New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜனவரி 1 - 2010 அன்று ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள்:


Newbie

Status: Offline
Posts: 1
Date:
ஜனவரி 1 - 2010 அன்று ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள்:
Permalink  
 


வஞ்சிக்கப்படாதிருங்கள்

ஜனவரி 1 - 2010அன்று ஏஞ்சல் டி.வியில்

சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன

தீர்க்கதரிசனங்கள்:

1.தேசத்தை குறித்து:

உன் தேசத்திலே பிரிவினைகளின் ஆவிகள் தேசத்தைத் துண்டாட விரும்புகிறது.ஒரே மொழியை பேசுகிறவர்கள் இனத்தின் அடிப்படையில் பிரிக்கப்படப் போகிறார்கள்,அது உன் தேசம் முழுவதும் பற்றியெறியப் போகிறது. அநேக மாநிலங்கள் நிம்மதி இழக்கும்.அநேக அரசியல்வாதிகள் கடத்தப்படப் போகிறார்கள். சிலர் கொலை செய்யப்படுவார்கள்.

குறிப்பு:

இது வேறொன்றுமல்ல, தெலுங்கானா பிரச்சனை அந்த நேரத்தில் உச்சக்கட்டத்தில் இருந்ததால் அதை யூகித்து சொல்லப்பட்டது.

2.இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து:

அமெரிக்காவில் தீவிரவாதங்கள் கட்டவிழ்த்து விடப் போகின்றன. இங்கிலாந்தில் கட்டவிழ்த்து விடப்போகின்றன. ஐரோப்பா நாடுகளில் கட்டவிழ்த்து விடப்போகின்றன. அநேக வணிக வளாகங்கள் தகர்க்கப்படப் போகின்றன. அவைகளின் கண்கள் இந்திய தேசத்தின் மேல் விழுந்திருக்கிறது. வருகிற வருடத்தில் (2010)ல் உன் தேசத்தில் பல இடங்களில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப் போகிறது. மிக முக்கியமான நகரங்களை குறிவைத்து இருக்கிறார்கள். இந்த முறை நடத்தப்படப் போகிற தாக்குதல்கள் இதுவரை உலகத்திலேயே நடந்திராத மிகப் பெரியதாக்குதல்களாக இருக்கப்போகிறது. ஏராளமான கட்டிடங்கள் தகர்க்கப்படப் போகிறது.

குறிப்பு:

இது எதுவும் கடந்த வருடத்தில் நிறைவேறவில்லை என்பது நாம் அறிந்ததே.மேலும் ஐரோப்பா என்பது ஒரு நாடு அல்ல,ஏராளமான நாடுகளின் கூட்டணி.இதில் எங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் தான் சொன்ன தீர்க்கதரிசினம் நிறைவேறிவிட்டதாக மார் தட்டிக் கொள்ளலாம்.

3.சபைகளைக் குறித்து:

வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் கொடிய கள்ள உபதேசங்கள் புறப்பட்டு வரும். அவர்கள் ஒன்பது(9) வருடங்களாகஆயத்தப்பட்டார்கள்.(என்ன கணக்கோ தெரியவில்லை). அவர்கள் இந்த வருடம்(2010)ல் புறப்படப் போகிறார்கள். ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் கடந்து வரப் போகிறார்கள்.

குறிப்பு:

இது பொத்தாம் பொதுவான ஜோஸ்யம். எந்த வருடத்திலும் இதை சொல்லலாம். மேலும் வடக்கிலிருந்துஎன தவறுதலாக சொல்லிவிட்டாரோ, இந்தியாவின் வடக்கே ரஷ்யா தான் இருக்கிறது.

4.இயற்கையைக் குறித்து:

இதோ நான் பெரிய சமுத்திரத்தைப் பார்க்கிறேன். அதில்பதின்மூன்று (13) தேவ துhதர்கள் கடலின் ஆழத்தில் நிற்கிறார்கள். அவர்களுடைய முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. கர்த்தருடைய கை அசைவுக்காக காத்திருக்கிறோம்,விரல் அசைவு உண்டானவுடன் சமுத்திரத்தைக் கலக்கப்போகிறோம். சுனாமியால் நீங்கள் பார்த்த பேரழிவு கொஞ்சம்.ஒரே நேரத்தில் பல நாடுகளில் இந்த பேரழிவுகள் சம்பவிக்கப் போகிறது. இந்த வருஷத்தின் முடிவுக்குள்ளாகவா என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நான் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் என்று சொல்லவில்லை. ஒருவேலை அடுத்த மாதமே நடந்தாலும் நடக்கலாம், ஒருவேளை அது அடுத்த வருஷத்திலே நடந்தாலும் நடக்கலாம், ஆனாலும் சீக்கிரமே நடக்கப் போகிறது.

குறிப்பு:

கர்த்தருக்கே சுனாமி எப்பொழுது வரும் என்று தெரியாமல் தடுமாறுவது போலக் காணப்படுகிறது. இனி எந்த வருடத்தில் சுனாமி போன்ற பேரழிவுகள் வந்தாலும் நான் 2010ல் சென்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டது எனசகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மேடையில் முழங்குவார்.

5.கொள்ளை நோய்கள் குறித்து:

இந்த வருஷத்திலே (2010ம்ஆண்டு) ஏழு (7) புதிய வகை காய்ச்சல்கள் உன் தேசத்திலே வரப்போகிறது. அது சீனா தேசத்திலிருந்து புறப்படப்போகிறது, ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து ஒரு (1) காய்ச்சல் புறப்படப்போகிறது. அதன் ழூலம் ஜனங்கள் திரளாய் மரிக்கப்போகிறார்கள். உன் தேசத்தை நோக்கி அது தீவிரமாய் கடந்து வருகிறது. ஏழு (7) காய்ச்சல்களில்மூன்று (3) காய்ச்சல்கள் பிள்ளைகளைத் தாக்கும். அநேக குழந்தைகள் அதில் மரிக்கப் போகிறார்கள்.

குறிப்பு:

இது சுத்தமான வடிகட்டிய பொய் என்பது 2011ம் ஆண்டில் தெரிந்துவிட்டது.

6.போர்களைக் குறித்து:

உன் தேசத்தின் எல்லைகள் சூழ போர் மேகம் நின்று கொண்டிருக்கின்றன.இரண்டு காரியங்கள் மூலம் போர் வர ஆயத்தப்படுகிறது. உன் தேசத்தின் உள்ளேயிருந்தும்,வெளியிலிருந்தும் தாக்குதல் வரப் போகிறது.வெளியில் இருந்து தாக்கும் போதுஅவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே இருந்து தாக்குவார்கள். உன் தேசம் தடுமாறப் போகிறது.

குறிப்பு:

பொத்தாம் பொதுவான தீர்க்கதரிசனம். குறிப்பிட்டு எந்த நாட்டிலிருந்து ஆபத்து வருகிறது என்று சொல்லாமல் தப்பித்துக் கொள்வது புரியும்.

7.நீரினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து:

குடிக்கும் தண்ணீர் மூலமாக பிரச்சனை வரப்போகிறது. அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து அது தோன்றப் போகிறது. ஏராளமான ஜனங்கள் இந்த புதிய வியாதியினால் மரிக்கப் போகிறார்கள்.

குறிப்பு:

மற்றும் ஒரு பொய், “ஒரு மாகாணம்என்று சொல்வதில் இருந்தே அது கர்த்தர் சொல்லவில்லை என்பது தெரிகிறது. அமெரிக்காவின் மக்கள் இது பற்றி சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

8.குழந்தைகளைக் குறித்து:

குழந்தைகள் கொத்து கொத்தாக மரிக்கப் போகிறார்கள். அநேகர் விபத்துக்கள் மூலமாகவும், கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டும்,கொள்ளை நோய் மூலமாகவும் மரித்துப்போவார்கள். அது இந்த வருஷத்திலேயே (2010)ல் சம்பவிக்கப்போகிறது. இரட்சிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்குள்ளே அதிகமாய் வரப்போகிறது.

குறிப்பு:

குழந்தைகள் மரிக்கப் போகிறார்கள் என்று சொன்னால் கூட பரவாயில்லை. இரட்சிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலேயே வரப்போகிறதுஎன்று சொன்னால் இரட்சிக்கப்பட்டது தப்பா? இரட்சிக்கப்பட்ட குடும்பதில் கர்த்தர் பாதுகாப்பை எடுத்து விடுவாரா?

9.பொருளாதாரம் குறித்து:

உன் தேசத்தின் பொருளாதாரத்தை முடக்கிப்போடும்படி முரட்டு இனத்தார்கள்ளப்பணத்தைஅச்சடித்துவிடப்போகிறார்கள். அநேக நாடுகளுக்குள்ளேஇதைசெய்யப்போகிறார்கள்.

குறிப்பு:

அவர்முரட்டுஇனத்தார் என இஸ்லாமியர்களைமனதில் வைத்துகூறுகிறார். கள்ளப் பனப் புழக்கம் என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பலநாடுகளில்இருக்கும்பிரச்சனை.

10.பொல்லாத ஆவிகள் குறித்து:

இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் ஏராளமான நரபலிகள் கொடுக்கப்படப் போகின்றன. அநேக மந்திரவாதிகள் எழும்பப் போகிறார்கள். பிசாசைத் தேடுகிறவர்கள் அதிகரிப்பார்கள். சாத்தானுடைய ஜனங்கள் திரளாய் தேசங்களுக்குள் ஊடுருவப் போகிறார்கள்.

குறிப்பு:

இது தீர்க்கதரிசனமா? அல்லதுதகவலா?

இந்தத் தீர்க்கதரிசனங்களைத்தான் ஜனவரி 1ம்தேதி 2010ல் ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக மூச்சுவிடாமல் பேசினார். பார்த்த அநேகர் ஆகா நம்மிடையே ஒரு தீர்க்கதரிசிதோன்றியிருக்கிறார் என எண்ணி ஆனந்தப்பட்டிருப்பார்கள்.ஆனால் யாரும் அவைகள் நிறைவேறியதா என்பதைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் அடுத்த தீர்க்கதரிசனச் செய்தியைக் கேட்க ஆவலாய் இருப்பார்கள்.

சகோ.வின்சென்ட் செல்வகுமார் கூறும் தகவல்கள் எல்லாம் அன்றாட நிகழ்வுகள், விஞ்ஞானம்,அரசியல்,பொருளாதார நிலைமையை கணித்து கூறுவதை அறியலாம்.மேலும் அவை எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பதையும் அறியமுடியும்.

மேலும் பல விஷயங்கள் தவறானதாகவும், பொய்யாகவும் இருப்பதைப் புறிந்து கொள்ள முடியும். சாத்தானின் வருகையின் அடையாளம் குறித்து 2தெசலோனிக்கேயர் 2:12 கூறுகிறது அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக்கொடியவஞ்சகத்தைதேவன் அவர்களுக்குஅனுப்புவார்.வஞ்சிக்கிறவனின் அடையாளம் குறித்து நீதிமொழிகள் 14:25 கூறுகிறதுவஞ்சனைக்காரனோபொய்களைஊதுகிறான். ஆகவேவஞ்சிக்கப்படாதிருங்கள்.

சத்தியத்தின் மேல் பிரியப்படாமல் இருக்கும் விசுவாசிகள் எளிதாக இந்த வஞ்சகத்தில் சிக்கிக் கொள்வார்கள். போதகர்கள் தங்கள் சபை விசுவாசிகளை எச்சரித்து வேத வசனத்தின்படி எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடவாமலும்,நிறைவேறாமலும் போனால்,அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்த தீர்க்கதரிசி அதைத் தன் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.” - உபாகமம் 18:22

----------------------------------------------------------------------------------------



-- Edited by senthil on Saturday 26th of February 2011 09:36:59 AM

-- Edited by senthil on Saturday 26th of February 2011 09:40:17 AM

-- Edited by senthil on Saturday 26th of February 2011 09:41:48 AM

-- Edited by senthil on Saturday 26th of February 2011 09:42:38 AM

__________________
senthil
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard