இப்படிப்பட்டபொய்யர்களோடு சில டாக்டர்களும் நாலுமாவடியில் துணை நிற்பது அவமானத்திலும் அவமானமாகும். இத்தனை தெளிவான ஆதாரங்கள் இருப்பதால்தான் இவர் பொய்யர் என்ற கடினமான வார்த்தையை துணிந்து உபயோகிக்கிறேன். இதில் சமரசம் செய்ய அல்லது சமாளிக்க வழியில்லையே!
இந்த படத்தில் காணும் சகோதரியையும் அவர் குடும்பத்தையும் நானும் அறிவேன். இவருக்காக ஜெபிக்க எனக்கும் இவர் சார்பில் ஜெபகுறிப்பு அனுப்பியிருந்தார்கள். இரண்டு கிட்னியும் கெட்டுவிட்டது. அதை மருந்தினால் சுகப்படுத்த முடியாது. கிட்னியை அகற்றிவிட்டு வேறு கிட்னி வைத்தால் மட்டுமே இந்த சகோதரி பிழைப்பார். இந்த நிலையில் நாலுமாவடியில் உள்ள திறப்பின் வாசல் என்ற பெயரில்மோகன் சி.லாசரஸ் அவர்கள் நடத்தும் ஜெபகூட்டத்தில் பங்கெடுத்து அங்கு ஜெபித்தபின் சிறுநீரக (கிட்னி) கோளாறை முற்றிலும் மாற்றி பூரண சுகத்தை கொடுத்தார் என்று மோகன் சி.லாசரஸ்தான் நடத்தும் இயேசு விடுவிக்கிறார்பத்திரிக்கையில் 2007 நவம்பர் மாத இதழில் பக்கம் 4ல் இந்த சகோதரியிடம் புகைப்படம் கேட்டுவாங்கி தன் புகழை விளம்பரப்படுத்த சாட்சி வெளியிட்டிருக்கிறார். நாலுமாவடியிலிருந்து ஜெபித்து நாசரேத் வந்து சேர்ந்த எட்டாவது நாளில் 8ம் தேதி டிசம்பர் 2007 இந்த சகோதரி அதே கிட்னி கோளாறால் இறந்துப்போனார். இது இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் வெளிவராத சாட்சியாகும். பூரணசுகம் தந்ததாக இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் இவர் சாட்சி வெளிவந்த ஒருவாரத்தில் இந்த சகோதரி இறந்துப்போனது ஏன்? என்று மோகன் சி.லாசரஸ் அவர்களை கேட்டுப்பாருங்கள். அதை அந்த சகோதரியைத்தான் கேட்கவேண்டும் என்று கூறுவார்.
HIV, எயிட்ஸ் வியாதியஸ்தனை கர்த்தர் சுகமாக்கிவிட்டார் என்று கூறினீர்களே அவன் சுகம் பெறவில்லையே? அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டுப்பாருங்கள். அதற்கு இந்த பதிலைஎழுதமாட்டார் அமைதிதான் பதில். அதை பொய் என்று இதுவரை மோகன் சி.லாசரஸ் ஒத்துக்கொள்ளவில்லை! இதுவரை ஏராளமான பொய்சாட்சிகள் இவர் பத்திரிக்கையில் வெளிவந்தது, அதற்கு அந்த சாட்சி எழுதியவரின்மேல்தான் பழி போடுவார். ஒவ்வொருவரையும் பரிசோதித்து லேப்பரிசோதனை செய்து வெளியிடுவது எனக்கு இயலாதகாரியம் என்று கூறி சமாளிக்கிறார். இயேசு சுகப்படுத்திவிட்டர். HIV கிருமிகள் பூமியில் இறங்குவதை காண்கிறேன் என்று கூறியது பொய்யில்லை? இயேசு எயிட்ஸ் வியாதியை சுகமாக்கி விட்டார் என்று கூறியது பொய்யில்லையா? இப்படி எழுதுகிறதற்காக வாசகர்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். மறுபடியும் மறுபடியும் இப்படி எழுதுவது எனக்கு அருவருப்பாகதான் இருக்கிறது. அவர்தான் தான் கூறிய அந்தசாட்சி பொய் என்று வெளிப்படையாக கூற தயங்குகிறாரே! அவரை ஏன் திரும்ப வறுத்தெடுக்குகிறீர்கள்? என்று சிலர் எனக்கு எழுதுகிறார்கள். ஆனால் பொய் பேச இந்த ஊழியர்களுக்கு கூச்சமோ! பயமோ! உண்டாகவில்லையே! அதனால்தான் திரும்ப எழுதி ஞாபகப்படுத்துகிறேன். ஜனங்கள் இன்னும் நம்புகிறார்களே! இப்படிப்பட்டபொய்சாட்சிகளை உங்களில் சிலர் ரசிக்கலாம். நம் கர்த்தரால் இவைகளை தாங்கிக்கொள்ளமுடியாது. இந்த பொய்கள் தொடர்வது என்னைப் போன்றவர்களால் சகிக்க முடியவில்லை. வசனம் அறியாதவர்கள்ஆறுதல் என்ற பெயரில் ஏமார்ந்துபோகிறார்களே! என்னால் இயன்றவரை என் எழுத்துப்பணி மூலமாக விழிப்புணர்வு உண்டாக்கமுடியுமா என்று முயலுகிறேன். அவ்வளவுதான் ஜெபிப்போ
கேள்வி:சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் ஜெபத்தில் பொய்யாய் பெயர்களையும், வியாதியின் பெயரையும் கூறும் நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களை தன் GEM மிஷனரி பணதளத்தின் கட்டிட திறப்புவிழாவுக்கு அழைத்துள்ளாரே? இப்போது மோகன் சி.லாசரஸ்ஸின் உபதேசத்தை அவர் சரி என்கிறாரோ? வைராக்கிய உபதேசம் கொண்டவர் என்று பெயர் பெற்ற சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் கூடவா தவறான உபதேசத்தை சமரசம் (Compromise) செய்து கொண்டார்? யாரையும் நம்பமுடியவில்லையே! ஊழியக்காரர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது!.
பதில்:சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ஒரு டெக்னிக் வைத்துள்ளார். தனக்கு மக்கள் அனுப்பும் காணிக்கையை FMPB, GEM, BYM போன்ற மிஷனரி ஸ்தாபனங்களுக்கு பணம் அனுப்பி பல மிஷனரிகளை தாங்க, நிறைய பணத்தை அள்ளிவீசி அவர்கள் வாயை அடைத்துபோடுகிறார். பணம் பெற்ற ஸ்தாபனங்கள் அவர் அனுப்பின பெருந்தொகைக்கு நன்றி காண்பிக்கவும், தொடர்ந்து அவரிடமிருந்து பணம் பெறவும் மோகன் சி.லாசரஸ் அவர்களை இப்படிப்பட்ட திறப்புவிழா கூட்டங்களுக்கு அழைத்து கவுரவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
சகோ.அகஸ்டின் ஜெபகுமார்
மேடையில் ஜெபத்தில் பெயர் அழைப்பது, மேடையில் நடிகர்கள், அரசியல்வாதிகளை, நக்மா போன்ற ஏமாற்று சாட்சிகளைக் கூறும் நடிகைகளை மோகன் சி.லாசரஸ் தன் மேடையில் அமர்த்தி தானும் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சாட்சி கூற வைக்கிறார்கள். இதைசகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் தன் ஒவ்வொரு கூட்டத்திலும் பகிரங்கமாக கண்டித்தவர்தான் இப்போது ஏனோ சில மாற்றங்கள் காணப்படுகிறது. ஜெபத்தில் பொய் பேசும் மோகன் சி.லாசரஸின் தவறான பல விஷயங்களை பிட்டுபிட்டு வைத்து பகிரங்கமாக கண்டித்தவர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார். ஆனால் இனிமேல் முன்புபோல் மோகன் சி.லாசரஸ்போன்றவர்களின் மேடையில் நடப்பிக்கும் மந்திரவாத ஊழியங்களைக்குறித்து தவறு என்று அவர் கூறமாட்டார் என்று பலர் நினைக்க தொடங்கிவிட்டனர். மேலும் அவரின் தவறான உபதேசங்களை அவர் இனி கண்டுக் கொள்ளவுமாட்டார். மக்களுக்கு இவர்களைக்குறித்து பேசி விழிப்புணர்வு உண்டாக்கியதைக்கூட தவறு என்று கூறி, தன் செய்த பிரசங்கத்தை வாபஸ் வாங்குவாரா என்பதும் தெரியவில்லை என்று ஒரு வாசகர் எழுதுகிறார். ஸ்தாபனங்கள் வளரவளர தவறான உபதேசத்தை சமரசம் செய்துக் கொள்வார் என்பது சகோ.அகஸ்டின் ஜெபகுமார் விஷயத்தில் நிச்சயமாக உண்டாகாது என்பதை எதிர்ப்பார்போம்.
ஊழியக்காரர்களைக்குறித்து நீங்கள் குறிப்பிட்டதுபோல உங்களின் பயம் நியாயமானதே! என்ன செய்ய? இயேசுகிறிஸ்து சொன்னார் இது கடைசி காலம்! எச்சரிக்கையாக இருங்கள்! ஜெபிப்போம்.
மோகன் சி லாசரஸ். இவரைப் பற்றி விரிவான அறிமுகம் தேவையிருக்காது என்றே தோன்றுகிறது. நம்மில் பெரும்பாலனோர்களுக்கும் அறிமுகமானவர்தான் இவர். ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவம் குறித்து பிரச்சாரம் செய்து வருபவர். மதபோதகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கூடங்குளம் அணுஉலை விவகாரம், மீனவர்களின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசுபவர். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பவரை புதிய தரிசனம் இதழுக்காக நாம் சந்தித்த போது.
கிறிஸ்தவத்திற்குள்ளும் சாதி வேறுபாடுகள் பலமாக வேரூன்றி இருக்கின்றதே இதற்கு தீர்வுதான் என்ன?
வேதப் புத்தகம் தான் கிறிஸ்தவர்களுக்கு மூல ஆதாரம். இந்த உணர்வு கிறிஸ்தவர்களுக்கு வேண்டும். வசனத்தின்படி வாழ்வது மட்டுமே தீர்வு. கடவுள் எந்த இடத்திலும் சாதியை விரும்பவில்லை. வேதாகமத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை என்று. எல்லோருமே தேவனால் படைக்கப்பட்டவர்கள் என்கின்ற போதுஅதில் சாதிப் பாகுபாடுகள் பார்ப்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது. உன்னிடத்தில் அன்பு கூறுவது போல் பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்கிறார் கடவுள். ஆனால் சாதி குறித்த எண்ணங்கள் தலைதூக்கும் போது நாம் நம்மை உயர்வாகவும், வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களைத் தாழ்வாகவும் பார்க்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதை கடவுள் மன்னிக்கவே மாட்டார். சாதிய உணர்வுகளை விட்டு வெளியே வந்தவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள். மற்ற படி வேதாகமம் வாசிப்பதாலோ, ஆலயத்திற்குச் செல்வதாலோ மட்டும் யாரும் கிறிஸ்துவுக்குள் வந்து விட முடியாது. முதலில் இதுகுறித்து எல்லா சபைகளிலும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். சமூகச் சீர்கேடுகள் குறித்து சபைகளில் பேசப்பட வேண்டும். கிறிஸ்தவ போதகர்கள் சாதிப்பாகுபாடுகள் ஒரு பாவம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். பெயரளவில் இல்லாமல் முழுமையாக கிறிஸ்துவுக்குள் வரவேண்டும் என்று விரும்பு கிறவர்கள் நிச்சயம் சாதிய எண்ணங்களை விட்டு வெளியில் வந்தே தீர வேண்டும்.
சபைகளில் பேசப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள். இன்றைக்கு சபைகளே சாதிய வாரியாக பிரிந்து தானே காணப்படுகின்றன. சபையின் பெயரைச் சொன்னாலே அவரின் சாதியைச் சொல்லிவிட முடியும் என்பது போன்ற ஒரு நிலைமை தானே இங்கிருக்கிறது.
அது தான் மிகவும் வேதனையான விசயம். நான் ஒரு ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரே பிரிவைச் சேர்ந்த சபைகள் இரண்டு இருந்தன. என்ன என்று விசாரித்த போது இரண்டும் இரண்டு வேறுவேறு சாதியினருக்கு என்று கூறினர். நான் அவர்களிடம் கேட்டேன் இந்த ஆலயத்தில் எந்த ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்து வருவார் என்று. உண்மை என்னவென்றால் இரண்டுக்குமே ஆண்டவர் செல்ல மாட்டார். காரணம் கடவுள் சாதியை வெறுப்பவர். சாதியக் கண்ணோட்டத்தோடு சபைகள் நடத்தப்படுவது மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்தில் இருந்து அவர்கள் வெளியில் வந்தே ஆக வேண்டும். நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று நம்புவோம்.
கடவுளின் பெயரைச் சொல்லி அப் பாவிப் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது வாடிக்கையாகி விட்டது. கிறிஸ்தவ மதபோதகர்களும் கூட மக்களை ஏமாற்றி விட்டதாக ஊட கங்களில் செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கி விட்டன. தனிமனித வாழ்வில் ஒழுக்கமில்லாத ஒரு மனிதனால் எப்படி ஒரு கூட்டத்தை வழி நடத்த இயலும்.
எல்லா மதங்களிலும் மதத் தலைவர்கள் இருக்கிறார்கள் அதில் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக் கிறார்கள். அதுபோலத்தான் கிறிஸ்தவ மதபோதகர்களும். இயேசு கிறிஸ்துவே இதுகுறித்து குறிப்பிடுகிறார். உண்மையும், உத்தமுமான ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள் பொல்லாத ஊழியக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார். கடவுளை உணர்ந்து அவரால் அழைக்கப்பட்டு வந்த வர்கள் யாரும் தவறு செய்வதில்லை. இதை ஒரு தொழிலாக நினைத்து இதில் நிறைய வருமானம் வரும் என்று நினைத்துக் கொண்டு அந்த எண்ணங்களோடு வருபவர்கள் தான் இப்படித் தவறு செய்கிறார்கள். நூறு விழுக்காடு நல்ல போதகர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்க இயலாது. மக்கள் தான் யார் சரியானவர்கள், யார் தவறானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மதபோதகராக உங்கள் வார்த்தை களைக் கேட்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் இன்றைக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கிறார்கள். அவர் களுக்காக ஜெபம் செய்வது என்பதைத் தாண்டி, அவர்களுக்கும், அவர்களின் மூலமாக இந்த சமூகத்திற்கும் நீங்கள் இதுவரை செய்த தொண்டு என்ன. இனிமேல் செய்ய இருப்பவை என்ன
ஆண்டவரை நேசிப்பது, ஜெபம் செய்வது என்பது ஒரு வாழ்க்கை. மறுபுறம் நாம் இந்த சமூகத்தின் ஓர் அங்கம். விவிலியம் சொல்கிறது நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு உப்பாயிருக்கிறீர்கள் என்று. உப்பாயிருப்பது என்றால் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாய் இருப்பது என்று பொருள். அந்த விதத்தில் சமூகச் சீர்கேடுகளான சாதி, வரதட்சிணை போன்றவற்றிற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இது கிறிஸ்தவர்களுக்குள்ளும் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. முதலில் அவர்களை இதில் இருந்து வெளியில் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் இவர்கள் சமூகத்திற்கு உப்பாயிருக்க வேண்டியவர்கள். உப்பே சாரம் இல்லாமல் போய் விடின் அதனால் பலனேதும் இல்லை. இதுமட்டும் இல்லை கிறிஸ்தவர்களில் லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் என்று இருக்கிறார்கள். அது இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் கேடு என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். லஞ்சம், ஊழல் போன்ற பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து நாங்கள் போகின்ற இடங்களில் எல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதுபோல் வரதட்சிணைக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்களை தயார் செய்திருக்கிறோம். வரதட்சிணை வாங்காமல் தான் திருமணம் செய்வோம் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். சாதிய உணர்வுகள் மாறிக் கொண்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டால் சமூகத்தையும் மாற்ற இயலும்.
கிறிஸ்தவர்கள் மாறினால் சமூகத்தை மாற்ற இயலும் என்கிறீர்கள். வரதட்சிணைக்கு எதிராக இன்றைக்கு இளைஞர்கள் முன் வருவதாகச் சொன்னீர்கள் ஆனால் இன்றைக்கும் கூட குறிப்பாக கிறிஸ்தவர்கள் மத்தியில் கிலோ கணக்கில் தங்கமும், லட்சக்கணக்கில் பணமும் வரதட்சிணையாக வாங்கும் போக்கு உள்ளதே. இவர்களை யார் தண்டிப்பது. இயேசு கிறிஸ்துவா சட்டமா..
கேள்வியை முடித்ததுமே பலமாகச் சிரிக்கிறார். அவர்கள் ஆண்ட வருக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். காரணம் அவர்கள் வேதத்தை அறிந்தவர்கள். ஆண்டவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார். இவர்களை யார் தண்டிப்பது என்று கேட்கின்றீர்கள். வசனம் தான் நியாயம் தீர்க்கும். கடவுளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். எதை விதைக்கிறீர்களோ அதை அறுத்துத்தான் ஆக வேண்டும் என்கிறது வேதம். இதுபோன்ற பாவத்தை விதைப்பவர்கள் அதற்கான பலனை அறுவடை செய்து தான் தீர வேண்டும். அதுவும் இந்த உலகத்திலேயே அறுவடை செய்வார்கள்.
இயேசு கிறிஸ்து மட்டுமே கிறிஸ்தவர்களின் கடவுள் என்றால் அதற்குள் எதற்கு இத்தனைப் பிரிவுகள், ஞானஸ்னானம் கொடுப்பதில் தொடங்கி, சனிக்கிழமை வழிபாடு, உருவவழிபாடு, உருவமில்லா வழிபாடு என்று ஏன் இத்தனை வழிபாட்டு முறைகள், இதில் நாங்கள் தான் சரி என்ற சர்ச்சைகள் வேறு. இதற்கு காரணம் என்ன
இதை ஆரம்ப காலம் தொட்டே பார்க்க வேண்டும். ஆண்டவர் சபைகளைத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரே பிரிவாகத்தான் இருந்தார்கள் அதன்பின் அதற்குள் புகுந்த அரசியலால் இத்தனைப் பிரிவுகள் வந்துவிட்டன. எத்தனைப் பிரிவுகள் இருந்தாலும் எல்லோரும் வழிபடுவது இயேசு கிறிஸ்துவைத்தான். அவர்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதல்ல முக்கியம் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தான் முக்கியம்..
வேதாகமத்தில் இடம் பெற்றிருந்த விஞ்ஞானத் தோடு முரண்பாடான பல்வேறு செய்திகள் குறித்தும் இன்றைக்கு வெளிப்படையாக்க விவாதிக்கும் போக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட அதிகரித்துள்ளது. உதாரணமாக உலகம் தட்டை என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருந்தது என்பது போன்ற விசயங்கள்...
கேள்வியை முடிக்கும் முன்பாகவே தொடங்கி விடுகிறார். வேதாகமம் விஞ்ஞானத்தோடு எந்த இடத்திலும் முரண்படுவதாக நான் நினைக்க வில்லை.உலகம் தட்டை என்று விவிலயத்தில் கூறப்பட்டிருந்ததாக பலரும் பேசுகின்றனர். அப்படி இல்லை. பூமி உருண்டையின் மீது கர்த்தர் வீற்றிருக்கிறார் என்று சுமார் 4000 ஆண்டு களுக்குமுன்பே வேதாகமத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (ஏசாயா 40:22) ரத்தத்தில் தான் மனிதனின் உயிர் இருக்கின்றது என்பதை எழுபதுகளுக்குப் பின்தான் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதுவரை இதயத்தில் தான் மனிதனின் உயிர் இருப்பதாக நினைத்துக் கொண் டிருந்தனர். ஆனால் வேதாகமத்தில் (ஆதியாகமம் 9:4) மனிதனின் உயிர் ரத்தத்தில்தான் இருக்கின்றது என்று முன்பே கூறப்பட்டுள்ளது. ஆக விஞ்ஞானத்தின் பல விசயங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளவைதான்.
இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த உங்களின் பார்வை என்ன
கி.பி. எழுபதுகளில் ரோமானியப் படை கள் ஜெருசலேம் மீது தாக்குதல் நடத்தி அந்த தேசத்தை சின்னா பின்னமாக்கினர். இதுகுறித்து வேதாகமத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும் என்று கடவுள் சொன்னது போலவே அங்கே நடைபெற்றது. அதன் பின் கி.பி.100ல் அங்கே ஒரு யூதர்கள் கூட இல்லாதபடிக்கு அங்கே மிகப் பெரிய தாக்குதல்கள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு அந்த தேசத்தின் பெயரையே பாலஸ்தீனம் என்று மாற்றினார்கள். அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. மொழி மாற்றப்பட்டது. எல்லாம் மாற்றப்பட்டது. ஆனால் உலகத்தின் இறுதி நாட்களில் அந்த தேசத்தில் மீண்டும் யூதர்கள் குடியேறுவார்கள். தேவாலயம் கட்டப்படும். என்று வேதாகமத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 1948ல் மீண்டும் இஸ்ரேல் தேசம். முற்றிலும் அழிக்கப் பட்ட நகரம் இன்றைக்குக் கட்டப்பட்டு நிற் கிறது என்று சொன்னால் இது அனைத்துமே வேதாகமத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் தான். ஆக வேதாகமத்தில் சொல்லப்பட்டவை நடந்து கொண்டிருப்பதாகவே நான் இதைப் பார்க்கிறேன்.
இன்றைக்குப் பல்வேறு விதமான பிரச்சி னைகளுக்கும் மூல காரணம் மதுதான் என்கின்ற நிலையில் மதுவிலக்கு குறித்த உங்கள் பார்வை என்ன நீங்கள் மதுவுக்கு எதிரான செயல்பாடுகள் எதிலும் ஈடுபட்டி ருக்கிறீர்களா
தமிழகத்தில் ஏறத்தாழ 1.25 கோடி பேர் குடிகாரர்களாக மாறியுள்ளனர் என்கின்றது ஒரு புள்ளி விபரம். இதிலும் தினமும் குடிப்பவர்கள் 49 லட்சம் பேர் என்கின்ற அந்த புள்ளி விபரத்தை நினைக்கும் போது உள்ளபடியே மிகவும் கவலையாக உள்ளது. இங்கே நடைபெறக் கூடிய பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணமே மதுதான். பள்ளிக் குழந்தைகள் கூட மது அருந்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு துணை போவதுதான் மிகப்பெரிய கொடுமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்கிறது தேசத்தின் மக்கள் போதைகளுக்கு அடிமைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதைச் செய்ய வேண்டிய அரசு அதை விடுத்து போதையை ஊக்கப்படுத்துவதும் மதுபானங்களை விற்பதும் எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. நாங்கள் தொடர்ந்து இதுகுறித்து பேசியும் ஜெபித்தும் வருகின்றோம். நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புகிறோம்.
மரண தண்டனை குறித்த உங்கள் பார்வை..
மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி என்கிறது வேதாகமம். அந்த அடிப்படையில் பாவம் செய்தவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதுதான் கடவுளின் எண்ணம். அதே சமயத்தில் தண்டனைகள் அற்ற ஒரு சமூகத்தையும் நம்மால் சிந்திக்க இயலவில்லை. இத்தனை கடுமையான தண்டனைகள் இருந்த பின்னும் கூட குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.இதுகுறித்து அரசு தான் தெளிவான முடிவெடுக்க வேண்டும்.
உங்கள் மாவட்டத்தைச் சுற்றி நடக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளான கூடங் குளம் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், மீனவர்கள் இலங்கை ராணு வத்தால் தாக்கப்படுவது போன்றவை குறித்த உங்களின் பார்வை என்ன
மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும். அதற்ககாகத்தான் அரசுகள், இத்தனை அமைப்புகள் எல்லாம். நாங்களும் அதற்காகத்தான் தெடர்ந்து ஜெபித்து வருகின்றோம். வேதத்தில் ஒரு வசனம் உண்டு. கலகமில்லாமல் அமைதலுள்ள ஜூவனம் பண்ணும்படி ராஜாக்களுக்காக ஜெபி யுங்கள். (ஆட்சியாளர்கள்) எங்கே மக்களின் நிம்மதி பாதிக்கப்படுகிறதோ அதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே இயலாது. தனிப்பட்ட சிலர் வாழ்வதற்காக ஒரு பட்டணத்தையே அழிக்கும் படியான முயற்சிதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். அதுபோலவே ஆறுமுகநேரியில் தாரங்கதாரா என்ற ஒரு கெமிக்கல் நிறுவனம்.அந்ந நிறுவ னத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் ஏராளம் இப்பாழுது அது யாருக்கும் புரிய வில்லை. விரைவில் அதுவும் வெளி யில் வரும். அதுபோலத்தான் கூடங்குளம் அணுமின் நிலையம்.வளர்ச்சிப் பணிகள் செய்யும்போது சில பாதிப்புகள் ஏற்படுவது இயற்கைதான். ஒரு சாலையை அகலப் படுத்துவதற்காக ஒரு வீட்டையோ அல்லது நம் நிலங்களையோ இழக்க நேரிட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்களின் உயிருக்கே ஆபத்து என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கூடங்குளம் அணு உலையால் மக்கள் தங் கள் உயிருக்கே ஆபத்து என்று அச்சப்படும் போது அதை திணிப்பது ஏற்றுக் கொள்ள இய லாது. இதுகுறித்து அரசு சிந்திக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்தே மக்களின் சந்தேகங்களை இவர்கள் தீர்க்க தவறி விட்டார்கள். என்னால் மறக்க முடியாத மிகவும் துக்கமான ஒரு நிகழ்வு என்றால் அது போபால் விஷ வாயுக் கசிவு விபத்து. அது நடைபெற்று இத்துனை ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் நியாயமான நிவாரணம் கூட இன்னும் கொடுக்கப்படவில்லை அரசு மக்க ளுக்காக என்ன தான் செய்கின்றது. நாம் நம் அரசை நம்பித்தானே இருக்கின்றோம். அணு உலை விவகாரத்தில் அரசு மக்களோடு நிற்க வேண்டும். அதேபோலத்தான் மீனவர்கள் தாக்கப்படும் விவகாரமும் இதில் அரசின் மீது எனக்காரு வருத்தமும் உண்டு. ஒரு அமெரிக்கன் வேறாரு நாட்டைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டால் அந்த அரசு சும்மா விட்டுவிடுமா. ஒட்டுமொத்த தேசமும் உடனடியாக எழுகின்றது. இங்கே தொடர்ந்து நம் மீனவர்கள் கொல்லப்படுகின்றனர் நம் அரசு ஏன் இதை வேடிக்கைப் பார்க்கின்றது என்று புரியவில்லை.யாருக்கு இவர்கள் பயப்படு கிறார்கள் என்று தெரியவில்லை. நமக்கும் ராணுவம் இருக்கத்தானே செய்கின்றது. தினமும் உயி ரோடு வருவோமா என்பது தெரியாத வாழ்க்கை எத்தனைக் கொடுமையானது.இதற்கு அரசு ஏதா வது செய்தே ஆக வேண்டும்.நாங்கள் தொடர்ந்து மீனவர்களுக்காக ஜெபித் துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
உங்கள் எளிமையின் ரகசியம் என்ன
சிரித்துக் கொண்டே தொடங்கு கிறார். நான் எளிமையாகவா இருக் கின்றேன்-? என்று நம்மிடம் எதிர் கேள்வி கேட்டவர். நான் குறைவில்லாத மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் எளிமையான ஊழி யக்காரர்கள் நிறைய பேர் இருக் கிறார்கள். தங்களுக்கென்று குடும்பம் இன்றி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளாமல் மிகவும் சிரமப்பட்டு ஊழியம் செய்கின்றனர். நான் அவர்களை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்ததுண்டு. என்னைப் பொருத்த வரை நான் அரைக் கை சட்டை அணிவதால் ஒரு வேளை எளிமையானவனாகத் தோன்றலாம். இது காற்றோட்டமாகவும், வசதியாகவும் இருப்பதால் இதை அணிகிறேன். இன்னுமொரு விசயம் சிலர் கோட் அணிந் திருப்பதால் அவர்கள் பெருமை உள்ளவர்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. உள்ளத்தில் தாழ்மை உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் கைத்தறி ஆடை அணிந்திருந்தாலும் உள்ளத்தில் மிகவும் பெருமையாக இருப்பார்கள். ஆண்டவர் உள்ளத்தைத் தான் பார்க்கின்றார். நான் மனத் தாழ்மையாக இருக்கின்றேன் என்கிறார் அவர். அது போலத்தான் நாமும் உள்ளத்தில் தாழ்மையோடு இருக்க வேண்டும்.